Dec 29, 2010

குறும்பட ஸ்க்ரிப்ட்


 

குறும்படம் எடுத்துட்டு தானே உங்களுக்கு காமிக்கிறோம்? ஒரு சேஞ்சுக்கு நாங்க அடுத்த எடுக்கப் போகும் ஷார்ட் ஃபில்மின் ஸ்க்ரிப்ட் சொல்றேன். படிச்சிட்டு சொல்லுங்க

சீன் 1

லொகேஷன் : பள்ளிக்கூடம்

(மரத்துக்கு கீழ மூணாங்கிளாஸ் நடந்துட்டு இருக்கு. வாத்யார் முழு ஆண்டு தேர்வில் பாஸாகி நாலாம் வகுப்புக்கு போறவங்க லிஸ்ட்ட படிக்கிறாரு.)

வாத்யார் : மதன். நீயும் பாஸ் ஆயிட்ட.

மதன் : சார். என்ன அஞ்சாங்கிளாஸூக்கு டபுள் புரமோஷன் போடுங்க.

வாத்யார் : நீ நல்லா படிக்கிற பையன் தான். ஆனா டபுள் புரமோஷன் எல்லாம் கொடுக்க முடியாது

மதன் : இல்லைன்னா மூணாங்கிளாஸ்லே உட்கார வைங்க. நாலாங்கிளாஸ் மட்டும் வேணாம் சார்.

____________________________________

சீன் 2

லொகேஷன் : ஹைவே, பைக்கில் மதனும் நண்பனும்

மதன் : மச்சி. உன் பைக்குல எத்தன கியர்?

நண்பன் : அஞ்சுடா

மதன் : நான் மூணுல இருந்து நேரா அஞ்சுக்கு போயிடுவேன், ஓக்கேவா?

நண்பன் : ஏன்? நாலாவது கியர் போட மாட்டியா?

மதன் : முடியாது

என்றபடி வ்ரூம் என சீறிப்பாய்கிறான், அஞ்சாவது கியரில்

______________________________

சீன் 3

லொகேஷன் : கல்லூரி வாசல்

நண்பன் : டேய். ஃபுல் டீட்டெயில் கிடைச்சாச்சு. பேரு கம்லா. ஈ.சி.ஏ ஃபைனல் இயர். இப்போதைக்கு யாரையும் லவ் பண்ணல.

மதன் : ஃபேமிலி டீட்டெயில்ஸ்?

நண்பன் : அப்பா இன்கம்டேக்ஸ்ல வேலை செய்றாரு. அம்மா டீச்சர். மொத்தம் நாலு பசங்க. இவதான் கடைசி

மதன்: அப்போ நாலாவது பொண்ணா?

நண்பன் : ஆமாண்டா

மதன் : அப்போ வேணாம்டா.

_______________________________________________

சீன் 4

லொகேஷன் : நண்பர்கள் அறை

மதன் : 3 பால்ல 6 ரன். ஈசிதாண்டா

நண்பன் : கஷ்டம்டா. பார்த்தியா..ரைனா அவுட்.

மதன் : 2 பால்ல 6. அடிறா சிக்ஸ்

நண்பன் : ஃபோர் போன கூட போதும் மச்சி. கடைசி பால்ல தொட்டுவிட்டு 2 ஓடலாம். இல்லைன்னா டை ஆக்கிடலாம்

மதன்: ஃபோர்லாம் அடிச்சானா டென்ஷன் ஆயிடுவேன். ஒன்லி சிக்ஸ்.

நண்பன் : அப்படி என்னதாண்டா உனக்கு பிரச்சினை ஃபோர் கூட. நாலாம் நம்பர பார்த்தாலே டெரர் ஆயிடுற?

