Nov 30, 2010

உனக்கு நல்ல சாவே வராதுடா


 

மச்சி.. பாலாஜி பேசறேண்டா. எப்படி இருக்க?

அடேய்… சொல்லுடா..

உனக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ். ஒரு ஃபிகர் எனக்கும் மடங்கிடுச்சு மச்சி.

நிஜமாவாடா? பார்த்து மடக்கி மடக்கி கூன் விழ வச்சிடாத.

போதும்டா உன் நக்கலு. இப்ப எனக்கு ஒரு ஹெல்ப்பு வேணும்.

அப்படி வா மேட்டருக்கு. என்ன உன் ஆளுக்கு நான் ஏதாவது தரணுமா?

கரெக்ட். ஆனா ஐடியா மட்டும் நீ தா. கொடுக்கிற வேலையை நான் பார்த்துக்கிறேன்.

உஷாருடா நீ. ஆளு எப்படி இருக்கும்? சுமாரா இருக்குமா?

அதெல்லாம் எதுக்கு? பர்த்டே கிஃப்ட் தரணும். அதுக்கு மட்டும் ஐடியா சொல்லு

இல்லடா. எப்படி இருப்பான்னு தெரிஞ்சா அதுக்கேத்த மாதிரி சொல்லுவேன்

ம்ம். பொய்யெல்லாம் சொல்லல. இந்த ஊரிலே அவதான் அழகுன்னு சொல்லலாம்.

அட. அப்ப ஒண்ணு பண்ணு. ஒரு குளோப் வாங்கி பேக் பண்ணி “உனக்கான பரிசை உலகெங்கும் தேடினேன். கிடைக்கவில்லை. அதனால் உலகையே பரிசாக தருகிறேன்னு எழுதிக் கொடு.

இதெல்லாம் உன் பிளாகிலே நான் எப்பவோ படிச்சிட்டேன். நல்லாதானிருக்கு. வேற எதுவும் சொல்லு.

எனக்கு ஃபீல் வரணும்டா. அவள பத்தி சொல்லு

ஜீன்ஸ் போட்ட ஜாஸ்மிண்டா அவ. பழமையும், புதுமையும் கலந்த பதுமை.

கொஞ்சம் ஓவராத்தான் போற..ம்ம். ஒரு மொபைல் வாங்கி இளையராஜா பாட்டு இருக்கிற மெமரி கார்டோடு கொடு. நீ சொல்ற மாதிரி ஒரு ஃப்யூஷனா இருக்கும்.

சூப்பர் ஐடியா. ஆனா அவ ரகுமான் ஃபேன். சோ, வேற சொல்லு மச்சி.

சினிமா பார்ப்பாளா?

ம்ம். நிறைய

அப்போ சத்யம் FUEL CARD வாங்கி 2000 ரூபாய்க்கு ஃபில் பண்ணிக் கொடு. எப்போ சினிமா போனாலும் உன் ஞாபகம் வரும். உன்னையே கூட்டிட்டு போவா. நீ கொடுக்கிற காசுல பாதி நீ படம் பார்த்து கழிச்சிடலாம்.

நீ வேற மச்சி. அவ கல்யாண சிடியை கூட அவ திருட்டு சிடியா வாங்கித்தான் பார்ப்பா.

அடேய். என்ன பொண்ணுடா அவ?

அப்படி சொல்லாத மச்சி. நீ ஒரு தடவ பார்த்த… வேணாம்ப்பா. நீ ஐடியா மட்டும் கொடு.

என்னடா ஓவரா புகழுற. அவ்ளோ அழகா இருந்தா பேசாம ஒரு கிஸ் கொடுத்திடேன்.

இன்னும் அந்தளவுக்கு போகல மச்சி. எனக்கும் ஆசைதான். இருந்தாலும் அவ வாயால லவ்வ கன்ஃபார்ம் பண்ணிடட்டுமே.

