Nov 12, 2010

ஆள விடுறா சாமீ


 

பாட்டாளிகளின் தோழன்.. வன்னியர்களின் விடிவெள்ளி.. நாளைய தமிழகம்.. நாளைன்னைய இந்தியா.. மருத்துவர்.. அய்யா… இராமதாசு F/O சின்ன அய்யா. அண்புமணி அவர்களின் சிறப்பு பேட்டி உங்களுக்காக வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். இவரை பேட்டி எடுப்பவர் உங்கள் ஏழு…ஏழு.. ஏழு.

ஏழு : வணக்கம் அய்யா. நான் அடிக்கடி திண்டிவனம் மார்க்கமாக எங்கள் ஊருக்கு செல்வேன். அப்போது பேருந்து நிற்கும் சில வினாடிகளில் பலர் கொய்யா கொய்யா என்று ஜன்னல் வழியே நீட்டுவார்கள். அந்த கொய்யாவிற்கு அடுத்தபடி அந்த ஊரில் நிறையப் பேர் சொல்லும் வார்த்தை அய்யாதான் என்கிறார்கள். இது உண்மையா?

இராமதாசு : நான் ஒரு சராசரி மனிதன். என் கட்சிகாரர்களுக்கு இது தெரியும்

ஏழு :  உங்கள கொய்யான்னு சொல்றதே அவங்கதானே! பின்ன காங்கிரஸ்காரனா உங்கள் அய்யான்னு சொல்லுவான்?

இராமதாசு : காங்கிரஸ் நல்ல கட்சி. மக்கள் விலைவாசி உயர்வால் தினம் தினம் சாகிறார்கள். மன்மோகனை போல ஒரு சிறந்த நிர்வாகி நமக்கு கிடைக்க மாட்டார்கள். மக்கள் மத்தியிலும் ஆட்சி மாறணும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஏழு : இருங்க இருங்க. இப்ப இந்த காங்கிரஸ் ஆட்சியே இருக்கட்டும் என்கிறீர்களா? அல்லது வேண்டாம் என்கிறீர்களா?

இராமதாசு : அதை பொதுக்குழு கூட்டிதான் முடிவு செய்வோம். பாமக ஒரு ஜனநாயக கட்சி. சிலேட்டுல எழுதி காட்டணும்.

ஏழு :  ஆனா உங்க கட்சி என்பதே உங்க குடும்பம்தான் என்று சொல்கிறார்களே?

இராமதாசு : கட்சி ஆரம்பிக்கும் போதே சொல்லிவிட்டேன். என் குடும்பத்தில் இருந்து யாராவது வந்தால் நடுரோட்டில் நிற்க வைத்து சாட்டையால் அடியுங்கள் என்று

ஏழு : இப்போதுதான் அண்புமணி, செளம்யா, வேலு என பலர் வந்துவிட்டார்களே? அப்போ நடுத்தெருவில் நிற்க வைத்து சாட்டையால் அடிக்கலாமா?

இராமதாசு :  நடுத்தெருவிற்கு அவர்கள் வந்தால் அடியுங்கள்

ஏழு :  எப்படியும் 2011 தேர்தலுக்கு பிறகு கட்சியே நடுத்தெருவிற்குத்தானே வரும்?

இராமதாசு :  எப்படி தெரியும்? மன்னிக்க.. எப்படி சொல்கிறீர்கள்?

ஏழு :  2006 புதுவை. 2011 தமிழகம் என்று சொன்னது பாமக. 2006ல் புதுவை ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. அந்த லாஜிக்படி பார்த்தால் 2011 கோவிந்தா கோவிந்தாதானே?

இராமதாசு : அது பலிக்காது. 2009லே பாராளமன்ற தேர்தலில் 0 வாங்கிவிட்டோம்.

ஏழு :   அப்போ யாருடன் கூட்டணியில் இருந்தீர்கள்?

இராமதாசு : 2009 தானே? இருங்க. மணி. யாரு கூடப்ப இருந்தோம். 2009ல.

மணி : ஃபிப்ரவரிலா, நவம்பரிலா தலைவா?

ஏழு : சரியா போச்சு. விடுங்க.

இராமதாசு :  இருங்க. அன்புவ கேட்டா கரெக்டா சொல்லுவாரு. ஃபோன் போடுப்பா

ஏழு : இது என்ன லைஃப் லைனா தலைவரே? விடுங்க.

இராமதாசு :  பாமகவிடம் எதுவும் முறையா இருக்கு. அதிமுகவுடன் இருந்தோம்.

ஏழு :  அப்போ 2006ல்

இராமதாசு :திமுக

ஏழு : 2001ல்

இராமதாசு : அதிமுக.

ஏழு : 1999ல்

இராமதாசு : அன்புவுக்கு ஃபோன்.

ஏழு : வேண்டாம் சார். இன்றைய செய்திக்கு வருவோம்.

இராமதாசு : ஆமாம். நாட்டில் விலைவாசி உயர்ந்திடுச்சு. திமுக ஆட்சி சிறப்புதான் என்றாலும் மக்கள் கோவத்தில் இருக்கிறார்கள். ஜெயலலிதா கொடநாடு தொகுதியில் நிற்கலாம்.. ஆனால் அதிமுக நல்ல கட்சி. விஜயகாந்த் என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. ஆனால் அவர் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறார். கம்யூனிஸ்டுகள் இரட்டை வேடம் போடுகிறார்கள். ஆனால் இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் அவர்கள் மட்டுமே.

