Oct 11, 2010

மொக்கைவர்மன்


 

  மொக்கைவர்மன் என்று ஒரு தொடர் ஆரம்பித்தேன். ஏனோ பாதியில் நின்றுவிட்டது. தொடரலாம் என்று படித்து பார்த்தபோது இந்த முதல் அத்தியாயம் மட்டுமே சுமாராக இருந்ததாக தோன்றியது. மீண்டும் உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்

____________________________________________________________________________

 

ஆந்தைகள் அலறும் நேரம்தான். ஆனால் பல்லவ அரசின் சமஸ்தான எல்லைக்குள் இருக்கும் ஆந்தைகள் மட்டும் தூங்கிக் கொண்டிருக்கும். இருப்பினும் அவை எழுப்பும் குறட்டை சத்தம் அலறுவதை விட கர்ணக்கொடூரமாக இருக்குமென்பதால் அந்த ஒலியின் மூலம் நாம் நள்ளிரவு என்பதை அறியலாம். இருபத்து ஏழரையாம் நக்கல் வர்ம மகாராஜா வாயிலில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். 28ஆம் நக்கல் வர்மனாகத்தான் இவர் பெயர் இருந்திருக்க வேண்டும். ஆனால் இவரது அண்ணன் 27ஆம் நையாண்டி வர்மன் சிறிது காலம் அரசாண்டு விட்டு ஒரு போருக்கு பயந்து ஓடியதால் இவர் பதவியேற்றார். பாதியில் பதவியேற்றதால் இருபத்து ஏழரையாம் நக்கல் வர்ம மகாராஜா ஆகிவிட்டார். வாயிலுக்கு வருவோம். அது அலர்ஜி என்பவர்கள் காட்டனுக்கோ, சில்க்குக்கோ வரலாம்.ஆனால் நான் வாயிலுக்குத்தான் செல்கிறேன்.

மன்னரின் முகத்தில் கவலை ரேகைகள் தெரிந்தன. பல்லவ சமஸ்தானத்தை அவ்வபோது எதிரிகள் சூழ்ந்து கொண்டு போருக்கு அழைக்கும்போது கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிடுவது மன்னரின் வழக்கம்.அப்படியாகத்தான் மன்னரின் முகத்திலும் ரேகைகள் வந்திருக்ககூடுமென சீனாவில் இருந்து வந்த ஷியோமியோகியோ என்ற பிரயாணி தனது குறிப்பில் சொல்லியிருக்கிறார். வரலாறு என்பதால் தேவைப்படும் இடங்களில் ஆதாரத்தையும் காட்ட வேண்டியிருக்கிறது. ஆனால் இப்படி குறிப்பிடும் ஆதாரத்தை நம்பாமல் அந்த ஆதாரத்திற்கு ஆதாரத்தை நீங்கள் கேட்கக்கூடும்.அப்படி கேட்பவர்களுக்கு ஆவென அலறும்படி தாரம் அமையுமென சாபம் விடுகிறேன். விஷயத்திற்கு வருவோம். 72வது வயதில் மகாராணி(அவருக்கு 54 வயது) கர்ப்பமுற்றால் எந்த மன்னருக்குத்தான் பயம் தோன்றாது? இருந்தாலும் நாற்பத்தியெட்டு ஏக்கருக்கு பரந்த விரிந்த சம்ஸ்தானத்தை ஆள ஒரு ஆள் தேவையென்பதால் மன்னர் அதை லூஸில் விட்டுவிட்டார். பிறக்க போவதே ஒரு லூஸ் என்பது முன்னரே மன்னருக்கு தெரிந்ததா என்பது தெரியவில்லை.  ஆனால் புதிதாக பணியில் சேர்ந்த ஜோசிய அப்ரண்ட்டிஸின் மூளையின் ஒரு மூலையில் மும்தாஜ் மூடிக் கொண்டு ஆடியது.

மாமன்னா! பிறக்கப் போகும் குழந்தை தங்களைப் போல் இல்லாமல் அரசியைப் போல் இருந்துவிட்டால் என்ன செய்வது என்று சமயோஜித புத்தியே இல்லாமல் கேட்டு வைத்தார் அப்ரண்ட்டீஸ்.

ஹாஹாஹாவென சிரித்த மன்னரின் மகா சிரிப்பில் அரண்மனை ஆந்தைகளே சற்று பயந்துதான் போனது. எழுபத்தி இரண்டு வயதில் கூட இப்படி சிரிக்கும் மன்னன் இன்னும் பத்து வருடம் கழித்தும் இளவரசனோ இளவரசியோ பெற்றெடுக்கக்கூடுமென நினைத்தார் அப்ரண்ட்டீஸ். மன்னரை விட மகாராணி வீரமானவர். இது தெரியாமல் கேட்டு வைத்தார் அப்ரண்ட்டீஸ்.

