Nov 21, 2010

இச்..இச்..இச்


  இச்சென்று பெயரிட்டு இப்போது எங்கேயும் காதல் என்றாக்கியிருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கியிருக்கிறார்களாம். எனவே இசையும் அந்த சாயலில் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஹாரீஸும் “எடுக்க” வேண்டிய இடத்திலிருந்து கச்சிதமாய் எடுத்திருப்பார் என்ற நம்பிக்கையில்தான் குறுந்தகட்டை வாங்கினேன். ஏமாற்றமில்லை.வாரணம் ஆயிரம்,அயன், ஆதவன் என சூர்யாவுடன் ஹாட் டிரிக் அடித்துவிட்டு வெளியே வந்திருக்கிறார். ஆல்பம் முழுக்க ஆங்காங்கே உன்னாலே உன்னாலே, தாம் தூம் வாசம் தூக்கலாக இருந்தாலும் அது ஹாரீசின் “ட்ரேட்மார்க்” என்று சொல்லிவிட்டு பாடல்களுக்கு நகர்வோம்.

EngaumKathalCD

1) எங்கேயும் காதல்: (ஆலாப் ராஜ்) பாடல் – தாமரை

    காதலின் சுகம் சொல்லி புரிவதில்லை. அது ஒரு உணர்வு. இந்தப் பாடலும் அப்படித்தான். காதலிக்கும் ரோமியோ-ஜூலியட்களை அலேக்காக வேறொரு உலகத்திற்கு கொண்டு செல்லும். காதல் ஒரு அரிப்பு. அரிச்சா சொறிஞ்சிக்கணும் என்னும் மேதாவிகளுக்கு இதில் சிறப்பாய் ஏதுமில்லை. காதலை சொல்லும்போது கிட்டார் இல்லாமல் எப்படி? ஆனால் எந்த இசைக்கருவியும் வரிகளையோ, வார்த்தைகளையோ ஆளாமல் அமைதி காப்பது சுகம். தாமரைக்கு அது வசதியாகி போனாலும் பச்சென்று ஒட்டிக்கொள்ளும் எந்த வரிகளும் கேட்கவில்லை. ஆலாப் ராஜின் குரல் மயிலிறகாய் வருடுகிறது. 2, 3 வருடங்கள் கழித்து ஹாரீஸீன் பிறந்த நாளின் போது அவரின் ஆல் டைம் பெஸ்ட் வரிசை கேட்க நேர்ந்தால், அப்போது கேட்கலாம் இந்தப்பாடலை.

2) நங்காய் (ரிச்சர்ட்) பாடல் - வாலி

  வள்ளியே சக்கரவள்ளியே.. மல்லியே சந்தனமல்லியே.. பள்ளியே பங்கனப்பள்ளியே என்ற ஆரம்ப வரிகள் கேட்கும்போது செம குத்துடா என்றுதான் நினைப்போம். குத்துதான் ஆனால் வெஸ்டர்ன் குத்து. மைக்கேல் ஜேக்சனின் ரசிகர்களுக்கு பீட்டைக் கேட்டவுடன் அட அட என்று தோன்றியிருக்கும்.  வாழைப்பழத்தில் பெருங்காயம் போல் கிடைத்த கேப்பில் எல்லாம் நம்ம ஊர் குத்தை சேர்த்திருக்கிறார் ஹாரீஸ். இரண்டாவது இண்டெர்ல்யூடில் வித்தியாசமாய் ஏதோ முயற்சி செய்திருக்கிறார். ஜெயம் ரவிக்கு நடனம் நன்றாகவே வரும். இயக்கம் பிரபுதேவா. சரியான விருந்து காத்திருக்கிறது என்றே நினைக்கிறேன். பிரபு, எம்.ஜே ரசிகர் என்பதால் அவரே விரும்பிக் கூட ஹாரீசை இப்படி போட சொல்லியிருக்கலாம். பாடியவர், பாடலாசிரியர் எல்லாம் ஜகா வாங்கிக்கோங்க. இண்டெர்னேஷனல் தலயின் பீட்டுக்கு நேஷனல் தல கொரியோகிராஃப் செய்தால்???????????

