Jan 15, 2011

காவலன் – இப்போது என்ன செய்வார்கள்?


 

இந்த நாளிற்காகத்தான் இரண்டு ஆண்டுகள் காத்திருந்தேன்.

காவலன் என்னை முழுமையாய் திருப்திபடுத்தியிருக்கிறது. கதை ஒரு பத்தி, இசை சூப்பர், ஒளிப்பதிவு கச்சிதம், எடிட்டிங் ஷார்ப் என்ற டெம்ப்ளேட்டிற்குள் இந்தப் பதிவை என்னால் அடக்க முடியவில்லை. ஒவ்வொரு ஃப்ரேமிலும் விஜய் தந்திருக்கும் ஸ்பெஷல் படையலை வார்த்தைகளில் என்னால் சொல்ல முடியவில்லை. ஒரு வேளை எனக்கு பிடித்த விஜய் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் சித்திக்கின் கதையும், திரைக்கதையும் உங்களை உட்கார வைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

பாடிகார்டு உடையோடு விறைப்பாக நடக்கும் விஜய் ”லைஃப்ல ஒரு சேஞ்ச் வேணுமில்லை” என்று மாறும் இடத்தில் நிமிர்ந்து உட்காருகிறோம். ஒரு பெண்ணின் குரல் தன்னுள் எந்த விதமான மாறுதலை ஏற்படுத்துகிறது என்பதை விஜய் வெளிப்படுத்தியிருக்கும்  விதம் அவருக்குள் இருக்கும் நடிகனை வெளிகொண்டு வந்திருக்கிறது. விஜயோடு சேர்ந்து நாமும் அந்தக் குரலை காதலிக்க தொடங்குகிறோம். விஜய் காதலை சொல்லப் போகும் காட்சியில் அனைவரும் கையைத் தூக்கி ஆல் தி பெஸ்ட் சொல்கிறார்கள்.  பாட்டு, சண்டைக்குத்தான் லாயக்கு என்று விஜயை சொல்பவர்களில் ஒரு சிலரையாவது மாற்றிவிடுவான் காவலன். விஜய்க்கு பன்ச் வசனம் எல்லாம் தேவையில்லை. அவர் பேசும் சாதாரண வசனத்திற்கு கூட ரசிகர்களே ஒரு அர்த்தம் வைத்து பன்ச் ஆக்கிவிடுகிறார்கள்.

ராஜ்கிரனுக்கு பாடிகார்டாய் வரும் விஜய், அவரது மகள் அசினுக்கு காவலனாய் ஆகிறார். அவருடன் அதே கல்லூரியில் சேரும் விஜய்க்கு ஒரு அழைப்பு வருகிறது. நம்பர் இல்லாமல் வரும் அழைப்பின் எதிர்முனையில் ஒரு பெண். கொஞ்சம் கொஞ்சமாய் விஜய்க்கு அவர் மீது காதல் வர, ஒரு கட்டத்தில் சந்திக்க நினைக்கிறார்கள். என்னை சந்தித்தால் என்னுடன் கண்காணாத இடத்திற்கு வந்து விடுவாயா என்பவரிடம் சரி என்கிறார். அந்த குரல் அசிந்தான் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் க்ளைமேக்ஸில் என்ன ஆகிறது என்பதை வெள்ளித்திரையில் காண்க.

விஜயின் அஸீஸ்டென்ட்டாக வடிவேலு. விஜயே படத்தை தாங்குவதால் இவர் எக்ஸ்ட்ரா போனஸ். “அய்யோ..பாவம். அவரே கன்ஃபீஸ் ஆயிட்டாரு” என்று வெடிக்கும் வடிவேலுவின் காமெடி சரவெடி. ”ஃபோன் அவர்து. டோன் என்னுது” என்று லந்து கொடுக்கும் வடிவேலுவை நம்பியே சித்திக் இருக்கிறார். அழகு அசின் இதில் இன்னும் அதே அழகுடன் இருக்கிறார். அழுகை க்ளோஸப்பில் மேக்கப்பை குறைத்திருக்கலாம். கடைசி 20 நிமிடம் மலையாளத்தில் சூப்பர் என்றார்கள். இதில் கொஞ்சம் சுமார் தான். செண்ட்டிமெண்ட் கொஞ்சம் தூக்கல். ஆனால் தாய்மார்களின் பேராதரவு இந்த படத்திற்கு கிடைக்க காரணமாய் இருக்கப் போவது அந்த கடைசி 20 நிமிடங்கள்தான். மொத்தத்தில் காவலன் ரசிகர்களை காக்கிறான். தைரியமா போயிட்டு வாங்க.

