Jan 19, 2011

தோழியில்லாத 6 மாசம்


 

வாழ்க்கைல எதுவுமே நிரந்தரமில்லைன்னு சொல்றாரு ஒரு மகான். அவர் சொல்றதுலயும் உண்மை இருக்குன்னு நேத்துதான் யோசிச்சு பார்த்தேன். கொஞ்ச நாளா தோழிக்கிட்ட சரியா பேசுற வாய்ப்பு கிடைக்கல. ஒரு வேளை தோழிக்கிட்ட இருந்து ஒரு ஆறு மாசம் எந்த தொடர்பும் இல்லாம விலகியிருந்தா என்னனென்ன நடக்கும்ன்னு திங்க் பண்ணேன். ஒரு பதிவு ரெடி ஆயிடுச்சு.

1) இனிமேல  பொறை ஏறாது. அதுல எவ்ளோ கஷ்டம் தெரியுமா? இட்லி சாப்பிடும்போது தோழி என்னை நினைச்சுப் பொறை ஏறினா தண்ணி குடிக்கலாம். தண்ணி குடிக்கும்போதும் தோழி நினைச்சு அதுக்கும் பொறை ஏறினா என்ன செய்றது?

2) பெட்ரோல் விலை குறையும். ஆமாங்க. அன்னைக்கு ஒரு பெட்ரோல் பங்குல பார்த்தேன். “Save petrol.Avoid Girl Friends”உண்மைதான். 60  கி.மீ தந்த பைக்க விட்டு தோழிக்காக யமஹா வாங்கினேன். அது 40தான் கொடுக்குது. அது மட்டுமில்லாம வண்டி நல்லாயிருக்குன்னு எக்ஸ்ட்ரா கொஞ்ச தூரம் ஓட்ட சொல்றா. எவ்ளோ பெட்ரோல் வேஸ்ட்? அதனால் தோழி இல்லைன்னா பெட்ரோல் மிச்சம். பெட்ரோல் மிச்சம்ன்னா விலை குறைவு.

3) நல்ல வெளிச்சமா லைட் எரியிற இடத்துல சாப்பிடலாம். ஆமாங்க. ரொமாண்ட்டிக்கா இருக்கும்ன்னு எத்தனை தடவதான் கேண்டில் லைட் டின்னருக்கே போறது? "நீ சிரிக்கிறப்ப உன் கூட எங்க சாப்பிட்டாலும் அது கேண்டில் லைட் டின்னர்தான் செல்லம். ஏன்னா நீயே ஒரு மெழுகு பொம்மைதான்"ன்னு சொன்னா கூட வொர்க் அவுட் ஆகாது. அதுக்கு எதுக்கு தோழி சிரிக்கணும்ன்னுதானே கேட்கறீங்க? கே.லை. டின்னர்ல மெழுகு "பளீர்"ன்னு எரிஞ்சிட்டு இருக்குமில்ல? அதான்.

4) அடுத்து மிஸ்டு கால்ஸோஃபோபியா. ஸ்கூல் போகும்போது நான் மிஸ்ஸூக்கே பயப்படாதாவன். ஆனால் இந்த மிஸ்டு கால்ஸ் பார்த்தா..உஸ்ஸ்ஸ். மிஸ்டு கால்ஸ் கூட பிரச்சனையில்லை. அதுக்கு முன்னால் நம்பர் வரும் பாருங்க. சச்சின் 20-20 ல அடிக்கிற மாதிரி 52, 68ன்னுதான் இருக்கும். ஒரு தடவ 108 கால்ஸ் எல்லாம் மிஸ் ஆயிருக்கு. அதுக்கெல்லாம் கவலைப்படாம சைலண்ட்ல போட்டு மேட்ச் பார்க்கலாம்.

