Jan 4, 2011

ந‌ண்ப‌னுக்கு புத்தாண்டு உத‌வி


நான் : ஹ‌லோ. டேய் நான் கார்க்கி பேசுறேன். ஹேப்பி நியூ இய‌ர் ம‌ச்சி

ந‌ண்ப‌ன் : சொல்றா. என்ன‌த்த‌ ஹேப்பி. என்ன‌த்த‌ நியூ இய‌ர்

நான் : என்ன‌டா இப்ப‌டி ட‌ல்லா பேசுற‌?

ந‌ண்ப‌ன் : வாழ்க்கை அப்ப‌டி போதுடா. கிர‌க‌ம் புது வ‌ருஷ‌ம் பொற‌ந்தாலும் என‌க்கு ஒண்ணும் மாறாது

நான் : நான் இருக்கும் போது அப்ப‌டியெல்லாம் சொல்லாத‌ ம‌ச்சி. என்ன‌ பிர‌ச்சினை உன‌க்கு

ந‌ண்ப‌ன் : விடுறா. என் த‌லையெழுத்து

நான்: சொல்லு ம‌ச்சி. என்னால் முடிஞ்ச‌த‌ நான் செய்ய‌ மாட்டேனா?

ந‌ண்ப‌ன் : ம‌த்த‌ பிர‌ச்சினையெல்லாம் விடு. ரெண்டு வார‌மா த‌லைவ‌லி உயிர் போது. இது ச‌ரியானாலே ம‌த்த‌து ச‌ரியாயிடும்

நான்: இவ்ளோதானா.. என்கிட்ட‌ ஒரு சூப்ப‌ர் வைத்திய‌ம் இருக்கு.

ந‌ண்ப‌ன் : என்ன‌டா

நான்: காலைல, அஞ்சு மணிக்கு எழுந்திருக்கணும்? பரவாயில்லையா?

ந‌ண்ப‌ன் : இந்த வலியால நான் தூங்கறதே இல்ல... நீ மேல சொல்லு

நான்:அஞ்சு மணிக்கு எழுந்த உடனே...

ந‌ண்ப‌ன் :பல் தேய்க்கணுமா?

நான்: அவ்ளோ கஷ்டப்படதேவயில்ல... எதுவும் செய்ய கூடாதுன்னு சொல்ல வந்தேன்... எழுந்து‌ அப்ப‌டியே க‌ட்டிலே நின்னு க‌ண்ணு ரெண்டையும் மூடிக்கிட்டு ,ஒரு கைய‌ நெஞ்சு மேல‌ வ‌ச்சிக்கிட்டு இன்னொரு கைய‌ த‌லைக்கு மேல‌ தூக்க‌ணும்.

ந‌ண்ப‌ன்:டேய் என்ன‌ க‌லாய்க்கிறியா?

நான்:சொல்ற‌த‌ கேளுடா. இப்ப‌டி நின்னுக்கிட்டு எந்த இடம் வலிக்குதோ அந்த இடத்த மனுசுல நினைச்சிக்கிட்டு இந்த‌ ம‌ந்திர‌த்த‌ சொன்னா வ‌லி சும்மா குருவி விஜ‌ய் மாதிரி ப‌ற‌ந்து போயிடும்..

ந‌ண்ப‌ன் :ச‌ரி, அந்த மந்திரத்த சொல்லு...யார்க்கிட்டேயும் சொல்ல‌க்கூடாதா?

நான்:சொல்றேன்டா..இது என்ன‌ அஜித் ப‌ட‌மா? பார்த்த‌தா வெளிய‌ சொல்லாம‌ இருக்க‌.  இதுல என்ன ரகசியம்.. இத நீ யார்கிட்ட வேணா சொல்லலாம்.. எத்தனை பேர் கிட்ட நீ சொல்றியோ அவ்ளோ நல்லது..

நண்ப‌ன்: அட‌, அப்ப‌டியா? த‌லைவ‌லி நின்னா போதும்

நான்: மூச்ச‌ ந‌ல்லா இழுத்து மூணு தட‌வ‌ சொல்லு

""கார்க்கி வாழ்க‌. அவ‌ர் புக‌ழ் வ‌ள‌ர்க‌


 என்ன ஒன்னும் தெரியலையா? அப்படியே செலக்ட் பண்ணி பாருங்க.. மந்திரத்த இந்த அளவுக்கு கூட ஒளிச்சு வைக்கலைனா எப்ப‌டி?

