Oct 13, 2010

ராஜாங்கமே..ஆனந்தமே


 

இளையராஜா சொன்னது இது.  “கடவுளைப் பற்றி நாம் பாடியா அவன் புகழ் ஓங்க போகிறது?. இறைவன் அதையெல்லாம் தாண்டியவன். இறைவனை புகழ்ந்து நான் பாடுவது என் ஆத்ம திருப்திக்காக”. அதையேதான் நானும் சொல்கிறேன். நானெல்லாம் ராஜாவின் இசையைப் பற்றி எழுதி என்னவாக போகிறது? இது என் திருப்திக்காக.

ஒவ்வொரு இசை ரசிகனுக்கும் நிச்சயம் ராஜாவின் பாடல்களில் சிறந்தது என்றே 20 பாடலாவது இருக்கும். எனது வரிசையில் முக்கியமான பாடல் கேளடி கண்மணி திரைப்படத்தில் இடம்பெற்ற “கற்பூர பொம்மை ஒன்று”.  காலையில் கேட்க காவியம் பாடவா தென்றலே, இரவில் கேட்க நிலாவே வா என ரகம் பிரிப்பதுண்டு. எந்த நேரத்திலும் கேட்கலாம் என்று நினைக்க வைக்கும் பாடல்களில் பிரதானமானது இந்தப் பாடல். “ம்ம்ம்ம்ம்” என்று தொடங்கும் சுசீலாவின் குரல் புற உலகின் அழுத்தங்களை மறந்து இப்பாடலில் முழுமையாக லயிக்க நம்மை தயார் செய்து விடுகிறது.

கற்பூர பொம்மை ஒன்று..கை வீசும் தென்றல் ஒன்று

தூறலாய் தொடங்கும் மழை மெல்ல அதிகரிப்பது போல் ஆரம்பமாகிறது பாடல். இசையோடு இரண்டற கலந்து விடுகிறது வரிகளும், சுசிலாவின் குரலும். பல்லவியின் முடிவில் ஆரம்பமாகிறது குழலின் ஓசை. குழல் முடியும் இடத்தில் அதிர்கிறது வயலின்களின் தந்திகள். இசைக்கருவிகளோடு ராஜா நடத்தும் ராஜாங்கத்தின் முடிவில் பாடகியின் கையில் தரப்படுகிறது இசை ஜோதி. லாவகமாய் ஏந்தி நடை போடுகிறார்.

பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்

சரணத்தின் முடிவில் ஒரு வரி பல்லவி மட்டும் வருகிறது. அடுத்து ராஜாவின் அதகளம். இந்த முறை வயலினுக்கு முன்னுரிமை. வயலினின் முடிவில் குழல். கடைசியில் வயலினும், குழலும் இணைந்து மனதை பிசைந்துவிட்டு ஓய்கின்றன. பாடல் முடிவை நோக்கி நகரும் வேளையில் அணிச்சையாக கண்களின் ஓரம் கண்ணீர் வரத்தான் செய்கிறது. எந்த இடத்தில் மனம் கனக்கிறது. எந்த வரியில் அணை உடைகிறது என்று கண்டுபிடிக்கவே முடிவதில்லை.  எத்தனை முறை கேட்டாலும் கண்ணீரின் வரத்து மட்டும் நிற்பதே இல்லை.

நான் ஒரு தாயும் இல்லை. எனக்கு மகளும் இல்லை. என்னை ஏன் இந்தப் பாடல் இப்படி வதைக்க வேண்டும்? சில நேரம் பெருமைப்படுத்த வேண்டும்? சில நேரம் அழ வைக்க வேண்டும்? கடவுளின் இருப்பைப் போல இந்த பாடலின் உணர்வுகளும் எனக்கு என்னை மீறிய ஒரு சக்தியாகத்தான் தெரிகிறது. இந்தப் பாடலை சமீபகாலமாக நான் அடிக்கடி கேட்பதற்கு காரணமாக நான் ஒருவரை நினைக்கிறேன். எந்த வகையில் அவர் காரணம் என என்னை நானே பல தடவை கேட்டதுண்டு. கடவுளைப் போல, இந்தப் பாடலைப் போல அதுவும் மர்மமாகவேத்தான் இருக்கிறது.

