Nov 15, 2010

குட்டிச்சுவரும், பிள்ளையாரும்


 

தெருமுனை குட்டிச்சுவரைshortwall
வளர்த்துவிடும் நோக்கில்
நால்வர் குழு மேலேறி அமர்ந்தோம்
கடந்து செல்லும் எல்லோருக்கும்
மதிப்பெண் போட்டு
ஆசிரியர் சேவை செய்துக்கொண்டிருந்தோம்.
நீ
கடந்த போது கலவரப்பட்ட நான்
தொப்பென கீழே குதித்தேன்.
உடனிறங்கிய மற்றொரு ஆசிரியர்
ஜென் குருவாகவே மாறிப் போய் சொன்னார்
“இதுவும் கடந்து போகும் மச்சி”

 

*******************************************************************************************************************

இப்போதெல்லாம்
பால் குடிப்பதில்லை
என்பதாலோ என்னவோ
ரயில்வேகேட் பிள்ளையாருக்கு
ஓப்பனிங் சரியில்லை.
அவ்வழியே சென்றபோது
உள்நுழைந்த என்னை
“என்னடா மச்சி”
என்றார்கள் நண்பர்கள்.
“பிள்ளையார் மாமா காப்பாத்து”
என்றதை கேலி செய்தவர்களுக்கு
எப்படித் தெரியும்
முன்தினம் தான்
“பிள்ளையாரப்பா காப்பாத்துப்பா”
என்று நீ வேண்டியது.

22 கருத்துக்குத்து:

இராமசாமி கண்ணண் on November 15, 2010 at 11:37 PM said...

முதல் இது அடடா.. இரண்டாவது அடடடா !... எழுத்து முழுக்க தோழிதானா.... பின்றீங்க தல :)

ப்ரியமுடன் வசந்த் on November 15, 2010 at 11:38 PM said...

பிள்ளை யாரப்பா காப்பாத்து !

சூப்பர் கார்க்கி!

இராமசாமி கண்ணண் on November 15, 2010 at 11:39 PM said...

27 வயசு தடியன்.. மனசளவுல பொடியன்.. பேசினா கடியன்.. கோவம் வந்தா வெடியன்..
---
என்னாதிது 20 வயச கூட்டிட்டிங்க :)

ILA(@)இளா on November 15, 2010 at 11:45 PM said...

பிள்ளையார் மாமா - வாரே வாவ்

சுசி on November 15, 2010 at 11:47 PM said...

ப்ரஃபைல்ல டீஷர்ட்ல இருக்கிங்க..

லேபல் ஜிப்பா போட்டு எழுதியதுன்னு இருக்கு..

சிவா on November 16, 2010 at 12:01 AM said...

பிள்ளையார் மாமாவா..... ஹா ஹா ஹா!!!

சுரேகா.. on November 16, 2010 at 1:33 AM said...

கார்க்கீ!! மூணாவதா நான் உக்காந்திருந்தேனே!! சொல்லலை!!

பிரதீபா on November 16, 2010 at 4:01 AM said...

அப்போ விக்கியும் முருக்சும் மச்சான்ஸ்?? ஹா ஹா ...

டம்பி மேவீ on November 16, 2010 at 4:49 AM said...

தோழி அப்டேட்ஸ் மாதிரியே இருக்கு சார்

பிறவு ஸ்டேடஸ் மெசேஜ் ?????

மாணவன் on November 16, 2010 at 6:33 AM said...

செம கலக்கல்...

“இதுவும் கடந்து போகும் மச்சி”

அனுபவம் ம்ம்ம்....

Balaji saravana on November 16, 2010 at 7:04 AM said...

//பிள்ளையார் மாமா //
எப்படி சகா இப்படி?! :))

vinu on November 16, 2010 at 8:35 AM said...

“இதுவும் கடந்து போகும் மச்சி"


apaaala labelllu pattaaasuuuuuuuuuu

Anonymous on November 16, 2010 at 8:42 AM said...

ப‌க‌டைக்காயை உருட்டி எந்த‌ எண் வ‌ருகிற‌தோ அந்த‌ இட‌த்தில் ஒரு எண்ட்ட‌ர் த‌ட்டி வாக்கிய‌த்தை உடைத்தால் அது க‌விதையா?
--Bullet

புன்னகை on November 16, 2010 at 8:58 AM said...

மீள்பதிவா???

தராசு on November 16, 2010 at 9:04 AM said...

பிள்ளையார் மாமாவா..... அய்யோ, அய்யோ.

(டவுசர் போட்டுட்டு எழுதியது)

கார்க்கி on November 16, 2010 at 9:49 AM said...

ராம‌சாமி,
அடுத்த‌டுத்து வ‌ந்துடுச்சா? இனிமேல் கேப் விடுறேன் ச‌கா

வ‌சந்த்,
யாரா காப்ப‌த்த‌ணும் பிள்ளையாரு?

இளா,
ஹிஹிஹி

சுசி,
எழுதும்போது ஜிப்பா போட்டிருதேங்க‌

சிவா,
:))))

சுரேகா,
ரைட்டு

பிர‌தீபா,
யாருக்கு ம‌ச்சான்ஸ்???

மேவீ,
என்த‌ ஸ்டேட்ட‌ஸ் மெச‌ஜ‌ சொல்ர‌ப்பா?

பாலாஜி,
அப்ப‌டிதான் டெர‌ரா யோசிக்க‌ணும் ச‌கா :)

அனானி,
நான் எங்க‌ இத‌ க‌விதைன்னு சொல்லி இருக்கேன்?

புன்ன‌கை,
எட்ட‌ப்பி

த‌ராசு,
ந‌ன்றி. ச‌ட்டை,பேன்ட்ட‌ போட்டு இன்ச‌ர்ட் செஞ்சு ஃப‌ர‌ம‌லா எழுதிய‌து

விக்னேஷ்வரி on November 16, 2010 at 11:44 AM said...

கொஞ்சம் உங்க ஜிப்பா கலரை மாத்திப் பாருங்களேன் கார்க்கி..

நர்சிம் on November 16, 2010 at 1:05 PM said...

ரைட்ட்டு சகா

அன்புடன் அருணா on November 16, 2010 at 7:31 PM said...

அய்யய்யோ பிள்ளையார் பாவம்!

vinu on November 16, 2010 at 8:27 PM said...

engapaa enakku pathillai kaanom ellorukkum reply comment pottutu namalai vuttuteenga

கார்க்கி on November 16, 2010 at 11:26 PM said...

விக்கி,
:))))

நன்றி நர்சிம்

அருணா, ஹிஹி..டீச்சர்..

வினு, சாரிப்பா.. எப்படியோ மிஸ் ஆயிடுச்சு..

ஆதிமூலகிருஷ்ணன் on November 19, 2010 at 3:31 PM said...

இரண்டையுமே நிச்சயமாக கவிதைகளில் சேர்க்கமுடியாது. உன்னுடைய ட்விட்டர் நயம் கூட இவற்றில் இல்லை.

ஆனால் ரொம்ப நல்லாயிருந்தது. ரசனை.!

 

all rights reserved to www.karkibava.com