Jan 23, 2011

கோ – கேளுங்’கோ’


 

என்னிடம் இருக்கும் பெரும்பான்மையான சட்டைகள் ஆரஞ்சு / நீல நிறங்களே. ஒரே கலர்ல ஏண்டா எடுக்கிற என்று அம்மா திட்டாத நாள் கிடையாது. அவர் சேலை எடுக்க செல்லும் முன்பே இந்த முறை ராமர் நீலம் என்று முடிவு செய்துவிட்டே வெளியே செல்ல இடது காலை வைப்பார்கள். அவருக்கு நிறம்தான் பிரதானம். டிசைன் அடுத்ததே. ஹாரீஸின் இசை அப்படித்தான். கேட்டது போன்றே இருக்கும். ஆனா கேட்க கேட்க வசீகரிக்கும். அடுத்த ஹாரீஸ் ஆல்பம் வரும்வரை நின்று விளையாடும். டிசைன் வேறு என்றால் உங்களுக்கு நிறத்தில் பிரச்சினையில்லை என்பீர்களேயானால் ஹாரீஸின் ரசிகர் குழுவிற்கு இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்.

File:Ko cover.jpg

கோ பாடல்கள் தான் கடந்த 2 நாட்களாக எனக்கு பிரேக்ஃபாஸ்ட், லன்ச், டின்னர் எல்லாம். ஏற்கனவே இந்தக் கூட்டணி தந்த அயனின் வெற்றி ஹாரீஸுக்கு எக்ஸ்ட்ரா குளோக்கோஸை தந்திருக்கிறது. தினுசு தினுசான சத்தமும், டிசைன் டிசைனான ஆர்கெஸ்ட்ரசைசேஷனும் கிறங்கடிக்கிறது. என்னைப் பொறுத்தவரை இளைஞர்களின் யூத் ஐகான் யுவன் இல்லை, ஹாரீஸ்தான். யுவனிடம் இல்லாத கன்ஸிஸ்டென்ஸி ஹாரீஸிடம் இருக்கிறது. ஒரே மெட்டை பயன்படுத்துவதை சொல்லவில்லை, தொடர் ஹிட்டை சொல்கிறேன்.

1) அகநக (விஜய் பிரகாஷ், திப்பு, ரனினா ரெட்டி, ராப்- Emcee, srik, Jesc) பா.விஜய்.

  யோகி பியின் வல்லவனின் ஆரம்பம் போல தொடங்குகிறது. முதல் கவனிப்பில் எளிதில் தாம்தூமில் வந்த திகுதிகு அல்லது புதுப்புது பாடலின் காப்பி என்று ஒதுக்கிவிட முடியும். அந்த எண்ணத்தை லெஃப்ட் ஹேண்டால் தள்ளிவிட்டு மிச்சப்பாட்டை கேளுங்கள். ஹோசன்னா புகழ் விஜய் பிரகாஷின் ஆதிக்கத்தை இடையில் வரும் ராப் துவம்சம் செய்கிறது. அதுவும் அந்த பெண்குரலில் வரும் ராப்.. CHILL.. எந்த மொழியென்றுதான் தெரியவில்லை. எழுதியவருக்கு ஒரு கலைமாமணி பார்சேல்.

இதுதான் இதுதான் இளமை உலகம். வெற்றி ஒன்றுதான் இங்கே உதவும்.

வெரி வெரி சமத்துகள் அழகா/  கொழு கொழுப்புகள் அழகா

தோள் சாய்ந்த அணைப்பு / அவன் தோழன் என்ற நினைப்பு / ஏன் இந்த படைப்பு/ இங்கில்லை களைப்பு

Competetive world என்பதையும், கலக்கல் யூத் உலகம் என்பதையும் வார்த்தைகளில் வடித்தெடுத்திருப்பவர் பா.விஜய். பேனா இருக்க சிக்ஸ் பேக் பேண்ட் எதுக்கு தலைவா? நடிப்பெல்லாம் விட்டொழியுங்கள். நீண்ட நாள் கழித்து ஒரு திருப்தியான பாட்டு பா.விஜயிடமிருந்து.