  2008ல் நான் வலையுலகிற்கு வந்த பின் வெளிவந்த விஜய் படங்கள் வில்லு, வேட்டைக்காரன், சுறா. ஆசைத் தீர தளபதியை ரசித்துவிட்டு, பொங்கும் உற்சாகத்தை பதிவு செய்ய இது வரை வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னதான் விஜய் ரசிகனாக இருந்தாலும் மேலே சொன்ன மூன்று படங்களும் சூப்பர் என்று எழுதவில்லை. நான் காதலுக்கு மரியாதை, வசீகரா, குஷி,சச்சின் படம் பார்த்து விஜன் ரசிகன் ஆனவன். ஆக்‌ஷன் வரிசையில் திருமலை, கில்லியைத் தவிர வேறெதுவும் பெரிதாய் கவரவில்லை. போக்கிரி உட்பட. அதனால் காவலன் என்னை ஈர்த்ததில் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை. படம் பார்க்கும் போது அதிக எதிர்பார்ப்புடன் போக வேண்டாம். காவலன் எனக்கு 100% ஓக்கே. உங்கள் ரசனை மாறக்கூடும். ஆனால் பிடிக்காமல் போக வாய்ப்பில்லை.

படத்தை வெளியிடுவதில் ஏற்பட்ட சிக்கலகள் ஏராளம். எல்லாவற்றிற்கும் பின்னால் இருந்தவர்கள் யாரென்று சொல்லவும் வேண்டுமா? என்ன ஆனாலும் பரவாயில்லை. இது படமல்ல. என் பிரஸ்டிஜ் என்று சொன்னாராம் தளபதி. 13 கோடி ரூபாய் டெப்பாசிட் கட்டியிருக்கிறார், தனது பாக்கெட்டில் இருந்து. எதிர்த்து நின்றவர்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றுதான் “தளபதிடா”.

சுறாவில் ஒரு பாடல்:

வெற்றி கொடி ஏத்து..வீசும் நம்ம காத்து..

வருங்காலம் நம்ம கையில் தாண்டா..

ஈர்க்குச்சி என்று நம்மை என்னும் பேர்க்கு..

தீக்குச்சி என்று சொல்லி உரசிக்காட்டு..

:))))))

அனைவருக்கும் சாளரம் சார்பில் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

61 கருத்துக்குத்து:

அனுஜன்யா on January 15, 2011 at 4:18 PM said...

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள். So, Vijay managed to release the movie!

உனக்கும் உன்னோட இளைய தளபதிக்கும் .... ஆல் தி பெஸ்ட் :)

அனுஜன்யா

மோகன் குமார் on January 15, 2011 at 4:20 PM said...

Congrats..Vijays carreer depends on this films success and hope this turns out to be a hit for Vijay.

அஹமது இர்ஷாத் on January 15, 2011 at 4:27 PM said...

பொங்க‌ல் வாழ்த்துக்க‌ள் கார்க்கி..

ம்ம்..!!

srini on January 15, 2011 at 4:33 PM said...

உண்மையான ஹாப்பி பொங்கல்!

Vinu on January 15, 2011 at 4:40 PM said...

தளபதிடா வேற எவன்டா.....

கார்க்கி நல்ல விமர்சனம்

பொங்கல் வாழ்த்துக்கள்

Vinu on January 15, 2011 at 4:41 PM said...

சும்மா அதிருதில்ல

விஜய் அண்ணா என்றால் சும்மாவா

இராமசாமி on January 15, 2011 at 4:54 PM said...

விஜய் படத்த அவரே விமர்சனம் பன்னறது மாதிரி இருக்கும் நீங்க அவரு படத்த விமர்சனம் பன்னறது :) இருந்தாலும் பார்ப்போம் சகோ... பொங்கல் வாழ்த்துகள் :)

சிட்டி பாபு on January 15, 2011 at 4:59 PM said...

சூடா படம் பாத்து டீங்க போல .இப்படி மறு பட்ட விமர்சனத்தை நான் எதிர்பர்கலை

அன்பு on January 15, 2011 at 5:06 PM said...

முதல் 30 நிமிடங்கள் ஒன்றுமே புரியவில்லை... அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களாகவே அறிமுகம் ஆகிறார்கள், ஏதேதோ பேசுகிறார்கள்.....லாஜிக் இல்லாத AVERAGE ஆன படத்திற்காக நீங்கள் மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே........

குசும்பன் on January 15, 2011 at 5:07 PM said...

ரைட்டு! :)

Periyasamy on January 15, 2011 at 5:08 PM said...

யையா!!! முடியல சாமி! இனியும் விஜய் படம் பாக்க உடம்புல தெம்பு இல்ல சாமீ !!!!!!!!!!!!!!

Periyasamy on January 15, 2011 at 5:08 PM said...

யையா!!! முடியல சாமி! இனியும் விஜய் படம் பாக்க உடம்புல தெம்பு இல்ல சாமீ !!!!!!!!!!!!!!

Periyasamy on January 15, 2011 at 5:08 PM said...

