Dec 15, 2010

கோப்பை முழுவதும் மழை


 

  மார்கழியில் கல்யாணம் நடப்பதில்லை. ஆனால் காதல் பூக்க அது தோதான மாதமாகத்தான் இருக்கிறது.  தெருமுழுவதும் கோலம் போட்டுக் கொண்டிருக்கும்  தேவதைகளை பார்க்கவே அதிகாலையில் எழுந்திருக்கலாம். அப்பொழுதை மேலும் ரம்மியமாக்கும் கொட்டும் பனி. குளிருக்கு இதம் சிகரெட் தான் என்று சொன்ன என் நண்பன் கூட அக்காலை வேளையில் தன் நெருப்பு நண்பனை விலகியிருந்ததுண்டு. ஜில்லென்றிருக்கும் தண்ணீரில் முகம் கழுவி, தேவைப்பட்டால் கொஞ்சம் ஃபேர்&லவ்லி தடவி, ஜம்மென்று தெருவில் இறங்கி நடப்பதே அலாதியான அனுபவம் தான். தெருமுனையில் இருக்கும் தேநீர்க்கடையை அடைவதற்குள் மனது நிரம்பியிருக்கும்.

அப்பொழுது நான் பாண்டிச்சேரியில் இருந்தேன். நடந்து செல்லும் தூரத்தில் கடற்கரை வேறு. மற்ற பெருநகரங்களை போல தன்னை முழுமையாக மாற்றிக் கொள்ளவில்லை புதுவை. எல்லோர் வீட்டு வாசல்களிலும் அழகிய கோலங்கள் மார்கழி மாதத்தில் நிச்சயம் உண்டு. அப்படி ஒரு மார்கழி மாதத்தின் முதல் நாளில்தான் அவளை சந்தித்தேன். காதலின் அ,ஆ,இ,ஈ சொல்லித் தந்த டீச்சரம்மா அவளெனக்கு. அவளே எனக்கு மிச்ச சொச்சத்தையும் சொல்லித்தந்து போனதால் இதுவரை வேறெங்கும் படிக்கவில்லை.

காதலை பல்வேறு வடிவங்களில் படித்தாகிவிட்டது. என் பங்குக்கு முடிந்தவரை எழுதியும் ஆகிவிட்டது. பதிவாக, கதையாக, அனுபவமாக, கவிதையாக, குறுஞ்செய்தியாக ட்விட்டாக என எனக்கு தெரிந்த எல்லா வடிவத்திலும் காதலை படித்துவிட்டேன். எவ்வித பூச்சுகளும் இல்லாமல், ஒரு வரி கூட புனைவாக மாற்றாமல், உள்ளதை உள்ளபடி – உள்ளத்தில் உணர்ந்தபடி சொல்ல ஏதுவான உரைநடையே காதலை சொல்ல சிறந்த வடிவம் என்ற எண்ணம் எனக்கிருந்தது. ஆமாம். நேற்று வரை இருந்தது. ஒரு கவிதை, ஒரே ஒரு கவிதை அவ்வெண்ணத்தை தடம் தெரியாமல் அழித்துச் சென்றது.

நேற்று விகடனை புரட்டிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு தேதியெல்லாம் நினைவிலில்லை. அம்மா பக்கத்தில் அமர்ந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். தாமதமாக அதை கவனித்த போதுதான் மார்கழி மாதமும், மேலே சொன்ன காதலும் என்னை தட்டியெழுப்பியது. வேகமாய் புரட்டப்பட்ட தாள்கள் நின்றுபோனது. நின்றுபோன பக்கத்தில் குட்டி குட்டியாய் கவிதைகள். பெரும்பாலும் ஒரு வித வேகத்தில் அதை கடந்து போகும் நான், நின்று நிதானித்து வாசித்தேன்.

உனக்கு நிறைய
கேள்விகள் இருந்தன
நிறைய சமாளிப்புகள்
நிறைய குற்றச்சாட்டுகள்
நிறைய கோபங்கள்
நீ கையசைத்துப்போகும்போது
என்னிடம் ஒரு காதல் இருந்தது
கொஞ்சம் தேநீர் இருந்தது
நிறைய மழை இருந்தது

-லதாமகன்

ஒரு நாவல் எழுதிவிடலாம். ஒரு காதல் முறிவையும், அதன் பின் இருக்கும் வலியையும், ஏமாற்றத்தையும், சோகத்தையும் வைத்து ஒரு பெரிய நாவல் எழுதிவிடலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கும் அதன் பிண்ணணியில். அதன் வீரியம் குறையாமல், அதன் வலி குறையாமல் இங்கே கவிதையாக்கியிருக்கிறார் லதாமகன். ஒவ்வொரு வரியையும், வார்த்தையையும், எழுத்தையும் படித்து படித்து பார்க்கிறேன். வார்த்தைகளில் கஞ்சத்தனத்தையும், வலியை பதிவதில் களவாணித்தனத்தையும் கொண்டிருக்கிறார் கவிஞர். எந்தவொரு காதல் முறிவும் ஒருவரை அனாதையாக்குவதில்லை. துணைக்கு காதலை விட்டுத்தான் செல்கிறது. இக்கவிதை அதை உறுதி செய்கிறது.

