Jan 30, 2011

கலைஞர் ஒழிக


 

சென்ற‌ வார‌ம் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் சொன்ன‌ விஷ‌ய‌ம் இது. அவ‌ரும் அவ‌ர‌து ந‌ண்ப‌ரும் அலுவ‌ல‌க‌ ப‌ணி நிமித்த‌ம் ஒரு பாரில் ச‌ந்தித்திருக்கிறார்க‌ள். ர‌ம்ம‌டிக்க‌லாம் என‌ முடிவு செய்து விலை உய‌ர்வாக‌ என்ன‌ ர‌ம் இருக்கிற‌து என்று கேட்டிருக்கிறார்க‌ள். அலுவ‌ல‌க‌த்தில் ப‌ண‌ம் த‌ந்துவிடுவார்க‌ள் என்ப‌தால் அதிக‌ விலையில் கேட்டிருக்கிறார்க‌ள். ப‌ணியாள‌ர் சொன்ன‌ எந்த‌ பிரான்டும் இவ‌ர்க‌ளுக்கு பிடிக்க‌வில்லை. நிதான‌மிழ‌ந்த‌ ப‌ணியாள‌ர் "ரொம்ப‌ காஸ்ட்லியா வேணும்ன்னா ஸ்பெக்ட்ர‌ம் தான் சார் வாங்க‌ணும். அது சி.ஐ.டி கால‌ணியில் கிடைக்கும்" என்று சொல்லி இருக்கிறார்.ஸ்பெக்ட்ர‌ம் என்ப‌து புரிந்திருக்கும். அது என்ன‌ சி.ஐ.டி கால‌ணி என்று முழிப்ப‌வ‌ர்க‌ளுக்கு; அங்குதான் முத‌ல்வ‌ரின் புத‌ல்வி க‌னிமொழியின் வீடு இருக்கிற‌து.

  ந‌டுத்த‌ர‌ ம‌க்க‌ளின் தேர்வாக‌ இருந்த‌ திமுக‌ சென்ற‌ தேர்த‌லில் அடித்த‌ட்டு ம‌க்க‌ளின் ஆத‌ர‌வையும் பெற்று ஆட்சியில் அம‌ர்ந்த‌து. ஆனால் இன்றைய‌ நிலையில் ஏ,பி,சி என‌ எல்லா ம‌ட்ட‌ங்க‌ளிலும் திமுக‌விற்கு எதிரான‌ நிலையே இருக்கிற‌து. ல‌ட்ச‌ங்க‌ளிலில் ஊழ‌ல் ந‌ட‌ந்திருக்கிற‌து. கோடிக‌ளில் கூட‌ ந‌ட‌ந்திருக்கிற‌து. ஆனால் ல‌ட்ச‌ம் கோடிக‌ளில் ஊழ‌ல் என்ப‌தை த‌மிழ‌ன் இப்பொழுதுதான் கேள்விப்ப‌டுகிறான். அது ஊதி பெரிதாக்க‌ப்ப‌ட்ட‌ தொகை என்றாலும் திமுக‌ வ‌ச‌ம் வ‌ந்த‌ தொகை இது வ‌ரை யாராலும் "ல‌வ‌ட்ட‌ப்படாத‌" தொகை என்ப‌து ம‌ட்டும் நிச்ச‌ய‌ம். சோப்புக்கு ஷாம்பூ இல‌வ‌ச‌ம் என்ப‌து போல் இந்த‌ ஊழ‌லோடு வெளியான‌ ராடியா டேப் விவ‌கார‌ம் திமுக‌வின் கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ மான‌த்தையும் க‌ப‌ளீக‌ர‌ம் செய்துவிட்ட‌து. அடித்தட்டு மக்கள் வரை ராடியா டேப் விவகாரம் பரவவில்லையென்றாலும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. கலைஞர் கொடுத்த டிவி வழியாகவே மக்கள் இதை தெரிந்துக் கண்டதை “சொந்த செலவும் சூணியம்” என நக்கலடிக்கிறார்கள்.

