Dec 17, 2010

பப்லுவும் நானும் கூடவே ஹரிணியும் கெசில்லாவும்


 

சென்ற மாதம் நான், வினோத்(என் கஸின்), பப்லு(அக்கா பையன்) மூவரும் வேளச்சேரி Dominos pizza சென்றோம். Chicken mexican red wave, cheese burst எங்களுடைய ஒரே சாய்ஸ். ஆர்டர் எடுத்த பெண் அநியாயத்துக்கு க்யூட்டாக இருந்தார். நான் அவளை கவனிப்பதை, கவனித்த வினோத் “க்யூட்டா இருக்கால்ல” என்று காதில் கிசுகிசுத்தான். ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம். நேரமானதால் பப்லு  அக்காவிடம் போய் கேட்டான். அவர் feedback form கொடுத்து இத ஃபில் செய்ப்பா. அதுக்குள்ள வந்துடும் என்றார். இதுக்குள்ள அவ்வளவு பெரிய பிஸ்ஸா எப்படி வரும் என்று கேட்ட பப்லுவை ஆச்சரியமாக பார்த்தார் அந்த அக்கா.

எல்லாவற்றிலும் excellent டிக் செய்துவிட்டு,மறக்காமல் என் ஃபோன் நம்பரையும் எழுதிவிட்டு “do you want to appreciate any specific person” என்ற இடத்தில் அக்கா பெயரை எழுதலாம் என்று பப்லுவை போய் பேர் கேட்க சொன்னேன். அதெல்லாம் வேண்டாம் என்று கவரை மூடி ஒட்டிவிட்டான் பப்லு. நான் இழுக்க, அவன் இழுக்க ஃபார்ம் டர்ர்ர்ர்ர். பேனாவை மட்டுமாவது கொடுக்கலாம் என்று போனால், பார்ம்? என்றது க்யூட். வேற ஒரு ஃபார்ம் வாங்கிக் கொண்டு, ur name  என்றேன். வெள்ளைதாளில் Gezillaa  என்று எழுதி, its an odd name என்றபடி பேப்பரை நீட்டினாள். அவள் பெயருக்கு கீழே Karki  என்று எழுதி, நானும் ரவுடிதான் என்றேன். எல்லாவற்றிலும் excellent போட்டு, என் பெயருடன் ஃபோன் நம்பரையும் எழுதி கொடுத்து விட்டு வந்தேன். என் போர்ஷனும் காலி செய்துக் கொண்டிருந்தான் பப்லு. பரவாயில்லை என்று நிறைஞ்ச மனசோடு கிளம்பினோம்.

காரில் வரும்போது வேறு விஷயத்துக்கு பப்லுவை நான் மிரட்ட, பதிலுக்கு பப்லு மிரட்டினான். பாட்டிக் கிட்ட சொல்லிடுவேன். நீ அந்த பொண்ணுகிட்ட “ I like u. Shall we go out” சொன்னேன்னு சொல்லிடுவேன் என்றான். பிட்ஸாதாண்டா சாப்பிட்டுக்கிட்டு இருந்த பிசாசு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, எப்போது இப்படி பெரிய ஆளானான் பப்லு என்று யோசிக்க தொடங்கினேன். வினோத் தன் கேர்ள் ஃப்ரெண்டை பேபி என்று அழைப்பதை ஒரு நாள் கேட்டுவிட்டான் பப்லு. வீட்டுக்குள் நுழைந்தவுடன் கத்தினான் ” கார்க்கி மாமாவுக்கும் பேபி கிடைச்சாச்சு”

___________________________________

சென்ற வாரம் ஒரு நல்ல மழைநாளில் மீண்டும் Domino’s pizza வேண்டுமென்று அடம்பிடித்தான் பப்லு. வேண்டாம் என்று சொல்ல எத்தனித்த நேரத்தில் கெசில்லா ஞாபகம் வர, சரி வா கார்ல போயிட்டு வரலாமென்று கிளம்பினோம். தோமினோஸில் ஒரு கெட்ட விஷயம், கவுண்ட்டரில் இருக்கும் அனைவரும் காதில் ஃபோனை வைத்து பேசிக் கொண்டிருப்பார்கள். Dine inஐ விட delieveryதான் அவர்களுக்கு முக்கியம். ஆனால் கவுண்ட்டரில் தொங்கிய போர்டில் “ To decide what you want to have will take more time than our service ” என்று காமெடி செய்திருந்தார்கள். அதுவா முக்கியம் என்று நகர்ந்த நேரம் “what you want sir” என்றார் ஒருவர். கெஸீலா என்று என்னையறியாமல் வாய் திறக்க வந்தபோது, பப்லு ”chicken mexican redwave” என்று முந்திக் கொண்டு என்னைக் காப்பாற்றினான். கெசிலா இல்லையென்று முடிவு செய்தபின் தான் கவுண்ட்டரில் இருந்து நகர்ந்தேன்.

