Nov 17, 2010

ஊழலும், தத்துவமும்


சின்னவன் : என்னண்ணே. எப்படி இருக்கீங்க? ஸ்பெக்ட்ரம் ஊழல் கதையெல்லாம் படிச்சிங்களா?நீங்க என்ன நினைக்கறீங்க?

பெரியவன்:  ராஜாவா இருந்தாலும்..மந்திரியா இருந்தாலும் ராஜாவே மந்திரியா இருந்தாலும் தப்பு தப்புதானே?

 சின்னவன் :  பார்க்க சாதுவா இருந்துட்டு இவ்ளோ வேலை செஞ்சிருக்காரே

பெரியவன்: என்னதான் ஃபோட்டோவுல ஒரு பொண்ணு தேவதை மாதிரி தெரிஞ்சாலும் நெகட்டிவ்ல பிசாசு மாதிரிதான் தெரியும்.

சின்னவன் : எல்லா துறையிலும்தான் ஏலம் விடுறாங்க. அதுக்குன்னு இவ்ளோ காசா காணாம போகும்?

பெரியவன்: இளநீரிலும் தண்ணி இருக்கு. பூமியிலும் தண்ணி இருக்கு. இளநீர்ல போர் போட முடியுமா? இல்லை பூமியிலதான் ஸ்ட்ரா போட முடியுமா?

சின்னவன் : ஒரே ஒரு மந்திரி இவ்ளோ பணத்தை ஆட்டையை போட்டாரே. நம்ம ஊருல  எவ்ளோ போலீஸ், வக்கீல் இருக்காங்க. இவருக்கு தண்டனை வாங்கி தந்துடுவாங்களா?

பெரியவன்: ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது

சின்னவன் : பி.எம்தானே பெரியாளு.அவருக்கு தெரியாமலா இவர் விளையாடி இருப்பாரு?

பெரியவன்: பஸ்ஸுல கலெக்டரே ஏறினாலும் முதல் சீட்டு டிரைவருக்குத்தான்

 சின்னவன் : சரிதான். ஆனா இதுல காங்கிரஸூக்கு பங்கு கொடுக்காமலா விட்டிருப்பாங்க?

பெரியவன்: காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் போடுற முட்டை வெள்ளைதாம்ப்பா

 சின்னவன் : அப்ப ஏண்ணே அவர பதவிய விட்டு தூக்கினாங்க?

பெரியவன்: முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருக்கிற காக்கா கருப்புதாம்ப்பா

சின்னவன்: ராசா வெளிவந்தா கூடவே திமுகவும் கூட்டணிய விட்டு வெளிவருமாண்ணே?

பெரியவன்: சைக்கிள் போனா கூடவே சைக்கிள் ஸ்டேண்டும் போகும். ஆனா பஸ் போனா பஸ் ஸ்டேண்ட் அங்கேயேதான் இருக்கும்

   சின்னவன் : என்னதான் இருந்தாலும் எல்லோரும் சேர்ந்து அடிச்ச காசுக்கு இவர மட்டும் பலிகடா ஆக்குறாங்களே 

பெரியவன்: கால் எவ்ளோ வேகமா ஓடினாலும் பரிசு என்னவோ கைக்குதாம்ப்பா

 சின்னவன் : அதுவும் சரிதான். ஆனா இந்த களேபரத்துல கல்மாடிய மறந்துட்டாங்களே

பெரியவன்: டிரெயின் எவ்ளோ மெதுவா போனாலும் கடைசி பொட்டிதான் கடைசியா வரும்

சின்னவன் :இன்னொரு பொட்டி வந்து சேரும் வரை ராசாதான் மீடியாவுக்கு தோசா. கலைஞர் என்னண்ணே சொல்றாரு? ராசாவ காப்பாத்துவாரா?

பெரியவன்: வாத்யார் எவ்ளோதான் முட்டை போட்டாலும் அத வச்சு ஆம்லெட் போட முடியாது

சின்னவன் : சரிண்ணே.. மத்திய அரசுல திமுக பங்கேற்குது. அப்போ ஏன் மாநில அரசுல காங்கிரஸ் இல்லை?

பெரியவன்: ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது

 சின்னவன் : ஓ.அப்போ திமுக போலீஸ்? அடுத்து.பாமகவும் இந்த ஊழல் நடந்தப்ப கூட்டணியில் இருந்துச்சே. அவங்களுக்கு ஏதாவது தேறியிருக்குமா?

பெரியவன்: பஸ் ஸ்டாப்புல நின்னா பஸ் வரும். ஃபுல் ஸ்டாப்புல நின்னா ஃபுல் இல்லை, ஹாஃப் கூட வராது.

  சின்னவன்: தயாநிதி மாறன் இதுல எக்ஸ்பெர்ட் ஆச்சே. அவர் திரும்ப வந்தா சரி ஆயிடுமா?

பெரியவன்: எவ்ளோ பெரிய சாஃப்ட்வேர் புரஃபஷனலா இருந்தாலும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்ல காத்து வர வைக்க முடியாது

 சின்னவன் : அதுவும் சரிதான். சாளரத்துலே மொக்கைதான் வருது. நானும் அங்க அடிக்கடி வறேன். ஆனால் மொக்கை எனக்கு வர மாட்டேங்குது.

பெரியவன்: என்னதான் காலேஜ் பஸ் தினமும் காலேஜ் போனாலும் அது டிகிரி வாங்க முடியாது

சின்னவன் : உங்களுக்கு மட்டும் எப்படிண்ணே இவ்ளோ மூளை?

