Oct 19, 2010

பெரிய மனுஷன் ஆயிட்டேனே!


 

எப்படி இருக்கிங்க மக்கா? கொஞ்ச நாளா நான் ரொம்ப பிசி.. இன்னும் கொஞ்ச நாள் இப்படித்தான் இருப்பேன்னு நினைக்கிறேன்.  உலகம் சுத்துறுது நின்னுடாது..போய் ஜோலியப் பாரு என்று கமெண்ட்ட போகும் நண்பர்களுக்கு நன்றி

____________________________________________

உலகிலே மிகக் கடினமான விஷயம் எதுவென்று என்னைக் கேட்டால் எளிதில் சொல்லிவிடுவேன், தண்ணியடிக்கும் பழக்கமில்லாத ஒருவன் தண்ணி பார்ட்டிக்கு செல்வது என்று. சிறுவயதில் இருந்தே எனக்கு இந்த நல்லப் பழக்கம் உண்டு. அதாங்க தண்ணியடிக்காமல் இருப்பது. அப்போது எனக்கு 18 வயது(தங்கம்.. உனக்கு இப்பவும் 18 தாண்டா). கல்லூரி நண்பன் ஒருவன் பார்ட்டி தருவதாக சொன்னான். அதுவும் தண்ணி பார்ட்டிடா என்று அழுத்தி சொன்னான். எனக்கு விருப்பமில்லை என்றேன். இன்னொரு நண்பன் தான் சும்மா வந்து வேடிக்கை பாரு மச்சி. கலக்கலா இருக்குமென்று பவர் சோப் போட்டு பிரயின் வாஷ் செய்தான். அதைத் தொடர்ந்து நான் வருவதாகவும் ஆனால் தண்ணியடிக்க சொல்லி தொல்லைப் பண்ணக்கூடாதென்றும் பார்ட்டி தருபவனிடம் சொன்னேன். அது உன் இஷ்டம் மச்சி என்றவனிடம் என்னடா ஸ்பெஷல் என்றேன். ”தெரியாதா மச்சி. போன வாரம் மொத மொதல்லா சரக்கடிச்சு பெரிய மனுஷன் ஆயிட்டண்டா” என்றான்.

     அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைத் தொடர்ந்து பல பார்ட்டிகளுக்கு செல்லத் தொடங்கினேன். ஏ.சி பாரில் அன்லிமிட்டெட் சைட் டிஷ் என்பதால் டின்னரையும் அங்கேயே முடித்து விடுவது என் வாடிக்கையாகிவிட்டது. எவ்வளவு சைட் டிஷ் வைத்தாலும் சில நிமிடங்களில் அரைத்து தள்ளியதால் கிரைண்டர் கார்க்கி என்ற பட்டப்பெயரும் கிடைத்தது. இது என்னடா ஃப்ரீயா கொடுக்கிறத சாப்பிட்டா கூடவே ஃப்ரீயா டைட்டிலும் தர்றாங்களேன்னு ஆச்சரியமாக இருந்தது. உண்மையை சொல்லப் போனால் நான் இது போன்ற பார்ட்டிகளுக்கு செல்ல முக்கிய காரணம் சைடு டிஷ் மட்டும் அல்ல. சரக்கு உள்ளே போகும் வரை கந்தசாமியாக இருப்பவன் முதல் கல்ப் அடித்ததும் கம்யூனிஸ்டாக மாறுவான். ஸ்மால் அடித்தவன் சுவாமிகள் ஸ்ரீஸ்ரீ ஆயா பகவானின் லீலைகளை எடுத்துரைப்பான். லார்ஜ் அடித்தவன் இந்தியாவின் லா& ஆர்டர் குறித்து கவலை தெரிவிப்பான். லைட்ஸ் ஆன் சுனிலை மட்டுமே படிப்பவன் என்று நினைக்கும் ப்ரகஸ்பதி தோப்பில் முகமது மீரானைத் தெரியுமா என்று மிரள வைப்பான்.