Verdict : Rockingggggggggg

2) நெற்றிப்பொட்டில் (நரேஷ் ஐயர்) மதன் கார்க்கி

சின்னப்பாட்டு. ஆனால் ஹாரீஸீன் அதகளமான பீட்டில் சுர்ரென்று தொடங்குகிறது. பேஸ்கிட்டார் இல்லாத ஹாரீஸ் பாட்டா? இதில் perfect blend ஆக வந்திருப்பதில் இன்னும் சுகம். எந்திரனின் ஹேங் ஓவரோடு மதன் கார்க்கி எழுத வேண்டிய பாட்டு. எழுதியுமிருக்கிறார்.

Cafe beachஇலும் - கனவிலே
கோட்டைக் கட்டினோம்
facebook wallஇலும் - எங்கள்
கொள்கை தீட்டினோம்

இதில் cafe beach என்ற வார்த்தைக்குப் பின் வரும் டிரேட்மார்க் “பபப்பா.. பாப்பப்பா” ஹம்மிங் சூப்பர். நரேஷ் ஐயரின்  குரலில் இருக்கும் மென்மை இந்தப் பாடலுக்கு எப்படி ஒத்துப் போனது என்பது ஆச்சரியம்தான்.

Verdict : worth listening twice in a row.

3) அமளி துமளி (ஹரிஹரன், ஷ்வேதா மேனன், சின்மயி) விவேகா)

அருள் படத்தில் வரும் ஒட்டியானம் செஞ்சுத்தாரேன் பாடலில் ஒரு கால் கிலோ எடுத்துக்கோங்க. ஹசிலி ஃபிசிலியில் ஒரு கால் கிலோ. ஜனகராஜ் ஒரு படத்தில் ஸ்வீட் வாங்குவாரே! அப்படி எடுத்திருக்கிறார் ஹாரீஸ். அதனாலென்ன? Assorted sweets தானே இப்போது டிரெண்ட்? பின்னி பெடெலெடுக்கும் பாடல். பல்லவியை விட சரணத்தின் மெட்டு நச்சென்றிருக்கிறது. கண்ட இடத்தில் சங்கதி போடுவதுதானே ஹரியின் ஸ்பெஷல்!! மனுஷன் அனுபவிச்சு பாடியிருக்கிறார். அதிலும் இரண்டாவது சரணத்தை அவர் தொடங்கும் இடம்..வாவ். இதுதான் அந்த சரணம்

கால்களில் ஆடிடும் கொலுசு.. அதன் ஓசைகள் பூமிக்கு புதுசு
அதை காதுகள் கேட்டிடும் பொழுது நான் கவியரசு

ஹரி பாடும் ஒவ்வொரு வார்த்தையும், எழுத்தும் தெளிவாக புரிகிறது. சின்மயி கடைசி எழுத்தை மட்டும் சாப்பிட்டு விடுகிறார். விவேகா மேலே சொன்ன வரியைத் தவிர மற்றதை ஜஸ்ட் லைக் தட் எழுதியிருக்கிறார், எது எப்படியோ.. எட்டுத்திக்கும் கலக்க போகும் பாடல் இதுதான்.

Verdict : Pick of the album.

4) என்னமோ ஏதோ (ஆலாப் ராஜு, பிரஷாந்தினி, ஸ்ரீசரன், emcee, Jesc) மதன் கார்க்கி

ஷேவாக்கின் சிக்சரோடு தொடங்க வேண்டும் இந்தப் பாடல் பற்றி எழுத வேண்டுமென்றால். வித்யாசாகரின் குத்துப்பாட்டில் கூட ஒரு மெலடி இருக்கும். ஹாரீஸீன் மெலடியில் கூட ஒரு Rock ஃபீல் இருக்கும். வசீகரா பாடலில் இருந்த ஒரு ஃப்ரெஷ்னஸும், இன்னோவேஷனும் இதிலும் இருக்கிறது. ஆனால் இசைக்கோர்வையை விட பாடல் வரிகள் புதுமையாக இருக்கிறது. ஹாரீஸை கேட்டு கேட்டு பழகியதால் அப்படி இருக்கலாம். பாடலின் USP இதுதான் ”ஏனோ.குவியமில்லா குவியமில்லா.. ஒரு காட்சிப்பேழை”. கதைப்படி நாயகன் ஒரு புகைப்படக்கலைஞன் என நினைக்கிறேன். குவியமில்லா என்றால் Out of focus. காட்சிப்பேழை என்றால் display. வித்தியாசமான சிந்தனை இல்லையா? பாடல் முழுக்கவே இது போன்று ஃப்ரெஷான வரிகள் கேட்கும்போது ரசிக்க வைக்கின்றன.

