Nov 9, 2010

என்கவுண்ட்டர் – என் பார்வை


 

  கோவையில் நடந்த இரண்டு கொலைகளையும், அதை தொடர்ந்து நடந்த என்கவுண்ட்டர் செய்தியையும் படித்திருப்பீர்கள். நேற்று ட்விட்டரில் நடந்த ஒரு உரையாடலில் இது குறித்து இரு வேறு விதமான பார்வைகளை காண முடிந்தது. பச்சிளங்குழந்தையை கொன்றவனை சுட்டு வீழ்த்தியது சரிதான் என்பதே பலரது எண்ணமாக இருக்கிறது. எந்தவொரு விஷயத்தையும் உற்று நோக்கும் அறிவுஜீவிகளுக்கு இந்த என்கவுண்ட்டர் அதிர்ச்சியான விஷயமாக தெரிகிறது. போதாக்குறைக்கு இதை ஆதரிப்பவர்களை ஏதோ பெரிய ஆபத்தான விஷப்பாம்பாக நினைத்து சிலர் பதிவிட்டிருக்கிறார்கள். சில மாதங்கள் முன்பு சென்னையில் ஒரு பெண் 4 மாத குழந்தையை கொன்றபோது ஏன் என்கவுண்ட்டர் ஆயுதத்தை எடுக்கவில்லை என்றும் சிலர் கேட்கிறார்கள். எல்லா கொலையாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு அவர்கள் செவி சாய்க்க தயாரில்லை.

  உண்மையில் இந்த என்கவுண்ட்டரை ஆதரிக்கும் மக்களின் உண்மையான மனநிலை என்ன? அவர்களை பொறுத்தவரை இரண்டு பச்சிளங்குழந்தைகளை கொன்ற ஒருவனுக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. அது என்கவுண்ட்டர் மூலமாக என்பது அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான். இதே மோகன்ராஜ் ஒரு விபத்தில் இறந்திருந்தாலும் மக்கள் ஸ்வீட் எடு கொண்டாடு என்றுதான் இருந்திருப்பார்கள். அவர்களுக்கு தேவை மோகன்ராஜ் சாக வேண்டும். அதில் ஒன்றும் தவறிருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை. நம்ம வீட்டில் ஒரு துக்க சம்பவம் நடந்து நாம் சம்பந்தப்பட்டவர் சாக வேண்டும் என்று நினைத்தால் அது வழக்கமான விஷயம்தான். ஆனால் இரண்டு குழந்தைகள் இறந்ததற்கு காரணமானவனின் மரணம் இத்தனை பேருக்கு நிம்மதி என்றால் மக்கள் மனதில் கொஞ்சம் ஈரம் இருக்கிறது என்ற கோணத்திலும் பார்க்கலாம் அல்லவா? இதே என்கவுண்ட்டர் ஆயுதம் மூலம் நிரபராதிகளை காவல்துறை கொன்றால் என்ன ஆவது என்ற கேள்விகளுக்கு அவர்கள் இப்போது தயாரில்லை. இது விதிவிலக்கான வழக்கு.

என்கவுண்ட்டரை எதிர்ப்பவர்களிடமும் நியாயமான காரணம் இருக்கிறது. இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா என்கிறார்கள். 1996ல் நாவரசு என்ற மாணவனை பகடிவதை, ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியது என்று போய் இறுதியில் வெட்டிக் கொன்றவனுக்கு என்ன கிடைத்தது? கண்ணுக்கு கண் என்றால் உலகமே குருடாகிவிடும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. கண்ணுக்கு கண் கூடாதென்றால் மூக்கை எடுக்கலாமா? கையை வெட்டலாமா? தண்டனை என்று வந்துவிட்டாலே அது பழிக்குப் பழிதானே? இன்னும் சிலர் உலக அளவில் வறுமையில் தினம் தினம் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் சாகும்போது இந்த இரண்டு குழந்தைகள் மட்டும் என்ன ஸ்பெஷல் என்கிறார்கள்? நம் வீட்டில் எழவு விழுந்தால் வேலையை விட்டுவந்து அழுகிறோம். பக்கத்து தெருவில் விழுந்தால் அப்படி செய்கிறோமா? இவர்கள் லாஜிக்படி பார்த்தால் எதுவுமே செய்ய முடியாது. இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாடுபவர்கள் பல பேர் இருக்க Save tiger என்று பணத்தை செலவழிக்க வேண்டிய தேவையென்ன அரசுக்கு?

ஒரு சிலர் சொல்கிறார்கள் மோகன்ராஜுக்கு தேவை மனநல மருத்துவரின் ஆலோசனையாம். பலே வெள்ளையத்தேவா. இந்த மாதிரி சமூக குற்றங்களின் மூலக்காரணங்கள் களையப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இது போன்ற குற்றவாளிகளை ஏதோ அறியாப்பிள்ளை என்ற ரீதியில் எப்படி பார்ப்பது? இந்திய பீனல் கோட் கொலைகள் எல்லாவற்றையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவில்லை. திட்டமிட்டு செய்யப்படும் கொலைகளும், உணர்ச்சியின் உந்துதலில் செய்யப்படும் கொலைகளும் வெவ்வேறாகத்தானே பார்க்கிறது? இந்த மோகன்ராஜ் செய்த குற்றம் 100%  உண்மையாகத்தான் தெரிகிறது.அதை சொல்ல நீ யார்? நீதிமன்றத்தின் வேலை என்ன என்று கூக்குரலிடும் இவர்களேதான் 25 வருடம் தாமதமாக வெளியான இன்னொரு வழக்கின் முடிவு கேட்டு கண்டித்து பேசினார்கள். இது நிச்சயம் விதிவிலக்கான வழக்கு. இதில் மோகன்ராஜின் குற்றம் தெளிவாக தெரிந்ததால் தான் மக்களின் ஆதரவு இந்த என்கவுண்ட்டருக்கு கிடைத்திருக்கிறது.

  எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து மைக்ரோஸ்கோப் கண்களால் பார்க்கும் அறிவுஜீவிகள் மக்கள் ஆதரிப்பது மோகன்ராஜ் என்ற பாதகனின் மரணத்தைத்தான். என்கவுண்ட்டர் என்ற செயலை அல்ல என்பதை மட்டும் புரிந்துக் கொள்ள மறுப்பது ஏன்? இந்த செயலால் இது போன்ற செயலை செய்ய நினைத்திருந்த ஒரு சிலராவது பயந்திருக்க மாட்டானா? அதெல்லாம் மாட்டான் என்பீர்களேயானால் என்ன எழவுக்கு தண்டனைகள்? காசுக்காக தப்பு செய்தவனை கொல்ல வேண்டும் என்றால் எல்லோரையும் போட்டுத் தள்ள வேண்டுமென்கிறார் நண்பரொருவர். பாலியல் பலாத்காரம் செய்பவன் குற்றவாளியல்ல. அடிப்படை உணர்வான காமம் ஒருவனுக்கு மறுக்கப்படும் இந்தியா போன்ற நாட்டில் இது நடக்க கூடியதுதான். அவனுக்கு தேவை அறிவுரையும், தடையற்ற காமமும்தான் என்று சொல்ல முடியுமா? எல்லா குற்றத்திற்கு பின்னாலும் ஒரு தேவை இருக்கிறது. ஒரு மனிதனுக்கு வரும் எல்லாத் தேவைகளுமே அவரவர்க்கு நியாயமானதுதான். இந்த ரீதியில் பார்த்தால் எல்லாமே சரியாகுமே!