     இந்த வயதில், அதாங்க 18 வயதில் தண்ணியடிப்பவர்களில் இரண்டு பேராவது காதல் தோல்வியில் இருப்பார்கள். அவர்களின் ஃபீலிங்க்ஸ் கொடுமை சொல்லி மாளாது. நாத்தம் புடிச்ச குப்பைத்தொட்டிக்கு பக்கத்தில் அவளைப் பார்த்ததில் தொடங்கி, அவளது கூந்தல் மணம் வரை மணிக்கணிக்கில் சிலாகிப்பார்கள். தண்ணியடிக்காமல் ஸ்டெடியாக இருக்கும் என்னைப் போன்றவர்கள் தான் அவர்களின் டார்கெட். அந்தக் கதைக்கெல்லாம் பல சமயம் ரிப்பீட் ஆடியன்சாக இருந்த கொடுமையும் நேர்ந்ததுண்டு. இரண்டாம் முறை கேட்கும்போது அந்த கதை நமக்கு தெரியாதது போல் நடிக்க வேண்டும். இல்லையெனில் நாமும் அந்த ஜீலியட்டுக்கு நூல் விட்டதாக நினைத்துக் கொண்டு ரோமியோ நம் மீது பாய்ந்துவிடும் அபாயமுண்டு. கடைசியாக அவர் ஆஃபாயில் போடும் சமயம் வந்ததும் ”விடு மச்சி. உனக்குன்னு ஒருத்தி இனிமேலா பொறக்க போறா?” என்ற டயலாக்கோடு நகர்ந்து விட வேண்டும். இல்லையெனில் கறை நல்லது விளம்பரத்தில் நம் கதையும் வந்துவிடக்கூடும்.

      காதல் கதைகள் பெரும்பாலும் சுவாரஸ்யமாக இருந்துவிடுமென்பதால் தப்பித்து விடலாம். ஆனால் தப்பித் தவறி அரசியல் ஆர்வலரிடம் மாட்டிக் கொண்டால் செத்தோம். வட்ட செயலாளரின் தகிடுதத்தத்தில் ஆரம்பிக்கும் பேச்சு பில்கேட்ஸுக்கும் சிதம்பரத்திற்கும் இடையே நடந்த டீலிங் வரை செல்லும். மாட்டையும் மக்களையும் வைத்து கம்யூனிசத்திற்கும் ஃபாஸிஸத்திற்கும் இன்னும் பல இஸத்திற்கும் விளக்கம் சொல்ல ஆரம்பித்தால் நம் மூளையில் நெப்போலியன் நர்த்தனம் ஆடத் தொடங்குவார். “உன்கிட்ட ரெண்டு மாடு இருக்கு. ஒன்னை பக்கத்தில் இருக்கிறவன்கிட்ட கொடுத்தா அது சோஷலிசம். ரெண்டு மாடையும் அரசே எடுத்துக்கிட்டு உனக்கு பால மட்டும் ஃப்ரீயா கொடுத்தா அது கம்யூனிஸம். அந்த பாலுக்கு காசு கேட்டா அது ஃபாஸிஸம்.ஒரு மாட்ட வித்து ஒரு காளை மாட்ட நீ வாங்கினா அது கேப்பிட்டிலிஸம்” இப்படி போகும் இஸ ரயிலில்  இருந்து ரன்னிங்கில் இறங்கி வரத் தெரியாதவர்கள் இது போன்ற பார்ட்டிகளுக்கு போகாமல் இருப்பதே உசிதம்.

      ரன்னிங்கில் இறங்கி இந்தப் பக்கம் பார்த்தால் பாபா முத்திரையோடு நித்திரையில் ஆழ்ந்திருப்பார் ஆன்மிக குடிகாரர். தெரியாமல் அவரை எழுப்பிவிட்டால் அவ்வளவுதான். இதெல்லாம் சிற்றின்பம். பதரே பேரின்பம் அவனிடத்தில் உண்டு என மேலே கையை காட்டுவார்கள். ஆனால் அவர் கண்கள் கீழ் நோக்கி இருக்கும். நாம் மேலேதான் பார்க்க வேண்டும். கட்டாயம் ஒரு குரு-சீடன் கதை சொல்வார். நாமும் பயபக்தியுடம் கேட்டுக் கொள்ள வேண்டும். ஓஷோ தெரியுமா என்றால் ஆம் என்று சொல்லக்கூடாது. தவறி சொல்லிவிட்டால் நீ நினைக்கிற மாதிரியான ஆளில்ல அவரு என்று நம் மனதில் இருப்பதைப் புட்டு புட்டு வைப்பார். இன்பம்-துன்பம்,நல்லது-கெட்டது, ஆசை-ஏமாற்றம் என போகும் பிரசங்கத்தை லாவகமாக முடிக்க தெரிந்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த பிரபஞ்சம் போல அதுவும் முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கும்,

