Oct 27, 2010

படைப்பாளி..எழுத்தாளன்..கவிஞன்..கலைஞன்


 

ஒரு படைப்பாளிக்கு சுதந்திரமான வாழ்க்கை அவசியம். ஒரு எழுத்தாளனுக்கு அக உலகின் அழுத்தங்கள் இருக்கவே கூடாது. ஒரு கலைஞனுக்கு காலக்கெடு எல்லாம் பொருட்டே இல்லை.. ஒரு கவிஞனுக்கு நினைத்ததை செய்து பார்க்கும் வசதிகள் கைக்கூட வேண்டும்.  சரி அதுக்கு என்ன இப்ப என கையை முறுக்காதிங்க. இப்படி எல்லாமும் சேர்ந்து என் போன்று ஒரு படைப்பாளியை, கலைஞனை, எழுத்தாளனை, கவிஞனை.. புரிஞ்சிடுச்சா? அதான் விஷயம். வேற ஒண்ணும் இல்லை. நான் ரொம்ப பிசி..

___________________________________________________________________________________

விஜய் டிவி நீயா நானாவில் நம்ம பரிசல்காரன் பங்கு பெற்றாராம். ”பரிசல்.. நீயா அது?” என்று எல்லோரும் கேட்க, அவரும் டிவியில் வந்த சில நொடிகள் க்ளிப்பிங்கைப் பார்த்து ”நானா அது?” என்று திருப்பி கேட்க ஒரே தமாஷாம். இவர் பேச வேண்டிய தலைப்பு. (கவனிக்க:பேசிய தலைப்பு இல்லை) வேலண்ட்டைன்ஸ் டே, ஃப்ரெண்ட்ஷிப் டே, மதர்ஸ் டே எல்லாம் தேவையில்லை என்று. நானும் தேவையில்லை என்பேன். இதில் ஆணாதிக்கம் இருக்கிறது. ஃப்ரெண்ட்ஷிப் டே என்கிறார்கள். நண்பர்களில் பெண்கள் இருக்க கூடாதா? அப்படி என்றால் ஃப்ரெண்ட்ஷிப் டீயும் தானே கொண்டாட வேண்டும்? அது என்ன “டே” மட்டும்?

___________________________________________________________________________________

தீபாவளிக்கு பட்டாசெல்லாம் வந்து சேர்ந்துடுச்சு. தினம் ஒரு திரியென வெடிக்கிறான் பப்லு. நேத்து வெடிச்ச பட்டாசு சரியா வெடிக்கலைன்னு பட்டாசுக் கடைக்காரருக்கு (நண்பர்தான்) ஃபோன் செய்து புலம்பினான். அவரும் “இங்க வாங்கியதுதானே? நம்ம கடைல எல்லாம் நல்லா வெடிக்குமே” என்றாராம். அதுக்கு பப்லு சொல்லியிருக்கிறான்

”உங்க கடைல நல்லா வெடிக்கும். அதுக்காக தீபாவளிய அங்கயா கொண்டாட முடியும்? எங்க வீட்டுலயும் வெடிக்கணும் இல்ல?”

இது அடுத்த பல்பு

வீட்டிற்கு வந்த உறவினர் சிலரிடம் அம்மா செய்த கைவினைப் பொருட்களை காட்டிக் கொண்டிருந்தான். ஓலையில் செய்த கூடை ஒன்றை காட்டி “இந்த கூட நான் செய்தது” என்றான். அமைதியின் திரு உருவான அவர் கேட்டார் “கூடை நீ செய்தியா? இல்ல செஞ்சவங்க ’கூட’ நீ இருந்தியா?

கொஞ்ச நேரம் யோசிச்ச பப்லு சொன்னான் “அந்த சோஃபால உட்காராதீங்க. அது கார்க்கி மாமா சோஃபா. அதான் இப்படி பேசறீங்க”

$%^&*@#$

________________________________________________________________________________

பீச்சுக்கு சென்றால் நானும் பப்லுவும் 50ரூபாய்க்காவது பலூன் ஷூட் செய்வோம். ஹார்ஸ் ரைடிங், ஷூட்டிங் இதெல்லாம் ஐ.பி.எஸ் ஆகவிருக்கும் பப்லுவுக்கு டிரெயினிங்.ஹிஹிஹி. விஷயம் என்னவென்றால் வீட்டுக்கு வந்தவுடன், ”மம்மி இவன் ஒரு கடைல 50 ரூபாய் சுட்டுட்டான்” என்றான் பப்லு. அக்காவும் என்னடா என்பது போல் முறைக்க, சிரித்துக் கொண்டே சொன்னான் “பலூன் சுட்டான் மம்மி”

