Dec 22, 2010

உததுது.. குளிதுது..


 

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்

என்றார் வள்ளுவர். எந்த பெற்றோருக்கும் அவர்கள் பிள்ளையின் மழலைப் பேச்சு சந்தோஷத்தை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.ஆனால் குழந்தை வளர்ந்த பின்னும் அப்படியே பேசிக் கொண்டிருந்தால்? 5 வயது பையன் “அததா மழைதா அதை மழைதா” என்று பாடிக் கொண்டிருந்தால் ரசிக்கவா முடியும்? பப்லு அப்படித்தான் பேசிக் கொண்டிருந்தான். பொதுவாகவே அவன் வயது குழந்தைகளை விட உயரமாகவும் பருமனாகவும் இருப்பான். உருவம் அப்படி. பேச்சு இப்படி என்றால் என்ன சொல்ல?

அது யார் பப்லு என்று யோசிக்கும் புது நண்பர்களுக்கு.. பப்லு என் அக்கா பையன். சிறுவயதில்(பப்லுவின் சிறுவயதில்) அவன் அம்மா வேலை நிமித்தம் வெளிநாடு செல்ல வேண்டியிருந்ததால் யூ.கே.ஜி முதல் என் கட்டுப்பாட்டிலே வளர்ந்தான். இப்போது நாலாவது படிக்கிறான். அடிக்கடி பள்ளியை மாற்ற வேண்டாம் என்பதால் அவனது பெற்றோரும் எங்கள் வீட்டருகே வந்துவிட்டார்கள். இதுவரை நானும் பப்லுவும் ஒன்றாகத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.அந்தக் கதைகளை இங்கே படிக்கலாம்.

விஷயத்திற்கு வருவோம். 5 வயது வரை பப்லுவுக்கு “ட” “ர” சரியாக வரவில்லை. அவன் சொன்ன “உததுது” என்பதற்கு உதறுது என்று அர்த்தம் என்பதை நான் மட்டுமே அறிவேன். சிலசமயம் அவன் உச்சரிப்பை வைத்து நக்கல் செய்தாலும் பல சமயங்களில் எப்போது சரியாக பேசுவான் என்று கவலையே மிஞ்சியிருந்தது. இப்போது நன்றாகவே பேசுகிறான். இது ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனால் நான் சொல்ல வந்த விஷயமே வேறு.

இந்த வெள்ளிக்கிழமை “சுட்டிச்சாத்தான்” என்ற படம் வெளிவரயிருக்கிறது. மை டியர் குட்டிச்சாத்தான் – 3டி ஆக வந்து இந்தியா முழுவதும் சக்கைப் போடு போட்ட படத்தை மீண்டும் எடுக்கிறார்கள். பழைய படத்தின் சில காட்சிகளை அப்படியே வைத்துக் கொண்டு சந்தானம், பிரகாஷ்ராஜை வைத்து புதிதாய் பல காட்சிகளை எடுத்து உருவாக்கி இருக்கிறார்கள். ஜிஜோ என்பவர் இயக்குகிறார். இளையராஜா இசையில் உருவான அதே பாடல்களை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். வசனத்தையும் பாடல்களையும் ”எந்திரன் புகழ்” மதன் கார்க்கி எழுதி இருக்கிறார். இந்தப் படத்தில் நடித்த மூன்று குழந்தைகளில் ”ஹீரோ” குழந்தைக்கு பப்லுதான் குரல் தந்திருக்கிறான். ஒழுங்காய் பேசுவானா என்று நினைத்தவனின் குரல் நன்றாக இருக்கிறது இன்னொருவருக்கு பேச சொல்லியிருப்பது பெரிய விஷயமில்லையா? என் சந்தோஷத்திற்கு காரணம் இதுதான்.

