Jan 26, 2011

ரஜினியும் டீ.ஆரும்


 

  சென்ற முறை எங்கள் அலுவலகத்தில் நடந்த விளையாட்டில் “I love you karki” என நான் செய்த கூத்து தெரியும்தானே? தெரியாதவர்கள் இதை படிங்க. மற்றவர்கள் ஒரு லாங் ஜம்ப் போட்டு அடுத்த பதிக்கு வரவும்.

வார‌ இறுதியை ம‌கிழ்வுட‌ன் கொண்டாட‌ ஏதுவாக‌ எங்க‌ள் அலுவ‌ல‌க‌த்தில் வெள்ளி மாலை Friday Fizz கொண்டாடுவோம். இருக்கும் வேலை டென்ஷ‌ன் ம‌ற‌ந்து வீடு திரும்ப‌ அது உத‌வும். ஒவ்வொரு வார‌மும் யாராவது ஒருவ‌ர் தொகுத்து வ‌ழ‌ங்குவார்க‌ள். இந்த‌ வார‌ம் ஒரு ந‌ல்ல்ல்ல்ல‌ விளையாட்டு. முத‌ல் ந‌ப‌ர் சொல்லும் வாக்கிய‌த்தோடு சில‌ வார்த்தைக‌ள் சேர்த்து அடுத்த‌வ‌ர் தொட‌ர‌ வேண்டும். அர்த்த‌மும் வ‌ர‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு I am going  என்றால் அடுத்த‌ ந‌ப‌ர் I am going to a market என்று சொல்ல‌லாம். இப்ப‌டியே தொட‌ர‌ வேண்டும். இன்னொரு விஷ‌ய‌ம் வார்த்தைக‌ளை ம‌ற‌ந்து விட‌க்கூடாது. இருக்கும் எல்லா பெண்க‌ளும் எதிர‌ணியில் இருந்த‌தை எண்ணி க‌டுப்பாக‌ இருந்தேன். இது கூட‌ ந‌ல்ல‌துக்குத்தான் என்று பின்ன‌ர் தான் புரிந்த‌து. முன்னால் இருந்த‌வ‌ர் I Went  என்று தொட‌ங்க‌ என்னிட‌ம் I went to the beach where i had seen a smart guy என்று வ‌ந்த‌து. நான் என் ப‌ங்கிற்கு I went to the beach where i had seen a smart guy and i said I love you karki என்றேன். அடுத்து வ‌ந்த‌ எல்லா பெண்க‌ளும் I love you karki என்று சொல்லியே ஆக‌ வேண்டும். ஒவ்வொருவ‌ரும் சொன்ன‌பின் நான் Thank you என்ற‌ போது அவ‌ர்க‌ள் முக‌த்தை பார்க்க‌ணுமே.. ஹிஹிஹிஹி.

இந்த வாரம் இவன் என்னடா செய்வான் என்ற ரீதியில் என்னை முறைத்துக் கொண்டே உள்ளே வந்தது பெண்கள் அணி. இந்த முறை தொகுத்து வழங்கியவர் பெயர் ராதிகா என்று வைத்துக் கொள்ளுங்களேன். மேஜையின் மீது 100 பொருட்களை கொட்டி பேப்பரால் மூடி இருந்தார். ஒரு நிமிடம் மேஜையின் மீதிருக்கும் பொருட்களை பார்த்தவிட்டு 45 நொடிகளில் நினைவிலிருக்கும் பொருட்களை எழுத வேண்டுமாம். பழைய விளையாட்டு. நான் 22 பொருட்களை எழுதிவிட்டேன். ஆனால் பெண்கள் சைடில் 30 ஐ தாண்டியது அவர்கள் போட்டிருந்த சீரியல் நம்பரில் தெரிந்தது. (பெண்கள்னாலே சீரியல்தானே?)பெரும்பாலான பொருட்களை தொகுப்பாளினி அவர்களிடம் வாங்கி வந்திருந்ததால் அவர்களால் எளிதில் எழுத முடிந்தது. இன்னும் சில நொடிகளே இருக்குமென்பதால் குறுக்கு வழியை யோசித்தேன். பேப்பரை திருப்பி ”ரம்யா..ரம்யா.. ” என்று எழுதி விட்டேன். சரிபார்க்க வாங்கிய ராதிகா என்ன இது என்றார். மூணேமுக்கால் கிலோ அசடையும், கொஞ்சம் அப்பாவித்தனத்தையும் முகத்தில் கொண்டு வந்த நான் சொன்னேன் “எனக்கு ரம்யா தவிர வேறு எதுவும் ஞாபகத்துல இல்லை”