மோகன்ராஜ் செய்த குற்றம் நிரூபிக்கப்படவில்லையென்றால் மக்களின் அனுதாபம் நிச்சயம் அவனுக்கு கிடைக்கும்.என்னை பொறுத்தவரை மக்கள் சரியாகவே இருக்கிறார்கள். அவர்கள் கொண்டாடுவது இரண்டு குழந்தைகளை கொன்ற ஒரு காட்டுமிராண்டியின் மரணத்தைத்தான். அதுவும் தீபாவளி முடிந்தவுடன் நடந்த இந்தச்செயல் அவர்களுக்கு நரகாசூரனை நினைவுப்படுத்தியிருக்கலாம். இதை இந்த கோணத்தில் அணுகாமல் மக்கள் எல்லோரும் ஈரமேயில்லாத மனிதர்களாக மாறிவிட்டதாக நினைத்து வருந்துபவர்கள் மீதுதான் எனது அனுதாபம். என்கவுண்ட்டரை மக்கள் ஆதரிப்பதா என்று கேட்பவர்கள் மீதுதான் என் வருத்தம்.

63 கருத்துக்குத்து:

ராஜவம்சம் on November 9, 2010 at 11:03 PM said...

+1

கார்த்தி on November 9, 2010 at 11:11 PM said...

நல்ல பகிர்வு சகா... என்ன இந்த தடவ கதை திரைகதைல நம்ம போலீஸ் கொஞ்சம் சொதப்பிடுச்சு... இன்னும் நல்ல பிளான் பன்னிருக்கலாமோ :(

தாரணி பிரியா on November 9, 2010 at 11:17 PM said...

ம் இது கொண்டாடப்பட வேண்டிய கொலை.இந்த என் கவுண்டர் மகிழ்சி அளிக்கிறது.

வெறுமை on November 9, 2010 at 11:21 PM said...

நல்லா தெளிவா சொல்லியிருக்கிறிங்க...

king on November 9, 2010 at 11:26 PM said...

rombo nalla pathivu nanba..sooper

தமிழ்ப்பறவை on November 9, 2010 at 11:36 PM said...

நல்ல பார்வை சகா...

thangaraju on November 9, 2010 at 11:49 PM said...

நல்லா தெளிவா சொல்லியிருக்கிறிங்க...

T.V.ராதாகிருஷ்ணன் on November 9, 2010 at 11:54 PM said...

Good

சுசி on November 10, 2010 at 12:05 AM said...

நல்லா எழுதி இருக்கிங்க கார்க்கி.

ILA(@)இளா on November 10, 2010 at 12:13 AM said...

காவல்துறைக்கு அதிகாரமிருக்கா கொலை செய்ய? அப்ப அதிகாரமில்லாத காவல்துறை கொலைசெய்யலாம்னா பொதுமக்களும் கொலை செய்யலாம். அப்ப கெட்டவனைக் கொல்ல எனக்கு உரிமை இருக்குதுதானே? செய்யலாமா? தண்டைனைகள் உணர்வுரீதியா கிடைக்கனும்னா இந்தியாவுல் ஒரு பய உயிரோட இருக்க மாட்டான்.

சவுதிக்கும் நமக்கு வித்தியாசம் இல்லாம பண்ற வழி இது

அனுஜன்யா on November 10, 2010 at 12:34 AM said...

எப்போதுமே ராங் எனப்படும் தொடை நடுங்கி மிடில் கிளாஸ் மாதவன்களுக்கு உன்ன மாதிரி 'ராங்கா இருந்தாலும் ஸ்ட்ராங்கா' இருக்கும் தலைவர்கள் தேவைதான்.

Though you have thrown in a different perspective to public mindset, my opinion is divided on this. But I admire your guts - as always.

அனுஜன்யா

அனுஜன்யா on November 10, 2010 at 12:43 AM said...

இளா - காவல் துறைக்கு அதிகாரம் இல்லை. அதனால் தான் என்கவுன்டர் என்னும் நாடகம். சட்டத்தில் உள்ள ஒரு வலுவற்ற இடம் - தற்காப்புக்காக எதையும் செய்யலாம் - கொலை உட்பட. அதைத்தான் என்கவுன்டர் நாடகம் மூலம் காவல் துறை நிறைவேற்றுகிறது. இது நடந்து இருக்காவிட்டால், 'குழந்தைகள் என்னைக் கடத்தி கொல்ல முயன்றார்கள். எனது தற்காப்புக்காக அவர்களைக் கொல்ல வேண்டி வந்தது' என்று சொல்லி மோகன்ராஜ் விடுதலையாகும் சாத்தியக் கூறுகளுக்கும் நீங்கள் மிகவும் மதிக்கும் இந்திய சட்டம் வழி செய்திருக்கும். கார்க்கி இங்கு என்கவுன்டர் நாடகங்களை நியாயப் படுத்தவில்லை. பொதுமக்கள் மனதளவில் ஆசைப்பட்ட, தங்களால் செயல்படுத்த இயலாத ஒரு தண்டனை நிகழ்ந்ததை கொண்டாடும் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

அனுஜன்யா

மதுரை சரவணன் on November 10, 2010 at 1:00 AM said...

நியாயமான என்கவுண்டர் பண்ண வேண்டியது தான் நியாயம்.. பிறருக்கு பாடமாக இருக்கும்..

ILA(@)இளா on November 10, 2010 at 1:04 AM said...

//பொதுமக்கள் மனதளவில் ஆசைப்பட்ட//
எதற்கும் ஒரு நடைமுறைன்னு ஒன்னு வேணுங்க. இன்னிக்கு காவல்துறை சரின்னு நினைச்சது செஞ்ச்சாச்சு. மக்கள் மனதளவில் கல்லால என்ன ** துண்டாக்கனும்னு கூட நான் நினைச்சது உண்டு. நான் செய்ய முடியுமா? செஞ்சா சரியா? அதையே காவல்துறை செய்யலாமா? ஏற்கனவே காவல்துறை ஒரு கைப்பாவை ஆகிட்டு வருது, இதுல இதுவுமா? இப்படி நல்லது செய்யறதுதான் சட்டமா? சட்டங்கள் திருத்தப் பட வேண்டும், அதற்கு காவல்துறை முதல்ல நல்லவங்களாக வேண்டும். விடுங்க சினிமா வசனம் மாதிரி ஆகிடும்.

ILA(@)இளா on November 10, 2010 at 1:15 AM said...

அவன் கொல்லப்பட்டதில் எனக்கும் சந்தோசமே.ஆனால் அது முறைப்படி நடந்திருக்க வேணும். போலீஸே தண்டல்காரனானதில்தான் எனக்கு வருத்தம் கோவம் எல்லாம். இது டிஸ்கிக்காக போடுற பின்னூட்டம். ட்விட்டரில் ஒத்த ஆளா நின்னு ஆடியாச்சு, சலிச்சும் போச்சு. டாடோ டாட்

Itsdifferent on November 10, 2010 at 1:41 AM said...

This is wrong. In a democratic country, if we want to be a responsible power in the world, we have to show that our laws work. Why did not they try to accelerate the case, and execute him in a timely fashion? That would have been a demonstrable solution and an example for all other cases pending.
Emotions support such action, but responsibility shows a different path.

damildumil on November 10, 2010 at 3:00 AM said...

இந்த சம்பவத்தில் அவனுக்கு சிறிதளவு பங்கு இருந்தாலும் அடித்தே கொல்ல வேண்டிய நாய் தான் அது. இந்த என்கவுண்டர் இனி மத்தவன் தப்பு செய்ய தோனும் போது வந்து நியாபக படுத்தும். அதுனால ஒரு குற்றம் தவிர்க்கபட்டாலும் அது மகிழ்ச்சியே

தீபாவளி அன்னைக்கு இந்த நாய போட்டிருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்

ஸ்ரீநாராயணன் on November 10, 2010 at 3:22 AM said...

The accused should get the highest punishment if proven guilty - no other thoughts with this.

