Jan 7, 2011

லேடீஸ்.. ஆன்சர் மீ


 

1) வண்டில ஃப்ரண்ட் பிரேக், பேக் பிரேக்ன்னு ரெண்டு இருக்கும் போது (காலால) லெக்  பிரேக் போட்டு தட்டி தட்டி நிறுத்தறீங்களே.. உங்க மனசுல என்ன ஷேன் வார்னேன்னு நினைப்பா?

2) இன்கமிங் காலுக்காகவும், மிஸ்டு காலுக்காகவுமே மொபைல் வாங்குறீங்களே. ஒரு வேளை மிஸ் எல்லாம் விடுற கால் என்பதால் தான் மிஸ்டு கால்ன்னு பேரு வந்ததா?

3) அஃபிஷியல் கால்ன்னா எதிர்ப்பக்கம் பேசுற ஆளு இருக்கிற திசையை நோக்கி நேரா பேசுற மாதிரி காட்டுக் கத்தல் போடுற நீங்க, பெர்சனல் கால்ன்னா மட்டும் உதடே அசையாம பேசுறீங்களே.. இதுக்கெல்லாம் தனியா ஸ்பெஷல் கிளாஸ் எதுனா போனீங்களா?

4) தலைமுடிய தவிர எல்லாத்திலும் பிங்க் கலர் தேடுறீங்க ஓக்கே. அதுக்குன்னு தேசியக்கொடி தந்தா கூட பிங்க கலர் இல்லையான்னு கேட்கிறது டூ மச்ச, இல்லையில்ல, ட்விண்டி மச்சா தெரியல உங்களுக்கு?

5) ஃபோன்ல பேசிட்டே வண்டி ஓட்டின குத்தம் சொல்றாங்க. ஆனா ஃபோன்ல பேசிட்டே குறுக்குல வந்து, கரெக்ட்டா பச்சை சிக்னல் பார்த்து ஓட்டுற எங்கள பார்த்து “humpty dumpty sat on the wall” ன்னு ஏதோ இங்கிலீஷ்ல திட்டுறீங்களே. இப்ப நான் கேட்கிறேன்.  “baba black sheep have u any wool?

6) ஜீன்ஸ், டீஷர்ட், கார்கோன்னு எங்க டிரெஸ் ஒண்ணு விடாம போட்டுட்டு சுத்துறீங்க. நாங்க கிண்டலா செய்றோம்? ஆனா நாங்க டைட்டா டீ ஷர்ட் போட்டா மட்டும் ஜாக்கெட்ன்னு சொல்றீங்க. குர்தா போட்டா துப்பட்டா எங்கப்பான்னு கலாய்க்கறீங்க. உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?

7) 30 வயச தாண்டிய ஷாலினியையோ, மாளவிகாவையோ பிடிக்கும்ன்னு சொன்னா உடனே “ஆண்ட்டி பண்டாரம்ன்னு” பேரு வைக்கறீங்க. ஆனா நீங்க மட்டும் “ஐ லவ் கமல்ப்பா”, சூப்பர்ஸ்டார அடிச்சிக்க முடியுமான்னு ஜொள்ளு விடுறீங்க. உங்கள ”அங்கிள் பைத்தியங்க” சொன்னா சும்மாவா விடுவீங்க?

8) ஒரே பொண்ணுக்கு பல பேரு நூல் விட்டா சூப்பர் ஃபிகர்ன்னு மிதப்புல சுத்தறீங்க. அதே ஒரு பையன் பல பொண்ணுக்கு லெட்டர் தந்தா பொறுக்கின்னு பேரு வைக்கறீங்க.ஐ வாண்ட் டூ நோ த ரீசன் நவ். கமான் டாக் மீ.

41 கருத்துக்குத்து:

தமிழ்ப்பறவை on January 7, 2011 at 12:15 AM said...

செம்ம ஃபார்ம்ல இருக்கீங்க சகா...:)))))ரசித்தேன்....

king on January 7, 2011 at 12:18 AM said...

yenga parava saar avaru ladies thana answer panna sonnaru neenga yen avasarapateenga

MSK on January 7, 2011 at 12:57 AM said...