நங்காய், தங்காய், செங்காய் என்ற வார்த்தைகளில் வாலி ஏதோ சொல்லியிருக்கிறார் என்று விசாரித்தேன். தங்காய் என்பதன் இன்னொரு வடிவம் தான் தங்கை எங்கிறார்கள். உண்மையா என்று தெரியவில்லை

இந்த பாடலின் பீட்டின் பின்னால் இன்னொரு பாடலும் இருக்கிறது. நியாயத்தராசு என்றொரு படத்தில் வெண்ணிலா என்னோடு ஆடவா என்ற பாடல் அப்போது ஹிட்டான மைக்கேல் ஜேக்சனின் “The way you make me feel”  பாடலில் இருந்து அப்படியே உருவப்பட்டது. இப்போது ஹாரீஸ் சற்று பாலிஷ் செய்திருக்கிறார். மூன்றையும் கேட்டால் ஹாரீஸ் வெர்ஷன் எம்.ஜே வெர்ஷனை விட ஷங்கர் கணேஷ் வெர்ஷனையே அதிகம் ஒத்திருக்கிறது. வெண்ணிலா பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள். மூன்று பாடல்களின் பீட்டை மட்டும் வெட்டி, ஒன்றாய் ஒட்டி கீழே தந்திருக்கிறேன். ஹாரீஸ் வெர்ஷனின் டெம்போ மட்டும் கூடுதலாயிருக்கும். கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

 

3) லோலிட்டா (கார்த்திக்) பாடல் தாமரை

     பட்டாசு இல்லாமல் தீபாவளியா? கார்த்திக் இல்லாமல் சூப்பர் ஆல்பமா? லோலிட்டா என ஸ்மூத் டேக் ஆஃப் செய்கிறார். அது என்னடா லோலிட்டா!! தாமரை இப்படி எழுத மாட்டாங்களே என்று யோசிக்கிறீர்களா? லோலிட்டா என்பது ஸ்பானிஷ் வார்த்தை. அதற்கு Sorrows என்று அர்த்தமாம். ஆனால் விளாடிமிர் நபோக்கோவ் (சாரு அடிக்கடி சொல்வாரே.. அவர்தான்) எழுதிய ஒரு நாவலில் நாயகியின் செல்லப்பெயர் லோலிட்டா. நாவலின் பெயரும் அதுதான். அந்த நாவலுக்கு பிறகு க்யூட்டான, ஹாட்டான இளம்பெண்களை லோலிட்டா என்று சொல்வது பிரபலமானது.தாமரை சொல்லும் லோலிட்டாவும் அதுதான். ஹன்சிகா மோட்வானியை லோலிட்டா என்று சொல்லலாம். தவறேயில்லை. (ஃபோட்டோ பார்த்தது போதும்.வாங்க)

  ஸ்பானிஷ் வார்த்தையில் ஆரம்பிப்பதாலோ என்னவோ இதற்கு ஸ்பானிஷ் கிட்டாரை கையிலெடுத்திருக்கிறார் ஹாரீஸ்.நைலான் ஸ்ட்ரிங்ஸ் நச்சென்று ஒலித்திருக்கிறது. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழைக்கு பிறகு “கார்ட்ஸ்” இத்தனை இதமாய் வந்திருப்பது இதில்தான் எனலாம். வாராயோ (ஆதவன்) விட இது அழகு. ஹாரீஸ் எப்போதாவது உபயோகிக்கும் கருவி சாக்ஸஃபோன். இரண்டாவது இண்டெர்லியூடில் சில வினாடியே வந்தாலும் அட! போட வைக்கிறது. சேஃப் பெட். நிச்சயம் ஹிட்.