யையா!!! முடியல சாமி! இனியும் விஜய் படம் பாக்க உடம்புல தெம்பு இல்ல சாமீ !!!!!!!!!!!!!!

தர்ஷன் on January 15, 2011 at 5:13 PM said...

வாழ்த்துக்கள் சகா
கடைசியில் ஒரு மாதிரி ஜெயிச்சாச்சு போல இங்கே அருகாமையில் உள்ள தியேட்டரில் காவலன் போடுவதாக விளம்பரப்படுத்து விட்டு இறுதியில் சிறுத்தை போட்டார்கள். படம் பார்க்க வந்தவர்களில் நிறைய பேர் கலைந்து சென்றார்கள் இளைஞர்கள். ஆக அவருக்கென ஒரு கூட்டமுண்டு. இந்த வெற்றியை தக்க வைக்கும் விதமாக நடித்தால் சரி. பேரரசு படம், அரசியல் எனப் போனால் அம்புட்டுதான்.

நாய்க்குட்டி மனசு on January 15, 2011 at 5:53 PM said...

பொங்கல் வாழ்த்துக்கள் கார்க்கி!!

அஹோரி on January 15, 2011 at 5:53 PM said...

ஒரு ஈன குடும்பத்தை எதிர்த்து நிற்க ஒரு தில் வேண்டும். படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

சுல்கத் on January 15, 2011 at 6:04 PM said...

காவலன் போஸ்டரில் RED GIANT MOVIES ன்னு போட்டுள்ளதே!!!! ஒரே குழப்பமாக இருக்கு

மாணவன் on January 15, 2011 at 6:54 PM said...

//உங்கள் ரசனை மாறக்கூடும். ஆனால் பிடிக்காமல் போக வாய்ப்பில்லை//

சூப்பர் அண்ணே கலக்கல் விமர்சனம்...

மாணவன் on January 15, 2011 at 6:56 PM said...

இனிய பொங்கல் மற்றும் உழவர்திருநாள் நல்வாழ்த்துக்கள்

பிரதீபா on January 15, 2011 at 7:31 PM said...

// இராமசாமி said...விஜய் படத்த அவரே விமர்சனம் பன்னறது மாதிரி இருக்கும் நீங்க அவரு படத்த விமர்சனம் பன்னறது :) // :)

படம் பாத்துட்டு சொல்றேங்க கார்க்கி.
பொங்கல் வாழ்த்துக்கள்.

RaGhaV on January 15, 2011 at 7:31 PM said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகா.. :-))

pappu on January 15, 2011 at 8:04 PM said...

சந்தோஷம்?

ILA(@)இளா on January 15, 2011 at 8:21 PM said...
This comment has been removed by the author.
ILA(@)இளா on January 15, 2011 at 8:24 PM said...

//தீக்குச்சி என்று சொல்லி உரசிக்காட்டு//
இப்படி ஆடுனதாலதான் 13 கோடி சொந்த காச போட்டு அறிமுக நடிகர் மாதிரி படத்தை வெளியிடவேண்டியதா இருக்கு. யாரோ வேணும்னே விஜய தாளிச்ச மாதிரி சொல்றீங்க? யானை தன் தலையில மண்ணை வாரி போட்டுக்கும்னு கேள்வி பட்டிருக்கீங்களா? அதுதான் இது. கதையை தேர்ந்தெடுக்கறதுலதான் திறமை இருக்கு..இப்பவாவது புத்தி வந்தா சரிதான்னு பார்க்கலாம்னா வேலாயுதம் பழைய அதே டெம்ப்ளேட்..

ஹாய் அரும்பாவூர் on January 15, 2011 at 8:34 PM said...

நடிகனாக விஜய் அவர்களின் படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

அனால் தன்னுடைய மற்றும் தன் அப்பாவின் ஆசைக்காக சராசரி ரசிகனை பகடை காய் ஆக்கி தன் அரசியல் ஆசைக்கு குளிர் காய நினைக்கும் வியபார விஜய் அவர்களில் படம் தோல்வி அடைய நினைக்கிறேன்

உண்மையில் விஜய் உதவி செய்யும் மனப்பாங்கு இருந்தால் நடிகர் சூர்யா போல நடிகர் கமல் போல யாருக்கும் தெரியாமல உதவி செய்வார் ஆனால் தனக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் முழுவதும் அசையளுக்கு வரும் என்ற எண்ணத்தில் சின்ன சின்ன உதவியை கூட அரசியல் நோக்கத்தில் விளம்பரம் செய்யும் நடிகர் விஜய் என்பதே உண்மை

விஜய் அவரை நடிகர் ரஜினி உடன் ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ஒரே நாளில் அவர் இந்த் உயரத்தை அடைய வில்லை அவரின் ஆறில் இருந்து அறுபது படம் பாருங்கள் அவரின் நடிப்பு திறமைய முள்ளும் மலரும் என அவர் வாழ்க்கை படிக்கட்டை ஒரு கோட்டையாக கட்டி உள்ளார்

ஆனால் தன் அப்பாவின் ஆசைக்காக எத்தனையோ அப்பாவி அப்பாக்கள் மகன்களை பகடை காய் ஆக்கி அரசியல் ஆக்கும் விஜய் அவர்களை தான் நம்பவில்லை

பலே பிரபு on January 15, 2011 at 8:39 PM said...
This comment has been removed by the author.
Anonymous said...