___________________________

ராதிகா ஒரு கணக்கு புலி. அதனால் சில புதிர் கணக்குகளும் கேட்டார். இரண்டு அப்பாக்களும், இரண்டு மகன்களும் மீன் பிடிக்க சென்றார்களாம். ஆளுக்கொரு மீன் பிடித்தார்களாம்.ஆனால் அவர்கள் வசம் இருந்ததோ 3 மீன்கள் மட்டும்தானாம். எப்படி என்று சிரித்தார் ராதிகா. அந்த சிரிப்புக்காகவே இது போன்ற மொக்கை கேள்விகள் எத்தனை வேண்டுமென்றாலும் கேட்கலாம். ம்ம். கணக்குக்கு வாங்க. யோசித்து விடையை சொல்வதற்குள் எதிரணி வடையை கவ்வியது. மீன் பிடிக்க போன பிரகஸ்பதிகள் தாத்தா, அப்பா, பையனாம். அப்போ 2 மகன்கள், 2 அப்பாக்கள் தானே? உடனே மறுத்த நான் சொன்னேன் “அப்போ போனது 5 அப்பா, 2 மகன்”.  தாத்தா என்பவர் பேரனுக்கு ஃபோர்ஃபாதர் தானே? அவர் ஃபாதர் + ஃபோர்ஃபாதர் = 5 ஃபாதர் என்றேன். சிரித்த ராதிகா முறைத்துக் கொண்டிருந்தார்.

________________________

மூளைக்கு அதிக வேலை கொடுத்து டயர்டானதால் கடைசியாக ஒரு ஜாலி ரவுண்ட் சொன்னார் கணக்கு டீச்சர். ரஜினியும், டீஆரும் பேசிக் கொள்வது போல் ஒரு காட்சி நடித்துக் காட்ட வேண்டும். டீ ஆர் என்னும்போதே வடை கிட்டிய ஃபீல் கிடைத்தது. எப்போதும் தன்னை ஹீரோவென நினைத்துக் கொள்ளும் நண்பனை ரஜினியாக நடிக்க சொன்னேன். குஷியாக ஓக்கே சொன்னான். சீன் என்னன்னா, பாட்ஷா படத்தில் மெடிக்கல் சீட் கேட்க போவாரே!! அதுதான். நான் தான் மெடிக்கல் காலேஜ் ஓனர். அவன் ரஜினி. என்னிடம் வந்து “அய்யா என்.பேரு பாட்ஷாங்க. எனக்கு இன்னொரு பேரும் இருக்கு” என்பான். அதன் பின் டீஆர் வசனம் தான். சீனை சொன்னவுடன் சூப்பர்ஸ்டாருக்கு முகமெல்லாம் பல்லாய் இருந்தது. அவன் பேசிய பின் நான் தொடங்கினேன்.

“உனக்கு இருக்குடா ரெண்டு பேரு. எனக்கு சொந்தமா இருக்கு டா மூணு ஊரு..

ரோடு போட வேணும்டா தாரு..அது மேல போகும்டா என் பென்ஸ் காரு

இந்த காலேஜ்ல நான் பெரிய சாரு. எனக்கு மேல யாரும் இல்லை பாரு

உங்கிட்ட பேசுறதே எனக்கு போரு. வெளிய போக அங்கிருக்கு டோரு..

ஹேய்.. டண்டணக்கா.. டணக்கு டக்கா”

மொத்தப் பேரும் கலக்கல் என எனக்கு கை கொடுக்க, சூப்பர்ஸ்டார் பாவமாக ஓரத்தில் நின்று முறைத்துக் கொண்டிருந்தார். வாழ்க டீ.ஆர்.

