Dec 14, 2010

வேலையோ வேலை


 

  வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரனா மாறிடுவேன்னு சொல்ற மாதிரி, பதிவெழுதுறதுன்னு வந்துட்டா பர்காதத்தா மாறுவதே நம் வழக்கம். பதிவை பொறுத்தவரை எந்த வரையறையும் இல்லாமல் எல்லா அலப்பறையும் கொடுத்து கொண்டுதானிருக்கிறேன். புட்டிக்கதைகள் மொக்கைகென்றே எழுதினேன். தோழி அப்டேட்ஸ் உள்ளூர ஊறிக்கொண்டிருந்த காதலை சொல்ல எழுதினேன். www.600024.com என்ற இணையத்தளத்தில் விஜயைப் பற்றி “அழகிய தமிழ் மகன்” என்ற தொடரும் எழுதி வருகிறேன்.  நண்பர் மோகன்குமார்,  துறை சார்ந்த விஷயங்கள் தமிழில் அவ்வளவாக இல்லை. எனவே நாம் செய்யும்  வேலை தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாமே என்று சொன்னார். நான் ஒரு மனிதவள நிறுவனத்தில் (Manpower Consultant) பணிபுரிகிறேன். எனவே என் வேலை தொடர்பான விஷயங்கள் குறித்து எழுதலாம் என நினைத்தேன் எப்போது வேலை மாற வேண்டும், அதற்கு என்னென்ன செய்யலாம், நல்ல ரெஸ்யும் எப்படி தயாரிப்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் எனக்கு தெரிந்தவற்றை எந்த மொக்கையோ, நகைச்சுவையோ இல்லாமல் கொஞ்சம் சீரியஸாக அலசலாம்.  மீண்டும் ஒருமுறை நண்பர் மோகன்குமாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

_______________________________________

  மதன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடாக வேலை செய்கிறார். வேலையில் படு கெட்டி என கடந்த 5 வருடமாக பெயர் வாங்கியிருக்கிறார். சான்றிதழும் கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால் மதன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு மட்டும் கிடைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. மதனின் நண்பன் மூலம் நாங்கள் அறிமுகமானோம்.  வேலைப் பற்றியே அதிகம் பேசினார். பேச்சுவாக்கில் எப்படியும் இன்னும் 2 வருடங்களில் மேலாளர் ஆகிவிடுவேன் என்றார். அவர் வேலை செய்வது ஒப்பீட்டளவில் சின்ன நிறுவனம் தான். இவர் டீமில் இருக்கும் மேலாளர் நகர்ந்தால்தான் இவருக்கு அந்த சீட் என்பது அவர் பேசியதில் புரிந்தது. காத்திருக்க மதனும் தயாராகவே இருக்கிறார்.

  மதன் பரவாயில்லை. அருணின் நிலை இன்னும் மோசம். ஒரு பன்னாட்டு தானியங்கி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். இருந்தார் என படித்து விடுங்கள். மனதுக்கு பிடித்த வேலை. கையல்ல, பாக்கெட் நிறைய சம்பளம் என இருந்தவரை சென்ற மாதம் ஆட்குறைப்பில் மேன்ஷனுக்கு அனுப்பி விட்டார்கள். ஆம். வேலைப் போன கஷ்டத்தில அருண் வீட்டுக்குப் போகவில்லை. நண்பர்களின் மேன்ஷனில்தான் இருக்கிறார். அவரது நிறுவனத்தில் ஒரு வாரம் மட்டுமே நேரம் தந்திருக்கிறார்கள் . அதற்குள் வேறு வேலை எப்படி தேடுவது? அருணிடம் அவரது புதிய பயோடேட்டா அப்போது கைவசமோ, கணிணிவசமோ இல்லை. கடைசியாக 3 வருடங்கள் முன்பு தயார் செய்ததுதான் .  எப்படியும் ஒரு 15 வருடம் இங்கே இருக்கலாம் என்று முடிவு செய்திருந்ததாக சொன்னார்.