The incident is clearly not an accident and accused was killed
and has political motivation.

If criminals are killed like this why do we have court? What if Mohanraj(accused) was framed by police ? Who knows? If government wanted they could have urged the court proceedings. But this killing is fishy.....

யாசவி on November 10, 2010 at 6:52 AM said...

இளா +1

யாசவி on November 10, 2010 at 6:56 AM said...

கார்க்கி,

பொதுவாக எல்லோருமே ஒத்து போகிறோம்.

ஆனால் தண்டனை வழங்கப்பட்ட விதத்தில் வேறுபடுகிறோம்.

அன்பே சிவத்தில் கமல் சொல்வதை போல கோபத்தை நிதானமாக வெளிப்படுத்தணும். இந்த வேகத்தை கேஸ் நடத்தி தண்டனை வழங்கி நிறைவேற்றி இருந்தா பிற்காலத்தில் செய்ய நினைப்பவனுக்கும் ஒரு பயம் வரும்.

இப்ப இருக்கிற மெக்கனிசம் என்னவென்றால்

என்கவுண்ட்டர் = பாதிக்கப்பட்டவர்களின் பலம் X அரசியல் ஆதாயம்

என்பதாக இருக்கிறது. இதன் மூலம் ஒரு நிரந்தர தீர்வும் ஏற்படாது.

என்னுடைய சொந்த கருத்து மட்டுமே. யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்

புருனோ Bruno on November 10, 2010 at 8:20 AM said...

//எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து மைக்ரோஸ்கோப் கண்களால் பார்க்கும் அறிவுஜீவிகள் மக்கள் ஆதரிப்பது மோகன்ராஜ் என்ற பாதகனின் மரணத்தைத்தான். என்கவுண்ட்டர் என்ற செயலை அல்ல என்பதை மட்டும் புரிந்துக் கொள்ள மறுப்பது ஏன்? //

எண்கவுண்டருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மோகன்ராஜ் தண்டிக்கப்படவேண்டும் என்பதை எதிர்க்கவில்லை என்பதையும்,
எண்கவுண்டருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மோகன்ராஜுக்கு ஆதரவானவர்கள் அல்ல என்பதையும்,
எண்கவுண்டருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மோகன்ராஜின் செயலை நியாயப்படுத்தவில்லை என்பதையும்,
எண்கவுண்டருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் எதிர்ப்பது எண்கவுண்டரைத்தான் என்பதையும்

உணர்ச்சிவசப்படுவர்கள் புரிந்து கொள்ள மறுக்கும் அதே காரணம் தான்

மாணவன் on November 10, 2010 at 8:26 AM said...

”என்கவுண்ட்டர் – என் பார்வை”

நல்ல ஒரு விரிவான அலசல்

சிறப்பாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கீங்க...

பகிர்விற்கு நன்றி

புருனோ Bruno on November 10, 2010 at 8:26 AM said...

ஏதோ அவசரத்திற்கு (உதாரணமாக ஒரு அவசர சிகிச்சைக்கு இரத்த தானம் செய்ய செல்கிறீர்கள். நேராக தொடர்வண்டியில் ஏறி விட்டீர்கள்) நீங்கள் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்கிறீர்கள்
அப்பொழுது உங்களை சோதிக்கும் பயணச்சீட்டு பரிசோதகர் உங்களுக்கு அபராதம் போட்டால் அவர் அறுவை சிகிச்சைக்கு எதிரானவர் அல்ல

--

நீங்கள் செல்லும் காரியத்தின் நியாயம் கருதி, நீங்கள் பயணச்சீட்டு எடுக்காததை பயணச்சீட்டு பரிசோதகர் கண்டுகொள்ளாமல் விட வேண்டும் என்று கூற முடியுமா

--

இளா சார்
அனுஜன்யா சார்

நான் சொல்வது சரியா

Sri on November 10, 2010 at 8:33 AM said...

அருமையான கட்டுரை...
நான் இந்த encounter மேலிடத்து அனுமதி பெற்ற பிறகே நடந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக எண்ணுகிறேன். போலீஸ் மற்றும் ஆட்சி மேலிடம், இது போன்ற குற்றசெயல்களை நடத்த எண்ணுவோருக்கு ஒரு warning/deterrent ஆக இதை நடத்தி இருக்கலாம்.....

Srini

சிவா on November 10, 2010 at 8:48 AM said...

செமையா சொல்லிட்டீங்க சகா! உண்மை இது... யாரும் என்கவுண்டரை கொண்டாடவில்லை, மோகன்ராஜின சாவைத்தான் கொண்டாடுகிரார்கள்!!!

ரவிச்சந்திரன் on November 10, 2010 at 9:05 AM said...

Good... நியாமான என்கவுண்டர்கள் கட்டாயம் தேவை.

bullet on November 10, 2010 at 10:36 AM said...

புரூனோ அவ‌ர்க‌ளே,

போலிஸீன் இந்த‌ செய‌லை வ‌ர‌வேற்ற‌ யாரும் இந்த‌ என்க‌வுன்ட்ட‌ரை எதிர்ப்ப‌வ‌ர்க‌ளை க‌ண்டிக்க‌வில்லை. அவ‌ர்க‌ள் ச‌முதாய‌த்தின் நோய் என்று சொல்ல‌வில்லை. ஆனால் எதிர்க்கும் ப‌ல‌ர் ஆத‌ரிப்ப‌வ‌ர்களை ச‌மூக‌ நோய், ஆப‌த்தான‌ ம‌ன‌நிலை கொண்ட‌வ‌ர்க‌ள் என்று எழுதியிருக்கிறார்க‌ள்.மேலும் எல்லா என்க‌வுன்ட்ட‌ரையும் எல்லோரும் ஆத‌ரிக்க‌வில்லை. இந்த‌ வ‌ழ‌க்கு விதிவில‌க்கான‌து என்று க‌ட்டுரை ஆசிரிய‌ர் சொல்லியிருக்கிறார். ஒரே வ‌ரியை ப‌ல‌முறை சொல்லியிருக்கும் தொனியிலே உங்க‌ள் வாத‌ம் திசைமாறுகிற‌து. அதாவது க‌ருத்தை முன்வைத்து வாதிடுவ‌தை பின்னுக்குத்த‌ள்ளி அவ‌ன‌து ஈகோவை எழுப்பும் முய‌ற்சி அது.

மேலும் ஒரு உதார‌ண‌ம் சொல்லியிருக்கிறீர்க‌ள். அந்த‌ டிக்கெட் ப‌ரிசோத‌க‌ருக்கு உண்மையிலே அவ‌ன் அறுவை சிகிச்சை போக‌ வேண்டிதான் அவ‌ச‌ர‌மாக‌ ஏறினான் என்ப‌து தெரிந்தால் அவ‌ரே அவ‌னுக்காக‌ டிக்கெட் வாங்குவார். அல்ல‌து குறைந்த‌ அப‌ராத‌ம் போடுவார்.இந்த‌ விஷ‌ய‌த்தில் மோக‌ன்ராஜ் கொலை செய்த‌து முழுமையாக‌ தெரிந்த‌தாலே காவ‌ல்துறை இதை செய்திருக்கிற‌து.‌ இந்த‌ பாவியை கொல்வ‌த‌ற்காக‌ ர‌த்த‌ம் சிந்தியிருக்கிறாரே ஒரு துணை ஆய்வாள‌ர் அதுதான் அப‌ராத‌ம். அது நாட‌க‌ம் என்றாலும் அவ‌ருக்கு காய‌ம் ப‌ட்டிருப்ப‌து உண்மை. அது போதாதா?

அனுஜன்யா on November 10, 2010 at 11:03 AM said...