அடங்கொன்னியா. இன்னும் அதுவே சொல்லலையா? அதுக்குள்ள மடங்கிடுச்சுன்னு சொல்லிட்ட இல்ல!

ஆயிடும்டா. நீ ஐடியா கொடு.

பெஸ்ட். ஒரு பிளாட்டினம் வித் டைமண்ட் மோதிரம் வாங்கு. அவ உன்னை லவ் பண்ணா அவளே போட்டு விட சொல்லுவா

வாவ். இதுக்குத்தாண்டா நீ வேணும். ஆனால் பிளாட்டிணம் மோதிரம் வாங்குற அளவுக்கு காசில்லை. வெள்ளி ஓக்கேவா?

அப்போ ஃபிகரும் இந்தளவுக்கு இருக்காது. ஓக்கேவா?

என்ன மச்சி? இதே ஃபீலோட வேற ஐடியா சொல்லேன். கொஞ்சம் சீப்பா

வாழைப்பழம் வாங்கி கொடு. சீப்பா இருக்கும்.

பிகு பண்ணாதடா. அவளுக்கு இந்த மாதிரி ஜாலியா பேசினா பிடிக்கும். கிரேசி மோகன் ஜோக்ஸ் எல்லாம் விழுந்து விழுந்து ரசிப்பா. அந்த மாதிரி ஏதாவது.

என்ன சொல்ற? அவளுக்கு மொக்க ஜோக்ன்னா பிடிக்குமா?

ஆமாம்டா. ஒரு நாள் யோகா பண்ணி உடம்ப குறைக்க வேண்டியதுதானேன்னு எங்கிட்ட சொன்னா. நான் உடனே குறைச்சிட்டேன். உடம்ப இல்லை, யோகா பண்றதன்னு சொன்னேன். 2 நாள் லீவ் போட்டு சிரிச்சா.

அடேய். உண்மையாவா? அப்ப அவளுக்கு கிஃப்ட் கொடுக்கிறது ஈசி. வாழ்க்கையிலே அவளுக்கு ரொம்ப பிடிக்க போற கிஃப்ட் இதுவாத்தான் இருக்கும்.

நிஜமாவாடா மச்சி? சொல்லுடா. என்ன கொடுக்கலாம்?

அவ பர்த்டே அன்னைக்கு கரெக்ட்டா 12 மணிக்கு நான் சொல்றத எஸ்.எம்.எஸ் அனுப்பு. உன்னை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டா.

என்ன அனுப்பணும்?

9789887048

ங்… உன்னைப் போய் ஐடியா கேட்டேன் பாரு. என்ன சொல்லணும். பொ…. நா… நீயெல்லாம் உருப்படவே மாட்டடா. வயிறெரிஞ்சு சொல்றேன். பு…. பா….. உனக்கு நல்ல சாவே வராதுடா..

 

20 கருத்துக்குத்து:

Kaarthik on November 30, 2010 at 12:35 AM said...

உங்க தோழனுக்கு மட்டுமில்ல தோழிக்கும் துரோகம் பாண்ணாதீங்க :-)

சுசி on November 30, 2010 at 2:22 AM said...

அதான் உங்களுக்கு அம்புட்டு தோழிங்க இருக்காங்க இல்லை.. நண்பன் தோழியையும்.. நல்லாருங்க!!

ஆனா.. கடைசில திட்டு கொஞ்சம் கம்மி பண்ணி இருக்கலாம்.. தலைப்பும் :((((

மாணவன் on November 30, 2010 at 5:56 AM said...

செம கலக்கல் அண்ணே,

தொடரட்டும்...

இத உங்க தோழி படிச்சாங்களா?

மகேஷ் : ரசிகன் on November 30, 2010 at 7:52 AM said...

ரணகளம்,

Karthik on November 30, 2010 at 7:52 AM said...

Haha good one. :-)

சுந்தர்.. on November 30, 2010 at 8:43 AM said...

தோழன் அப்டேட்ஸ்..

