Feb 1, 2011

கன்னக்கோல்


 

ஊழிப்பெருங்கடல் உள்விழுங்கும் கன்னப் பெருஞ்சுழி
சேர்ந்துழன்ற விழிமிசை வயதும் வசமிழந்து
உறுதேன் சுவையேகிட வன்மத்தால் வாலிபத்தில்
காமமாகிய காமங்கலந்து காமம் இடறா
சொல்லிழைத்து மறைபொருளோடு சாமரமேகி
வாழ்த்தொன்றாய் சமர்ப்பித்தான் நல்லிசையெனவே!

மெட்டமைத்த வித்தகன் தன்னிறை யிசையாலே
இதுவரை இசையாத மனத்தினாளும் சேர்ந்திசைக்க
காப்பியக் காட்சிகள் விழியாளும் பிம்பங்களாய்
இதழ்கள் ஒத்திசைக்க தோள்தழுவ கையணைக்க
மதிபுரள மனம்பிறழ ஊறுவினை நீதிவழி
காலமீன்ற இவன்விதி அவள்திசை மாற்றிற்று!

திரையிடா கதையொன்றில் நடிக்காத பாத்திரமவள்
காணாத பாசத்தின் கடையீறு எழுத்துமவள்
உகுக்காத கண்ணீரில் கலையாத கோலமவள்
எழுதாத எழுத்துக்களும் போற்றாத அழகியவள்!

உள்விழுங்கி உள்ளுறைந்து தன்மயமாதலுள்
கனவும் காதலும் காமமும் அன்றாடமாக்கி
காலந்தின்ற பசிநோயும் அவள்திசை மாற்றிற்று!

ஒளிமறைவில் உறவாடி இருள்மறையின் கோசமிட்டு
புறம்பேசி அறம்போற்றி உயிர்வாழும் நற்சபையோர்
எச்சிலென்றா எச்சமென்றா பிழையென்றா பிச்சியென்றா
இதுபோலும் மாந்தர்களை எப்படித்தான் இகழ்வாரோ?

21 கருத்துக்குத்து:

Aishwarya Govindarajan on February 1, 2011 at 10:48 PM said...

//திரையிடா கதையொன்றில் நடிக்காத பாத்திரமவள்
காணாத பாசத்தின் கடையீறு எழுத்துமவள்
உகுக்காத கண்ணீரில் கலையாத கோலமவள்
எழுதாத எழுத்துக்களும் போற்றாத அழகியவள்!//

இன்னும் சில வரிகள் சேர்த்து, இவ்வரிகளும் அருமை

ப்ரியமுடன் வசந்த் on February 1, 2011 at 11:03 PM said...

உங்க போஸ்ட் இரண்டு முறைக்கு மேல படிச்சது இல்ல பாஸ் முதல் தடவையா ஐந்து முறை வாசித்தேன்..

கன்னக்கோல் - சுவரை ஓட்டை போட்டு திருட யூஸ் பண்றதுதானே ???

சாமரம் - விசிறி???

//திரையிடா கதையொன்றில் நடிக்காத பாத்திரமவள்
காணாத பாசத்தின் கடையீறு எழுத்துமவள்
உகுக்காத கண்ணீரில் கலையாத கோலமவள்
எழுதாத எழுத்துக்களும் போற்றாத அழகியவள்!//

உச்சரிக்க அழகா இருந்துச்சுப்பா...

vinu on February 1, 2011 at 11:07 PM said...

saga ithu unga blog thaanaa

பிரதீபா on February 2, 2011 at 3:48 AM said...

பொங்கி பொங்கி இலக்கிய இலக்கணமெல்லாம்.. அப்பா அப்பப்பா
அர்ர்ர்ருமை..

Rathnavel on February 2, 2011 at 6:10 AM said...

I enjoyed your Kavithai.
Appreciations.

தெய்வசுகந்தி on February 2, 2011 at 8:22 AM said...

அருமை!!!

டக்கால்டி on February 2, 2011 at 8:33 AM said...

அருமை!!!அருமை!!!அருமை!!!

வெறும்பய on February 2, 2011 at 8:38 AM said...

ஒன் மினிட் ப்ளீஸ்.. வீட்டுக்கு போய் கோனார் தமிழுரை எடுத்துகிட்டு வரேன்..