ரொம்ப விரிவாகப் பேச வேண்டிய விதயம் இது. பின்னூட்டத்தில் எவ்வளவு நேரம், இடம் கார்க்கி தருவான்னு தெரியவில்லை.

இளா, புருனோ மற்றும் ஸ்ரீதர் - சந்தேகமே இல்லாமல் என்கவுன்டர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய விதயம். ஆனால், கார்க்கி சொல்ல வருவதாக நான் புரிந்து கொண்டது - மக்கள் இந்த மரணத்தைக் கொண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டதை.

மிகப் பெரிய குற்றங்களைச் செய்தவர்களின் 'மனநிலையை' கூட ஆராய வேண்டும் என்று பரிந்துரைக்கும் சிந்தனையாளர்கள் (அறிவுஜீவிகள் என்பது கிட்டத்தட்ட கெட்ட வார்த்தை ஆகிவிட்டது) 'பொதுப்புத்திகளின்' கொண்டாட்டம் ஏனென்று ஆராய முன் வராதது எனக்கு ஆச்சரியமாக இல்லை. சிந்தனையாளர்களின் கோட்பாடை கொஞ்சம் சௌகரியமாக over-simplify செய்தால் கிடைக்கும் உண்மை: 'பொதுப்புத்தி எதைச் செய்தாலும் மூர்க்கமாக எதிர்வினை செய்'. அவர்களைக் குற்றம் சொல்ல இயலாது. 95% அவர்களுக்கு பொதுப்புத்திக்காரர்களின் எண்ணங்களும், செயல்களும் அவ்வளவு எரிச்சல் ஏற்படும் வண்ணம் அமைந்திருக்கின்றன. அதனால் மீதம் 5% நியாயம் இருந்தாலும் அதை அவர்கள் பொருட்படுத்தத் தயாராகவில்லை என்று தோன்றுகிறது.

என்னைப் பொறுத்த வரையில், இந்த என்கவுன்டர் சற்றும் நியாயமற்றது. ஆனால் சட்டப்படி (அதாவது அதன் ஓட்டைகளின் ஊடே) செல்லுபடியாகக் கூடியது. பொதுமக்களின் மனநிலையை ஆதரிக்கா விட்டாலும் புரிந்து கொள்கிறேன். இது அவர்கள் காவல் துறை வாயிலாக சட்ட, நீதித் துறைகளின் மெத்தனங்கள் மற்றும் கையாலாகத் தனங்களின் மீது துப்பிய எச்சில்.

எனக்கு இந்த என்கவுண்டரில் அதிக எரிச்சல் வருவதற்கு பிரதான காரணி - கொலைத் தண்டனை என்னும் சித்தாந்தத்தில் எனக்கு இருக்கும் பெரிய எதிர்ப்பு. நீதி மன்றங்கள் நீண்ட விவாதங்கள் மற்றும் சிந்தனைகளுக்குப்பின் தயக்கத்துடன் எடுக்கும் மரண தண்டனையை காவல் துறை சாக்லேட் சாப்பிடும் இலாகவத்துடன் கையாள்வதைப் பார்க்கையில் பொங்கும் கோபம். இது முற்றிலும் வேறு சப்ஜெக்ட். இதில் நான் முற்றிலும் லக்கி கட்சிதான்.

ஹ்ம்ம், ஒரு சோடா ப்ளீஸ்.

அனுஜன்யா

குசும்பன் on November 10, 2010 at 11:34 AM said...

இளா சட்டப்படி கடுமையான குற்றங்களுக்கு கிடைத்த தண்டனைகள் விவரம் தரமுடியுமா?

மும்பையில் ஒரு நர்ஸ் பலாத்காரம் செய்யப்பட்டும் இன்றும் கோமாநிலையில் இருக்கிறார், அந்த தவறை செய்தவனுக்கு என்ன தண்டனை கிடைத்ததுன்னு சொல்லமுடியுமா?

சவுதிக்கும் நமக்கும் வித்தியாசமே வேண்டாங்க... கற்பழிச்சியா குஞ்ச கட் செஞ்சு கொஞ்சம் மிளகாய் பொடி தடவி உடு மாதிரியான தண்டனைதாங்க வேண்டும்.

தராசு on November 10, 2010 at 12:58 PM said...

வினை விதைத்தவன் தினை அறுத்ததில்லை.
அனுஜன்யா அண்ணனின் வாத்தத்தில் இதை ஒரு புது தளத்திற்கு இட்டுச் செல்கிறாரோ என தோன்றுகிறது.

//பொதுமக்களின் மனநிலையை ஆதரிக்கா விட்டாலும் புரிந்து கொள்கிறேன். இது அவர்கள் காவல் துறை வாயிலாக சட்ட, நீதித் துறைகளின் மெத்தனங்கள் மற்றும் கையாலாகத் தனங்களின் மீது துப்பிய எச்சில்.//

என்கவுண்டர் என்பதும் ஒரு கொலையாயிருக்கும் பட்சத்தில் இந்த கொலை கொண்டாடப்படுவது ஏன்? சாமான்யர்களுக்குள்ளே இவ்வளவு வன்மம் புதைந்து கிடக்கிறதா????

புருனோ Bruno on November 10, 2010 at 1:03 PM said...

//
என்கவுண்டர் என்பதும் ஒரு கொலையாயிருக்கும் பட்சத்தில் இந்த கொலை கொண்டாடப்படுவது ஏன்? சாமான்யர்களுக்குள்ளே இவ்வளவு வன்மம் புதைந்து கிடக்கிறதா???? //

அது வன்மமா

அல்லது

10 வயதில் பெண் குழந்தையை பள்ளிக்கு அனுப்புபவர்கள் வயிற்றில் கட்டிக்கொண்டிருக்கும் நெருப்பா ??

புருனோ Bruno on November 10, 2010 at 1:07 PM said...

//ஒரே வ‌ரியை ப‌ல‌முறை சொல்லியிருக்கும் தொனியிலே உங்க‌ள் வாத‌ம் திசைமாறுகிற‌து. //

அது ஒரே வரி என்ற உங்கள் புரிதல் தான் இங்கு பிரச்சனை

நீங்கள் உங்கள் என்பது உங்கள் ஒருவரை மட்டுமல்ல

//அதாவது க‌ருத்தை முன்வைத்து வாதிடுவ‌தை பின்னுக்குத்த‌ள்ளி அவ‌ன‌து ஈகோவை எழுப்பும் முய‌ற்சி அது.//

கண்டிப்பாக இல்லை

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on November 10, 2010 at 1:09 PM said...

ஒருவேளை அவன் நிரபராதியாக இருந்தால் என்ற கேள்வி இதுவரை குற்றம்சாட்டப்பட்டு எல்லா தரப்பிலும் குற்றவாளியாக்கி/நிரபராதியாக்கி நீதி சொன்ன எல்லா நீதிமான்களுக்கும், கேஸ்களுக்கும், அப்பாவி என்று தீர்பளிக்கப்பட்ட எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்.

அதுக்கு நீ பொங்கினியா? இதுக்கு நீ பொங்கினியா என்ற கேள்வியெல்லாம் ஆதாம் காலத்திலிருந்து யாராவது பொங்கல் வைத்திருந்தால் அவர் கேட்க வேண்டிய கேள்வி.

விபத்துகள் வேறு, அலட்சியங்கள் வேறு, திட்டமிட்டு குற்றம் புரிவதென்பது வேறு.

குற்றம் செஞ்சானா, போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணி, கோர்ட்ல நிறுத்தி, கேஸ நடத்தி, வாய்தாவாங்கு என்ற ’பொது புத்தியிலிருந்து’ விலகி எழுதியதற்கு வாழ்த்துகள் கார்க்கி!

புருனோ Bruno on November 10, 2010 at 1:15 PM said...