இந்தப் பன்னாடைப் பசங்களால நூறு கிலோமீட்டர் தாண்டிப்போய்ப் பார்க்க வேண்டியதாப்போச்சு. ஆனா ஃபுல் வசூல் கார்க்கி! தளபதி பட்ட கஷ்டத்துக்கு பம்பர் ஹிட் ஆகணும்.

Franklin on January 15, 2011 at 9:36 PM said...

சுறா பாத்த பிறகுமா இவனுக திருந்தல்ல!!
கைப்புள்ள ஊரு இன்னும் உன்ன நம்புது.

சிவகுமார் on January 15, 2011 at 9:45 PM said...

//யையா!!! முடியல சாமி! இனியும் விஜய் படம் பாக்க உடம்புல தெம்பு இல்ல சாமீ// அதே அதே... நாங்களும் போய் சிக்கனுமா.. சென்னை புத்தக கண்காட்சில பாக்கும்போதே நினைச்சேன்.. நீங்க ரவுசு பார்ட்டின்னு..அதுக்காக இப்டியா Karki..!!

Pradeep on January 15, 2011 at 10:52 PM said...

தளபதி kooda ivlo santhosappattu irukkaa maattaaru.... waiting for may 1 (thambi sheeppu engakittaeyum irukku naangalum seevuvom)

saravana on January 15, 2011 at 11:08 PM said...

dai ஹாய் அரும்பாவூர் ,
enna da solra.. suriya advertisement ilama naladhu seiraena.
vijay tv pakardhu ilaya...
edho ivaru mattum dhan padika vaikeararu madiri scene podhuraen.

naladhu seiravaen aen channelku vandhu seianum... veetla seia vendiadhu dhana

Anonymous said...

எங்க தலைக்கு சரி சமமாக உங்க தளபதி காமெடி படங்கள் & அரசியல் என்று பெரும் சக்தியாக வளர்ந்து வருகிறார்... இது நல்லா இல்லை ஆமா சொல்லிட்டேன்...

இப்படிக்கு டி. ராஜேந்தர் ரசிகர் மன்ற விசுவாசி... ஹி ஹி...

அப்புறம் எல்லோருக்கும் சொல்லிக்குற மாதிரி ஒரு விஷயம்... டென்ஷன்-ஆ இருக்கிற அப்போ இந்த வீடியோ-வை பாருங்க... அப்போ தெரியும் எங்க தலையோட வெற்றி ரகசியம்... ஹி ஹி...

http://www.youtube.com/watch?v=EzVvF6k5Vkk

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

கார்க்கி on January 15, 2011 at 11:25 PM said...

அனைவருக்கும் நன்றி

இளா,
இந்த படத்தை விஜயே வாங்கி வெளியிட்டதால் தான் அந்த பணம் கட்டினார். திரையரங்க திபர்கள் கேட்ட சுறா நஷ்ட ஈடு இல்லை அதி. எல்லா சவால்களையும் சந்தித்து படத்தை வெளியிட்டிருக்கிறார். திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஹீரோ எங்காளு

அரும்பாவூர், விஜய் பத்தி சொன்னிங்க.உங்க கருத்துன்னு விடலாம். ஆனா சூர்யான்னு சொன்னீங்க பாருங்க. அவர் வீடு எனன் விஜய் டிவியா? லட்சுமி மாதிரி 4 பேர அழவிட்டு அவர் அடிச்ச லூட்டிய பார்க்கலையா? கொன்சம் பார்த்து சொல்லுங்க. அடுத்து கமல்.. வாயால மட்டும் சிரிக்கிறேன் :))

சிவக்குமார், உங்க விருப்ப பட்டியல எழுதி பாருங்க. அதுல பாதி மத்தவங்க பார்வைக்கு சிரிப்பா இருக்கும். என் இஷ்டம் எனக்கு :)

ஃப்ராங்க்ளின், நீங்க சொல்ரபடி பார்த்தா ஊருல ஒரு பையன் படமெடுக்க முடியாது..

உயிரே பார்த்தும் மணிய நம்பலையா?

ஆளவந்தான் பார்த்தும் கமல நம்பலையா?

பாபா பார்த்தும் ரஜினிய நம்பலையா?

மாயாவி பார்த்து சூர்யாவ நம்பலையா?

