Nov 28, 2010

அபினும் பியரும் பின்னே ஏழுவும்


 

மறுநாள் செமெஸ்டர் தேர்வுகள். எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் முழு பியரையும் அடித்துவிட்டான் ஏழு. படிப்பதில் அவன் சூரன். எங்கள் கவலையெல்லாம் அவனை எப்படியாவது எழுப்பி கிளப்ப வேண்டுமென்பதே. நினைத்தது போலில்லாமல் காலை எட்டு மணிக்கே எழுந்துவிட்டான். ஆனால் மப்பு மட்டும் முழுமையாக இறங்கவில்லை.

தேர்வு அறைக்குள் நுழைந்தவன் நேராக ப்ளாட்ஃபார்ம் மீது ஏறினான். "யாருப்பா இன்னைக்கு எனக்கு பேப்பர் கொடுத்து புண்ணியம் தேடிக்கப் போறது?"

எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். ஏழுவா இவ்வளவு சத்தம் போட்டு பேசுவது? பின் மெல்ல அவனை சமாதானப்படுத்தி தேர்வை ஒழுங்காக எழுதுமாறு எடுத்து சொன்னோம். தேர்வும் தொடங்கியது. கேள்வித்தாளையும் விடைத்தாளையும் கொடுத்துவிட்டு சரி பார்த்திட சொன்னார் மேற்பார்வையாளர். ஏழு எழுந்ததைப் பார்த்தவுடன் எனக்கு பயம் ஏறியது.

"எக்ஸ்க்யூஸ் மீ சார். Question paperல இருக்கு. ஆனா Answer paperல Answers எதுவுமே இல்ல சார்”

நான் சிரித்ததைப் பார்த்து அவர் ஏழுவை விட்டுவிட்டு என்னை திட்டத்தொடங்கினார். ஏழுவை முறைத்துக் கொண்டே அமர்ந்தேன். அரைமணி நேரம் கழித்து மீண்டும் எழுந்தான்.

"சார். Differential Assembly எப்படி வேலை செய்யுது?” அவர் கோவமடைவதை கண்ட ஏழு பம்மினான். "என்ன சார். சந்தேகம் கேட்டா தீர்த்து வைக்கிறவர்தானே நல்லஆசிரியர்?"

கழுத்தைப் பிடித்து இழுத்து சென்றார் அவர். அவன் மீது எந்த ஒரு 'நல்'வாசனையும் வராததால் இவன் வேண்டுமென்றே விளையாடுவதாக முடிவுசெய்து விட்டார்கள். ஸ்டாஃப் ரூமில் எல்லா லெக்சரரும் கூடியிருக்க விசாரணை ஆரம்பமானது. ஏழு நல்லா படிக்கிற பையன் என்று அனைவரும் சொன்னாலும் அடிபட்டவர் விடுவதாக இல்லை. அதுவரை வாயை மூடியிருந்த ஏழு வாயைத்திறக்கத் தொடங்கினான்.

கெமிஸ்ட்ரி மேடத்தை பார்த்து முதலில் சொன்னான். "மேடம் இவருக்கும் எனக்கும் ஏனோ கெமிஸ்ட்ரி ஒத்து வரவில்லை".

என்னடா பேசற. திமிரா? என்றார் பிஸிக்ஸ்.

”சார். மேல போனா கீழ இறங்கித்தான் ஆகணும்னு சொல்றாரு நியூட்டன். எனக்கு மட்டும் ஏன் சார் இறங்க மாட்டங்குது" என்ற போதுதான் இவன் தண்ணி அடித்திருக்கிறான் என்பதை உணர்ந்தார்கள் உரையாளர்கள்.(அதாம்ப்பா லெக்சரர்ஸ்)

இருந்தாலும் அவன் உருவத்தைப் பார்த்து பாவப்பட்ட சில நல்ல ஜீவன்கள் அவன் தண்ணியடிக்கவில்லை என்றும், கூடவே சுத்தும் நாங்கள்தான் அவனுக்கு கஞ்சா டோப்பு அபின் என்று எதோ பழக்கப்படுத்திக் கெடுத்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். அரை பியர் அய்யாவுக்கு கஞ்சா அபின் என்றதும் முதுகெலும்பில் எறும்பு ஊர்ந்திருக்கிறது.

