Nov 8, 2010

சின்னவனே..பெரியவனே..


 

வாங்க மக்கா. தீபாவளி எல்லாம் எப்படி போச்சு? படம்லாம் பார்த்தீங்களா? ப்ளடி பிரதர்ஸ் பத்தி தெரியுமா? இவங்கள பத்தி சொல்றேன் கேளுங்க. இவங்க ரெண்டு பேருமே எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்கள். எதைப் பத்தி வேணும்னாலும் பேசுவாங்க. அதுலயும் சின்னவன் கொஞ்சம் ஏழு டைப். பெரியவன் ஏழர டைப். முதல் தலைப்பா தீபாவளிக்கு வந்த படங்கள பத்தி பேசுறாங்க. இவனுங்க எப்படின்னு போகப் போக தெரிஞ்சிப்பீங்க.

பெரியவன்: வாடா சின்னவனே.. தீபாவளி எல்லாம் எப்படி போச்சு?

சின்னவன்: புகையா போச்சுண்ணே.. பட்டாசு தான்.

பெரியவன்: உன் வாய்க்கு பகையா போகலைன்னு சந்தோஷப்படு. சினிமா ஏதாச்சும் பார்த்தியா?

சின்னவன்: சிவாஜியே பார்த்திருக்கலாம்ண்ணே. எல்லா படமும் மொக்கை

பெரி: என்னடா சொல்ற? வ குவார்ட்டர் கட்டிங் கூடவா?

சின்: அட நீங்களே சொல்லுங்கண்ணே. குவார்ட்டர் அடிச்சவன் ஆடுவான். குவார்ட்டர் பாட்டில் ஆடுமா? எவ்ளோ ஸ்டெடியா நிக்கும்!

பெரி:  ஆரம்பிச்சிட்டாண்டா. இப்ப என்னதாண்டா சொல்ல வர்ற?

சின்: ரொம்ப சுமாரான படம்ண்ணே. இவனுங்க கொடுத்த பில்டப்புல புஸ்ஸுன்னு போயிடுச்சு.

பெரி: ஓஹோ

சின்: சரக்க நாம ஊத்திக்கிட்டா ராகம்..கீழ ஊத்திட்டா சோகம். இது கீழ ஊத்திக்கிச்சுண்ணே

பெரி: அப்போ பில்டப் கம்மியா இருந்தா ஹிட் ஆயிருக்குமோ?

சின்: அப்படி என்றும் கூற இயலாது.

பெரி: டாய்..

சின்: இல்லண்ணே. படம் அவுட் தான்.

பெரி: நம்ம தனுஷ் படம் எப்படி?

சின்: உத்தமபுத்திரனா? அதுவும் சுமார்தான்

பெரி: இப்படி மொட்டையா சொன்னா எப்படிப்பா? டீட்டெயிலா சொல்லு

சின்: யாரண்ணே உத்தமபுத்திரன்னு சொல்வாங்க? வீட்டுல அடங்கி நடக்கிற பையன, அப்பா அம்மா சொல் பேச்சு கேட்கிற பையனத்தானே சொல்வாங்க? அந்த மாதிரி ஃபேமிலி ஆடியன்ஸூக்கு புடிக்கலாம்ண்ணே.. என்னை மாதிரி யூத்துக்கு எல்லாம் ம்ஹூம்

பெரி: பாட்டு கூடவா சரியில்ல. விஜய் ஆண்டனி ஆச்சே?

சின்: வா டக்குன்னு டக்குன்னு டக்குன்னு.. நச்சுன்னு..நச்சுன்னு

பெரி: டேய் டேய்..என்னடா?

சின்: இப்படி ஒரு பாட்டுண்ணே. அது மட்டும் நச்சுன்னு இருக்கு

பெரி: அதான் அவங்களே சொல்லிட்டாங்களே. என்னவோ போடா மாதவா

சின்: அய். நான் மாதவன் மாதிரியாண்ணே இருக்கேன்?

பெரி: என்ன கொலைகாரன் ஆக்காதே. சரி.ஆக்‌ஷன் கிங் படம் ஒண்ணு வந்துச்சே

சின்: வல்லக்கோட்டை. இனிமேல அவர் ஆக்‌ஷன்(Auction) கிங்னு சொல்லுங்க. படம் எடுக்கிறவர் ஏலத்துல மாட்டாம இருந்தா பெரிய விஷயம்

பெரி: முருகன் கைவிட்டானா?

சின்: ஆமாம். முருகன்னா சந்தனக்காப்பு. அர்ஜுன்னா புரொடியூசருக்கு ஆப்புன்னு ஆயிடுச்சு

பெரி: ஓஹோ. நான் பார்த்த மைனா பரவாயில்ல

சின்: ஹேவ் யூ ஸீன் மைனா? ஹவ் இஸ் இட்.. ஃபைனா?

பெரி: யப்பா நைனா.. நீ தமிழிலே பேசு.

சின்: ரொம்ப நல்லா இருக்குன்னு கமல்,பாலா எல்லாம் சொன்ன படமாச்சே. எப்படி இருக்குண்ணே?

பெரி: மத்த படமெல்லாம் பட்டர்னு சொல்றதால இத பெட்டர்னு சொல்லலாம். ஆனா பெருசா ஒண்ணும் இல்லை.

சின்: அனகா எப்படிண்ணே?

பெரி: கரெக்டா வருவியே.. நல்லா நடிச்சிருக்கு பொண்ணு. அஞ்சலி மாதிரி நல்ல பெர்ஃபார்ம் பண்ணுது. இமான் மியூசிக் கூட நல்லா இருக்கு. ஆனா க்ளைமேக்ஸ் தான் நீளமா இருக்கு

சின்: அப்ப இதுவும் சிந்து சமவெளி மாதிரி நீலப்படமா?