இதை படிக்கும்போது உங்களுக்கு மிகச்சாதரணமாய் தெரியலாம். ஆனால் ஒரு புகைப்படத்தை போல, ஒரு நிகழ்வை கண்முன்னே கொண்டு வந்து மனதுக்கு மிக நெருக்கத்தில் வந்த விட்ட இந்தக் கவிதை என்னளவில் மிக முக்கியமான ஒன்று. காதலையும், அதன் அழகையும் சொல்ல வேறு வடிவங்கள் சிறப்பானதாய் இருக்கலாம். சொல்ல முடியாமல் மனதுக்குள் புகைந்துக் கொண்டிருக்கும் வலியை பதிவு செய்வதில் கவிதைக்குத்தான் முதலிடம். மனதுக்கு இதமாய் இருக்கிறதா, கனமாய் வலிக்கிறதா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஏதோ செய்கிறது. நன்றி லதாமகன்.

_______________________________________________________________________________

சென்ற வருடம் இதே தேதியில் நான் எழுதிய பதிவு -

அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை

17 கருத்துக்குத்து:

ம.தி.சுதா on December 15, 2010 at 11:13 PM said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4

ம.தி.சுதா on December 15, 2010 at 11:15 PM said...

ஃஃஃஃஃஒரு கவிதை, ஒரே ஒரு கவிதை அவ்வெண்ணத்தை தடம் தெரியாமல் அழித்துச் சென்றதுஃஃஃஃ

உண்மையாகவே தாங்க.. அருமையான பதிவு...

vinu on December 15, 2010 at 11:33 PM said...

me at 3rd

vinu on December 15, 2010 at 11:39 PM said...

december 16th- i supect either this date is a birthdate or last date of one incident; what you say sagaa?

லதாமகன் on December 15, 2010 at 11:40 PM said...

தல! ரொம்ப சந்தோசம் தல!

Really you made my day
:)))))

Kaarthik on December 15, 2010 at 11:41 PM said...

எனக்கும் முதலில் சாதாரணமாக தோன்றிய இக்கவிதையின் சாரத்தை இப்போதுதான் உணர முடிகிறது. தங்களுக்கும் லதாமகனுக்கும் நன்றி. தங்கள் சென்ற வருடத்துப் பதிவு அருமை

மதன்ராஜ் மெய்ஞானம் on December 16, 2010 at 1:22 AM said...

Seriously..

பிரதீபா on December 16, 2010 at 3:43 AM said...

//நீ கையசைத்துப்போகும்போது
என்னிடம் ஒரு காதல் இருந்தது
கொஞ்சம் தேநீர் இருந்தது
நிறைய மழை இருந்தது..//
..வடியாமல் இன்னும் சொட்டு சொட்டாய்

:(

மாணவன் on December 16, 2010 at 5:50 AM said...

//அதன் அழகையும் சொல்ல வேறு வடிவங்கள் சிறப்பானதாய் இருக்கலாம். சொல்ல முடியாமல் மனதுக்குள் புகைந்துக் கொண்டிருக்கும் வலியை பதிவு செய்வதில் கவிதைக்குத்தான் முதலிடம். மனதுக்கு இதமாய் இருக்கிறதா, கனமாய் வலிக்கிறதா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஏதோ செய்கிறது. நன்றி லதாமகன்.//

உணர்வுகளுடன் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை

லதாமகனுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

தொடரட்டும் உங்கள் பணி
நன்றி

___________________________________________________________________

பலே பாண்டியா on December 16, 2010 at 7:52 AM said...
This comment has been removed by the author.
பலே பாண்டியா on December 16, 2010 at 7:56 AM said...

இந்த வருடத்தின் 200 ஆவது பதிவு போல வாழ்த்துக்கள். நான் இப்போது தான் முதல் முறையாக வருகிறேன். வார்த்தைகளை கையாளும் விதம் மிகவும் அருமை.

புன்னகை on December 16, 2010 at 8:30 AM said...

:-(

மோகன் குமார் on December 16, 2010 at 9:22 AM said...

ஆஹா நானும் இந்த கவிதை வாசித்து விட்டு கடந்து சென்றேன். இப்போது நீங்கள் விளக்கும் போது முழுதாய் புரிந்தது

நர்சிம் on December 16, 2010 at 12:34 PM said...

லதாமகனின் உயிரோசையில் வந்த கவிதையைப் பற்றி எழுதிக்கொண்டிருந்தேன் சகா.. முந்திட்டீங்க.. ரைட்ட்டு.

இந்தப் பதிவு மிகப் பிடித்திருந்தது.

சுசி on December 16, 2010 at 1:11 PM said...

:(

sivakasi maappillai on December 16, 2010 at 1:31 PM said...

கல்யாணம் ஆனா சரியாயிடும் நண்பா.....
அப்புற‌ம் இத‌யே ப‌டிக்கும் போது சிப்பு வ‌ரும்....

RaGhaV on December 17, 2010 at 12:44 AM said...

உருகவச்சீடீங்க சகா.. :-(

 

all rights reserved to www.karkibava.com