5) நமக்கு எல்லாம் எந்த டிரஸ் போட்டாலும் நல்லா இருக்கும். அது சரிதான். ஆனா தேடி வாங்கிட்டு வருவா பாருங்க. ஒரு நாள் ஒரு குர்தா வாங்கிட்டு வந்தா. நானும் பார்த்துட்டு நல்லா இருக்கே. துப்பட்டா இல்லையா? எப்போ போடப்போறன்னு கேட்டா "இது உனக்குதாண்டா செல்லம்"ன்னு டெரர் ஆயிட்டா.இன்னொரு நாள் எப்படிடா தொப்பைய குறைக்கலாம்ன்னு பிளான் போட்டுட்டு இருக்கேன். டைட்ஸ் வாங்கிட்டு வந்து "இது போடு அம்மு. ஆர்ம்ஸ் சூப்பரா இருக்கு"ம்னு சொல்றா. விட்டா ஃபர்ஸ்ட் நைட்க்கு ரேமன்ட்ஸ்ல சூட் வாங்கித் தருவா. அதுல இருந்து எஸ்கேப்ப்ப்ப்ப்ப்

6) பதிவெழுத கஷ்டப்படுவேன். எதுவும் எழுதி டிராஃப்டில் வைக்காத நேரத்தில் தோழியே சரணம்ன்னு எழுத உட்கார்ந்தா தோழி அப்டேட்ஸ் வேகமா ரெடி ஆயிடும். இனிமேல முடியாது. மண்டையை உடைச்சு, மசாலவ தெளிச்சு கவிதையோ, புனைவோதான் எழுதணும்.

7) முக்கியமா தூங்கலாங்க. நல்லா தூங்கலாம். தோழிகிட்ட இருக்கிற பெரிய பிரச்…

பதிவு பாதிதான் இருக்குன்னு நினைக்காதிங்க. எனக்கு இருக்கிறதோ சின்ன இதயம். எவ்ளோ நேரம்தான் அதுவும் தோழி இனி இல்லைன்னுறத தாங்கும்? அதான் பாதில டப்ஸுன்னு வெடிச்சிடுச்சு. எனக்கே இப்படின்னா இத படிச்சிட்டு தோழி என்ன சொல்வாளோ????????

22 கருத்துக்குத்து:

vinu on January 19, 2011 at 10:39 PM said...
This comment has been removed by the author.
vinu on January 19, 2011 at 10:44 PM said...
This comment has been removed by the author.
பரிசல்காரன் on January 19, 2011 at 10:50 PM said...

சகா... கலக்கு!

@ வினு

சாமி... சீக்கிரமா NHM WRITER டவுன்லோடி தமிழ்ல கமெண்டுங்கப்பா.. உங்க பின்னூட்டத்தைப் பார்த்தாலே ஒரே பயமா இருக்கு... :-)

கார்க்கி on January 19, 2011 at 10:59 PM said...

வினு,

நன்றிப்பா..

பரிசல்,
இதயம் வெடிச்சிடுச்சுன்னு சொன்னா கலக்குன்னு சொல்றீங்க. நல்லா இரும் ஓய்

vinu on January 19, 2011 at 11:02 PM said...

இன்னைக்கு வரைக்கும் no தோழி updates so no comments from my side; today you posted the tholi updates so me too the same commenting here @ first

vinu on January 19, 2011 at 11:06 PM said...

நீங்க no தோழி updatesnnu போட்டதுமே உங்களின் followers லிஸ்ட்டுல இர்ருந்து என்னோட பேரை எடுத்துடலாமுனு நினைச்சேன் but எனக்கு அதுக்கான சரியான வழிமுறை தெரியலை ; luckily நீங்களும் மனசை மாதிகிடீங்க ; so k gud; ஒழுங்கா தோழி updates வரணும் ; ஆமா சொல்லிட்டேன்

சகா பரிசல் சொன்னதுக்கு அப்புறம் மறு பேச்சே கிடையாது

vinu on January 19, 2011 at 11:10 PM said...