படம் : கேளடி கண்மனி
பாடியவர் : பி.சுசீலா
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : மு.மேத்தா


கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....


பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....

தாய் அன்பிற்கே ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

30 கருத்துக்குத்து:

Karthik on October 13, 2010 at 12:25 AM said...

THIS is what we expect from you little more often. Beautiful. :-)

king on October 13, 2010 at 12:26 AM said...

True Isaikku Karki Inaiya Rajannu Prove Panniteenga

தமிழ்ப்பறவை on October 13, 2010 at 12:27 AM said...

நெகிழ வைக்கும் பாடல்.
//நானெல்லாம் ராஜாவின் இசையைப் பற்றி எழுதி என்னவாக போகிறது? இது என் திருப்திக்காக.//
அதுதான்.. அதேதான்.
ரசித்த பதிவு,,,,வேறென்ன சொல்ல...

♠ ராஜு ♠ on October 13, 2010 at 12:31 AM said...

முதல் சம்பளத்தில், முதல் மொபைல் வாங்கி முதன் முதலில் ஏற்றிய பாடல் இது!
:-)

இனியா on October 13, 2010 at 12:33 AM said...

raaja... raajaathaan...

ப்ரியமுடன் வசந்த் on October 13, 2010 at 12:36 AM said...

awesome review man..!

ILA(@)இளா on October 13, 2010 at 12:49 AM said...

ஐயோ நீங்களுமா?

சுசி on October 13, 2010 at 1:07 AM said...

கலக்கலா இருக்கு கார்க்கி.

Balaji saravana on October 13, 2010 at 6:43 AM said...

//THIS is what we expect from you little more often. Beautiful. :-) //
ரிப்பீட்டு..

//இது என் திருப்திக்காக.//
எங்கள் நினைவை மீட்டெடுப்பதற்காக... நன்றி சகா!

Gopi Ramamoorthy on October 13, 2010 at 6:51 AM said...

பாட்டு எழுதின மேத்தா பத்தி ஒண்ணுமே சொல்லலியே? மேத்தாவின் மனைவி கூட இது பற்றிக் குமுதத்தில் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். கற்பூர பொம்மை பாடலுக்கப்புரம் மேத்தா எழுதின எதுவுமே அது அளவுக்கு வரலைன்னு.

denim on October 13, 2010 at 7:48 AM said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

http://denimmohan.blogspot.com/

தாரணி பிரியா on October 13, 2010 at 8:06 AM said...

காணாம போய் இருந்த கார்க்கி திரும்ப வந்தாச்சுப்பா :)

Muthukumar on October 13, 2010 at 8:08 AM said...

எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

taaru on October 13, 2010 at 9:44 AM said...

//"ராஜாங்கமே..ஆனந்தமே ..//
சகா ராஜா சார் இசை,பலப்பல அதிசயங்கள் புரிந்தவை [சூரியனுக்கு டார்ச் லைட்]... ஆகா... அருமை சகா... இதோ உங்களையும் எங்களுக்கு மீட்டு கொடுத்து இருக்கிறது... சச்சின் போல இன்னும் நிலைத்து ஆட வாழ்த்துக்கள்....

// நான் ஒருவரை நினைக்கிறேன்.//
யாரு சகா அது? இங்கனக்குள்ள வேணாம்னா, mail அனுப்புங்க... :)

Ponkarthik on October 13, 2010 at 10:51 AM said...

Ever green song sagaa :)

ஸ்ரீமதி on October 13, 2010 at 10:55 AM said...

எப்பவும் இப்பவும் பிடித்த பாடல்.. :)

கோபிநாத் on October 13, 2010 at 11:55 AM said...

ஒன்னும் சொல்லிக்க முடியாத நிலையில் கொண்டு வந்துடும் இந்த பாட்டை கேட்ட...கூட நீங்க வேற எழுதிட்டிங்க...ரசித்தேன்ய்யா..;)

இந்த படம் இயக்குனர் வசந்த் அவர்களுக்கு முதல்படம்.

