Nov 1, 2010

ரஜினி.. மேஏஏஏஏ


 

  சர்தார்ஜி ஜோக்குகள் பிரசித்தி பெற்றவை என்பது தெரிந்ததே. அதே போல் எஸ்எம்எஸ்  ஜோக்குகள் 2004க்கு பின் தூள் கிளப்பின. யாரேனும் ஒரு பிரபலத்தை பற்றி கிண்டலடித்து வந்த ஜோக்குகள் ஏராளம். முதலில் தாதா கங்குலியை  மானவாரியாக ஓட்டியெடுத்தன குறுஞ்செய்தி துணுக்குகள். ”மேகி செய்வது எப்படி தெரியுமா? ஒரு பாத்திரத்தில் டம்ளர் நீரை ஊற்றி, அதில் மேகியை போட்டு, தட்டு போட்டு மூடி அடுப்பில் வைக்கவும். தாதா பேட்டிங் செய்ய மைதானத்தில் நுழையும்போது அடுப்பை பற்ற வைக்கவும். தாதா அவுட் ஆனவுடன் அடுப்பை அணைத்தால் மேகி ரெடி”.

  அடுத்து நம்ம தல அஜீத். தாதாவுக்கு வரும் ஜோக்குகளையே சற்று மாற்றி தலையை கலாய்த்து அனுப்புவது அப்போதைய ஃபேஷன். அந்நியன் பட வசனத்தை தலைக்கு செட்டாகும்படி செய்தது ஞாபகம் இருக்கா?  ஒரு படம் ஓடலைன்னா தப்பா?  “இல்லைங்க”. ஒரு வருஷத்துல ஒரு படம் கூட ஓடலைன்னா தப்பா? “தப்பு மாதிரிதாங்க தெரியுது”. அஞ்சு வருஷமா ஒரு படம் கூட ஓடலைன்னா தப்பா? “பெரிய தப்புங்க”. அப்படித்தாண்டா நாய நீ நடிக்கிற”

இதெல்லாம் ஒண்ணுமே இல்லை என்பது மாதிரி 2 வருஷமா எங்க தளபதிய கலாய்ச்சு வர்ற எஸ்.எம்.எஸ் பத்தி சொல்லணுமா? சாதாரண ஜோக்கை யாராவது அனுப்பினால் கூட அதில் விஜய் பேரை போட்டு ஃபார்வர்ட் செய்வது பல பேருக்கு ஒரு நோயாகவே மாறிப்போனது. விஜய் ரசிகர்களும் பதிலுக்கு சூர்யாவையோ, அஜித்தையோ கிண்டலடிப்பது இன்றும் தொடர்கிறது. சிங்கம் சூர்யாவின் வசனத்தை மாற்றி வந்த இந்த வசனம் நச். “சூர்யா: ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா”. அனுஷ்கா: ஹீல்ஸ் போடாமலே நான் உன்னை விட ஹயிட்டுடா”.

எதை செய்தாலும் தி பெஸ்ட்டாக செய்பவர் நம்ம சூப்பர்ஸ்டார். இதில் மட்டும் சுப்ரீம் ஸ்டார் போல சொதப்பவா செய்வார்? எந்திரனுக்கு பிறகு ரஜினியை புகழ்ந்துதான் குறுஞ்செய்திகளே வருகின்றன. வட இந்திய பத்திரிக்கைகள் இம்மாதிரியான துணுக்குகளை நக்கலாக சொன்னாலும், அவை ரஜினியை கிண்டலடிப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒரு உதாரணம் பாருங்கள். “ரஜினி 100 மீட்டர் ரேஸில் முதலிடம் வந்ததைப் பார்த்து ஐன்ஸ்டீன் இறந்துவிட்டார். ஏனெனில் இரண்டாம் இடத்தில் வந்தது “ஒளி” (Light). அதை விட சூப்பரா இன்னொன்னு. “ரஜினியும் சூப்பர்மேனும் ஒரு முறை பெட் கட்டினார்களாம். தோற்பவர் ஜட்டியை பேண்ட்டுக்கு மேல போட வேண்டும்”

இந்த ரீதியில் பல ட்வீட்டூகள், SMSக்கள், பத்திரிக்கை துணுக்குகள் போட்டுட்டே இருக்காங்கப்பா. சரி. நம்ம பங்கிற்கு நாமளும் சூப்பர்ஸ்டார் புகழ் பாடலாம்னு எழுத ஆரம்பிச்ச பதிவு இப்பதான் தொடங்குது..

