Nov 2, 2010

தளபதிடா


 

சாரு அடித்த அதே பல்டிதான். இது வேலை வெட்டியற்ற ஒரு விஜய் ரசிகன், விஜயைப் பற்றி எழுதிய பதிவு. விஜயைப் பற்றி பெருமையாகத்தான் எழுதி இருப்பான். எனவே இந்த 5 நிமிடத்தை வீணாக்கிவிட்டேன் என்று பின்னூட்டம் இடும் கனவான்கள் உடனே மாற்று பெட்ரோல் கண்டுபிடிக்கும் பணிக்கே திரும்பிவிடுங்கள். கிம் கி டுக்கின் ரசனை வாரிசுகள், டொரண்ட் டவுன்லோடி பிட்டு பிட்டாக உலகப்படத்தை ரசிக்கும் அறிவு ஜீவிக்கள், அறிவு மணிரத்னங்கள் எல்லோருக்கும் நான் சொல்ல ஏதுமில்லை. வழக்கம் போல சத்தம் போடாமல் படித்துவிட்டு நாமதான் உலகிலே பெஸ்ட் என்ற நினைப்போடு எஸ் ஆகிவிடுங்கள். போட்டி நடிகர்களின் ரசிகர்கள் அமைதியாக படிக்க முடியும் என்றால் தொடருங்கள். எதுக்குடா இந்த வேலை என்று பலமுறை நண்பர்கள் சொல்வதுண்டு. நினைத்ததை எழுத முடியாத பிளாக் என்ன வெங்காயத்துக்கு? சரி.பதிவுக்கு போலாம் வாங்க..

இந்தப் பதிவு எழுத காரணமாகிய செய்தியை முதலில் சொல்லி விடுகிறேன். விஜயின் கடைசி 6 படங்கள் மாபெரும் தோல்வியாம். படமெடுத்தவர்கள், திரையிட்டவர்கள் என அனைவரும் நூடுல்ஸ் ஆகிவிட்டார்களாம். இனி விளம்பரப்படங்களில் நடித்துதான் அவர் காலத்தை ஓட்ட வேண்டுமாம்.நேரிடையாகவும், மறைமுகமாகவும் என்னிடம் இதையெல்லாம் கேட்டவர்கள், சொன்னவர்கள் ஏராளம். அவர்களுக்கு இதோ என் பதில்

1) பாடிகார்ட் என்ற மலையாளப் படத்தின் ரீமேக்கான காவலன், கேரளாவில் வழக்கமான விஜய் பட விலைக்கே விற்றிருக்கிறதாம்.

2) காவலன் படத்தின் வெளிநாட்டு உரிமை இதுவரை விற்ற விஜய் பட விலையை விட அதிக விலைக்கு பெறப்பட்டிருக்கிறதாம்.

3) தமிழக வெளியீட்டு உரிமை சுறா பட விலைக்கே விற்கப்பட்டிருக்கிறது.

normal_Kaavalan HQ 5 - OVF

வெற்றிப் படங்கள் தரும் வரைதான் விஜய்க்கு மவுசு என்றவர்களுக்கு இன்னொரு செய்தி காத்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் தமிழக வாரப்பத்திரிக்கைகளின் அட்டையை அதிக முறை  அலங்கரித்த நடிகர் யார் எனத் தெரியுமா? விஜய்.

   என்ன கொடுமை சார் இது? வெற்றி பெற்றவர்களுக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் விஜய்க்கா? பூமி தாங்குமா? அதற்கு ஏதாவது ஆகி விடும் முன்பு இன்னொரு செய்தியையும் சொல்லி விடுகிறேன். பொதுவாக யார் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார்களோ அவர்களைத்தான் விளம்பரம் செய்ய அணுகுவார்கள். சச்சினை விட தோனி அதிகம் சம்பாதிக்க இதுவே காரணம் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் தொடர்ந்து 6 படங்கள் மகா ஃப்ளாப். குறுஞ்செய்திகளில் தமிழக சர்தார்ஜி அளவுக்கு நக்கல். இவ்வளவு பிரச்சினையில் இருக்கும் ஒரு மொக்கை நடிகரை தங்கள் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக ஆக்க யாராவது நினைப்பார்களா? முன் வந்தது ஜோஸ் ஆலுக்காஸ். அதற்காக விஜய்க்கு தரப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? காதை மூடிக் கொள்ளுங்கள். ** கோடி. விஜய் பிராண்ட் அம்பாசடர் அல்ல. கிராண்ட் அம்பாசிடர் என்பது இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