excuse me என்று எண்ட்ரீ கொடுத்தார் இன்னொரு க்யூட் தேவதை. இவரும் அநியாயத்துக்கு அழகாக இருந்தார். பப்லு எங்கே இருக்கான் என்று தேடினேன். டேபிளில் இருந்த crossword puzzleஐ சீரியஸாக படித்துக் கொண்டிருந்தான். நல்ல வேளை. அவள் ஆர்டர் செய்துவுடன் கவுன்ட்டரில் இருந்தவர் பேர் கேட்க,  ஹரிணி என்றாள். நல்ல பெயர்தானே? பப்லு எதிரே வந்து அமர்ந்து நம்ம க்யூட் தேவதையை பார்த்துக் கொண்டிருந்தேன். பாவம். முகம் மட்டும் ஏனோ படு சீரியஸாக இருந்தது. சிரிக்கவே மாட்டேன் என்று பந்தயம் கட்டிவிட்டார் போலும்.

    எப்படியோ மூக்கு வேர்த்து ஃபோன் செய்தான் வினோத். விஷயத்தை அமுக்கமாக பப்லுவுக்கு கேட்காத மாதிரிதான் சொன்னேன். எப்படியோ கேட்டுவிட்ட பப்லு ”மாமா, யாரு வினோத்தா? என்றான் சத்தமாக. ஒரு லுக் விட்டுவிட்டு திரும்பி விட்டாள் ஹரிணி. அந்த அக்கா பத்திதானே பேசறீங்க என்றான் பப்லு. அக்கா, மாமா மேட்ச் ஆனாலும் எப்படி கேட்டது என்று முழித்தேன். கிளம்பும் போது அந்த அக்காவைப் பார்த்து சிரித்தான் பப்லு. அப்போதும் உம்மென்றே இருந்தாள். கண்ணாடிக் கதவை திறந்து வெளியே வந்தேன் நான். பப்லு பாதி திறந்திருந்த கதவின் வழியாக “ஹரிணி” என்றான். அவள் திரும்பியவுடன் “கொஞ்சம் சிரி நீ”என்று சொல்லிவிட்டு ஓடி வந்தான். நான் சொல்லிக் கொடுத்துதான் பப்லு சொன்னதாக நினைத்து என்னைப் பார்த்து சிரித்தாள். ம்க்கும். கிளம்பும்போதுதான் தோணுமா உனக்கு என்றபடி பப்லுவுடன் கிளம்பினேன். ஹரிணி.. கொஞ்சம் சிரி நீ. ரைமிங்காத்தான் சொல்லியிருக்கான் பப்லு

13 கருத்துக்குத்து:

இராமசாமி on December 17, 2010 at 12:17 AM said...

saga... mmmm... enavo ponga :)

Kaarthik on December 17, 2010 at 12:20 AM said...

வாரிசு உருவாகிக் கொண்டிருக்கிறது :-)

பிரதீபா on December 17, 2010 at 12:40 AM said...

மீள்ஸ்..

nagarajan on December 17, 2010 at 12:43 AM said...

Saga....
Rain, Pizza, Harini, Sirini... next time when u meet Thozhi... maganae.. unnakku diwali than...

சுசி on December 17, 2010 at 1:11 AM said...

இன்னும் இந்த கோட்சில்லாவை விடலையா நீங்க??

philosophy prabhakaran on December 17, 2010 at 3:24 AM said...

// என் போர்ஷனும் காலி செய்துக் கொண்டிருந்தான் பப்லு. பரவாயில்லை என்று நிறைஞ்ச மனசோடு கிளம்பினோம். //

நீங்க ரொம்ப நல்லவரு...

மாணவன் on December 17, 2010 at 7:53 AM said...

//ஹரிணி.. கொஞ்சம் சிரி நீ. ரைமிங்காத்தான் சொல்லியிருக்கான் பப்லு//

clever boy பப்லு...

ம்ம் நடத்துங்க நடத்துங்க....

நல்லாருக்குண்ணே தொடருங்கள்....

தர்ஷன் on December 17, 2010 at 9:12 AM said...

சார் ரொம்ப பிசியோ இப்பெல்லாம் மீள்பதிவுதான் அதிகமாக

தராசு on December 17, 2010 at 12:16 PM said...

படிச்சுட்டேன்.

சர்பத் on December 17, 2010 at 8:42 PM said...

நாட்டுல பல pizza கடைங்க இப்படித்தான் ஓடுது போல....

மகேஷ் : ரசிகன் on December 17, 2010 at 10:54 PM said...

பச்சப் புள்ளைய ஏன்யா கெடுக்குறீங்க? :)

Karthik on December 18, 2010 at 4:37 PM said...

ஹாஹாஹா. :)))

ஆதிமூலகிருஷ்ணன் on December 21, 2010 at 5:04 PM said...

சுவாரசியம்.

 

all rights reserved to www.karkibava.com