நெருங்காதே பெண்ணே எந்தன்
நெஞ்செல்லாம் நஞ்சாகும்

இதில் நெஞ்செல்லாம் என்ற இடத்தில் மூச்சு வாங்கி பாடுகிறார். எஸ்.பி.பி ஸ்டைலில் ஒரு ஸ்லைடுடன் ஒரே வரியாக பாடியிருந்தால் சுகமாய் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். பாடலோடு ஃபெவிகாலும் தந்திருக்கிறார்கள். பச்செக்கன ஒட்டிக் கொள்கிறது.

Verdict: Dont miss it.

5) Gala Gala (திப்பு, க்ரிஷ், ஹரிசரன், சயோனரா பிலிப்) கபிலன்.

   எப்படி சார்? ஒரே பாட்டை இத்தனை விதமா தறீங்க. பாடிய நால்வரும் எனக்கு பிடித்தவர்கள். மற்றபடி விசேஷமாய் ஒன்றும் தெரியவில்லை.

இன்னொரு மெலடி இருக்கிறது. வெண்பனியே என்று தொடங்கும் பாடலை பாம்பே ஜெயஸ்ரீயும், ஸ்ரீராமும் பாடியிருக்கிறார்கள். பொதுவாக இது போன்ற ஹாரீஸ் மெலடி முதலில் எனக்கு பிடிப்பதேயில்லை. ஆனாலும் ஹிட் ஆகியிருக்கின்றன. இப்போதைக்கு நான் இதை அதிகம் கேட்பதில்லை.

ஹாரீஸூக்கு ஒரு ராசி உண்டு. அவரது முதல் படமான மஜ்னு தாமதமாக வெளியானது. முதலில் வெளியான இரண்டாவது படமான மின்னலேவும் தாமதமானது. அதன் பின் உள்ளம் கேட்குமே, பீமா, லேசா லேசா,சாமுராய், அரசாட்சி, தொட்டிஜெயா, வேட்டையாடு விளையாடு, தாம் தூம் வரை எல்லாமே சொன்ன தேதியில் வெளிவரவில்லை. இப்போது எங்கேயும் காதல் கூட அப்படியே தூங்கிக் கொண்டிருக்கிறது, அப்படி ஏதும் ஆகாமல் கோ உடனே வெளிவந்து ஜீவாவிற்கு இன்னொரு மைல்கல்லாக அமைய வாழ்த்துவோம்.

________________________________

திசைமானி இல்லா நாளில் அடிவானம் ஏனில்லை.

கடையாணி இல்லா நாளில் கடிவாளமும் ஏனில்லை.

கோ படத்திற்காக மதன் கார்க்கி எழுதி படத்தில் இடம்பெற முடியாமல் போன வரிகள் இவை. பாடலில் வந்த வரிகளை விட எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். எந்த ஆதரவும் இல்லாமல் தனித்து நிற்கும் நாயகனைப் பற்றி சொல்கிறது.

28 கருத்துக்குத்து:

பரிசல்காரன் on January 23, 2011 at 10:28 PM said...

//இடையில் வரும் ராப் துவம்சம் செய்கிறது. அதுவும் அந்த பெண்குரலில் வரும் ராப்.. CHILL.. //


ரிப்பீட்!! ஜஸ்ட் இப்பதான் கேட்டுட்டிருந்தேன்..

Muthukumar on January 23, 2011 at 10:35 PM said...

same feel :-)

vinu on January 23, 2011 at 11:16 PM said...

IF you have time, plz vist to my home too.

Thank you.

! சிவகுமார் ! on January 24, 2011 at 12:17 AM said...

