Dec 3, 2010

”அது”வாகவே இருக்கட்டும்


 

ஒரு நேரம்..
பெருக்கெடுத்து ஓடுகிறது
கண்மாய் உடைத்து செல்லும்
வெள்ளம் போல..

ஒரு நேரம்
வருடி செல்கிறது
குழலில் இருந்து ஒழுகும்
மெல்லிசையைப் போல

வலமென்றோ இடமென்றோ
கைக்காட்ட முடிவதில்லை.

மேலென்றோ கீழென்றோ
இடைக்கோடிட முடிவதில்லை.

அவள்
குரலின் கதகதப்பையும்
அன்பின் வெதுவெதுப்பையும்
என்னுள்ளே புதைத்துவிடுகிறேன்.
வெடித்து வெளிவரும் நாளில்
மடிந்து போயிருக்க வேண்டும் நான்.

26 கருத்துக்குத்து:

கனாக்காதலன் on December 3, 2010 at 9:17 PM said...

உங்கள் கவிதை மனம் தடவிச் சிறகடிக்கிறது. அருமை நண்பரே !

இராமசாமி on December 3, 2010 at 9:19 PM said...

saga ! wonderfull !

லதாமகன் on December 3, 2010 at 9:22 PM said...

பிளாக்ல கவிதை போட்றது, பால்ல விஷம் கலக்குற மாதிரின்னு பிளாக்கர் மீட்ல என்கிட்ட யாரோ தொப்பி போட்டவரு சொன்னாரு.. அது யாருங்க? ;) :p

அனுஜன்யா on December 3, 2010 at 9:22 PM said...

கவிஞர்கள் சகவாசம் வெச்சுக்காதன்னு சொல்லியாச்சு. கேட்டால் நலம். இல்லாட்டி.. ம்ம், குசும்பனுக்கு breakfast, lunch and dinner நீதான்.

jokes apart, எனக்குப் பிடிச்சிருக்கு (ரொம்ப முக்கியம்) - உன் தோழிக்குப் பிடிச்சிருக்கா என்று கண்டுபிடி. இந்தக் கவிதையை இல்லாவிட்டாலும் உன்னையாவது.

அனுஜன்யா

கார்க்கி on December 3, 2010 at 9:29 PM said...

நன்றி கனாக்காதலன்

நன்றி இராமசாமி

லதாமகன், ஹிஹிஹி. பாலை தயிறாக்க ஒரு துளி விஷம் தேவை. ஆனால் அது ஒரு துளியாகத்தான் இருக்கணும்

அனுஜன்யா, சகா வாசம் மட்டுமல்ல யார் சகவாசமும் வேண்டாமென கவிஞர் ஒதுங்கி நிற்கும்போது இபப்டியெல்லாம் நடக்கத்தான் செய்யும். தோழிக்கு பிடிக்காது. அவளுக்கு எப்பவுமே ஹேப்பி எண்டிங்க் தான் வேணும்,

விக்னேஷ்வரி on December 3, 2010 at 9:40 PM said...

அட, கலக்கலா இருக்கே. யாரெழுதினது.

நிஜமாவே ரொம்ப இதமா இருக்கு கார்க்கி.

vinu on December 3, 2010 at 9:40 PM said...

super sagaaaaaaaaaaaa


koduththuvachavanga unga thozi

king on December 3, 2010 at 9:51 PM said...

saga yenga irunthu sutteenga

மாணவன் on December 3, 2010 at 10:36 PM said...

//அவள்
குரலின் கதகதப்பையும்
அன்பின் வெதுவெதுப்பையும்
என்னுள்ளே புதைத்துவிடுகிறேன்.
வெடித்து வெளிவரும் நாளில்
மடிந்து போயிருக்க வேண்டும் நான்.//

ஒன்னும் பன்னிக்க முடியாது... அருமை அண்ணே,
வரிகள் ஒவ்வொன்றும் உணர்வுகளுடான ரசனை சூப்பர்

தொடருங்கள்.....

