Nov 30, 2010

உனக்கு நல்ல சாவே வராதுடா

20 கருத்துக்குத்து

 

மச்சி.. பாலாஜி பேசறேண்டா. எப்படி இருக்க?

அடேய்… சொல்லுடா..

உனக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ். ஒரு ஃபிகர் எனக்கும் மடங்கிடுச்சு மச்சி.

நிஜமாவாடா? பார்த்து மடக்கி மடக்கி கூன் விழ வச்சிடாத.

போதும்டா உன் நக்கலு. இப்ப எனக்கு ஒரு ஹெல்ப்பு வேணும்.

அப்படி வா மேட்டருக்கு. என்ன உன் ஆளுக்கு நான் ஏதாவது தரணுமா?

கரெக்ட். ஆனா ஐடியா மட்டும் நீ தா. கொடுக்கிற வேலையை நான் பார்த்துக்கிறேன்.

உஷாருடா நீ. ஆளு எப்படி இருக்கும்? சுமாரா இருக்குமா?

அதெல்லாம் எதுக்கு? பர்த்டே கிஃப்ட் தரணும். அதுக்கு மட்டும் ஐடியா சொல்லு

இல்லடா. எப்படி இருப்பான்னு தெரிஞ்சா அதுக்கேத்த மாதிரி சொல்லுவேன்

ம்ம். பொய்யெல்லாம் சொல்லல. இந்த ஊரிலே அவதான் அழகுன்னு சொல்லலாம்.

அட. அப்ப ஒண்ணு பண்ணு. ஒரு குளோப் வாங்கி பேக் பண்ணி “உனக்கான பரிசை உலகெங்கும் தேடினேன். கிடைக்கவில்லை. அதனால் உலகையே பரிசாக தருகிறேன்னு எழுதிக் கொடு.

இதெல்லாம் உன் பிளாகிலே நான் எப்பவோ படிச்சிட்டேன். நல்லாதானிருக்கு. வேற எதுவும் சொல்லு.

எனக்கு ஃபீல் வரணும்டா. அவள பத்தி சொல்லு

ஜீன்ஸ் போட்ட ஜாஸ்மிண்டா அவ. பழமையும், புதுமையும் கலந்த பதுமை.

கொஞ்சம் ஓவராத்தான் போற..ம்ம். ஒரு மொபைல் வாங்கி இளையராஜா பாட்டு இருக்கிற மெமரி கார்டோடு கொடு. நீ சொல்ற மாதிரி ஒரு ஃப்யூஷனா இருக்கும்.

சூப்பர் ஐடியா. ஆனா அவ ரகுமான் ஃபேன். சோ, வேற சொல்லு மச்சி.

சினிமா பார்ப்பாளா?

ம்ம். நிறைய

அப்போ சத்யம் FUEL CARD வாங்கி 2000 ரூபாய்க்கு ஃபில் பண்ணிக் கொடு. எப்போ சினிமா போனாலும் உன் ஞாபகம் வரும். உன்னையே கூட்டிட்டு போவா. நீ கொடுக்கிற காசுல பாதி நீ படம் பார்த்து கழிச்சிடலாம்.

நீ வேற மச்சி. அவ கல்யாண சிடியை கூட அவ திருட்டு சிடியா வாங்கித்தான் பார்ப்பா.

அடேய். என்ன பொண்ணுடா அவ?

அப்படி சொல்லாத மச்சி. நீ ஒரு தடவ பார்த்த… வேணாம்ப்பா. நீ ஐடியா மட்டும் கொடு.

என்னடா ஓவரா புகழுற. அவ்ளோ அழகா இருந்தா பேசாம ஒரு கிஸ் கொடுத்திடேன்.

இன்னும் அந்தளவுக்கு போகல மச்சி. எனக்கும் ஆசைதான். இருந்தாலும் அவ வாயால லவ்வ கன்ஃபார்ம் பண்ணிடட்டுமே.

அடங்கொன்னியா. இன்னும் அதுவே சொல்லலையா? அதுக்குள்ள மடங்கிடுச்சுன்னு சொல்லிட்ட இல்ல!

ஆயிடும்டா. நீ ஐடியா கொடு.

பெஸ்ட். ஒரு பிளாட்டினம் வித் டைமண்ட் மோதிரம் வாங்கு. அவ உன்னை லவ் பண்ணா அவளே போட்டு விட சொல்லுவா

வாவ். இதுக்குத்தாண்டா நீ வேணும். ஆனால் பிளாட்டிணம் மோதிரம் வாங்குற அளவுக்கு காசில்லை. வெள்ளி ஓக்கேவா?

அப்போ ஃபிகரும் இந்தளவுக்கு இருக்காது. ஓக்கேவா?

என்ன மச்சி? இதே ஃபீலோட வேற ஐடியா சொல்லேன். கொஞ்சம் சீப்பா

வாழைப்பழம் வாங்கி கொடு. சீப்பா இருக்கும்.

பிகு பண்ணாதடா. அவளுக்கு இந்த மாதிரி ஜாலியா பேசினா பிடிக்கும். கிரேசி மோகன் ஜோக்ஸ் எல்லாம் விழுந்து விழுந்து ரசிப்பா. அந்த மாதிரி ஏதாவது.

என்ன சொல்ற? அவளுக்கு மொக்க ஜோக்ன்னா பிடிக்குமா?

ஆமாம்டா. ஒரு நாள் யோகா பண்ணி உடம்ப குறைக்க வேண்டியதுதானேன்னு எங்கிட்ட சொன்னா. நான் உடனே குறைச்சிட்டேன். உடம்ப இல்லை, யோகா பண்றதன்னு சொன்னேன். 2 நாள் லீவ் போட்டு சிரிச்சா.

அடேய். உண்மையாவா? அப்ப அவளுக்கு கிஃப்ட் கொடுக்கிறது ஈசி. வாழ்க்கையிலே அவளுக்கு ரொம்ப பிடிக்க போற கிஃப்ட் இதுவாத்தான் இருக்கும்.

நிஜமாவாடா மச்சி? சொல்லுடா. என்ன கொடுக்கலாம்?

அவ பர்த்டே அன்னைக்கு கரெக்ட்டா 12 மணிக்கு நான் சொல்றத எஸ்.எம்.எஸ் அனுப்பு. உன்னை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டா.

என்ன அனுப்பணும்?

9789887048

ங்… உன்னைப் போய் ஐடியா கேட்டேன் பாரு. என்ன சொல்லணும். பொ…. நா… நீயெல்லாம் உருப்படவே மாட்டடா. வயிறெரிஞ்சு சொல்றேன். பு…. பா….. உனக்கு நல்ல சாவே வராதுடா..

 

Nov 28, 2010

அபினும் பியரும் பின்னே ஏழுவும்

21 கருத்துக்குத்து

 

மறுநாள் செமெஸ்டர் தேர்வுகள். எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் முழு பியரையும் அடித்துவிட்டான் ஏழு. படிப்பதில் அவன் சூரன். எங்கள் கவலையெல்லாம் அவனை எப்படியாவது எழுப்பி கிளப்ப வேண்டுமென்பதே. நினைத்தது போலில்லாமல் காலை எட்டு மணிக்கே எழுந்துவிட்டான். ஆனால் மப்பு மட்டும் முழுமையாக இறங்கவில்லை.

தேர்வு அறைக்குள் நுழைந்தவன் நேராக ப்ளாட்ஃபார்ம் மீது ஏறினான். "யாருப்பா இன்னைக்கு எனக்கு பேப்பர் கொடுத்து புண்ணியம் தேடிக்கப் போறது?"

எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். ஏழுவா இவ்வளவு சத்தம் போட்டு பேசுவது? பின் மெல்ல அவனை சமாதானப்படுத்தி தேர்வை ஒழுங்காக எழுதுமாறு எடுத்து சொன்னோம். தேர்வும் தொடங்கியது. கேள்வித்தாளையும் விடைத்தாளையும் கொடுத்துவிட்டு சரி பார்த்திட சொன்னார் மேற்பார்வையாளர். ஏழு எழுந்ததைப் பார்த்தவுடன் எனக்கு பயம் ஏறியது.

"எக்ஸ்க்யூஸ் மீ சார். Question paperல இருக்கு. ஆனா Answer paperல Answers எதுவுமே இல்ல சார்”

நான் சிரித்ததைப் பார்த்து அவர் ஏழுவை விட்டுவிட்டு என்னை திட்டத்தொடங்கினார். ஏழுவை முறைத்துக் கொண்டே அமர்ந்தேன். அரைமணி நேரம் கழித்து மீண்டும் எழுந்தான்.

"சார். Differential Assembly எப்படி வேலை செய்யுது?” அவர் கோவமடைவதை கண்ட ஏழு பம்மினான். "என்ன சார். சந்தேகம் கேட்டா தீர்த்து வைக்கிறவர்தானே நல்லஆசிரியர்?"

கழுத்தைப் பிடித்து இழுத்து சென்றார் அவர். அவன் மீது எந்த ஒரு 'நல்'வாசனையும் வராததால் இவன் வேண்டுமென்றே விளையாடுவதாக முடிவுசெய்து விட்டார்கள். ஸ்டாஃப் ரூமில் எல்லா லெக்சரரும் கூடியிருக்க விசாரணை ஆரம்பமானது. ஏழு நல்லா படிக்கிற பையன் என்று அனைவரும் சொன்னாலும் அடிபட்டவர் விடுவதாக இல்லை. அதுவரை வாயை மூடியிருந்த ஏழு வாயைத்திறக்கத் தொடங்கினான்.

கெமிஸ்ட்ரி மேடத்தை பார்த்து முதலில் சொன்னான். "மேடம் இவருக்கும் எனக்கும் ஏனோ கெமிஸ்ட்ரி ஒத்து வரவில்லை".

என்னடா பேசற. திமிரா? என்றார் பிஸிக்ஸ்.

”சார். மேல போனா கீழ இறங்கித்தான் ஆகணும்னு சொல்றாரு நியூட்டன். எனக்கு மட்டும் ஏன் சார் இறங்க மாட்டங்குது" என்ற போதுதான் இவன் தண்ணி அடித்திருக்கிறான் என்பதை உணர்ந்தார்கள் உரையாளர்கள்.(அதாம்ப்பா லெக்சரர்ஸ்)

இருந்தாலும் அவன் உருவத்தைப் பார்த்து பாவப்பட்ட சில நல்ல ஜீவன்கள் அவன் தண்ணியடிக்கவில்லை என்றும், கூடவே சுத்தும் நாங்கள்தான் அவனுக்கு கஞ்சா டோப்பு அபின் என்று எதோ பழக்கப்படுத்திக் கெடுத்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். அரை பியர் அய்யாவுக்கு கஞ்சா அபின் என்றதும் முதுகெலும்பில் எறும்பு ஊர்ந்திருக்கிறது.

"ஆமா சார். நேத்து கார்க்கிதான் எனக்கு ஏதோ கொடுத்தான்” என்று உளறியிருக்கிறான்

வராந்தாவில் இருந்த நான் எப்படி மார்க் போட்டாலும் 40 வரவில்லை என்பதால் மீண்டும் கேள்வித்தாளினை புரட்டிக் கொண்டிருந்தேன்.

"உன்னை பிரின்ஸி வர சொன்னாரு. உடனே வா" என்றார் ஆஃபீஸ் பாய்.

பாவம் ஏழு. காப்பற்றலாம் என்ற நல்லெண்ணத்தில் போன என்னிடம் டொய்ங் என சுத்தி ஏழு சொன்னதை ரீப்ளே செய்து காமித்தார்கள். கொலைவெறியோடு அவனைப் பார்த்தேன்.கூலாக சிரித்துக் கொண்டே கேட்டான். "அது அபினா மச்சி?"

அப்படியே அவனைக் கடித்துக் குதற வேண்டும் போலிருந்தது. கோவத்தை அடக்கிக் கொண்டு சார். அவன் நேத்து ஒரு பியர் குடிச்சான். அதுக்குதான் இந்த ஆட்டம் என்றேன்.

ஒரு பியருக்கு ரெண்டு நாளா ஆடுவாங்களா? கூட என்ன சேர்த்த என்று கேட்டுதானும் ஒரு குடிகாரர்தான் என்று நிரூபித்தார் கணக்கு.

சத்தியமா சார்.வேணும்ன்னா பாலாஜிய கூட கேளுங்க என்று சொல்லிவிட்டு பின்பு நாக்கைக் கடித்தேன், இன்னொருத்தனையும் சிக்க வைத்து விட்டோமே என்று.