//மேலும் ஒரு உதார‌ண‌ம் சொல்லியிருக்கிறீர்க‌ள். அந்த‌ டிக்கெட் ப‌ரிசோத‌க‌ருக்கு உண்மையிலே அவ‌ன் அறுவை சிகிச்சை போக‌ வேண்டிதான் அவ‌ச‌ர‌மாக‌ ஏறினான் என்ப‌து தெரிந்தால் அவ‌ரே அவ‌னுக்காக‌ டிக்கெட் வாங்குவார். அல்ல‌து குறைந்த‌ அப‌ராத‌ம் போடுவார்.//

இரண்டும் தவறு !!

சரியான அளவு அபராதம் போட வேண்டும்

அந்த அபராதத்தை அவர் கட்டலாம். அதில் தவறில்லை

ஆனால் அபராதத்தின் அளவை குறைப்பது தவறு


இந்த மெல்லிய வித்தியாசத்தை நீங்கள் (நீங்கள் என்பது நீங்கள் ஒருவரை மட்டுமல்ல) புரிந்து கொண்டால் இங்கு விவாதமே இல்லை

நான் ஏற்கனவே கூறியபடி, பெண்குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் தகப்பன்களும் தாய்களும் கடந்த இருவாரமாகவே “நம்ம குழந்தையை யாராவது கடத்தி விடுவார்களோ” என்று பயந்தது உண்மை.

சிலர் அதை வெளிகாட்டாமல் இருக்கலாம் !!

அப்படி பயந்தவர்களுக்கு இந்த எண்கவுண்டர் ஒரு நிம்மதியை அளித்துள்ளது

அந்த நிம்மதி பெருமூச்சையும் புரிந்து கொள்ள வேண்டும்

அதே நேரம்

அந்த நிம்மதியை பெற்றோருக்கு வழங்கிய ஒரே காரணத்தினால் ............. ???? இங்கு தான் கேள்வி தொக்கி நிற்கிறது

புருனோ Bruno on November 10, 2010 at 1:22 PM said...

இதையே மாற்றி அடுத்த பக்கத்திலிருந்து பார்போம்

--

குழந்தையை கடத்தி ஒரு 50 லட்சம் கேட்போம்

கிடைத்தால் வேறு ஊருக்கு சென்று செட்டிலாகி விடலாம்

அப்படியே மாட்டிக்கொண்டால் 2 வருசம் உள்ள இருந்து விட்டு வந்து விடலாம்

என்ற எண்ணத்தில் ஒரு 100 பேர் கிளம்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்

அப்படி ஒரு 90 பேராவது குழந்தையை கடத்தி விட்டால், அதில் ஏதாவது பிரச்சனையாகி ஒன்றிரண்டு குழந்தைகளின் உயிருக்காவது ஆபத்து ஏற்படும்

அந்த குழந்தை உங்களுடைய குழந்தையாகவும் இருக்கலாம்


இது போன்ற நிலை வராமல் இருக்க, குழந்தையை கடத்தினால் தண்டனை நிச்சயம் என்ற செய்தியை அனைவருக்கும் உரக்க அறிவிக்க வேண்டிய அவசியம் காவல்துறையினருக்கு ஏற்பட்டு விட்டது.

இது வரை நியாயம்... ஆனால்........ ???

நிஜாம் என் பெயர் on November 10, 2010 at 1:29 PM said...

@ILA(@)இளா

//சவுதிக்கும் நமக்கு வித்தியாசம் இல்லாம பண்ற வழி இது//

உங்களுக்கு சவுதி மேலே அப்படி என்ன
கோவமா?
பொறாமையா?
superiority complex?

நீங்க உங்கள எழுத்துல நல்லவரா காட்ட நினச்சாலும் , வஞ்சம் உங்க மனசில இருக்கு

அன்புடன்-மணிகண்டன் on November 10, 2010 at 2:47 PM said...

Good Post Karki...

இந்த விஷயத்தில் இன்னும் சிலர் சொல்லியிருக்காங்க.. போலீஸ் சீக்கிரம் இந்த நடவடிக்கை எடுக்கக் காரணம் பாதிக்கப் பட்டவங்க மேட்டுக் குடியாம், அதிகார வர்க்கமாம், மேல் ஜாதியாம்...
அவங்க என்ன எதிர்பார்க்கறாங்கன்னு யூகிக்க முடியுது..
இதுல கூடவா.. ச்சே.. என்ன கொடுமை சார் இது..

என்.விநாயகமுருகன் navina14@hotmail.com on November 10, 2010 at 10:15 PM said...

//இந்த செயலால் இது போன்ற செயலை செய்ய நினைத்திருந்த ஒரு சிலராவது பயந்திருக்க மாட்டானா?

பலே வெள்ளையத்தேவா. அப்படி பார்த்தால் கபிலன், ஆசைத்தம்பி, பாக்சர் வடிவேலு,அயோத்திகுப்பம் வீரமணி போன்றோரின் என்கவுண்டர்களுக்கு பிறகு நாட்டில் ரவுடியிசம் ஒழிந்துவிட்டதா? பலே வெள்ளையத்தேவா. பலே

என்.விநாயகமுருகன் navina14@hotmail.com on November 10, 2010 at 10:25 PM said...

இ‌து எலக்சன் நேரம்.மீடியாக்கள் இதை உணர்வு பூர்வமாக மக்களிடம் கிளறி விட்டார்கள். ஜெயலலிதா வேறு சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது எ‌ன்று கத்த ஆரம்பித்தார். காவல்துறையை நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் தமிழக முதல்வர். என்கவுண்டர் மூலம் இழந்த மதிப்பும், சட்டம் ஒழுங்கும் மீண்டும் நிலை நாட்டப்பட்டுள்ளதாக ஒரு மாயை தமிழகத்தில் எழுந்துள்ளது. அதாவது இந்த என்கவுண்டர் மூலம் மக்கள் அந்த இளம்குழந்தைகளின் கொலைகளை மறந்துவிட்டார்கள். ஒரு பிரச்சினையை தீர்க்க இன்னொரு பிரச்சினையை உருவாக்கு, அல்லது பிரச்சினையை எழுப்பியவனை தீர்த்துக்கட்டு.ஒருபோதும் பிரச்சினைகளை மட்டும் தீர்த்துவிடாதே. அதுதான் அரசியல் சாணக்யம்.

bullet on November 11, 2010 at 12:22 AM said...

விநாயகமுருகன்,

காசு கொடுத்து கவிதை தொகுதி போடத் தெரிந்த உங்களுக்கு தமிழ் புரியாமல் போனது ஆச்சரியம்.ஒருவராவது மனம்மாறியிருக்க மாட்டாரா என்றுதான் கட்டுரையில் ஆசிரியர் கேட்டிருக்கிறார்.
//இந்த செயலால் இது போன்ற செயலை செய்ய நினைத்திருந்த ஒரு சிலராவது பயந்திருக்க மாட்டானா//

அப்படி பார்த்தால் வீரமணி என்கவுண்ட்டருக்கு பிறகு ரவுடியிசம் குறைந்திருக்குமே அன்றி முற்றிலும் ஒழியாது. சென்னைவாசிகளிடம் கேட்டுப்பாருங்கள். வீரமணி சாவுக்குப் பின் அவனைப் போன்ற ரவுடிகளின் கொட்டம் அடங்கியதா இல்லையா என்று

ரிஷபன்Meena on November 11, 2010 at 2:29 AM said...

முன்னாபாய்-2-ல் ஆறு மாதத்துக்குள் கேசு முடிந்திடும் எனும் வக்கீலை பார்த்து , பரவாயில்லை ஆறு வருசத்தில் முடியும்னு எழுதிக் கொடு என்பார் ஹீரோ, அதெல்லாம் முடியாது லேட்டானாலும் ஆகும் என்று மறுப்பார் வக்கீல் .