சென்ற‌ முறை நான் திமுக‌விற்கு வாக்க‌ளிக்க‌ முக்கிய‌ கார‌ண‌ம் த‌ர்ம‌புரியில் அதிமுக‌வின‌ர் மூன்று மாண‌விக‌ளை உயிரோடு எரித்த‌ ச‌ம்ப‌வ‌ம்தான். அத‌ற்கும் ச‌ற்றும் குறையாத‌ வ‌கையில் ம‌துரை தின‌க‌ர‌ன் அலுவ‌ல‌க‌த்தில் ஒரு துய‌ர‌ ச‌ம்ப‌வ‌த்தை ந‌ட‌த்தி காட்டிய‌து திமுக‌. ம‌துரை மாந‌க‌ராட்சி மேய‌ர் என‌ நினைக்கிறேன். புட‌வையை ம‌டித்துக் க‌ட்டிக் கொண்டு க‌ல‌வ‌ர‌த்தில் இற‌ங்கிய‌ காட்சி இன்னும் நினைவில் இருக்கிற‌து. இப்போது ச‌ன் குடும்ப‌மும் க‌லைஞ‌ர் குடும்ப‌மும் ஒன்று சேர்ந்துவிட்டார்க‌ள். ஆனால் உயிர் இழ‌ந்த‌வ‌னின் குடும்ப‌ம் என்ன‌ செய்து கொண்டிருக்கும்? என்னைப் போல‌ அவ‌ர்க‌ளும் மான‌ங்கெட்ட‌ த‌மிழ‌ர்க‌ள் என்றால் ச‌ன் டிவியோ, க‌லைஞ‌ர் டிவியயையோத்தான் பார்த்துக் கொண்டிருக்கும். திமுக‌வின் நிர்வாகிக‌ள் எப்போதும் இல்லாத‌ அள‌விற்கு ர‌வுடியிச‌த்திலும், வ‌ன்முறையிலும் இற‌ங்கிவிட்டார்க‌ள். இன்னும் ஒரு முறை அவ‌ர்க‌ள் வ‌ச‌ம் ஆட்சி வ‌ந்தால் ர‌ஜினியின் வ‌ச‌ன‌த்தைத்தான் சொல்ல‌ நேரிட‌ம். "த‌மிழ‌க‌த்தை ஆண்ட‌வ‌னாலும் காப்பாற்ற‌ முடியாது".

தாத்தா க‌தை எழுதுகிறார். பேர‌ன்க‌ள் த‌யாரிக்கிறார்க‌ள். விநியோக‌ம் செய்கிறார்க‌ள். ந‌டிக்கிறார்க‌ள். ஸ்டாலினும். அழ‌கிரி ம‌ட்டும் ஏன் பொறுமை காக்கிறார்க‌ள் என‌ தெரிய‌வில்லை. பிர‌புவையும், பிர‌காஷ்ராஜையும் த‌மிழ‌க‌த்தின் எல்லையைத் தாண்டி ஓட‌ சொல்லிவிட்டால் அவ‌ர்க‌ள் இருவ‌ரும் அழ‌காக‌ அந்த‌ பாத்திர‌ங்க‌ளில் ந‌டிக்க‌லாம். க‌னிமொழி க‌விஞ‌ர் தானே? அவ‌ரையே பாட‌ல் எழுத‌ சொல்லிவிட‌லாம். ம‌னோர‌மாவிற்கு வ‌ய‌தாகிவிட்ட‌து. கூப்பிடுங்க‌ள் ராஜாத்தி அம்மாளை. இந்திய‌ அள‌வில் சிற‌ந்த‌ குடும்ப‌ப் ப‌ட‌த்திற்கான‌ தேசிய‌ விருதை த‌ராமாலா போய்விடுவார் ம‌ன்மோக‌ன் சிங்?

த‌மிழ‌க‌த்தின் மீன‌வ‌ர்க‌ள் 500 பேர் இல‌ங்கை ராணுவ‌த்தால் சுட்டுக் கொல்ல‌ப் ப‌ட்டிருக்கிறார்க‌ள்.  க‌டித‌ம் எழுதி முடித்துவிட்டாராம். க‌வ‌ர் ஒட்ட‌ கோந்து வாங்கி வ‌ர‌ போயிருக்கிறாராம் த‌ங்க‌பாலு. மீன்க‌ள் செத்து மித‌ந்தாலே க‌ட‌ல் கெட்டுவிடும். இங்கே மீன‌வ‌ர்க‌ள் செத்து மித‌க்கிறார்க‌ள். அப்பொழுது மூவ‌ர்ண‌க்கொடியை ப‌ற‌க்க‌விட்டுக் கொண்டிருக்கிறார் க‌லைஞ‌ர். இனி அவ‌ர் மீன் குழ‌ம்பு சாப்பிடும்போதெல்லாம் முள் தொண்டையை ம‌ட்டுமா குத்தும்? அவ‌ர் ம‌ன‌தையும் குத்தாதா? மீனுக்கு இருக்கும் முதுகெலும்பு கூட‌ இவ‌ருக்கு இல்லாம‌ல் போன‌து ஆச்ச‌ரிய‌ம்தான். த‌மிழ‌ன‌த்த‌லைவ‌ரே!! மீன‌வ‌ர்க‌ளும் த‌மிழ‌ர்க‌ள் தான் என்ப‌தை எப்போது உண‌ர்வீர்க‌ள்? தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய் மிதப்பேன் என்றவரை உண்மையிலே தூக்கி எறிய வேண்டிய காலம் வந்துவிட்டது.

