Oct 6, 2010

எந்திரன் – எவ்ளோ ரன்?


 

enthiran-robo-hq-new-stills-tb003

அம்மன் கோவில் திருவிழாவில் அவ்வளவு அழகாக அம்மனை ஜோடித்திருப்பார்கள். அதைப் பார்ப்பதற்கே கூட்டம் சேரும். எல்லா பக்தர்களின் கண்களும். எப்போது திறக்கும். எப்போது கடவுளை தரிசிக்கலாம் என்று கதவை நோக்கியே இருக்கும்போது, பின்னாலிருந்து கடவுளின் குரல் கேட்டால் எப்படி இருக்கும்? அதுவும் நிஜமாகவே கடவுள் வந்து பேசினால்? இந்த உற்சாகத்தை சென்ற வெள்ளியன்று சத்யம் திரையரங்கில் உணர்ந்தேன். எப்போது எந்திரன் தொடங்கும் என்ற ஆர்வத்தோடு வெள்ளித்திரையையே வெறித்துக் கொண்டிருந்த நேரம், திடிரென அனைவரும் பின்னால் திரும்பி பார்த்தனர். யாரோ வி.ஐ.பி வந்திருக்கிறார் போலும் என்று நினைத்து நானும் திரும்பினேன். அங்கே “சூப்பர் ஸ்டார்”.

அந்த மனநிலையில் படம் பார்த்துவிட்டு வந்து எழுதினால் சரியாக வருமா? வசீகரனைப் பற்றி எழுதுவதை விட ரஜினிகாந்த்தை பற்றியே அதிகம் எழுத நேரிடும் என்பதால் இரண்டாம் முறை பார்த்துவிட்டு எழுதலாம் என்று நினைத்தேன். முதல் முறை அதிர்ஷ்டவசமாக சத்யம் டிக்கெட் ஒன்றே ஒன்றென கிடைத்தது. இரண்டாம் முறை மாயாஜாலில். தயவு செய்து யாரும் இனிமேல் மாயாஜால் பக்கம் போய்விடாதீர். பாடாவதி திரை, நசுங்கி போன இருக்கைகள். டெண்ட் கொட்டாய்க்கு 320 ரூபாயாம். இனி படம் பற்றிய என் பார்வை.

   சுஜாதா சிறுகதை எழுதுவது எப்படி என்று சில முக்கிய விஷயங்களை சொல்லி இருக்கிறார். “வெள்ளிக்கம்பி போல் அருவி விழுந்துக் கொண்டிருந்தது. பறவைகள்…” என்று நீட்டி முழுக்குவது காலாவாதியான உத்தி. முதல் வரியிலே கதை தொடங்கிவிட வேண்டும். இதையே திரைக்கதைக்கும் சொல்கிறார். அவரின் திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தில் சொல்லும் முக்கியமான விதி ”முதல் 10 நிமிடங்களில் கதை எதை நோக்கி செல்கிறது என்பது பார்வையாளனுக்கு சொல்லப்பட வேண்டும்” என்கிறார். எந்திரனின் முதல் 5 நிமிட காட்சிகள்.. சாட்சாத் சுஜாதாவேதான். இசை வெளியீட்டு விழாவிலே அவரை நினைவுக் கூராமல் விட்டது ஏதோ செய்தது. படத்தின் கிரெடிட்டிலும் வசனத்தில் மட்டும் போட்டது இன்னொரு உறுத்தல். அதனால் என்ன? எல்லா காட்சிகளிலும் வாழ்கிறார் வாத்யார். இது சுஜாதா எழுதியதுதான் என்று பலரும் சொல்லியிருக்கும் சில வசனங்கள் அவர் எழுதவில்லை. அந்த வகையில் குறை தெரியாமல் பார்த்துக் கொண்டதற்கு ஷங்கர் & கோவிற்கு பாராட்டுகள்.