     குடிக்கும் வரை கோலாகலமாக செல்லும் வைபவம் திரும்பும் வழியில் சொதப்பும். அத்தனை பேரும் பிரச்சினை செய்ய மாட்டார்கள். ஆனால் நிச்சயம் ஒருவன் செய்துவிடுவான். அவனை பத்திரமாக ஹாஸ்டலில் சேர்க்க வேண்டிய தார்மீக கடமை ஓசியில் சைட் டிஷ் சாப்பிட்டவனுக்கே அதிகம். வரும் வழியில் தேமேவென மேமேன்னு கத்திக் கொண்டிருக்கும் ஆட்டிடம் சென்று பேசத் தொடங்குவார் அன்றைய மேன் ஆஃப் தி மேட்ச். ஆட்டை, ராஜ பாளையத்து நாய் என நினைத்து வீரமாக அதன் எதிரில் நின்று பழங்கதைகள் பேசுவார்.”அன்னைக்கு என்ன துரத்துன இல்ல. இப்ப என் மச்சான் கூட இருக்கான். தொரத்து பார்ப்போம்”என அருகிலிருக்கும் ஏதாவது ஒரு மச்சான் மீது கை போட்டுக் கொள்வார். அரைகுறை மப்பில் இருக்கும் மச்சானும் மாப்பிள்ளைக்காக அந்த ஆட்டை மிரட்டுவார். அது மிரண்டு ஓடும். விடாமல் துரத்தி மாப்பிள்ளையின் நன்மதிப்பை பெற்றிடுவார் மச்சான். மறுநாள் ஏண்டா ஆட்டை துரத்தினன்னு யாராவது கேட்டா, மச்சான் அந்த சமயத்துல மட்டன் கேட்டான். கடையெல்லாம் மூடிட்டாங்க. அதுக்காக மச்சான்கிட்ட இல்லைன்னு சொல்ல முடியுமா என்று தயார் செய்து வைத்திருக்கும் புனைவை பிரசுரிப்பார்கள். அவசரப்பட்டு சிரித்துவிட்டால் அடுத்த பார்ட்டியில் காராசேவு கிடைக்காதென்பதால் நானும் வாய் மூடி இருந்துவிடுவேன்.

    இவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு கால் கிலோ மிக்சருக்கும், வறுத்த கடலைக்கும் நான் பட்ட பாட்டைக் கண்டு எனக்கு வெறுப்பு வந்தது. என்னடா செய்யலாமென்று பல ஆங்கிளில் யோசித்து ஒரு நல்ல நாளில் ஒரு நல்ல முடிவு எடுத்தேன். எடுத்த முடிவின்படி கச்சிதமாக காரியத்தை முடித்த பின் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று இன்னொரு நண்பனையும் பார்ட்டிக்கு  அழைத்தேன். என்னடா விசேஷம் பார்ட்டியெல்லாம் தர்ற என்றான்.

”தெரியாதா மச்சி. போன வாரம் மொத மொதல்லா சரக்கடிச்சு பெரிய மனுஷன் ஆயிட்டண்டா”என்றேன்

31 கருத்துக்குத்து:

T.V.ராதாகிருஷ்ணன் on October 19, 2010 at 10:34 PM said...

:)))

பரிசல்காரன் on October 19, 2010 at 10:40 PM said...

வாழ்த்துகள் கார்க்கி.

சீக்கிரம் தேதியைச் சொல்லவும்..!

