Jan 18, 2011

நீதிப்பதிவு


 

காவலனைப் பற்றி நெகட்டிவ் பேச்சுகள் வர தொடங்கிவிட்டன. வலையுலகில் 50% ஆதரவாகவும், 40% குப்பை என்பதாகவும் விமர்சனங்கள் வந்துள்ளன. கேபிள் சங்கர் போல சில பேர் சராசரி படமென்றும் சொல்லியிருக்கிறார்கள். ரசனை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதிகமான ரசிகர்களுக்கு திருப்தி தந்திருக்கிறதா என்பதே முக்கியம். அதை கலெக்‌ஷன் தான் சொல்லும். அந்த வகையில் சனிக்கிழமை மதியம் வெளியாகி சென்னை ஏரியாவில் 51 லட்சம் வசூல் செய்திருக்கிறான் காவலன். வெள்ளியன்று வெளியாகிய ஆடுகளம் 69 லட்சமும், சிறுத்தை 67 லட்சமும் வசூலித்திருக்கின்றன. இத்தனைக்கும் காவலனுக்கு சப் அர்பனில் கிடைத்த தியேட்டர்கள் மோசமானவை. ஆன்லைன் புக்கிங் இல்லாததால் 50 ரூபாய்க்கே டிக்கெட்கள் விற்பனையாகியிருக்கின்றன. 5 காட்சிகள் குறைவாக ஓடியதை வைத்து கணக்கிட்டால் காவலன் வெள்ளியன்று வெளியாகியிருந்தால் 85 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கலாம். காவலனை தடுக்க நினைத்தவர்களுக்கு ஒன்று நிச்சயம் தெரிந்திருக்கும். அரசியலில் எப்படியோ, சினிமாவில் தளபதியை ஒரு **றும் புடுங்க முடியாது.

நீதி : தளபதியை எதிர்ப்பவன் தலைவிதி இடது கையால் எழுதப்பட்டிருக்கும்

_______________________

அந்தப் பதிவர் ஹெ.ஆர். மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். புதிதாய் வேலைக்கு சேர்ந்த இடத்தில் ஒருவர் அவரிடம் வந்து “ எனக்கு போன கம்பெனிலே 10000 தந்தாங்க சார். எனக்கு இங்க 14 ஆயிரம் கொடுக்கலாம்” என்று சொல்லியிருக்கிறார். வழக்கம் போல கிரிக்கெட்டில் இருந்து உதாரணம் சொல்லியிருக்கிறார் லபக்தாஸ்.  “கங்குலி 2 லட்சம் டாலரில் இருந்து தன்னை 4 லட்சம் டாலருக்கு உயர்த்திக் கொண்டார். அவரை யாருமே வாங்கவில்லை. ஆனால் 50 ஆயிரம் டாலரில் இருந்த முரளி கார்த்திக்கை 4 லட்சம் டாலர் தந்து வாங்கியிருக்கிறார்கள்.உன் மதிப்பை நீ சொல்லாதே. கம்பெனி சொல்லும்”. இதைக் கேள்விப்பட்ட மேனேஜ்மெண்ட் இவரைப் பாராட்டி மெயில் தட்டிவிட்டிருக்கிறது. கொடுமை என்னவென்றால் சேர்ந்த 6 மாசத்தில் அவர்கள் தருவதாக சொன்ன இன்க்ரிமெண்ட்டை அவர் அடுத்த நாள் கேட்பதாக இருந்தாராம். அதே சிக்சரை இவரிடம் போடாமல் இருக்குமா மேனேஜ்மெண்ட்? கங்குலியை விட அதிக வருத்தத்தில் இருக்கிறாராம் உதாரண பதிவர்.

நீதி : கங்குலியைப் பற்றி தப்பா பேசினா டப்பா டான்ஸ் ஆடிவிடும்.

_______________________________

என்ன சொல்லியும் கேட்பதாய் இல்லை அந்த பதிவர். சச்சரவுக்கு முன்பு அவர் செய்த காரியங்கள் காணாமல் போய்விட்டன. சரி பிரச்சினை வேண்டாம் என்று ஒதுங்கியபின்னும் அவ்வபோது கொலைகாரன் தாண்டா நீ என்று சீண்டியபடி இருந்தார்கள். அப்பிரச்சினை தொடர்புடைய பதிவு ஒன்றை ஒரு போட்டிக்கு அனுப்பி மீண்டும் பழைய நினைவுகளை கிளறினார். அதிசயம் என்னவென்றால் அப்போட்டியின் நடுவர் குழுவில் அவரும் இருந்தார். ஆனால் இப்பிரிவுக்கு அவர் நடுவர் இல்லையாம். அவரது ஆதரவாளர்கள் தான் நடுவர்களாம். ஆதரவாளர்கள் பங்குபெறும் பிரிவுக்கு இவர் நடுவராம். இருந்தும் அவரது பதிவு வெற்றி பெறவில்லை. நான் கூட அவர்தான் வெற்றி பெறுவார் என நினைத்து அவருக்கே வாக்களித்திருந்தேன். வீணாகிவிட்டது.