ஐ வாண்ட் டூ நோ த ரீசன் நவ். கமான் டாக் மீ. :))

♠ ராஜு ♠ on January 7, 2011 at 1:22 AM said...

அப்பட்டமான ஆணாதிக்கப் பதிவு.
யூ டூ ஆணாதிக்கவாதி..?
மீ டூ..!
:-)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on January 7, 2011 at 2:07 AM said...

அதானே!!!
ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல சகா!!

சுசி on January 7, 2011 at 2:27 AM said...

:)

Truth on January 7, 2011 at 5:22 AM said...

romba rasichi siricha padhivu. nice one

மாணவன் on January 7, 2011 at 7:09 AM said...

//6) ஜீன்ஸ், டீஷர்ட், கார்கோன்னு எங்க டிரெஸ் ஒண்ணு விடாம போட்டுட்டு சுத்துறீங்க. நாங்க கிண்டலா செய்றோம்? ஆனா நாங்க டைட்டா டீ ஷர்ட் போட்டா மட்டும் ஜாக்கெட்ன்னு சொல்றீங்க. குர்தா போட்டா துப்பட்டா எங்கப்பான்னு கலாய்க்கறீங்க. உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா.//

அதானே நீங்க செஞ்சா நீதிடா நேர்மைடா...நியாம்டா அபடின்னு சொல்றீங்க நாங்க செஞ்சா குற்றம்டா... அநீதிடா கொடுமைடா...

என்ன கொடும சார் இது


பதில் சொல்லுங்கபா.........

Anonymous said...

எல்லாமே மறுக்க முடியாத குற்றச்சாட்டு தான்..அதுக்காக சிரிக்காமல் இருக்க முடியலை கார்க்கி

Dinesh on January 7, 2011 at 9:28 AM said...

அதானே... உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா ?

taaru on January 7, 2011 at 9:46 AM said...

// உங்கள ”அங்கிள் பைத்தியங்க” சொன்னா//
என் இங்கன ரொம்ப அடக்கி வாசிக்கிறீங்க... தாத்தா பைத்தியங்கள் ன்னு தானே வரும்?#doubt

//ரெண்டு இருக்கும் போது (காலால) லெக் பிரேக் போட்டு தட்டி தட்டி நிறுத்தறீங்களே.. //
இது நமக்கு தோணாம போச்சே #ஆதங்கம்.

taaru on January 7, 2011 at 9:46 AM said...
This comment has been removed by the author.
மோகன் குமார் on January 7, 2011 at 10:08 AM said...

ரொம்ப தான் தைரியம் (ரசித்தேன். சிரித்தேன் )

Saravana kumar on January 7, 2011 at 10:18 AM said...

கேக்குறதுக்கு ஆள் இல்லன்னா என்ன வேணாலும் பண்ணுவீங்க., அப்படி தானா இப்ப கேள்வி கேக்குறோம் சொல்லுங்க

ப்ரியமுடன் வசந்த் on January 7, 2011 at 10:23 AM said...

//1) வண்டில ஃப்ரண்ட் பிரேக், பேக் பிரேக்ன்னு ரெண்டு இருக்கும் போது (காலால) லெக் பிரேக் போட்டு தட்டி தட்டி நிறுத்தறீங்களே.. உங்க மனசுல என்ன ஷேன் வார்னேன்னு நினைப்பா?//

ஹ ஹ ஹா கலக்கல் சகா

இதுக்கு எதிர்பதிவு எழுதுனாலும் எழுதுவாங்க பெண்ணாதிக்கவாதிகள் !

தர்ஷன் on January 7, 2011 at 10:30 AM said...

ஞாயமான கேள்விகள்

வள்ளி on January 7, 2011 at 11:01 AM said...

உங்க கேள்விகள் பிடிச்சிருக்கு :) ரசித்தேன்

அமுதா கிருஷ்ணா on January 7, 2011 at 11:08 AM said...