அந்தக் கவலையே இல்லாமல் அடுத்த டயலாக்கை அடித்தான் ஏழு. " அவன் இவனுக்குதான் சப்போர்ட் பண்ணுவான் சார். நீங்க ஆறுவையும் வர சொல்லுங்க.அவன் தான் எனக்கு மிக்ஸ் செய்து தந்தான்"

பியரடிச்சவனுக்கு எதைடா மிக்ஸ் செய்தீங்க என்று தன் மானம் போவது தெரியாமல் விசாரித்தார் கணக்கு.

அவன் பீரையே தண்ணி கலந்துதான் அடிப்பான் சார் என்றேன். ஏதோ அவனை மன்மதன் என்று சொன்னதைப் போல நகத்தைக் கடித்து அந்த சிமென்ட் தரையில் கால் கட்டை விரலால் நோண்டி வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார் தலைவர்.

அழைத்து வரப்பட்டார்கள் ஆறுவும் பாலாஜியும். பின்புதான் தெரிந்தது அவர்கள் இழுத்து வரப்பட்டார்கள் என்ற உண்மை.

மூன்று பேர் சொல்லியும் யாரும் நம்பத் தயாரில்லை. ஏதோ பெரிய லெவலில் போதை மருந்து பழக்கம் இருப்பதாக முடிவு செய்து விட்டார்கள். பேரன்ட்ஸ் வரனும். சஸ்பென்ஷன் தரணும். இவனுங்களுக்கெல்லாம் எதுக்கு சார் படிப்பு.டி.சி. கிழிச்சிடுங்க, போலிஸ்ல சொல்லலாம் சார் என்ற ஆளுக்கொரு ஐடியா தந்துக் கொண்டிருந்தார்கள்.

மறுநாள் வரை விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. மப்பு இறங்கி எழுந்தவனை கைகள் வலிக்க மொத்தினோம். மறுநாள் எல்லா உண்மையும் சொல்வதாக சொன்னதால் விட்டோம்.

அடுத்த நாள்.. வரிசையாக நின்றோம். யாரிடம் கஞ்சா வாங்கிறீங்க என்றவரிடம் காலில் விழாத குறையாக கெஞ்சினோம். அடிச்சவனே ஒத்துக்கிட்டானே என்றார். ஏழுவைப் பார்த்தோம்.

சார். இல்ல சார். நான் பீரடிச்சாலே ஏறிடும் சார். சத்யமா நேத்து பீருக்குத்தான் அப்படியாயிட்டேன் என்றான்.

டேய். மெக்கானிக்கல்ன்னா பெரிய பருப்பா? நாங்களும் அத படிச்சிட்டுதானே வந்திருக்கோம். ஒரு பீருக்கே இவரு ரெண்டு நாள் ஆடுவாராம். யார் கிட்ட கதை உடறீங்க என்றார் ஹெச்.ஓ.டி.

மெதுவாக சொன்னான் ஏழு " வேணும்ன்னா ஒன்னு வாங்கித் தந்து பாருங்க சார்.எப்படி ஆடுறேனு

Nov 24, 2010

அனுஜ’ம்’யா

39 கருத்துக்குத்து

 

2008 தன் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த வேளை. பதிவுலகை ”அடுத்தக் கட்டத்திற்கு” எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பும், அந்த ஜோதியும் என் கைக்கு வந்துவிட்டதாக உணர்ந்துக் கொண்டிருந்த சமயம். தொலைக்காட்சி அலைவரிசைகளை டக் டக்கென்று மாற்றுவது போல தமிழ்மண முகப்பில் இருந்த எல்லாப் பதிவுகளை மேய்ந்துக் கொண்டிருந்தேன். என் செய்கைக்கு தோதான ஒரு கவிதை கண்ணில்பட்டது.

அலைவரிசை மாற்றங்களில்
நிராகரிக்கப்பட்ட பாடலொன்று
அண்டைவீட்டு சாளரத்திலிருந்து
தஞ்சமடைந்தது என்னிடம்;
விலக மறுத்த வரிகள்
கவரவில்லையெனினும்
இலயிக்கத்துவங்கியது மனம்
அலைவரிசை மாற்றங்களின்
சாத்தியக்கூறுகளில்

மீண்டும் படிக்கையில் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டது. எழுதியவரின் பெயரைப் பார்த்தேன். அனுஜன்யா என்றிருந்தது. பின்னூட்டம் ஏதும் போடாமல் வந்துவிட்டேன். தொடர்ச்சியான வாசிப்பில் அவர் கவிதைகளின் காதலன் ஆகிவிட்டேன் என்று சொல்லலாம். ஈழம் குறித்து நான் எழுதிய பதிவு ஒன்றில் விரிவாய் அவர் போட்டிருந்த பின்னூட்டமும், அதைத் தொடர்ந்து நடந்த பரிமாற்றமும் எங்களிடையேயான முதல் உரையாடல் எனலாம். அப்போதுதான் அனுஜன்யா என்ற பெயர் சுஜாதா மாதிரி என்பது தெரிந்தது எனக்கு. அனுஜன்யா அவர் புனைபெயர். (ஒரு உண்மை சொல்கிறேன். ஒரு முறை கூட அவரின் நிஜப்பெயரை நான் கேட்கவில்லை. இன்றுவரை அது எனக்கு தெரியாது)

எழுத்து பொய் சொல்லாது. அனுஜன்யாவிற்கு வயது 40க்கு மேலிருக்கும் என்பது அவரைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு தெரியும்.அல்லது தெரிந்துவிடும். அதனால் அவரைத் தொடர்பு கொண்டு பேச ஒரு வித தயக்கம் எனக்குள் இருந்துக் கொண்டேயிருந்தது. 2009 ஆம் ஆண்டில் ஒரு நாள் “தல” சென்னை விஜயம் செய்தார். ஐ.ஐ.டி வளாகத்தில் பதிவர் சந்திப்பு நடந்தேறியது. எங்கள் முதல் சந்திப்பும் அன்றுதான் நடந்தது. சந்திப்புக்கு முன் அவருடன் அலைபேசியில் சில விநாடிகள் உரையாடினேன். “நான் ஷார்ப்பா 5 மணிக்கு வந்துடுவேம்மா”. சில நூறு மாதங்கள் ஒன்றாய் பழகிய ஒருவரின் நெருக்கத்தோடு ஒலித்தன அவ்வார்த்தைகள். அத்தனை மிருதுவான ஒரு மனிதரை நான் பார்த்ததேயில்லை. கவிஞர்கள் ரசனைக்காரர்கள் என்றாலும் வீம்பானவர்கள். நெருங்கவே முடியாத வட்டத்திற்குள் வாழ்பவர்கள் என்றொரு கற்பிதம் எனக்குள் இருந்தது. அதை உடைத்தெறிந்த இருவர் அனுஜன்யாவும், ஜ்யோவ்ராம் சுந்தரும். உலகிலே அழகானதொரு புன்னகையோடு வாம்மா என்று அழைத்து கைகுலுக்கினார். எம்.ஜி.ஆரின் கைகளுக்கு பிறகு மிக மிருதுவான உள்ளங்கை இவருடையதாகத்தான் இருக்கக்கூடும்.

அந்த சந்திப்பு மாதிரி பிறிதொன்று எனக்கு வலையுலகில் இன்னும் ஏற்படவில்லை. ஐஐடி வளாகத்தின் அழகைத் தாண்டி அழகாய் இருந்தது அந்த சந்திப்பு. அதைப் பற்றி நான் சொல்வதை விட அனுஜன்யாவின் வார்த்தைகளில் படியுங்கள். கவிதைதான் எழுதுவார் என்றிருந்த இன்னொரு மாயையை உடைத்து அற்புதமான பத்தியை தந்திருந்தார். நான் அதிக முறை வாசித்த அவரின் பதிவு இதுவாகத்தான் இருக்கும். எங்களிருவருக்கும் இடையே இருக்கும் வெகு சொற்பமான பிடித்தங்களில் ஒன்று அய்யணாரின் எழுத்து. என்னை அவரிடம் எளிதில் இழுத்ததில் அய்யணார் எழுத்தின் மீதான என் ஆர்வம் முக்கியமான காரணம் என்று சொல்வார்.

அனுஜன்யா அவர்களை யாருக்கும் தெரியாமல் சந்திக்க ஒருமுறை மும்பைக்கு ரகசிய பயணம் மேற்கொண்டேன். ரகசியம் அவருக்கே தெரியாமல் போனது சோதனை. திடீர் பயணம் என்பதால் முன்கூட்டியே அவரிடம் சொல்ல முடியவில்லை. கவிஞர் முக்கிய அலுவல் காரணமாக வேறு ஊருக்கு சென்றுவிட்டார். நான் சென்றது என் குடும்பத்துடன் என்பதால் தனது கார், காரோட்டி, காருக்கு தேவையான எரிபொருள் என எல்லாவற்றையும் அனுப்பி வைத்திருந்தார்.  இரண்டு நாட்கள் மும்பையில் எந்த தொல்லையும் இல்லாமல் என் வேலையை முடிக்க காரணமே அவரின் கார் தான். அன்று அவரை சந்திக்க முடியாமல் போன வருத்தம் இன்றும் என்னுள்ளே இருக்கிறது.

DSC00193

அனுஜன்யா இப்பொழுது எழுதுவதில்லை. காரணம் சிலருக்கு தெரிந்திருக்கலாம். உண்மையான காரணம் தெரிந்தவர்கள் அவரின் மென்மையான மனதை உணர்ந்தவராயிருப்பார்கள். பட்டர்ஃப்ளை எஃபெக்ட் தான் என்றாலும் அதற்கு நானும் காரணமாயிருந்திருக்கிறேன். இந்தப் பிரச்சினையில் சம்பந்தமேயில்லாமல் காயப்பட்ட அவருக்கு அதன்பின் அதிகம் அலைபேசியது கூட இல்லை. என்ன பேசுவது என்ற காரணம் என்வசம் இருந்தாலும் ஏதாவது பேசியிருக்க வேண்டும் என்ற வேதனையும் இருக்கிறது. சமீபகாலமாக அடிக்கடி அவரை நினைத்துக் கொள்கிறேன். சுவையான பழங்கள் எல்லாம் தடித்த தோல் கொண்டவையாகத்தான் இருக்கின்றன. விதிவிலக்காக இருக்கும் கொய்யா போன்ற பழங்களைத்தான் அணில்கள் கடிக்கின்றன. அனுஜன்யா கொய்யா போன்றவர்.

வலையுலகம் வேண்டாமென்றால் சரி. வழக்கம்போல சிற்றிலிகக்கியங்களுக்கு எழுதி அனுப்பலாமே என்றேன் ஒரு முறை. எழுதவே புடிக்கலம்மா என்ற அவரின் குரலில் தெரிந்த ஏமாற்றம்  ஏதோ செய்தது. இந்தப் பதிவு கூட அவரை எழுத வேண்டுமென்ற அழைப்பு அல்ல. ஒரு நல்ல மனிதனின் எழுத்தின் வாயிலான நட்பை இழந்திருக்கிறோம் என்ற ஆற்றாமையின் வெளிப்பாடு. கவிதை எழுதினாலும் எழுதாவிட்டாலும், என்னோடு பேசினாலும் பேசாவிட்டாலும் அனுஜன்யா எப்போதும் எனது விருப்பமான நண்பர். ஆலோசகர். நலம்விரும்பி. மிஸ் யூ தல.

பூ,புய்ப்பம், _____

21 கருத்துக்குத்து

 

பிரத்யேக அழகுள்ள தோழி கூட்டத்தில் எல்லாம் தொலைய வாய்ப்பேயில்லை. ஆனால் இந்த கார்த்திகை அன்று எது விளக்கு, எது தோழி என்று தெரியாமல் திணறித்தான் போனேன்.

___________________________________________________________________________________

டயட்டில் இருக்கிறேன் என்று தெரியாமல் சொல்லிவிட்டேன் தோழியிடம். முத்தம் கேட்டால் “டயட்டுல இருக்கும்போது ஸ்வீட் எதுக்கு” என்று கேட்கிறாள் கள்ளி

___________________________________________________________________________________

கோவிலுக்கு போகலாம் வா என்ற அம்மாவை பழக்க தோஷத்தில் தோழியின் வீடிருக்கும் தெருவுக்கு அழைத்துச் சென்றுவிட்டேன். பிறகுதான் சொன்னார்கள் அவர்கள் போக வேண்டியது ஆஞ்சனேயர் கோவிலுக்காம். தோழி இருக்கும் தெருவில் எவன் பிரம்மச்சரியத்தை விரும்புவான்?

