Nov 5, 2010

சட்டை நல்லா இருக்கா?


 

அனைவருக்கும் உளங்கனிந்த தீபாவளி நல்வாத்துகள்…

வந்தது வந்துட்டிங்க. ஒரு தீபாவளி பதிவ படிச்சிட்டு போங்க

188084516 இதாம்ப்பா என் தீபாவளி சட்டை..

________________________________________________________________________________

     பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர். தமிழ்நாட்டின் தலைவிதிக்கு நாம் மட்டும் விதிவிலக்கா என்ன? பிழைக்க வந்த இடத்தில் என்ன கொண்டாட்டம் இருக்கப் போகிறது?  கால ஓட்டத்தில் காணாமல் போகும் பட்டியலில் இந்த தீபாவளியும் சேர்ந்துக் கொள்ளும் நாள் இதோ…. பட்டாசு என்ற ஒரு வஸ்து மட்டுமே இன்னமும் தீபாவளியை உயிரோடு வைத்திருக்கிறது. இல்லையேல் இந்திய தொலைக்காட்சிகளிலே….. போய் விடும் தீபாவளி. இத்தனை வருடம் கழித்தும் தீபாவளி என்றதும் எனக்கு திண்டிவனம்..அந்தத் தெரு.. அடுத்த நாள் அம்மாவின் கிராமம். இவைதான் நினைவுக்கு வருகிறது. இன்றிருக்கும் தீபாவளியை விட அந்த தீபாவளியை நினைத்துக் கொள்வதே மகிழ்ச்சியாயிருக்கிறது.

     எல்லாத் தெருவிலும் இரண்டு கோஷ்டிகள் இருக்கும். ரஜினி கமல் என்றோ, அந்த முக்கு இந்த முக்கு என்றோ, பெரிய பசங்க சின்ன பசங்க என்றோ… சரியாக இரண்டு கோஷ்டிகள்தான் இருக்கும். தீபாவளிக்கு பல நாட்கள் முன்பே ஊசிவெடியும், அரியாங்குப்பம் நாட்டு வெடியும் நாச வேலை செய்து கொண்டிருக்கும். தனியாக வரும் அந்த டீம்காரனின் மீது மாடியிலிருந்து வெடியை கொளுத்தி போடுவது, பதிலுக்கு நாம் அந்த பக்கம் போனா மாட்டுசாணத்தின் அடியில் வெடியை வைத்து அவர்கள் நம்மை வடிவேலாக்குவது... தீபாவளியன்று யார் வீட்டுக்கு முன் நிறைய பேப்பர் என்பது வரை நீடிக்கும் அந்தப் போர்… போரடிக்காத போர். இதற்காகவே லட்சுமி வெடியும், யானை வெடியும் நிறைய இருக்கும்,பேப்பர் அதிகம் சுற்றப்பட்டிருக்கும் காரணத்தால்.

    மாமா வாங்கி வரும் 100வாலாவை ஒவ்வொன்றாக  பிரித்துப் போட, அதில் பாதிக்கு மேல் திரி பிடுங்கி வர, மீதியில் பாதி புஸ்ஸாகிவிட, மிச்சமிருக்கும் 20 வெடிகளை ஒரு மணி நேரமாக வெடிப்பதுண்டு. இப்போதெல்லாம் ஒத்தை வெடியை நாலு வயது சிறுவன் கூட ஒரே நேரத்தில் அஞ்சு வெடியின் திரியை சேர்த்துதான் வெடிக்கிறான். ஒற்றுமையின் பலம் வெடிப்பதில் மட்டுமே தெரிகிறது அவனுக்கு.

     தெருவில் எந்த வீட்டு வராந்தா பெரியதாக இருக்கிறதோ அங்கே கூடும் எங்கள் பட்டாசு மேசை மாநாடு. அனைவரது பட்டாசுகளையும் ஒன்றாக்கி  வெடிக்க தொடங்கிய உடனே.. அதுவரை அமைதியாக இருக்கும் கிழவி.. ”டேய் அந்தப் பக்கம் போய் வெடிங்கடா” என்று வெடிச்சத்தத்தை விட அதிகமாக கத்தும். யார் கேட்பது? எவனாவது கையால் வெடிக்கிறேன் என்று  கொளுத்திப் போட, அது சரியாய் கிழவியின் அருகில்தான் விழும்.அது ஊசி வெடிதான் என்றாலும் பாம் விழுந்தது போல் அலறும் கிழவி. கைகளில் சிக்கும் பட்டாசை எடுத்துக் கொண்டு அடுத்த வீடு தேடும் படலம் ஆரம்பமாகும். இருக்கும் எல்லா பட்டாசும் டுமீல் ஆனவுடன் தொடங்கும் அடுத்த புராஜெக்ட்.புஸ்ஸாகிப் போன வெடிகளை சேகரித்து, மருந்தை மட்டும் பெரிய பேப்பரில் கொட்டி, ஒரு திரியை வைத்து கொளுத்தினால் ஜகஜ்ஜோதி.

    இன்னும் கொஞ்சம் பெரிய பசங்க வேறு வேலையில் பிசியாக இருப்பார்கள். தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு ஒரு குண்டு பல்பு வெளிச்சத்தில் நடந்துக் கொண்டிருக்கும் பேனர் தயாரிப்பு. ரஜினியின் படம் ஒரு வழியாக அடையாளம் காணும் அளவுக்கு வந்ததும், கீழே பெயர்கள் எழுதும் படலம் தொடங்கும். ரஜினியின் படத்திகு வெகு அருகில் இருக்க வேண்டும் என்பதே அனைவரது ஏக்கமும். “இந்த திரைப்படத்தை காண வந்த கண்களுக்கு நன்றி- KILLER BOYS” என்று முடித்து, கண்களை வரைவதற்குள் விடிந்து விடும்.  அந்த முக்கில் கையில் லட்டுடன் அபிராமியை தேடும் கமலை வரைய மனமில்லாமல் சோர்ந்து போயிருப்பார்கள். அதிலே பாதி வெற்றி பெற்றுவிட்டு, காலை ஆறு மணிக்கு ஆட்டம் பாம் அலறும் இந்த முக்கில்.