இந்த லட்சனத்தில் பொதுமக்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்று எள்ளல் வேறு (இவர்கள் சராசரி இல்லையாம் அதை விட ஒரு படி மேல அறிவு ஜீவிகளாம்.)

//இரண்டும் தவறு !!

சரியான அளவு அபராதம் போட வேண்டும்

அந்த அபராதத்தை அவர் கட்டலாம். அதில் தவறில்லை

ஆனால் அபராதத்தின் அளவை குறைப்பது தவறு//

ரயில்வே சட்டம் தெரிந்து சொல்கிறீர்களா ? இல்லை யூகமா ?
எனக்குத் சரிவரத் தெரியாது அதனால் நான் Google-ல் தேடிய போது இது கிடைத்தது.

//Have you ever left your train ticket at home and realised only when train started and TTC / ticket checker asked you ? It so happened today that I went to drop my Aunt at the railway station and came back with her ticket which i took to verify with the chart that is put at the starting if the platform.

The TT in the train was gentle enough and said to my aunt that ask your relative i.e that’s me, to deposit the ticket with the CTI or the chief ticket inspector of the station from where you started and they will let me know at next major one, which he specified.

My aunt had her photo ID card along with her which made the TT believe that her case was genuine.

I rushed back to the station and met the CTI officer. He took the action immediately and asked me to fill in the details of the passenger with following details : Name,age,sex,PNR no, train no.

He then created a diary entry which he asked me to pass on to my aunt so she can update to the TT of the train. Then he called up the CTI of the Kharagpur station and passes the information to him. He also said that let the passenger go without any problem.

This type of case is called as LEFT BEHIND which the CTI mentioned during the call.

As soon as the next station arrive, the TT on the train got the information from the CTI of that station and issues another ticket to my aunt.//

சட்டத்திலும் மனித தவறுகளை மன்னிக்க இடமிருக்கு, நேக்குப்போக்குடன் பரிசோதகர் செயல்படவும் முடியும்.

வாதத்துக்கு நீங்க சொல்ற மாதிரி பல உதாரனங்களைத் தந்தால் வாதத்தை வேனுமானால் ஜெயிக்கலாம் ஆனால் ......அது வெறும் ஏட்டுச் சுரைக்காய் தான்


நான் பதிவுகளில் தீவிரமாக இயங்குபவன் அல்ல இருந்தாலும் செலக்டிவாக சிலரின் பதிவுகள் படிப்பதுண்டு.

சாதாரனமா எடுத்தேன் கவிழ்த்தேன் பேர்வழிகள் இது போல மனித உரிமை என்று உளரும் போது அதை அலட்சியம் செய்து விடலாம்.

ஆனால் அனுஜென்யா, புருனோ, இன்னும் சில நல்ல பதிவர்களும் அவர்களப் பற்றிய பிம்ப்த்தை என்கவுண்டர் செய்து விட்டார்கள் எனும் போது..ஆயாசமாக இருக்கிறது.......

(நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்)


javascript:void(0)

ரிஷபன்Meena on November 11, 2010 at 2:30 AM said...
This comment has been removed by the author.
ரிஷபன்Meena on November 11, 2010 at 2:58 AM said...

சாதரனமா பதிவுகளை வாசிக்கும் போது அருமையான பதிவு, நல்ல அலச்ல், தெளிவான பதிவு, பகிர்வுக்கு நன்றி என்று அர்த்தம் இல்லாத ஜால்ரா பின்னூட்டங்களை பார்க்கும் போது எரிச்சலாக இருக்கும்.


அர்த்தமில்லாத பாராட்டுகளை வாங்கி இந்தப் பதிவர்கள் என்னதான் பன்னுவார்களோ! (பெரும்பாலும் அவை நன்றிக் கடன்களாக இருக்கும்)

இந்தப் பதிவை பொறுத்தவரைக்கும் எழுதிய நடைக்கும் உள்ளடக்கத்துக்கும்
அத்தனை பாராட்டுகளும் தகும்.

என்.விநாயகமுருகன் navina14@hotmail.com on November 11, 2010 at 9:03 AM said...

மிஸ்டர் புல்லட்
வீரமணி என்கவுண்டர்க்கு பிறகு தமிழ்நாட்டில் நடந்தது.
மதுரை தினகரன் பிரச்சினை, தா.கிருட்டிணன் கொலை, சென்னை சட்டக்கல்லூரி மோதல்,etc,,,,

மிஸ்டர் புல்லட் உங்கள் உண்மையான பெயரிலேயே பின்னூட்டம் போடலாமே. அட்லீஸ்ட் இன்சியலுடன் (அப்படி ஒ‌ன்று இருக்கும் பட்சத்தில்) புல்லட் எ‌ன்ற பெயரை குறிப்பிடலாமே. அநானிமஸ் பெயரில் பின்னூட்டம் போடுபவர்கள் கேட்கும் தனிப்பட்ட கேள்விகளுக்கும், பதிலுக்கு அவர்கள் மீது தனிநபர் விமர்சனம் செய்யவும், பதிலளிக்கவும் என்னால் இயலவில்லை. தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

logu.. on November 11, 2010 at 10:36 AM said...

Theliva sollirukeenga..

congrats..

bullet on November 11, 2010 at 10:38 AM said...

டுபுக்கு, குசும்ப‌ன், உருப்படாத‌து என்ப‌து போல் புல்ல‌ட் என்ப‌து என் புனைப்பெய‌ர். என் இனிஷிய‌ல் எஸ். என் பெய‌ர் ராமகிருஷ்ண‌ன். சென்னையில் அப்போது ர‌வுடியிச‌ம் குறைந்த‌து என்றால் த‌மிழ‌க‌ம் ப‌ற்றி பேசுகிறீர்க‌ள். நெல்லையில் இருப்ப‌வ‌ருக்கு ப‌ங்க் குமார் ப‌ற்றி தெரியுமா என்ப‌து ச‌ந்தேக‌மே. அப்புற‌ம் த‌னிம‌னித‌ தாக்குத‌ல் என்றீர்க‌ள். நீங்க‌ள் க‌விதைத்தொகுப்பு போட‌ உங்க‌ கைக்காசை த‌ர‌வில்லை என்று தெளிவாக‌ சொல்லுங்க‌ள. ஆதார‌த்தை நான் த‌யார் செய்கிறேன்.

அனுஜன்யா on November 11, 2010 at 11:29 AM said...

ரிஷபன் - உங்களை எரிச்சல் படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள். எனக்கும் அறிவு ஜீவிகளின் 'holier than thou' attitude எரிச்சலை நிறைய சமயம் வரவழைக்கும். ரொம்ப யோசித்தால்... பல சமயங்கள் அவர்கள் சொல்வதன் உண்மை கசப்பதுதான் காரணம் என்று என்னளவில் புரிந்து கொண்டிருக்கிறேன். அதற்காக 'என் கருத்து தான் உயர்ந்தது. நீங்கள் - ஹ்ம், சாதாரண பொதுமக்கள்' என்னும் தொனி என் மொழியில் தென்பட்டால், அதற்காக வருந்துகிறேன். பொதுவான கருத்திலிருந்து மாற்றுக் கருத்து கொண்டிருப்பது சில சமயம் நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கும் சாத்தியம்தானே?

என் பிம்பத்தை நானே என்கவுண்டர் செய்து விட்டேனா? பார்த்தீர்களா? இதுக்குத்தான் இந்த என்கவுண்டர்கள் எழவே வேண்டாங்கிறது :)

கார்க்கி - "ப்ளாக் எழுதினா தான் பிரச்சனை; பின்னூட்டமாவது போடு பாஸ்னு" ஆதி என்ற புண்ணியவான் சொன்னார். கொஞ்சம் அந்த ஆளோட அட்ரஸ் கொடு. கூடவே ஒரு ஆட்டோவும் ஏற்பாடு பண்ணு :(.