ஜெய‌ல‌லிதாவோடு ஒப்பிடும்போது க‌லைஞ‌ர் தேவ‌லாம் என்ற‌ எண்ண‌த்தில்தான்  திமுகவிற்கு  வாக்க‌ளித்தோம். இத‌ற்கு அவ‌ரே தேவ‌லாம் என்று எண்ணும்ப‌டி ந‌ட‌ந்துக் கொண்டிருக்கிறார் 87 வ‌ய‌து இளைஞ‌ன். இவர் குடும்ப‌த்து உறுப்பின‌ர்க‌ளுக்கு வாக்குரிமை இருக்கும்வ‌ரை  டெப்பாசிட் பாதுகாப்பாக‌த்தான் இருக்கும். ஆனால் வெற்றி திமுகவை விட்டு தூர‌ வில‌கிவிடும். ஈழ‌த்தின் ஓல‌ம் இன்னும் கேட்டுக் கொண்டுதானிருக்கிற‌து. இப்பொழுது அது த‌மிழக‌த்தின் க‌ட‌ற்க‌ரை வ‌ரை வ‌ந்துவிட்ட‌து. த‌மிழ‌க‌த்தின் உள்ளே வ‌ரை அது வ‌ராம‌ல் இருக்க‌ காங்கிர‌ஸ் + திமுக‌ கூட்ட‌ணியை எதிர்ப்ப‌தைத் த‌விர‌ வேறு வ‌ழியில்லை.

39 கருத்துக்குத்து:

RR on January 31, 2011 at 12:05 AM said...

இதுவரை படித்ததில் (உங்கள் பதிவில்) ரொம்ப பிடித்த பதிவு இது. நன்றி!

chandru2110 on January 31, 2011 at 12:39 AM said...

என் மனதை பிரதிபலிக்குது.

பிரதீபா on January 31, 2011 at 1:19 AM said...

கார்க்கி வாழ்க !!

சுசி on January 31, 2011 at 1:32 AM said...

கண்டிப்பா ஒழியணும்..

வால்பையன் on January 31, 2011 at 2:52 AM said...

எப்படி வெட்கமில்லாம இன்னும் ஆட்சியில உட்கார்ந்திருக்காங்கன்னு தெரியலயே சகா!
ஒருவேளை எல்லா மசுரும் உதுந்துபோச்சா என்ன!?

வால்பையன் on January 31, 2011 at 2:52 AM said...

இது பாலோ அப்புக்கு!

Rathnavel on January 31, 2011 at 5:35 AM said...

Touching to read.

மாணவன் on January 31, 2011 at 6:15 AM said...

தெளிவான பார்வையுடன் உணர்ச்சியோடு சொல்லிருக்கீங்கண்ணே,

என்ன செய்வது இந்த உண்மை சுட வேண்டிய ஆளுக்கு சுட வேண்டும்

மாணவன் on January 31, 2011 at 6:17 AM said...

தமிழினம் அழிகிறது ! தமிழகம் அழுகிறது ! தலைவன் நீ என்ன செய்தாய்...

Balaji saravana on January 31, 2011 at 6:31 AM said...

சகா இப்போவாவது இந்த நிலைப்பாட்டை எடுத்தீங்களே! கண்டிப்பா இந்த ஆட்சி ஒழியணும்!

அத்திரி on January 31, 2011 at 6:35 AM said...

ம்ம்ம்ம்...............ஒன்னும் சொல்றதுக்கில்லை சகா...............................................

தனா on January 31, 2011 at 7:48 AM said...

கலைஜர் அம்மா என்ற பைனரி நிலைமை எப்போது ஒழியும்....அன்று உங்கள் தமிழகம் தலைநிமிரும் ஆனால் அதன் சாத்திய தன்மை அறவே இல்லை என்பது..:(:(:(:(:(

muthu on January 31, 2011 at 7:56 AM said...

தமிழன் உணர்ச்சிமயமானவன் என்பதற்கு இந்த ஒரு கட்டுரையே போதும்.நன்கு ஆராயாமல் போற்றுவதும் தூற்றுவதும்.

தெய்வசுகந்தி on January 31, 2011 at 8:01 AM said...

//கண்டிப்பா ஒழியணும்...// ரிப்பீட்

எல் கே on January 31, 2011 at 8:53 AM said...