தோழனிடம் அவன் தோழி," என் பிறந்த நாளுக்கு என்ன கொடுக்க போகிறாய்?" என கேட்டதாகக் கூறி என்னடா சொல்ல என்றான். "என்னையே கொடுக்கறேன்னு சொல்லு" என்றேன்.. "நண்பேண்டா.. ", என வைத்து விட்டான் அலைபேசியை... நான் என்னை சொல்கிறேன் என்பதை புரியாமல்...

சிவா என்கிற சிவராம்குமார் on November 30, 2010 at 9:08 AM said...

ஆஹா! மின்சாரக் கனவு பிரபு தேவாவா நீங்க!!!

taaru on November 30, 2010 at 9:48 AM said...

இதே நண்பனுக்கு தானே போன வருஷம், ரொம்பவே வித்யாசமா ஒரு கல்யாண பத்திரிகை எழுதி கொடுத்திங்க? அப்போ இது அதுக்கு முன்னாடி பண்ண வேலையா?!!! நண்பன் பாவம்....
எங்கெங்கோ கால்கள் மாறி போகின்றார்..... :):):)

காவேரி கணேஷ் on November 30, 2010 at 10:15 AM said...

அட. அப்ப ஒண்ணு பண்ணு. ஒரு குளோப் வாங்கி பேக் பண்ணி “உனக்கான பரிசை உலகெங்கும் தேடினேன். கிடைக்கவில்லை. அதனால் உலகையே பரிசாக தருகிறேன்னு எழுதிக் கொடு.


அருமை கார்க்கி..

மங்களூர் சிவா on November 30, 2010 at 11:27 AM said...

:)))

பொன்கார்த்திக் on November 30, 2010 at 11:32 AM said...

:)

Arun on November 30, 2010 at 11:57 AM said...

அவ பர்த்டே அன்னைக்கு கரெக்ட்டா 12 மணிக்கு நான் சொல்றத எஸ்.எம்.எஸ் அனுப்பு. உன்னை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டா.

என்ன அனுப்பணும்?

9789887048

--climax super thala

பிரதீபா on November 30, 2010 at 7:16 PM said...

எதாச்சும் உள்குத்து இருக்குங்களா தலைப்புல ? (பத்தவெச்சுட்டியே பரட்டை !!)

தெய்வசுகந்தி on November 30, 2010 at 10:10 PM said...

:))

சீனு on December 1, 2010 at 11:02 AM said...

அருமை கார்க்கி..செம கலக்கல் ...

இதுவும் சூப்பரு.......

"சுந்தர்.. said...

தோழன் அப்டேட்ஸ்..

தோழனிடம் அவன் தோழி," என் பிறந்த நாளுக்கு என்ன கொடுக்க போகிறாய்?" என கேட்டதாகக் கூறி என்னடா சொல்ல என்றான். "என்னையே கொடுக்கறேன்னு சொல்லு" என்றேன்.. "நண்பேண்டா.. ", என வைத்து விட்டான் அலைபேசியை... நான் என்னை சொல்கிறேன் என்பதை புரியாமல்..."

ஸ்ரீமதி on December 2, 2010 at 12:43 PM said...

அஸ்யூசுவல் கலக்கல்... தலைப்பு தான் பிடிக்கல...

அரசன் on December 2, 2010 at 7:01 PM said...

nice

விக்னேஷ்வரி on December 3, 2010 at 9:43 PM said...

:) தோழிகள் லிஸ்ட் கூடிட்டே போகுதே. எப்படி சகா சமாளிக்கறீங்க..

ரோகிணிசிவா on December 5, 2010 at 7:25 PM said...

:)),
wat a presence of mind ,appreciable

பாரதசாரி on December 18, 2010 at 2:57 AM said...

கலக்கல்.அப்படியே என்னோட நம்பரையும் அனுப்பலாமே :-)

 

all rights reserved to www.karkibava.com