Jan 10, 2011

வ‌ருது வ‌ருது..வில‌கு வில‌கு..புர‌ட்சி வெளியே வ‌ருது


   
   ப‌திவுல‌க‌ ச‌கா ஒருவ‌ருக்கு அலைபேசி சித்த‌ர் என்று பெய‌ர் வைத்திருந்தேன். எப்போதுமே ஃபோனும் காலுமாக‌வே அலைப‌வ‌ர் அவ‌ர். (ஃபோன் கையில் இருந்தாலும் அதில‌ கால்தானே வ‌ருகிற‌து?) 4 வ‌ரி அழைத்த‌வ‌ரிட‌ம் பேசினால், அடுத்த‌ 4 வ‌ரி அலுவ‌ல‌க‌த்தில் யாரையாவ‌து திட்டுவார். எந்த‌ வார்த்தை ந‌ம‌க்கு, எந்த‌ வார்த்தை அவ‌ர் அலுவ‌ல‌க‌ ச‌காவிற்கு என்ப‌தை பிரித்த‌றிய‌ நாம் அன்ன‌மாக‌ வேண்டும்.இந்த‌ ல‌ட்ச‌ண‌த்தில் இவ‌ருக்கு அமெரிக்காவில் இருந்து ஒரு ப‌திவ‌ர் அழைத்து 30 நிமிட‌ங்க‌ள் பேசியிருக்கிறார். நியாய‌ப்ப‌டி அவ‌ர் 15  நிமிடங்க‌ள் தான் பேசினார் என்று சொல்ல‌ வேண்டும்.மீதி 15 நிமிட‌ங்க‌ள் லைனில் காத்திருந்தார். க‌டுப்பான‌ அமெரிக்க‌ பிர‌ஜை "அமெரிக்காவில் ஃபோன்ல‌ பேசும்போது ஃபோன்ல‌ ம‌ட்டும்தான் பேசுவாங்க‌" என்றாராம். க‌டுப்பான‌ இந்திய‌ பிர‌ஜை சொன்னாராம் "அமெரிக்காவில் யாரும் ஃபோன்ல‌ 30 நிமிஷ‌ம் பேச‌ மாட்டாங்க‌. சொல்ல‌ வேண்டிய‌த‌ சுருக்க‌மா பேசிட்டு வ‌ச்சிடுவாங்க‌".

சொர்க்க‌மே என்றாலும் அது ந‌ம்மூர‌ போல‌ வ‌ருமா?
_____________________________________________________________________

   வார‌ இறுதியை ம‌கிழ்வுட‌ன் கொண்டாட‌ ஏதுவாக‌ எங்க‌ள் அலுவ‌ல‌க‌த்தில் வெள்ளி மாலை Friday Fizz கொண்டாடுவோம். இருக்கும் வேலை டென்ஷ‌ன் ம‌ற‌ந்து வீடு திரும்ப‌ அது உத‌வும். ஒவ்வொரு வார‌மும் யாராவது ஒருவ‌ர் தொகுத்து வ‌ழ‌ங்குவார்க‌ள். இந்த‌ வார‌ம் ஒரு ந‌ல்ல்ல்ல்ல‌ விளையாட்டு. முத‌ல் ந‌ப‌ர் சொல்லும் வாக்கிய‌த்தோடு சில‌ வார்த்தைக‌ள் சேர்த்து அடுத்த‌வ‌ர் தொட‌ர‌ வேண்டும். அர்த்த‌மும் வ‌ர‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு I am going  என்றால் அடுத்த‌ ந‌ப‌ர் I am going to a market என்று சொல்ல‌லாம். இப்ப‌டியே தொட‌ர‌ வேண்டும். இன்னொரு விஷ‌ய‌ம் வார்த்தைக‌ளை ம‌ற‌ந்து விட‌க்கூடாது. இருக்கும் எல்லா பெண்க‌ளும் எதிர‌ணியில் இருந்த‌தை எண்ணி க‌டுப்பாக‌ இருந்தேன். இது கூட‌ ந‌ல்ல‌துக்குத்தான் என்று பின்ன‌ர் தான் புரிந்த‌து. முன்னால் இருந்த‌வ‌ர் I Went  என்று தொட‌ங்க‌ என்னிட‌ம் I went to the beach where i had seen a smart guy என்று வ‌ந்த‌து. நான் என் ப‌ங்கிற்கு I went to the beach where i had seen a smart guy and i said I love you karki என்றேன். அடுத்து வ‌ந்த‌ எல்லா பெண்க‌ளும் I love you karki என்று சொல்லியே ஆக‌ வேண்டும். ஒவ்வொருவ‌ரும் சொன்ன‌பின் நான் Thank you என்ற‌ போது அவ‌ர்க‌ள் முக‌த்தை பார்க்க‌ணுமே.. ஹிஹிஹிஹி..

