Dec 9, 2010

சாக்லெட்டா? சாக்லெட்டுக்கா?


 

வெளிநாட்டில் இருந்து வரும் உன் அண்ணன் என்ன வாங்கி வருவான் என்றேன் தோழியிடம். சாக்லெட் என்றாள். யாருக்கு வாங்கி வருவானென்றா கேட்டேன்? என்ன வாங்கி வருவான் என்றுதானே கேட்டேன்!!

\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

ஊரெங்கும் மழைக் கொட்டிக் கொண்டிருந்த நாளில், சேலை அணிந்து வந்த தோழி கேட்டாள் “நல்லாருக்கா?”. அந்தக் கேள்வியை அவள் சேலையிடம் கேட்டதாக எண்ணி சேலையின் பதிலுக்காய் காத்திருந்தேன் நான் பொறாமையுடன்.

\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

உடம்பு சரியில்லாமல் போன நாளன்று கண் பட்டுவிட்டதாக சொன்னார் அம்மா. தோழியின் கண் படாததால் வந்த காய்ச்சல் தான் அது என்று எப்படி சொல்வது?

\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

தொலைபேசியை சிரித்துக்கொண்டே எடுக்காதே என்றால் முடியாது என்கிறாள் தோழி .எடுத்த பின்பும்  ரிங் அடித்துக் கொண்டிருப்பதாய் நினைத்து பேசாமலே இருக்கிறேன் என்பதை சொன்னால் மீண்டும் சிரிப்பாள் என விட்டுவிட்டேன்

\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

குளோபல் வார்மிங்குக்கு எதிராக உலகமே நடவடிக்கை எடுக்கவிருக்கிறதாம். விஞ்ஞானிகளும் அதற்கான காரணங்களை கண்டறிந்து அழிக்கப் போகிறார்களாம். எப்படி உன்னை அவர்களிடம் இருந்து காப்பற்ற போகிறேன் எனத் தெரியவில்லை எனக்கு

\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

உதடுகள் பேசும் வார்த்தைகளை விட இதயங்கள் பேசும் வார்த்தைக்கு அர்த்தம் அதிகம் என்கிறாள் தோழி. சரியென்ற நான் ஒரு கமலஹாசன் முத்தம் தாயேன் என்றேன். துள்ளி வந்தவளிடம் இதற்கு மட்டும் உதடுகள் எதற்கு என்றவுடன் வெட்கி, நாணி, கோணி ஓடினாள், முத்தம் தந்த பின் தான்.

17 கருத்துக்குத்து:

vinu on December 9, 2010 at 10:09 PM said...

sllaathu sellaathu ithu meeeel pathivuuuuuuuuuu

சுசி on December 9, 2010 at 10:13 PM said...

:)

கனாக்காதலன் on December 9, 2010 at 11:11 PM said...

அருமை அருமை :)

சுரேகா.. on December 9, 2010 at 11:47 PM said...

கார்க்கி...மொதல்ல கல்யாணத்தப்பண்ணு ! அப்புறம் சொல்லு பாப்போம் தோழி அப்டேட்ஸ்!

ஊரிலிருந்து வரும் உங்க அண்ணன் என்ன வாங்கிட்டுவருவார்?

ம்...மண்ணாங்கட்டி!...

அப்புறம்.. அஸ் யூஷுவல்..!! :)

ஆதிமூலகிருஷ்ணன் on December 10, 2010 at 12:20 AM said...

தோழி அப்டேட்ஸை புத்தகமாக கொண்டுவரலாம் கார்க்கி. நீ எழுதியதில் 90 சதவீதம் அப்டேட்ஸ் செலக்ட் ஆகிவிடும். நிச்சயமாக தபூவை விட பன்மடங்கு சிறந்த கவிதையனுபவத்தை தருவன இவை. கவிதை மாதிரி வரிவரியாய் போடவேண்டாம், இதைப்போல வாக்கியங்களாகவே போடலாம். வித்தியாசமான முயற்சியாக இருக்கும்.

தெய்வசுகந்தி on December 10, 2010 at 4:51 AM said...

:)

ரோஸ்விக் on December 10, 2010 at 5:10 AM said...