___________________________________________________________________________________

அணு மின்சாரம், அனல் மின்சாரம், நீர் மின்சாரம், காற்று மின்சாரம் என கபடி ஆடுகிறார் ஆற்காடு வீராசாமி. தோழியில் கண்களின் இருந்து எடுத்தால் அமெரிக்காவுக்கே மின்சாரத்தை ஏற்றுமதி செய்யலாமே

___________________________________________________________________________________

இனிமேல் முத்தமிட வேண்டாம் என்று சொல்ல வேண்டும் தோழியிடம். 27 வயதில் எனக்கு சர்க்கரை வியாதியாம். :(((

___________________________________________________________________________________

உன்னைப் பார்த்து மூணு வாராமாச்சுடா என்று ஓடி வந்து இறுக கட்டியணைத்தாள் தோழி. விலக்கிக் கொண்ட நான் சொன்னேன் “பூவ பூன்னு சொல்லலாம். புய்ப்பம்ன்னு சொல்லலாம். இப்படியும் சொல்லலாம்”

___________________________________________________________________________________

பூமித் தொடா பிள்ளையின் உள்ளங்காலைப் போல் மிருதுவாக இருக்கிறது உன் உதடுகள் என்றேன் தோழியிடம். தேங்க்ஸ் என்றாள். காலால் முகத்தில் ஒரு உதை விட சொல்ல வேண்டும்

Nov 22, 2010

ட்வீட்ஸ்

16 கருத்துக்குத்து

 

  விக்ர‌ம் ஒரு த‌ட‌வ‌ த‌ங்க‌ம் வாங்க‌ சொல்றாரு. அடுத்த‌ விள‌‌ம்ப‌ர‌த்திலே வைக்க‌ சொல்றாரு. என்ன‌ பிர‌ச்சினை அவ‌ருக்கு?

ஹ‌வுசிங்லோன், பெர்ச‌ன‌ல்லோன், ஆட்டோலோன் எல்லாம் த‌ர்றாங்க‌. வாங்கிய‌ க‌ட‌னுக்கு மாதாமாத‌ம் க‌ட்ட‌ ஈ.எம்.ஐ லோன் யாராவது த‌ர்றாங்களா?

உல‌கில் எளிதான‌ வேலை த‌ப்பு க‌ண்டுபுடிக்கிற‌து என்றேன். யார் சொன்னா? அது கிடையாது என்று எளிதாக‌ சொல்கிறான் ந‌ண்ப‌ன்

புது கேர்ள் ஃப்ரெண்டிட‌ம் பேச‌ ஆர‌ம்பித்திருக்கிறான் ந‌ண்ப‌ன். வாட்ட‌ர் ப்ரூவ் மொபைல் வாங்க‌ சொல்ல‌ வேண்டும்

க‌லைஞ‌ரின் மொத்த‌ குடும்ப‌த்திற்கும் வாக்குரிமை ம‌றுத்தாலொழிய‌ திமுக‌வை தோற்க‌டிக்க‌ முடியாது. #எத்த‌னைபேருடாசாமீ

ச‌ம‌காலட்விட்ட‌ர்க‌ள் ச‌ந்தித்த‌பொழுதில் Rs2999 செருப்பு மாறிவிட்ட‌தாக‌ வ‌ருந்தினா‌ர் ஒருவ‌ர். அவ‌ர்க‌ளை ச‌ம‌"கால்" ட்விட்ட‌ர்க‌ள் எனலாமா?

இனிமேல தமிழக பாட்டிகள் “என் ராசா..வாடா கண்ணு” என பேரன்களை கொஞ்சுவார்களா??? #டவுட்டு

பிளாக் பொண்டாட்டி போல. ட்விட்டர் வப்பாட்டி போல. கெரகம் இப்பலாம் பிலாக் பக்கம் போகவே பிடிக்கல.. #நகுரதினாதிரனனா

அச்சச்சோ.. ஷேவாக் 96ல அவுட்டா? ஏண்டா டேய்.. உனக்கு பொறுமையே இல்லையா? 90அடிச்சா ஆடுவாங்க. நீ நைண்ட்டி அடிச்சா ஆட மாட்றியே

இன்னொரு பாராட்டு விழா நடத்தினால் மக்கள் கொதித்து விடுவாரக்ள் என பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவை மறுஒளிபரப்பு செய்கிறார்கள்.வாழ்க கலைஞர்

டாஸ்மாக் விற்ப‌னை அதிக‌ரித்தால் பாமக‌ தொண்ட‌ர்க‌ள் குறைவ‌தாக‌ அர்த்த‌ம்.அவ‌ர்க‌ள் குடிப்ப‌தே இல்லையாம். ம‌ருவ‌த்தூர் ஜாரி.ம‌ருத்துவ‌ர் அய்யா

நான் சாப்பிட்ட ஆரஞ்சில் 11 சுளை இல்லை. 9 தான் இருந்தது. அப்படியென்றால் அதை நாலஞ்சு என்று சொல்லலாமா?

எல்லா ப‌ட‌த்தையும் ஷூட் தானே செய்கிறார்க‌ள்? பிற‌கென்னா எந்திர‌ன் ம‌ட்டும் சுட்ட‌து என்று சொல்கிறார்க‌ள்? #ட‌வுட்டு

நகைச்சுவை நடிகரை பார்த்தால் ஜோக் சொல்ல சொல்லி கேட்கும் இளம்பெண்கள் வில்லன் நடிகர்களை பார்ப்பதேயில்லையா?

இணைய பெண்கள் நல்லவர்கள். அவர்களை ஃபாலோ செய்தால் நன்றி என்கிறார்கள்

சிங்கிளாக வாழ்வதும், திங்கிள் அன்று வேலைக்கு வருவதும் கொடுமையோ கொடுமை.

சரோஜா தேவிக்கு கொடுத்திருக்கணும் “கோபால் பரிசு” #கோபால்கோபால்

sugarல வேணும்ன்னா ரேஷன் தரம், பாக்கெட் தரம்னு பிரிக்கலாம். ஃபிகர்ல கூடாது. எல்லா ஃபிகரும் நல்ல ஃபிகர்தான் மண்ணில் பிறக்கையிலே.

_______________________________________________________________________________

எனது ட்விட்டர் ஹேண்டில் @iamkarki

Nov 21, 2010

இச்..இச்..இச்

14 கருத்துக்குத்து

  இச்சென்று பெயரிட்டு இப்போது எங்கேயும் காதல் என்றாக்கியிருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கியிருக்கிறார்களாம். எனவே இசையும் அந்த சாயலில் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஹாரீஸும் “எடுக்க” வேண்டிய இடத்திலிருந்து கச்சிதமாய் எடுத்திருப்பார் என்ற நம்பிக்கையில்தான் குறுந்தகட்டை வாங்கினேன். ஏமாற்றமில்லை.வாரணம் ஆயிரம்,அயன், ஆதவன் என சூர்யாவுடன் ஹாட் டிரிக் அடித்துவிட்டு வெளியே வந்திருக்கிறார். ஆல்பம் முழுக்க ஆங்காங்கே உன்னாலே உன்னாலே, தாம் தூம் வாசம் தூக்கலாக இருந்தாலும் அது ஹாரீசின் “ட்ரேட்மார்க்” என்று சொல்லிவிட்டு பாடல்களுக்கு நகர்வோம்.

EngaumKathalCD

1) எங்கேயும் காதல்: (ஆலாப் ராஜ்) பாடல் – தாமரை

    காதலின் சுகம் சொல்லி புரிவதில்லை. அது ஒரு உணர்வு. இந்தப் பாடலும் அப்படித்தான். காதலிக்கும் ரோமியோ-ஜூலியட்களை அலேக்காக வேறொரு உலகத்திற்கு கொண்டு செல்லும். காதல் ஒரு அரிப்பு. அரிச்சா சொறிஞ்சிக்கணும் என்னும் மேதாவிகளுக்கு இதில் சிறப்பாய் ஏதுமில்லை. காதலை சொல்லும்போது கிட்டார் இல்லாமல் எப்படி? ஆனால் எந்த இசைக்கருவியும் வரிகளையோ, வார்த்தைகளையோ ஆளாமல் அமைதி காப்பது சுகம். தாமரைக்கு அது வசதியாகி போனாலும் பச்சென்று ஒட்டிக்கொள்ளும் எந்த வரிகளும் கேட்கவில்லை. ஆலாப் ராஜின் குரல் மயிலிறகாய் வருடுகிறது. 2, 3 வருடங்கள் கழித்து ஹாரீஸீன் பிறந்த நாளின் போது அவரின் ஆல் டைம் பெஸ்ட் வரிசை கேட்க நேர்ந்தால், அப்போது கேட்கலாம் இந்தப்பாடலை.

2) நங்காய் (ரிச்சர்ட்) பாடல் - வாலி

  வள்ளியே சக்கரவள்ளியே.. மல்லியே சந்தனமல்லியே.. பள்ளியே பங்கனப்பள்ளியே என்ற ஆரம்ப வரிகள் கேட்கும்போது செம குத்துடா என்றுதான் நினைப்போம். குத்துதான் ஆனால் வெஸ்டர்ன் குத்து. மைக்கேல் ஜேக்சனின் ரசிகர்களுக்கு பீட்டைக் கேட்டவுடன் அட அட என்று தோன்றியிருக்கும்.  வாழைப்பழத்தில் பெருங்காயம் போல் கிடைத்த கேப்பில் எல்லாம் நம்ம ஊர் குத்தை சேர்த்திருக்கிறார் ஹாரீஸ். இரண்டாவது இண்டெர்ல்யூடில் வித்தியாசமாய் ஏதோ முயற்சி செய்திருக்கிறார். ஜெயம் ரவிக்கு நடனம் நன்றாகவே வரும். இயக்கம் பிரபுதேவா. சரியான விருந்து காத்திருக்கிறது என்றே நினைக்கிறேன். பிரபு, எம்.ஜே ரசிகர் என்பதால் அவரே விரும்பிக் கூட ஹாரீசை இப்படி போட சொல்லியிருக்கலாம். பாடியவர், பாடலாசிரியர் எல்லாம் ஜகா வாங்கிக்கோங்க. இண்டெர்னேஷனல் தலயின் பீட்டுக்கு நேஷனல் தல கொரியோகிராஃப் செய்தால்???????????

நங்காய், தங்காய், செங்காய் என்ற வார்த்தைகளில் வாலி ஏதோ சொல்லியிருக்கிறார் என்று விசாரித்தேன். தங்காய் என்பதன் இன்னொரு வடிவம் தான் தங்கை எங்கிறார்கள். உண்மையா என்று தெரியவில்லை

இந்த பாடலின் பீட்டின் பின்னால் இன்னொரு பாடலும் இருக்கிறது. நியாயத்தராசு என்றொரு படத்தில் வெண்ணிலா என்னோடு ஆடவா என்ற பாடல் அப்போது ஹிட்டான மைக்கேல் ஜேக்சனின் “The way you make me feel”  பாடலில் இருந்து அப்படியே உருவப்பட்டது. இப்போது ஹாரீஸ் சற்று பாலிஷ் செய்திருக்கிறார். மூன்றையும் கேட்டால் ஹாரீஸ் வெர்ஷன் எம்.ஜே வெர்ஷனை விட ஷங்கர் கணேஷ் வெர்ஷனையே அதிகம் ஒத்திருக்கிறது. வெண்ணிலா பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள். மூன்று பாடல்களின் பீட்டை மட்டும் வெட்டி, ஒன்றாய் ஒட்டி கீழே தந்திருக்கிறேன். ஹாரீஸ் வெர்ஷனின் டெம்போ மட்டும் கூடுதலாயிருக்கும். கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

 

3) லோலிட்டா (கார்த்திக்) பாடல் தாமரை

     பட்டாசு இல்லாமல் தீபாவளியா? கார்த்திக் இல்லாமல் சூப்பர் ஆல்பமா? லோலிட்டா என ஸ்மூத் டேக் ஆஃப் செய்கிறார். அது என்னடா லோலிட்டா!! தாமரை இப்படி எழுத மாட்டாங்களே என்று யோசிக்கிறீர்களா? லோலிட்டா என்பது ஸ்பானிஷ் வார்த்தை. அதற்கு Sorrows என்று அர்த்தமாம். ஆனால் விளாடிமிர் நபோக்கோவ் (சாரு அடிக்கடி சொல்வாரே.. அவர்தான்) எழுதிய ஒரு நாவலில் நாயகியின் செல்லப்பெயர் லோலிட்டா. நாவலின் பெயரும் அதுதான். அந்த நாவலுக்கு பிறகு க்யூட்டான, ஹாட்டான இளம்பெண்களை லோலிட்டா என்று சொல்வது பிரபலமானது.தாமரை சொல்லும் லோலிட்டாவும் அதுதான். ஹன்சிகா மோட்வானியை லோலிட்டா என்று சொல்லலாம். தவறேயில்லை. (ஃபோட்டோ பார்த்தது போதும்.வாங்க)

  ஸ்பானிஷ் வார்த்தையில் ஆரம்பிப்பதாலோ என்னவோ இதற்கு ஸ்பானிஷ் கிட்டாரை கையிலெடுத்திருக்கிறார் ஹாரீஸ்.நைலான் ஸ்ட்ரிங்ஸ் நச்சென்று ஒலித்திருக்கிறது. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழைக்கு பிறகு “கார்ட்ஸ்” இத்தனை இதமாய் வந்திருப்பது இதில்தான் எனலாம். வாராயோ (ஆதவன்) விட இது அழகு. ஹாரீஸ் எப்போதாவது உபயோகிக்கும் கருவி சாக்ஸஃபோன். இரண்டாவது இண்டெர்லியூடில் சில வினாடியே வந்தாலும் அட! போட வைக்கிறது. சேஃப் பெட். நிச்சயம் ஹிட்.

