Dec 20, 2010

வேலையோ வேலை - 2


முதல் அத்தியாயம்
_____________
    இந்த வாரம் நாம் இருக்கும் வேலையை பற்றியும், நிறுவனத்தை பற்றியும் என்னவெல்லாம் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்று பார்ப்போம்.பொதுவாக நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில் முதன்மையானது “what is your roles & responsibilities?”. இதற்கு பதில் சொல்வது சற்று சிக்கலான விஷயம். இருக்கும் எல்லா வேலையும் நானே செய்கிறேன் என்ற ரீதியில் சொல்வது தவறு. அல்லது நாம் தினமும் செய்யும் வேலைகளை மட்டும் ப‌ட்டிய‌லிடுவ‌தும் தவறு. பிறகெப்படி சொல்லலாம்? ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

    ஷிவா ஒரு உற்பத்தி நிறுவனத்தில் உதவி மேலாளராக  பணிபுரிகிறார். அந்நிறுவனம் உற்பத்தித் திறனுக்கு (production techniques) பிரசித்தி பெற்றது. Press Shop என்ற பிரிவில் கிட்டத்தட்ட 100 தொழிலாளர்களுக்கு ஷிவா மேற்பார்வையாளர். இதே போல் மற்ற இரண்டு ஷிஃப்டுகளுக்கும் இரண்டு மேற்பார்வையாளர்கள் உண்டு. அவரவர் ஷிஃப்ட்டில் நடக்கும் உற்பத்தி, தரம், பாதுகாப்பு(சேஃப்ட்டி) போன்ற‌வ‌ற்றிற்கு அவரவரே பொறுப்பு.  ஷிவா  ஒரு நேர்முகத்தேர்வுக்கு சென்றார். அது ஒரு பன்னாட்டு தானியங்கி நிறுவனம். தேர்வில் அவரது வேலையைப் பற்றி கேட்ட போது அவரே production, quality, safety, technical upgradation, planning என எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதாகவும், மற்ற இரண்டு மேற்பார்வையாளர்கள் இவரது சொற்படியே வேலை செய்வதாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால் அது உண்மையில்லை. இதே வேலைக்கு இவருடன் பணிபுரியும் விஜய் என்கிற இன்னொரு மேற்பார்வையாளரும் சென்றிருக்கிறார். அவரிடம் கேட்ட போது அவர் முதலில் தங்கள் நிறுவன Hierarchy யை சொல்லியிருக்கிறார்.
Plant head
Production ManagerPlanning ManagerQuality ManagerSafety ManagerPaint Shop Manager
Press ShopAssemblyTool Room
3                        3                        2

   இந்த படத்தில் பிரஸ் ஷாப்ப்பில் இருக்கும் மூன்று உதவி மேலாளர்களில் ஒருவர் தான் விஜய், ஷிவா. மற்றபடி பிளானிங், தரம், பாதுகாப்பு போன்றவற்றிர்க்கு தனித்தனி மேலாளர்கள் உண்டு. இதை விவரித்த பின் விஜய்க்கு தன் வேலை குறித்து பேசுவது எளிதானது. தனது வேலையில் அவர் செய்த முக்கியமானவற்றை பட்டியிலிட்டார். அதாவது தான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை சொல்லாமல், என்னவெல்லாம் செய்தார் என்பதை சொன்னார்.

1) எனது ஷிஃப்ட்டில் 4500 பேனல்கள் உற்பத்தி செய்ய வேண்டும்
(I am responsible for output 4500  panels / shift)


2) எந்தவிதமான விபத்துகளும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
(I am responsible for zero harm. That is no accident)


3) உற்பத்தியையும், தரத்தையும் கூட்ட, வேண்டியதை செய்ய வேண்டும்.
( I am responsible for improvements which increase productivity and quality)


இப்படி கதையளக்காமல் விஜய் சொன்னதை பார்ப்போம்.

1)  With the help of operators, We have changed the product flow slightly which increased the output by 10% ie, 5000 panels/shift

2) We have a safety track record of 10000 hrs of No accident.

3) Initiated KAIZEN acitivites. Motivated team to implement 52 kaizens in last year. And our team has been awarded  for BEST IMPROVEMENT of the year by management.

  இதை கேட்கும்போதே தேர்வாளர்களுக்கு எல்லாம் புரிந்துவிடும். எந்த பதிலும் சந்தேகத்துக்கு இடமளிக்கவில்லை. உற்பத்தி எத்தனை சதவீதம் உயர்ந்தது என்று கேட்க கூட விடாமல் அதையும் சொல்லியிருக்கிறார் விஜய். இது போன்ற பதில்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள். முடிந்தவரை நாம் என்ன செய்தோம் என்று சொல்கிறோமோ அதன் முடிவை சொல்லிவிட வேண்டும். அவர்கள் கேட்ட பின் சொல்வதில் நம்பிக்கையின்மை வர வாய்ப்பிருக்கிறது. விஜய் பேசியதை கவனித்தால் இன்னொரு முக்கியமான விஷயம் புலப்படும். எங்கேயுமே அவர் நான் இதை செய்தேன் என்று சொல்லவில்லை.  ஆப்பரேட்டர்கள் உதவியுடன் செய்ததாக சொல்லியிருக்கிறார். குழுவினருடன் இணைந்து KAIZEN  செய்ததாக சொல்லியிருக்கிறார். அதாவது Team player என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார். 100 பேரை சமாளிக்க team handling abilities தான் முக்கியம். இந்த வேலைக்கு அடிப்படையே அதுதான். I am team player என்று ரெஸ்யுமேவில் மட்டும் குறிப்பிடாமால், வாயால் சொல்லாமல் நிறுவியிருக்கிறார். ஆக, இவையெல்லாம் முக்கியமான விஷயங்கள். நேர்முகத்தேர்வை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை தனியே விரிவாக பார்க்கவிருக்கிறோம்.இங்கே நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது, நம் வேலையைப் பற்றி நாம் என்ன சொல்கிறோம், எப்படி சொல்கிறோம் என்பதே.