சுசி on December 3, 2010 at 10:48 PM said...

:)

Karthik on December 3, 2010 at 10:52 PM said...

Muzhusa puriyalai. Nalla kavithainu nenaikkuren.

அன்பரசன் on December 3, 2010 at 11:11 PM said...

Nice.

அருணையடி on December 3, 2010 at 11:41 PM said...

/குழலில் இருந்து ஒழுகும்/

ஒண்ணா ரெண்டா எட்டு ஓட்டை இருக்கும்போது ஏன் ஒழுகாதுன்னேன்

அருணையடி on December 3, 2010 at 11:43 PM said...

/வலமென்றோ இடமென்றோ
கைக்காட்ட முடிவதில்லை./ம்ஹுஉம் ! ஏ.சி கார்ல போறீங்க போல!

கயல் on December 3, 2010 at 11:44 PM said...

அத்தியாய் பூத்தாலும் வாசத்தில் பாரிஜாதம்...உங்கள் கவிதைகள். அடிக்கடி எழுதுங்கள் கார்க்கி.

அருணையடி on December 3, 2010 at 11:54 PM said...

கார்க்கி! காலா காலத்துல சொல்ல வேண்டியதை சொல்லிடுங்க!

தராசு on December 4, 2010 at 8:52 AM said...

ஹலோ, எங்கியோ போயிட்டீங்க

Anonymous on December 4, 2010 at 9:50 AM said...

எண்டர் தட்டினா அது கவிதையா?

புல்லட்
(எஸ்.ராமகிருஷ்ணன்)

கார்க்கி on December 4, 2010 at 1:10 PM said...

வினு, ஹிஹிஹி.

விக்னேஷ்வ‌ரி, ந‌ன்றி

கிங், :))

ந‌ன்றி மாண‌வ‌ன்

ந‌ன்றி சுசி

கார்த்திக், என்ன‌ப்பா இப்ப‌டி சொல்லிட்ட‌?

ந‌ன்றி அன்ப‌ர‌ச‌ன்.

அருணைய‌டி, என்ன‌வோ இன்னைக்கு நீங்க‌ என் க‌ண்ணுக்கு அம்பா தெரியிறீங்க‌ :)

க‌ய‌ல், ஹிஹிஹி. ந‌ன்றி

த‌ராச‌ண்னே, இன்னும் இந்தோர் போக‌ல‌

அனானி, புல்ல‌ட் அவ‌ர் ஐடில‌தான் வ‌ருவாரு. கிள‌ம்புங்க‌ காத்து வ‌ர‌ட்டும்.

Bullett on December 4, 2010 at 5:39 PM said...

Thanks Karki
Somebody is using my name.

கார்க்கி on December 4, 2010 at 7:05 PM said...

இந்த புல்லட்டும் டூப்ளிகேட்.,

புரொஃபைலே இந்த திசம்பரில்தான் ஓப்பன் செஞ்சிருக்கிங்க. ஸ்பெல்லிங்கும் கரெக்ட்டா இல்லை..

செய்வன திருந்த செய்

தெய்வசுகந்தி on December 4, 2010 at 7:45 PM said...

சூப்பர்!!

சிவா என்கிற சிவராம்குமார் on December 4, 2010 at 8:12 PM said...

கவித! கவித!! கவித!!!

வள்ளி on December 5, 2010 at 6:57 PM said...

பிடிச்சிருக்கு...

புன்னகை on December 6, 2010 at 8:46 AM said...

என்ன சொல்லட்டும்? இது உண்மையாவே தோழிக்காக எழுதினது தானா?

பிரதீபா on December 6, 2010 at 6:59 PM said...

அப்பூ, உடம்பு சரியில்லைங்களா? கவிதை எல்லாம் எழுதறீங்க, அதுவும் நல்லா வேற இருக்கே? நல்ல ஆசுபத்திரியா பாருங்கப்பு !! :)

 

all rights reserved to www.karkibava.com