இதைக் கேட்ட என் மம்மி ஒரு பழையக் கதை சொன்னார்கள். அப்போது நான் அஞ்சாவது படிச்சிக்கிட்டு இருந்தேனாம்.(தூள் படம் பார்த்தவர்கள் அமைதியாக இருக்கவும்). அப்பாவிடம் வந்து 50 கி.மீ ஸ்பீடில் ஓடுன பஸ்ஸ சைக்கிளில் ஓவர்டேக் செய்ததாக சொல்லியிருக்கேன். அவரும் வேகமாக போகக் கூடாது என்று சொல்ல, பதிலுக்கு நான் சொன்னது ” ஆனா நான் ஓவர்டேக் செஞ்சப்ப அது நின்னுக்கிட்டுதான் இருந்தது”

பப்லு என்னைப் பார்த்து அப்ப நீயும் என் டீம்தாண்டா என்றார். ரெண்டு மம்மியும் ஒன்றாக சொன்னார்கள். ம்க்கும்

________________________________________________________________________________

ட்விட்டரில் உதிர்த்த சில கருத்துகள் இதோ. தொடர்ந்து வலைபாயுதேவில் என் ட்வீட்டுகளையும் பிரசுரிக்கும் விகடனுக்கு என் நன்றிகள்

சிகரெட் பிடிக்கும் அப்பாக்கள், குழந்தைகள் தீபாவளிக்கு பட்டாசு கேட்டால் மட்டும் “காசை கரியாக்காத” என்று சொல்வது ஏமாற்று வேலை

அம்மா ஆயுத பூஜை அன்று வீட்டில் வெத்தல கொடி கட்டினார்கள். திமுக கொடியை கட்டினாலாவது டிவி கிடைத்திருக்கும்.

சிம்புவை காதலிப்பவர்களின் பிரச்சினை அவர்கள் டீ.ஆரின் மருமகள் என்பதே.அவர் father in law இல்லை. feather in law என்பதை யார் உணர்வார்கள்?

ஆளாளுக்கு writer என்ற முன்பெயரோடு கிளம்புகிறார்கள். இவர்களெல்லாம் எந்த போலீஸ் ஸ்டேஷனில் வேலை செய்கிறார்கள்?

29 கருத்துக்குத்து:

Gopi Ramamoorthy on October 27, 2010 at 11:59 PM said...

:)

ப்ரியமுடன் வசந்த் on October 28, 2010 at 12:02 AM said...

//படைப்பாளியை, கவிஞனை, எழுத்தாளனை, கவிஞனை.. புரிஞ்சிடுச்சா?//

தோழி அப்டேட்ஸ் புத்தக வெளியீடு எப்போ சகா ?

மதுரை சரவணன் on October 28, 2010 at 12:13 AM said...

புரிஞ்சிட்டு... டுவிட்டு சுப்பர்... வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றீ.

கயல் on October 28, 2010 at 12:49 AM said...

:)))

கயல் on October 28, 2010 at 1:06 AM said...

பெரீய்ய்....ய அறிஞர் குழாம் போலிருக்கு. தாங்காது நம்ம சிற்றறிவுக்கு. விடு ஜூட்.....

Karthik on October 28, 2010 at 1:15 AM said...

Nallarunthathu. :-)

vinu on October 28, 2010 at 1:29 AM said...

super super superrrrrrrrrrrrrr

apuram naanum puthusaa twitta arambichuttean ippa ennoda pirachanai ennannaa, ennodathai aanantha vigadanil vara vaippathu eppudi, avangalukku send panni vaikkanumaaaaaaaaaaaa

பிரதீபா on October 28, 2010 at 3:03 AM said...

பரிசல்-நீயா நானா பாக்கணும் ..
//இப்படி எல்லாமும் சேர்ந்து என் போன்று ஒரு படைப்பாளியை//-நீயா நானா பாக்கணும்.

பிரதீபா on October 28, 2010 at 3:04 AM said...

:-)

சுசி on October 28, 2010 at 3:22 AM said...