>>> ஹாரிஸ் என்றாலே அனைத்தும் ஹிட்தானே. ‘உன்னாலே உன்னாலே’ படப்பாடல்கள் extraordinary!!

MSK on January 24, 2011 at 1:05 AM said...
This comment has been removed by the author.
MSK on January 24, 2011 at 1:08 AM said...

"வெண்பனியே"வும், "என்னமோ ஏதோ"வும் தான் இந்த "கோ"வில் என்னோட favorite இப்போ.

சுசி on January 24, 2011 at 1:16 AM said...

இனிமேதான் கேக்கணும் கார்க்கி.

செம விமர்சனம் வ போ :)

Philosophy Prabhakaran on January 24, 2011 at 3:07 AM said...

// Cafe beachஇலும் - கனவிலே
கோட்டைக் கட்டினோம்
facebook wallஇலும் - எங்கள்
கொள்கை தீட்டினோம் //

ஆஹா கார்க்கி தமிங்கிலத்தில் பிச்சு உதறுறாரே... உங்க பேர் வச்சிருக்கார்ல அதனால தான் இவ்வளவு திறமைசாலியா இருக்காரு போல...

Philosophy Prabhakaran on January 24, 2011 at 3:07 AM said...

பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

மாணவன் on January 24, 2011 at 6:11 AM said...

பாடல்கள் விமர்சன பகிர்வுக்கு நன்றி அண்ணே

கார்க்கி on January 24, 2011 at 9:53 AM said...

@ப‌ரிச‌ல்,
உங்க‌ ஃபேவ‌ரிட் எது ச‌கா

நன்றி முத்தி.

வினு, இதோ வ‌ந்துட்டேன் ச‌கா

சிவ‌க்குமார், உண்மை. ஆர‌ம்ப‌த்தில் ஒரே மாதிரி இருக்கு என்ற‌ விம‌ர்ச‌ன‌ம் வ‌ந்தாலும் ஹிட்ட‌டிக்காம‌ல் இருந்த‌தில்லை

எம்.எஸ்.கே, உன்னை புரிஞ்சிக்க‌வே முடிய‌ல‌ப்பா

ந‌ன்றி சுசி. ப‌ட‌த்த‌ நார்வேல‌ வேற‌ ஷூட் ப‌ண்ணியிருக்காங்க‌ளாம்

பிர‌பாக‌ர‌ன், உங்க‌ க‌மென்ட் அவ‌ர் க‌ண்ணுல‌ ப‌டாம‌ இருக்க‌ வேண்டிக்கிறேன். ஏன் பாஸ்? ஏன்? :))))

என‌க்கு அந்த‌ ப‌ழ‌க்க‌ம் இல்லைனாலும் நீங்க‌ சொல்ற‌தால‌ வ‌றேன் :)

ந‌ன்றி மாண‌வ‌ன்

முரளிகுமார் பத்மநாபன் on January 24, 2011 at 9:54 AM said...

ஆமா சகா நல்ல ஆல்பம்தான். ஆனால் என்னமோ? ஏதோ? ஏகோனும், கோரே பாடலும் நியாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.. :-)

மோகன் குமார் on January 24, 2011 at 11:04 AM said...

என்ன சகா மூணு முறை கேட்டும் பல பாட்டுகள் ஒரே பாட்டு மாதிரி குயப்பமா இருக்கு; போக போக பிடிக்கமாலா போய்டும்.. after all ஹாரிஸ் ஜெயராஜ் ஆச்சே !!

Anbu on January 24, 2011 at 12:17 PM said...

thanks for the review anna

MSK on January 24, 2011 at 6:10 PM said...

ஏன் சகா?? பொதுவாக ஹாரிஸின் இசையில் நான் மெலடிகளையே விரும்புகிறேன்..

அதிலும் இந்த வெண்பனியே பாடலில் பாம்பே ஜெயஸ்ரீ, "ம்ஹும்", "ம்ஹும்" என்று சொல்லும்போதெல்லாம், கொல்கிறது அந்த குரல்..

கனாக்காதலன் on January 24, 2011 at 7:03 PM said...

Nice review !

vinu on January 24, 2011 at 7:42 PM said...

