Nov 3, 2010

தோழி தீபாவளி


 

  தீபாவளிக்கு பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஸ்வீட் கொடுக்கும் வேலை வழக்கமாக தோழியிடம் வருமாம். இந்த வருடம் கொடுக்க மாட்டேன் என்றாள். காரணம் கேட்ட போது சொன்னாள் “ வழக்கமா ஸ்வீட் கொண்டு போய் கொடுப்பாங்க. ஸ்வீட்டே கொண்டு போய் கொடுக்குமான்னு நீ கிண்டல் பண்ணுவ”.

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

இன்னும் கல்யாணம் ஆகல. தல தீபாவளியும் இல்லை. தலைவர் படம் ரிலீஸ் ஆகல. தளபதி தீபாவளியும் இல்லை. அப்புறம் ஏன் இவ்ளோ பட்டாசு என்றாள் தோழி. அதான் நீ இருக்கியே செல்லம். இது எனக்கு தோழி தீபாவளி என்றேன்.

’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

தீபாவளி அன்னைக்கு வீட்டுல ஸ்வீட் இருக்கணும். போய் வாங்கிட்டு வாடா என்கிறார் அம்மா. தோழியை வீட்டுக்கு அழைத்து வர இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா?

’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

குழந்தைகள் மத்தாப்பூ கொளுத்தும்போது தோழி வீட்டுக்குள் வந்து விடுவாளாம். இவள் அங்கே நின்று சிரித்தால் என் மத்தாப்பூ டல்லா எரியுது என்று அடம் பிடிப்பார்களாம் குழந்தைகள்.

’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

நரகாசூரன் மட்டும் இன்று இருந்திருந்தால் ஜாலியா இருந்திருப்பான். கிருஷ்ணன் என்னிடம் இருந்து தோழியை திருடுவதிலே குறியாய் இருந்திருப்பான்.

’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

தாவணி கட்டிக் கொண்டு தோழி கொண்டாடிய தீபாவளிகளை புகைப்படத்தில் பார்த்தேன். யார் சொன்னது அமாவாசையன்றுதான் தீபாவளி என்று?

21 கருத்துக்குத்து:

king on November 3, 2010 at 1:17 AM said...

me the firstu

சுசி on November 3, 2010 at 1:19 AM said...

கலக்கல் கார்க்கி.

//?ு??்?ு
புட்டிக்கதைகள்
சிறுகதைகள்
தோழிஅப்டேட்ஸ்//

இதில முதல்ல இருக்கிறதுதான் உங்க தோழியோட பாஷையா??

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

கனவுகள் விற்பவன் on November 3, 2010 at 1:27 AM said...

//நரகாசூரன்,கிருஷ்ணர்// ம்ம்ம்ம்....

மதுரை சரவணன் on November 3, 2010 at 1:28 AM said...

எப்படி இப்படி நாலு வரியில் அசத்த முடிகிறது... கடைசி கவிதை டச்... தீபாவளி வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் on November 3, 2010 at 1:31 AM said...

//தீபாவளி அன்னைக்கு வீட்டுல ஸ்வீட் இருக்கணும். போய் வாங்கிட்டு வாடா என்கிறார் அம்மா. தோழியை வீட்டுக்கு அழைத்து வர இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா?//

எல்லாமே ரசனை சகா தீபாவளி வாழ்த்துகள்!

தீபாவளிக்கு ஸ்வீட்டை அளவா சாப்பிடுங்க :))

சிவா on November 3, 2010 at 2:03 AM said...

\\நரகாசூரன் மட்டும் இன்று இருந்திருந்தால் ஜாலியா இருந்திருப்பான். கிருஷ்ணர் என்னிடம் இருந்து தோழியை திருடுவதிலே குறியாய் இருந்திருப்பான்.//

செம செம செம!!!

Gopi Ramamoorthy on November 3, 2010 at 2:38 AM said...

ஹாப்பி தீபாவளி !