என்ன சொல்லி என்னப்பா பிரயோஜனம்? படமெல்லாம் மொக்கையாத்தானே இருக்கு என்று சொல்கிறீர்களா? விஜயின் பயணத்தை சற்றே திரும்பி பாருங்கள். 1999ஆண்டில் துள்ளாத மனமும் துள்ளும் என்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கண்ணா, கண்ணுக்குள் நிலவு என தொடர் தோல்விகள். அவ்வளவுதான் விஜய். என்றார்கள். அப்போதுதான் அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற இசை+ இயக்குனர் வேல்யூ மிக்க படங்களோடு வந்தது குஷி. அதன் பின் என்ன நடந்தது என சொல்லவும் வேண்டுமா?

.அதே போல் 2003ல் பகவதி, வசீகரா, புதிய கீதை என ஹாட்ரிக் தோல்விகள். விஜய்க்கு 5வது ரேங்காவது கொடுங்கப்பா என்று வள்ளல்கள் வியாக்கியானம் பேசின நேரம். ஒரு பக்கம் சூர்யா+விக்ரம்+பாலா என பெரும்படை. இன்னொரு பக்கம் வில்லன் என்ற ஹிட்டோடு தல கெத்தா நிற்கிறார். புத்தியே இல்லாமல் புதுமுக இயக்குனரை நம்பி திருமலை என்று வந்தார் விஜய். மொட்டை கன்ஃபார்ம்டு என்று ஆரூடம் சொன்னார்கள். போன பத்தியின் கடைசி வரி இங்கே ரிப்பீட்.

normal_Kaavalan HQ 20 - OVF

இப்போது விஜய்க்கு அப்படியொரு இக்கட்டான நிலை. சொல்லப்போனால் இன்னும் மோசம். காவலன் என்று சொன்னதும் விஜய் திருந்தி விட்டார் என்றார்கள். அதே சூட்டில் வேலாயுதம் பூஜைப் போடப்படுகிறது. ”வேலா வேலா வேலா வேலாயுதம்.. நீ ஒத்த வார்த்தை சொன்னா போதும் நூறாயுதம்” என்று அறிமுகப்பாடல் எழுதுகிறார்கள். என்ன செய்யப்போகிறார் விஜய்? ஷங்கரோடு 3 இடியட்ஸ் என்கிறார்கள். இல்லை இல்லை. ஷங்கர் விஜய்க்காகவே புதுசா கதை எழுதுகிறார் என்றும் சொல்கிறார்கள். களவாணி இயக்குனர், விக்ரம்.கே.குமார் எல்லாம் ஸ்க்ரிப்ட்டோடு காத்திருக்கிறார்கள் என்ற செய்திகளும் வருகிறது. சீமான் வெளியே வந்ததும் பகலவன் என்கிறார்கள். பிடிக்கிறதோ இல்லையோ, பெரும்பான்மையான சினிமா ரசிகர்கள் பேசும் விஷயம் இன்று இதுதான். எல்லாமே செய்திகள்தானே? எதுதான் உண்மை?

இந்த வாரம் விகடனில் அமீரின் பேட்டி. பருத்தி வீரன் தந்த படைப்பாளி சொல்கிறார் “விஜய்க்குள்ளே அவார்டுகளை அள்ளிக் குவிக்கும் கலைஞனும் இருக்கிறார். அதற்கான உழைப்பும் இருக்கிறது. இனி எங்கேயோ போய்விடுவார் விஜய். கண்ணபிரான் ஒன்றாக செய்யப் போகிறோம்”.  ஷங்கரின் படமும் உறுதியாகிவிட்டது. ஒவ்வொரு முறை தோற்கும் போதெல்லாம் இன்னும் வேகமாக வெற்றிகளை குவிப்பது விஜயின் ஸ்டைல். இந்த முறை அடி அதிகம். வெறியும் அதிகமாகத்தானே இருக்கும்? இனிமேல் தான் இருக்கு ஆட்டம்.. இன்னுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று வாய்பிளக்கும் கணக்கு புலிகள் உங்கள் வீட்டிலோ, அருகிலோ இருக்கும் குழந்தையை போய் கேளுங்கள். ஜோஸ் ஆலுக்காஸை போய் கேளுங்கள். இல்லை காவலன் வரும் வரை காத்திருந்து முதல் நாள் தியேட்டர் பக்கம் போய் பாருங்கள்.