___________________

மதன் முகம் கடுப்பாகுது. அப்படியே கட் பண்ணி கேரளாவில் இருக்கும் சாரு நிவேதிதா கட் அவுட்டை காட்டுறோம். அவர் சென்ற வருடம் ஜெமோ புத்தகத்தை கிழிப்பதை காட்டுகிறோம். இன்னொரு எழுத்தாளரின் புத்தக அறிமுக கூட்டத்தில் அந்தப் புத்தகத்தை குப்பை என்று பேசுவதை காட்டுகிறோம். மொத்தத்தில்  சாரு(இந்தில 4..ஹிஹிஹி) என்ற வார்த்தை மீது மதனுக்கு இருக்கும் வெறுப்பை காட்டவே இந்தப் படம்.

குறீயிடுகள்:

1) படத்தில் மொத்தன் 4 சீன்

2) மதன், வாத்தியார், நண்பன்1, நண்பன்2 என 4 கதாப்பாத்திரங்கள்

3) படம் மொத்தம் 4 நிமிடங்கள் தான்.

4) இதை ஒரு நாலந்திர படமென்றும் சொல்லலாம்.

மொத்த குறியீடும் நான்குதான். இந்த ஸ்க்ரிப்ட்டை மேலும் எப்படி மெருகேற்றலாம் என்பது குறித்த உங்கள் ஆலோசனைகளை எதிர்ப்பார்க்கிறோம். :))

டிஸ்கி : அண்ணன் சாரு பற்றி தெரியாதவர்கள் உடனே கூகிளில் சென்று சாரு நிவேதிதா என்று தேடவும். மேலதிக சேதாரங்களுக்கு கம்பெனி பொறுப்பேற்காது

17 கருத்துக்குத்து:

frank on December 29, 2010 at 11:26 PM said...

கடுப்ப இப்படியும் காட்டலாமா!!!! சபாசு!!!!!!!!

nagaraj on December 29, 2010 at 11:27 PM said...

அண்ணன் சாரு பற்றி தெரியாதவர்கள் உடனே கூகிளில் சென்று சாரு நிவேதிதா என்று தேடவும். மேலதிக சேதாரங்களுக்கு கம்பெனி பொறுப்பேற்காது

நச்சுன்னு இருக்கு

நானெல்லாம் குறும்படங்களை யூடுப்பில் மட்டுமே பார்க்கிற ஜாதி
சுட்டு போடுங்க தோசை சூப்பர்

இராமசாமி on December 29, 2010 at 11:28 PM said...

நல்லா இருங்கப்பு

frank on December 29, 2010 at 11:32 PM said...

கடுப்ப இப்படியும் காட்டலாமா!!!! சபாசு!!!!!!!!

சித்தூர்.எஸ்.முருகேசன் on December 29, 2010 at 11:38 PM said...

sooooooooooooooooooper..

ஸ்ரீதர் நாராயணன் on December 30, 2010 at 12:01 AM said...

//அப்படியே கட் பண்ணி கேரளாவில் இருக்கும் சாரு நிவேதிதா கட் அவுட்டை காட்டுறோம். //

அப்ப அது அஞ்சாவது சீன் இல்லையா? அதுக்கப்புறம் வர்ற புத்தகம் கிழிக்கிற காட்சிகள்லாம் என்னான்னு சொல்வீங்க ஸ்க்ரிப்ட்ல?

ஹிஹி :))

பலே பாண்டியா on December 30, 2010 at 12:19 AM said...

நல்ல காட்டுறாங்க படம்!!
நாலு பேரு பாத்துட்டு நல்லா இருக்குனு சொன்ன சரி!!!

நாந்தான் பர்ஸ்ட் சொல்லுவேன் .

Aaruran on December 30, 2010 at 3:07 AM said...

எதிர்ப்பை காட்டுவதற்கு சிறந்த வழி....
பாராட்டுகள் !!!
உங்க நேர்மை பிடிச்சிருக்கு .....

பிரதீபா on December 30, 2010 at 3:08 AM said...

அந்த மனுஷன இப்படியா போட்டு வறுப்பீங்க? பாவம்.

டம்பி மேவீ on December 30, 2010 at 8:11 AM said...