திமுக காங்கிரஸ் ஒழியனும்

Suresh Kumar M on January 31, 2011 at 9:22 AM said...

so hot post... but i think this time thy'll go any extreme to remain in power... thy'll spend rs.5000 per vote... last but not least thy'll use their bramasthram "free supply" which may turn lot of supporters to them... may GOD save TN from those mfs...

பாலா on January 31, 2011 at 9:30 AM said...

சகா, சமீபத்தில் உங்களின் மிகச் சிறந்த பதிவு... பகிர்வுக்கு நன்றி...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

கருத்தென ஏதும் சொல்லாமல் அத்தனை ஆமோதிக்க கூடிய விஷயங்கள் இதை படிக்கும் போதே நமக்கு சுரீர்ன்னுது அவங்கமட்டும் எப்படி இன்னும் சிரிச்சிக்கிட்டே போட்டோக்கு போஸ் கொடுக்கிறாங்கன்னு தான் தெரியலை கார்க்கி..

dhanu on January 31, 2011 at 10:00 AM said...

உங்கள் பதிவில் இதுவரை படித்ததில் ரொம்ப பிடித்த பதிவு இது. Excellent Writing...

Mythees on January 31, 2011 at 10:46 AM said...

gr8 Post .....

கார்க்கி on January 31, 2011 at 11:04 AM said...

அனைவ‌ருக்கும் ந‌ன்றி

முத்து,
ச‌ரிதான். த‌மிழ‌ன் ம‌ட்டும‌ல்ல‌. ம‌னித‌ர்க‌ள் என்றாலே உன‌ர்ச்சிவ‌ச‌ப்ப‌ட‌த்தான் செய்வார்க‌ள். இந்த‌ ப‌திவில் எதை நான் உண‌ர்ச்சிவ‌ச‌ப்ப‌ட்ட்டு எழுதிய‌தா உன‌ர்கிறீர்க‌ள்?

@பாண்டிச்சேரி வ‌லைப்பூ,
உங்க‌ள் பின்னூட்ட‌த்தில் இருக்கும் ஆபாச‌ வார்த்தை கார‌ண‌மாக‌ அதை நீக்குகிறேன்.

"தமிழ்நாட்டினை நாம் ஆள வேண்டு சூனியக் காரனும் சூனியக் காரியும் ஆண்டால் ! இது தான் கதி ! தமிழ்நாட்டினை திருத்த முன்வாருங்க ‍ பாண்டிச்சேரி வ‌லைப்பூ"

தராசு on January 31, 2011 at 11:29 AM said...

சரியான பதிவு. கலைஞர் டெல்லி சென்றிருக்கிறார். அவரது பயணத்தின் குறிக்கோள் என்னவோ உள்நாட்டு பாதுகாப்பை பற்றிய முதல்வர்களின் மாநாடுதான் என சொல்லப்பட்டாலும், கூட்டணி மேட்டர்தான் முக்கியமான ஒன்று என்கிறார்கள்.

அப்புறம் என்ன சொன்னீங்க, மீனவர்களா, அட என்னய்யா.... இதே ரோதனையாபோச்சு. அதான் செத்தவுடனே நாங்க கடுதாசி எழுதீட்டம்ல.... அப்புறம் அஞ்சு ல... வும் குடுத்தாச்சு. இன்னும் அதையே பேசிகிட்டு.....

போங்கப்பா, அடுத்த இலவசம் என்னவா இருக்கும்னு பதிவு போடறதுக்கு யோசிங்க, முடிஞ்சா அதுக்கு எதாவது ஐடியா குடுங்க.

யாருங்ணா அந்த முத்து,
கடுதாசி எழுதற தமிழனுக்கு செம உணர்ச்சீங்ணா, அப்பிடியே உணர்ச்சீல பொங்கி பொசுங்கீறப் போறாரு, பாத்து சூதனமா இருக்கச் சொல்லுங்க முத்தண்ணேய்...

அமுதா கிருஷ்ணா on January 31, 2011 at 11:57 AM said...

இந்த இரண்டு கட்சியினை விட்டால் வேறு ஆப்ஷனே இல்லையா? ரொம்ப கவலையாக இருக்கிறது.ஆனால், என்ன செய்வது என்பதும் தெரியலை.

Sen22 on January 31, 2011 at 2:02 PM said...

கண்டிப்பா இந்த ஆட்சி ஒழியணும்!!

அப்பத்தான் நாடு நல்லா இருக்கும்..

//சகா, சமீபத்தில் உங்களின் மிகச் சிறந்த பதிவு... பகிர்வுக்கு நன்றி..//

vasan on January 31, 2011 at 2:49 PM said...