1) ரஜினி கண்டக்டராக இருந்தபோது ஒரு கார் ரிப்பேர் ஆகி நின்றுவிட்டது. ஸ்டார்ட் செய்ய அதை தள்ளும்போது, சூப்பர்ஸ்டாரும் ஒரு கையால் தள்ளினார். அந்த காருக்கு இப்போது ஃபெராரி என்று பெயர்.

2) ரஜினி கோவத்தில் காலை வேகமாக தரையில் உதைத்தால் இந்தோனேஷிய மக்கள் பாவம். பூகம்பம் வந்துவிடுகிறதாம்.

3) ஓவர் ஸ்பீட் என்று மாறுவேஷத்தில் சென்ற ரஜினியை டிராஃபிக் போலிஸ் பிடித்துவிட்டார். இத்தனைக்கும் அன்று ரஜினி வாக்கிங் தான் போனார். ஜாக்கிங் இல்லை

4) ஒரு முறை போயிங் விமானம் ஒன்று ரஜினி மீது மோதிவிட்டது. அந்த வண்டிதான் இப்போது மாருதி 800 ஆக மாறிவிட்டது.

5) இமயமலைதான் உலகிலே உயரமான மலைத்தொடர். ரஜினிக்கே மலையேற சில நாட்கள் ஆகிறதாம்.

6) தமிழகத்தில் புயல் என்ற செய்தியை பார்க்கும்போதெல்லாம் பெருமூச்சு விடுவாராம் சூப்பர்ஸ்டார். புயல் ஆந்திரா அல்லது ஒரிசாவை நோக்கி சென்றுவிடுமாம்.

7) உலகின் அதிவேக பிராசசரை இண்டெல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பெயரிட்டுவிட்டதாம். “பெண்ட்டியம் ரஜினி”

8)  நாளைக்கு காலை 9 மணிக்கு மும்பைல ஷூட்டிங். நாங்க நைட் ஃப்ளைட்ல
போறோம்.. நீங்க சார்?’ -  ஷங்கர்
“நான் எட்டேகாலுக்கு கலைஞரைப் பார்க்கணும்.. முடிச்சுட்டு அப்படியே
நடந்து வந்துடுவேன்” - ரஜினி

17 கருத்துக்குத்து:

பரிசல்காரன் on November 1, 2010 at 12:15 AM said...

ரஜினியை போன வருஷம் ஒருத்தன் துப்பாகியால சுட்டுட்டான்.


ப்ச்.. அந்த புல்லட்டுக்கு நாளைக்கு நினைவு நாளாம்..

பரிசல்காரன் on November 1, 2010 at 12:16 AM said...

பாகிஸ்தான் சொல்லி, இந்தியா நோக்கி ஒரு விமானத்தை ஏவினானாம் பின்லேடன்.

வானில் பறக்கும்போதே, ரஜினி கோவமாக ஒரு பார்வை பார்க்க, கட்டுப்பாட்டை
இழந்து அமெரிக்கா போன தேதி 9/11.

ராஜகோபால் on November 1, 2010 at 12:22 AM said...

ரஜினியை jokes super

Come here Dr.Vijay Jokes...

Dr.விஜய் - ன் கோலாயுதம்

http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/blog-post_29.html

சுசி on November 1, 2010 at 12:30 AM said...

//பதிவு இப்பதான் தொடங்குது..//

கார்க்கி குசும்பு :)

எட்டாவது சூப்பரோ சூப்பர்.. சூப்பர்ஸ்டார் மாதிரியே.

தெய்வசுகந்தி on November 1, 2010 at 2:45 AM said...

சூப்பர்!!

வழிப்போக்கன் - யோகேஷ் on November 1, 2010 at 2:47 AM said...

ரஜினி மேட்டர் சூப்பர்............... பரிசல் தன்னோட பங்குக்கு போட்டு தாக்கிரூக்காரு..........

thangaraju on November 1, 2010 at 3:29 AM said...

Rajnikanth facts

You want to know who is Rajanikanth. ...here are the facts

1.Rajanikanth makes onions cry

2.Rajanikanth can delete the Recycle Bin.

3.Ghosts are actually caused by Rajanikanth killing people faster than Death can process them.

4.Rajanikanth can build a snowman..... out of rain.

5.Rajanikanth can strangle you with a cordless phone.

6.Rajanikanth can drown a fish.
7.When Rajanikanth enters a room, he doesn't turn the lights on,......... .... he turns the dark off.

8.When Rajanikanth looks in a mirror the mirror shatters, because not even glass is stupid enough to get in between Rajanikanth and Rajanikanth.

9.Brett Favre can throw a football over 50 yards.

10.Rajanikanth can throw Brett Favre even further.

11.The last digit of pi is Rajanikanth. He is the end of all things.

12.Rajanikanth does not know where you live, but he knows where you will die.

13.Bullets dodge Rajanikanth.