ஒரு விஞ்ஞான சோதனைக் கூடம். முதல் சீனில் ஒரு ரோபோ நடந்து செல்கிறது. விஞ்ஞானியான ரஜினியிடம் சனா தந்ததாக தருகிறது. அலட்சியப்படுத்திவிட்டு வேலையை தொடர்கிறார் அவர். அடுத்து ரோபோ அங்கே வேலை செய்யும் உதவியாளர்களுக்கு தண்ணீர் தருகிறது. அவர்கள் யார் என்பதை அவர்களே சொல்கிறார்கள். அது எந்த மாதிரியான ஆய்வுக்கூடம், அந்த மூவரும் யார் என்பது எல்லாம் தெளிவாக சொல்லப்படுகிறது. அடுத்த காட்சியில் ஐஷ்வர்யா வருகிறார். அவர் வசீகரனை காதலிப்பதும், ஆராய்ச்சி பணியில் சனாவை கண்டுக்கொள்ளாமல் விடுவதும் பிரச்சினையை துவக்குகிறது. பின் சமாதானப்படுத்தி ஒரு டூயட்டில் காதலைப் புதுப்பித்துக் கொள்கிறார் வசீகரன்.  அங்கே நிமிர்ந்து உட்காரும் நம்மை இடைவேளை வரை சிரிக்க வைக்கிறார். பிரமிக்கை வைக்கிறார். பாடவைக்கிறார்.ஆட வைக்கிறார். யார் ஷங்கரா என்கிறீர்களா? ஷங்கரின் ரோபோ. ரோபோவை அது இது என்றழைக்கலாம் தான். ஆனால் சிட்டி என்கிற ரோபோ சமைக்கிறது. சண்டை போடுகிறது. முத்தம் வாங்குகிறது. பிரசவமே பார்க்கிறது. அதனால் சிட்டியை “றார்” என்றழைக்கலாம்.

ஒரு ஸ்மூத் டேக் ஆஃப் ஆகும் எந்திரன், இரண்டாம் பாதியில் தடுமாறியிருப்பது வருத்தம்தான். 4 பாடல்கள், ரிப்பீட் அடிக்கும் காட்சிகள் என சற்று தொய்வாகும் படத்தை கடைசி 20 நிமிட கிராஃபிக்ஸ் கலாட்டா காப்பாற்றி விடுகிறது. சிட்டி ரோபோ அலெக்ஸ் பாண்டியன் ஸ்டைல் ரோபோவாக மாறிய பின் ராக்கெட் வேகத்தில் திரைக்கதை பயணித்து க்ளைமேக்ஸை நெருங்கியிருந்தால் பின்னியிருக்கும்., இன்னும் கொஞ்ச நேரம் அந்த ரஜினியை பார்த்திருக்கலாம் என்ற ஏக்கத்தோடு அரங்கை விட்டு வந்திருக்கலாம். ஆனால் ஸ்லோ மோஷன் காட்சிகளால் புஸ்ஸாகி போகிறது. இருந்தாலும் அந்த “ம்மே காட்சி” போதும், நினைத்து நினைத்து சிரிப்பதற்கு.

இடைவேளை முடிந்த பின் வரும் முதல் காட்சியை காணத் தவறாதீர்கள். சிட்டி, ஸ்லீப்பிங் மோடில் போகும் போது சனா தந்த முத்தம் நினைவுக்கு வர, தனது கண்கள் வழியாக சனாவின் வீடியோவை ஒளிபரப்புகிறார். அப்போது ரஜினியின் முகத்தில் தெரியும் உணர்வுகள்…உஸ்ஸ்ஸ்.. இந்த வயதிலும் ரொமாண்ட்டிக்கான ஒரு பார்வையை அவரைத் தவிர யாராலும் தர முடியாது. அதே காதலின் தீபம் ரஜினி. அதே போல் ரோபொவில் சில தவறான புரொகிராமை வில்லன் சேர்த்து விட, வேறு மாதிரியாக மாறுகிறது. அந்த காட்சியில் ரஜினியின் சிரிப்பும், வில்லத்தனமும் டாப் கிளாஸ்.