நீதி: தர்மத்தின் வாழ்வதனை..

_________________________________

அரசியல் களம் அடுத்த மாதம் சூடு பிடிக்குமாம். கேப்டனும் மேடமும் கைக்கோர்ப்பது உறுதி என்கிறார்கள். ஒரு கையால் ஜால்ரா போட்ட வைகோவிற்கு சீமான் கைக்கொடுக்க வந்திருக்கிறாராம். சத்தம் ஓவராகக்கூடும். இந்தப்பக்கம் விரிந்த கைக்காரர்கள் சுருங்கிய கையை கைக்குள் போட்டுக் கொண்டுவிடுவார்கள் என்கிறார்கள். “கருணாநிதி ஒரு பச்சை துரோகி” என்ற அய்யாவை வாங்கய்யா என்று சொல்வதும் உறுதியாம். மிச்சமிருக்கும் துக்கடா கம்யூனிஸ்டுகள் கைக்கு எதிர்ப்பக்கம் தான் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பலம் வாய்ந்த பா.ஜ.க. தனியே நிற்க போகிறார்களாம். இன்னும் கார்த்திக், சரத் கட்சிகள் முடிவெடுக்கவில்லை. பாமகவை சேர்த்துக் கொள்ளும் திமுகவை மானங்கெட்டவர்கள் என்பதா, பாமகவை சொல்வதா?

நீதி : அரசியலில் ஒன்லி பீதி. நோ நீதி

_______________________

23 கருத்துக்குத்து:

ப்ரியமுடன் வசந்த் on January 18, 2011 at 10:46 PM said...

//கேபிள் சங்கர் போல சில பேர் சராசரி படமென்றும் சொல்லியிருக்கிறார்கள்.//

கேபிள் எனும் யூத் ரூலிங் பார்ட்டியா?

கேபிள் அண்ணா நீங்க நல்லாருக்கோணும் கோலிவுட் முன்னேற...

சுரேகா.. on January 18, 2011 at 10:52 PM said...

//...தலைவிதி இடதுகையால் எழுதப்பட்டிருக்கும்//

எழுதறவன் இடதுகைப்பழக்கம் உள்ளவனா இருந்தா தெளிவால்ல எழுதியிருப்பான் ? #டவுட்டு

அழகு செல்வன்,S.P on January 18, 2011 at 11:28 PM said...

சாருவ விமர்சனம் பண்ற நீங்க விஜய்யா சப்போர்ட் பன்றது எதுல கொண்டு பொய் சேக்கனு எனக்கு தெரியல!! என்ன பொறுத்த வரைக்கும் ரெண்டு பெரும் ஒன்னு தான்!

கார்க்கி on January 18, 2011 at 11:36 PM said...

வசந்த்,
:)))

சுரேகா,
அப்படி இருந்தா வலது கையால் எழுதப்ப்ட்டிருக்கும் என திருத்தி வாசித்துக் கொள்ளவும் :))

அழகுசெல்வன்,
ராவணன் படத்தின் வசனம் குறை சொல்ல முடியாத அளவிற்கு இருந்தது என்று நீங்கள் சொல்லும்போது, காவலன் நல்லா இருக்குன்னு நான் சொல்வதில் தவறிருக்க முடியாது. உங்கள பொறுத்தவரை என்பது உங்களை பொறுத்தவரைதான். என்னையும் அதில சேர்ர்க வேண்டாம் சகா :))

senthilkumar on January 18, 2011 at 11:41 PM said...

Hi Saga,

I too seen a kavalan film.. I didnt like that film..
Becoz its not a vijay's film.. He is a people's star.
This role can be done by anyone..
But wat i saw in theatre is "most of the family audience like the film".

Atleast thalapathy needs this victory.
Becoz he said "its my prestige"..

I need a another blockbuster like Gilli.. maybe it ll come from "Velayutham".

Thanks saga

ஆளவந்தான் on January 19, 2011 at 12:03 AM said...