மன்னர் மகாராணியை மணந்த கதை சுவையானது. ஏற்கனவே சொன்னது போல் சரித்திரத் தொடரில் இது ஒரு இம்சை.(உன் தொடரே இம்சை என்பவர்களுக்கு வைத்துக் கொள்கிறேன் கச்சேரியை). எல்லாவாற்றிற்கும் டொய்ங்க் என சுத்தி ஒரு ஒளிப்பின்னாடியையோ(அதாங்க ஃப்ளாஷ்பேக்) அல்லது ஆதாரத்தையோ காட்ட வேண்டும். இப்போது டொய்ங்ங்.

   பல்லவ எல்லை மட்டுமல்ல, எட்டுத்திக்கும் இருந்து வந்த பல வீரர்களால் அடக்க முடியாத காளை ஒன்று மகாராணியாரின் தந்தையிடம் இருந்தது. அதை அடக்கித்தான் மகாராணியாரை மணந்தார் மன்னன். அந்தக் காளையை அடக்கும் வீரனால் தான் இந்த அடங்காப் பிடறியை அடக்க முடியும் என்று அவர் தந்தை நினைத்தது மன்னருக்குத் தெரியாமல் போனது அவரது துரதிர்ஷடவசம்தான். அதனால் பிறக்கப் போகும் குழந்தை அவரைப் போல் இருக்கக்கூடாது என்பதற்காக அதற்கு தேவையான பூஜைகளை உடனே அப்ரண்டீசை செய்ய சொன்னார் மன்னர். கடந்த காலம் முடிந்து நிகழ்காலம் வந்த போது டொய்ங்க் என சக்கரத்தை ரிவர்ஸில் சுற்ற மறந்துவிட்டேன். இது போன்ற லாஜிக்கெல்லாம் விஜய் படம் பார்க்கும் ரசிகர்கள் போல மறந்துவிடுவது நலம். அதைவிட்டு ஈரானிய படத்தில் என்று துவங்கும் வாசகர்கள் மதனின் வந்தார்கள் வென்றார்களை படிக்கலாம். அல்லது படிக்காமலே ஒரு விமர்சனம் எழுதலாம். விஜய் பட ரசிகர்கள் என் கைகளை பிடித்துக் கொள்ளுங்கள். நாம் இப்போது அரசி வலியால் துடித்துக் கொண்டிருக்கும் அறைக்குள் நுழையப் போகிறோம்.

உள்ளே வலியால் துடித்துக் கொண்டிருந்தார் அரசி. அந்த சத்தம் கேட்டு உள்ளே வந்த மன்னன் வைத்தியம் பார்க்கும் பாட்டியிடம் விசாரித்தார். இரட்டைப் பிள்ளை போல் தெரிகிறது. இந்த வயதிலும் எப்படி அரசே என்று கேட்டார் பாட்டி. வழக்கம் போல் மன்னர் சிரித்துவிட்டு பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்றார். மன்னரின் சிரிப்புக் கேட்ட உள்ளே ஓடிவந்த தலைமை மந்திரி நிலவரம் புரியாமல் வழக்கம் போல் ”அவர் எனர்ஜி மன்னா” என்று சொன்னார்

இதைக்  கேட்டு உள்ளே இருந்த அனைத்து வைத்தியரும் தாதியரும் சிரித்த சிரிப்பு விண்ணையே பிளந்திருக்க வேண்டும். மேற்புறம் கூரை இருந்ததால் அப்படியெதுவும் ஆகவில்லை. மந்திரி சொன்னதிலும் ஒரு உண்மை இருக்கிறது என வலி மறந்து சிரித்த அரசியும் சிறிது நேரத்தில் அலற, அறையில் இருந்த அனைவரும் மெளனமானார்கள். ஆனால் ஒரே ஒரு சிரிப்பு சத்தம் மட்டும் ஒலித்துக் கொண்டேயிருந்தது. அப்போதுதான் அரசிக்கும் பிரசவம் ஆனது. குழந்தை அழுது கொண்டே பிறக்கும் என்பார்கள். ஆனால் இந்தக் குழந்தை  சிரித்துக் கொண்டேயிருந்தது. ரோஜாப்பூ நீரில் குளித்து முடித்த இளவரசர் மன்னரின் கைக்கு வந்தார். பிறக்கும் போதே சிரித்த உனக்கு மொக்கை வர்மன் என்ற பெயரே பொருத்தமானது. இது போன்று யாரும் இதுவரை பிறக்காததால் ”முதலாம் மொக்கை வர்ம பல்லவன்” என அழைக்கப்படுவாய் என்றார் மன்னர். குழந்தையை மேலே தூக்கிப் போட்டு விளையாடிய மன்னர் கூடவே தனது ட்ரேட்மார்க் சிரிப்பையும் உதிர்க்க, டென்ஷனான இளவரசர் மன்னரின் முகத்தில் நீர்ப்பாசனம் செய்தார். இனிப்புக்கு பதில் தவறுதலாக உப்புப் போட்டு அரசி போடும் கொட்டைவடிநீர் என நினைத்து சப்புக் கொட்டிய மன்னனின் முகத்தில் காலால் ஒரு டிஷ்யும் விட்ட நம் கதாவேந்தர்  தனக்கு பெரிய தலைவலியாக வருவார் என்பதை மன்னர் அப்போது அறியவில்லை.