  தொழில்நுட்பம் உலகத்தரம் என்கிறார்கள். ஒளிப்பதிவு, கிராஃபிக்ஸ் என்பதில் வேண்டுமென்றால் அப்படி சொல்லலாம். ஆனால் இசை அப்படி கேட்கவில்லை எனக்கு. அதே போல் வில்லனின் உதடசைவு பொருந்தவில்லை. அவருக்கு தமிழ் தெரியாததால் பபுல் கம்மை மென்றிருப்பார் என்றும் சொல்ல முடியாது. அவர் பேசும் ஆங்கில வசனங்கள் கூட பொருந்தவில்லை. டப்பிங் படம் பார்ப்பது போல் இருந்தது. படத்தின் முதல் 20 நிமிடங்களில் ரஜினியின் உதடசைவு கூட பொருந்தாத மாதிரியே எனக்கு தோன்றியது. எடிட்டிங்கும் ஒன்றும் பிரமாதம் போல் எனக்கு தெரியவில்லை. கிளிமாஞ்சாரோ பாடலும், அதன் லீடும் படத்தின் தொய்வுக்கு பிரதானமான காரணம் என்பது என் கருத்து. எல்லாவற்றிர்க்கும் சேர்த்து கலக்கிய மனிதர் ரத்னவேலு.

  என்ன நக்கலா என்ற டிராஃபிக்கின் கேள்விக்கு “இல்லை நிக்கல். எல்லா போல்ட்டும் நிக்கல்ல செஞ்சது”. இது மதன் கார்க்கியின் வசனம் என நினைக்கிறேன். இது போல பல இடங்கள் யார் எழுதியிருப்பார் என்று யூகிக்க வைப்பது சுவாரஸ்யம். படம் முடியும்போது ரோபோ சொல்லும் வசனம் “காதல் வந்தா மனுஷனுக்கு நட்டு கழண்டிடும் சொல்றது சரிதான்”. சொல்லிக்கொண்டே தனது நட்டு ஒன்றை கழட்டும் இடம் நச். அதே போல வில்லன் ரோபோவிடம் ஏடாகூடமாய் பேச அழகாய் பதில் தருகிறது சிட்டி “நீ என்ன பொல்யூட் பண்ற”. டிரெயிலரில் புகழ்பெற்ற வசனம்

“You cant do this chitti. உன்னை உருவாக்கினவன் நான். இதுக்கு பேருதான் துரோகம்”

“You can do this vasi.உன் ஆராய்ச்சிக்காக காதலை விட்டுக்கொடுக்கலாம். இதுக்கு பேருதான் தியாகம்”

இது போல ஆங்காங்கே பளிச் தெறிக்கிறது வசனங்கள். சுஜாதா-ஷங்கர்-கார்க்கி. எந்த வசனம் யார் எழுதியது என எப்படி கண்டுபிடிப்பது?

பாடல்கள் கேட்கும்போது இருந்த உற்சாகம் திரையில் ஏனோ குறைவாகவே தெரிகிறது. முதல் பாடலே மெலடியாக இருந்தது சற்று டெம்போவை குறைக்கிறது. அதே போல் கிளிமாஞ்சாரோவின் பிளேஸ்மெண்ட்டும், அதன் லீடும் எரிச்சல். அரிமா அரிமா க்ளைமேக்ஸை நோக்கி ஓடும் குதிரைக்கு கடிவாளம். சரியான சிச்சுவேஷன் பாடல் என்றால் இரும்பிலே ஒரு இருதயம் தான். தனிப்பாடலாக கேட்கும்போது இருந்த சுவாரஸ்யத்தை விட படத்தில் பார்க்கும் போது அர்த்ததுடன் ஒலிக்கிறது. அப்பாடலின் முடிவில் ஐஷ்வர்யா ஒரு சிவப்பு நிற ஆடையில் ஆடும் ஆட்டம், ஆட்டம் பாம்.  பூம் பூம் ரோபோ இன்னும் ரிச்சாக எடுத்திருப்பார்கள் என்றெண்ணினேன். “ஆட்டோ ஆட்டோக்காரா. கூட்டம் கூட்டம் பாரு உன் ஆட்டோகிராஃபுக்கா” என்ற வரிகளை காட்சிப்படுத்தியதில் இருக்கிறது ஷங்கரின் புத்திசாலித்தனம். அழகான ஓவியம் அது. அதே போல காதல் அணுக்கள் பாடலில் “நீ நியுட்டனின் விதியா” என்ற வரிகளில் ரஜினி ஆப்பிளை கீழே போடுவதும், “காதலில் நேரமும் இளைத்துவிட்டதோ” என்ற வரிகளில் Hour Glssஐ காட்டியதும் சுவாரஸ்யம். ஆனால் மொத்தமாக இதில் ஷங்கரின் மேஜிக்கல் பாடல்கள் சற்று சறுக்கல்தான்.