"ஆமா சார். நேத்து கார்க்கிதான் எனக்கு ஏதோ கொடுத்தான்” என்று உளறியிருக்கிறான்

வராந்தாவில் இருந்த நான் எப்படி மார்க் போட்டாலும் 40 வரவில்லை என்பதால் மீண்டும் கேள்வித்தாளினை புரட்டிக் கொண்டிருந்தேன்.

"உன்னை பிரின்ஸி வர சொன்னாரு. உடனே வா" என்றார் ஆஃபீஸ் பாய்.

பாவம் ஏழு. காப்பற்றலாம் என்ற நல்லெண்ணத்தில் போன என்னிடம் டொய்ங் என சுத்தி ஏழு சொன்னதை ரீப்ளே செய்து காமித்தார்கள். கொலைவெறியோடு அவனைப் பார்த்தேன்.கூலாக சிரித்துக் கொண்டே கேட்டான். "அது அபினா மச்சி?"

அப்படியே அவனைக் கடித்துக் குதற வேண்டும் போலிருந்தது. கோவத்தை அடக்கிக் கொண்டு சார். அவன் நேத்து ஒரு பியர் குடிச்சான். அதுக்குதான் இந்த ஆட்டம் என்றேன்.

ஒரு பியருக்கு ரெண்டு நாளா ஆடுவாங்களா? கூட என்ன சேர்த்த என்று கேட்டுதானும் ஒரு குடிகாரர்தான் என்று நிரூபித்தார் கணக்கு.

சத்தியமா சார்.வேணும்ன்னா பாலாஜிய கூட கேளுங்க என்று சொல்லிவிட்டு பின்பு நாக்கைக் கடித்தேன், இன்னொருத்தனையும் சிக்க வைத்து விட்டோமே என்று.

அந்தக் கவலையே இல்லாமல் அடுத்த டயலாக்கை அடித்தான் ஏழு. " அவன் இவனுக்குதான் சப்போர்ட் பண்ணுவான் சார். நீங்க ஆறுவையும் வர சொல்லுங்க.அவன் தான் எனக்கு மிக்ஸ் செய்து தந்தான்"

பியரடிச்சவனுக்கு எதைடா மிக்ஸ் செய்தீங்க என்று தன் மானம் போவது தெரியாமல் விசாரித்தார் கணக்கு.

அவன் பீரையே தண்ணி கலந்துதான் அடிப்பான் சார் என்றேன். ஏதோ அவனை மன்மதன் என்று சொன்னதைப் போல நகத்தைக் கடித்து அந்த சிமென்ட் தரையில் கால் கட்டை விரலால் நோண்டி வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார் தலைவர்.

அழைத்து வரப்பட்டார்கள் ஆறுவும் பாலாஜியும். பின்புதான் தெரிந்தது அவர்கள் இழுத்து வரப்பட்டார்கள் என்ற உண்மை.

மூன்று பேர் சொல்லியும் யாரும் நம்பத் தயாரில்லை. ஏதோ பெரிய லெவலில் போதை மருந்து பழக்கம் இருப்பதாக முடிவு செய்து விட்டார்கள். பேரன்ட்ஸ் வரனும். சஸ்பென்ஷன் தரணும். இவனுங்களுக்கெல்லாம் எதுக்கு சார் படிப்பு.டி.சி. கிழிச்சிடுங்க, போலிஸ்ல சொல்லலாம் சார் என்ற ஆளுக்கொரு ஐடியா தந்துக் கொண்டிருந்தார்கள்.

மறுநாள் வரை விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. மப்பு இறங்கி எழுந்தவனை கைகள் வலிக்க மொத்தினோம். மறுநாள் எல்லா உண்மையும் சொல்வதாக சொன்னதால் விட்டோம்.

அடுத்த நாள்.. வரிசையாக நின்றோம். யாரிடம் கஞ்சா வாங்கிறீங்க என்றவரிடம் காலில் விழாத குறையாக கெஞ்சினோம். அடிச்சவனே ஒத்துக்கிட்டானே என்றார். ஏழுவைப் பார்த்தோம்.

சார். இல்ல சார். நான் பீரடிச்சாலே ஏறிடும் சார். சத்யமா நேத்து பீருக்குத்தான் அப்படியாயிட்டேன் என்றான்.

டேய். மெக்கானிக்கல்ன்னா பெரிய பருப்பா? நாங்களும் அத படிச்சிட்டுதானே வந்திருக்கோம். ஒரு பீருக்கே இவரு ரெண்டு நாள் ஆடுவாராம். யார் கிட்ட கதை உடறீங்க என்றார் ஹெச்.ஓ.டி.