26 கருத்துக்குத்து:

பொன்.பாரதிராஜா on January 4, 2011 at 9:41 AM said...

சூப்பர் கார்க்கி!!!காலைலேயே ஆரம்பிச்சிடியா?

vinu on January 4, 2011 at 9:45 AM said...

mandiram velai seivathu illai bro

srini on January 4, 2011 at 9:53 AM said...

காலைல ஓபன் பண்ற முதல் ப்ளாகே இப்படியா? வெளங்கிரும் :-)

புன்னகை on January 4, 2011 at 9:59 AM said...

இந்த மந்திரத்த சொன்னா, இருக்கிற பிரச்சனை போதாதுன்னு, புதுசா பல பிரச்சனை உருவாகுமாமே? உண்மையா கார்க்கி? :P

நர்சிம் on January 4, 2011 at 10:09 AM said...

வாழ்க.

வழிப்போக்கன் - யோகேஷ் on January 4, 2011 at 10:20 AM said...

ஏன் ஏன் இப்படி........

Saravana kumar on January 4, 2011 at 10:29 AM said...

Great, Back to Form Saga.

Anonymous said...

அருமை அருமை..... தொடருங்கள்

தராசு on January 4, 2011 at 10:43 AM said...

அய்யோ, அய்யோ, புது வருஷத்துல கொல்றாங்களே!!!!!!

வள்ளி on January 4, 2011 at 10:51 AM said...

ஹா ஹா...

"கார்க்கி வாழ்க‌. அவ‌ர் புக‌ழ் வ‌ள‌ர்க‌"

தர்ஷன் on January 4, 2011 at 10:55 AM said...

ஏன் இந்த கொலைவெறி

sinmajan on January 4, 2011 at 10:58 AM said...

ஐயோ..!! தலை அதிகமாக வலிக்குதே..!!

மாணவன் on January 4, 2011 at 11:45 AM said...

எப்படியோ புது வருஷம் அதுவுமா கொண்டு கொலையருக்குறதுன்னு முடிவு பண்ணீட்டீங்க....

நடத்துங்க நடத்துங்க....ஹிஹிஹி

பொன்கார்த்திக் on January 4, 2011 at 12:24 PM said...

:)

சுசி on January 4, 2011 at 1:05 PM said...

மொக்கை சாமி வாழ்க.. அவர் புகழ் வளர்க..

kumaresh on January 4, 2011 at 3:58 PM said...

""கார்க்கி வாழ்க‌. அவ‌ர் புக‌ழ் வ‌ள‌ர்க‌"

aishwarya on January 4, 2011 at 4:38 PM said...

mudiyala!!!

pappu on January 4, 2011 at 7:55 PM said...

மூஞ்சி வீங்கல?

ARUNA on January 4, 2011 at 8:54 PM said...

ரொம்ப நல்லா இருக்கு. மிகவும் ரசித்தேன்
அருணா ஸ்ரீனிவாசன்

வெட்டிப்பயல் on January 4, 2011 at 9:10 PM said...

:)

Philosophy Prabhakaran on January 5, 2011 at 2:58 AM said...

யாருங்க மைனஸ் ஓட்டு போடுறது... ஒ நீங்க அவ்வளவு பெரிய ஆளா...

Dalton on January 5, 2011 at 12:42 PM said...

யாரையும் கொலை செய்யப்போவதில்லைன்னு அம்மாகிட்ட சத்தியம் செஞ்சத எப்படியோ தெரிஞ்சிகிட்டு இப்படி பதிவு போடுறிங்க. சத்தியத்த இப்பவே கேன்சல் செஞ்சிடுவேன் ஜாக்கிரதை!

தங்கம்பழனி on January 5, 2011 at 5:10 PM said...

கார்க்கி வாழ்க.. அவர் தந்திரம் ஒழிக..!

கார்க்கி on January 5, 2011 at 11:22 PM said...

அனைவருக்கும் நன்றி

thulsi raman on January 8, 2011 at 8:25 PM said...

white text... and selection... nalla idea...

ப்ரியமுடன் வசந்த் on February 24, 2011 at 11:38 PM said...

மீள்ஸ்??? what happened karki

I am missing தோழி அப்டேட்ஸ் :(

I am missing ஏழு :(

Pls ubdate ஆவுங்க

 

all rights reserved to www.karkibava.com