இது எப்படி கமலுக்கு செட் ஆகும்? ஷாருக்கா! நோ வே.  அஜித்தெல்லாம் நடிச்சிருந்தா அவ்ளோதான்.. அரங்கின் வெளியே பலரும் பேசிய வார்த்தைகள் இவைதான். சூப்பர்ஸ்டாருக்காக ஸ்க்ரிப்ட் மாற்றப்பட்டதா? இல்லை ஸ்க்ரிப்ட்டை தன் வசமாக்கினரா ரஜினி என்பது மில்லியன் டாலர் கேள்வி. எந்த அமளியும் இல்லாமல் ரஜினி அறிமுகம் ஆகும்போது இது ரஜினி படம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் படம் முடிவதற்குள் ஒரு முழுமையான ரஜினி படம் பார்த்த திருப்தி வருகிறது. வசீ, சிட்டி, வில்லன் ரோபோவென மூன்று முகத்தில் முன்னூறு மார்க்கையும் ஸ்கோர் செய்கிறார் சூப்பர்ஸ்டார்.

மொத்ததில் நம்ம ஊர் மசாலாவில் கொஞ்சம் டெக்னிக்கல் மிரட்டல்கள் தந்து, அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்த்தியதற்கு நிச்சயம் ஷங்கரையும், எந்திரனையும் கைத்தட்டி வரவேற்கலாம். விஷுவல் எஃபெக்ட்ஸ் பற்றி யோசித்த சமயத்தில் சற்று திரைக்கதைக்கும் அழுத்தம் தந்திருந்தால் எங்கேயோ போயிருப்பான் எந்திரன்.

ரஜினி  - என்றும் இந்திரன் + ஷங்கர் – சினிமா மந்திரன் + சன் பிக்சர்ஸ் – வியாபார தந்திரன்

=

எந்திரன்

டாட்.

33 கருத்துக்குத்து:

siva on October 6, 2010 at 10:38 AM said...

meeeeeeeeeeeeeeee
the first..

nanum paarthutennnnnnnnnnnnnn

wow padam supper....

siva on October 6, 2010 at 10:38 AM said...

unga vimarsanam

kalakal...

sivakasi maappillai on October 6, 2010 at 10:49 AM said...

கடவுளை கண்ட கார்க்கி... உன் கண்களை காண ஆசை.....

சரியான நேர்மையான விமர்சனம்....

ரகோத்மன் on October 6, 2010 at 10:51 AM said...

very good review and different from other reviews. great!

Ponkarthik on October 6, 2010 at 10:58 AM said...

எஃபெக்ட்ஸ் பற்றி யோசித்த சமயத்தில் சற்று திரைக்கதைக்கும் அழுத்தம் தந்திருந்தால் எங்கேயோ போயிருப்பான் எந்திரன்.

:)

Balaji saravana on October 6, 2010 at 11:17 AM said...

சகா உங்க விமர்சனம் கலக்கல்..
நான் படம் பார்க்கும் பொது இப்டிலாம் யோசிக்கவே இல்ல..
உங்க விமர்சனத்துக்காகவே இன்னொரு வாட்டி பார்க்கணும்..

முரளிகுமார் பத்மநாபன் on October 6, 2010 at 11:27 AM said...

ஏன் சகா சங்கர் மேல கொஞ்சம் கூட கோபம் வரலையா?