மேற்கண்ட சம்பவங்களில் அருண் அல்லது மதன் நீங்கள் தான் என்றால் மேற்கொண்டு தொடருங்கள். நீங்கள் இல்லை என்றால் இன்னொரு முறை படித்து இந்த சூழ்நிலை உங்களுக்கு வரக்கூடுமா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பெரும்பாலானவர்கள் இருக்கும் வேலையில் பெரிய பிரச்சினை என்று வரும்வரை வேலை மாறுவது பற்றி யோசிப்பதும் இல்லை. அதற்காக தயாராவதும் இல்லை. கடைசிக்கட்ட நெருக்கடியில் கிடைக்கும் இன்னொரு சுமாரான வேலையில் சேர்ந்து பின் அதிலும் அரைமனதுடனே காலம் கழிக்கிறார்கள். வேலை மாற்றம் என்பது தவறேயில்லை, முறையாக இருக்கும் வேலையில் இருந்து மாறினால். எனவே எப்போதும் நம்மை அடுத்த மாற்றத்திற்கு தயாராக வைத்திருப்பது அவசியமாகிறது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள் “Love your job. Not your company.Because you never know when it will stop loving you”. 

சரி. நம்மை எப்படி தயாராக வைத்திருப்பது? அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் இந்நேரம் உங்களுக்கு எழுந்திருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் சரியான திசையில் பயணிக்கிறீர்கள். உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் முன்பு சில விஷயங்களை உறுதிப்படுத்திவிடுவது நல்லது. எந்தத்துறை வேலையென்றாலும் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 3 - 5  வருடங்கள் வேலை செய்வது ஒரு ஸ்திரத்தன்மையை கொடுக்கும். அப்படியில்லாமல் அடிக்கடி வேலை மாறுவதை Job hopping என்பார்கள். அது உங்கள் சந்தை மதிப்பை குறைத்துவிடும். ஏதேனும் பிரத்யேக காரணத்தினால் மாறியிருந்தால் வேறு. அடிக்கடி மாறாமால் இருப்பது நல்லது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கேள்விகளுக்கு வருவோம்.

கீழ்கண்ட கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிப் பாருங்கள்.

1) அடுத்த 2 வருடங்களில் என்னவாக இருக்க வேண்டும் என்ற திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?

2) கடைசியாக எப்போது உங்கள் Cvஐ புதுப்பித்தீர்கள்?

3 உங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தெரியுமா? புதியதாக போட்டியாளர்கள் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதை அறீவிர்களா?

4) உலகளவில், தேசிய அளவில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறையின் வளர்ச்சி மதிப்பீடு பற்றி தெரியுமா?

5) உங்கள் பாஸ்போர்ட் காலாவதி தேதி என்ன?

இதற்கான பதில்கள் உங்களை நீங்களே சுயபரிசோதனைக்கு உட்படுத்தத்தான். இதில் 3வது மற்றும் 4வது கேள்விகளுக்கு ஸ்திரமான பதில் தெரியாதவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். என்னால் முடிந்தளவு தகவல்கள் சேகரித்து தருகிறேன்.

கருத்துகள், சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் iamkarki@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

_____________

End of part - 1

25 கருத்துக்குத்து:

Kaarthik on December 14, 2010 at 11:15 PM said...

Good to see a different attempt from u. Keep rocking :)

cc on December 14, 2010 at 11:22 PM said...

Hi, Can you also please add how the resumes gets picked and reaches the hiring manager? It would be really good if you can add that in your future posts as I believe that you guys are really the bridges to take the resumes to the hiring manager. Many of my friends believe that once if it reaches the manager, they are confident enough that they can market themselves in personal interview. But the first step really seems to be an issue especially in this kind of dynamic economy. FYI: I still have my job safe and sound. :-)

Thanks
Nandita

வினோ on December 14, 2010 at 11:41 PM said...

அருமையான பதிவு கார்கி.. எனது நண்பர்களை தொடர்ந்து படிக்க சொல்கிறேன். நானும் தான் :)

இராமசாமி on December 14, 2010 at 11:56 PM said...

Thanks saga... Very usefull one for me.. keep writting....

bandhu on December 15, 2010 at 12:10 AM said...

அற்புதமான பதிவு. தொடருங்கள்!

கனவுகள் விற்பவன் on December 15, 2010 at 12:48 AM said...

உபயோகமான பதிவு.மிக்க நன்றி கார்க்கி..தொடருங்கள்.