//ஆதிமூலகிருஷ்ணன் on December 10, 2010 12:20 AM said...
தோழி அப்டேட்ஸை புத்தகமாக கொண்டுவரலாம் கார்க்கி. நீ எழுதியதில் 90 சதவீதம் அப்டேட்ஸ் செலக்ட் ஆகிவிடும். நிச்சயமாக தபூவை விட பன்மடங்கு சிறந்த கவிதையனுபவத்தை தருவன இவை. கவிதை மாதிரி வரிவரியாய் போடவேண்டாம், இதைப்போல வாக்கியங்களாகவே போடலாம். வித்தியாசமான முயற்சியாக இருக்கும்.
//

வழிமொழிகிறேன் கார்க்கி. நல்லாயிருக்கு.

மாணவன் on December 10, 2010 at 5:50 AM said...

அருமை அண்ணே,

தொடருங்கள்.......

அத்திரி on December 10, 2010 at 8:44 AM said...

romantic moodddddddd..................mmmmmmmmmmmmmmmmmmmmmmmm..............ok

பொன்கார்த்திக் on December 10, 2010 at 10:57 AM said...

காதல்... காதல்... காதல்!!!!

சிசு on December 10, 2010 at 11:25 AM said...

//Blogger ரோஸ்விக் said...

//ஆதிமூலகிருஷ்ணன் on December 10, 2010 12:20 AM said...
தோழி அப்டேட்ஸை புத்தகமாக கொண்டுவரலாம் கார்க்கி. நீ எழுதியதில் 90 சதவீதம் அப்டேட்ஸ் செலக்ட் ஆகிவிடும். நிச்சயமாக தபூவை விட பன்மடங்கு சிறந்த கவிதையனுபவத்தை தருவன இவை. கவிதை மாதிரி வரிவரியாய் போடவேண்டாம், இதைப்போல வாக்கியங்களாகவே போடலாம். வித்தியாசமான முயற்சியாக இருக்கும்.
//

வழிமொழிகிறேன் கார்க்கி. நல்லாயிருக்கு.//

Me too...

நர்சிம் on December 10, 2010 at 12:41 PM said...

//ஆதிமூலகிருஷ்ணன் on December 10, 2010 12:20 AM said...

தோழி அப்டேட்ஸை புத்தகமாக கொண்டுவரலாம் கார்க்கி. நீ எழுதியதில் 90 சதவீதம் அப்டேட்ஸ் செலக்ட் ஆகிவிடும். நிச்சயமாக தபூவை விட பன்மடங்கு சிறந்த கவிதையனுபவத்தை தருவன இவை. கவிதை மாதிரி வரிவரியாய் போடவேண்டாம், இதைப்போல வாக்கியங்களாகவே போடலாம். வித்தியாசமான முயற்சியாக இருக்கும்//

அதேதான்

பிரதீபா on December 10, 2010 at 2:52 PM said...

கார்க்கி , சிலது டாப் கிளாஸ். கொஞ்சம் ஏற்கனவே படிச்ச மாதிரி இருந்திச்சுங்க.

ஆதியண்ணே - எப்படியும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் இந்த அளவுக்கு ரசனையா மனைவி அப்டேட்ஸ் வராது ன்றீங்களா? :)

கார்க்கி, எல்லாரும் சேர்ந்து அடுத்த தொகுப்புக்கு அடிப் போட்டிருக்காங்க.. நானும் அவங்களோட சேர்ந்துக்கறேன். கன்சிடர் பண்ணுங்க.

பிரதீபா on December 10, 2010 at 2:53 PM said...

For Follow-up...

வில்லங்கம் on December 10, 2010 at 4:59 PM said...

கார்க்கி.... தோழி அப்டேட்ஸ் கொஞ்சம் போரடிக்க ஆரம்பிக்குது..... ஓவர் திகட்டலா இருக்கோனு தோனுது......

Bullet on December 11, 2010 at 1:28 PM said...

தோழி அப்டேட்ஸை புத்தகமாக கொண்டுவரலாம் கார்க்கி.

மகேஷ் : ரசிகன் on December 12, 2010 at 9:36 AM said...

Second one is too good Saga..

 

all rights reserved to www.karkibava.com