4) நெஞ்சில் நெஞ்சில் (ஹரீஷ், சின்மயி) பாடல் – மதன் கார்க்கி

     என்னவென்று சொல்ல? இந்தப்பாட்டு இந்தப்படத்திலா என்ற சந்தேகம் இன்னும் இருக்கிறது. இதுவரை கேட்டு வந்த சாயலில் இருந்து முற்றிலுமாய் விலகி ஒரு மெலடி தந்திருக்கிறார்கள். சாருகேசி ராகம் போலிருக்கிறது.யாராவது உறுதிப்படுத்தினால் தேவலை. மிருதங்கமும், குழலும் வெகு சிறப்பாய் பயன்படுத்தப்பட்டிருகிறது. ஹரீஷை விட அம்சமாய் பாடியிருக்கிறார் சின்மன்யி. “மயங் கியே” என அவர் பிரித்துப் பாடும் இடத்தில் மயங்கித்தான் போகிறோம்.ஹேட்ஸ் ஆஃப் சின்மயி.

பசையூறும் இதழும்
பசியேறும் விரலும்
விரதம் முடித்து
இரையை விரையும் நேரமிது!
உயிரின் முனையில்
மயிரின் இழையும் தூரம் அது

என்று எழுதியிருப்பவர் ஐஸக் அசிமோவின் வேலையோ ரோபோ என்றெழுதிய மதன் கார்க்கிதான். அப்பா மாதிரி எழுதலையே என்று நிறையப் பேர் கேட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்காகவே எழுதியது போலிருக்கிறது. நன்றாகவே இருக்கிறது. ”கொஞ்சம்-கொஞ்சும்”, “தூரிகை - காரிகை” போன்ற டெம்ப்ளேட் எதுகை மோனைகளை அழகாய் சேர்த்திருக்கிறார்.  நம் பாடலாசிரியர்களிடம் கேட்க நினைத்த சந்தேகத்தை இப்போது கேட்டுவிடுகிறேன். அது என்ன “சின்ன சின்ன ஆசை”. “நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ”. மெட்டுக்காக இரண்டு முறை போடுவது அவர்களின் வார்த்தை பஞ்சமென்று எடுத்துக் கொள்ளலாமா?

  இவையன்றி திமுதிமு, தீ இல்லை என்ற இரு பாடல்களும் Bathing at Cannes என தீம் மியுசிக்கும் உண்டு. இதுவரை அவை என்னை பெரும்பாலும் கவரவில்லை என்றாலும், அந்தப் பாடல்களும் ரசிக்கும்படியே உள்ளன. மேலே சொன்ன 4 பாடல்களில் நங்காயும், நெஞ்சில் நெஞ்சிலும் பிக் ஆஃப் த ஆல்பம் எனலாம். எஃப்.எம்களில் அதிக முறை ஒலிக்கப்படுவதும் இவையிரண்டுமாகவே இருக்கும் என்பது என் கணிப்பு, யோசிக்காமல், தயங்காமல் ஒரிஜினல் சிடி வாங்கி ரசித்துக் கேட்கலாம்.

14 கருத்துக்குத்து:

பரிசல்காரன் on November 21, 2010 at 10:32 PM said...

இசை விமர்சனத்திற்காக பழைய பாடல்களைத் தேடி எடுத்து மிக்ஸியில் போட்டுக் குடிக்கக் குடுத்த உன் சிரத்தைக்கு சபாஷ்!

நங்காய் பாடல் ஹிட்டடிக்கும். (தலைப்பில் நங்கை என்றே எழுதியிருக்கிறாய் சகா. வேணும்னேவா?)

vinu on November 21, 2010 at 10:33 PM said...

me 1stuuuuuuuuuuuuuuuuuuuuuu

vinu on November 21, 2010 at 10:33 PM said...

parisal just load aagura nearathula thattitu poiteengaleaaaa

vinu on November 21, 2010 at 10:34 PM said...

onnu renduu
u" vai kuraichu irrunthaa oru vealaai 1st aaguyirukkalaaamoo

சுசி on November 21, 2010 at 10:45 PM said...