Joseph on January 15, 2011 at 11:32 PM said...

இளைய தளபதிய விட இந்த இணைய தளபதிய நான் வாழ்த்துறேன். வாழ்த்துக்கள் சகா.

சி.வேல் on January 15, 2011 at 11:38 PM said...

உயிரே பார்த்தும் மணிய நம்பலையா?

ஆளவந்தான் பார்த்தும் கமல நம்பலையா?

பாபா பார்த்தும் ரஜினிய நம்பலையா?

மாயாவி பார்த்து சூர்யாவ நம்பலையா

super , Enna solla , kamal , mani ellam vijay kal kita vara mudiyumaa , kaluku thalabathi.

“நிலவின்” ஜனகன் on January 16, 2011 at 12:08 AM said...

படம் ஜெய்க்கும்............... நாம உத்தரவாதம்.......

கார்க்கி on January 16, 2011 at 12:12 AM said...

நன்றி ஜோசப்

வேல், ஆமா. வர முடியாது. மணிரதனம் எவ்ளோ முயற்சித்தாலும் ஹீரோவா நடிக்க முடியாது :)))

bandhu on January 16, 2011 at 1:53 AM said...

கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறவேண்டும். Hopefully, without any 'Punch' dialogues and usual cliches! For the sake of his hard work and to break the hold of some people on the film industry!

Happy Pongal

D on January 16, 2011 at 2:24 AM said...

//கதையை தேர்ந்தெடுக்கறதுலதான் திறமை இருக்கு..இப்பவாவது புத்தி வந்தா சரிதான்னு பார்க்கலாம்னா//

Well said

katrukolpavan on January 16, 2011 at 8:32 AM said...

கலக்கல் விமர்சனம்.

DINESH on January 16, 2011 at 8:43 AM said...

so...vijay done it...he managed to face all politics made against him...

உங்க விருப்ப பட்டியல எழுதி பாருங்க. அதுல பாதி மத்தவங்க பார்வைக்கு சிரிப்பா இருக்கும். என் இஷ்டம் எனக்கு :)

correct ah sonninga karki...

roomno104 on January 16, 2011 at 9:59 AM said...

"தளபதிடா" - punch

http://www.sify.com/movies/tamil/review_more.php?ctid=5&cid=2429

கார்க்கி on January 16, 2011 at 10:48 AM said...

vijay on January 16, 2011 9:38 AM said...
hey bro ..i dint c the film..but..i did read ur vimarsanam...its make me to c the movie....thanks...thanks for ur honest..!!!..padam super hit

______

sorry vijay. I edited ur comments. Removed abusing words

VISA on January 16, 2011 at 11:08 AM said...

விஜய் தொடர் தோல்விகளிலிருந்து விடுபட இந்த படம் உதவும் என்றால் மகிழ்ச்சியே. ஏன்னா விஜய் உண்மையாவே ரொம்ப பாவம் தான். சூர்யா..கார்த்தி..தனுஷ் போன்றவர்களுக்கு அமையும் இயக்குனர்களும் படங்களும் விஜய்க்கு வாய்ப்பதில்லை.....விஜய் நிஜமாவே பாவம் தான்.

Anonymous said...

இனிமேல் விஜய் விக்ரம் அஜித் படமெல்லாம் ஓடறது ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டம். இவங்கெல்லாம் ஒழுங்கான கதைய தேர்தெடுத்து நடிக்கரதில்ல. இவங்க காலமெல்லாம் முடிஞ்சு போச்சு. இவங்கெல்லாம் இனி ஒரு வெற்றி குடுக்கறதே ரொம்ப கஷ்டம். இதுல விக்ரம் படம் வேணா ஓடலாம்.அவர் வித்யாசமா நடிக்கறார். ஆனா கதைய செலக்ட் பண்றதுல அவருக்கு குழப்பம் அதிகமா இருக்கு. அதனால தான் அவருக்கு தொடர்ந்து தோல்விப்படங்கள் குடுக்கறாரு. ஆனா விஜய் படமெல்லாம் ஓடாது. எல்லா படத்துலயும் ஒரே மாதிரி கதை & நடிப்பு யார் பார்ப்பாங்க. இந்த நடிப்புக்கு இவங்களுக்கு ரசிகர்கள் வேறு. எல்லாம் வெட்டி பசங்க.

ஞாஞளஙலாழன் on January 16, 2011 at 11:50 AM said...

------------------------
Visa said

>சூர்யா..கார்த்தி..தனுஷ் போன்றவர்களுக்கு அமையும் இயக்குனர்களும் படங்களும் விஜய்க்கு >வாய்ப்பதில்லை
---------------------------

வாய்ப்பதில்லையா இல்லை தேர்ந்தெடுப்பதில்லையா?


விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் நல்ல கதையம்சம் உள்ள படங்களை மக்களுக்கு அறிமுகப் படுத்தினால் மகிழ்ச்சியே! சினிமாவில் அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருக்க, அரசியல் போக நினைப்பது தவறாகவே படுகிறது..இது எம்.ஜி.ஆர் காலமில்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

FARHAN on January 16, 2011 at 1:16 PM said...

சூப்பர் விமர்சனம்
உங்களுகும் தளபதிய்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

DINESH on January 16, 2011 at 2:58 PM said...

@saravana:
enna saga ipdi sollitinga...agaram foundationa makkal iyakkama maatha thaan atha vijay tv la pottanga....atha paathitu thaan foundation ku niraya help pannanga...it is not vanity saga...for the publicity of his foundation 1ly..

ஆகாயமனிதன்.. on January 16, 2011 at 9:34 PM said...

காவல்காரன்
http://aagaayamanithan.blogspot.com/2011/01/blog-post_15.html

sivakasi maappillai on January 17, 2011 at 10:23 AM said...

யோவ் போய்யா... உன் பேச்ச நம்பி நேத்து போயி.. வாய்ல நல்லா வருது.... உன்ன நம்பினேன் பாரு....
ஒழுங்கா 220 ரூபாய் மற்றும் 70 ரூபா காபி செலவு ஆனத ட்ரான்ஸ்பர் பண்ணு....


ஜீவா, ஜித்த‌ன் ர‌மேஷ் ந‌டிக்க‌ வேண்டிய‌ க‌தைல‌ விஜ‌ய்.... இதுவா க‌த‌ய‌ செல‌க்ட் ப‌ண்ற‌ ல‌ட்ச‌ண‌ம்....

சிவ‌ச‌க்தி பாண்டியண் அடிச்சி தொவ‌ச்சி காய‌போட்ட‌ பாக்காம‌ காத‌ல் ச‌ப்ஜெக்ட் 2011ல‌ ம‌றுப‌டியுமா.....


லாஜிக் இல்லாத க‌தை மசாலா ப‌ட‌த்துக்குத்தான் செட் ஆகும்... காத‌ல் ப‌ட‌த்தில‌ இல்ல‌....

அஜித் காலேஜ் ஸ்டூட‌ண்டா வ‌ந்தாராம்... அதுக்கு ப‌ழிக்கு பழியா இவ‌ரும் காலேஜ் போறாராம்.....

sivakasi maappillai on January 17, 2011 at 10:26 AM said...

ஒரு மூணு ம‌ணி நேர‌ம் க‌ரும்பு சாறு மிஷின்ல‌ த‌ல‌ய‌ வுட்டா எப்ப‌டி இருக்கும்.... இந்த‌ ப‌ட‌த்தில‌ அதே எஃப‌க்ட் கிடைக்கும்

sivakasi maappillai on January 17, 2011 at 11:10 AM said...

//இந்த படத்தை விஜயே வாங்கி வெளியிட்டதால் தான் அந்த பணம் கட்டினார்.//


ந‌டிக‌ர் விஜ‌யிட‌ம் விநியோக‌ஸ்த‌ர் விஜ‌ய் ந‌ஷ்ட‌ ஈடு கேட்பார்....

விநியோக‌ஸ்த‌ரின் வ‌லி புரிய‌ வைக்க‌த்தான் இந்த‌ பாடு ப‌டுத்திருக்காஙங்க‌ போல‌ருக்கு.... இப்ப‌வாது புத்தி வ‌ந்து.... ஒரு சிவ‌காசி, திருப்பாச்சி, கில்லி, குஷி, துள்ளாத‌ ம‌ன‌மும் துள்ளும், காத‌லுக்கு ம‌ரியாதை மாதிரி ஒரு க‌ர‌க்டான‌ ப‌ட‌த்தில‌ நடிச்சி வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்

பலே பிரபு on January 17, 2011 at 2:07 PM said...

உங்களை இங்கே அழைக்கிறேன்.

Tamil Bloggers Bio-Data

Bullet on January 18, 2011 at 6:46 AM said...

சூப்பர் தல

yuva on January 18, 2011 at 10:03 AM said...

Vijay for Veeram and victory
Thada potavangala ethirthu poradi jeichutaar

Real Hero menmelum vetri pera
Engalin Idhayam kanintha Vaazhthukkal

Wonderfull review Karki

Sundar B on January 18, 2011 at 7:42 PM said...

First off, Ilaya Thalapathi Vijay deserves kudos for shedding his action/political persona and digging his toes in and choosing a script that focuses on comedy and emotions.

5/5 for kaavalan Thumbs Up!

www.sify.com/movies/tamil/review_more.php?ctid=5&cid=2429


Kavalan is redemption of sorts for Vijay – the actor.

But, Kavalan is a reminder to all of us, most importantly to many directors in the industry, that he can act; not just as the ‘savior hero’ or messiah of the masses, but as a person who feels love, happiness, sorrow and all other emotions. For the first time in a few years, a Vijay film is not only about its hero, but about the characters and relationships.