2004களில் கில்லி என்று பைக்குகளின் பின்னாலும், ஆட்டோக்களின் பின்னாலும் எழுதிக் கொண்டு திரிந்தார்களே! அதை விட அதிகமானோர் விரைவில் கெத்தா சொல்வார்கள்

“தளபதிடா”

 

டிஸ்கி:     எந்த கோடு உயரமானது என்ற போட்டியில் இரண்டு விஷயங்கள் செய்யலாம். நமது கோட்டை பெரிதாக்குவது. அடுத்தக் கோட்டை அழித்து குட்டையாக்குவது. நான் முதலாவதைத்தான் செய்கிறேன்.எனவே விஜயை பிடிக்காதவர்கள் தங்கள் வெறுப்பைக் காட்ட இது இடமல்ல.

காவலன் பாடல்கள் வரும் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படம் திசம்பரில்.பாடல் விவரங்கள்

1) விண்ணைக்காப்பான் ஒருவன் மண்ணைக் காப்பான் ஒருவன் – பா.விஜய்

2) சடசடவென மழை கொஞ்சுது  - யுகபாரதி

3) ஸ்டெப் ஸ்டெப்  - விவேகா

4) யாரது யாரது சொல்லாமல் நெஞ்சை அள்ளி செல்வது – யுகபாரதி

5) கபிலன் எழுதிய இன்னொரு பாடல்.

34 கருத்துக்குத்து:

RaGhaV on November 2, 2010 at 12:11 AM said...

பதிவு டாப்பு டக்கர் சகா.. :-))

ILA(@)இளா on November 2, 2010 at 12:14 AM said...

கண்ணாயிரம் கூட வரிசையில இருக்குங்களே

ILA(@)இளா on November 2, 2010 at 12:15 AM said...

உங்கப் பதிவுல ஒன்னே ஒன்னு தெரிஞ்சிருச்சு. எத்தனை அடி விழுந்தாலும் திருந்த மாட்டீங்க? அதாவது மாத்திக்க மாட்டீங்க(விஜய் தரப்பு). அது சரி, நீங்க உங்க பேச்சையே கேட்க மாட்டீங்களே

ப்ரியமுடன் வசந்த் on November 2, 2010 at 12:17 AM said...

சூப்பரான மேட்டர்ஸ் சகா முதல் பத்தியும் படிச்சுட்டும் யாராச்சும் சொம்பெடுத்துட்டு வந்தா பால் ஊத்தி அனுப்பிடுவோம் டோண்ட்வொர்ரி!

Kaarthik on November 2, 2010 at 12:20 AM said...

யாரது சொல்லாமல் நெஞ்சை அள்ளி செல்வது. பாடல் வரியைக் கூட காப்பி அடிக்க வேண்டுமா??

ப்ரியமுடன் வசந்த் on November 2, 2010 at 12:21 AM said...

டிஸ்கில சொன்ன உதாரணம் கலக்கல்!

பரிசல்காரன் on November 2, 2010 at 12:30 AM said...

விஜய் பிராண்ட் அம்பாசடர் அல்ல. கிராண்ட் அம்பாசிடர்//

விகடன்ல வர்றதுக்கு முன்னாடி முந்திகிட்ட!!

பரிசல்காரன் on November 2, 2010 at 12:32 AM said...

4வது பாடல் ‘யாரது யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி’ படிக்கும்போது பழைய பாடலின் மெட்டு மனதில் ஓடுகிறது.

ஹிட் ஆகும்ன்னுதான் தோணுது!

மதுரை சரவணன் on November 2, 2010 at 12:35 AM said...

//ஒவ்வொரு முறை தோற்கும் போதெல்லாம் இன்னும் வேகமாக வெற்றிகளை குவிப்பது விஜயின் ஸ்டைல். இந்த முறை அடி அதிகம். வெறியும் அதிகமாகத்தானே இருக்கும்? இனிமேல் தான் இருக்கு ஆட்டம்///அம்மாடியோவ்வ்...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

சுசி on November 2, 2010 at 1:13 AM said...

//இந்தப் பதிவு எழுத காரணமாகிய செய்தியை முதலில் சொல்லி விடுகிறேன்.//

பிள்ளையாரே.. இப்டியான செய்திகள் வரணும்..

அப்போதான் இணைய தளபதி இளைய தளபதி பத்தி அடிக்கடி எழுதுவார் :))

கலக்கல் கார்க்கி.