4) நெஞ்சில் நெஞ்சில் (ஹரீஷ், சின்மயி) பாடல் – மதன் கார்க்கி

     என்னவென்று சொல்ல? இந்தப்பாட்டு இந்தப்படத்திலா என்ற சந்தேகம் இன்னும் இருக்கிறது. இதுவரை கேட்டு வந்த சாயலில் இருந்து முற்றிலுமாய் விலகி ஒரு மெலடி தந்திருக்கிறார்கள். சாருகேசி ராகம் போலிருக்கிறது.யாராவது உறுதிப்படுத்தினால் தேவலை. மிருதங்கமும், குழலும் வெகு சிறப்பாய் பயன்படுத்தப்பட்டிருகிறது. ஹரீஷை விட அம்சமாய் பாடியிருக்கிறார் சின்மன்யி. “மயங் கியே” என அவர் பிரித்துப் பாடும் இடத்தில் மயங்கித்தான் போகிறோம்.ஹேட்ஸ் ஆஃப் சின்மயி.

பசையூறும் இதழும்
பசியேறும் விரலும்
விரதம் முடித்து
இரையை விரையும் நேரமிது!
உயிரின் முனையில்
மயிரின் இழையும் தூரம் அது

என்று எழுதியிருப்பவர் ஐஸக் அசிமோவின் வேலையோ ரோபோ என்றெழுதிய மதன் கார்க்கிதான். அப்பா மாதிரி எழுதலையே என்று நிறையப் பேர் கேட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்காகவே எழுதியது போலிருக்கிறது. நன்றாகவே இருக்கிறது. ”கொஞ்சம்-கொஞ்சும்”, “தூரிகை - காரிகை” போன்ற டெம்ப்ளேட் எதுகை மோனைகளை அழகாய் சேர்த்திருக்கிறார்.  நம் பாடலாசிரியர்களிடம் கேட்க நினைத்த சந்தேகத்தை இப்போது கேட்டுவிடுகிறேன். அது என்ன “சின்ன சின்ன ஆசை”. “நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ”. மெட்டுக்காக இரண்டு முறை போடுவது அவர்களின் வார்த்தை பஞ்சமென்று எடுத்துக் கொள்ளலாமா?

  இவையன்றி திமுதிமு, தீ இல்லை என்ற இரு பாடல்களும் Bathing at Cannes என தீம் மியுசிக்கும் உண்டு. இதுவரை அவை என்னை பெரும்பாலும் கவரவில்லை என்றாலும், அந்தப் பாடல்களும் ரசிக்கும்படியே உள்ளன. மேலே சொன்ன 4 பாடல்களில் நங்காயும், நெஞ்சில் நெஞ்சிலும் பிக் ஆஃப் த ஆல்பம் எனலாம். எஃப்.எம்களில் அதிக முறை ஒலிக்கப்படுவதும் இவையிரண்டுமாகவே இருக்கும் என்பது என் கணிப்பு, யோசிக்காமல், தயங்காமல் ஒரிஜினல் சிடி வாங்கி ரசித்துக் கேட்கலாம்.

Nov 17, 2010

ஊழலும், தத்துவமும்

23 கருத்துக்குத்து

சின்னவன் : என்னண்ணே. எப்படி இருக்கீங்க? ஸ்பெக்ட்ரம் ஊழல் கதையெல்லாம் படிச்சிங்களா?நீங்க என்ன நினைக்கறீங்க?

பெரியவன்:  ராஜாவா இருந்தாலும்..மந்திரியா இருந்தாலும் ராஜாவே மந்திரியா இருந்தாலும் தப்பு தப்புதானே?

 சின்னவன் :  பார்க்க சாதுவா இருந்துட்டு இவ்ளோ வேலை செஞ்சிருக்காரே

பெரியவன்: என்னதான் ஃபோட்டோவுல ஒரு பொண்ணு தேவதை மாதிரி தெரிஞ்சாலும் நெகட்டிவ்ல பிசாசு மாதிரிதான் தெரியும்.

சின்னவன் : எல்லா துறையிலும்தான் ஏலம் விடுறாங்க. அதுக்குன்னு இவ்ளோ காசா காணாம போகும்?

பெரியவன்: இளநீரிலும் தண்ணி இருக்கு. பூமியிலும் தண்ணி இருக்கு. இளநீர்ல போர் போட முடியுமா? இல்லை பூமியிலதான் ஸ்ட்ரா போட முடியுமா?

சின்னவன் : ஒரே ஒரு மந்திரி இவ்ளோ பணத்தை ஆட்டையை போட்டாரே. நம்ம ஊருல  எவ்ளோ போலீஸ், வக்கீல் இருக்காங்க. இவருக்கு தண்டனை வாங்கி தந்துடுவாங்களா?

பெரியவன்: ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது

சின்னவன் : பி.எம்தானே பெரியாளு.அவருக்கு தெரியாமலா இவர் விளையாடி இருப்பாரு?

பெரியவன்: பஸ்ஸுல கலெக்டரே ஏறினாலும் முதல் சீட்டு டிரைவருக்குத்தான்

 சின்னவன் : சரிதான். ஆனா இதுல காங்கிரஸூக்கு பங்கு கொடுக்காமலா விட்டிருப்பாங்க?

பெரியவன்: காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் போடுற முட்டை வெள்ளைதாம்ப்பா

 சின்னவன் : அப்ப ஏண்ணே அவர பதவிய விட்டு தூக்கினாங்க?

பெரியவன்: முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருக்கிற காக்கா கருப்புதாம்ப்பா

சின்னவன்: ராசா வெளிவந்தா கூடவே திமுகவும் கூட்டணிய விட்டு வெளிவருமாண்ணே?

பெரியவன்: சைக்கிள் போனா கூடவே சைக்கிள் ஸ்டேண்டும் போகும். ஆனா பஸ் போனா பஸ் ஸ்டேண்ட் அங்கேயேதான் இருக்கும்

   சின்னவன் : என்னதான் இருந்தாலும் எல்லோரும் சேர்ந்து அடிச்ச காசுக்கு இவர மட்டும் பலிகடா ஆக்குறாங்களே 

பெரியவன்: கால் எவ்ளோ வேகமா ஓடினாலும் பரிசு என்னவோ கைக்குதாம்ப்பா

 சின்னவன் : அதுவும் சரிதான். ஆனா இந்த களேபரத்துல கல்மாடிய மறந்துட்டாங்களே

பெரியவன்: டிரெயின் எவ்ளோ மெதுவா போனாலும் கடைசி பொட்டிதான் கடைசியா வரும்

சின்னவன் :இன்னொரு பொட்டி வந்து சேரும் வரை ராசாதான் மீடியாவுக்கு தோசா. கலைஞர் என்னண்ணே சொல்றாரு? ராசாவ காப்பாத்துவாரா?

பெரியவன்: வாத்யார் எவ்ளோதான் முட்டை போட்டாலும் அத வச்சு ஆம்லெட் போட முடியாது

சின்னவன் : சரிண்ணே.. மத்திய அரசுல திமுக பங்கேற்குது. அப்போ ஏன் மாநில அரசுல காங்கிரஸ் இல்லை?

பெரியவன்: ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது

 சின்னவன் : ஓ.அப்போ திமுக போலீஸ்? அடுத்து.பாமகவும் இந்த ஊழல் நடந்தப்ப கூட்டணியில் இருந்துச்சே. அவங்களுக்கு ஏதாவது தேறியிருக்குமா?

பெரியவன்: பஸ் ஸ்டாப்புல நின்னா பஸ் வரும். ஃபுல் ஸ்டாப்புல நின்னா ஃபுல் இல்லை, ஹாஃப் கூட வராது.

  சின்னவன்: தயாநிதி மாறன் இதுல எக்ஸ்பெர்ட் ஆச்சே. அவர் திரும்ப வந்தா சரி ஆயிடுமா?

பெரியவன்: எவ்ளோ பெரிய சாஃப்ட்வேர் புரஃபஷனலா இருந்தாலும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்ல காத்து வர வைக்க முடியாது

 சின்னவன் : அதுவும் சரிதான். சாளரத்துலே மொக்கைதான் வருது. நானும் அங்க அடிக்கடி வறேன். ஆனால் மொக்கை எனக்கு வர மாட்டேங்குது.

பெரியவன்: என்னதான் காலேஜ் பஸ் தினமும் காலேஜ் போனாலும் அது டிகிரி வாங்க முடியாது

சின்னவன் : உங்களுக்கு மட்டும் எப்படிண்ணே இவ்ளோ மூளை?

பெரியவன் : நகம் வளர்ந்தா வெட்டலாம். முடி வளர்ந்தா வெட்டலாம். மூளை வளர்ந்தா?

 சின்னவன் : ஆள  விடுங்க. எஸ்கேப்ப்ப்ப்

Nov 15, 2010

குட்டிச்சுவரும், பிள்ளையாரும்

22 கருத்துக்குத்து

 

தெருமுனை குட்டிச்சுவரைshortwall
வளர்த்துவிடும் நோக்கில்
நால்வர் குழு மேலேறி அமர்ந்தோம்
கடந்து செல்லும் எல்லோருக்கும்
மதிப்பெண் போட்டு
ஆசிரியர் சேவை செய்துக்கொண்டிருந்தோம்.
நீ
கடந்த போது கலவரப்பட்ட நான்
தொப்பென கீழே குதித்தேன்.
உடனிறங்கிய மற்றொரு ஆசிரியர்
ஜென் குருவாகவே மாறிப் போய் சொன்னார்
“இதுவும் கடந்து போகும் மச்சி”

 

*******************************************************************************************************************

இப்போதெல்லாம்
பால் குடிப்பதில்லை
என்பதாலோ என்னவோ
ரயில்வேகேட் பிள்ளையாருக்கு
ஓப்பனிங் சரியில்லை.
அவ்வழியே சென்றபோது
உள்நுழைந்த என்னை
“என்னடா மச்சி”
என்றார்கள் நண்பர்கள்.
“பிள்ளையார் மாமா காப்பாத்து”
என்றதை கேலி செய்தவர்களுக்கு
எப்படித் தெரியும்
முன்தினம் தான்
“பிள்ளையாரப்பா காப்பாத்துப்பா”
என்று நீ வேண்டியது.

Nov 14, 2010

இதெல்லாம் கின்னஸில் வராதா?

21 கருத்துக்குத்து

 

தோழியை பார்க்காமல் பைத்தியமே பிடிக்கிறது. அவளைப் பார்த்தாலும் அதேதான். அவளை பிடிக்கிறது.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

தோழி உடைத்து பார்க்கும் வெண்டைக்காய்களை மட்டும் முருங்கைக்காய் என விற்கிறாராம் அவர்கள் தெரு காய்கறிக்காரர்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

விளையாட போகக்கூடாது என சொல்லும் அம்மாவிடம் கெஞ்சும் பிள்ளை போல, தோழியை பார்க்க கெஞ்ச வேண்டியிருக்கிறது காலத்திடம்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

தோழியை பார்த்தால் ஐம்புலன்களுக்கும் ஜாலி. கண்கள் அழகை பார்க்க, காதுகள் தேனிசையை கேட்க, மூக்கு அவள் சுவாசம் நுகர, கைகள் பிணைய, இன்னொன்று?