நினைத்த‌தை முடிப்ப‌வ‌ன் நான்..நான்..நான்
_____________________________________________________

   புத்த‌க‌ க‌ண்காட்சியில் ப‌ல‌ புதிய‌ ந‌ண்ப‌ர்க‌ளை ச‌ந்திக்க‌ முடிந்த‌து. கே.ஆர்.பி செந்திலை தெரியும்தானே? புரொஃபைலில் சே குவேரா ப‌ட‌த்தை வைத்திருப்பார். அவ‌ருட‌ன் பேசிக் கொன்டிருந்த‌ போது இன்னொரு புர‌ட்சி வீர‌ர் வ‌ந்தார். எப்ப‌டியாவ‌து இந்தியாவிற்குள் புர‌ட்சியை அழைத்து வ‌ந்து விட‌ வேண்டுமென்று கயிறு க‌ட்டி இழுக்கும் குழுவின் ஆத‌ர‌வாளார‌ம் அவ‌ர். ஐப்ப‌சி போனா புர‌ட்டாசி வ‌ந்துவிடும். எது போனா புர‌ட்சி வ‌ருமென்று தெரியாம‌ல் முழிப்ப‌வ‌ன் நான். அவ‌ரிட‌மே கேட்க‌லாமே என்று நினைத்த‌ போதுதான் அந்த‌ "ச‌ம்ப‌வ‌ம்" ந‌ட‌ந்த‌து. செந்திலைப் பார்த்து ந‌ம் புர‌ட்சியாள‌ர் சொன்னார் "புரொஃபைல் ஃபோட்டோல‌ வேற‌ மாதிரி இருக்கீங்க‌". ஒரு நொடி ஸ்த‌ம்பித்துப் போனேன் நான். சே குவேராவையே தெரியாத‌ ந‌ப‌ரிட‌ம் பொறுப்பை ஒப்ப‌டைத்தால் புர‌ட்சி எங்க‌னும் வ‌ரும்?

சிவ‌ப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது..
_____________________________________________________-

   தோழி அப்டேட்ஸ் இவ‌ர்தான் எழுத‌றாரு என்று யாராவது சொல்லும்போது ம‌கிழ்வாக‌த்தான் இருந்த‌து சென்ற‌ வார‌ம் ஒரு ப‌திவ‌ரை ச‌ந்திக்கும் வ‌ரை. அவ‌ர் பெய‌ரை கேட்ட‌தும் ப‌க்கென்ற‌து. ஆம். அவ‌ரின் புனைபெய‌ர் தோழியாம். தோழி என்ற‌ பெய‌ரில் தான்‌ வ‌லையில் எழுதி வ‌ருகிறார். அவ‌ரிட‌ம் பேசும் முன்பு இன்னொருவ‌ர் வ‌ந்தார். கேபிள் ச‌ங்க‌ரிட‌ம் யார் கார்க்கி என்று கேட்டுக் கொண்டிருந்தார். முர‌ட்டு தேக‌மும், முறுக்கிய‌ கையுமாய் இருந்தவ‌ரிட‌ம் சென்று சொல்லுங்க‌ என்றேன். "நான் ராஜ‌சேக‌ர். தோழியின் க‌ண‌வ‌ர்" என்றார். ச‌..ரி..ங்..க‌.. எ..ன்..ன‌ செ..ய்..ய‌..ணு..ம் என்றேன் தைரிய‌மாக. சிரித்த‌படி தோழியை அழைத்தார். நிறைய‌ பேசினோம். நீண்ட‌ நாட்க‌ளுக்கு பிற‌கு ஒரு ந‌ல்ல‌ ஜோடியை பார்த்தேன். ஏனோ என் குரு ஆதி நினைவுக்கு வ‌ந்தார். ஷோகேஸ் ம‌னைவிக‌ள் ப‌திவும் நினைவுக்கு வ‌ந்த‌து. அதை விடுங்க‌. இவ‌ர்க‌ள் இருவ‌ரும் ச‌ரியான‌ ஜோடி. கொஞ்ச‌ம் பொறாமையுட‌னே சொல்கிறேன். இருவ‌ருமே கொடுத்து வைத்த‌வ‌ர்க‌ள். வாழ்த்துவோம்.