அப்ப நீங்க ஜெயமோகன் கட்சின்னு சொல்லுறீங்க :))))))))

கார்க்கி on December 30, 2010 at 9:09 AM said...

ஃப்ராங், :))))

ராஜு, டைர‌க்ட‌ர் இன்னும் கால்ஷீட் த‌ர‌ல‌

ந‌ன்றி இராம‌சாமி

ந‌ன்றி சித்தூர் முருகேச‌ன்

@ ஸ்ரீதர்,
சாரு ஒரு பின்ந‌வீன‌வாதி என்ப‌தை க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வும், குறியீடுக‌ளும் நேரிடையாக‌ சொல்ல‌ மாட்டோம். சாரு ப‌ற்ற்ய‌ காட்சிக‌ள் 4.. சாரு வ‌ரும் காட்சிக‌ள் 4. இப்போ ச‌ரியா?

ப‌லே பாண்டியா, நான் ஒண்ணு. நீங்க‌ ஒண்ணு. இன்னும் 2 பேரு சொல்ல‌ மாட்டாங‌க்ளா?:))

ந‌ன்றி ஆரூரான்

பிர‌தீபா, அவ‌ரை ம‌னுஷ‌ன் என்ற‌ உங‌க்ளை என்ன‌ செய்ய‌லாம்? அவ‌ர் தெய்வ‌ங்க‌

ட‌ம்பி மேவி, முத‌லில் ஜெ.மொ எந்த‌ க‌ட்சின்னு சொல்லுங்க‌

புன்னகை on December 30, 2010 at 9:26 AM said...

Hugs!!!!!!!!!!! :-)))))))))))))

பரிசல்காரன் on December 30, 2010 at 10:59 AM said...

குறும்பட கதாபாத்திரத்தின் பெயரை கார்க்கி என்று நாலெழுத்தில் போடாமல் மதன் என்று மூன்றெழுத்தில் போட்ட உன் மேதாவித்தனத்தை மெச்சுகிறேன்!

பொன்கார்த்திக் on December 30, 2010 at 1:05 PM said...

மதன்: டேய் வலது பக்கம் திரும்புடா..

நண்பன் : இது தாண்டா மதுரைக்கு ஷாட் கட்..

மதன்: வேண்டாம் நேர போடா..

நண்பன் : என்டா அது நாலு வழி சாலைனா..

மதன் : மச்சி. உன் பைக்குல எத்தன கியர்?

நண்பன் : அஞ்சுடா

மதன் : நான் மூணுல இருந்து நேரா அஞ்சுக்கு போயிடுவேன், ஓக்கேவா?

நண்பன் : ஏன்? நாலாவது கியர் போட மாட்டியா?

மதன் : முடியாது

என்றபடி வ்ரூம் என சீறிப்பாய்கிறான், அஞ்சாவது கியரில்

பொன்கார்த்திக் on December 30, 2010 at 1:10 PM said...

நண்பன் : டேய். ஃபுல் டீட்டெயில் கிடைச்சாச்சு. பேரு கம்லா. ஈ.சி.ஏ ஃபைனல் இயர். இப்போதைக்கு யாரையும் லவ் பண்ணல.

மதன் : ஐயோ (4th இயர்) பைனல் இயரா? மேல சொல்லு..

Nagasubramanian on December 30, 2010 at 3:09 PM said...

மனுஷனுக்கு ஒரு பிகர் கெடைக்கறதே கஷ்டம், இதுல நாலு, மூணுனு னு பார்த்தா வேலைக்கே ஆவாது. (எனகென்னவோ உங்களுக்கு நாலாவது இடத்துல சனி சம்பனங்கால் போட்டு உட்கார்ந்துட்டு இருக்கார்னு தோணுது)

மேடேஸ்வரன் on December 31, 2010 at 11:55 AM said...

எனக்கு இந்த 4 ஐ நாலு சாத்துறவங்களைக் கண்டால் பிடிக்கும்..

 

all rights reserved to www.karkibava.com