நர்சிம் on October 13, 2010 at 12:09 PM said...

//காணாம போய் இருந்த கார்க்கி திரும்ப வந்தாச்சுப்பா :)//

seconding.

ரமேஷ் வைத்யா on October 13, 2010 at 1:55 PM said...

டேய்.. நாயே பன்னி கருணாநிதி ஜெயலலிதா ராமதாஸு ( எல்லாமே செல்லம் கொஞ்சுறது)
லாங்குவேஜ் பிக்கிறியேடா... பிரமாதம் ( வேற என்ன வார்த்தை இருக்கு?)

Denzil on October 13, 2010 at 2:08 PM said...

இசைக்கு மொழி இல்லைன்னு யாரு சொன்னது? உணர்வுகளை அழகா மொழிபெயர்த்திருக்கீங்க.

விருப்பு வெறுப்புகளில் உறுதியா இருக்கீங்க பாருங்க, எழுத்துக்கள்ல உண்மை தெரியுது. அடிச்சு ஆடுங்க.

லேகா on October 13, 2010 at 3:06 PM said...

நல்ல பதிவு கார்க்கி.இந்த பாடல் பிடிக்காதவங்க யாரும் இருக்க மாட்டாங்க.ராஜாவை அதிகமாய் பிடித்து போகும் தருணங்களில் இதுவும் ஒன்று....

Ajitha on October 13, 2010 at 5:05 PM said...

Hii

This song si very close to my heart!!! COOL!!!

Ajitha on October 13, 2010 at 5:05 PM said...

This song is very close to my heart and ur review is gr8!!!

விக்னேஷ்வரி on October 13, 2010 at 5:32 PM said...

ஆமா, நல்ல பாடல். நீங்க இசை விமர்சனங்கள் அதிகம் எழுதுங்க கார்க்கி.

கயல் on October 13, 2010 at 9:51 PM said...

//
நான் ஒரு தாயும் இல்லை. எனக்கு மகளும் இல்லை. என்னை ஏன் இந்தப் பாடல் இப்படி வதைக்க வேண்டும்? சில நேரம் பெருமைப்படுத்த வேண்டும்? சில நேரம் அழ வைக்க வேண்டும்? கடவுளின் இருப்பைப் போல இந்த பாடலின் உணர்வுகளும் எனக்கு என்னை மீறிய ஒரு சக்தியாகத்தான் தெரிகிறது.
//
ஆழமான வார்த்தைகள்.மிகவும் ரசித்தேன் கார்க்கி.

//
இந்தப் பாடலை சமீபகாலமாக நான் அடிக்கடி கேட்பதற்கு காரணமாக நான் ஒருவரை நினைக்கிறேன். எந்த வகையில் அவர் காரணம் என என்னை நானே பல தடவை கேட்டதுண்டு. கடவுளைப் போல, இந்தப் பாடலைப் போல அதுவும் மர்மமாகவேத்தான் இருக்கிறது.
//
திடீர்ன்னு இப்படி ஒரு விமர்சனம்!!??? அந்த தோழி தான் காரணமா?

எனக்கும் மிகவும் பிடிச்ச பாட்டு கார்க்கி. வாழ்த்துக்கள்.

RaGhaV on October 14, 2010 at 8:59 AM said...

Nice one karki.. :-))

Sen22 on October 14, 2010 at 9:57 AM said...

நல்ல பாடல் கார்க்கி..
நல்ல விமர்சனம்..

Keep Rocking...!!!!!!!

"ராஜா" on October 14, 2010 at 7:56 PM said...

சகா விமர்ச்சனம் நச் ...

vinu on October 15, 2010 at 12:28 AM said...

thangaL varugaikku nandri sagaaa

கார்க்கி on October 15, 2010 at 10:04 AM said...

அனைவருக்கும் நன்றி..

கொஞ்சம் பிசி என்பதால் தனித்தனியா பதிலிட முடியவில்லை

 

all rights reserved to www.karkibava.com