பப்லு பப்லுதான்.

கம்பன் வீட்டு கட்டுத்தறி போல கார்க்கி உக்காரும் சோஃபா கூட மொக்கை போடுமா?? ஆவ்வ்வ்..

ரொம்ப பிசின்னாலும் கலக்கிட்டிங்க :))

சுசி on October 28, 2010 at 3:24 AM said...

உங்களுக்கு தோழிகள் தானே இருக்காங்க. நண்பர்களில் பெண்களும் இருக்காங்களா குரு??

மாணவன் on October 28, 2010 at 6:20 AM said...

அருமை அண்ணே,
”ஃப்ரெண்ட்ஷிப் டே என்கிறார்கள். நண்பர்களில் பெண்கள் இருக்க கூடாதா? அப்படி என்றால் ஃப்ரெண்ட்ஷிப் டீயும் தானே கொண்டாட வேண்டும்? அது என்ன “டே” மட்டும்?”

நம்ம கடைல எல்லாம் நல்லா வெடிக்குமே” என்றாராம். அதுக்கு பப்லு சொல்லியிருக்கிறான் ”உங்க கடைல நல்லா வெடிக்கும். அதுக்காக தீபாவளிய அங்கயா கொண்டாட முடியும்? எங்க வீட்டுலயும் வெடிக்கணும் இல்ல?”

செம கலக்கல்.....

விரவில் தோழி அப்டேட்ஸ் எதிர்பார்த்து....
நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்
http://urssimbu.blogspot.com/2010/10/please-help.html

Balaji saravana on October 28, 2010 at 7:52 AM said...

//ப்ரியமுடன் வசந்த் said...
தோழி அப்டேட்ஸ் புத்தக வெளியீடு எப்போ சகா//

ரிப்பீட்டிக்கிறேன்...

சிவா on October 28, 2010 at 8:25 AM said...

சோபாவிலே உக்கார்ந்தாலே இந்த எபக்டா! அப்படியே பார்சல் பண்ணுங்கப்பா அதை!!!

புன்னகை on October 28, 2010 at 8:34 AM said...

//சுசி said...
உங்களுக்கு தோழிகள் தானே இருக்காங்க. நண்பர்களில் பெண்களும் இருக்காங்களா குரு??//
கார்க்கிக்கு நண்பர்களில் பெண்கள் இல்லைன்னு யார் சொன்னாங்க? இதோ நானிருக்கேன், நானிருக்கேன்! நண்பி டா! :-)

தராசு on October 28, 2010 at 9:04 AM said...

//என் போன்று ஒரு படைப்பாளியை, கலைஞனை, எழுத்தாளனை, கவிஞனை//

அடங்கவே மாட்டீங்களா!!!!!!

Sen22 on October 28, 2010 at 9:59 AM said...

//“அந்த சோஃபால உட்காராதீங்க. அது கார்க்கி மாமா சோஃபா. அதான் இப்படி பேசறீங்க” //


Kalakkal..!!!!!! :))))))

பொன்கார்த்திக் on October 28, 2010 at 11:37 AM said...

//பீச்சுக்கு சென்றால் நானும் பப்லுவும் 50ரூபாய்க்காவது//

சகா இது பழைய வடை அச்சே?

:)

அமுதா கிருஷ்ணா on October 28, 2010 at 11:54 AM said...

ரொம்ப நாள் பப்லுவை காணலை..நல்லாயிருக்கு...

ஆதிமூலகிருஷ்ணன் on October 28, 2010 at 12:30 PM said...

Good.!

ப.செல்வக்குமார் on October 28, 2010 at 12:49 PM said...

//அப்படி என்றால் ஃப்ரெண்ட்ஷிப் டீயும் தானே கொண்டாட வேண்டும்? அது என்ன “டே” மட்டும்?/

அண்ணா எப்படி உங்களால மட்டும் இப்படியெல்லாம் ..?!

ப.செல்வக்குமார் on October 28, 2010 at 12:51 PM said...

//(தூள் படம் பார்த்தவர்கள் அமைதியாக இருக்கவும்)/


நான் பார்க்கலையே , அப்படின்னா நான் சத்தம் போடலாமா ..?

ஜ்யோவ்ராம் சுந்தர் on October 28, 2010 at 1:02 PM said...