டிஸ்கி செம!!

philosophy prabhakaran on November 2, 2010 at 4:24 AM said...

காலம் பதில் சொல்லும்...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on November 2, 2010 at 7:45 AM said...

சகா, எங்களுக்கும் விஜய்க்கும் என்ன வாய்க்கா வரப்பு தகராறா? நல்லா இருந்தா சூப்பர்ன்னுதான் சொல்லப்போறோம்.

விஜயகாந்த் மாதிரி புள்ளி விவரம் கொடுத்துட்டு அப்புறம் படம் மொக்கையா இருந்தா, கேரளால கூட்டத்தப் பாருங்க? இந்த வீடியோல .05 லெர்ந்து .09 வரைக்கும் பாருங்க மொத்த படமே இவ்ளோதான். இதுக்குத்தான் நாங்க அவர தளபதியாக்கறோம்ன்ன வேண்டியது.

நாங்க என்ன விஜய் நல்லா நடிக்கலைன்னா சொல்றோம். நடிச்சா நல்லா இருக்கும்னுதானே சொல்றோம்.

//அது சரி, நீங்க உங்க பேச்சையே கேட்க மாட்டீங்களே//

இளா சொன்னதை வழிமொழிகிறேன். :))

நாய்க்குட்டி மனசு on November 2, 2010 at 8:04 AM said...

சரி சரி டென்ஷன் ஆகாதீங்க. நம்ம விஜய் பேச மாட்டார், செயல்ல தான் காட்டுவார். இடையிடையே இப்படியான தோல்விகளும் விமர்சனங்களும் வருவது நல்லதற்கு தான்.

மகேஷ் : ரசிகன் on November 2, 2010 at 8:32 AM said...

:)

மகேஷ் : ரசிகன் on November 2, 2010 at 8:33 AM said...
This comment has been removed by the author.
சிவா on November 2, 2010 at 8:55 AM said...

நல்ல படம் கொடுத்தா எல்லோருமே ரசிக்க போறோம்!!! பார்முலா படம் மட்டும் போதாதுங்கிரதுதான் மேட்டரே!

எறும்பு on November 2, 2010 at 9:36 AM said...

ஷங்கர் சொன்னதை வழிமொழிகிறேன்..
விஜய் நடிச்சா நல்லாத்தான் இருக்கும்.

:)

கார்க்கி on November 2, 2010 at 9:48 AM said...

ந‌ன்றி ராக‌வ். ம‌ங்க‌ள‌ம‌ர‌மான‌ ஓப்ப‌னிங் :)

இளா, அப்ப‌டி பார்த்தா த‌மிழ் சினிமாவுல் யாருமே இருக்க‌ முடியாது. இதெல்லாம் வ‌ரும் போகும்.

வ‌ச‌ந்த், :))))

கார்த்திக்.. ரீமிக்ஸா இருந்தா என்ன‌ செய்வீங்க‌? :))

ப‌ரிச‌ல், விக‌டன்ல‌ வ‌ரும்னு எப்ப‌டி சொல்றீங்க‌?

ந‌ன்றி ச‌ர‌வ‌ண‌ன்

சுசி, அடுத்த‌ மாத‌ம் ப‌ட‌ம் விம‌ர்ச‌ன‌ம். இந்த‌ மாத‌ன் இசை விம‌ர்ச‌ன‌ம் இருக்கு :)

பிரபாக‌ர‌ன்,..அப்ப‌ நீங்க‌ போய் கால‌த்த‌ வ‌ர‌ சொல்லுங்க‌ :))))

ஷ‌ங்க‌ர், உங்க‌ளுக்கு பிர‌ச்சினையீல்லை.. இருக்கிர‌வ‌ங‌க்ளுக்குத்தான் சொன்னேன்.. :)

நாய்க்குட்டி ம‌ன‌சு, ஹிஹிஹி.. டேங்க்ஸ்

ம‌கேஷ், அது என்ன‌ ஒரு க‌மென்ட் டெலீட்டியிருக்க‌!

சிவா, ஃபார்முலா மாறுகிர‌து என்ப‌த‌ற்கே இந்த‌ப் ப‌திவு

எறும்பு, ந‌டிக்காம‌லே இவ்ளோன்னா நடிச்சா? :)))

பொன்கார்த்திக் on November 2, 2010 at 11:20 AM said...

வெடிக்கிறதுக்கு முன்னாடி ஏரிமலை அமைதியா தான் சகா இருக்கும்...