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

15 நாட்களாக தோழியை பார்க்கவில்லை. இதெல்லாம் கின்னஸில் இடம்பிடிக்காதா?

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

  காதலிக்கிறேன் என்று வீட்டில் சொன்னால் ”பொறுக்கி.. யார் அந்த பொண்ணு” என்கிறார்கள். தோழியின் வீட்டில் “யார் அந்த பொறுக்கி” என்கிறார்களாம். முதன் முதலாய் அவளைப் பார்த்த போது சில்லு சில்லாய் உடைந்த இதயத்தை பொறுக்கியதால் சொல்கிறார்களோ?

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

ஏ.ஆர்.ரகுமானுக்கு புது மெட்டு எதுவும் இப்போது தோன்றுவதில்லையாம். தோழியிடம் ஃபோனில் பேச சொல்ல வேண்டும் அவரை.

Nov 12, 2010

ஆள விடுறா சாமீ

17 கருத்துக்குத்து

 

பாட்டாளிகளின் தோழன்.. வன்னியர்களின் விடிவெள்ளி.. நாளைய தமிழகம்.. நாளைன்னைய இந்தியா.. மருத்துவர்.. அய்யா… இராமதாசு F/O சின்ன அய்யா. அண்புமணி அவர்களின் சிறப்பு பேட்டி உங்களுக்காக வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். இவரை பேட்டி எடுப்பவர் உங்கள் ஏழு…ஏழு.. ஏழு.

ஏழு : வணக்கம் அய்யா. நான் அடிக்கடி திண்டிவனம் மார்க்கமாக எங்கள் ஊருக்கு செல்வேன். அப்போது பேருந்து நிற்கும் சில வினாடிகளில் பலர் கொய்யா கொய்யா என்று ஜன்னல் வழியே நீட்டுவார்கள். அந்த கொய்யாவிற்கு அடுத்தபடி அந்த ஊரில் நிறையப் பேர் சொல்லும் வார்த்தை அய்யாதான் என்கிறார்கள். இது உண்மையா?

இராமதாசு : நான் ஒரு சராசரி மனிதன். என் கட்சிகாரர்களுக்கு இது தெரியும்

ஏழு :  உங்கள கொய்யான்னு சொல்றதே அவங்கதானே! பின்ன காங்கிரஸ்காரனா உங்கள் அய்யான்னு சொல்லுவான்?

இராமதாசு : காங்கிரஸ் நல்ல கட்சி. மக்கள் விலைவாசி உயர்வால் தினம் தினம் சாகிறார்கள். மன்மோகனை போல ஒரு சிறந்த நிர்வாகி நமக்கு கிடைக்க மாட்டார்கள். மக்கள் மத்தியிலும் ஆட்சி மாறணும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஏழு : இருங்க இருங்க. இப்ப இந்த காங்கிரஸ் ஆட்சியே இருக்கட்டும் என்கிறீர்களா? அல்லது வேண்டாம் என்கிறீர்களா?

இராமதாசு : அதை பொதுக்குழு கூட்டிதான் முடிவு செய்வோம். பாமக ஒரு ஜனநாயக கட்சி. சிலேட்டுல எழுதி காட்டணும்.

ஏழு :  ஆனா உங்க கட்சி என்பதே உங்க குடும்பம்தான் என்று சொல்கிறார்களே?

இராமதாசு : கட்சி ஆரம்பிக்கும் போதே சொல்லிவிட்டேன். என் குடும்பத்தில் இருந்து யாராவது வந்தால் நடுரோட்டில் நிற்க வைத்து சாட்டையால் அடியுங்கள் என்று

ஏழு : இப்போதுதான் அண்புமணி, செளம்யா, வேலு என பலர் வந்துவிட்டார்களே? அப்போ நடுத்தெருவில் நிற்க வைத்து சாட்டையால் அடிக்கலாமா?

இராமதாசு :  நடுத்தெருவிற்கு அவர்கள் வந்தால் அடியுங்கள்

ஏழு :  எப்படியும் 2011 தேர்தலுக்கு பிறகு கட்சியே நடுத்தெருவிற்குத்தானே வரும்?

இராமதாசு :  எப்படி தெரியும்? மன்னிக்க.. எப்படி சொல்கிறீர்கள்?

ஏழு :  2006 புதுவை. 2011 தமிழகம் என்று சொன்னது பாமக. 2006ல் புதுவை ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. அந்த லாஜிக்படி பார்த்தால் 2011 கோவிந்தா கோவிந்தாதானே?

இராமதாசு : அது பலிக்காது. 2009லே பாராளமன்ற தேர்தலில் 0 வாங்கிவிட்டோம்.

ஏழு :   அப்போ யாருடன் கூட்டணியில் இருந்தீர்கள்?

இராமதாசு : 2009 தானே? இருங்க. மணி. யாரு கூடப்ப இருந்தோம். 2009ல.

மணி : ஃபிப்ரவரிலா, நவம்பரிலா தலைவா?

ஏழு : சரியா போச்சு. விடுங்க.

இராமதாசு :  இருங்க. அன்புவ கேட்டா கரெக்டா சொல்லுவாரு. ஃபோன் போடுப்பா

ஏழு : இது என்ன லைஃப் லைனா தலைவரே? விடுங்க.

இராமதாசு :  பாமகவிடம் எதுவும் முறையா இருக்கு. அதிமுகவுடன் இருந்தோம்.

ஏழு :  அப்போ 2006ல்

இராமதாசு :திமுக

ஏழு : 2001ல்

இராமதாசு : அதிமுக.

ஏழு : 1999ல்

இராமதாசு : அன்புவுக்கு ஃபோன்.

ஏழு : வேண்டாம் சார். இன்றைய செய்திக்கு வருவோம்.

இராமதாசு : ஆமாம். நாட்டில் விலைவாசி உயர்ந்திடுச்சு. திமுக ஆட்சி சிறப்புதான் என்றாலும் மக்கள் கோவத்தில் இருக்கிறார்கள். ஜெயலலிதா கொடநாடு தொகுதியில் நிற்கலாம்.. ஆனால் அதிமுக நல்ல கட்சி. விஜயகாந்த் என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. ஆனால் அவர் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறார். கம்யூனிஸ்டுகள் இரட்டை வேடம் போடுகிறார்கள். ஆனால் இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் அவர்கள் மட்டுமே.

ஏழு : என்ன சார் பிரச்சினை? இன்னும் கூட்டணி முடிவாகவில்லையா?

இராமதாசு : நாங்கள் எப்போதும் மக்களுடன் தான் கூட்டணி.

ஏழு : திமுகவை பச்சை துரோகி என்று சொன்னீர்கள். இப்போது எப்படி அவர்களுடன் சேர முடியும்?

இராமதாசு : தமிழகத்தை பொறுத்தவரை பச்சை என்றால் அம்மா. அம்மா என்றால் அதிமுக. அப்படி என்றால் திமுக அதிமுகவிற்கு துரோகி என்று அர்த்தம். சரியாகத்தானே சொன்னேன்?

ஏழு : அம்மாவை பார்க்கவே முடிவதில்லை என்றீர்களே. அவர்களுடன் சேருமா பாமக?

இராமதாசு : வைகோ பார்க்காமலே கூட்டணியில் இல்லையா?

ஏழு : விஜய்காந்த் உங்களுடன் சேரும் வாய்ப்பு உண்டா?

இராமதாசு :  எங்களுக்கு அவர் தேவையில்லை. அவர் விரும்பினால் சேரலாம். அவரும் சின்ன கவுண்டர் என்ற படத்தில் நடித்திருப்பதால் பொதுக்குழுவில் அவர் கட்சிக்கும் ஒரு சிலேட் கொடுப்பதாக இருக்கிறோம்.

ஏழு : ஓ. என்கவுண்ட்டர் பற்றிதான் எல்லா இடத்திலும் பேசுகிறார்கள்.அது பற்றி..

இராமதாசு : என்கவுண்ட்டர் மட்டுமல்ல, எல்லா கவுண்டர்களும் வன்னியர்களே. எல்லா வன்னியர்களும் பாட்டாளிகளே. எல்லா பாட்டாளிகளும் பாட்டாளி மக்கள் கட்சியினரே

ஏழு : ஆள விடுறா சாமி.

Nov 9, 2010

என்கவுண்ட்டர் – என் பார்வை

63 கருத்துக்குத்து

 

  கோவையில் நடந்த இரண்டு கொலைகளையும், அதை தொடர்ந்து நடந்த என்கவுண்ட்டர் செய்தியையும் படித்திருப்பீர்கள். நேற்று ட்விட்டரில் நடந்த ஒரு உரையாடலில் இது குறித்து இரு வேறு விதமான பார்வைகளை காண முடிந்தது. பச்சிளங்குழந்தையை கொன்றவனை சுட்டு வீழ்த்தியது சரிதான் என்பதே பலரது எண்ணமாக இருக்கிறது. எந்தவொரு விஷயத்தையும் உற்று நோக்கும் அறிவுஜீவிகளுக்கு இந்த என்கவுண்ட்டர் அதிர்ச்சியான விஷயமாக தெரிகிறது. போதாக்குறைக்கு இதை ஆதரிப்பவர்களை ஏதோ பெரிய ஆபத்தான விஷப்பாம்பாக நினைத்து சிலர் பதிவிட்டிருக்கிறார்கள். சில மாதங்கள் முன்பு சென்னையில் ஒரு பெண் 4 மாத குழந்தையை கொன்றபோது ஏன் என்கவுண்ட்டர் ஆயுதத்தை எடுக்கவில்லை என்றும் சிலர் கேட்கிறார்கள். எல்லா கொலையாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு அவர்கள் செவி சாய்க்க தயாரில்லை.

  உண்மையில் இந்த என்கவுண்ட்டரை ஆதரிக்கும் மக்களின் உண்மையான மனநிலை என்ன? அவர்களை பொறுத்தவரை இரண்டு பச்சிளங்குழந்தைகளை கொன்ற ஒருவனுக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. அது என்கவுண்ட்டர் மூலமாக என்பது அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான். இதே மோகன்ராஜ் ஒரு விபத்தில் இறந்திருந்தாலும் மக்கள் ஸ்வீட் எடு கொண்டாடு என்றுதான் இருந்திருப்பார்கள். அவர்களுக்கு தேவை மோகன்ராஜ் சாக வேண்டும். அதில் ஒன்றும் தவறிருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை. நம்ம வீட்டில் ஒரு துக்க சம்பவம் நடந்து நாம் சம்பந்தப்பட்டவர் சாக வேண்டும் என்று நினைத்தால் அது வழக்கமான விஷயம்தான். ஆனால் இரண்டு குழந்தைகள் இறந்ததற்கு காரணமானவனின் மரணம் இத்தனை பேருக்கு நிம்மதி என்றால் மக்கள் மனதில் கொஞ்சம் ஈரம் இருக்கிறது என்ற கோணத்திலும் பார்க்கலாம் அல்லவா? இதே என்கவுண்ட்டர் ஆயுதம் மூலம் நிரபராதிகளை காவல்துறை கொன்றால் என்ன ஆவது என்ற கேள்விகளுக்கு அவர்கள் இப்போது தயாரில்லை. இது விதிவிலக்கான வழக்கு.

என்கவுண்ட்டரை எதிர்ப்பவர்களிடமும் நியாயமான காரணம் இருக்கிறது. இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா என்கிறார்கள். 1996ல் நாவரசு என்ற மாணவனை பகடிவதை, ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியது என்று போய் இறுதியில் வெட்டிக் கொன்றவனுக்கு என்ன கிடைத்தது? கண்ணுக்கு கண் என்றால் உலகமே குருடாகிவிடும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. கண்ணுக்கு கண் கூடாதென்றால் மூக்கை எடுக்கலாமா? கையை வெட்டலாமா? தண்டனை என்று வந்துவிட்டாலே அது பழிக்குப் பழிதானே? இன்னும் சிலர் உலக அளவில் வறுமையில் தினம் தினம் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் சாகும்போது இந்த இரண்டு குழந்தைகள் மட்டும் என்ன ஸ்பெஷல் என்கிறார்கள்? நம் வீட்டில் எழவு விழுந்தால் வேலையை விட்டுவந்து அழுகிறோம். பக்கத்து தெருவில் விழுந்தால் அப்படி செய்கிறோமா? இவர்கள் லாஜிக்படி பார்த்தால் எதுவுமே செய்ய முடியாது. இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாடுபவர்கள் பல பேர் இருக்க Save tiger என்று பணத்தை செலவழிக்க வேண்டிய தேவையென்ன அரசுக்கு?