ஆறாவது கேள்வி மிக நியாயமானது..மற்றவைகளும் நியாயமானவைகள் தான். பாவம்ப்பா இந்த ஆண்கள்.

pappu on January 7, 2011 at 11:57 AM said...

quota va fill panringala?

roomno104 on January 7, 2011 at 12:36 PM said...

Adra Sake..Adra Sake..Adra Sake..

Anonymous said...

உங்களின் ஆணாதிக்க மனப்போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்!!

1.பெண்களுக்கு எப்போதுமே தங்கள் மீது நம்பிக்கை அதிகம். சோ பிரண்ட்டு, பேக்குன்னு பிரேக் இருந்தாலும் நாங்க அதயெல்லாம் முழுசா நம்ப மாட்டோம். எங்க சொந்த கால்ல நிக்கத்தான் எங்களுக்குப் பிடிக்கும்.

2. செல்போன் அப்படின்னு ஒன்னு வாங்குறதே பேசுறதுக்குத்தான். அத வச்சு பேசாம, எப்பப் பார் ஹேண்ட்ஸ்ஃப்ரி மாட்டிட்டு ஆம்பளைங்க பாட்டு கேக்குறத பாத்து நாங்க எதாவது சொன்னமா (அதுவும் Nokia 1100வா இருந்தாலும் கூட...). அப்படியே நாங்க மிஸ்டு கால் விட்டாலும் ஒரு ரிங்கு கூட போகாம அரை ரிங்கு, கால் ரிங்குலயே கட் பண்றோமே அந்த திறமைய என்னைக்காவது பாராட்டி இருக்கீங்களா!

3. உத்தியோகத்தப் பொறுத்த வரைக்கும் சீறும் சிங்கமாவும், சென்டிமென்டுக்கு... சாரி... பர்சனல் காலர்சுக்கு உருகுற தங்கமாவும் தெரியணும்றதுக்குதான் நாங்க அப்படி பேசுறோம். இது கூட தெரியாம கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க. :-(

4. தனக்கென தனியடையாளம் தேடுவது தப்பா! கேர்ள்ளிஷ் அப்படின்னு சொன்னாலும் பிங்க் எப்பவும் பிங்க்த்தான். எங்க எல்லா ஆம்பளைங்களுக்கும் புடிச்ச ஒரு கலர சொல்லுங்க பாக்கலாம்??

மீதி கேள்விக்கு நான் அப்புறமா ட்விட்டுல பதில் சொல்றேன்!!!

பை...

Nagasubramanian on January 7, 2011 at 3:21 PM said...

hey note pannunga pa note pannunga pa (pindraan pa pindraan pa)

பதிவுலகில் பாபு on January 7, 2011 at 4:39 PM said...

ரொம்ப நல்லாயிருந்ததுங்க.. ரசித்துப் படிச்சேன்..

இராகவன் நைஜிரியா on January 7, 2011 at 4:51 PM said...

:-)

வரதராஜலு .பூ on January 7, 2011 at 5:25 PM said...

இந்த லிங்க் பாருங்க.

http://usharayyausharu.blogspot.com/2011/01/blog-post_07.html

Sen22 on January 7, 2011 at 7:06 PM said...

niyayamana kelvigal....Super Karki...

கனாக்காதலன் on January 7, 2011 at 7:27 PM said...

பாஸ் நல்லா கேட்டீங்க ! சூப்பரப்பூ..

மின்னுது மின்னல் on January 7, 2011 at 8:25 PM said...

::)))

Ravi kumar Karunanithi on January 7, 2011 at 10:24 PM said...

oh sorry... this msg i received from my mail. dats nly i published. sorry.

kumaresh on January 8, 2011 at 12:56 PM said...

kuthunga yesaman kuthunga....
intha pombalangaley ippadithan....

kumaresh on January 8, 2011 at 12:58 PM said...

nalla irunthadhu..
rasithean...
keep it up bava...

மணியன் on January 8, 2011 at 7:21 PM said...

Ha ha... Super... super..