வெற்றி on November 2, 2010 at 11:23 AM said...

டக்கரு சகா :) நச் பதிவு

வெற்றி on November 2, 2010 at 11:23 AM said...

:)

அமுதா கிருஷ்ணா on November 2, 2010 at 11:46 AM said...

முதலில் என்னுடைய பசங்களுக்காக விஜய் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். இப்ப என் தம்பி பையன் விஷால் 4 வயது தீவிர ரசிகர்.அவனுடன் நான் போவது விஜய் படங்கள் தான்.அவன் முகத்தில் தெரியும் சந்தோஷத்திற்காக எத்தனை சுறாவும் பார்ப்பேன்.

பாலா on November 2, 2010 at 11:52 AM said...

உங்களுடைய இந்த தளராத நம்பிக்கைக்காவது காவலன் ஜெயிக்கட்டுமே...
வாழ்த்துக்கள் கார்க்கி.

நர்சிம் on November 2, 2010 at 1:14 PM said...

வாழ்க.

நர்சிம் on November 2, 2010 at 1:15 PM said...

விஜய் அழகாக இருக்கிறார்.

vinu on November 2, 2010 at 1:50 PM said...

ungalipondra thodar vijay rasigargalin ethirpaarpit kaagavaavathu intha padam jeikkattum, advance vaalthukkal sagaa..........[varum, aanaa vanthudummmmmmmmmmm]

ராமய்யா... on November 2, 2010 at 1:53 PM said...

Remake Vijay Vazhka..

Nalla kathai amsam ulla oru padathil avarai ethir parkiren..

Kulanthaikalai migavum kavarum oru herovaga irukkiraar.. athai avar thakka vaithukkondu iruppathaal intha opening.. athai thakka vaithukkolla vendum...

பாலா on November 2, 2010 at 2:40 PM said...

//விஜயின் கடைசி 6 படங்கள் மாபெரும் தோல்வியாம்

//இந்த முறை அடி அதிகம். வெறியும் அதிகமாகத்தானே இருக்கும்

முரண்பாடாக இருக்கிறேதே?

ஆறு படம் தோல்வி அடையவில்லை என்கிற ரீதியில் முதல் வரி. அடி அதிகம் என்று இன்னொரு வரி.

"ராஜா" on November 2, 2010 at 4:09 PM said...

சகா செம் சைடு கோல் போட்டுடீங்களே ... விளம்பரத்தில் நடிக்கிரவனேல்லாம் பெரிய ஆளா? அப்ப சூர்யா விஜைய விட பெரிய அப்பாடக்கரா .. ஒரு விளம்பர படத்துல நடிக்க அவருக்கு neenga சொன்னத விட அதிக சம்பளமாம் ...

அப்பறம் ஹிட் கொடுத்தா மட்டும் தல கெத்து கெடயாது .. தல எப்பவுமே கெத்துதான்....

அப்பறம் பதிவில இருக்கிற ஒரு விசயத்துக்கு பெரும்பாலானவர்களின் ரியாக்ஷன் இப்படிதான் இருக்கும் ...ஹி ஹி ஹீ ஹீஈ ஹீஹெஈ ........

ப.செல்வக்குமார் on November 2, 2010 at 5:01 PM said...

உண்மையாவே நல்லா இருக்கு அண்ணா ., நான் விஜய் ரசிகர் இல்லை என்றாலும் அவரது சில படங்கள் எனக்குப் பிடிக்கும் ..! அதே போல அவரைக் கிண்டல் செய்வதும் இப்போது அதிகமாகி இருக்கிறது என்பது வருத்தமே ..!!

கார்க்கி on November 2, 2010 at 10:56 PM said...

பாலா,
சச்சின் 30 அடிச்சா ஃபெயிலியர். புஜாரா அடிச்சா சூப்பர்..


ராஜா,

நல்லா இருக்கிங்களா சகா? ஹேப்பி தீபாவளி

அனைவருக்கும் நன்றி

"ராஜா" on November 3, 2010 at 1:28 PM said...

ஹேப்பி தீபாவளி சகா ...

மகேஷ் : ரசிகன் on November 3, 2010 at 9:58 PM said...

அதே ஸ்மைலி தான் சகா.. ரெண்டாவது வாட்டி வந்துடுத்து.. அத தான் டெலீட் பண்ணேன்,

இரசிகை on November 5, 2010 at 3:39 PM said...

:)

vazhthukal kaarkki!

 

all rights reserved to www.karkibava.com