ஒரு சிலர் சொல்கிறார்கள் மோகன்ராஜுக்கு தேவை மனநல மருத்துவரின் ஆலோசனையாம். பலே வெள்ளையத்தேவா. இந்த மாதிரி சமூக குற்றங்களின் மூலக்காரணங்கள் களையப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இது போன்ற குற்றவாளிகளை ஏதோ அறியாப்பிள்ளை என்ற ரீதியில் எப்படி பார்ப்பது? இந்திய பீனல் கோட் கொலைகள் எல்லாவற்றையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவில்லை. திட்டமிட்டு செய்யப்படும் கொலைகளும், உணர்ச்சியின் உந்துதலில் செய்யப்படும் கொலைகளும் வெவ்வேறாகத்தானே பார்க்கிறது? இந்த மோகன்ராஜ் செய்த குற்றம் 100%  உண்மையாகத்தான் தெரிகிறது.அதை சொல்ல நீ யார்? நீதிமன்றத்தின் வேலை என்ன என்று கூக்குரலிடும் இவர்களேதான் 25 வருடம் தாமதமாக வெளியான இன்னொரு வழக்கின் முடிவு கேட்டு கண்டித்து பேசினார்கள். இது நிச்சயம் விதிவிலக்கான வழக்கு. இதில் மோகன்ராஜின் குற்றம் தெளிவாக தெரிந்ததால் தான் மக்களின் ஆதரவு இந்த என்கவுண்ட்டருக்கு கிடைத்திருக்கிறது.

  எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து மைக்ரோஸ்கோப் கண்களால் பார்க்கும் அறிவுஜீவிகள் மக்கள் ஆதரிப்பது மோகன்ராஜ் என்ற பாதகனின் மரணத்தைத்தான். என்கவுண்ட்டர் என்ற செயலை அல்ல என்பதை மட்டும் புரிந்துக் கொள்ள மறுப்பது ஏன்? இந்த செயலால் இது போன்ற செயலை செய்ய நினைத்திருந்த ஒரு சிலராவது பயந்திருக்க மாட்டானா? அதெல்லாம் மாட்டான் என்பீர்களேயானால் என்ன எழவுக்கு தண்டனைகள்? காசுக்காக தப்பு செய்தவனை கொல்ல வேண்டும் என்றால் எல்லோரையும் போட்டுத் தள்ள வேண்டுமென்கிறார் நண்பரொருவர். பாலியல் பலாத்காரம் செய்பவன் குற்றவாளியல்ல. அடிப்படை உணர்வான காமம் ஒருவனுக்கு மறுக்கப்படும் இந்தியா போன்ற நாட்டில் இது நடக்க கூடியதுதான். அவனுக்கு தேவை அறிவுரையும், தடையற்ற காமமும்தான் என்று சொல்ல முடியுமா? எல்லா குற்றத்திற்கு பின்னாலும் ஒரு தேவை இருக்கிறது. ஒரு மனிதனுக்கு வரும் எல்லாத் தேவைகளுமே அவரவர்க்கு நியாயமானதுதான். இந்த ரீதியில் பார்த்தால் எல்லாமே சரியாகுமே!

மோகன்ராஜ் செய்த குற்றம் நிரூபிக்கப்படவில்லையென்றால் மக்களின் அனுதாபம் நிச்சயம் அவனுக்கு கிடைக்கும்.என்னை பொறுத்தவரை மக்கள் சரியாகவே இருக்கிறார்கள். அவர்கள் கொண்டாடுவது இரண்டு குழந்தைகளை கொன்ற ஒரு காட்டுமிராண்டியின் மரணத்தைத்தான். அதுவும் தீபாவளி முடிந்தவுடன் நடந்த இந்தச்செயல் அவர்களுக்கு நரகாசூரனை நினைவுப்படுத்தியிருக்கலாம். இதை இந்த கோணத்தில் அணுகாமல் மக்கள் எல்லோரும் ஈரமேயில்லாத மனிதர்களாக மாறிவிட்டதாக நினைத்து வருந்துபவர்கள் மீதுதான் எனது அனுதாபம். என்கவுண்ட்டரை மக்கள் ஆதரிப்பதா என்று கேட்பவர்கள் மீதுதான் என் வருத்தம்.

Nov 8, 2010

சின்னவனே..பெரியவனே..

11 கருத்துக்குத்து

 

வாங்க மக்கா. தீபாவளி எல்லாம் எப்படி போச்சு? படம்லாம் பார்த்தீங்களா? ப்ளடி பிரதர்ஸ் பத்தி தெரியுமா? இவங்கள பத்தி சொல்றேன் கேளுங்க. இவங்க ரெண்டு பேருமே எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்கள். எதைப் பத்தி வேணும்னாலும் பேசுவாங்க. அதுலயும் சின்னவன் கொஞ்சம் ஏழு டைப். பெரியவன் ஏழர டைப். முதல் தலைப்பா தீபாவளிக்கு வந்த படங்கள பத்தி பேசுறாங்க. இவனுங்க எப்படின்னு போகப் போக தெரிஞ்சிப்பீங்க.

பெரியவன்: வாடா சின்னவனே.. தீபாவளி எல்லாம் எப்படி போச்சு?

சின்னவன்: புகையா போச்சுண்ணே.. பட்டாசு தான்.

பெரியவன்: உன் வாய்க்கு பகையா போகலைன்னு சந்தோஷப்படு. சினிமா ஏதாச்சும் பார்த்தியா?

சின்னவன்: சிவாஜியே பார்த்திருக்கலாம்ண்ணே. எல்லா படமும் மொக்கை

பெரி: என்னடா சொல்ற? வ குவார்ட்டர் கட்டிங் கூடவா?

சின்: அட நீங்களே சொல்லுங்கண்ணே. குவார்ட்டர் அடிச்சவன் ஆடுவான். குவார்ட்டர் பாட்டில் ஆடுமா? எவ்ளோ ஸ்டெடியா நிக்கும்!

பெரி:  ஆரம்பிச்சிட்டாண்டா. இப்ப என்னதாண்டா சொல்ல வர்ற?

சின்: ரொம்ப சுமாரான படம்ண்ணே. இவனுங்க கொடுத்த பில்டப்புல புஸ்ஸுன்னு போயிடுச்சு.

பெரி: ஓஹோ

சின்: சரக்க நாம ஊத்திக்கிட்டா ராகம்..கீழ ஊத்திட்டா சோகம். இது கீழ ஊத்திக்கிச்சுண்ணே

பெரி: அப்போ பில்டப் கம்மியா இருந்தா ஹிட் ஆயிருக்குமோ?

சின்: அப்படி என்றும் கூற இயலாது.

பெரி: டாய்..

சின்: இல்லண்ணே. படம் அவுட் தான்.

பெரி: நம்ம தனுஷ் படம் எப்படி?

சின்: உத்தமபுத்திரனா? அதுவும் சுமார்தான்

பெரி: இப்படி மொட்டையா சொன்னா எப்படிப்பா? டீட்டெயிலா சொல்லு

சின்: யாரண்ணே உத்தமபுத்திரன்னு சொல்வாங்க? வீட்டுல அடங்கி நடக்கிற பையன, அப்பா அம்மா சொல் பேச்சு கேட்கிற பையனத்தானே சொல்வாங்க? அந்த மாதிரி ஃபேமிலி ஆடியன்ஸூக்கு புடிக்கலாம்ண்ணே.. என்னை மாதிரி யூத்துக்கு எல்லாம் ம்ஹூம்

பெரி: பாட்டு கூடவா சரியில்ல. விஜய் ஆண்டனி ஆச்சே?

சின்: வா டக்குன்னு டக்குன்னு டக்குன்னு.. நச்சுன்னு..நச்சுன்னு

பெரி: டேய் டேய்..என்னடா?

சின்: இப்படி ஒரு பாட்டுண்ணே. அது மட்டும் நச்சுன்னு இருக்கு

பெரி: அதான் அவங்களே சொல்லிட்டாங்களே. என்னவோ போடா மாதவா

சின்: அய். நான் மாதவன் மாதிரியாண்ணே இருக்கேன்?

பெரி: என்ன கொலைகாரன் ஆக்காதே. சரி.ஆக்‌ஷன் கிங் படம் ஒண்ணு வந்துச்சே

சின்: வல்லக்கோட்டை. இனிமேல அவர் ஆக்‌ஷன்(Auction) கிங்னு சொல்லுங்க. படம் எடுக்கிறவர் ஏலத்துல மாட்டாம இருந்தா பெரிய விஷயம்

பெரி: முருகன் கைவிட்டானா?

சின்: ஆமாம். முருகன்னா சந்தனக்காப்பு. அர்ஜுன்னா புரொடியூசருக்கு ஆப்புன்னு ஆயிடுச்சு

பெரி: ஓஹோ. நான் பார்த்த மைனா பரவாயில்ல

சின்: ஹேவ் யூ ஸீன் மைனா? ஹவ் இஸ் இட்.. ஃபைனா?

பெரி: யப்பா நைனா.. நீ தமிழிலே பேசு.

சின்: ரொம்ப நல்லா இருக்குன்னு கமல்,பாலா எல்லாம் சொன்ன படமாச்சே. எப்படி இருக்குண்ணே?

பெரி: மத்த படமெல்லாம் பட்டர்னு சொல்றதால இத பெட்டர்னு சொல்லலாம். ஆனா பெருசா ஒண்ணும் இல்லை.

சின்: அனகா எப்படிண்ணே?

பெரி: கரெக்டா வருவியே.. நல்லா நடிச்சிருக்கு பொண்ணு. அஞ்சலி மாதிரி நல்ல பெர்ஃபார்ம் பண்ணுது. இமான் மியூசிக் கூட நல்லா இருக்கு. ஆனா க்ளைமேக்ஸ் தான் நீளமா இருக்கு

சின்: அப்ப இதுவும் சிந்து சமவெளி மாதிரி நீலப்படமா?

பெரி: அடடா.. அப்புறமா நீ சிந்து சமவெளி பாரு. நொந்து போயிடுவ. லெந்த்தியா இருக்குன்னு சொன்னேன். கமல் கூட சொல்லி இருக்கார். டைரக்டர்தான் என் குழந்தை அப்படி இப்படின்னு சொல்லி வெட்டாம விட்டாரு. இப்ப தியேட்டர்காரங்களே வெட்றாங்களாம்.

சின்: நான் ஒரு நியூஸ் சொல்றண்ணே.. இவரோட இரண்டாவது படம் கிங். அதிலும் க்ளைமேக்ஸ் சொதப்பலாம். படம் ஊத்திக்கிச்சு. ஆனா என் ஃப்ரெண்ட் தியேட்டர் ஓனரு. அவரு க்ளைமேக்ஸ் மாத்திப் போட்டு அங்க மட்டும் 30 நாள் ஓடுச்சாம்.இன்னும் மாறல பிரபு ஸ்ட்ராங்க்மேன்.. இல்லல்ல சாலமன்

பெரி: கிரியேட்டருக்கு இந்த உரிமை கூட இல்லையா?

சின்: இருக்குண்ணே. ஆனா தொடர்ந்து தப்பா வருதுன்னா மாத்திக்கலாம் இல்ல.

பெரி: சரி விடுப்பா. கடைசியா என்ன சொல்ற? இந்த தீபாவளிக்கு மைனாதான் பெட்டர் சாய்ஸ் இல்லையா?

சின்: ஆமாண்ணே.. நமக்கு நிஜ தீபாவளி திசம்பர்லதான். காவலன் வருது

பெரி: என்னை விடுறா சாமி.. நான் வரலை இந்த விளையாட்டுக்கு

Nov 5, 2010

சட்டை நல்லா இருக்கா?

18 கருத்துக்குத்து

 

அனைவருக்கும் உளங்கனிந்த தீபாவளி நல்வாத்துகள்…

வந்தது வந்துட்டிங்க. ஒரு தீபாவளி பதிவ படிச்சிட்டு போங்க

188084516 இதாம்ப்பா என் தீபாவளி சட்டை..