அனுஜன்யா

என்.விநாயகமுருகன் navina14@hotmail.com on November 11, 2010 at 12:27 PM said...

Bullet
அட எஸ்.ராங்குறது நீங்கதானா? யாமம், பதினெட்டாம் நூற்றாண்டு மழைனு உங்க பல படைப்புகளை படித்துள்ளேன். அருமை. அருமை.
கைக்காசு போட்டுதான் கவிதை தொகுப்பை கொண்டுவந்தேன். தமிழ்நாட்டில் பலபேரு பொண்டாட்டி தாலியை அடகு வைத்து எழுதறாங்க. என்ன செய்யுறது? ஓசியில பக் செய்யுற கூட்டம் அதிகமாக இருக்கு. ஆமா...

நண்பரே உங்களால எனது ஒரு கவிதை தொகுப்பை காசு வாங்காம பப்ளிஷ் செய்து தரமுடியுமா? இலக்கிய சேவையாக இதை செய்யவும். எனக்கு பணம் எதுவும் வேண்டாம். எனக்கு ஏதாவது தர விரும்பினா‌‌‌ல் அந்த பணத்தை உதவும் கரங்களுக்கு அனுப்பி வைக்கவும். ப்ளீஸ்

bullet on November 11, 2010 at 12:43 PM said...

ப‌திவின் நோக்க‌ம் திசைமாறி போவ‌தை அறிந்தே இந்த‌ பின்னூட்ட‌மிடுகிறேன். ம‌ன்னிக்க‌வும் கார்க்கி. ஊரில் ஒரே ஒரு எஸ்.ராம‌கிருஷ்ண‌ன் தான் இருப்பார் என்ற‌ த‌ங்க‌ள் அறிவு குறித்து பேச்ச‌ற்றுப் போனேன்.இல்லை, அது ப‌க‌டி அய்யா என்று நீங்க‌ள் சொல்வீர்க‌ளேயேனால், சாரி பாஸ்.இன்னும் பெட்ட‌ரா முய‌ற்சி செய்ங்க‌

என்ன‌து? உங்க‌ க‌விதையை பிர‌சுரிக்க‌ணுமா? ப‌க‌டைக்காயை உருட்டி எந்த‌ எண் வ‌ருகிற‌தோ அந்த‌ இட‌த்தில் ஒரு எண்ட்ட‌ர் த‌ட்டி வாக்கிய‌த்தை உடைத்தால் அது க‌விதையா? அத‌ற்கு இல‌க்கிய‌ சேவை என்று பெய‌ர் வேறு. நீங்க‌ள் எழுதுவ‌து எல்லாம் இல‌க்கிய‌ம் என்றெண்ணித்தான் இவ்வ‌ள‌வு நாள் வாழ்ந்திருக்கிறீர்க‌ளா? க‌ர்த்தாவே..இவ‌ரை ம‌ன்னியும். இவ‌ர் க‌விதையை பிர‌சுரிக்க‌ இவ‌ரே காசு த‌ந்தார் என‌ ஒத்துக் கொண்டுவிட்டு, இப்போது என்னிட‌ம் காசு கேட்கிறார். உங்க‌ளைப் போன்ற‌ சுய‌ த‌ம்ப‌ட்ட‌ ஆட்க‌ளால்தான் உண்மையான‌ க‌விஞ‌ர்க‌ள் தாலியை அட‌குவைக்க‌ வேண்டியிருக்கிற‌து என்ப‌தைப் புரிந்துக் கொள்ளுங்க‌ள்.

என்.விநாயகமுருகன் navina14@hotmail.com on November 11, 2010 at 1:36 PM said...

புல்லட் எனப்படும் ஊரின் இரண்டாவது எஸ்.ராம்கிருஷ்ணன்

எண்டர் தட்டாமல் தங்க‌ளால் ஒரு கவிதை எழுத முடியுமா? அப்படி ஒரு கவிதை எழுதி எனக்கும் என்னைப்போன்ற சுய‌ த‌ம்ப‌ட்ட‌ ஆட்க‌ளுக்கும் கற்று தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கவிதை எழுதுவது எப்படி? இல‌க்கிய‌ம் என்றால் என்னவென்று தங்கள் வலைதளத்தில் ஒரு பதிவு போட்டால் என்னை போன்ற போலிகளுக்கு அது உதவியாக இருக்கும். நன்றி.

bullet on November 11, 2010 at 2:04 PM said...

ஒரு ந‌ல்ல‌ க‌விதையை நாமேதான் எழுத‌ வேண்டும் என்ற‌ உங்க‌ள் எண்ண‌ம்தான் உங்க‌ளின் பிர‌ச்சினையே. ந‌குல‌ன், பிர‌மிள் போன்ற‌ ந‌ல்ல‌ க‌விஞ‌ர்க‌ள் எழுதிய‌ ஏராள‌மான‌ ந‌ல்ல‌ க‌விதைக‌ள் உள்ள‌ன‌வே. அறிவிய‌ல் ஆசிரிய‌ர் நியூட்ட‌னின் மூன்றாம் விதியைத்தான் சொல்லித் த‌ருகிறார்.அவ‌ரே எந்த‌ விதியும் க‌ண்டுபிடித்திருக்க‌ வேன்டுமென்ற‌ அவ‌சிய‌மில்லை. முத‌லில் ந‌ல்ல‌ இல‌க்கிய‌ங்க‌ளை வாசியுங்க‌ள். ந‌ம‌து ப‌டைப்பு அதன் த‌ர‌த்தில் இருக்கிற‌தா என்று யோசியுங்க‌ள்.பின் ப‌திப்பாள‌ரிட‌ம் பிர‌சுரிக்க‌ சொல்லி யாசியுங்க‌ள். அத‌ன் பின்பு தாலியை அட‌கு வைக்க‌லாம்.

S.Ramakrishnan

ரிஷபன்Meena on November 11, 2010 at 2:05 PM said...

அனுஜென்யா,

தவறான புரிதல் உங்களை நான் அறிவுஜீவிகள் லிஸ்டில் வைக்கவில்லை. அறிவுஜீவிகள் பெயரைக் கூட பின்னூட்டத்தில் எடுப்பது இல்லை. அவர்களிடம் பேசுவதும் (கிரெடிட் கார்ட் ) கால் செண்டர் ஆட்களிடம் பேசுவதும் ஒன்று. திரும்ப திரும்ப ஒரே மாதிரி பதில்களைக் கேட்க பொறுமை நிறைய வேண்டும்.

இளா-விற்கு தந்த பதிலில் இதை விதிவிலக்கா கொள்ளலாம் என்பது போல் பதில் தந்தீர்கள் வேறோரு பின்னூட்டத்தில் //காவல் துறை சாக்லேட் சாப்பிடும் இலாகவத்துடன் கையாள்வதைப் பார்க்கையில் பொங்கும் கோபம்// என்றீர்கள்.
விதிவிலக்கு என்றாலே சாதரன நடைமுறையில் இருந்து விலகியது என்று தானே அர்த்தம். விதிவிலக்கு என்று சொல்லிவிட்டு மீண்டும் அதில் விதியை பொருத்திப் பார்க்கவிழைவதாகவே நான் புரிந்து கொண்டேன். கொஞ்சம் குழப்பத்தை உண்டாக்குகிறது.

