Oct 24, 2010

”ழ” டீக்கடை


 

    டீக்கடை என்பது தமிகத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று. பெரும்பாலும் நடத்துவது நாயர் என்றாலும், குடிப்பது அசாம் டீ என்றாலும் அது நம் அடையாளம்தான். ஒரு நல்ல டீக்கடை என்பது டீயின் சுவையில் இல்லை. கடைக்கு முன்னால் இருக்கும் பென்ச், பக்கத்தில் இருக்கும் ஒரு குட்டிச்சுவர், அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம் ஆகியவையே அதன் மதிப்பை கூட்டும் சக்தி பெற்றவை. அதிகாலையில் ஸ்ட்ராங்கா, சக்கரை கம்மியா ஒரு டீயினூடே அன்றைய தினத்தந்தியை மேய்ந்துவிட்டு, 4வது தெரு ராமாசமியிடம் நிதியமைச்சரின் புதிய திட்டம் ஒன்றின் குறையை விளக்குவதில் இருக்கும் அலாதியான சுகம் பெருசுகளுக்கு வேறு எதில் கிடைத்துவிடும்?

பெருகளுக்கு சரி.இளசுகளுக்கு? அதிகாலை என்றேன் அல்லவா? இப்போது காலை 8 மணி. பள்ளிக்கூட பெதும்பைகள்,  பாலிடெக்னிக் மங்கைகள், கல்லூரி மடந்தைகள், வேலைக்கு செல்லும் அரிவை, தெரிவை பேரிளம்பெண்கள் என எல்லா வயது பெண்டிரும் பேருந்து நிறுத்தத்தை போகன்வில்லாவாக மாற்றும் நேரம். நம்மின காளையர்கள் டீக்கடை குட்டிச்சுவரை நிஜமாகவே குட்டிச்சுவாராக மாற்றும் பொருட்டு நாயரின் திட்டுக்களுக்கு வந்தனம் சொல்லி அக்கவுண்ட்டில் வாங்கிய தம்மை இழுத்தபடி விடும் ஏக்கப்பெருமூச்சுகள் பேருந்து வரும் சத்தத்தையே அடக்கிவிடும்.

உஸ்ஸ்.. ஆலமரம், பசுமாடு கதையாகும் முன்பு சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன். டீக்கடையின் அடுத்தக்கட்ட நகர்வுதான் காஃபி ஷாப்கள்.  இந்த கஃபேக்கள் பலர் கூடி பேசும் இடமாகாத்தான் பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட காஃபி ஷாப்கள் பல தீம்களை (Theme) அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிகத்திலே தமிழ் மொழியை மையமாக கொண்ட ஒரே தேநீர் விடுதி “ழ” தேநீர் விடுதி அல்லது ZHA Cafe.  

image    யோசித்துப்பாருங்கள். தரையில் மெத்தை. சம்மனமிட்டு அமரலாம். குளிரூட்டப்பட்ட அறை. படிக்க பொன்னியின் செல்வன் உட்பட பல நூல்கள்(தேடிவிட்டேன். சாருவின் நூல்கள் எதுவும் இல்லை. தைரியமாக செல்லலாம்) . ஆடுவதற்கு பல்லாங்குழி அல்லது தாயம். பேசுவதற்கு நண்பர்கள். பார்ப்பதற்கு படங்கள். பேசிப் பேசி களைத்துப் போனால் என்ன குடிக்கலாம்? கோலி சோடா குடிக்கலாம். இருமல் என்றால் சுக்குக்காப்பி குடிக்கலாம். கருப்பட்டி காஃபி குடிக்கலாம். பதனீரை ஆரஞ்சு ஃப்ளேவரில் குடிக்கலாம். ஈனா மீனா டீக்கா குடிக்கலாம். அப்படின்னா என்னவா? போய் குடிச்சு பாருங்க.

சரி சாப்பிட என்ன கிடைக்கும்? அதிரசம் பிடிக்குமா? வாழைப்பத்தோடு சாப்பிடுங்க.  குஷ்பூ இட்லி மட்டும்தானே தெரியும். காக்டெயில் இட்லி சுவைத்துப் பாருங்கள். இங்கே வாழைப்பூ வடை கூட இருக்கிறது. பஜ்ஜி, போண்டா என சகல தமிழ் உணவுகளும் கிடைக்கின்றன. ”டீக்கடை” என்ற ஸ்பெஷல் ஐட்டமும் உண்டு. ஒரு கோப்பை தேநீர், உப்பு பிஸ்கெட் அதாங்க சால்ட் பிஸ்கெட். கடல மிட்டாய். ஒரு தினத்தந்தி என கிராமத்து நினைவுகளை கிளறும் உணவுவகைகள். இதிலெல்லாம் தமிழ் மணம் சரி. விலை எப்படி என்று கேட்கறீர்களா? மற்ற காஃபி ஷாப்களோடு ஒப்பிடுகையில் குறைவுதான். சென்னை ஃபில்டர் காஃபி 40 ரூபாய். சுக்குக்காஃபி 45 ரூபாய்.