காவலன் – இப்போது என்ன செய்வார்கள்?
காவலன் எனக்கு 100% ஓக்கே. உங்கள் ரசனை மாறக்கூடும். ஆனால் பிடிக்காமல் போக வாய்ப்பில்லை.

http://www.karkibava.com/2011/01/blog-post_15.htmlKaavalan ~ Real Pongal Treat

Nevertheless a family entertainer. This movie burdened with expectations has stayed to be on the safer side and well, it surely has succeeded in a way.

http://www.kollytalk.com/review/kaavalan-movie-review-a-real-pongal-treat/


Kavalan- The Perfect Family Entertainer

Kavalan review – Vijay strikes back

The trade experts and reviews state that it will reach the hit mark comfortably. Way to go Vijay.

http://www.supergoodmovies.com/11832/tollywood/Kavalan-review-Vijay-strikes-back-News-Details


Kaavalan Movie Review- Feel good family entertainer

On a whole Vijay has been the show stealer.
Bottom line: Fantastic come back of Vijay
Rating: 3/5

http://tamil.way2movies.com/?p=67759


வெல்க‌ம் பேக் விஜ‌ய்!

இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியிலும் விஜயின் நடிப்பை பார்க்கும்போது எழுந்து நின்று கை தட்ட வேண்டும் போல் தோன்றுகிறது.

கோப‌ம், குரோத‌ம், அருவாள், ர‌த்த‌ம் போன்ற‌ வார்த்தைக‌ள் இல்லாம‌ல் ஒரு விம‌ர்ச‌ன‌ம் எழுதிமுடித்திருப்ப‌தே நிம்ம‌தியாக‌ இருக்கிற‌து! சித்திக் மீது ந‌ம்பிக்கை வைத்து மீண்டும் க‌ள‌ம்க‌ண்டிருக்கும் விஜ‌ய்க்கு நிச்சிய‌ம் "காவ‌ல‌ன்" ஹேப்பி பொங்க‌ல் சொல்லுவான் என்றுதான் நினைக்கிறேன்....

சிக்ஸ‌ர் இல்லாவிட்டாலும் நிச்சிய‌மாக‌ இதுவொரு ப‌வுண்ட‌ரி!

எ ஜாலி வீகெண்ட் காவ‌ல‌ன் ஷோ!!


Kaavalan Super hit ~ maalaimalar newspaper exclusive


http://epaper.maalaimalar.com/showtext.aspx?parentid=4421&boxid=7579484&issuedate=1712011


மலையாளிகளை கவர்ந்த காவலன்

கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகளில் காவலன் வெளியாகிவுள்ளது. வெளியான அனைத்துத் திரையரங்குகளும் ரசிகர்களால் நிரம்பி வழிகின்றன. கேரளா முழுவதுமே இதுதான் நிலைமை என்பதால் மலையாள நடிகர்களே சற்று அதிர்ந்து போய் உள்ளனர்.

முதல்கட்ட தகவலின்படி விஜய்யின் தோல்வி சரித்திரத்துக்கு காவலன் அணை போட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்


Kaavalan – Tamil Movie Review

‘Kaavalan’ holds specific place in the bandwagon of Vijay’s ever-cherishing romantic entertainers like ‘Poove Unnakkaga’, ‘Kadhalukku Mariyadhai’, ‘Shahjahan’, ‘Thullatha Manamum Thullum’.

If ‘Vinnaithaandi Varuvaaya’ happened to be 2010’s best romantic film, ‘Kaavalan’ will not be an exception as it can be acclaimed as the emotional romantic drama in 2011. All credit goes to Siddique and to Vijay for making a best decision at this crucial point of time in his career.

Verdict: Experience the surprise from Vijay.

http://www.cinefundas.com/2011/01/17/kaavalan-tamil-movie-review

Sundar B on January 18, 2011 at 7:43 PM said...