டா வுக்குத்தான் டீ. டே வுக்குமா? என்னமோ போங்க சகா.. சரியாவே மொக்கை போட மாட்டேங்கறீங்க இப்பல்லாம் :) :)

அன்புடன் அருணா on October 28, 2010 at 5:44 PM said...

/அந்த சோஃபால உட்காராதீங்க. அது கார்க்கி மாமா சோஃபா. அதான் இப்படி பேசறீங்க” /
எப்பிடிப்பா இப்படி உங்களை மாதிரியே ட்ரெயினிங்க் கொடுத்திருக்கீங்க பப்லுவுக்கு!!!!!

பரிசல்காரன் on October 28, 2010 at 7:29 PM said...

அடிக்கடி காக்டெய்ல் எழுது சகா..

மகேஷ் : ரசிகன் on October 28, 2010 at 9:45 PM said...

nice ya!

M.J. on October 29, 2010 at 11:52 PM said...

உங்கள மாதிரி படைப்பாளியை, கவிஞனை, எழுத்தாளனை, கவிஞனை....பத்தி விகடன் இல்ல .. முரசொலில எழுதணும் :)

அட்லீஸ்ட் டிவி குடுக்க சொல்லி மனு போடலாம் :P

இரசிகை on November 5, 2010 at 4:00 PM said...

:)

Nalliah on September 24, 2011 at 7:25 AM said...

சமூகம் மக்களின் மனோதத்துவத்தில்தான் வாழ்ந்துகொண்டிருகின்றது. உண்மைகளைப்பற்றி சமூகத்தில் யாருக்கும் அக்கறை கிடையாது. மற்றவர்களுடன் கருத்து வேறுபாடின்றி சேர்ந்து ஒத்துப்போவது பற்றித்தான் சமூகம் கவலை கொள்கின்றது.
ஒரு ஆசிரியர் மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம் யேசுவின் குடும்பத்தை சித்திரமாக ஒரு தாளில் வரையச் சொன்னார். எல்லாக் குழந்தைகளும் யோசப், மேரி, யேசு ஆகிய மூவரையும் தங்களுக்கு தெரிந்தவிதத்தில் வரைந்தனர். ஆனால் ஒரு மாணவன் இயேசுவின் குடும்பத்தினர் ஆகாயத்தில் விமானம் ஒன்றில் பறப்பதாக வரைந்திருந்தான். ஒரு விமானம். அதன் யன்னல்கள் வழியாக நான்கு பேர் தெரிந்தனர். ஒருவர் யோசப், ஒருவர் மேரி, ஒருவர் யேசு. யார் அந்த நான்காவது மனிதன்? என ஆசிரியர் கேட்டார். அதுதான் விமானத்தின் விமானி என்று மாணவன் பதிலளித்தான்.
குழந்தைகளாலும் எழுத்தாளர்களாலும் மட்டுமே இப்படி எண்ண கற்பனை பண்ண முடியும். மற்றவர்களுக்கெல்லாம் வித்தியாசமாக புதிதாக எண்ண பயம், தயக்கம். ஆனால் குழந்தைகளுக்கும் படைப்பாளிகளுக்கும் எந்தவித தயக்கமோ பயமோ கிடையாது. அவர்களின் எண்ணங்களை செயல்களை யாராலும் எதனாலும் கட்டுப்படுத்த இயலாது. அதனால்தான் சாதாரண மக்கள் ஒரு கலைஞனையோ, படைப்பாளியையோ மரியாதைக்குரிய மனிதராக, ஒரு கனவானாகப் பார்க்க முடிவதில்லை. மரியாதைக்குரியவர்களாகவும், கனவான்களாகவும் இருப்பவர்களால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. கனவானாக மாறிய பின்பு சுதந்திரமாக வாழ முடியாது. ஒரு கலைஞன் கனவானாக மாறிவிட்டால் அவன் இறந்தவனுக்குச் சமமாகி விடுகின்றான்.
மரியாதையையும், சுயகௌரவத்தையும் இழக்கத் தயாராக இருப்பவர்களே படைப்பாளிகளாக இருக்கமுடியும். படைப்பாளிகளை சாதாரணமக்கள் பைத்தியக்காரர்கள் என்றே கருதுகின்றார்கள். படைப்பாளிகள் மிகத்தாமதமாகவே அடையாளம் காணப்படுகின்றார்கள்.

 

all rights reserved to www.karkibava.com