Dec 27, 2010

வேலையோ வேலை - 3


 

யானை வரும் முன்னே.. மணியோசை வரும் பின்னே என்பார்கள். உங்களை நேர்முகத்தேர்வுக்கு அழைக்கும் முன்னரே உங்களது ரெஸ்யும் நிறுவனத்தின் கைகளுக்கு சென்றுவிடும். ஆக, உங்களைப் பற்றிய முதல் இம்ப்ரெஷனை ஏற்படுத்தப்போவது நீங்கள் அல்ல. உங்களின் CVதான். எனவே ரெஸ்யும் உங்களைப் பற்றி ஒரு நல்ல எண்ணம் ஏற்படும் வகையில் அமைவது முக்கியம். ரெஸ்யும் எழுதுவது ஒரு கலை. இதை இப்படித்தான் எழுத வேண்டும் என்று வரையறுக்க முடியாது. ஏனெனில் உங்களைப் போலவே அதுவும் தனித்தன்மை வாய்ந்தது. ஆனால் எவையெல்லாம் இருக்க வேண்டும், எதையெல்லாம் செய்யக் கூடாது என்று சொல்லலாம்.

ரெஸ்யும் என்பது நீங்கள் இது வரை செய்து வரும் வேலைகள் பற்றிய பட்டியல் மட்டுமல்ல. அது உங்களைப் பற்றியது. உங்களைப் பற்றி என்னவெல்லாம் தெரிய வேண்டுமோ அவையெல்லாம் அதில் இருக்க வேண்டும். பெரும்பாலும் Resume ஆங்கிலத்திலே எழுதப்படுகிறது என்பதால் அது பற்றிய வார்த்தைகளை ஆங்கிலத்திலே காண்போம்.

1) Contact Information  : 

Mail id, Mobile number, Landline number இந்த மூன்றும் இருத்தல் அவசியம். official மெயில் முகவரிகளையும், அலுவலக மொபைல் அல்லது லேண்ட்லைன் எண்ணையும் கொடுக்காமல் இருப்பது நல்லது.

2) Job Objective: 

இது முக்கியம். நீங்கள் எந்த மாதிரி வேலை எதிர்பார்க்கிறீர்கள், உங்களின் vision எல்லாம் தெளிவாக சொல்லப்பட வேண்டும். முடிந்தவரை வேறு ஒரு ரெஸ்யுமில் இருந்து  எடுத்தாளாமல் உங்கள் சொந்த மொழியில் எழுதுங்கள்.

3) Qualification & SKills:

உங்களின் தகுதிகள், திறமைகள் என எல்லாவற்றையும் பட்டியல் இடப்பட வேண்டும். Bulletin formatல் இருந்தால் இடம் மிச்சமாகும். பார்க்கவும் நன்றாக இருக்கும். எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களோ, அது தொடர்பான தகவல்களை முதலில் சொல்லலாம்.

4) Work Experience: 

இப்போது இருக்கும் வேலையில் இருந்து தொடங்கி, முந்தைய அனுபவங்கள் பற்றி எழுதுங்கள். Position, Name of the company, Duration, ஆகியவை ஒவ்வொன்றுக்கும் தரப்பட வேண்டும். அந்த வேலையில் உங்களது Responsibilities மட்டும் பட்டியிலிடாமல் அதில் உங்களின் accomplishments என்னவென்று சொல்வதுதான் சரி. 

உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம். “Redesigning the layout of the shop floor”  என்பது ஒரு responsibility என்று வைத்துக் கொள்வோம். அதை இப்படி எழுதலாம் “Transformed a Poor utilized ,inefficient shop  floor into a smooth-running operation by totally redesigning the layout; this increased the productivity and saved the company thousands of dollars”. இதையே “Redesigning the layout of the shop floor” என்று எழுதினால் முழுமையாகாது

இரண்டு வேலைகளுக்கு நடுவே இடைவெளி இருந்தால் அதை தெளிவாக குறிப்பிட்டு, காரணத்தையும் சொல்லி விடுவது நல்லது. முடிந்தவரை quantifiable terms ஆக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

5) Education :

  பெரும்பாலானவர்கள் தங்களது கல்லூரி தகவல்களை மட்டுமே தருகிறார்கள். இப்போதெல்லாம் நமது 10வது மதிப்பெண்களை கூட கணக்கில் கொள்கிறார்கள். எனவே இந்த இடத்தில் 10வது முதல், கடைசியாக பயின்ற/பயிலும் பாடம் வரை தெளிவாக சொல்ல வேண்டும். வெளிநாடுகளில் ஏதேனும் பட்டம் வாங்கியிருந்தால், அதை இந்திய படிப்பிற்கு இணையான தகவ்ல்கள் கொண்டு விளக்கப்பட வேண்டும். இந்த டேட்டாக்களை Tabular formatல் தந்தால் படிக்க வசதியாக இருக்கும் . கீழ்கண்ட தகவல்கள் கொடுப்பது நம்பகத்தன்மையை அதிகரிக்கும்

1) Course
2) Joining year & year of passing
3) Marks scored
4) Instituion / Board
5) Specialization
6) Achievements

இந்த 5 பிரிவுகளும் நிச்சயம் இருக்க வேண்டும். இன்னும் நம் வேலைக்கேற்ப பிரிவுகள் சேர்க்கலாம். அதே போல சிலர் பல நிறுவனங்களில் வேலை செய்திருந்தாலும் ஒரே வேலையைத்தான் செய்திருப்பார்கள். அவர்கள் Responsibilitiesஐ மொத்தமாக பட்டியிலிட்டுவிட்டு, Companies worked என்பதை தனியாக சொல்லி விடலாம். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனிப்பட்ட வேலைப் பற்றிய தகவல்களை தர வேண்டியதில்லை. Front office admin, Saftey officers போன்றவர்கள் இந்த மாதிரியான ரெஸ்யும் தயார் செய்யலாம்.