image

மொத்தம் 3 ரூம்கள் இருக்கின்றன. தரையில் அமர்ந்து பேசும்வகையில் ஒன்று, பரமபத தீமில் ஒன்று. இன்னொன்று தெரியவில்லை. ஒரு பெரிய கூடமும் இருக்கிறது. ஒரு வீட்டை டீக்கடையாக மாற்றியிருக்கிறார்கள். நிச்சயம் ஒரு முறை சென்று வரலாம். அடையாறில் இருக்கும் கஃபேயின் முகவரி

25, 2nd Street,
Kamarajar Avenue ,
Adyar, Chennai -20
Phone :044-42116027

கூகிள் மேப்பில் இந்த இடத்திற்கு செல்லும் வழியைக் காண இங்கே க்ளிக்குங்கள்

இதன் நிறுவனர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஏதேனும் ஒரு அறையை கரோக்கே பாடும் வகையில் அமைத்தால் நன்றாக இருக்கும். அதுவும் பாராதியார் பாடல்கள், மற்ற தமிழிசைப்பாடல்கள் வைத்தால் ஆஹா… அடுத்த முறை நீங்கள் சென்றால் மறக்காமல் இந்த கோரிக்கையை வைத்துவிட்டு வாருங்கள். பிரதியுபகாரமாக நான் செய்வது “நான் பாட மாட்டேன்” என்ற உறுதிமொழி.

” – அகு

nit-2

33 கருத்துக்குத்து:

Karthik on October 24, 2010 at 11:26 PM said...

me the first!!

aha evlo nalachu ippadi comment pottu. :))

Karthik on October 24, 2010 at 11:29 PM said...

வாவ் செம ஐடியாவா இருக்கும் போலையே. பதிவும் ரொம்ப நல்லாருக்கு. ழ கஃபேன்னா சங்கத்தமிழ்ல எழுதணுமா? நிறைய வார்த்தைகள் புரியல. :))

Jeeves on October 24, 2010 at 11:31 PM said...

நல்ல அறிமுகம். சென்னைக்காரங்களுக்கு

சந்தோஷ் = Santhosh on October 24, 2010 at 11:34 PM said...

வாவ் நல்ல பகிர்வு மச்சி..

r.selvakkumar on October 24, 2010 at 11:34 PM said...

இது ஒரு promo blogஆக இருக்குமோ என்ற எண்ணத்தை குறைக்க, இந்தப் பதிவில் நாம் அனைவரும் அமர்ந்திருக்கும் போட்டோக்களை இணைத்திருக்கலாம்.

r.selvakkumar on October 24, 2010 at 11:37 PM said...

அடுத்த முறை கரோக்கி இருக்கிறதோ இல்லையோ, உங்கள் ”கானா” பாட்டு இருக்க வேண்டும் என்பது நேயர் விருப்பம்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) on October 24, 2010 at 11:39 PM said...

45 ரூபாய்ல காபியா..? தோழியோட போறதுக்கு உனக்கு வசதியாத்தான் இருக்கும். என்னை மாதிரி சாமான்யன் போக முடியுமா..?

லதாமகன் on October 24, 2010 at 11:48 PM said...

அல்லாம் சரி. //மத்த காபி கடையுடன் ஒப்பிடுகையில் குறைவுதான்//. எப்டி எப்டி? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மெரீனா பக்கதுல நான் குடிச்ச காபி விலை ஆறு. ஙே!

வினோ on October 24, 2010 at 11:55 PM said...

மிக்க நன்றி கார்கி... நல்ல பகிர்வு..

vinu on October 25, 2010 at 12:01 AM said...

next month 1-8 assignment chennailathaan neeng kooputtu porathaa irrunthaa oru vaatti poi ttu vara naan kooda thayaar

ஊர்சுற்றி on October 25, 2010 at 12:06 AM said...

கடை ஓனருக்கு ஒரு பிரின்ட் அவுட் பார்சல்...! :)

விஜய்வீரப்பன் சுவாமிநாதன் on October 25, 2010 at 12:07 AM said...

மொதல்ல வாக்கு போட்ட பிறகு தான் பின்னூட்டம்...
இதத் தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன்.

தமிழை இந்த மாதிரி அந்நியப் பட்ட இடங்களுக்கு கொண்டு வந்ததற்காக அந்தக் கடை உரிமையாளருக்கு வாழ்த்துக்கள்....

shortfilmindia.com on October 25, 2010 at 12:08 AM said...