என் கவுண்டர் சரியா தவறா என்ற வாதமும் இந்த விதிவிலக்கான சம்பவமும் பிரித்துப்பார்க்கப் பட வேண்டும் என்பது என் போன்றோரின் ஆவல். பிரிதொரு நாளில் இதைப் பற்ற எழுதினால் குழப்பம் இருக்காது. என் போன்ற வெகு சாதரன பிரஜைகளுக்கு இது சரியா இல்லையா அவ்வளவு தான் தேவை.
நீங்கள் பொதுக் கருத்தில் இருந்து விலகுவதால் உங்கள் பிம்பம் உடைந்ததாக நான் கூற வரவில்லை. தெளிவாக கருத்துக்களை முன்வைப்பவர் என்ற பிம்பம் சற்றே சரிந்துவிட்டது என்பதாலேயே.

நீங்கள் மற்றும் புருனோ போன்றவர்கள் கவணிக்கப்படத்தக்கவராக இருப்பதாலேயே கேள்விகள்/விமர்சனங்கள் வருகிறது என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

ரிஷபன்Meena on November 11, 2010 at 2:08 PM said...
This comment has been removed by the author.
என்.விநாயகமுருகன் navina14@hotmail.com on November 11, 2010 at 2:12 PM said...

நன்றி புல்லட் மன்னிக்கவும் எஸ்.ராமகிருஷ்ணன்
தங்கள் அறிவுரைப்படி நடக்கின்றேன்.

கார்க்கி on November 11, 2010 at 9:31 PM said...

அனைவருக்கும் நன்றி..

அனுஜன்யா, அவங்க உங்கள தவறா சொன்னதா நான் நினைக்கல.. நீங்க இனிமேல் பின்னுட்டம் போட வேண்டாம். பதிவா போடுங்க ஜி

புல்லட், பொறுமை பாஸ் பொறுமை.

விநாயகமுருகன், கமெண்ட்டிற்கு நன்றி

ரிஷபன், நன்றி

Anonymous on November 11, 2010 at 9:42 PM said...

புல்லட்
விநாயகமுருகன் மீது என்ன கோபம் உங்களுக்கு. ஒருவேளை உங்க ஆயா கையை கியை அவர் பிடித்து இழுத்துவிட்டாரா? கைக்காசு போட்டு கவிதைத்தொகுப்பு போடுவது இப்போது எல்லாரும் செய்யுறதுதான். பா.ரா முதல் சரவணகார்த்திகேயன் வரை அப்படிதான் கொண்டு வந்துள்ளார்கள். அதில் என்ன அப்படி காண்டு உங்களுக்கு? எடுத்துக்கொண்ட விஷயத்தை பற்றி விவாதிக்கும்போது சம்பந்தமில்லாமல் என்ன பேசுகிறீர்கள் இருவரும்?

Anonymous on November 11, 2010 at 9:55 PM said...

Bullet

அவனா‌‌‌ நீ.....? நீ யாருனு தெரிஞ்சு போச்சு.. அகநாழிகை வாசு மேல் உள்ள காண்டை இப்படிதான் காட்டுவதா?

Anonymous on November 12, 2010 at 2:58 PM said...

//ஒருவேளை உங்க ஆயா கையை கியை அவர் பிடித்து இழுத்துவிட்டாரா?

புல்லட் உங்க ஆயா செம கட்டையா?யாரு காசு போட்டு கவிதை புக் போட்டா என்ன பிரச்சினை உனக்கு? போடா டோமரு...நர்சிம் கூடத்தான் காசு போட்டு சிறுகதை தொகுப்பு கொண்டுவந்தார். இப்ப என்ன உன் பிரச்சினை?

Anonymous on November 12, 2010 at 3:12 PM said...

டுபுக்கு புல்லட்
உன் பிரண்ட் நர்சிம்மை பற்றி சொன்னதும் என்ன ஆளு சைலண்டாயிட்டே? கமான் டாக் மீ...டாக்

bullet on November 12, 2010 at 5:23 PM said...

திருவாள‌ர் அனானிம‌ஸ்,

காசு த‌ந்து புத்த‌க‌ம் போட்டுக்கொண்டால் ந‌ர்சிம் ம‌ட்டும‌ல்ல‌ பா.ரா, ச‌ர‌வ‌ண‌ன் என‌ எல்லோரும் வெட்க‌ப்ப‌ட‌த்தான் வேண்டும். அவ‌ர்க‌ள் அப்ப‌டி செய்தார்க‌ளா என்ப‌து என‌க்கு தெரியாது. என் ஆயாவைப் ப‌ற்றி நீர் க‌வ‌லைப்ப‌ட‌ வேண்டாம். தாங்க‌ள் த‌ந்த‌ த‌க‌வ‌ல் போதும். ஊரில் இருக்கும் எல்லா ஆயாக்க‌ளையும் ப‌த்திர‌மாக‌ இருக்க‌ சொல்வேன். நீங்க‌ சொன்ன‌தை நீங்களே எடுத்தாண்டு கேள்வி கேட்கிறீர்க‌ள். த‌ண்ணிய‌டிப்பீர்க‌ளா?
உங்க‌ள் லாஜிக்ப‌டி கேட்கிறேன். விநாய‌க‌ முருக‌னை சொன்னால் உம்க்கேன் எரிகிற‌து? அவ‌ர் கையைப் பிடித்து நீங்க‌ள் இழுத்தீர்க‌ளா?

ந‌ர்சிம் என‌து ந‌ண்ப‌ன் என்று தெரியுமா? அவ‌ரும் காசு த‌ந்து புத்த‌க‌ம் போட்டார் எனில் அவ‌ருக்கும் என‌து க‌ண்ட‌ன‌ங்க‌ள்.

கார்க்கி வ‌ந்து ச‌ரியென்றால் என் ப‌தில்க‌ள் தொட‌ரும். இல்லையேல் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்

Anonymous on November 12, 2010 at 7:14 PM said...

காசு த‌ந்து புத்த‌க‌ம் போட்டுக்கொண்டால் ந‌ர்சிம் ம‌ட்டும‌ல்ல‌ பா.ரா, ச‌ர‌வ‌ண‌ன் என‌ எல்லோரும் வெட்க‌ப்ப‌ட‌த்தான் வேண்டும். அப்படி போடு அருவாளை

உமா கிருஷ்ணமூர்த்தி on March 4, 2011 at 10:27 PM said...

இந்த என்கௌண்டர் நிகழ்த்த பட்ட அன்று நான் கோவையில் தன இருந்தேன்.அப்படி ஒரு மகிழ்ச்சியை நான் பார்த்தேன்.ஒரு துளி கூட வருத்தமில்லை.சட்டங்கள் சரியான காரணங்களுக்காக் கடுமையாக்கபடுவதில் தவறு இல்லை.ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கட்டும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதெல்லாம் சரியல்ல.ஒரு நிரபராதி தண்டிக்கபட்டால் அந்த குடும்பம் மட்டுமே பாதிக்கப்படும்.ஆனால் ஆயிரம் குற்ற வாளி தப்பித்தால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கபடும்.ஆயிரம் நிரபராதிகள் தண்டிகபட்டாலும் சரி ஒரு குற்ற வாளி கூட தப்பிக்க கூடாது என்ற கோணத்தில் வைத்தால் நாட்டில் குற்றங்கள் குறையும்.

Kafil on February 28, 2012 at 1:57 AM said...

இது கார்கி ப்ளாக் மாதிரி தெரியலையே. எங்க அண்ணே அவரு பாட்டுக்கு அனுஷ்கா படம் பார்த்துட்டு KFC சிக்கன் தின்னுகிட்டு இருந்த பச்ச புள்ளைய யாரோ இலக்கியவாதியா மாற சொல்லி காசு வெட்டி போட்ருக்காங்க :( . On a Serious Note. When a Judiciary and Executive becomes a joke, Still functioning with their colonial mind set such incidents will keep occuring.

 

all rights reserved to www.karkibava.com