எனக்கென்னவோ தலைவர பொம்மை மாதிரி யூஸ் பண்ணினதா தோணுது,

இனிமே சங்கர் கதை கிதைன்னு வந்தா கிட்டயே உடாதிங்க தலைவான்னு யாராவது அட்வைஸ் பண்ணுங்க அவ்ருக்கு...

"ராஜா" on October 6, 2010 at 12:06 PM said...

//அஜித்தெல்லாம் நடிச்சிருந்தா அவ்ளோதான்..

இது இங்க எதுக்கு சகா?

கார்க்கி on October 6, 2010 at 12:24 PM said...

நன்றி சிவா.

நன்றி சிவகாசி மாப்ள..

நன்றி ரகோத்மன்

பொன்கார்த்திக், நலமா?

நன்றி பாலாஜி. எத்தன தடவ பார்த்தீங்க?

முரளி, படம் கொஞ்சம் சறுக்கியது உண்மைதான். ஆனா அதுக்காக முயற்சியே செய்யக்கூடாதா? குசேலன்,பாபாவுக்கு இது எவ்வளவோ தேவலை. அது போல சிவாஜி அக்மார்க் ரஜினி படம். எனக்கு தப்பா தெரியல

ராஜாண்ணே, தேவையானத மட்டும் எடுத்து போடாதிங்க. அதுக்கு முன்னாடி கமல்,ஷாருக்க்ன்னு இந்த புராஜெக்ட்ல இருப்பதாக சொன்ன எல்லோரையும் சொல்லி இருக்கேன். அஜித்தும் நடிப்பதாக ஒரு செய்தி வந்துச்சு.. அதுக்குத்தான் சொன்னேன்.

பிரியமுடன் ரமேஷ் on October 6, 2010 at 12:45 PM said...

நல்ல அலசல்....உண்மையில் ரஜினிதான் மந்திரன்..பார்க்கும் போது எந்த குறையும் தோனாமல் போக அவர் மட்டுமே காரணம்...அப்ப நல்லா ரசிச்சிட்டு திரும்ப யோசிக்கும்போதுதான்...நமக்கு குறை தெரியுது..

சுசி on October 6, 2010 at 12:49 PM said...

//வேறு மாதிரியாக மாறுகிறது. அந்த காட்சியில் ரஜினியின் சிரிப்பும், வில்லத்தனமும் டாப் கிளாஸ்//

அப்டியே ஒரு நடை நடந்து கண்ணாடியில தன்னை பார்ப்பார் பாருங்க.. செம..

அதோட முதல் முதலா சிட்டிக்கு கோபம் வந்தப்போ.. அவ்வளவு அளவா நடிப்பை வெளிப்படுத்தி இருக்கார்..

நிறைய்ய இடங்கள்ல அவரை பாக்க பிரமிப்பா இருந்துது..

சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்!!

அருமையான விமர்சனம் கார்க்கி.. கலக்கிட்டிங்க..

நர்சிம் on October 6, 2010 at 12:56 PM said...

ம்ம்ம். பார்க்கணும்.

நல்ல பகிர்வு சகா.

Sen22 on October 6, 2010 at 1:04 PM said...

கலக்கல் விமர்சனம் கார்க்கி..

ஸ்ரீமதி on October 6, 2010 at 1:10 PM said...

//நர்சிம் said...

ம்ம்ம். பார்க்கணும்.

நல்ல பகிர்வு சகா.//

Repeatuuuuuu... ;-))

(Romba naal aachu repeat pottu... Ippo dhaan nimmadhiya irukku.. :-))

Santhappan சாந்தப்பன் on October 6, 2010 at 1:20 PM said...

இதுவரை படித்த விமர்சன்ங்களிலேயே எனக்கு நிறைவை தந்தது. படத்தின் எல்லா குறைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். அவசர கோலத்தில் அள்ளி தெளிக்காமல், நிதானமாக எழுதியிருப்பதற்க்கு பாராட்டுக்கள்!

அனுஜன்யா on October 6, 2010 at 1:38 PM said...

In a recent email abt Rajini it was mentioned that Rajini can answer missed calls. Thought, being a Rajini fan, you will atleast call back. When I called it was interval time.

Ur review - DOT

Anujanya

தராசு on October 6, 2010 at 2:18 PM said...