14.A Handicap parking sign does not signify that this spot is for handicapped people. It is actually in fact a warning, that the spot belongs to Rajanikanth and that you will be handicapped if you park there.

15.Rajanikanth' calendar goes straight from March 31st to April 2nd, no one fools Rajanikanth.

16.If you spell Rajanikanth wrong on Google it doesn't say, "Did you mean Rajanikanth? " It simply replies, "Run while you still have the chance."

17.Rajanikanth can do a wheelie on a unicycle.

18.Once a cobra bit Rajanikanth' leg. After five days of excruciating pain, the cobra died.

19.When Rajanikanth gives you the finger, he's telling you how many seconds you have left to live.

20.Rajanikanth can kill two stones with one bird.

21.Rajanikanth was once on Celebrity Wheel of Fortune and was the first to spin. The next 29 minutes of the show consisted of everyone standing around awkwardly, waiting for the wheel to stop.

22.Leading hand sanitizers claim they can kill 99.9 percent of germs. Rajanikanth can kill 100 percent of whatever he wants.

23.There is no such thing as global warming. Rajanikanth was cold, so he turned the sun up.

24.Rajanikanth can set ants on fire with a magnifying glass. At night.

25.Rajanikanth has a deep and abiding respect for human life… unless it gets in his way.

26.It takes Rajanikanth 20 minutes to watch 60 Minutes.

27.Rajanikanth once shot down a German fighter plane with his finger, by yelling, "Bang!"

28.In an average living room there are 1,242 objects Rajanikanth could use to kill you, including the room itself.

29.Behind every successful man, there is a woman. Behind every dead man, there is Rajanikanth.

30.Rajanikanth destroyed the periodic table, because Rajanikanth only recognizes the element of surprise.

31.Rajanikanth got his drivers license at the age of 16 Seconds.

32.With the rising cost of gasoline, Rajanikanth is beginning to worry about his drinking habit.

33.The square root of Rajanikanth is pain. Do not try to square Rajanikanth, the result is death.

34.When you say "no one's perfect", Rajanikanth takes this as a personal insult.

35.OXFORD DICTIONARY HAS DECIDED TO REPLACE THE WORD IMPOSSIBLE WITH RAJNIKANTH

36.DINOSAURS ONCE OWED MONEY TO RAJNIKANT. THAT WAS THE LAST TIME THEY WERE SEEN ON THIS PLANET

-GAJA

மாணவன் on November 1, 2010 at 7:07 AM said...

கலக்கல் அண்ணே,
நம்ம பங்குக்கு ஒரு பஞ்ச் டயலாக்கு

”கண்ணா நான் நல்லவங்களுக்கு சாப்ட்வேர், கெட்டவங்களுக்கு ஹார்ட்வேர் சும்மா பிரிச்சு மேஞ்சுடுவேன் அக்குவேறு ஆனிவேறா”

சும்மா அதிருதுல்லே....

வாய்ப்பிற்கு நன்றி
நட்புடன்
மாணவன்

கார்க்கி on November 1, 2010 at 7:55 AM said...

Prabhakara

sorry to delete ur comment. Its adult only joke

SenthilMohan on November 1, 2010 at 9:48 AM said...

சகா... தலைவரக் கலாய்க்குறது கொஞ்சம் கூட நல்லா இல்ல. அப்புறம் அனானி பின்னூட்டம் வந்துச்சு. அனானி ஈமெயில் வந்துச்சுன்னு பொலம்பக் கூடாது. சொல்லிட்டேன் ஆமா. அப்படின்னு பின்னூட்டமிட ஆச தான். பரவால விடுங்க. இது என்னோட Contribution.
Michael Jordan : I can spin a basketball on my finger for 2 hrs. can u?
SuperStar : How do u think the earth spins? :)

மோகன் குமார் on November 1, 2010 at 9:56 AM said...

உங்க புது profile-ல் உங்களை பற்றிய விளக்கம் ஹா ஹா

tamil on November 1, 2010 at 11:41 AM said...

Ilaiya thalai vali patthi oru sms joke kuda sollalaya? :(

பொன்கார்த்திக் on November 1, 2010 at 3:16 PM said...

:)

கே.ஆர்.பி.செந்தில் on November 1, 2010 at 7:51 PM said...

கலாய்..கலாய்...கலக்கலாய் ...

கார்க்கி on November 1, 2010 at 11:45 PM said...

அனைவருக்கும் நன்றி

Gopi on November 2, 2010 at 2:55 PM said...

neenga ellaam nallavangalaaa...illae kettavangalaaa

இரசிகை on November 5, 2010 at 3:45 PM said...

:)

 

all rights reserved to www.karkibava.com