RaGhaV on January 8, 2011 at 11:24 PM said...

அப்படி போடு அருவாள.. ;-)

கார்க்கி on January 9, 2011 at 1:18 AM said...

அனைவருக்கும் நன்றி.கொஞ்சம் ஸ்பெஷல் தான் போல இந்த பதிவு :))

raja23 on January 10, 2011 at 6:14 PM said...

Penngal veetinn kangall.. pengal veetinn kangall..enru mutti potokittu kaiyai thookittu road ellam nadakka solannumppa .. oru naal mudhalvar vantha dhaan ehtellam nadakkum

mademoiselle on January 11, 2011 at 6:10 PM said...

super appu!!

“நிலவின்” ஜனகன் on January 12, 2011 at 12:15 AM said...

சூப்பர் கேள்விகள்

உமா கிருஷ்ணமூர்த்தி on March 4, 2011 at 9:01 PM said...

1) வண்டில ஃப்ரண்ட் பிரேக், பேக் பிரேக்ன்னு ரெண்டு இருக்கும் போது (காலால) லெக் பிரேக் போட்டு தட்டி தட்டி நிறுத்தறீங்களே.. உங்க மனசுல என்ன ஷேன் வார்னேன்னு நினைப்பா?

அட பொண்ணுங்க இஷ்டப்பட்டு அழகா உங்க கண்ணனுக்கு குளிர்ச்சியா வெளியில வராங்க.கடை கடையா ஏறி போய் செருப்பு கொலுசு வாங்கி போடறோம்.அதையெல்லாம் பார்க்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு வேணும் ல அதுக்குதான் இந்த லேக் ஷாட்.அப்படியே குண்டக்க மண்டக்க பேசறவங்களுக்கு இது ஒரு மறைமுக எச்சரிக்கை.வண்டிய வே இந்த மிதி மிதிக்கிரோமே மவனே எசகு பிசகா பேசினா என்ன மிதி வாங்கு வ ன்னு சொல்லாம சொல்லத்தான்.

2) இன்கமிங் காலுக்காகவும், மிஸ்டு காலுக்காகவுமே மொபைல் வாங்குறீங்களே. ஒரு வேளை மிஸ் எல்லாம் விடுற கால் என்பதால் தான் மிஸ்டு கால்ன்னு பேரு வந்ததா?

அட நிஜமாகவே நீங்க வேலை பண்ணிக்கிட்டு இருக்கீங்களா அல்லது நிஜமாகவே எங்க மேல உங்களுக்கு உண்மையான பிரியம் இருக்கா ன்னு கண்டுபிடிக்க தான் இந்த யுக்தி.மிஸ்டு காலை மிஸ் பண்ணாம நீங்க திருப்பி பண்ணா தான் அப்பாடா நம்ம புள்ளைக்கு நம்ம மேல ஒரு இது இருக்கு அதான் பார்த்த உடனே திருப்ப கூபிடுது ன்னு ஒருதிருப்தி வரும்.அதுவும் இல்லாம எங்களுக்கு ஒரு டாப் அப் போட்டு விட கூட வாக்கு இல்லாத ஆளை வச்சுகிட்டு இருக்கோம்னு விளம்பரபடுத்தவா முடியும்?

3) அஃபிஷியல் கால்ன்னா எதிர்ப்பக்கம் பேசுற ஆளு இருக்கிற திசையை நோக்கி நேரா பேசுற மாதிரி காட்டுக் கத்தல் போடுற நீங்க, பெர்சனல் கால்ன்னா மட்டும் உதடே அசையாம பேசுறீங்களே.. இதுக்கெல்லாம் தனியா ஸ்பெஷல் கிளாஸ் எதுனா போனீங்களா