//அதிகமான ரசிகர்களுக்கு திருப்தி தந்திருக்கிறதா என்பதே முக்கியம்.
//

//சப் அர்பனில் கிடைத்த தியேட்டர்கள் மோசமானவை.
//

//ஆன்லைன் புக்கிங் இல்லாததால் //

//5 காட்சிகள் குறைவாக ஓடியதை //

//வெள்ளியன்று வெளியாகியிருந்தால் //

நல்லா கண்டுபிடிக்கிராங்கையா ரீசன்னு.. இந்த படம் போனியகலீன்னா அதுக்கு காரணம் விஜய்யை தவிர மத்த எல்லாரும் தான்'நு பட்டுன்னு உடைச்சு சொல்லிட வேண்டியது தாணே.. .. என்னகென்னமோ ஆடத். தெரியாத ** தெரிக்கோணல் னு சொன்னாலம்'ங்கற பாழா போன பழமொழி தான் நினைவுக்கு வந்து தொலைக்குது இதை படிக்கும் போது..

கார்க்கி on January 19, 2011 at 12:22 AM said...

செந்தில்,
கலக்கும் என்றே நினைக்கிறேன்

@ஆளவந்தான்,
சொன்ன கேள்விகளில் எதற்காவது பதில் சொல்லுங்களேன். எனக்கு கூட “அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்”ன்னு ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வருது சகா :)))

ஸ்ரீதர் நாராயணன் on January 19, 2011 at 1:46 AM said...

நீதிகள் எல்லாமே நல்லாருக்குங்க. கலக்குங்க. :)

//சினிமாவில் தளபதியை ஒரு **றும் புடுங்க முடியாது.//

பாத்து... படிக்கிறவங்க அவசரத்தில “சினிமாவில் தளபதி ஒரு **றும் புடுங்க முடியாது” படிச்சிடப் போறாங்க :p

ஸ்லிப் ஆக விடாம ஸ்ட்ராங்கா எழுதிருங்க :)

மாணவன் on January 19, 2011 at 7:18 AM said...

“நீதிப்பதிவு” சும்மா நச்சுன்னு இருக்கு அண்ணே..

தராசு on January 19, 2011 at 9:00 AM said...

ஆரம்பிச்சாச்சா, நல்லா இருங்க சாமி.

ஆனா, கங்குலி மேட்டர் ..... தாதா கிட்ட விளையாடுனது போதும், இனிமே கமெண்ட்ரி அது இதுன்னு பூந்து கல்லா கட்டச் சொல்லுங்க.

"ராஜா" on January 19, 2011 at 9:59 AM said...

//கங்குலியைப் பற்றி தப்பா பேசினா டப்பா டான்ஸ் ஆடிவிடும்

கரெக்டா சொன்னீங்க .... தாதா பத்தி தாறுமாறா பேசுனா டாப்பு எகிறுடும் ...

பாலா on January 19, 2011 at 10:39 AM said...

//அதிகமான ரசிகர்களுக்கு திருப்தி தந்திருக்கிறதா என்பதே முக்கியம்

அதிகமான மக்களுக்கு என்றல்லவா இருந்திருக்க வேண்டும். நீங்கள் சொல்வதை பார்த்தால் பெரும்பாலான ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்பது போலுள்ளதே?

ஒரு காலத்தில் ரஜினி பட வசூலை ஒப்பீடு செய்து கொண்டிருந்தவர்கள், தனுஷ், கார்த்தி பட வசூலை ஒப்பிடும்படி ஆகி விட்டதே?

//சினிமாவில் தளபதியை ஒரு **றும் புடுங்க முடியாது.

தயவுசெய்து உணர்ச்சி வசப்படாதீர்கள். படம் வெளியாகி ஒரு பத்துநாள் போகட்டும்.இப்போது கிடைத்திருப்பது விடுமுறை மற்றும் ரசிகர் வசூல் மட்டுமே.

படத்தில் அவர் முக பாவனைகள் பார்த்தால் பிடுங்கப்பட்டதை போன்றுதான் இருக்கிறார்.

//தளபதியை எதிர்ப்பவன் தலைவிதி இடது கையால் எழுதப்பட்டிருக்கும்

இதாங்க பிரச்சனையே. அவர் சும்மாத்தான் இருக்கார். நீங்கதான் ஏதாவது எழுதி உசுப்பேத்தி விடுறீங்க.
வாழு (என்னை)வாழ விடு அப்படீனு உங்களை (ரசிகர்களை) பார்த்துதான் பாடி இருக்கார்னு இப்பத்தான் புரியுது

கார்க்கி on January 19, 2011 at 11:14 AM said...