________________________________________________________________________________

     பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர். தமிழ்நாட்டின் தலைவிதிக்கு நாம் மட்டும் விதிவிலக்கா என்ன? பிழைக்க வந்த இடத்தில் என்ன கொண்டாட்டம் இருக்கப் போகிறது?  கால ஓட்டத்தில் காணாமல் போகும் பட்டியலில் இந்த தீபாவளியும் சேர்ந்துக் கொள்ளும் நாள் இதோ…. பட்டாசு என்ற ஒரு வஸ்து மட்டுமே இன்னமும் தீபாவளியை உயிரோடு வைத்திருக்கிறது. இல்லையேல் இந்திய தொலைக்காட்சிகளிலே….. போய் விடும் தீபாவளி. இத்தனை வருடம் கழித்தும் தீபாவளி என்றதும் எனக்கு திண்டிவனம்..அந்தத் தெரு.. அடுத்த நாள் அம்மாவின் கிராமம். இவைதான் நினைவுக்கு வருகிறது. இன்றிருக்கும் தீபாவளியை விட அந்த தீபாவளியை நினைத்துக் கொள்வதே மகிழ்ச்சியாயிருக்கிறது.

     எல்லாத் தெருவிலும் இரண்டு கோஷ்டிகள் இருக்கும். ரஜினி கமல் என்றோ, அந்த முக்கு இந்த முக்கு என்றோ, பெரிய பசங்க சின்ன பசங்க என்றோ… சரியாக இரண்டு கோஷ்டிகள்தான் இருக்கும். தீபாவளிக்கு பல நாட்கள் முன்பே ஊசிவெடியும், அரியாங்குப்பம் நாட்டு வெடியும் நாச வேலை செய்து கொண்டிருக்கும். தனியாக வரும் அந்த டீம்காரனின் மீது மாடியிலிருந்து வெடியை கொளுத்தி போடுவது, பதிலுக்கு நாம் அந்த பக்கம் போனா மாட்டுசாணத்தின் அடியில் வெடியை வைத்து அவர்கள் நம்மை வடிவேலாக்குவது... தீபாவளியன்று யார் வீட்டுக்கு முன் நிறைய பேப்பர் என்பது வரை நீடிக்கும் அந்தப் போர்… போரடிக்காத போர். இதற்காகவே லட்சுமி வெடியும், யானை வெடியும் நிறைய இருக்கும்,பேப்பர் அதிகம் சுற்றப்பட்டிருக்கும் காரணத்தால்.

    மாமா வாங்கி வரும் 100வாலாவை ஒவ்வொன்றாக  பிரித்துப் போட, அதில் பாதிக்கு மேல் திரி பிடுங்கி வர, மீதியில் பாதி புஸ்ஸாகிவிட, மிச்சமிருக்கும் 20 வெடிகளை ஒரு மணி நேரமாக வெடிப்பதுண்டு. இப்போதெல்லாம் ஒத்தை வெடியை நாலு வயது சிறுவன் கூட ஒரே நேரத்தில் அஞ்சு வெடியின் திரியை சேர்த்துதான் வெடிக்கிறான். ஒற்றுமையின் பலம் வெடிப்பதில் மட்டுமே தெரிகிறது அவனுக்கு.

     தெருவில் எந்த வீட்டு வராந்தா பெரியதாக இருக்கிறதோ அங்கே கூடும் எங்கள் பட்டாசு மேசை மாநாடு. அனைவரது பட்டாசுகளையும் ஒன்றாக்கி  வெடிக்க தொடங்கிய உடனே.. அதுவரை அமைதியாக இருக்கும் கிழவி.. ”டேய் அந்தப் பக்கம் போய் வெடிங்கடா” என்று வெடிச்சத்தத்தை விட அதிகமாக கத்தும். யார் கேட்பது? எவனாவது கையால் வெடிக்கிறேன் என்று  கொளுத்திப் போட, அது சரியாய் கிழவியின் அருகில்தான் விழும்.அது ஊசி வெடிதான் என்றாலும் பாம் விழுந்தது போல் அலறும் கிழவி. கைகளில் சிக்கும் பட்டாசை எடுத்துக் கொண்டு அடுத்த வீடு தேடும் படலம் ஆரம்பமாகும். இருக்கும் எல்லா பட்டாசும் டுமீல் ஆனவுடன் தொடங்கும் அடுத்த புராஜெக்ட்.புஸ்ஸாகிப் போன வெடிகளை சேகரித்து, மருந்தை மட்டும் பெரிய பேப்பரில் கொட்டி, ஒரு திரியை வைத்து கொளுத்தினால் ஜகஜ்ஜோதி.

    இன்னும் கொஞ்சம் பெரிய பசங்க வேறு வேலையில் பிசியாக இருப்பார்கள். தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு ஒரு குண்டு பல்பு வெளிச்சத்தில் நடந்துக் கொண்டிருக்கும் பேனர் தயாரிப்பு. ரஜினியின் படம் ஒரு வழியாக அடையாளம் காணும் அளவுக்கு வந்ததும், கீழே பெயர்கள் எழுதும் படலம் தொடங்கும். ரஜினியின் படத்திகு வெகு அருகில் இருக்க வேண்டும் என்பதே அனைவரது ஏக்கமும். “இந்த திரைப்படத்தை காண வந்த கண்களுக்கு நன்றி- KILLER BOYS” என்று முடித்து, கண்களை வரைவதற்குள் விடிந்து விடும்.  அந்த முக்கில் கையில் லட்டுடன் அபிராமியை தேடும் கமலை வரைய மனமில்லாமல் சோர்ந்து போயிருப்பார்கள். அதிலே பாதி வெற்றி பெற்றுவிட்டு, காலை ஆறு மணிக்கு ஆட்டம் பாம் அலறும் இந்த முக்கில்.

இன்னும் புதிய டிரெஸ், எதிர்த்த வீட்டுக்கு தீபாவளிக்காக வந்திருந்த ராதிகா, நாலு வீட்டுக்காரர்களும் சேர்ந்து செய்யும் முறுக்கு, ஜாமுன், பாதுஷா என பல மேட்டர் இருக்கு அந்த தீபாவளியைப் பற்றி அசை போட. ம்ம். இந்த தீபாவளிக்கு செய்து பார்க்க பட்டாசு மட்டும்தான் இருக்கு. டமால்………….

இதோ வறேண்டா பப்லு. மாடியில் இருந்து நீயும் நானும் மட்டும் ”அவுட்” விட்டு மகிழலாம்

Nov 3, 2010

தோழி தீபாவளி

21 கருத்துக்குத்து

 

  தீபாவளிக்கு பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஸ்வீட் கொடுக்கும் வேலை வழக்கமாக தோழியிடம் வருமாம். இந்த வருடம் கொடுக்க மாட்டேன் என்றாள். காரணம் கேட்ட போது சொன்னாள் “ வழக்கமா ஸ்வீட் கொண்டு போய் கொடுப்பாங்க. ஸ்வீட்டே கொண்டு போய் கொடுக்குமான்னு நீ கிண்டல் பண்ணுவ”.

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

இன்னும் கல்யாணம் ஆகல. தல தீபாவளியும் இல்லை. தலைவர் படம் ரிலீஸ் ஆகல. தளபதி தீபாவளியும் இல்லை. அப்புறம் ஏன் இவ்ளோ பட்டாசு என்றாள் தோழி. அதான் நீ இருக்கியே செல்லம். இது எனக்கு தோழி தீபாவளி என்றேன்.

’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

தீபாவளி அன்னைக்கு வீட்டுல ஸ்வீட் இருக்கணும். போய் வாங்கிட்டு வாடா என்கிறார் அம்மா. தோழியை வீட்டுக்கு அழைத்து வர இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா?

’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

குழந்தைகள் மத்தாப்பூ கொளுத்தும்போது தோழி வீட்டுக்குள் வந்து விடுவாளாம். இவள் அங்கே நின்று சிரித்தால் என் மத்தாப்பூ டல்லா எரியுது என்று அடம் பிடிப்பார்களாம் குழந்தைகள்.

’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

நரகாசூரன் மட்டும் இன்று இருந்திருந்தால் ஜாலியா இருந்திருப்பான். கிருஷ்ணன் என்னிடம் இருந்து தோழியை திருடுவதிலே குறியாய் இருந்திருப்பான்.

’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

தாவணி கட்டிக் கொண்டு தோழி கொண்டாடிய தீபாவளிகளை புகைப்படத்தில் பார்த்தேன். யார் சொன்னது அமாவாசையன்றுதான் தீபாவளி என்று?

Nov 2, 2010

தளபதிடா

34 கருத்துக்குத்து

 

சாரு அடித்த அதே பல்டிதான். இது வேலை வெட்டியற்ற ஒரு விஜய் ரசிகன், விஜயைப் பற்றி எழுதிய பதிவு. விஜயைப் பற்றி பெருமையாகத்தான் எழுதி இருப்பான். எனவே இந்த 5 நிமிடத்தை வீணாக்கிவிட்டேன் என்று பின்னூட்டம் இடும் கனவான்கள் உடனே மாற்று பெட்ரோல் கண்டுபிடிக்கும் பணிக்கே திரும்பிவிடுங்கள். கிம் கி டுக்கின் ரசனை வாரிசுகள், டொரண்ட் டவுன்லோடி பிட்டு பிட்டாக உலகப்படத்தை ரசிக்கும் அறிவு ஜீவிக்கள், அறிவு மணிரத்னங்கள் எல்லோருக்கும் நான் சொல்ல ஏதுமில்லை. வழக்கம் போல சத்தம் போடாமல் படித்துவிட்டு நாமதான் உலகிலே பெஸ்ட் என்ற நினைப்போடு எஸ் ஆகிவிடுங்கள். போட்டி நடிகர்களின் ரசிகர்கள் அமைதியாக படிக்க முடியும் என்றால் தொடருங்கள். எதுக்குடா இந்த வேலை என்று பலமுறை நண்பர்கள் சொல்வதுண்டு. நினைத்ததை எழுத முடியாத பிளாக் என்ன வெங்காயத்துக்கு? சரி.பதிவுக்கு போலாம் வாங்க..

இந்தப் பதிவு எழுத காரணமாகிய செய்தியை முதலில் சொல்லி விடுகிறேன். விஜயின் கடைசி 6 படங்கள் மாபெரும் தோல்வியாம். படமெடுத்தவர்கள், திரையிட்டவர்கள் என அனைவரும் நூடுல்ஸ் ஆகிவிட்டார்களாம். இனி விளம்பரப்படங்களில் நடித்துதான் அவர் காலத்தை ஓட்ட வேண்டுமாம்.நேரிடையாகவும், மறைமுகமாகவும் என்னிடம் இதையெல்லாம் கேட்டவர்கள், சொன்னவர்கள் ஏராளம். அவர்களுக்கு இதோ என் பதில்

1) பாடிகார்ட் என்ற மலையாளப் படத்தின் ரீமேக்கான காவலன், கேரளாவில் வழக்கமான விஜய் பட விலைக்கே விற்றிருக்கிறதாம்.

2) காவலன் படத்தின் வெளிநாட்டு உரிமை இதுவரை விற்ற விஜய் பட விலையை விட அதிக விலைக்கு பெறப்பட்டிருக்கிறதாம்.

3) தமிழக வெளியீட்டு உரிமை சுறா பட விலைக்கே விற்கப்பட்டிருக்கிறது.

normal_Kaavalan HQ 5 - OVF

வெற்றிப் படங்கள் தரும் வரைதான் விஜய்க்கு மவுசு என்றவர்களுக்கு இன்னொரு செய்தி காத்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் தமிழக வாரப்பத்திரிக்கைகளின் அட்டையை அதிக முறை  அலங்கரித்த நடிகர் யார் எனத் தெரியுமா? விஜய்.

   என்ன கொடுமை சார் இது? வெற்றி பெற்றவர்களுக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் விஜய்க்கா? பூமி தாங்குமா? அதற்கு ஏதாவது ஆகி விடும் முன்பு இன்னொரு செய்தியையும் சொல்லி விடுகிறேன். பொதுவாக யார் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார்களோ அவர்களைத்தான் விளம்பரம் செய்ய அணுகுவார்கள். சச்சினை விட தோனி அதிகம் சம்பாதிக்க இதுவே காரணம் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் தொடர்ந்து 6 படங்கள் மகா ஃப்ளாப். குறுஞ்செய்திகளில் தமிழக சர்தார்ஜி அளவுக்கு நக்கல். இவ்வளவு பிரச்சினையில் இருக்கும் ஒரு மொக்கை நடிகரை தங்கள் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக ஆக்க யாராவது நினைப்பார்களா? முன் வந்தது ஜோஸ் ஆலுக்காஸ். அதற்காக விஜய்க்கு தரப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? காதை மூடிக் கொள்ளுங்கள். ** கோடி. விஜய் பிராண்ட் அம்பாசடர் அல்ல. கிராண்ட் அம்பாசிடர் என்பது இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

என்ன சொல்லி என்னப்பா பிரயோஜனம்? படமெல்லாம் மொக்கையாத்தானே இருக்கு என்று சொல்கிறீர்களா? விஜயின் பயணத்தை சற்றே திரும்பி பாருங்கள். 1999ஆண்டில் துள்ளாத மனமும் துள்ளும் என்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கண்ணா, கண்ணுக்குள் நிலவு என தொடர் தோல்விகள். அவ்வளவுதான் விஜய். என்றார்கள். அப்போதுதான் அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற இசை+ இயக்குனர் வேல்யூ மிக்க படங்களோடு வந்தது குஷி. அதன் பின் என்ன நடந்தது என சொல்லவும் வேண்டுமா?