அனுஜன்யா on February 2, 2011 at 10:24 AM said...

ஏய்! என்ன இது? புகைப்படம் ரொம்ப நல்லா இருக்கு. கவிதையும் கூட. ஆனால் நான் உனக்குச் சொல்லிக்கொள்வது - அந்தப் புகைப்பட வாசகம் தான் :)

அனுஜன்யா

மோகன் குமார் on February 2, 2011 at 10:42 AM said...

சின்ன வயசில் படிச்ச செய்யுள் நியாபகம் வருது; இலக்கணம் எல்லாம் பாத்து எழுதினதா :))

தர்ஷன் on February 2, 2011 at 11:24 AM said...

தன் அன்றாட பிழைப்புக்காக விபச்சாரம் செய்பவளை பலிப்பவர்களை பற்றியது என் புரிதல் சரியா புலவரே

குழந்தபையன் on February 2, 2011 at 1:04 PM said...

சோ கோ மோ

தராசு on February 2, 2011 at 2:33 PM said...

ங்கொய்யால....

எந்தப் படத்துல சார் இந்த வசனம்????

பிரதீபா on February 2, 2011 at 3:07 PM said...

தூக்கக் கலக்கத்துல எதுவும் புரியல, காத்தாலயாச்சும் எதாச்சும் புரியுமான்னு படிச்சுப் பாக்கறேன், ம்ஹூம். அர்த்தம் புரியாம வேற்று மொழி இசையை ரசிக்கிற மாதிரி தான் இதுவும். தமிழ் ஆளுமை அழகு. இலக்கிவாதி ஆய்ட்டீங்க.. கலக்குங்க கார்க்கி.

சுசி on February 2, 2011 at 4:27 PM said...

//
தர்ஷன் said...
தன் அன்றாட பிழைப்புக்காக விபச்சாரம் செய்பவளை பலிப்பவர்களை பற்றியது என் புரிதல் சரியா புலவரே

February 2, 2011 11:24 AM
//

ரிப்பீட்டேய்..

புதுவிதமா எழுதி இருக்கீங்க.. :)

Anonymous said...

பாரதியார் பாதி கமலஹாசன் மீதி கலந்து செய்த கலவையோ உம் கவிதை ?

Anonymous said...

பாரதியார் பாதி கமலஹாசன் மீதி கலந்து செய்த கலவையோ உம் கவிதை ?

ஆதிமூலகிருஷ்ணன் on February 4, 2011 at 4:18 PM said...

என்னது இது.. புச்சா இருக்கு.!!

பரிசல்காரன் on February 4, 2011 at 4:23 PM said...

தப்பா நெனைக்காத சகா..

இது சத்தியமா நீ எழுதினதில்ல தானே?! உண்மையச் சொல்லு.. ப்ளீஸ்..

Kaarthik on February 4, 2011 at 11:20 PM said...

I'm asking the same question asked by Parisal ;-)

உமா கிருஷ்ணமூர்த்தி on February 26, 2011 at 3:56 PM said...

//உள்விழுங்கி உள்ளுறைந்து தன்மயமாதலுள்
கனவும் காதலும் காமமும் அன்றாடமாக்கி
காலந்தின்ற பசிநோயும் அவள்திசை மாற்றிற்று!//


நன்றாக இருக்கின்றது.

ஆனாலும் இந்த கவிதை உங்களதுதானா என்ற சந்தேகம்...மன்னிக்கவும் தவறென்றால்..
ஏனென்றால் மரபு கவிதைகள் போல ஏதோ செய்யுள் படித்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.ஒன்று வேறு எவரேனும் தமிழை அதிகம் அறிந்தவர் எழுதி இருக்க வேண்டும்.அல்லது தமிழில் அதிகம் தேர்ச்சி நீங்கள் பெற்று இருக்க வேண்டும்.பொதுவாக இக்காலத்தில் இவ்வளவு இயல்பா செந்தமிழ் வருவது கடினம்.எனவே தான் சந்தேகம்.நிஜமாகவே நீங்கள் தான் என்றால் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

உங்கள் சாளரத்தை இனி அடிக்கடி எட்டி பார்ப்பேன்.மனதிற்கு இதமாக இருக்கின்றது.தமிழும் தமிழ் சார்ந்த கவிதை கதைகள் என்று

 

all rights reserved to www.karkibava.com