உங்களோட ப்ளாகுக்கு நான் முதல் முறை வந்த பொழுது ஒரே மூச்சில் உங்களின் எல்லா தோழி updatesum படிச்சுட்டுதான் உங்க ப்ளாக்குக்கு ரெகுலரா வர ஆரம்பிச்சேன்! அதனால ப்ளீஸ் don't stop tholi updates!

this is either request or order it's upto "u" sagaaaaaaaaaaa

தர்ஷன் on January 19, 2011 at 11:32 PM said...

என்ன சகா இது என்ன ஆச்சு.
ஏதோ கோழிய வெட்டிடலாம்கிற மாதிரி சிம்பிள் ஆ தோழிய விட்டுடலாம்னு சொல்றீங்க. ஒழுங்கா தோழியோட ரிலேஷன்ஷிப்பையும் ப்ளோக்ல தோழி அப்டேட்ஸ் போடுறதையும் தொடருங்க

மாணவன் on January 20, 2011 at 5:52 AM said...

நல்லாதான் இருக்கு ஆனால் தோழி படிச்சாதான் தெரியும்.....ஹிஹி

மகேஷ் : ரசிகன் on January 20, 2011 at 8:18 AM said...

டப்ஸுன்னு துடிக்குதா? இல்ல டப்ஸினு டப்ஸினு துடிக்குதா?

Dinesh on January 20, 2011 at 9:03 AM said...

எப்ப பரு தோழி தோழினு
சொல்லிட்டே இருகிங்க தோழி ஒரு நாள் உங்க தோல உரிச்சி தொங்க போட போறாங்க பாருங்க... :)

taaru on January 20, 2011 at 9:20 AM said...

தோழி to மனைவி ஆயிட்டதால இவ்ளோ பெரிய பொலம்பலா? [என்னா தான் relax னு படம் ஓட்டினாலும், கண்டுபிடிசுடுவோம்ல...].. நல்லா இருப்போம்.. நல்லா இருப்போம் எல்லாருமே நல்லா இருப்போம்...

மோகன் குமார் on January 20, 2011 at 10:12 AM said...

யாருங்க அந்த தோழி? கதையா நிஜமான்னு ரொம்ப டீப்பா திங் பண்ண வைக்குறீங்க

Nagasubramanian on January 20, 2011 at 12:25 PM said...

மச்சி த்ரிஷா இல்லனா திவ்யா
//விட்டா ஃபர்ஸ்ட் நைட்க்கு ரேமன்ட்ஸ்ல சூட் வாங்கித் தருவா//
விடுங்க பாஸ்

ஷர்புதீன் on January 20, 2011 at 3:04 PM said...

:)

சுசி on January 20, 2011 at 4:41 PM said...

தோழி என்ன சொன்னாங்கன்னு அடுத்த போஸ்ட்ல சொல்லுங்க கார்க்கி.

வள்ளி on January 20, 2011 at 5:39 PM said...

// தோழியில்லாத 6 மாசம் //

அப்போ ஏழு வருவாரா?

கனாக்காதலன் on January 20, 2011 at 8:06 PM said...

அடடா கலக்குறீங்க பாஸ் :)

DINESH on January 20, 2011 at 9:08 PM said...

sagaaa..thozhi thozhi nu solringaley...antha thozhi ya konjam kannula kaata kudathaaaa......

“நிலவின்” ஜனகன் on January 20, 2011 at 11:31 PM said...

கலக்கல் பாஸ்...பட் தோழி சொல்றத அடுத்த பதிவில சொல்லிபுடணும்..

ஆதிமூலகிருஷ்ணன் on January 21, 2011 at 3:14 PM said...

இல்லையே.. எல்லாமே நல்ல சேதியாத்தான் இருக்குறாப்போல இருக்குது. பேசாம கழட்டிவிட்டுடேன்.!

ஆதிமூலகிருஷ்ணன் on January 21, 2011 at 3:14 PM said...

மகேஷ் : ரசிகன் said...
டப்ஸுன்னு துடிக்குதா? இல்ல டப்ஸினு டப்ஸினு துடிக்குதா?
//

கலக்கல். :-)

 

all rights reserved to www.karkibava.com