கார்க்கி, ஒரு நல்ல‌ விளக்க‌மான, இந்த‌ நேர‌த்திற்குத் தேவையான ப‌திவு.

ஆதிமூலகிருஷ்ணன் on January 31, 2011 at 3:51 PM said...

ஒன்னியும் சொல்றதுக்கில்ல..

சந்தோஷ் = Santhosh on January 31, 2011 at 7:08 PM said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கடா கார்க்கி..

தங்கராசு நாகேந்திரன் on January 31, 2011 at 10:10 PM said...

எல்லோருடைய உணர்வுகளையும் ஒட்டுமொத்தமாக பிரதிபலித்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

செ.சரவணக்குமார் on January 31, 2011 at 11:44 PM said...

நல்ல பகிர்வு. கண் முன்னே நடந்துகொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராய் உணர்ச்சிவசப்படும் ஒரு மனநிலை நமக்கு நிச்சயம் தேவை. அந்த வகையில் நம் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் சரியாக‌ வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி சகா.

கார்க்கி on January 31, 2011 at 11:57 PM said...

அனைவருக்கும் நன்றி

Itsdifferent on February 1, 2011 at 6:44 AM said...

ஊழலுக்கு ஒரு நோபெல் பரிசு இருந்த, அத இவங்களுக்கு தான் கொடுக்கணும்.
இப்போ, வீடு கட்டி கொடுக்கிறதுக்கு, டோக்கன் கொடுத்து வோட்ட வாங்கிட்டாங்க, டிவி க்கு கூட டோக்கன்.
இந்த தரித்திரம் புடித்த எலேக்சுன் கமிஷன் என்ன கழட்டிக்கிட்டு இருக்காங்களோ?
நம்ம ஜனங்க திருந்த மாட்டாங்க, நம்ம நாடு உருப்பட வழியே இல்லை.

britto on February 1, 2011 at 12:32 PM said...

//கண்டிப்பா ஒழியணும்...// ரிப்பீட்

britto on February 1, 2011 at 12:36 PM said...

ஒரே குடும்பம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே கொள்ளை அடிப்பதை நிறுத்த ..தமிழர்கள் நாம் ஓர் குடும்பமாய் இணைவோம் குடும்ப அரசியலை ஒழிப்போம்

Kaviprian-Manick on February 1, 2011 at 3:35 PM said...

'குரைஞர்' கடிதம் எழுதுவதற்கும்.. நாம ட்வீட்றது, பதிவு போடறதுக்கும் ஒன்னும் பெரிய வித்யாசம் இல்லை.
களத்துல நின்னு போராடற போராளி சீமானுக்கு என்ன நேர்ந்தது.. பின்னால எத்தனி பேரு நிக்காங்க..??!!

Reflections on February 3, 2011 at 3:20 AM said...

Very good article, I suppose it came from your heart.

Suresh Kumar on February 3, 2011 at 10:35 PM said...

அடுத்த நடவடிக்கை...பிரிங்கப்பா தமிழ்நாட்டை..எதோ என்னால முடிஞ்ச பதிவு இங்கே உங்களுக்காக ஷேர் பண்ணுறேன்...
தேவரும்-மகனும்...

உமா கிருஷ்ணமூர்த்தி on February 26, 2011 at 4:31 PM said...

//ஜெய‌ல‌லிதாவோடு ஒப்பிடும்போது க‌லைஞ‌ர் தேவ‌லாம் என்ற‌ எண்ண‌த்தில்தான் திமுகவிற்கு வாக்க‌ளித்தோம்//

உண்மை.இனி அதை மாற்றியே தீர வேண்டும்.

உமா கிருஷ்ணமூர்த்தி on February 26, 2011 at 4:36 PM said...

//குரைஞர்' கடிதம் எழுதுவதற்கும்.. நாம ட்வீட்றது, பதிவு போடறதுக்கும் ஒன்னும் பெரிய வித்யாசம் இல்லை.
களத்துல நின்னு போராடற போராளி சீமானுக்கு என்ன நேர்ந்தது.. பின்னால எத்தனி பேரு நிக்காங்க..//


உண்மை தான்.அதற்கும் கார்க்கி விளக்கம் கொடுத்திருக்கிறார்.நாமெல்லாம் மானம் கெட்ட தமிழர்கள் என்று.வேதனையாக இருக்கின்றது உண்மையில் அப்படித்தான் இருக்கிறோம்.களத்தில் நின்று போராட எத்தனை பேர் இருக்கின்றார்கள்?

 

all rights reserved to www.karkibava.com