ஏழு : என்ன சார் பிரச்சினை? இன்னும் கூட்டணி முடிவாகவில்லையா?

இராமதாசு : நாங்கள் எப்போதும் மக்களுடன் தான் கூட்டணி.

ஏழு : திமுகவை பச்சை துரோகி என்று சொன்னீர்கள். இப்போது எப்படி அவர்களுடன் சேர முடியும்?

இராமதாசு : தமிழகத்தை பொறுத்தவரை பச்சை என்றால் அம்மா. அம்மா என்றால் அதிமுக. அப்படி என்றால் திமுக அதிமுகவிற்கு துரோகி என்று அர்த்தம். சரியாகத்தானே சொன்னேன்?

ஏழு : அம்மாவை பார்க்கவே முடிவதில்லை என்றீர்களே. அவர்களுடன் சேருமா பாமக?

இராமதாசு : வைகோ பார்க்காமலே கூட்டணியில் இல்லையா?

ஏழு : விஜய்காந்த் உங்களுடன் சேரும் வாய்ப்பு உண்டா?

இராமதாசு :  எங்களுக்கு அவர் தேவையில்லை. அவர் விரும்பினால் சேரலாம். அவரும் சின்ன கவுண்டர் என்ற படத்தில் நடித்திருப்பதால் பொதுக்குழுவில் அவர் கட்சிக்கும் ஒரு சிலேட் கொடுப்பதாக இருக்கிறோம்.

ஏழு : ஓ. என்கவுண்ட்டர் பற்றிதான் எல்லா இடத்திலும் பேசுகிறார்கள்.அது பற்றி..

இராமதாசு : என்கவுண்ட்டர் மட்டுமல்ல, எல்லா கவுண்டர்களும் வன்னியர்களே. எல்லா வன்னியர்களும் பாட்டாளிகளே. எல்லா பாட்டாளிகளும் பாட்டாளி மக்கள் கட்சியினரே

ஏழு : ஆள விடுறா சாமி.

17 கருத்துக்குத்து:

வெட்டிப்பயல் on November 12, 2010 at 12:19 AM said...

கொஞ்சம் சுமார் தான்... ஏழுக்கிட்ட இருந்து இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறோம்...

மிக்கியமாக சரக்கு மேட்டரில் ஐயாவின் கருத்து :)

பிரபு . எம் on November 12, 2010 at 12:23 AM said...

பல இடங்களில் சிரித்தேன்....
நைஸ்..

ILA(@)இளா on November 12, 2010 at 12:30 AM said...

ஆள விடுறா சாமி

Saran on November 12, 2010 at 1:04 AM said...

Super! எனக்கு என்னமோ இது நிஜ பேட்டியாகத்தான் தெரியுது. 

Saran on November 12, 2010 at 1:04 AM said...
This comment has been removed by the author.
சுசி on November 12, 2010 at 1:54 AM said...

ஹிஹிஹி.. அரசியலாவ்வ்வ்வ்..

இருந்தாலும் ஏழுவுக்காக படிச்சேன்.. :))

roomno104 on November 12, 2010 at 10:01 AM said...

nala irukku...

Mohan on November 12, 2010 at 10:11 AM said...

நிஜப் பேட்டியை விட காமெடி கொஞ்சம் குறைவாக உள்ளது:-)

மோகன் குமார் on November 12, 2010 at 10:54 AM said...

ஏழு இப்ப இவ்ளோ புத்திசாளியானார் :))

அப்போ யாருடன் கூட்டணி வைத்திருந்தீர்கள் எனபதற்கு அடுத்து வரும் பகுதிகள் செமையா சிரிக்க வைத்தன.

இதில் ஐயா தான் ஏழு போல் உள்ளார். Role reversal :))

vinu on November 12, 2010 at 11:12 AM said...

ஆள விடுறா சாமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமிமி.

ப.செல்வக்குமார் on November 12, 2010 at 3:07 PM said...

பயங்கரமா இருக்கு அண்ணா .. இன்னும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன் ..!!

தராசு on November 12, 2010 at 3:26 PM said...

நெம்ப எதிர்பார்த்து வந்தேன் சாமி, சே.. இப்பிடி ஆயிப் போச்சே.....

காவேரி கணேஷ் on November 12, 2010 at 7:29 PM said...

பாகம் 2, 3 எதிர்ப்பார்க்கிறேன்

மாணவன் on November 13, 2010 at 4:18 PM said...

செம கலக்கல்...

அப்புறம் காடுவெட்டியாரிடமிருந்து மிரட்டல் ஏதாவது வரப்போகிறது பார்த்துக்குங்க...

சும்மா தமாசுக்கு...

venkat on November 13, 2010 at 4:58 PM said...

நல்ல கலக்கல் ....

வழிப்போக்கன் - யோகேஷ் on November 13, 2010 at 11:12 PM said...

//
தமிழகத்தை பொறுத்தவரை பச்சை என்றால் அம்மா. அம்மா என்றால் அதிமுக. அப்படி என்றால் திமுக அதிமுகவிற்கு துரோகி என்று அர்த்தம். சரியாகத்தானே சொன்னேன்?
//
adada ......... enna oru vilakkam...

ஆதிமூலகிருஷ்ணன் on November 19, 2010 at 3:48 PM said...

சான்ஸே இல்ல.. :-))))))))))))

 

all rights reserved to www.karkibava.com