மெதுவாக சொன்னான் ஏழு " வேணும்ன்னா ஒன்னு வாங்கித் தந்து பாருங்க சார்.எப்படி ஆடுறேனு

21 கருத்துக்குத்து:

சம்பத் on November 28, 2010 at 11:35 PM said...

வாய் விட்டு சிரித்தேன் ;-))))

சம்பத் on November 28, 2010 at 11:36 PM said...

Ezhu character really interesting :))

தமிழ்ப்பறவை on November 28, 2010 at 11:50 PM said...

:)

pappu on November 29, 2010 at 12:00 AM said...

பயசோ?

சுசி on November 29, 2010 at 12:35 AM said...

ஏழு வந்தாலே தனிக் களைதான் போங்க.

ஏழுவுக்கு ஒரு டின் பியர் பார்சேல்ல்ல்..

பிரதீபா on November 29, 2010 at 2:19 AM said...

கதைக்கு ஒன் லைன் குடுத்த எபக்ட்? :)

philosophy prabhakaran on November 29, 2010 at 4:07 AM said...

செம கிரியேட்டிவிட்டி... கலக்கியிருக்கீங்க...

இராமசாமி கண்ணண் on November 29, 2010 at 4:37 AM said...

அய்யா .. ராசா.. முடில்ல.. சான்ஸ் லெஸ் :))

மாணவன் on November 29, 2010 at 5:40 AM said...

//டேய். மெக்கானிக்கல்ன்னா பெரிய பருப்பா? நாங்களும் அத படிச்சிட்டுதானே வந்திருக்கோம். ஒரு பீருக்கே இவரு ரெண்டு நாள் ஆடுவாராம். யார் கிட்ட கதை உடறீங்க என்றார் ஹெச்.ஓ.டி.//

செம கலக்கல்...

புட்டிக்கதைகள் இன்னும் எதிர்பார்ப்புடன்...

தொடரட்டும்...

டம்பி மேவீ on November 29, 2010 at 6:44 AM said...

supereb

நாய்க்குட்டி மனசு on November 29, 2010 at 7:46 AM said...

CHALARAM is the secret of 'MY' energy

தெய்வசுகந்தி on November 29, 2010 at 8:10 AM said...

LOL:-))))))))))))))!

தராசு on November 29, 2010 at 10:23 AM said...

ஏழு வாழ்க......

வள்ளி on November 29, 2010 at 11:07 AM said...

:)

பொன்கார்த்திக் on November 29, 2010 at 1:07 PM said...

:)

லேகா on November 29, 2010 at 6:24 PM said...

//வராந்தாவில் இருந்த நான் எப்படி மார்க் போட்டாலும் 40 வரவில்லை என்பதால் மீண்டும் கேள்வித்தாளினை புரட்டிக் கொண்டிருந்தேன்//

:-))

சிவா என்கிற சிவராம்குமார் on November 29, 2010 at 9:42 PM said...

ஏழு!!!! செம ஏழரை!

Karthik on November 30, 2010 at 8:44 AM said...

To use twitter bashai - #kvlt.

Evergreen. :-)

Mohamed Faaique on November 30, 2010 at 9:37 AM said...

///பியரடிச்சவனுக்கு எதைடா மிக்ஸ் செய்தீங்க என்று தன் மானம் போவது தெரியாமல் விசாரித்தார் கணக்கு./// superb

Yuva on December 1, 2010 at 9:58 AM said...

mee pa

Krithiha on December 16, 2010 at 11:41 PM said...

சாளரத்திற்கு என் முதல் வருகை இது. "புட்டி"க்கதைகள் பார்த்ததும் கொஞ்சம் கடுப்பாகி பின்ன அப்படி என்ன தான் எழுதியிருக்குன்னு பார்க்கலாம்னு தான் வந்தேன். OHHHH MYYYY GOD.... எல்லா புட்டி கதைகளையும் மொத்தமா படிச்சு இந்த 1 1/2 மணி நேரமும் சிரிச்சு சிரிச்சு வயிரு நோவுது வாத்தியாரே.. Hats Off.. !! தோழி அப்டேட்ஸ்னு ரொமான்ஸ்லையும் பின்றீங்க புட்டிக்கதைகள்னு காமெடிலையும் கலக்குறீங்க .. வாழ்த்துக்கள் கார்க்கி!!

 

all rights reserved to www.karkibava.com