இனிமேல் தோழி அப்டேட்ஸ் எழுத‌வ‌தில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.(இவ‌ங்க‌ கார‌ண‌மில்லை) இன்னும் ப‌திவேற்றாம‌ல் இருக்கும் 2 அப்டேட்ஸ்க‌ள் ம‌ட்டும் எழுதி விடுகிறேன்.

வீட்டில் நூலகம் வைக்க வேண்டும் என்ற ஆசை தீரவாது தோழியை வீட்டுக்கு அழைக்க வேண்டும். அவளை மீறி என்ன இருக்கிறது புத்தகத்தில்?

என‌க்கு அடிப்பட்டு ரத்தம் வரும் இடத்தில் தோழியால் எப்படி முத்தம் கொடுக்க முடியும்? பஞ்சு வைக்க சொல்கிறார் லூசு டாக்டர்.

.

22 கருத்துக்குத்து:

மோகன் குமார் on January 10, 2011 at 2:53 PM said...

என்னது உங்க ஆபிஸ் பெண்களை I love you karki சொல்ல வைத்தீர்களா? நிறைய புகைய வைக்கிறீர்கள்.

தோழி அப்டேட்ஸ் நிறுத்த வேண்டாம்னு எத்தனை பின்னூட்டம் வர போகுது பாருங்க. நிஜமாக தோழி அப்டேட்ஸ் நிற்க ஒரே வழி கார்க்கிக்கு கல்யாணம் ஆவது தான் (ஒரு வேளை அதான் செய்தியோ?)

தர்ஷன் on January 10, 2011 at 2:56 PM said...

//ஃபோனும் காலுமாக‌வே அலைப‌வ‌ர் அவ‌ர்//
//ஐப்ப‌சி போனா புர‌ட்டாசி வ‌ந்துவிடும். எது போனா புர‌ட்சி வ‌ருமென்று தெரியாம‌ல் முழிப்ப‌வ‌ன் நான்//

புல் போர்மல இருக்கீங்க

//அடுத்து வ‌ந்த‌ எல்லா பெண்க‌ளும் I love you karki என்று சொல்லியே ஆக‌ வேண்டும். ஒவ்வொருவ‌ரும் சொன்ன‌பின் நான் Thank you என்ற‌ போது அவ‌ர்க‌ள் முக‌த்தை பார்க்க‌ணுமே.. ஹிஹிஹிஹி..//

இதுனாலதான் இவரோட ப்ளாக்ஐப் பார்த்தாலே இவர் பெண்களை எப்படி நினைக்கிறார்,எவ்வளவு பெரிய ஆணாதிக்கவாதி என்றெல்லாம் பதிவுகள் எழுதுகிறார்கள்

//இனிமேல் தோழி அப்டேட்ஸ் எழுத‌வ‌தில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்//

ஐயகோ தமிழ் பதிவுலகம் இனி எப்படி உய்யும்

காவேரி கணேஷ் on January 10, 2011 at 3:02 PM said...

ச‌..ரி..ங்..க‌.. எ..ன்..ன‌ செ..ய்..ய‌..ணு..ம் என்றேன் தைரிய‌மாக.

இதுக்கு பேர் தான் தைரியமா?

அழகு உன் எழுத்து.

அமுதா கிருஷ்ணா on January 10, 2011 at 3:11 PM said...

அப்டேட்ஸ் முடியப்போகுதா எப்ப கல்யாணம் கார்க்கி?

vinu on January 10, 2011 at 3:11 PM said...

yyyyyyyyyyyyyy?


you know y i'm asking this?

Kaarthik on January 10, 2011 at 3:13 PM said...

//ஃபோனும் காலுமாக‌வே அலைப‌வ‌ர்// - Typical Karki Brand Mokkai ;-)

பியூட்டிபுள் கேம். இந்த கேமுக்கு என்ன பேர் சொன்னீங்க? (ஜென்டில்மேன் கவுண்டர் ஸ்டைலில் படிக்கவும் :-))

என்ன இது?! ஃபேஸ்புக்கை நிறுத்தப் போறேன்னு Mark Zuckerberg சொல்ற மாதிரி 'தோழி அப்டேட்ஸ்'-ஐ நிறுத்தப் போறேன்னு சொல்றீங்க? சீக்கிரம் முடிவ மாத்திக்கோங்க.
இல்லைன்னா பதிவுலகில் புரட்சி வரும். எது போனா புரட்சி வரும்னு தெரிஞ்சுக்குவீங்க :-)

விக்னேஷ்வரி on January 10, 2011 at 3:37 PM said...

