Oct 15, 2010

பிளாகர் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்


 

சில மாதங்கள் முன்பு நடந்த காமெடி இது.பப்லுவின் தமிழாசிரியை குடியரசு தின விழாவைப் பற்றி ஐந்து வரிகள் எழுதி வர சொல்லியிருந்தார்கள் .  பிளாகுல எல்லாம் எழுதறியே. அதான் மிஸ்கிட்ட எங்க மாமா நல்லா எழுதுவாருன்னு சொன்னேன். எழுதிக் கொடு என்றான் நானும் வெகு ஜோராக ஆரம்பித்தேன் ”இந்தியா 1950 ,ஜனவரி 26ஆம் தேதி குடியரசானது” அப்புறம்? எவ்ளோ யோசிச்சும் அடுத்த வரி வரவில்லை. என்னடா என்பது போல் பார்த்தான் பப்லு.  இருடா செல்லம் என  அலைபேசி சித்தருக்கு அலைபேசினேன். அந்த உரையாடல்

ஹலோ

சொல்லு சகா. பிரச்சினை முடிஞ்சுதா?

இருங்க. இது வேற மேட்டர் (மேட்டர் விளக்கப்படுகிறது)

இவ்ளோதானா? எழுதிக்கோ சகா “இன்றோடு இந்தியா குடியரசாகி 60 ஆண்டுகள் ஆகின்றன”. ………….

அப்புறம் சகா…

அப்புறம் என்ன சகா? வீட்டுல எல்லாம் செளக்கியமா?

யோவ். குடியரசு தினம் பற்றி…

இரு சகா. என் நண்பர் ஒருத்தர்.. நல்லா சொல்லுவார் (கான்ஃப்ரன்ஸ் போடுகிறார்)

ஹலோ செளந்தர். நான் $%^& பேசறேன். குடியரசு தினத்தைப் பத்தி ஒரு அஞ்சு லைன் வேணும். கார்க்கி தெரியும்ல? லைன்லதான் இருக்காரு

அப்படியா? நல்லா இருக்கிங்களா சகா?

ஆங். இருக்கேன். சொல்ல்லுங்க எழுதிக்கிறேன்

இப்பவேவா? நாளைக்கு சொல்லவா?

டொக்.

நான் என்ன ஆனந்த விகடனில் போடவா கேட்டேன்? மீண்டும் நானும் அலைபேசி சித்தரும் தொடர்ந்தோம். இரு சகா கூகிளில் தேடலாமென்றார். சரியென்றேன்

குடியரசு தினத்தைப் பற்றி…(கூகிளாண்டவர் கருணை காட்டுகிறார்)

சகா சொல்றேன் எழுதிக்கோ

இருங்க. பேனா எடுக்கிறேன்.ம்ம்

“தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப காந்திஜி முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அன்றைய தினம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர். அந்த நாள் தான் பிறகு குடியரசு தினமாக கொண்டாடப்பட்டது”  இந்த மேட்டர் சேர்த்து அஞ்சு வரி எழுதலாமே சகா.

(எழுதும்போதே பப்லுவின் பால் கலர், சிவப்பாக மாறியதை நான் கவனிக்கவில்லை )

ஆமாம். போதும். ரொம்ப டேங்க்ஸூங்க

அட இதுல என்ன. சரி. நாளைக்கு என்ன போஸ்ட்.

இனிமேல்தான் யோசிக்கனும்.

டொக்.

வைத்த பின் தான் படித்துப் பார்த்தேன், பிரக்ஞை என்பது போன்ற வார்த்தைகள் குறித்த பிரக்ஞை எனக்கே இல்லாத பப்லு என்ன செய்வான்? அந்த பேப்பரைக் காட்டு என்றான். இல்லடா நான் வேற எழுதறேன்னு அடுத்த கால் போட்டேன் சிரிப்பு பதிவருக்கு. அவர் பி.ஏ ஹிஸ்டரி.

சொல்லு தோஸ்த்

(மேட்டர் இவருக்கும் விளக்கப்படுகிறது)

இதெல்லாம் என்னை கேட்கனும். %^&* க்கு என்ன தெரியும்? நான் ஹிஸ்டரி ஸ்டூடண்ட் தெரியுமில்ல?

நீ ஸ்டூண்டட்டா இருந்த ஹிஸ்டரி எனக்குத் தெரியும். ஆனா.

டேய். பப்லுக்காக சொல்றேன்.1947ல சுதந்திரம் வாங்கினோமா?அப்புறமா அம்பேத்கர் தலைமையில் அரசியல் சட்டம் இயற்ற ஒரு குழு அமைச்சாங்க. அந்த குழு இப்ப இருக்கிற குழு மாதிரி பஜ்ஜி போண்டா சாப்பிடமா ரெண்டு வருஷத்தில ரெடி பண்ணிட்டாங்க. அந்த நாள் தான் குடியசுதினம்.

இதுவா பப்லுவுக்கு சொன்னது? எப்படி தோஸ்த் அஞ்சு வரில?

அது உன் வேலை. எனக்கு வேற வேலை இருக்கு

டொக்.

மீண்டும் பப்லு. மீண்டும் சிவப்பு. மீண்டும் ஃபோன் எடுக்க போனவனைத் தடுத்தான். நீ ஆணியே புடுங்க வேணாம், நான் பார்த்துக்கிறேன். நீ போய் பிளாகுல மொக்கைப் போடு என்றான். என் பின்னால் சுற்றி வந்த ஒளிவட்டம் மெல்ல மறைந்து கொண்டிருந்தது.