தெய்வசுகந்தி on November 3, 2010 at 8:13 AM said...

கலக்கல்!! இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்,உங்க தோழிக்கும் கூட!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on November 3, 2010 at 8:30 AM said...

27 வயசு தடியன்.. மனசளவுல பொடியன்.. பேசினா கடியன்.. கோவம் வந்தா வெடியன்.//

பட் உன் நேர்மை ரொம்ப பிடிச்சிது சகா! :))

Happy Diwali.

Pradeep on November 3, 2010 at 8:50 AM said...

Yaenga iruntha suttinga?

taaru on November 3, 2010 at 9:45 AM said...

//தாவணி கட்டிக் கொண்டு தோழி கொண்டாடிய தீபாவளிக
தோழியை வீட்டுக்கு அழைத்து வர இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா?//
தாவணி போட்டா தீபாவளி வந்தது சகா வீட்டுக்கு....!!! நடக்கட்டும்... வாழ்க வளமுடன்... தோழி தீவாளி வாழ்த்துக்கள்..

கார்க்கி on November 3, 2010 at 11:04 AM said...

கிங், வாங்க‌

சுசி, தோழியின் பாஷை சிரிப்பு ::)

ந‌ன்று க‌ன‌வுக‌ள் விற்ப‌வ‌ன், ம‌துரை ச‌ர‌வ‌ண‌ன்

வ‌ச‌ந்த், ந‌க்க‌லு :))

ந‌ன்றி சிவா

தீபாவ‌ளி வாழ்த்துக‌ள் கோபி

ந‌ன்றி தெய்வ‌சுக‌ந்தி. தீபாவ‌ளி வாழ்த்துக‌ள்

ஷ‌ங்க‌ர், ஹிஹிஹிஹி

பிர‌தீப், தோழிகிட்ட‌ இருந்துதான்

டாரு, அந்த‌ பாட்டு லின்க்தான் தேடிட்டு இருந்தேன்.. கிடைச்ச‌வுட‌ம் சேர்த்திட‌றேன் :)

vinu on November 3, 2010 at 12:11 PM said...

எப்படி இப்படி நாலு வரியில் அசத்த முடிகிறது... கடைசி கவிதை டச்... தீபாவளி வாழ்த்துக்கள்.

repeeeeeeeeeeeeeeeeeettttttttttu

kumaresh on November 3, 2010 at 12:14 PM said...

romba nalla irukku

happy deepavali

"ராஜா" on November 3, 2010 at 1:30 PM said...

ஹேப்பி தோழி தீபாவளி சகா ...

சங்கவி on November 3, 2010 at 2:56 PM said...

உங்களுக்கும், உங்க தோழிக்கும்
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

ப.செல்வக்குமார் on November 3, 2010 at 3:00 PM said...

/தீபாவளி அன்னைக்கு வீட்டுல ஸ்வீட் இருக்கணும். போய் வாங்கிட்டு வாடா என்கிறார் அம்மா. தோழியை வீட்டுக்கு அழைத்து வர இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா?//

இது கலக்கல் அண்ணா .. !! எப்படி உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் தோணுது ..?

சுசி on November 3, 2010 at 3:44 PM said...

உங்க தோழின்னா அழவா முடியும்?? சிரிச்சுட்டு தானே இருக்க முடியும்..

முதல்ல //?ு??்?ு// இதை சரி பண்ணுங்கப்பா..

சிவன். on November 3, 2010 at 5:44 PM said...

//என் மத்தாப்பூ டல்லா எரியுது என்று அடம் பிடிப்பார்களாம் குழந்தைகள்//

இது அட்டகாசம்..

கே.ஆர்.பி.செந்தில் on November 3, 2010 at 7:13 PM said...

ஹூம் ...

இரசிகை on November 5, 2010 at 3:26 PM said...

aththanaiyum asaththal...
:)

 

all rights reserved to www.karkibava.com