ஆஃபிஸ்ல எல்லாப் பொண்ணுங்களுமா.. சூப்பர். :)

சுசி on January 10, 2011 at 4:14 PM said...

:)

பிரதீபா on January 10, 2011 at 4:29 PM said...

//அடுத்து வ‌ந்த‌ எல்லா பெண்க‌ளும் I love you karki என்று சொல்லியே ஆக‌ வேண்டும்//
:) என்னா ப்ப்லானிங்கு !!


//இனிமேல் தோழி அப்டேட்ஸ் எழுத‌வ‌தில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.//
ஏன்? மனைவி அப்டேட்ஸ் எழுதப் போறீங்களா? இல்லை இல்லை, மனைவி வந்தாக் கூட தோழி அப்டேட்ஸ் எழுதுங்க.. அது உங்க பிராண்ட் கார்க்கி.
கண்டிப்பாக அவ்வப்போது எழுதுங்கள், நிறைய பேர் மிகவும் ரசிக்கும் வரிகள் அவை.

மாணவன் on January 10, 2011 at 4:36 PM said...

//இனிமேல் தோழி அப்டேட்ஸ் எழுத‌வ‌தில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்//

தோழி அப்டேட்ஸ் எழுதலைன்னா பரவாயில்லை கல்யாணம் ஆனதும் மனைவி அப்டேட்ஸ் எழுதுங்க....

ஹிஹி

மாணவன் on January 10, 2011 at 4:37 PM said...

//செந்திலைப் பார்த்து ந‌ம் புர‌ட்சியாள‌ர் சொன்னார் "புரொஃபைல் ஃபோட்டோல‌ வேற‌ மாதிரி இருக்கீங்க‌". ஒரு நொடி ஸ்த‌ம்பித்துப் போனேன் நான். சே குவேராவையே தெரியாத‌ ந‌ப‌ரிட‌ம் பொறுப்பை ஒப்ப‌டைத்தால் புர‌ட்சி எங்க‌னும் வ‌ரும்?//

யாரப்பா அந்த புரட்சிக்காரரு???

ஹிஹிஹி

Mukilarasi on January 10, 2011 at 7:50 PM said...

ஐப்ப‌சி போனா புர‌ட்டாசி வ‌ந்துவிடும். எது போனா புர‌ட்சி வ‌ருமென்று தெரியாம‌ல் முழிப்ப‌வ‌ன் நான்.//

"டா" போனால், புரட்சி வந்துடும்... :-))

மணிகண்டன் on January 10, 2011 at 8:29 PM said...

தோழி அப்டேட் குறித்து - இதுவரை இந்த புதுவருடத்தில் மகிழ்ச்சியான செய்தியாகவே வந்து கொண்டு இருக்கிறது. நன்றி.

கயல் on January 11, 2011 at 12:20 AM said...

:))

பா.ராஜாராம் on January 11, 2011 at 1:30 AM said...

// and i said I love you karki என்றேன்//

:-)) brilliant! ...and i love you 2 karki!

தோழி on January 11, 2011 at 2:37 AM said...

Hi Karki, thozhi updates - why stopping stopping. pl continue. its useful for many ppl. :)

ILA(@)இளா on January 11, 2011 at 3:06 AM said...

I love youக்கு உங்க ரெஸ்பான்ஸ் எத்தனை பொண்ணுங்களுக்குன்னு சொல்லவே இல்லையே

ராஜ சேகர் on January 11, 2011 at 3:25 AM said...

எங்களை பற்றி பொறாமையுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.. இருந்தாலும் ஒரு பச்சை புள்ளைய முரட்டு உருவம் என்று டாமேஜ் பண்ணிருக்க வேண்டாம். எங்களுக்கு உங்களோட அரட்டை அடிச்சதுல ரொம்ப சந்தோசம்

Philosophy Prabhakaran on January 11, 2011 at 4:27 AM said...

நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html

ராஜன் on January 11, 2011 at 8:23 AM said...

தும் ததா!

ராஜன் on January 11, 2011 at 8:23 AM said...

தும் ததா!

கே.ஆர்.பி.செந்தில் on January 11, 2011 at 9:31 AM said...

புரோபைல் படத்த மாத்தாலமான்னு யோசிக்கிறேன் ... ஏன்னா என்னால புரட்டாசி சாரி புரட்சி தாமதம் ஆயிடக்கூடாது பாருங்க ...

 

all rights reserved to www.karkibava.com