Sutti Sathan

இந்த வாய்ப்பு மதன் கார்க்கி மூலமாகத்தான் கிடைத்தது. ஒரு முறை நாங்கள் சந்தித்த போது பப்லுவும் உடன் இருந்தான். அவனது குரலும், உச்சரிப்பும் அவர் நினைவில் இருக்கும்படி அன்று உருப்படியாக பேசிவிட்டான் என நினைக்கிறேன். சுட்டிச்சாத்தான் படத்திற்கு பிண்ணணி பேச குழந்தைகள் தேவைப்பட்ட போது அவர்தான் பப்லுவை பரிந்துரை செய்தார். முதல் நாள் குரல் தேர்வு ஏ.வி.எம்மில் நடைபெற்றது. அன்று மட்டுமே நான் உடன் இருந்தேன். அவன் குரல் தேர்வான பின் மொத்த ரெக்கார்டிங்கிற்கும் உடன் இருந்து பக்குவமாய் வேலை வாங்கியவர் மதன் கார்க்கி. அவரின் ஆர்வத்திற்கும், பொறுமைக்கும் (எனக்குதானே தெரியும் பப்லு பற்றி) நிச்சயம் பாராட்டைச் சொல்லியே ஆக வேண்டும். கூடுதலாக இப்போது நான் நன்றியும் சொல்லிக் கொள்கிறேன். நன்றி மதன்.

ஆக மக்களே, வீட்டில் குழந்தைகள் இருந்தால் தவறாமல் இந்த சுட்டிச்சாத்தான் – 3டி க்கு அழைத்து செல்லுங்கள். குழந்தை இல்லாவிட்டால் என்ன? நீங்களே குழந்தையாக மாறி சென்றுவிடுங்கள். படம் பார்த்துவிட்டு மறக்காமல் பப்லுவின் குரல் சூப்பர் என்று பின்னூட்டமிட்டு விடுங்கள். இல்லையென்றால் என்னை ஏறி மிதப்பான் பப்லு. படம் வெற்றி பெற மொத்த டீமிற்கும், பப்லுவுக்கும் வாழ்த்துகள் சொல்லிக் கொள்கிறேன்.

23 கருத்துக்குத்து:

லதாமகன் on December 22, 2010 at 11:44 PM said...

பப்லுவின் குரல் சூப்பர் :D

பொன்கார்த்திக் on December 22, 2010 at 11:55 PM said...

:)

Kaarthik on December 23, 2010 at 1:22 AM said...

வாவ் :-) பப்லுவுக்கு வாழ்த்துகள். படம் பார்க்கும் ஆர்வத்தை விட பப்லுவின் குரலைக் கேட்க ஆர்வமாய் இருக்கிறேன் :-)

செ.சரவணக்குமார் on December 23, 2010 at 1:47 AM said...

பப்லுவுக்கு வாழ்த்துகள்.

பிரதீபா on December 23, 2010 at 4:33 AM said...

அட , அப்படியா ? பப்லுவுக்கு வாழ்த்துக்கள். குறும்படம் ஹீரோன்னு சொல்லிட்டு இருக்கறதெல்லாம் நிறுத்திக்குங்க.. இனி அவரு தான் ஸ்டாரு..

தர்ஷன் on December 23, 2010 at 7:52 AM said...

பப்லுவுக்கு வாழ்த்துக்கள் சகா
இங்கே இந்தப் படம் ரீலிசாகவில்லை. அதற்கென்ன எப்படியாவது காத்திருந்தேனும் பப்லுவின் குரலை கேட்டு விடுகிறோம்

மாணவன் on December 23, 2010 at 7:58 AM said...

பப்லுக்கு வாழ்த்துக்கள் அண்ணே

சிறப்பாக பகிர்ந்தமைக்கு உங்களுக்கு நன்றிகள் பல...

நர்சிம் on December 23, 2010 at 10:28 AM said...

வாழ்த்துகள் சகா. நல்ல செய்தி.

குசும்பன் on December 23, 2010 at 10:42 AM said...