this is Honest rEVIEW...Kaavalan is Good...viJAY HAS BROKE HIS pREVIOUS FORMULAS AND SHINED IN THIS FILM...HE IS BACK TO HIS OWN PATH....gOOD ACTING ...ITS A WONDERFUL LOVE STORY WITH COMEDY...THE CLIMAX IS UNEXPECTED AND THE CLIMAX TWIST AND THE ARTISTS DONE SO GOOD IN CLIMAX....ALL THE BEST mR. VIJAY....CONTINUE THE SAME AND GO AHEAD WITH THIS KIND OF GOOD STORY FILMS...IT MAY BE ROMANTIC OR ACTION OR COMEDY..IT SHUD BE DIFFERENT FROM OTHER FILMS..THATS WAT ALL TAMIL PPLS ARE EXPECTING....ALL THE BEST FOR YOUR FUTURE FILMS....sure good hearted ppls and lovers will cry at climax...i've not cn siruthai...but aadukalam oly 1st half ok...2nd half is mokkai....Kaavalan superb...its a romantic family entertainer....u can c a type of vijay as u cn in love today,kadhaluku mariyadhai and friends etc.....Kavalan is nice and sure u can c as a family.....
its a gr8 come back... and i m not a vijay fan....
vj is always gr8...kavalan super...decent family entrtainer...a fresh vijay in kavalan..not like sura,vetaikaran,sivakasi etc...no action mass n masala...soft romantic entertainer....climax is gr8...soft hearted ppls and lovers will sure drops tears in climax...
பலம் பலவீனத்தை அடக்கி ஆள்றது நாட்டுக்கு ஒத்து வராது,காட்டுக்குத்தான் அது சரி .அன்பாலதான் எதிரியை ஜெயிக்கனும் - காவலன் வென்றுவிட்டான்

Swami on January 19, 2011 at 10:29 PM said...

தம்பி,
அப்பன் செஞ்ச பாவம் புள்ளைங்களுக்கு போய் சேரும் என்பது போல குருவி,வில்லு,வேட்டைக்காரன்,சுறாவின் பாவங்கள் காவலனுக்கு போய் சேர்ந்தன! #அவதானிப்பு

பாவம்..சிரம திசையிலிருந்து விஜய் சீக்கிரம் வெளியே வர என் பிராத்தனைகள்

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

Karikalan on January 21, 2011 at 11:10 AM said...

Even through there were few logical flaws, the movie managed to win the heart. Overall it is good.

After seeing Body Guard in Malayalam, Siddique should have kept the initial scenes the same in Tamil as well, would have halped the story a bit more. One unwanted song in the 2nd half. Other than that the movie is good.

If you want to enjoy the movie,

- Remove all your earlier perceptions on Vijay (Vijay is fresh in this movie).

- Do not read the reviews. Knowing the story will spoil the show.

- Keep your expectations low.

That is all.

Vijay said that he will do 2 movies a year, 1. Action oriented. 2. Story based. Whatever it is, please choose the good directors to make a mark. You can do it.

ஆதிமூலகிருஷ்ணன் on January 21, 2011 at 3:26 PM said...

எனக்கு இன்று வரை பிடித்த விஜய் படங்கள் காதலுக்கு மரியாதை, சச்சின், திருப்பாச்சி, கில்லி.. மட்டுமே! அடுத்த படம் இன்னும் வரவில்லை. :-)

madhu on January 22, 2011 at 8:57 PM said...

காவலன் படம் பார்த்ததும் எனக்கு கண்டிப்பா உங்ககிட்ட இதைச் சொல்லணும்னு பட்டிச்சு. Before I start, lemme tell the truth, I m a die hard Ajith fan.

ஆனால் இந்த படத்தை எந்த வித சார்பும் இன்றியே பார்த்தேன். முதலில் ஒரு இனிய விசயம், படத்தில் விஜய் அத்தனை அழகாக இருக்கிறார். அருமையான நடிப்பு. சின்னச் சின்னதாய் மனதை கொள்ளை கொள்ளும் expressions.

ஆனால் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர். அவரைத் தவிர மற்ற எல்லாமே படத்தில் மைனஸ் ஆகவே உள்ளது. முக்கியமாக(தேவையான இடங்களில்) அழுத்தமற்ற கதையும், மிக மிக மிக மோசமான இயக்கமும் படத்தை ஆட்டம் காண வைத்து விட்டன.

இன்னும் நிறைய சொல்லணும்னு டைப் பண்ணிட்டு இருக்கும் போது கேபிள் சங்கரோட காவலன் பதிவைப் படித்தேன். நான் சொல்ல நினைச்ச எல்லாமே இருக்கு இதில, அதில் குறிப்பிட்டுள்ள அரசியலைத் தவிர..

விஜய்க்கு கிடைத்திற்கும் இந்த powerful image-ஐ அடைய அவர் எத்தனை உழைத்திருப்பார் என எல்லாருக்கும் தெரியும். அதற்கு ஏற்ற கதைகளை அவர் தேர்வு செய்வதே எல்லார்க்கும் நல்லது.

குறிப்பாக கில்லி போன்ற காமெடியும் கலக்கல் actionனும் மிக மெலிதான Hero worship-மும் கலந்த கதைக்களமே விஜய்க்கு பொறுத்தமானது என்பது என் அபிப்பிராயம். வசீகரா என் favorite என்றாலும் அவர் ரசிகர்கள் அதில் முழுமையாக திருப்தி அடைய முடியாது என்பதால் அயன், ஆதவன் போன்றவையே இனி விஜய்க்கான சிறந்த கதைகள் என நினைக்கிறேன். என்ன சொல்றீங்க?

 

all rights reserved to www.karkibava.com