பெரி: அடடா.. அப்புறமா நீ சிந்து சமவெளி பாரு. நொந்து போயிடுவ. லெந்த்தியா இருக்குன்னு சொன்னேன். கமல் கூட சொல்லி இருக்கார். டைரக்டர்தான் என் குழந்தை அப்படி இப்படின்னு சொல்லி வெட்டாம விட்டாரு. இப்ப தியேட்டர்காரங்களே வெட்றாங்களாம்.

சின்: நான் ஒரு நியூஸ் சொல்றண்ணே.. இவரோட இரண்டாவது படம் கிங். அதிலும் க்ளைமேக்ஸ் சொதப்பலாம். படம் ஊத்திக்கிச்சு. ஆனா என் ஃப்ரெண்ட் தியேட்டர் ஓனரு. அவரு க்ளைமேக்ஸ் மாத்திப் போட்டு அங்க மட்டும் 30 நாள் ஓடுச்சாம்.இன்னும் மாறல பிரபு ஸ்ட்ராங்க்மேன்.. இல்லல்ல சாலமன்

பெரி: கிரியேட்டருக்கு இந்த உரிமை கூட இல்லையா?

சின்: இருக்குண்ணே. ஆனா தொடர்ந்து தப்பா வருதுன்னா மாத்திக்கலாம் இல்ல.

பெரி: சரி விடுப்பா. கடைசியா என்ன சொல்ற? இந்த தீபாவளிக்கு மைனாதான் பெட்டர் சாய்ஸ் இல்லையா?

சின்: ஆமாண்ணே.. நமக்கு நிஜ தீபாவளி திசம்பர்லதான். காவலன் வருது

பெரி: என்னை விடுறா சாமி.. நான் வரலை இந்த விளையாட்டுக்கு

11 கருத்துக்குத்து:

அமுதா கிருஷ்ணா on November 8, 2010 at 10:59 PM said...

so..படம் பார்க்க டிசம்பர் வரை காத்து இருக்கணுமா..

தமிழ்ப்பறவை on November 8, 2010 at 11:16 PM said...

நல்ல விமர்சனம் கார்க்கி.. பிரபு சாலமனோட முதல் படம் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ இல்லையா? #டவுட்டுதான்...

சரவணகுமரன் on November 8, 2010 at 11:32 PM said...

யாரு அந்த சின்னவன்’ன்னு தெரிஞ்சு போச்சு :-)

ILA(@)இளா on November 8, 2010 at 11:55 PM said...

யாரு அந்த சின்னவன்’ன்னு தெரிஞ்சு போச்சு :-)

//

Repeateuu

சுசி on November 9, 2010 at 12:12 AM said...

//நமக்கு நிஜ தீபாவளி திசம்பர்லதான். காவலன் வருது//

அப்போ கொண்டாடுவோம்ல சரவெடியோட தீபாவளி :))))

கலக்கிட்டிங்க கார்க்கி. ப்ளடி பிரதர்ஸ் வரவு சூப்பர்..

//இவனுங்க எப்படின்னு போகப் போக தெரிஞ்சிப்பீங்க. //
இப்போவே தெரிஞ்சு போச்சுப்பா..

//எதைப் பத்தி வேணும்னாலும் பேசுவாங்க.//
ஆவ்வ்வ்..

மாணவன் on November 9, 2010 at 8:03 AM said...

"சின்னவனே..பெரியவனே.."

செம சரவெடி கலக்கல் கலாட்டா....

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on November 9, 2010 at 8:07 AM said...

எப்படி இருக்குமோ தெரியாது. எதுக்கும் தயாராகவேண்டியதுதான் சகா.

ப்ளடி ப்ரதர்ஸ் - ரைட்டு!

கார்க்கி on November 9, 2010 at 9:15 AM said...

அமுதா மேட‌ம், ஆமாம். ஆனா திச‌ம்ப‌ர்ல‌ க‌ன்ஃபார்ம்டு

ப‌ற‌வை, ஆமாம். மாத்திட்டேன் :))

ச‌ர‌வ‌ண‌கும‌ர‌ன், ஹிஹிஹிஹி. உங்க‌ லாஜிக்ப‌டி பார்த்தா பெரிய‌வ‌னும் நான் தான்

இளா, என் ப‌திலும் ரிப்பிட்டேய்:)

சுசி, என்ன‌ தெரிஞ்சிடுச்சு? மொக்கைன்னா!!!!

ந‌ன்றி மாண‌வ‌ன்

ஷ்ங்க‌ர், அப்ப‌டி முன்னெச்சிரிக்கையா இருந்தா இந்த‌ நாள் மாத்திர‌ம‌ல்ல‌, எல்லா நாளும் மொக்கைதான் :)

மோகன் குமார் on November 9, 2010 at 10:53 AM said...

அல்லோ உண்மைய சொல்லுங்க. நாலு படமும் நீங்க பாத்திங்களா என்ன. நண்பர்கள் சொல்வதை வச்சே எழுதிட்டீங்கன்னு தான் பட்சி சொல்லுது. அநேகமா ஒரு படம் வேண்ணா நீங்க பாத்திருக்கலாம்.

நானும் நாலு பட விமர்சனமும் படிச்சிட்டேன். இப்படி கூட ஒரு பதிவு எழுதலாம் போலிருக்கே... :))

சிவா on November 9, 2010 at 10:02 PM said...

சின்னவனின் நம்பிக்கை நடக்கட்டும்.... காவலன் காப்பாத்தட்டும்!!!

ஆதிமூலகிருஷ்ணன் on November 19, 2010 at 3:38 PM said...

விமர்சனங்கள் கரெக்டுதான்.

 

all rights reserved to www.karkibava.com