என்ன சகா இதோ வந்துட்டேன்னு சொல்லிட்டு வூட்டு பக்கம் வரவே இல்லையே

DINESH on January 25, 2011 at 10:05 PM said...

i too hear ko songs karki.but i like only aganaga song...hmmmm...santhanam sonna madiri "oru oru manisanukum oru oru feeling"...

Indian on January 25, 2011 at 10:20 PM said...

அன்புள்ள விமர்சகருக்கு,
உங்கள் விமர்சனத்தை ரசித்தேன். இதே போன்று ஏ.ஆர் ரகுமாமான் இசையை விமர்சிக்கும் தைரியம் இல்லை என்ற எண்னை வருத்துகற்து...........
You sucks...............

Indian on January 25, 2011 at 10:23 PM said...

அன்புள்ள விமர்சகருக்கு,
உங்கள் விமர்சனத்தை ரசித்தேன். இதே போன்று ஏ.ஆர் ரகுமாமான் இசையை விமர்சிக்கும் தைரியம் இல்லை என்ற எண்னை வருத்துகற்து...........
You sucks...............
I think you are a ARR fan. thats simple........

செந்தில் குமார் வாசுதேவன் on January 26, 2011 at 3:11 AM said...
This comment has been removed by the author.
செந்தில் குமார் வாசுதேவன் on January 26, 2011 at 3:15 AM said...

Sagaa, I agree with you on Harris delivering hits consistently(except duds like Aadhavan). But I can't agree with you comparing him to Yuvan who does around 10 films in an year on an average and hitting the deck atleast twice in each. Just check what are up his sleeves this year, with the best combos of the last decade returning - Bala, Ameer, Selva, Raam, etc.

கார்க்கி on January 26, 2011 at 7:39 PM said...

அனைவருக்கும் நன்றி.

இந்தியன், இதில் நான் ஹாரீஸை பாராட்டித்தானே எழுதி இருக்கேன்??

வினு, வந்துட்டேனே,,:)

செந்தில், நான் என் கருத்தை தான் சொன்னெனெ, யுவன் எனக்கும் தான் பிடிக்கும்.

Indian on January 27, 2011 at 12:39 AM said...

You may or maynot praise Harris......That's not the matter.....What the matter How u Reviewed Endhiran..........Endhiran has a poor Album which is not upto the Standards of Aadhavan.......Still you praise ARR for giving wonderful Compositions(!!!).........

கார்க்கி on January 27, 2011 at 8:40 PM said...

இந்தியன்,

உங்க ரசனைக்கு ஒத்து வராததால் குப்பை என்பீர்களா?

எனக்கு டெக்னிக்கலி எந்திரன் ஆதவனை விட பன்மடங்கு பெட்டர்..

சிட்டி சிட்டி ரோபா ,காதல் அணுக்கள் அளவிற்கு ஆதவனில் எந்த பாடலும் இல்லை

Anand on January 28, 2011 at 5:18 AM said...

/எந்த மொழியென்றுதான் தெரியவில்லை/

Thats old telugu.


Thanks
Ananth

karthick on February 3, 2011 at 1:28 PM said...

Copy cat harris... koncha naal porunga pa entha padal enge suttathunu therinthuvidum...

Anonymous said...

கார்க்கி நல்லா இருக்கு விமர்சனம்...

//யுவனிடம் இல்லாத கன்ஸிஸ்டென்ஸி ஹாரீஸிடம் இருக்கிறது//

வருஷத்துக்கு எட்டு அல்லது பத்து படங்கள் பண்றார் யுவன்... ஹாரிஸ் மூன்று என்ற ரீதியில் தான் பண்றார்... அப்புறம் எப்படி கன்ஸிஸ்டென்ஸி?

அது போக இவ்வளவு அழகான பாடல்கள் இருக்கிற அப்பவும்,

எவன்டி உன்னை பெத்தான் - என்ற யுவனின் ஒற்றை பாடல் தான் இப்போதைக்கு கோ பாடல்களை விட ரொம்ப ஹாட்...

என்ன பண்ண?? ஹி ஹி...

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

 

all rights reserved to www.karkibava.com