14 கருத்துக்குத்து:

ஸ்ரீதர் நாராயணன் on October 11, 2010 at 11:26 PM said...

:))))) இந்த ஸ்டைல் நல்லாத்தான் இருக்கு.

தொடர்ந்து வரப்போகுதா? (முன்னெச்சரிக்கைக்குதான்)

//ஆந்தைகள் பிளிறும் நேரம்தான்.//

யானைகள்தானய்யா பிளிறும். ஆந்தைகள் அலறும். எங்கே சொல்லுங்க யானை... யானை... என்னது ஞானை, ஞானையா? ஷ்ஷப்பாஆஆ... முடியல.

மகேஷ் : ரசிகன் on October 11, 2010 at 11:46 PM said...

இதெல்லாம் நல்லாத்தான் இருக்குது...

மன்னாதி மன்னன் எங்கே?

பரிசல்காரன் on October 12, 2010 at 12:24 AM said...

தலைப்புல இருக்கற எழுத்துப் பிழை வேணும்னேவா.. தெரியாம வந்துச்சா?

வர வர ஒண்ணுமே புரிய மாட்டீங்குதுப்பா...

சுசி on October 12, 2010 at 1:36 AM said...

ஹலோ.. செல்லாது செல்லாது..

ஒழுங்கா தொடர்ந்து எழுதுங்க.. இல்லை நான் சொன்ன மாதிரி தொடரை எழுதுங்க..

இதென்ன போங்காட்டம் :((

இருந்தாலும் மன்னரை ரொம்ப மிஸ் பண்றேன்.. ஆவன செய்ங்கப்பா..

நர்சிம் on October 12, 2010 at 11:10 AM said...

raittu saga..

ஸ்ரீமதி on October 12, 2010 at 11:14 AM said...

// நர்சிம் said...

raittu saga..//

repeatuuuuuuuu :)))))))))

தாரணி பிரியா on October 12, 2010 at 12:24 PM said...

தொடர போறீங்கதானே :)

இல்லைன்னா சுசி சொன்னது போல இது செல்லாது செல்லாது தான் .

Ponkarthik on October 12, 2010 at 12:59 PM said...

ஜூபரு...

நளினா லாவண்யா on October 12, 2010 at 1:58 PM said...

seriously humorous! :)

kalpana on October 12, 2010 at 3:29 PM said...

bayangara mokka...idhellaam naanga 'simbudevan' directionlaye paathutoam boss.

கார்க்கி on October 12, 2010 at 11:40 PM said...

ஸ்ரீதர்,
வர வேணாம்னு சொல்றீஙக்ளா, வரட்டும் என்கிறீர்களா? :))

மகேஷ், ஹிஹிஹி

பரிசல், தெரியாமத்தான்யா.. மாத்தியாச்சு :))

சுசி, எழுதலாம்னு இருக்கேன். பார்ப்போம்

நர்சிம் , :))

ஸ்ரீமதி, வாம்மா மின்னல்

தாபி, அபப்டித்தான் நினைக்கிரேன்

நன்றி கார்த்திக்..

நன்ரி நளினா

நன்றி கல்பனா.. பாருங்க.. :)

Karthik on October 12, 2010 at 11:40 PM said...

Hehe good one. :-)

தராசு on October 13, 2010 at 9:12 AM said...

//இது போன்ற லாஜிக்கெல்லாம் விஜய் படம் பார்க்கும் ரசிகர்கள் போல மறந்துவிடுவது நலம். //

இது சொன்னீங்களே இது நூத்துல ஒரு வார்த்தை.

ப.செல்வக்குமார் on October 13, 2010 at 12:29 PM said...

ஐயோ ., என்னால முடியலை அண்ணா ..
சத்தியமா செம காமெடி .. இன்னும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன் ..!!

 

all rights reserved to www.karkibava.com