இன்னும் புதிய டிரெஸ், எதிர்த்த வீட்டுக்கு தீபாவளிக்காக வந்திருந்த ராதிகா, நாலு வீட்டுக்காரர்களும் சேர்ந்து செய்யும் முறுக்கு, ஜாமுன், பாதுஷா என பல மேட்டர் இருக்கு அந்த தீபாவளியைப் பற்றி அசை போட. ம்ம். இந்த தீபாவளிக்கு செய்து பார்க்க பட்டாசு மட்டும்தான் இருக்கு. டமால்………….

இதோ வறேண்டா பப்லு. மாடியில் இருந்து நீயும் நானும் மட்டும் ”அவுட்” விட்டு மகிழலாம்

18 கருத்துக்குத்து:

சுசி on November 5, 2010 at 2:36 PM said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கார்க்கி.

vinu on November 5, 2010 at 2:46 PM said...

me too congrats sagaaaaaaaaa

M.G.ரவிக்குமார்™..., on November 5, 2010 at 3:03 PM said...

நெஞ்சம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள் சகா!.........

இரசிகை on November 5, 2010 at 3:27 PM said...

m........sattai nallaayirukku..:)

மோகன் குமார் on November 5, 2010 at 3:29 PM said...

உடனே சட்டையை படம் பிடிச்சு போட்டுடுறீங்க. சபாஷ். தீபாவளி வாழ்த்துக்கள். Have a nice time with Babloo

காவேரி கணேஷ் on November 5, 2010 at 3:56 PM said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

சிநேகிதி on November 5, 2010 at 4:14 PM said...

நல்லா இருக்கு

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

கலாநேசன் on November 5, 2010 at 4:27 PM said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வெண்பூ on November 5, 2010 at 6:08 PM said...

இதே தோணினதாலதான் இந்த முறை நோ டிவி... காலையில இருந்து கொஞ்ச நேரம் என் பையன் அவனோட கார்ட்டூன்ஸ் பாத்தது மட்டுமே.. நோ சிறப்பு நிகழ்ச்சிகள், ஒன்லி தீபாவளி.. :)

//
சட்டை நல்லா இருக்கா?
//

”சட்டை சுமாராத்தான் இருக்கு, ஆனா நீ போட்டிருக்குறதுனால நல்லா இருக்கு”ன்னு பதில் சொல்ல நான் என்ன உன் தோழியா? :)

வெறும்பய on November 5, 2010 at 6:31 PM said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ILA(@)இளா on November 5, 2010 at 7:03 PM said...

ஏன்யா இவ்ளோ சோகம்? சோகமா இருக்க வேண்டிய நாங்களே பதிவு பார்த்து மனச தேத்திக்கலாம்னா இது வேற.. சே காலங்காத்தால

அன்பரசன் on November 5, 2010 at 9:36 PM said...

//இன்னும் புதிய டிரெஸ், எதிர்த்த வீட்டுக்கு தீபாவளிக்காக வந்திருந்த ராதிகா, நாலு வீட்டுக்காரர்களும் சேர்ந்து செய்யும் முறுக்கு, ஜாமுன், பாதுஷா என பல மேட்டர் இருக்கு அந்த தீபாவளியைப் பற்றி அசை போட. ம்ம். இந்த தீபாவளிக்கு செய்து பார்க்க பட்டாசு மட்டும்தான் இருக்கு. டமால்………….//

சரிதான்

கயல் on November 5, 2010 at 10:42 PM said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் கார்க்கி!

மதுரை சரவணன் on November 5, 2010 at 11:51 PM said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள். அருமையான நினைவுகள்...

philosophy prabhakaran on November 6, 2010 at 9:19 AM said...

முதல் முறையாக உங்கள் புகைப்படத்தை பார்க்கிறேன்... சட்டையை பார்க்கும் சாக்கில் நைசாக உங்கள் முகத்தையும் பார்த்துவிட்டேன்... (பிரபல பதிவர்கள் பார்ப்பதற்கு எப்படி இருப்பார்கள் என்று தெரிந்துக்கொள்வதில் ஒரு ஆர்வம்...)

"ராஜா" on November 6, 2010 at 5:56 PM said...

ஐ நாங்களெல்லாம் நீங்க ஏக்கமா பதிவில சொல்லி இருக்கிற அந்த டைப் (தெருவெல்லாம் பட்டாசு , கோஷ்டி தீபாவளி) தீபாவளியத்தான் இன்னமும் கொண்டாடிக்கிட்டு இருக்கோம்...

ஆனா சின்ன வயசுல கொண்டாடுன தீபாவளி வாய்ப்பே இல்ல சகா ... கோடி கொடுத்தாலும் அந்த சுகம் திரும்ப கெடைக்காது

அன்புடன் அருணா on November 6, 2010 at 9:18 PM said...

இப்புடி சோகமாவா வாழ்த்து சொல்றது!!!!இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கார்க்கி.:))

பிரதீபா on November 7, 2010 at 4:59 AM said...

கார்க்கின்னு சொன்னாங்க, வேற யாரோட போட்டோவோ புடிச்சு போட்டுட்டாங்கப்பா !!

 

all rights reserved to www.karkibava.com