Dec 31, 2010

நியு இயர்ங்கோ. எஞ்சாயுங்கோ..


 

நாளைக்கு நியூ இயர்ங்க. பொதுவா வருஷத்தின் முதல் நாள் உஷாரா இருக்கணும்ன்னு சொல்வாங்க. அன்னைக்கு அழுதா வருஷம் பூரா சீரியல் கேரக்டர் மாதிரி அழுவாங்களாம். அன்னைக்கு சிரிச்சா சினேகா மாதிரி சிரிச்சிட்டே இருப்பாங்களாம். அதனால் முதல் நாள் எந்த பிரச்சினையிலும் மாட்டாம எப்படி உஷாரா இருக்கிறதுன்னு பார்ப்போம்.

1) முதல் நாளு கோவிலுக்குப் போனா நல்லதுன்னு வீட்டுல சொல்வாங்க. அப்படி சொன்னா கம்முன்னு போயிட்டு வந்துடுங்க. தரிசன க்யூ 4 தெருவுக்கு நின்னாலும் போனோமா, சக்கரைப் பொங்கலையும் கேசரியையும் சாப்ட்டோமான்னு இருங்க. வருஷ மொத நாளே இப்படி தெருவுல நிக்கனுமான்னு கேள்வி கேட்டா அப்புறம் அந்த வருஷத்துல நடக்கிற எல்லா சொதப்பலுக்கும் நீங்க கோவிலுக்கு போவ அடம் பிடிச்சதுதான் காரணம்ன்னு சொல்வாங்க. கிருஷ்ணரா இருக்க வேண்டிய நீங்க, நரகாசூரனா மாறுனாலும் ஆச்சரியபடறதுக்கில்ல. அதனால ஃபேனுக்கு காயிலும், வைஃபுக்கு கோயிலும் ரொம்ப முக்கியம்ன்றத மறந்துடாதீங்க.

2) கையில கேமராவோடு அலையுற பார்ட்டிங்க கிட்ட உஷாரா இருங்க. எல்லோரிடமும் உங்க நியூ இயர் ரெசொலுயுஷன் என்னன்னு கேட்கிற மாதிரி அவங்க கிட்டயும் கேட்டா “8 மெகா பிக்சல்”னு கேமராவோடு ரெசொலுயுஷன சொல்லி காண்டாக்கிடுவாங்க. புது வருஷம் வருதோ இல்லையோ இங்கிலாந்த கண்ட பாண்டிங் மாதிரி நமக்கு கொலைவெறி வந்துடும்.

3) மோடி வைக்கிறதுன்னு சொல்வாங்க தெரியுமா? ஏதாவது ஒண்ண புதுசா செய்யும்போது தடங்கல் மாதிரி பேசுறது. இல்லைன்னா மூஞ்ச தூக்கி வச்சிக்கிறது. அதுக்கு பேருதான் மோடி. வருஷ தொடக்கத்தில வீட்டுல தங்கம் வாங்கி வச்சா வருஷம் முழுக்க தங்கமா கொட்டும்ன்னு சொல்வாங்க. உங்களுக்கு வேற மாதிரி தோணலாம். மொத நாளே பர்ஸூல இருந்த காசு காலி ஆனா வருஷம் முழுக்க அப்படித்தானே ஆகும்ன்னு தோணலாம். நமக்கு தோன்றதெல்லாம் பலிக்காது. காசு இல்லைனாலும் கிரெடிட் கார்டுல தேய்ச்சு தங்கத்த வாங்கித் தந்து சிங்கம் ஆயிடறதுதான் நல்ல ஆணுக்கு அழகு.

4) நியு இயர்ல முக்கியமான விஷயம் தண்ணி. நம்ம அரசாங்கம்தான் டாப்பாச்சே. புத்தாண்டு கொண்டாட்டம் எல்லாம் இரவு 11 மணிக்கே முடிக்கணும்ன்னு சொல்லி அலப்பறைய விடுவாங்க. தண்ணி தராத கட்நாடகா அரச திட்டுறவங்க, நம்ம நாட்டு மகக்ளுக்கு செய்யும் கொடுமையெல்லாம் எந்த உச்ச நீதிமன்றமும் கேட்காது.  எல்லா பாரிலும் பார்க்கிங்னு ஒரு இடம் கொடுத்துட்டு வெளிய வந்து வண்டி எடுக்கிறவங்கள ட்ரங்க்கன் டிரைவ்ன்னு தொல்லைய கொடுப்பாங்க. இதுல இருந்து தப்பிக்க ஒரே வழி சரக்கோட ஒரு ஃப்ரெண்ட் வீட்டுல சங்கத்த கூட்றதுதான். இந்த கூட்டணிக்கு ராமதாஸ கூட கூப்பிடலாம். ஒரு பிரச்சினையும் வராது.