பப்லுவுக்கு வாழ்த்துக்கள் சகா!

//யூ.கே.ஜி முதல் என் கட்டுப்பாட்டிலே வளர்ந்தான். //


சின்னவயசில் கஷ்டத்தை அனுபவிச்சவங்க வளர வளர நல்லாயிருப்பாங்கன்னு பெரியவங்க சொன்னது சரியாக இருக்கு.

Tamil.Readandshare.in on December 23, 2010 at 11:26 AM said...

பப்லுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஹீரோவுக்கு குரல் கொடுத்தது போல் விரைவில் ஹீரோவாகவே நடிக்கவும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

அன்புடன்
Tamil.Readandshare.in
இது ஒரு டண்டனக்கா திரட்டி.

அமுதா கிருஷ்ணா on December 23, 2010 at 11:57 AM said...

குசும்பன் சொன்னதை ரிப்பீட் செய்கிறேன்..

வாழ்த்துக்கள் பப்லு..

விக்னேஷ்வரி on December 23, 2010 at 1:04 PM said...

வாவ், நல்ல செய்தி. வாழ்த்துகள் பப்லுவுக்கு.

மின்னுது மின்னல் on December 23, 2010 at 1:13 PM said...

பப்லுக்கு வாழ்த்துக்கள்

மின்னுது மின்னல் on December 23, 2010 at 1:13 PM said...

பப்லுக்கு வாழ்த்துக்கள்

கோமாளி செல்வா on December 23, 2010 at 3:28 PM said...

பப்லுவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா .!
கண்டிப்பா படம் பார்க்கிறேன் ..!

நாகராஜ் on December 24, 2010 at 6:08 AM said...

பப்லுவுக்கு வாழ்த்துக்கள் சகா!

//யூ.கே.ஜி முதல் என் கட்டுப்பாட்டிலே வளர்ந்தான். //


சின்னவயசில் கஷ்டத்தை அனுபவிச்சவங்க வளர வளர நல்லாயிருப்பாங்கன்னு பெரியவங்க சொன்னது சரியாக இருக்கு.

குசும்பன் சொன்னதை ரிப்பீட் செய்கிறேன்..

வாழ்த்துக்கள் பப்லு..

RaGhaV on December 24, 2010 at 7:38 AM said...

பப்லுவிற்கு ரசிகர்மன்றம் ஆரம்பிக்கனும். யாரை contact பன்னனும்?

மோகன் குமார் on December 24, 2010 at 9:54 AM said...

பப்லுக்கு வாழ்த்துகள். ரொம்ப மகிழ்வாக உணர்கிறேன். (இந்த கடைசி வரிக்கு நர்சிம் ஏதும் பேடன்ட் வாங்கலியே? :)))

வள்ளி on December 24, 2010 at 10:29 AM said...

வாவ் ப்லுவுக்கு வாழ்த்துகள்!

ஷர்புதீன் on December 24, 2010 at 2:58 PM said...

சென்னையில் உள்ள ப்ளாக்கர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கிரிக்கெட் மேட்ச் போடலாம்ன்னு பார்க்குறேன்., முடியலையே.,

தல உங்களால முடியுமா. ( ஒரு இருபத்திரண்டு பேர் செர்க்குறது அவ்வ்வளவு கஷ்டமா தல?!!)

மகேஷ் : ரசிகன் on December 25, 2010 at 3:46 PM said...

வாழ்த்துக்கள் பப்லு சார்.

அத்திரி on December 26, 2010 at 1:01 PM said...

பப்லு உன் மாமாவை சீக்கிரம் கண்ணாலம் பண்ண சொல்லு...........

A Simple Man on December 28, 2010 at 4:41 PM said...

வாழ்த்துகள் பப்லு.
வாழ்த்துகள் சகா!
2 tickets for the movie pls :-)

 

all rights reserved to www.karkibava.com