அது சரி. நம்ம வேலை அதானே என்று இதோ இந்த மொக்கையை எழுதுகிறேன். யோசிச்சுப் பாருங்க. எதையும் ரெஃபர் செய்யாம குடியரசு தினத்தைப் பற்றி அஞ்சு வரி எழுத முடிகிறதா? முடிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க.

19 கருத்துக்குத்து:

தினேஷ் on October 15, 2010 at 10:09 AM said...

:)

எறும்பு on October 15, 2010 at 10:13 AM said...

Meel??? padicha maarthiri irukku..

Karthik on October 15, 2010 at 10:30 AM said...

Solely for the blockbuster title.. :D :D

Ŝ₤Ω..™ on October 15, 2010 at 10:31 AM said...

சகா.. நாமெல்லாம் இத தெரிஞ்சிட்டு என்னா செய்யப்போறோம்??? அதுக்கெல்லாம் ஏன் வெட்கப்பட போறோம்??

ஆனா, என்னன்னு தெரியாட்டியும் அதைப்பத்தி எழுதத்தெரியனுமே.. அப்படியில்லாட்டி நாம என்ன ப்ளாக்கர்?? மிகச்சரி சகா..

முகிலன் on October 15, 2010 at 10:42 AM said...

மீ.ப. தொப்பி தொப்பி

முகிலன் on October 15, 2010 at 10:42 AM said...

http://www.karkibava.com/2010/01/blog-post_21.html

vinu on October 15, 2010 at 10:58 AM said...

me back to seventh again

சுசி on October 15, 2010 at 11:01 AM said...

உங்களுக்கு ஆதியோட காமரா முன்னாடி தானே வெக்கம் வரும்??

தராசு on October 15, 2010 at 11:10 AM said...

நீ ஆணியே புடுங்க வேண்டாம்,,,

வொய் மீள் பதிவு, டூ மச் ஆணி???????

vinu on October 15, 2010 at 11:16 AM said...

எதையும் ரெஃபர் செய்யாம குடியரசு தினத்தைப் பற்றி அஞ்சு வரி எழுத முடிகிறதா?

என்ன சகா இப்புடி பொசுக்குன்னு சொல்லிடீங்க நாகெல்லாம் சரத்குமாருக்கு ஸ்டாம்ப் ஸ்டோரி சொன்னவங்க க்ரூப்பு தெரியுமில்லே

1947 -ல சுதந்திரம் வாங்கினதும் அதுவரை முடியாட்சியாய் இருந்த நம்ம நாடு குடியரசா ஆக சில சட்ட திட்டங்கள மாத்தவேண்டி இருந்தது. அப்போ திரு.அம்பேத்கர் தலைமையில் அரசியல் சட்டம் இயற்ற ஒரு குழு அமைச்சாங்க. அந்த குழுவோட பரிந்துரையோட நம்ம நாட்டை குடியரசா அறிவிக்க முடிவு பன்னுனப்போ முன்னமே காந்தி அவர்களின் அறிவுரையால் சுதந்திரதினமாக கொண்டாடப்பட்ட 26 -ஜனவரியையே அதற்க்கு பயன்படுத்திடாங்க.இன்றைக்கு நாம நமது 60-வது குடியரசு ஆண்டில் உள்ளோம். இன்னைக்கு உலகத்திலேயே மிகபெரிய குடியரசு நாடு நமது பாரத தேசம்தான்.

கரெக்டா 5 வாக்கியம் வந்துடுச்சா

Kaarthik on October 15, 2010 at 11:23 AM said...

"குடியரசு" அப்படீன்னு படம் வந்திருந்தா அதோட விமர்சனத்தை 50வரில எழுத முடியும். நல்லவேளை பப்லு சுதந்திரம் பத்தி கேக்கலை. இல்லன்னா அர்ஜுன் நடிச்ச மொக்கை படத்தப் பத்தி அதவிட மொக்கையாய் எழுதி இருந்திருப்பீங்க ;-)

முரளிகண்ணன் on October 15, 2010 at 12:47 PM said...

சகா, காவலன் வியாபாரம் தூள் கிளப்புதாமே? இன்னும் பதிவக் காணோமே?

பொன்கார்த்திக் on October 15, 2010 at 3:18 PM said...

yov poya meel pathivu...:)
summa :)

V.Radhakrishnan on October 15, 2010 at 3:46 PM said...

ஹா ஹா! கூகிளுல தேடினா கிடைச்சிட்டு போகுது. ;)

மகேஷ் : ரசிகன் on October 15, 2010 at 11:39 PM said...

அப்புறம் சகா... எப்படி இருக்காங்க ?

தெய்வசுகந்தி on October 17, 2010 at 1:30 AM said...

:-)!

வழிப்போக்கன் - யோகேஷ் on October 17, 2010 at 5:24 AM said...

பப்லு புண்ணியத்துல ஒரு பதிவு உசார் பண்ணிட்டீங்க.........

DHANS on October 17, 2010 at 10:46 PM said...

i too had the same feel when i asked to write about Indian independence

Sen22 on October 18, 2010 at 10:35 AM said...

:)))))))

 

all rights reserved to www.karkibava.com