RaGhaV on December 15, 2010 at 12:59 AM said...

Nice one karki..

பிரதீபா on December 15, 2010 at 1:07 AM said...

திடீர்னு கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க போல.. வேலை, எதிர்காலம்ன்னு இறங்கிட்டீங்க.. :) நல்ல விஷயம் ஆரம்பிச்சிருக்கீங்க கார்க்கி. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

//கடைசியாக எப்போது உங்கள் Cvஐ புதுப்பித்தீர்கள்?// ஹி ஹி ஹி

சுசி on December 15, 2010 at 4:54 AM said...

அருமையான முயற்சி கார்க்கி.. வாழ்த்துகள்.. மனமார்ந்த..

மாணவன் on December 15, 2010 at 5:55 AM said...

அண்ணே சூப்பர்,

//எனக்கு தெரிந்தவற்றை எந்த மொக்கையோ, நகைச்சுவையோ இல்லாமல் கொஞ்சம் சீரியஸாக அலசலாம்//

உங்களின் இந்த பொன்னான பணி தொடர்ந்து மென்மேலும் சிறக்க எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்...

தொடர்ந்து கலக்குங்க.......

நன்றி

THOPPITHOPPI on December 15, 2010 at 9:33 AM said...

அருமையான பதிவு
கேள்விகளும் அருமை

வள்ளி on December 15, 2010 at 10:44 AM said...

// இதில் 3வது மற்றும் 4வது கேள்விகளுக்கு ஸ்திரமான பதில் தெரியாதவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். என்னால் முடிந்தளவு தகவல்கள் சேகரித்து தருகிறேன்//

எப்பிடிங்க என் பாஸ்போர்ட் காலாவதியாகிற தேதியை நீங்க சொல்லுவீங்க? :)

தராசு on December 15, 2010 at 10:53 AM said...

வாழ்த்துக்கள்.

ஆனா, நாங்களும் ஒரு காலத்துல விண்ணப்பம் அனுப்பிச்சோம், சாமி எப்பத்தான் கண்ணை தொறக்குமோ......

செங்கோவி on December 15, 2010 at 11:03 AM said...

மிகவும் உபயோகமான பதிவு..நன்றி.

--செங்கோவி
சாரு நிவேதிதாவின் ’தேகம்’ – ஒரு பார்வை

அஹமது இர்ஷாத் on December 15, 2010 at 11:14 AM said...

Good Post Karki..

மோகன் குமார் on December 15, 2010 at 11:29 AM said...

Thanks for the thanks. :))

நர்சிம் on December 15, 2010 at 4:15 PM said...

வாழ்த்துகள் சகா.. நன்றி மோகன்குமார்.

நர்சிம் on December 15, 2010 at 4:16 PM said...

//// இதில் 3வது மற்றும் 4வது கேள்விகளுக்கு ஸ்திரமான பதில் தெரியாதவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். என்னால் முடிந்தளவு தகவல்கள் சேகரித்து தருகிறேன்//

எப்பிடிங்க என் பாஸ்போர்ட் காலாவதியாகிற தேதியை நீங்க சொல்லுவீங்க? :)//

ரைட்ட்ட்ட்ட்ட்டு

மோகன் குமார் on December 15, 2010 at 4:59 PM said...

முதல் பகுதி ரொம்ப அருமையா வந்திருக்கு. நல்ல தொடராகவும், புத்தகமாகவும் வாழ்த்துகள். ராயல்டியில் (இதை யாராவது கண்ணில காட்டுறாங்கன்னு நினைக்கிறீங்க??) ஒரு பகுதி குடுக்கனும் மறந்திட வேண்டாம் :))

நரசிம் கேட்டது நியாமான டவுட்டு :))

அன்புடன் அருணா on December 15, 2010 at 5:04 PM said...

பூங்கொத்து!!!

தீப்பெட்டி on December 15, 2010 at 5:43 PM said...

பயனுள்ள பதிவு..

கார்க்கி on December 15, 2010 at 9:58 PM said...