கலாநேசன் on October 19, 2010 at 10:41 PM said...

good to read, not to follow.

சைடிஸ் சாப்பிடுறதுல எனக்கு 10 வருட அனுபவம் இருக்குங்க.

vinu on October 19, 2010 at 10:48 PM said...

me 4thuuuuuuuuuuuuu

vinu on October 19, 2010 at 10:56 PM said...

“உன்கிட்ட ரெண்டு மாடு இருக்கு. ஒன்னை பக்கத்தில் இருக்கிறவன்கிட்ட கொடுத்தா அது சோஷலிசம். ரெண்டு மாடையும் அரசே எடுத்துக்கிட்டு உனக்கு பால மட்டும் ஃப்ரீயா கொடுத்தா அது கம்யூனிஸம். அந்த பாலுக்கு காசு கேட்டா அது ஃபாஸிஸம்.ஒரு மாட்ட வித்து ஒரு காளை மாட்ட நீ வாங்கினா அது கேப்பிட்டிலிஸம்"


"ரிப்பீட் ஆடியன்சாக "

" உலகம் சுத்துறுது நின்னுடாது.."

"கலக்கலா இருக்குமென்று பவர் சோப் போட்டு பிரயின் வாஷ் செய்தான். "


"இல்லையெனில் கறை நல்லது விளம்பரத்தில் நம் கதையும் வந்துவிடக்கூடும்."

innum unga trade mark "Eluvin sathanaigal" punches are quite good karki.......


aduththa, "thoziyin updates" eppoooo

[note: don't read the above line with out quatation mark]

முசமில் இத்ரூஸ் on October 19, 2010 at 11:01 PM said...

இது கார்காலம் அல்ல 'பார்'காலம் .

சுசி on October 19, 2010 at 11:02 PM said...

எப்போ??

முகிலன் on October 19, 2010 at 11:36 PM said...

மீள்ஸ் மீள்ஸ் செல்லாது செல்லாது 

தமிழ்ப்பறவை on October 20, 2010 at 12:05 AM said...

:-)

M.J. on October 20, 2010 at 12:35 AM said...

வாழ்த்துகள் தோழர் :)

ILA(@)இளா on October 20, 2010 at 1:59 AM said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன், நன்றி!

Karthik on October 20, 2010 at 7:17 AM said...

Haha amarkkalam attahasam. :-) :-)

மகேஷ் : ரசிகன் on October 20, 2010 at 7:35 AM said...

:)))))))))

மகேஷ் : ரசிகன் on October 20, 2010 at 7:38 AM said...

// ஏ.சி பாரில் அன்லிமிட்டெட் சைட் டிஷ் என்பதால் டின்னரையும் அங்கேயே முடித்து விடுவது என் வாடிக்கையாகிவிட்டது. எவ்வளவு சைட் டிஷ் வைத்தாலும் சில நிமிடங்களில் அரைத்து தள்ளியதால் கிரைண்டர் கார்க்கி என்ற பட்டப்பெயரும் கிடைத்தது //

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு,

என்.ஆர்.சிபி on October 20, 2010 at 7:58 AM said...

வாழ்த்துகள்!

siva on October 20, 2010 at 7:58 AM said...

:)

இரா.சிவக்குமரன் on October 20, 2010 at 8:32 AM said...

ஹெர்பாலயாஸ் ராடி சேஃப் நிறுவனத்தின் திண்டிவனம்- விநியோகஸ்தருக்கு விற்பனை/சந்தைப் படுத்துதல் துறையில் ஆட்கள் தேவை.

http://www.herbalayasradisafe.com/


தகுதி:

ஏதேனும் ஒரு பட்ட படிப்பு.
இரு சக்கர வாகனம்(செல்லத்தக்க ஓட்டுனர் உரிமத்துடன்).
மொபைல் அல்லது கணிணி உதிரிப் பொருள்கள் சார்ந்த விற்பனை முன் அனுபவம்.

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சேர்ந்திருத்தல் நலம்.

கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை.

விற்பனைத் துறையில் விருப்பமுள்ள பெண்களுக்கு முன்னுரிமை.