ஒரு மீட்டிங் போட்டுருவோமா../

முசமில் இத்ரூஸ் on October 25, 2010 at 12:42 AM said...

45Rs tea OH MY GOD!
Idhuthan kuraivana vilaya.karki neengal indha panguthaararo

சுசி on October 25, 2010 at 1:22 AM said...

அழகா இருக்கு இடமும் எழுத்தும்.

வரும்போது போகணும்.

ப்ரியமுடன் வசந்த் on October 25, 2010 at 3:07 AM said...

சூப்பர் இடமா இருக்கு தோழியோட எத்தனை தாட்டி போயிருக்கீங்க இங்க?

ப்ரியமுடன் வசந்த் on October 25, 2010 at 3:07 AM said...

இதன் நிறுவனர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஏதேனும் ஒரு அறையை கார்க்கி பாடும் வகையில் அமைத்தால் நன்றாக இருக்கும்.

இப்படித்தான் எனக்கு கேட்டுச்சு!

philosophy prabhakaran on October 25, 2010 at 5:04 AM said...

இப்போதே அந்த காபிக்கடைக்கு செல்லும் ஆர்வம் வந்துவிட்டது... அதுசரி பெண்களின் பருவநிலைகளை இப்படி புட்டுபுட்டு வைக்கிறீர்கள்...

Balaji saravana on October 25, 2010 at 6:10 AM said...

ரைட்டு.. போயிருவோம் :)

மகேஷ் : ரசிகன் on October 25, 2010 at 7:42 AM said...

அசத்தல்...

அது சரி... நீங்க யார் கூட போனீங்க.. ?

SanjaiGandhi™ on October 25, 2010 at 8:39 AM said...

நல்லா இருக்கே..

நர்சிம் on October 25, 2010 at 11:07 AM said...

//
தமிழை இந்த மாதிரி அந்நியப் பட்ட இடங்களுக்கு கொண்டு வந்ததற்காக அந்தக் கடை உரிமையாளருக்கு வாழ்த்துக்கள்....//

அதே அதே.. தமிழுக்கு ழ அழகு.

பகிர்விற்கு நன்றி சகா.

பொன்கார்த்திக் on October 25, 2010 at 11:39 AM said...

super..

Sen22 on October 25, 2010 at 12:10 PM said...

Nalla Arimugam..

தராசு on October 25, 2010 at 2:02 PM said...

கேபிள் அண்ணன் சாப்பட்டுக்கடை எழுதுனா, நீங்க டீக்கடையா....

நடத்துங்கப்பா....

அமுதா கிருஷ்ணா on October 25, 2010 at 2:42 PM said...

சென்னைக்காரர்களை எப்படி வேணுமானாலும் ஏமாத்தாலாம்...

பிரதீபா on October 25, 2010 at 3:13 PM said...

//பெரும்பாலும் நடத்துவது நாயர் என்றாலும்// - இது எனக்கென்னமோ நூத்துக்கு பத்து சதவீதம் தான்னு தோணுது. நான் பாத்த எத்தனையோ கடையில நாயரே இருந்ததில்ல.. அந்தந்த ஊர்க்காரங்களைத் தான் பாத்திருக்கேன்.
மத்தபடி "”ழ” டீக்கடை" உண்மையிலேயே எல்லாரையும் ஒருமுறை வரவைக்கும். இன்னும் கூட ப்ரைட்டா பாக்கறவங்களைக் கவருகிற மாதிரி இருந்தா சூப்பரா இருக்கும்.
(நான் சென்னையில இருந்த போதே ஏன் இந்தக் கடை ஆரம்பிக்கலைன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க, வயித்தெரிச்சலா இருக்கு ! )

ஆதிமூலகிருஷ்ணன் on October 25, 2010 at 5:56 PM said...

ஒன்ஸ் மோர் போலாமா மச்சி.?

(ஒரே ஏஜ் குரூப்னா இப்பிடித்தான்)

கார்க்கி on October 25, 2010 at 10:12 PM said...

அனைவருக்கும் நன்றி... கொஞ்ச நாளைக்கு விரிவா பதில் போட முடியாது..நான் பிசி.. ஹிஹிஹி..

தமிழ்ப்பறவை on October 26, 2010 at 11:29 PM said...

சகா இங்கெல்லாம் கூட்டிட்டுப் போகாம ஏமாத்திட்டீங்க... :(

மதுரை சரவணன் on October 27, 2010 at 1:20 AM said...

நல்ல இருக்கு...பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

Raz on November 1, 2010 at 11:01 PM said...

:) ungal korikaikal parisilika padum! :)

தேனம்மை லெக்ஷ்மணன் on July 30, 2011 at 12:35 PM said...

adada engka fb adutha meet ingathan .thx Karki..:))

 

all rights reserved to www.karkibava.com