_________________________

அன்று கேட்கப்பட்ட சில புதிர்கள் இதோ. பின்னூட்டத்தில் பதில் அளிக்கலாம்.   இதெல்லாம் lateral thinking என்று சொன்னார். ஆனால் விடையை லேட்டாக சொல்லக்கூடாது. 30 செகண்ட் தான் டைம் தந்தார்

    1)

EMPTY

2)  sgeg
      gges
      segg
      gesg
      sgge

3) YOU JUST ME – What is this?

4)  pplea + nnabaa+ praesg + mwaetoenrl + ugaav  = ??????

5) 7,6, 3,2.  ஒரே ஒரு முறை இந்த எண்களை பயன்படுத்தி 33 விடையாக வரவழைக்க வேண்டும். முடியுமா?

32 கருத்துக்குத்து:

Suresh Kumar M on January 26, 2011 at 9:52 PM said...

1. empty box...

மாணவன் on January 26, 2011 at 10:02 PM said...

செம்ம கலக்கல்...

மாணவன் on January 26, 2011 at 10:03 PM said...

எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனால் புதிருக்குதான் விடை தெரியல...ஹிஹி

யாராவது மூளைக்காரங்க இருந்தா கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லுங்கபா.... :-))

வால்பையன் on January 26, 2011 at 10:08 PM said...

4

apple

banana

grapes

watermelon

guvva

இதுக்கு அடுத்து என்ன வரும் என்பதா கேள்வி?

வால்பையன் on January 26, 2011 at 10:11 PM said...

மத்தது தெரியல சகா!

தனா on January 26, 2011 at 10:11 PM said...

permutation patterns of eggs? right??
6x7-(3^2)=33

பாரதசாரி on January 26, 2011 at 10:17 PM said...

scrambled eggs

ப்ரியமுடன் வசந்த் on January 26, 2011 at 10:18 PM said...

1.Empty Box
2.eggs (0 mark ஆ)
3.Mirror
4.MixedFruit
5.ஙே..

கார்க்கி on January 26, 2011 at 10:24 PM said...

@சுரேஷ்,
சாரி பாஸ். படத்த மாத்தியிருக்கேன்

@மாணவன்,
ஹிஹி.. ட்ரை பண்ணுங்க சகா

@வால்பையன்,
இல்ல சகா. அது என்னது என்பதே கேள்வி.

@தனா,
இல்லைங்க.

@பாரதசாரி,
கரெக்ட். மற்றது?

@வசந்த்,
ஙே.. இல்லையே

தில்லை on January 26, 2011 at 10:49 PM said...

((7-2)+6)x 3 = 33

ஸ்ரீதர் நாராயணன் on January 26, 2011 at 11:44 PM said...

புதிர்கள் விடைகளை எல்லாரும் சொல்லிட்டாங்க. சொல்லாமல் விட்ட ஒன்று - YOU JUST FOLLOW ME

இந்த Pattern செமயா இருக்குங்க. கலக்குங்க.

சுசி on January 27, 2011 at 12:41 AM said...

கணக்காவ்வ்வ்வ்வ்..

கார்க்கி on January 27, 2011 at 9:32 AM said...

தில்லை
இன்னும் 5 வ‌ழிக‌ள் இருக்கு. முடிஞ்சா ட்ரை ப‌ண்ணுங்க‌

ஸ்ரீதர் நாராயணன்,
இல்லை சார். இன்னும் 1,3 க்கு விடை வ‌ர‌லை

சுசி,
உங்க‌ அறிவுக்கு இதெல்லாம் ஜுஜுபின்னு சொல்றீங்க‌ளா?

vinu on January 27, 2011 at 9:52 AM said...

thoguppaalini peyar rathigaa; then y u wrote as ramyaa:# doubttu

"சரிபார்க்க வாங்கிய ராதிகா என்ன இது என்றார். மூணேமுக்கால் கிலோ அசடையும், கொஞ்சம் அப்பாவித்தனத்தையும் முகத்தில் கொண்டு வந்த நான் சொன்னேன் “எனக்கு ரம்யா தவிர வேறு எதுவும் ஞாபகத்துல இல்லை”

vinu on January 27, 2011 at 9:54 AM said...