கலக்கல் விமர்சனம் கார்க்கி.

நெஞ்சில் நெஞ்சில்.. :))))

vinu on November 21, 2010 at 10:46 PM said...

alredy download panni vachu irrunthean but ippo headphoneil kettka nalaaa irrukkupaaa

vinu on November 21, 2010 at 11:27 PM said...

sagaa "bloger vidhya " blogg lost aagi irruku konjam kavanichieengalaaa

ப்ரியமுடன் வசந்த் on November 22, 2010 at 2:11 AM said...

நெஞ்சில் நெஞ்சில் காதல் பரவசம் சின்மயி நீங்க சொன்னது போலவே கலக்கியிருக்காங்க...

மாணவன் on November 22, 2010 at 5:29 AM said...

//யோசிக்காமல், தயங்காமல் ஒரிஜினல் சிடி வாங்கி ரசித்துக் கேட்கலாம்.//

அருமை, சிடி வாங்கிடுவோம்....

மோகன் குமார் on November 22, 2010 at 2:07 PM said...

I just missed it.:)) Wanted to write review about this album, but you have already done it. ( Oru Pathivu pochae!!)

Somehow I like Harris' songs (including this film) very much, may be because most of them are melody, the genre which I like.

கார்க்கி on November 22, 2010 at 6:36 PM said...

ப‌ரிச‌ல், ந‌ங்காய் என்றுதான் டைப்பினேன். ந‌ங்கை ஆயிடுச்சு.

வினு, எந்த‌ பாட்டு உங்க‌ ஃபேவ‌ரிட்?

சுசி, ந‌ன்றி

வ‌ச‌ந்த், ஆமாம். போன‌ வ‌ருஷ‌ம் வாராயோ.. இந்த‌ வ‌ருஷ‌ன் நெஞ்சில்

ந‌ன்றி மாண்வ‌ன்

மோக‌ன், அத‌னாலென்ன‌? நீங்க‌ எழுதுங்க‌. உங்க‌ விருப்ப‌ம் வேற‌ மாதிரி இருக்க‌லாம்.

Madhan Karky on November 23, 2010 at 10:27 AM said...

Thanks for your review Karki. Just wanted to clarify certain things. I was not trying to write like my father. I was actually trying my best not to resemble his style. It was sad that you happened to find some similarities. Secondly, the usage of repititions is a technique used by lyric writers around the world. Justblike alliteration, repetition is another technique. Twinkle twinkle, baa baa black sheep, achamillai achamillai.songs with repetitions register faster in listeners minds than the ones without. I was really impressed by the fact that you were able to look so deep into multiple aspects of a music album. Continue with your good work. Regards, Karky

கார்க்கி on November 24, 2010 at 11:46 PM said...

மதன்,

அப்பாவை போல எழுத முயற்சிப்பதாக சொல்லவில்லை. எந்திரன் படப்பாடல்கள் புது வகையானவை. 80களில் கவிப்பேரரசு நடத்திய சாம்ராஜ்யத்தின் முக்கிய அம்சங்கள் காதல் பாடல்கள். அது போன்றதொரு பாடல் எந்திரனில் இல்லை. அதைத்தான் சொல்ல முயன்றேன். மற்றபடி அவரின் சாயல் கொண்ட பாடல் என்று சொல்ல வரவில்லை.

கொஞ்சம்-கொஞ்சும், விழியில் -மொழியில் போன்ற எதுகை மோனைகள் 80களில்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டன என்பதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்காகவும் அபப்டி சொன்னேன்.

வார்த்தைகள் இரண்டு முறை பயன்படுத்துவது பற்றிய விளக்கத்திற்கு நன்றி. புதிய தகவல் எனக்கு. இது தெரியாமல் ஒரு மார்க்கமாக கேட்டுவிட்டேனோ? :)))))

கோ” பாடல்களுக்காக காத்திருக்கிறேன். நன்றி

Karthik on November 26, 2010 at 4:42 PM said...

Jooperu!

 

all rights reserved to www.karkibava.com