பெரியவன் : நகம் வளர்ந்தா வெட்டலாம். முடி வளர்ந்தா வெட்டலாம். மூளை வளர்ந்தா?

 சின்னவன் : ஆள  விடுங்க. எஸ்கேப்ப்ப்ப்

23 கருத்துக்குத்து:

சரவணகுமரன் on November 17, 2010 at 11:58 PM said...

கலக்கல்

லதாமகன் on November 17, 2010 at 11:59 PM said...

முடியல‌......

vinu on November 18, 2010 at 12:23 AM said...

me paavam 3rd innaikku

vinu on November 18, 2010 at 12:26 AM said...

ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது


tooooooooooooooooooooopu

சுசி on November 18, 2010 at 12:33 AM said...

கலக்கல் கார்க்கி..

//ராஜாவா இருந்தாலும்..மந்திரியா இருந்தாலும் ராஜாவே மந்திரியா இருந்தாலும் தப்பு தப்புதானே?//
ஹஹாஹா.. செம..

பெரியவன் பேசுறது சூப்பரேய்..

Anonymous said...

சகா,
தாறு மாறு தக்காளி சோறு :):)

மாணவன் on November 18, 2010 at 5:47 AM said...

இருந்தாலும்..மந்திரியா இருந்தாலும் ராஜாவே மந்திரியா இருந்தாலும் நியாயம் நியாயம்தாண்டா...

எவனா இருந்தாலும் தப்பு செஞ்சா தண்டனைதாந்தாண்டா

நீதிடா.... நேர்மைடா... நியாயம்டா...

செம கலக்கல் அண்ணே

நாய்க்குட்டி மனசு on November 18, 2010 at 7:57 AM said...

aiyoooo ooooo யாராவது காப்பாத்த வாங்களேன்.

வெட்டிப்பயல் on November 18, 2010 at 8:49 AM said...

கலக்கல் கார்க்கி :)

கார்க்கி on November 18, 2010 at 9:08 AM said...

ந‌ன்றி ச‌ர‌வ‌ண‌கும‌ர‌ன்

ல‌தாம‌க‌ன், உங்க‌ க‌விதைக்கு முன்னால‌..ஹிஹிஹி

வினு, மூனாவ‌து வ‌ன்தாலும் முக்கிய‌மான‌ ஆளுதாம்ப்பா

நான் சின்ன‌வ‌ன்தான் சுசி :)

பாலா, ஹாஹாஹா

மாண‌வ‌ன், அப‌ப்டி போடுங்க‌

நாய்க்குட்டி, யாரும் வ‌ர‌ மாட்டாங்க‌ ராசாவ‌ காப்ப‌த்த‌.. :)

ந‌ன்றி வெட்டி

விஜய் ஆனந்த் on November 18, 2010 at 9:51 AM said...

:-)))...

அமுதா கிருஷ்ணா on November 18, 2010 at 11:11 AM said...

இளநீர்ல போர்,பூமியில ஸ்ட்ரா..என்னா ஒரு யோசனை..

பொன்கார்த்திக் on November 18, 2010 at 11:40 AM said...

சகா கேட்ட பார்ம்ல இருக்கீங்க..

லோகேஷ்வரன் on November 18, 2010 at 11:44 AM said...

முடி வளர்ந்தா வெட்டலாம்!!!! Correctu Saga

தராசு on November 18, 2010 at 1:21 PM said...

அய்யோ, அய்யோ கொல்றாங்களே

விக்னேஷ்வரி on November 18, 2010 at 3:58 PM said...

அய்யா, பெரியவனே.. ஏன் இப்படி... ஸ்ஸப்பா...

அன்புடன் அருணா on November 18, 2010 at 5:48 PM said...

ஹாஹாஹா....சிரிச்சு முடியலைப்பா!!!

பரிசல்காரன் on November 18, 2010 at 11:23 PM said...

//ராஜாவா இருந்தாலும்..மந்திரியா இருந்தாலும் ராஜாவே மந்திரியா இருந்தாலும் தப்பு தப்புதானே?//
ஹஹாஹா.. செம..

பெரியவன் பேசுறது சூப்பரேய்..//


நன்றி சுசி!!

சம்பத் on November 19, 2010 at 4:53 AM said...

அசத்தல் :-)

ஆதிமூலகிருஷ்ணன் on November 19, 2010 at 3:16 PM said...

:-)) இவ்வளவு தொடர்ச்சியா கடிக்கவும் அதுவும் அர்த்தத்தோட கடிக்கவும் உன்ன விட்டா ஆளு கிடையாது.

நீ சாப்டு மச்சி.!

சுசி on November 19, 2010 at 6:33 PM said...

@பரிசல்.. அப்போ நீங்கதானா அது?? மொக்கைசாமியோட ஃப்ரெண்டுன்னு ப்ரூஃப் பண்ணிட்டிங்க :))))

Ibrahim A , on November 22, 2010 at 3:20 PM said...

பஸ்ஸுல கலெக்டரே ஏறினாலும் முதல் சீட்டு டிரைவருக்குத்தான்/

என்னதான் டீமுக்கு கேப்டனா இருந்தாலும்,பௌலர் தான் பீல்டிங் செட் பண்ணனும்....

இது எப்படி இருக்கு!!!

Karthik on November 26, 2010 at 4:46 PM said...

:-) :-)

 

all rights reserved to www.karkibava.com