பாருங்க எப்ப பாரு தப்பாவே புரிஞ்சுகிட்டு எவனோ ஒருத்தன் கூட பேசும்போது எப்படி பேசினா என்னங்க சரி நம்ம ஆளு பேசறாரு அவர்கிட்ட ஆத்மார்த்தமா நம்ம மனசு பேசட்டும் நு தான் மனசை பேசவிட்டு நாங்க அமைதியா வேடிக்கை பார்க்கிறோம்.இந்த இடத்திலையும் உங்களுக்கு தானே பேசறோம்.சத்தம் போட்டு பேசினா எந்த உதவாக்கரை பரதேசிகிட்ட பேசிகிட்டு இருக்க ன்னு வீட்ல விசாரிக்க மாட்டாங்களா?அப்புறம் கஷ்டப்பட்டு நீங்க கரெக்ட் பண்ணி வச்ச பிகரு கூட பேசுறது அதுவே கடைசி தடவை ஆகிடாதா?

உமா கிருஷ்ணமூர்த்தி on March 4, 2011 at 9:02 PM said...

4) தலைமுடிய தவிர எல்லாத்திலும் பிங்க் கலர் தேடுறீங்க ஓக்கே. அதுக்குன்னு தேசியக்கொடி தந்தா கூட பிங்க கலர் இல்லையான்னு கேட்கிறது டூ மச்ச, இல்லையில்ல, ட்விண்டி மச்சா தெரியல உங்களுக்கு?

அட அதுகூட உங்க வசதிக்காக தாங்க.ஏன்னா நாங்க இங்கி பிங்கி பாங்கி நா ஃ பாதர் ஹெட் எ டாங்கி நீங்க தானே..உங்க கண்ணுக்கு எது பளிச்சுன்னு தெரியுமோ அதை தானே உடுத்திட்டு வர முடியும்?வேற கலர் ல வந்தா வெறிச்சு வெறிச்சு பார்த்து உங்களுக்கு எதாச்சும் ஆகிட்டா எங்க பாழும் மனசு தாங்காது..

5)//ஃபோன்ல பேசிட்டே வண்டி ஓட்டின குத்தம் சொல்றாங்க. ஆனா ஃபோன்ல பேசிட்டே குறுக்குல வந்து, கரெக்ட்டா பச்சை சிக்னல் பார்த்து ஓட்டுற எங்கள பார்த்து “humpty dumpty sat on the wall” ன்னு ஏதோ இங்கிலீஷ்ல திட்டுறீங்களே. இப்ப நான் கேட்கிறேன். “baba black sheep have u any wool?//

அது சரி நிஜமாகவே பச்ச சிக்னல பார்த்தீங்களா இல்ல பச்ச சுடிதாரை பார்த்தீங்களா ன்னு யாருக்கு தெரியும்?செந்தமிழ் ல திட்டினா பாவம் அதை விட கேவலமா இருக்குமே பாவம் புள்ளைய யாருக்கும் தெரியாம இங்கிலீஷ் ல திட்டி அடுத்தவங்ககிட்ட இருந்து மறைமுகமா உங்க கௌரவத்தை காப்பாத்தினா தப்பா?"rain rain go go away man.."


//6) ஜீன்ஸ், டீஷர்ட், கார்கோன்னு எங்க டிரெஸ் ஒண்ணு விடாம போட்டுட்டு சுத்துறீங்க. நாங்க கிண்டலா செய்றோம்? ஆனா நாங்க டைட்டா டீ ஷர்ட் போட்டா மட்டும் ஜாக்கெட்ன்னு சொல்றீங்க. குர்தா போட்டா துப்பட்டா எங்கப்பான்னு கலாய்க்கறீங்க. உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?//