.அதே போல் 2003ல் பகவதி, வசீகரா, புதிய கீதை என ஹாட்ரிக் தோல்விகள். விஜய்க்கு 5வது ரேங்காவது கொடுங்கப்பா என்று வள்ளல்கள் வியாக்கியானம் பேசின நேரம். ஒரு பக்கம் சூர்யா+விக்ரம்+பாலா என பெரும்படை. இன்னொரு பக்கம் வில்லன் என்ற ஹிட்டோடு தல கெத்தா நிற்கிறார். புத்தியே இல்லாமல் புதுமுக இயக்குனரை நம்பி திருமலை என்று வந்தார் விஜய். மொட்டை கன்ஃபார்ம்டு என்று ஆரூடம் சொன்னார்கள். போன பத்தியின் கடைசி வரி இங்கே ரிப்பீட்.

normal_Kaavalan HQ 20 - OVF

இப்போது விஜய்க்கு அப்படியொரு இக்கட்டான நிலை. சொல்லப்போனால் இன்னும் மோசம். காவலன் என்று சொன்னதும் விஜய் திருந்தி விட்டார் என்றார்கள். அதே சூட்டில் வேலாயுதம் பூஜைப் போடப்படுகிறது. ”வேலா வேலா வேலா வேலாயுதம்.. நீ ஒத்த வார்த்தை சொன்னா போதும் நூறாயுதம்” என்று அறிமுகப்பாடல் எழுதுகிறார்கள். என்ன செய்யப்போகிறார் விஜய்? ஷங்கரோடு 3 இடியட்ஸ் என்கிறார்கள். இல்லை இல்லை. ஷங்கர் விஜய்க்காகவே புதுசா கதை எழுதுகிறார் என்றும் சொல்கிறார்கள். களவாணி இயக்குனர், விக்ரம்.கே.குமார் எல்லாம் ஸ்க்ரிப்ட்டோடு காத்திருக்கிறார்கள் என்ற செய்திகளும் வருகிறது. சீமான் வெளியே வந்ததும் பகலவன் என்கிறார்கள். பிடிக்கிறதோ இல்லையோ, பெரும்பான்மையான சினிமா ரசிகர்கள் பேசும் விஷயம் இன்று இதுதான். எல்லாமே செய்திகள்தானே? எதுதான் உண்மை?

இந்த வாரம் விகடனில் அமீரின் பேட்டி. பருத்தி வீரன் தந்த படைப்பாளி சொல்கிறார் “விஜய்க்குள்ளே அவார்டுகளை அள்ளிக் குவிக்கும் கலைஞனும் இருக்கிறார். அதற்கான உழைப்பும் இருக்கிறது. இனி எங்கேயோ போய்விடுவார் விஜய். கண்ணபிரான் ஒன்றாக செய்யப் போகிறோம்”.  ஷங்கரின் படமும் உறுதியாகிவிட்டது. ஒவ்வொரு முறை தோற்கும் போதெல்லாம் இன்னும் வேகமாக வெற்றிகளை குவிப்பது விஜயின் ஸ்டைல். இந்த முறை அடி அதிகம். வெறியும் அதிகமாகத்தானே இருக்கும்? இனிமேல் தான் இருக்கு ஆட்டம்.. இன்னுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று வாய்பிளக்கும் கணக்கு புலிகள் உங்கள் வீட்டிலோ, அருகிலோ இருக்கும் குழந்தையை போய் கேளுங்கள். ஜோஸ் ஆலுக்காஸை போய் கேளுங்கள். இல்லை காவலன் வரும் வரை காத்திருந்து முதல் நாள் தியேட்டர் பக்கம் போய் பாருங்கள்.

2004களில் கில்லி என்று பைக்குகளின் பின்னாலும், ஆட்டோக்களின் பின்னாலும் எழுதிக் கொண்டு திரிந்தார்களே! அதை விட அதிகமானோர் விரைவில் கெத்தா சொல்வார்கள்

“தளபதிடா”

 

டிஸ்கி:     எந்த கோடு உயரமானது என்ற போட்டியில் இரண்டு விஷயங்கள் செய்யலாம். நமது கோட்டை பெரிதாக்குவது. அடுத்தக் கோட்டை அழித்து குட்டையாக்குவது. நான் முதலாவதைத்தான் செய்கிறேன்.எனவே விஜயை பிடிக்காதவர்கள் தங்கள் வெறுப்பைக் காட்ட இது இடமல்ல.

காவலன் பாடல்கள் வரும் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படம் திசம்பரில்.பாடல் விவரங்கள்

1) விண்ணைக்காப்பான் ஒருவன் மண்ணைக் காப்பான் ஒருவன் – பா.விஜய்

2) சடசடவென மழை கொஞ்சுது  - யுகபாரதி

3) ஸ்டெப் ஸ்டெப்  - விவேகா

4) யாரது யாரது சொல்லாமல் நெஞ்சை அள்ளி செல்வது – யுகபாரதி

5) கபிலன் எழுதிய இன்னொரு பாடல்.

Nov 1, 2010

ரஜினி.. மேஏஏஏஏ

17 கருத்துக்குத்து

 

  சர்தார்ஜி ஜோக்குகள் பிரசித்தி பெற்றவை என்பது தெரிந்ததே. அதே போல் எஸ்எம்எஸ்  ஜோக்குகள் 2004க்கு பின் தூள் கிளப்பின. யாரேனும் ஒரு பிரபலத்தை பற்றி கிண்டலடித்து வந்த ஜோக்குகள் ஏராளம். முதலில் தாதா கங்குலியை  மானவாரியாக ஓட்டியெடுத்தன குறுஞ்செய்தி துணுக்குகள். ”மேகி செய்வது எப்படி தெரியுமா? ஒரு பாத்திரத்தில் டம்ளர் நீரை ஊற்றி, அதில் மேகியை போட்டு, தட்டு போட்டு மூடி அடுப்பில் வைக்கவும். தாதா பேட்டிங் செய்ய மைதானத்தில் நுழையும்போது அடுப்பை பற்ற வைக்கவும். தாதா அவுட் ஆனவுடன் அடுப்பை அணைத்தால் மேகி ரெடி”.

  அடுத்து நம்ம தல அஜீத். தாதாவுக்கு வரும் ஜோக்குகளையே சற்று மாற்றி தலையை கலாய்த்து அனுப்புவது அப்போதைய ஃபேஷன். அந்நியன் பட வசனத்தை தலைக்கு செட்டாகும்படி செய்தது ஞாபகம் இருக்கா?  ஒரு படம் ஓடலைன்னா தப்பா?  “இல்லைங்க”. ஒரு வருஷத்துல ஒரு படம் கூட ஓடலைன்னா தப்பா? “தப்பு மாதிரிதாங்க தெரியுது”. அஞ்சு வருஷமா ஒரு படம் கூட ஓடலைன்னா தப்பா? “பெரிய தப்புங்க”. அப்படித்தாண்டா நாய நீ நடிக்கிற”

இதெல்லாம் ஒண்ணுமே இல்லை என்பது மாதிரி 2 வருஷமா எங்க தளபதிய கலாய்ச்சு வர்ற எஸ்.எம்.எஸ் பத்தி சொல்லணுமா? சாதாரண ஜோக்கை யாராவது அனுப்பினால் கூட அதில் விஜய் பேரை போட்டு ஃபார்வர்ட் செய்வது பல பேருக்கு ஒரு நோயாகவே மாறிப்போனது. விஜய் ரசிகர்களும் பதிலுக்கு சூர்யாவையோ, அஜித்தையோ கிண்டலடிப்பது இன்றும் தொடர்கிறது. சிங்கம் சூர்யாவின் வசனத்தை மாற்றி வந்த இந்த வசனம் நச். “சூர்யா: ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா”. அனுஷ்கா: ஹீல்ஸ் போடாமலே நான் உன்னை விட ஹயிட்டுடா”.

எதை செய்தாலும் தி பெஸ்ட்டாக செய்பவர் நம்ம சூப்பர்ஸ்டார். இதில் மட்டும் சுப்ரீம் ஸ்டார் போல சொதப்பவா செய்வார்? எந்திரனுக்கு பிறகு ரஜினியை புகழ்ந்துதான் குறுஞ்செய்திகளே வருகின்றன. வட இந்திய பத்திரிக்கைகள் இம்மாதிரியான துணுக்குகளை நக்கலாக சொன்னாலும், அவை ரஜினியை கிண்டலடிப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒரு உதாரணம் பாருங்கள். “ரஜினி 100 மீட்டர் ரேஸில் முதலிடம் வந்ததைப் பார்த்து ஐன்ஸ்டீன் இறந்துவிட்டார். ஏனெனில் இரண்டாம் இடத்தில் வந்தது “ஒளி” (Light). அதை விட சூப்பரா இன்னொன்னு. “ரஜினியும் சூப்பர்மேனும் ஒரு முறை பெட் கட்டினார்களாம். தோற்பவர் ஜட்டியை பேண்ட்டுக்கு மேல போட வேண்டும்”

இந்த ரீதியில் பல ட்வீட்டூகள், SMSக்கள், பத்திரிக்கை துணுக்குகள் போட்டுட்டே இருக்காங்கப்பா. சரி. நம்ம பங்கிற்கு நாமளும் சூப்பர்ஸ்டார் புகழ் பாடலாம்னு எழுத ஆரம்பிச்ச பதிவு இப்பதான் தொடங்குது..

1) ரஜினி கண்டக்டராக இருந்தபோது ஒரு கார் ரிப்பேர் ஆகி நின்றுவிட்டது. ஸ்டார்ட் செய்ய அதை தள்ளும்போது, சூப்பர்ஸ்டாரும் ஒரு கையால் தள்ளினார். அந்த காருக்கு இப்போது ஃபெராரி என்று பெயர்.

2) ரஜினி கோவத்தில் காலை வேகமாக தரையில் உதைத்தால் இந்தோனேஷிய மக்கள் பாவம். பூகம்பம் வந்துவிடுகிறதாம்.

3) ஓவர் ஸ்பீட் என்று மாறுவேஷத்தில் சென்ற ரஜினியை டிராஃபிக் போலிஸ் பிடித்துவிட்டார். இத்தனைக்கும் அன்று ரஜினி வாக்கிங் தான் போனார். ஜாக்கிங் இல்லை

4) ஒரு முறை போயிங் விமானம் ஒன்று ரஜினி மீது மோதிவிட்டது. அந்த வண்டிதான் இப்போது மாருதி 800 ஆக மாறிவிட்டது.

5) இமயமலைதான் உலகிலே உயரமான மலைத்தொடர். ரஜினிக்கே மலையேற சில நாட்கள் ஆகிறதாம்.

6) தமிழகத்தில் புயல் என்ற செய்தியை பார்க்கும்போதெல்லாம் பெருமூச்சு விடுவாராம் சூப்பர்ஸ்டார். புயல் ஆந்திரா அல்லது ஒரிசாவை நோக்கி சென்றுவிடுமாம்.

7) உலகின் அதிவேக பிராசசரை இண்டெல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பெயரிட்டுவிட்டதாம். “பெண்ட்டியம் ரஜினி”

8)  நாளைக்கு காலை 9 மணிக்கு மும்பைல ஷூட்டிங். நாங்க நைட் ஃப்ளைட்ல
போறோம்.. நீங்க சார்?’ -  ஷங்கர்
“நான் எட்டேகாலுக்கு கலைஞரைப் பார்க்கணும்.. முடிச்சுட்டு அப்படியே
நடந்து வந்துடுவேன்” - ரஜினி

 

all rights reserved to www.karkibava.com