@ஸ்ரித‌ர்,

ஹிஹி.. சும்மா வெளாட்டுக்கு சார்

ந‌ன்றி மாண‌வ‌ன்

த‌ராசு, இப்ப‌ வேற‌ வழி? :))

ராஜா, ந‌ல‌மா?

பாலா,
விஜ‌ய் ர‌சிக‌ர்க‌ள் என்று சொல்ல‌வில்லை. பொதுவான‌ ர‌சிக‌ர்க‌ள் என்றேன். த‌னுஷையும், கார்த்தியையும் ஒப்பீடாக‌ சொல்ல‌வில்லை. அவ‌ர்க‌ள் ப‌ட‌ம் இரே நாளில் வெளியான‌தால் சொல்கிறேன். இந்த‌ நீதியெல்லாம் சும்மா ஜாலிக்காக‌ எழுதிய‌து. சீரிய‌ஸா எடுதுக்காதிங்க‌.. அப்புற‌ம் 10 நாள் போனாத‌ன் நிஜ‌ வெற்றின்னு தெரியும். ஆனா நான் சொன்ன‌து பொங்க‌லுக்கு வெளியிட‌ விடாம‌ல் செய்ய‌ நினைத்த‌வ‌ர்க‌ளை மீறி வ‌ந்திருக்கு. அதத்தான் சொன்னேன். நீங்க‌ யாருன்னும் தெரியும். உங்க‌ ஆள் யாருன்னும் தெரியும். உசுப்பேத்தூர‌த‌ ப‌த்தி நீங்க‌ சொல்ல‌ வேண்டாம். இது ஜாலி ப‌திவு. அதோட‌ விடுங்க‌. :))))

அமுதா கிருஷ்ணா on January 19, 2011 at 11:32 AM said...

நடுவர் ஆகணும்னா என்ன செய்யணும் கார்க்கி?
கேப்டன் மேடம் கூட சேர கூடாதுன்னு யாரோ கொடுத்த சூட்கேஸ் வாங்கிட்டதா சொல்றாங்க.

Nagasubramanian on January 19, 2011 at 11:55 AM said...

Ganguly-HR matter superunganna

தர்ஷன் on January 19, 2011 at 12:01 PM said...

என்ன சகா உங்க போன பதிவு பார்த்துட்டு ரொம்பவும் எதிர்பார்ப்போட போனேன். அந்தளவு இருக்கவில்லை. விஜயின் அண்மைய படங்களோடு ஒப்பிடுகையில் இது பரவாயில்லை ரகம் அவ்வளவே. ஆனால் அசினிடம் காதலை சொல்வதாக பேசிக் காட்டுகிறாரே சூப்பர் நடிப்பு சகா. பரிசல் ஆடுகளத்தை விட சிறப்பாய் இருந்ததாய் எழுதி இருந்தார். அதற்கு முன் ஆடுகளம் பார்த்து அசந்து போய் இருந்தேன். ஆகவே அதைவிட பெருசாய் எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே

"ராஜா" on January 19, 2011 at 12:39 PM said...

// ராஜா, ந‌ல‌மா?

காவலன் பாத்தேன் சகா ...

DINESH on January 19, 2011 at 9:34 PM said...

na kavalan film ku poga kudathuney ninacitu irunthan karki...but after readin dis post,now am eager to see kavalan....ungala nambi poran...hmmmm..paathitu vanthu comment panran....

விக்னேஷ்வரி on January 20, 2011 at 6:10 PM said...

உங்களுக்கு நேரம் சரியில்லை. :)

“நிலவின்” ஜனகன் on January 20, 2011 at 10:46 PM said...

காவலன்.....மீண்டும் விஜயின் நடிப்பை ரசிக்க கிடைத்தது.....மகிழ்ச்சி...
அசின் படத்தில் இரட்டை வேடம் எனலாம்..சூப்பர்


நீதிகள் கலக்கல்..

“நிலவின்” ஜனகன் on January 20, 2011 at 10:47 PM said...

ஃஃஃஎழுதறவன் இடதுகைப்பழக்கம் உள்ளவனா இருந்தா தெளிவால்ல எழுதியிருப்பான் ?ஃஃ

இவன் நம்ம இனம்யா...

ஆதிமூலகிருஷ்ணன் on January 21, 2011 at 3:19 PM said...

நான்குக்குமே.. :-))))

ஆதிமூலகிருஷ்ணன் on January 21, 2011 at 3:19 PM said...

நான்குக்குமே.. :-))))

 

all rights reserved to www.karkibava.com