  செய்ய வேண்டியவை பார்த்தாயிற்று. இனி செய்யக் கூடாதவை என்னவென்று பார்க்கலாம்.

1) இது உங்களின் ரெஸ்யும். எனவே “ I have worked“ (நான்) என்று எழுதுவது தேவையில்லாதது. எந்த இடத்திலும் இப்படி வரமால் பார்த்துக் கொள்ளுங்கள்.

2) உங்கள் வேலைக்குத் தொடர்பில்லாத Hobbies தேவையே இல்லை. புகைப்படத்துறையில் வேலைக்கு விண்னப்பிக்கிறவர் Photography தொடர்பான Hobby யை சொல்லலாம். மற்றவர்களுக்கு தேவையில்லை.

3) உங்களின் மதம், சாதி சார்ந்த தகவல்களுக்கு ரெஸ்யுமில் இடமில்லை. தேவைப்பட்டால் கேட்கும் போது தரலாம். ஆனால் ரெஸ்யுமில் நிச்சயம் இவை தேவையில்லாத விஷயங்கள்

4) உங்கள் பெயர் Common Name ஆக இருந்தால் பாலினம் குறித்து சொல்ல வேண்டும் அல்லது முதல் பக்கத்திலே Mr.Karki அல்லது Ms.Kamla என்று சொல்லி விடலாம்.

5)  ரெஸ்யும் பார்க்க/படிக்க எளிமையாய் இருக்க வேண்டும். எனவே எழுத்துருக்கள்(Fonts) எளிமையாய் இருக்க வேண்டும். Arial font, 10Pt பொதுவாக பயன்படுத்தப்படும் எழுத்துரு. வரிகளுக்கு இடையேயான இடைவெளி 1.5 ஆக இருந்தால் தெளிவாக இருக்கும். பத்தித்தலைப்புகளை Bold & Underline செய்தால் போதும். அளவைக் கூட்டத் தேவையில்லை.

6) தன்னைப் பற்றி சொல்லிக் கொள்வது எல்லோருக்குமே பிடித்தமான செயல்தான். ஆனால் Innovative, Self Starter, Team Player என்பது போன்ற பொதுவான வார்த்தைகள் காலாவாதியாகி கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. Linked in blogல் வந்த இந்தப் பதிவு அதைப் பற்றி விரிவாக அலசுகிறது. விருப்புமிருப்பவர்கள் படித்துக் கொள்ளலாம்.

ரெஸ்யூமை அடுத்த வாரத்திற்குள் தயார் செய்து கொள்ளுங்கள். அடுத்த வாரம் எங்கே, எப்படி எல்லாம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று பார்ப்போம்

________________

End of Part - 3

12 கருத்துக்குத்து:

Anonymous said...

தலைவா ..,உனக்கு கோடி புண்ணியம் ,,,

காவேரி கணேஷ் on December 27, 2010 at 11:24 PM said...

அருமையான தகவல்கள்.

இதுகுறித்து கல்லூரியில் உங்களின் வகுப்புக்கு ஏற்பாடு செய்தால், நிறைய கடைசிவருட மாணவர்கள் பயன்பெறுவர்.

RaGhaV on December 28, 2010 at 12:20 AM said...

:-)))

சுசி on December 28, 2010 at 1:04 AM said...

தொடருங்க. அருமையான பகிர்வு.

மாணவன் on December 28, 2010 at 5:53 AM said...

பயனுள்ள தகவல்களை தெளிவாக சொல்லியிருக்கீங்க அண்ணே அருமை,

தொடரட்டும் உங்களின் இந்த பொன்னான சேவை

இதன்மூலம் பலர் நிச்சயம் பயனடைவர்

நன்றி

அன்புடன் அருணா on December 28, 2010 at 9:14 AM said...

மீண்டும் ஒரு பூங்கொத்து!

taaru on December 28, 2010 at 10:06 AM said...

// Ms.Kamla என்று சொல்லி//
சகா அப்போ!!! அம்மாகிட்ட சொல்லி விடலாமா??
jokes apart... நெறையா எழுதுங்க... பயன் பெறுகிறோம்...

பொன்கார்த்திக் on December 28, 2010 at 11:26 AM said...

சகா கார்க்கி சரி அந்த கமலா யாரு?

sivakasi maappillai on December 28, 2010 at 12:13 PM said...

நல்ல பதிவு.... உபயோகமாக உள்ளது

கார்க்கி on December 28, 2010 at 3:29 PM said...

ந‌ன்றி தில்லுமுல்லு

ந‌ன்றி காவேரி க‌ணேஷ்

ராக‌வ், ந‌ல‌மா?

ந‌ன்றி சுசி

ந‌ன்றி மாண‌வ‌ன்

ந‌ன்றி டீச்ச‌ர்

டாரு, :)))

கார்த்திக், ஹேஹே..ஹாஹாஹா..ஹோஹோஹோ

ந‌ன்றி மாப்பிள்ளை

cc on December 29, 2010 at 1:00 AM said...

I would like to add 2 more points, If it's OK with you:
1. I see resumes with lots of spelling mistakes, please spell check before you circulate.
2. Often times resumes are copied and it holds the name of the original author in properties (word doc), so always remember to check/change before circulating.

கார்க்கி on December 29, 2010 at 9:17 AM said...

thanks CC..

these are basic formatting, but as u said many people miss this. I cant add these in post now from office. Will do it this eevning..

really valid points..

 

all rights reserved to www.karkibava.com