ஆதி காலத்துல ஆண் பெண் பேதமில்லாம தான் ஆடைகள் உடுத்துகின்ற வழக்கம் இருந்ததாம்.பழைய பண்பாட்டை மறக்காம பின்பற்றுகிறோமே என்று பாராட்டுங்கள்.டைட்டா டி ஷர்ட் போடுங்க வேண்டாம் நு சொல்லல.ஆனா கொஞ்சம் சிக்ஸ் பேக் எய்ட் பேக் வச்சு போட்டா டி..ஷர்ட் இல்ல டே ஷர்ட் நு கூட சொல்றோம்.அம்மா வைக்கிறாங்க என்ன பண்றது ன்னு அள்ளி அள்ளி சாப்பிட்டு உடம்ப ஸ்கூல் பேக் மாதிரி வச்சா ஜாக்கெட் ன்னு சொல்லாம வேற எப்டி சொல்றதாம்.குர்தா போட்டா துப்பட்டா போடறது நல்லதுதானே அப்பத்தான் ஜீன்ஸ் போட்ட பொண்ணுங்கள பார்த்து நீங்க வழியும் பொழுது வழியிற ஜொள்ளை துடைக்க வசதியா இருக்கும். உங்க நல்லதுக்காக ஒரு நல்லதா சொன்னா இப்படி தான் அசட்டு தனமா கேள்வி கேட்கறதா ?

உமா கிருஷ்ணமூர்த்தி on March 4, 2011 at 9:03 PM said...

7) 30 வயச தாண்டிய ஷாலினியையோ, மாளவிகாவையோ பிடிக்கும்ன்னு சொன்னா உடனே “ஆண்ட்டி பண்டாரம்ன்னு” பேரு வைக்கறீங்க. ஆனா நீங்க மட்டும் “ஐ லவ் கமல்ப்பா”, சூப்பர்ஸ்டார அடிச்சிக்க முடியுமான்னு ஜொள்ளு விடுறீங்க. உங்கள ”அங்கிள் பைத்தியங்க” சொன்னா சும்மாவா விடுவீங்க?//

என்ன தான் வயசானாலும் வயசு ஏற ஏற உங்க அழகும் ஏறும் ங்கற ஒரு மேலான நம்பிக்கையை உங்களுக்கு ஊட்ட தான் அங்கிள் ஹீரோ க்களை பிடிக்கும் நு நாங்க சொல்றது இப்டி சின்ன வயசுலேயே அம்பது வயசு கிழவன் மாதிரி இல்லாம யூத் புல் லா இருக்க உங்களுக்கு நாங்க கொடுக்கிற நெகடிவ் ஃபோர்ஸ்
தான் அது.புகையாம புன்னகையோட கேட்டு பழகுங்க.

//8) ஒரே பொண்ணுக்கு பல பேரு நூல் விட்டா சூப்பர் ஃபிகர்ன்னு மிதப்புல சுத்தறீங்க. அதே ஒரு பையன் பல பொண்ணுக்கு லெட்டர் தந்தா பொறுக்கின்னு பேரு வைக்கறீங்க.ஐ வாண்ட் டூ நோ த ரீசன் நவ். கமான் டாக் மீ.

அட இது கூட உங்க பெருமையை பறை சாற்ற தான்.பல பேரு பின்னாடி சுத்துற பொண்ணு என் ஆளு ன்னு நீங்க சொன்னா பசங்க மத்தியில நீங்க ஹீரோ தானே.ஆம்படையானோட பெருமை சிறுமை ல பங்கு எடுத்துக்கறது என்னடா அம்பி தப்பு நோக்கு ?பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் ஏற மாட்டான் ங்கற பழமொழி தெரியாதோ ?பல பிகர் பார்த்தவனுக்கு ஒரு பிகரையும் கரெக்ட் பண்ற தகுதி வராது.உங்களுடைய தகுதியை உயர்த்தி நாங்க காட்ட முயற்சித்தா எங்கள இத்தனை கேள்வி கேட்பீங்களா நீங்க :X

உமா கிருஷ்ணமூர்த்தி on March 4, 2011 at 9:28 PM said...

மேலும் ஒரு தகவல் ஆண்ட்டி செப்டிக் என்று தான் இருகின்றதே தவிர அங்கிள் செப்டிக் என்று எதுவும் இல்லை.எனவே ஆண்ட்டிகளை பார்த்து நீங்கள் செப்டிக் ஆகி விட கூடாதே என்று தான் கேலி செய்கிறோம்.உங்கள் நலனில் அக்"கறை" கொண்டு.

ஏனென்றால் "கறை"நல்லது.

 

all rights reserved to www.karkibava.com