5) நியு இயர் அன்னைக்கு சைட் அடிச்சு, அதுல ஒரு ஃபிகர்கிட்ட கைகுலுக்கி ஹேப்பி நியு இயர்ன்னு சொன்னா  அந்த வருஷம் சுபிட்சமா இருக்கும்ன்னு எப்படியும் உங்க ஃப்ரெண்டுல ஒருத்தன் சொல்லியிருப்பான். அப்படி முடிவெடுத்தா ரொம்ப கேர்ஃபுல்லா இருங்க. நீங்க ஹேப்பி நியு இயர் சொல்லப் போற ஃபிகர்க்கும் உங்களுக்கும் அதுகப்பட்சம் 3 இல்லைன்னா 4 வருஷம்தான் கேப் இருக்கணும். இல்லைன்னா சேம் டூ யூ அங்கிள்ன்னு அது சொல்றது மத்தவங்க காதுல ஷேம் டூ யூ அங்கிள்ன்னு விழுந்துடும். அப்புறம் வருஷம் முழுக்க அந்த பொண்ண பார்த்தாலே ராடியாவ பார்த்த தொழிலதிபர் கணக்கா ஓடி மறையணும்.

6) கடைசியா ரொம்ப முக்கியமான பதிவுலகம். நேரா போய் ஃலெஃப்ட்டுல திரும்பினா வெற்றி நிச்சயம், அதோ பூட்டு நீங்க சாவின்னு தன்னம்பிக்கை டானிக்கை பேரல் கணக்கில் இந்த ஆண்டில் ஊற்றுகிறோம்ன்னு ஒரு பக்கம் போட்டு தாளிப்பாய்ங்க. இது என்ன உன் கொள்ளுத்தாத்தா கொண்டாடியா விழாவான்னு “கேள்வியா” கேட்டு இன்னொரு பக்கம் வறுப்பாங்க. ”இணிய புத்தான்டு வாழ்த்துகல்னு” புதுசா ஒரு மொழிப்பித்தன் கிளம்பி வருவான். இதையெல்லாம் லெஃப்ட் ஹேண்டால ரிமூவ் பண்ணிட்டு சாளரத்த படிச்சிங்கன்னு வைங்க, இந்த நாள் மாத்திரமல்ல, வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளே!!!!!!!!!!!

 

WISH YOU ALL A VERY HAPPY AND

PROSPEROUS NEW YEAR

20 கருத்துக்குத்து:

லதாமகன் on December 31, 2010 at 12:17 AM said...

இணிய புத்தான்டு வாழ்த்துகல் :))))))

king on December 31, 2010 at 12:23 AM said...

sooper :)

இராமசாமி on December 31, 2010 at 12:26 AM said...

2011 la kalyanam akatum karki :) happy new year 2011 :)

“நிலவின்” ஜனகன் on December 31, 2010 at 12:29 AM said...

happy new year........

பிரதீபா on December 31, 2010 at 12:45 AM said...

நியு இயர்ங்கோ. எஞ்சாயுங்கோ..

சுசி on December 31, 2010 at 3:49 AM said...

உங்களுக்கும் வாழ்த்துகள் கார்க்கி.

மாணவன் on December 31, 2010 at 5:40 AM said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா....

கலாநேசன் on December 31, 2010 at 6:24 AM said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நிகழ்காலத்தில்... on December 31, 2010 at 7:04 AM said...

\\வெற்றி நிச்சயம், அதோ பூட்டு நீங்க சாவின்னு தன்னம்பிக்கை டானிக்கை பேரல் கணக்கில் இந்த ஆண்டில் ஊற்றுகிறோம்ன்னு ஒரு பக்கம் போட்டு தாளிப்பாய்ங்க. \\

தப்புதான், உங்களைப்போல ஏற்கனவே வெற்றியடைஞ்ச ஆட்களுக்கு இதெல்லாம் தேவை இல்லதான்..

லூஸுல விடுங்க கார்க்கி:)

தர்ஷன் on December 31, 2010 at 10:07 AM said...

வாழ்த்துக்கள் சகா
இனிய புத்தாண்டாக அமையட்டும் தோழி புலம்பல்கள் மனைவியைப் பற்றியதாக மாறட்டும்

sivakasi maappillai on December 31, 2010 at 10:20 AM said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஜெனோவா on December 31, 2010 at 11:54 AM said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகா !:)

sinmajan on December 31, 2010 at 12:09 PM said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள்..
உங்கள் இங்கிலாந்த கண்ட பாண்டிங் உவமை தரம்..

தெய்வசுகந்தி on December 31, 2010 at 9:02 PM said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

வள்ளி on December 31, 2010 at 9:43 PM said...

நன்றி!

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

RaGhaV on January 2, 2011 at 4:07 AM said...

Happy New Year சகா.. :-))
இந்த வருடம் உங்க திருமண தேதிய சொல்லுவீங்கனு நெனைகிறேன்.. ம்ம்ம்.. சீக்கிரம் ஆகட்டும்..

Vinu on January 2, 2011 at 5:57 PM said...

please visit

http://vijayfans-vinu.blogspot.com/

தராசு on January 3, 2011 at 10:04 AM said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

மறத்தமிழன் on January 3, 2011 at 3:12 PM said...

Dear Karki,

Happy New Year..........

சி.பி.செந்தில்குமார் on November 23, 2011 at 12:10 AM said...

ரொம்பபபபப லெட்டா வந்துட்டனோ

 

all rights reserved to www.karkibava.com