சம்பளம் தகுதியைப் பொறுத்து.(குறைந்தது ஐந்தாயிரத்திலிருந்து...... )


விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 31க்குள் தங்களது முழுவிவரக்குறிப்பினை shivanss@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

மெயில் அனுப்பும் போது subject:ல் Resume-Radisafe என்று மறக்காமல் குறிப்பிடவும்.

பொன்கார்த்திக் on October 20, 2010 at 10:41 AM said...

யோவ் சகா மீள் பதிவா?

முரளிகண்ணன் on October 20, 2010 at 10:50 AM said...

ஏற்கனவே படிச்ச மாதிரியும் இருக்கு, படிக்காத மாதிர்யும் இருக்கு.

ஆனா இப்போ படிக்க நல்லாயிருக்கு

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on October 20, 2010 at 11:44 AM said...

உலகம் சுத்துறுது நின்னுடாது..போய் ஜோலியப் ’பாரு’

திரும்பவும் பாரா யோவ் அடங்கவேமாட்டியாப்பா? :))

ஆதிமூலகிருஷ்ணன் on October 20, 2010 at 11:53 AM said...

பிஸியாக இருப்பதைப்பார்த்தால் எலி பொறியில் சிக்கப்போவதைப் போல தெரிகிறதே.. வாழ்த்துகள் கார்க்கி.

ஜானி வாக்கர் on October 20, 2010 at 11:56 AM said...

//
இப்படி போகும் இஸ ரயிலில் இருந்து ரன்னிங்கில் இறங்கி வரத் தெரியாதவர்கள் இது போன்ற பார்ட்டிகளுக்கு போகாமல் இருப்பதே உசிதம். //

ஹா ஹா

புட்டி கதைகள் வேறு ரூபத்திலா??

சிவா on October 20, 2010 at 12:05 PM said...

நான் மட்டும்தான் வருஷக்கணக்கா சைட் டிஷ் சாப்பிடுரேன்னு பீல் பண்ணேன்! கம்பனி நெறைய இருக்காங்க போல!

மணியன் on October 20, 2010 at 1:14 PM said...

கார்க்கி ...

இது மீள் பதிவு தானே..

உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்கிறேன்.

அன்புடன்
மணியன்

நர்சிம் on October 20, 2010 at 1:57 PM said...

ரைட்ட்டு சகா.

அமுதா கிருஷ்ணா on October 20, 2010 at 5:51 PM said...

ராவா அடிச்சா பெரிய மனுஷனா இல்லை தண்ணீ மிக்ஸ் பண்ணி அடிச்சா பெரிய மனுஷனா? சும்மா ஜெனரல நாலெட்ஜ் கொஸ்டின்..

அமுதா கிருஷ்ணா on October 20, 2010 at 5:51 PM said...

ராவா அடிச்சா பெரிய மனுஷனா இல்லை தண்ணீ மிக்ஸ் பண்ணி அடிச்சா பெரிய மனுஷனா? சும்மா ஜெனரல நாலெட்ஜ் கொஸ்டின்..

மறத்தமிழன் on October 21, 2010 at 4:40 PM said...

கார்க்கி,

நீங்க பெரிய மனுசனாயிட்டீங்க‌...நான்லாம் இன்னும் ஆகல...சைடு டிஷ் மட்டும் தான்.

பொறியில் சிக்கபோவதற்கு...அட்வான்ஸ் வாழ்த்துகள்:)

விக்னேஷ்வரி on October 21, 2010 at 5:14 PM said...

மீள்ஸ்ன்னாலும் சூப்பர். இப்போ இந்த மாதிரி மொக்கைல்லாம் ஏங்க எழுதறதில்ல? லேஸி பாய்.

சர்பத் on October 21, 2010 at 9:52 PM said...

ஒரு குவாட்டர் சொல்லு மச்சி

கார்க்கி on October 21, 2010 at 10:28 PM said...

அனைவருக்கும் நன்றி

சர்பத், ஹிஹிஹிஹி..

 

all rights reserved to www.karkibava.com