அனைவருக்கும் நன்றி. மெயிலிலும், ஃபோனிலும் வந்த உற்சாக வரவேற்பு மகிழ்ச்சியையும் கூடவே பொறுப்பையும் தந்திருக்கின்றன. முடிந்தவரை விரிவாகவே எழுத வேண்டும். எழுதுவேன்
______________

@நந்திதா,
பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்கள் சொன்னது மிக முக்கியமான பாயிண்ட். ஜாப் போர்ட்டல் குறித்தும், அதில் விண்ணப்பிப்பது குறித்தும் தனி அத்தியாயமே எழுத எண்ணியிருக்கிறேன். உங்க வேலை சவுண்ட் என்றாலும் ரெஸ்யும் தயாரா வச்சிருப்பிங்கன்னு நம்பறேன் :)
_________________

கேள்விகளின் சீரியல் எண்ணில் ஒரு தவறு. 3 என்று இரண்டு முறை டைப்பியதால் 4 காணாமல் போனது. அந்த குழப்பத்தில் என் பாஸ்போர்ட் பற்றி உனக்கு எப்படி தெரியும்னு பிடிச்சிட்டிங்க. ஹிஹிஹி..

________________

தராசண்ணே, அப்ப நிலைமை வேறு :).. உங்க புரொஃபைல் பத்திரமாய் என்னிடம். விரைவில் வேலையுடன் கூப்பிடறேன்

sivakasi maappillai on December 16, 2010 at 1:30 PM said...

இந்த பையனுக்குள்ள என்னமோ இருக்கு பாரேன்.....

டெரர்ரால்லாம் எழுதுது?/\\\

நிச்சயம் மிகவும் பயனான பதிவு.... தொடருங்கள் நண்பா...

Joseph on December 17, 2010 at 7:58 PM said...

நல்ல பதிவு சகா.
நீ ஆரம்பிச்சுட்டா ஒழுங்கா முடிச்சுருவன்னு நம்பிக்கை இருக்கு. ரொம்ப இடைவெளி விடாம வாரத்துக்கு ரெண்டு பதிவு போட்டு முடி. அப்ப தான் சீக்கிரம் இத புத்தகமா படிக்கலாம்

நான் என் CV அப்டேட் பண்ணி 8 மாசமாச்சு. ஆனா ஒன்னு எப்ப என்ன வேலை செய்யிறேன்னு ஒரு எக்ஸெல்ல அப்டேட் பண்ணிட்டே இருக்கதால CVயில என்னால ஈஸியா செய்து முடித்த ப்ராஜெக்ட்ஸ் அப்டேட் பண்ணிட முடியும்.

இத கூட ஒரு விசயமா சொல்லலாம். எல்லாரும் எப்பவும் சிவி அப்டேட் பண்ணிட்டே இருக்க முடியாது. ரொம்ப நாள் கழிச்சு அப்டேட் பண்ண போறப்ப என்னென்ன ப்ராஜெக்ட்ஸ் செஞ்சோம், எதையெல்லாம் சிவி ல குறிப்பிடலாம்னு தெரியாம நிறைய பேரு தவிப்பத பார்த்துருக்கேன்.

எப்பவும் ஒரு எக்ஸெல் ஃபைல் வைச்சுக்கிட்டு அதுல செய்யிற எல்லா ப்ராஜெக்ட் டீட்டெய்ல்ஸ்ம் அப்டேட் பண்ணிக்கிட்டே வந்தா அத வைச்சு ஈஸியா சிவி அப்டேட் பண்ணிடலாம்.

யாத்ரீகன் on December 21, 2010 at 5:08 AM said...

அருமையான தொடக்கம் கார்க்கி... என்னடா 2வது பதிவு எழுதும்போது இப்படி ஒரு பின்னூட்டமானு யோசிக்கிறீங்களா ? :-) இப்போதான் உங்க 2வது பாகத்துக்கான twitter poster மூலமா இதை பார்க்குறேன்.

அருமையான flow... ஆரம்பதித்த வேகத்தில் இரு கட்டுரைகளையும் படித்துவிட்டேன், படிக்கும்போதே அதில் வரும் விஷயங்களை என்னோடு சம்பந்தப்படுத்திக்கொண்டே வர முடிந்தது. தொடர்ந்து வாருங்கள்.. நன்றி :-)

 

all rights reserved to www.karkibava.com