3) shadow?

புன்னகை on January 27, 2011 at 10:01 AM said...

//மூணேமுக்கால் கிலோ அசடையும், கொஞ்சம் அப்பாவித்தனத்தையும் முகத்தில் கொண்டு வந்த நான் சொன்னேன் “எனக்கு ரம்யா தவிர வேறு எதுவும் ஞாபகத்துல இல்லை”//
ரைட்டு! :-)

வள்ளி on January 27, 2011 at 10:23 AM said...

(7*3) + (6*2) = 33

vinu on January 27, 2011 at 10:24 AM said...

1) box kullea onnum illea

Om on January 27, 2011 at 10:40 AM said...

3 rd ans is Just between you and me
5 th 7*3=21 6*2=12 (21+12)

Okey

கார்க்கி on January 27, 2011 at 11:16 AM said...

வினு,
அவ‌ர் பெய‌ர் ராதிகாதான். ர‌ம்யா என்ப‌து இன்னொருவ‌ரின் பெய‌ர். அவ‌ரும் எங்க‌ ஆஃபிஸ்தான். நிழ‌ல் என்ப‌து த‌வ‌று

புன்ன‌கை,
ஹிஹிஹி

வ‌ள்ளி,
ச‌ரி. இன்னும் 4 வ‌ழி இருக்கு :)

வினு,
ஹிஹிஹி. இல்ல‌ப்பா. அதான் ஒரு வார்த்தை இருக்கே

ஓம்,
க‌ரெக்ட். அந்த‌ க‌ண‌க்குக்கு இன்னும் சில‌ வ‌ழிக‌ள் உண்டு.

subramanian on January 27, 2011 at 12:23 PM said...

1.5
2.Eggs
3.NA
4.Fruits
5.(7*3)+(6*2)=33

வள்ளி on January 27, 2011 at 1:35 PM said...

((7-2)*6)+ 3 = 33

“நிலவின்” ஜனகன் on January 27, 2011 at 3:32 PM said...

நீங்க ஆபத்தான பேர்வழியப்பா....ha ha ha..

சூப்பர் கலாட்டா..

santhiranp on January 27, 2011 at 4:16 PM said...

4. fruit salad

வள்ளி on January 27, 2011 at 6:10 PM said...

((7+2)*3)+ 6 = 33

Sen22 on January 27, 2011 at 7:23 PM said...

Kalakkunga Karki...

shabi on January 27, 2011 at 8:28 PM said...

http://enpakkangal-rajagopal.blogspot.com/2011/01/blog-post_26.html

உயிரெழுத்து on January 27, 2011 at 9:27 PM said...

Just between you and me...

Thala i am your long time follower..
Oru dhadavai unga kooda phone la pesi iruken
I dont know whether you remember it...
I am also in velacherry...

கார்க்கி on January 27, 2011 at 9:54 PM said...

அனைவருக்கும் நன்றி. விடைகள்

1)Empty inbox. (Empty box செல்லாது. ஏனென்றால் அதில் தான் empty என்ற வார்த்தை இருக்கே)

2) Scrambled Eggs

3) Just in between You and Me

4) MixedFruites

5) a) ((7+2)*3)+ 6 = 33
b) ((7-2)*6)+ 3 = 33
c) ((7-2)+6)x 3 = 33
d) 6x7-(3^2)=33
e) 7 X 3 + 2 X 6 = 33
f) (7+6-2)x3 = 33

கார்க்கி on January 27, 2011 at 9:55 PM said...

உயிரெழுத்து,

என்ன பேர் சொன்னீங்க பாஸ்?? சாரிங்க. பேரு சொன்னா ஞாபகத்துக்கு வரும் :(

உயிரெழுத்து on January 27, 2011 at 10:11 PM said...

Sir namma peru vijaynga... anaikku cable sir neenga aathi ellarum pesineenga...

ஆதிமூலகிருஷ்ணன் on January 31, 2011 at 4:39 PM said...

ஓகே..

 

all rights reserved to www.karkibava.com