   விஜயிடம் கேட்கப்பட்ட அடுத்த கேள்வி அவர் ஏன் இந்த நிறுவனத்தில் சேர விரும்புகிறார் என்பது. இருக்கும் நிறுவனத்தில் ஏதாவது பிரச்சினையா என்றும் கேட்டார்கள். ”ஆட்டோமொபைல் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் துறை. இப்போது இந்தியா உலகில் ஏழாவது இடத்தில் உள்ளது. 2040க்குள் அது முதல் மூன்று இடங்களுக்கும் சென்றுவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இதற்கு பிரகாசமான எதிர்காலம் நிச்சயம் இருக்கிறது. மேலும் தானியங்கி நிறுவனங்கள் பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனமாக இருப்பதால் உலகளவில் சிறந்த உற்பத்தி முறையை அவர்கள் கையாள்வார்கள். அதை தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். நான் இப்போது வேலை செய்யும் நிறுவனம் நல்ல நிலையில் இருந்தாலும், உற்பத்தி முறைகளில் தானியங்கி நிறுவனங்கள் அளவுக்கு இல்லை. இதுதான் நான் வேலை மாறுவதற்கான முக்கிய காரணங்கள்” என்றார் விஜய்.

   இதை படிக்கும்போது அவர் சொன்ன காரணங்கள் உங்களுக்கு திருப்தியாக இருந்ததா? ஆம் எனில் இதே போன்று நீங்கள் இருக்கும் துறையின் வளர்ச்சி விகிதம், எதிர்கால திட்டங்கள் குறித்து எவ்வளவு விஷயம் உங்களுக்கு தெரிகிறது என்று யோசித்து பாருங்கள். அதோடு கீழ்கண்ட கேள்விகளுக்கு விடை தேடிக் கொள்ளுங்கள்.

1) உங்கள் நிறுவன ஹையரார்க்கியில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?
2) உங்கள் வேலையின் அடிப்படையான தேவையென்ன?
3) அதற்கு தொழில்நுட்ப ரீதியான தேவைகள் என்ன?
4) அந்த வேலையை திறம்பட செய்யத் தேவையான charecterstics என்ன?
5) உங்கள் வேலையின் KRA, Key result Areas என்ன?
6) இந்த வேலையில் இருந்து ஒரு படி மேலே செல்ல இன்னும் என்னவெல்லாம் உங்களுக்கு தேவை?
__________________
End of Part - 2

18 கருத்துக்குத்து:

பொன்கார்த்திக் on December 20, 2010 at 11:17 PM said...

me the 1st..

பொன்கார்த்திக் on December 20, 2010 at 11:21 PM said...

சகா சூப்பரு...

அதெல்லாம் விடுங்க நீங்க நல்லவரா கெட்டவரா???

காவேரி கணேஷ் on December 20, 2010 at 11:38 PM said...

அடுத்த புத்தகம் ரெடியோ?

chandru2110 on December 21, 2010 at 12:03 AM said...

நல்லா புரியும்படி சொல்லிருக்கீங்க. நல்லது.

ம.தி.சுதா on December 21, 2010 at 1:21 AM said...

நல்ல மொழிநடையில் சொல்கிறிர்களே அருமை...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

சுசி on December 21, 2010 at 4:28 AM said...

நல்லா எழுதி இருக்கிங்க கார்க்கி..

மாணவன் on December 21, 2010 at 5:54 AM said...

தெளிவாகவும் சிறப்பாகவும் சொல்லியிருக்கீங்க அண்ணே

தொடர்ந்து கலக்குங்க....

philosophy prabhakaran on December 21, 2010 at 6:13 AM said...

Present...

joe vimal on December 21, 2010 at 11:41 AM said...

super karki informative and useful keep it going

தர்ஷன் on December 21, 2010 at 11:46 AM said...

அருமை உபயோகமானது
நிச்சயம் வெகு விரைவில் உங்கள் புத்தகம் ஒன்று வெளிவரப் போகின்றது என்பதற்கு கட்டியம் கூறுகிறது இந்தப் பதிவு

Karthik on December 21, 2010 at 1:19 PM said...

:))

வள்ளி on December 21, 2010 at 2:13 PM said...

நன்றி கார்க்கி!

தராசு on December 21, 2010 at 2:55 PM said...

சூப்பர் தல. கலக்குங்க

அறிவிலி on December 21, 2010 at 4:09 PM said...

அருமை.

ஆதிமூலகிருஷ்ணன் on December 21, 2010 at 4:57 PM said...

என்னதிது கெட்டபழக்கம்? ஒழுக்கமான பதிவெல்லாம் எழுதிகினு.? சே.!

நர்சிம் on December 21, 2010 at 6:32 PM said...

//தர்ஷன் on December 21, 2010 11:46 AM said...

அருமை உபயோகமானது
நிச்சயம் வெகு விரைவில் உங்கள் புத்தகம் ஒன்று வெளிவரப் போகின்றது என்பதற்கு கட்டியம் கூறுகிறது இந்தப் பதிவு
//

அதேதான்

மவ ராசன்...... on December 21, 2010 at 6:51 PM said...

அருமையான பதிவு , வேலைக்கு செல்ல துண்டுகிறது உங்கள் பதிவு...


ஹி ஹி....

அன்புடன் அருணா on December 21, 2010 at 9:20 PM said...

பூங்கொத்து!

 

all rights reserved to www.karkibava.com