யூ டூ கார்க்கி.....

ரைட்டு

Anonymous said...

இந்த வெட்கங்கெட்ட சினிமாக்களால் நாமும் கெட்டு நமது வருங்கால குழந்தைகளும் கெடுவதற்கு நாமே ஒரு காரணமாகி விடுகிறோம். இது மட்டும் தான் நாம் பெறக் கூடிய லாபம் இந்த சினிமாக்களால். நாம் எப்போது இந்த மோகத்திலிருந்து விடுபடப் போகிறோம். நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லையா. நாம் அந்தளவுக்கு முட்டாளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா?

"ராஜா" on October 6, 2010 at 4:01 PM said...

// ராஜாண்ணே, தேவையானத மட்டும் எடுத்து போடாதிங்க. அதுக்கு முன்னாடி கமல்,ஷாருக்க்ன்னு இந்த புராஜெக்ட்ல இருப்பதாக சொன்ன எல்லோரையும் சொல்லி இருக்கேன். அஜித்தும் நடிப்பதாக ஒரு செய்தி வந்துச்சு.. அதுக்குத்தான்

அப்ப இது நீங்க சொன்னதுன்னு ஒத்துகிறீங்க.. பதிவில் வேற மாதிரியா எழுதி இருந்தீங்க... சரி சகா புரியிது புரியிது...

எறும்பு on October 6, 2010 at 4:58 PM said...

கார்க்கி அண்ணே, ஆயிரத்தில் ஒருவனை அடி வெளுத்த மாதிரி இதையும் வெளுபீங்கன்னு எதிர்பார்த்தேன்.உங்க பெயர் கொண்டவர்காக இப்படி மென்மையான விமர்சனமா ## doubt

எறும்பு on October 6, 2010 at 4:59 PM said...

அனுஜன்யா அண்ணே, கமெண்ட் போட்ருகீங்க, அப்படியே உங்க ப்ளாக் காத்தாடுது ஒரு பதிவும் போடுங்க.
Atleast எனக்கு புரியாத மாதிரி ஒரு கவிதை ப்ளீஸ்..
:))

radhika on October 6, 2010 at 5:07 PM said...

உங்க விமர்சனம் மிக சூப்பர். படிக்கும் போதே பார்க்கணும் போல இருக்கு

கார்க்கி on October 6, 2010 at 6:36 PM said...

ரமேஷ், ரொம்ப சரி. அதுதான் ரஜினி மந்திரம்

சுசி,படம் பார்த்தாச்சா? அங்க ரிசல்ட் எப்படி?

நர்சிம், இன்னும் பார்க்கலையா? வேட்டைக்காரனையே 2 த்டவ பார்த்தவராச்சே! இன்னுமா போகல? :)

நன்றி சென்

அய்ய்ய்.. ஸ்மைலி ஸ்ரீமதி.. எப்படி இருக்கிங்க? நலமா?

நன்றி சாந்தப்பன்.

@அனுஜன்யா, தல, எப்போ கால் பண்ணிங்க? நான் எடுத்தேனா? சத்யமா ஞாபகம் இல்லை :(

தராசண்ணே, ஏன்?கிர்ர்ர்ர்ர்ர்ர்

திரு.சாய் கோகுல கிருஷ்ணா, கருத்திற்கு நன்றி. //நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லையா// இது சாமியாரக்ளுக்கும் பொருந்தும் இல்லையா?

ராஜா, எனக்கு புரியல. வேற எப்படி சொல்லியிருந்தேன்? எதையும் நான் மாத்தலையே!

எறும்பு, இது அந்தளவுக்கு மோசமில்லை. படம் எடுப்பதற்கு முன் இவர்கள் செய்த ஹோம் ஒர்க் பாராட்டுக்குரியது. இது ஆ.ஒ விட பெரிய ப்ட்ஜெட் என்றாலும் அதற்கான பிளானிங் பக்காவா இருக்கு. எல்லாவற்றையும் விட, படம் ஆ.ஒ விட நன்றாகவே இருக்கு

நன்றி ராதிகா. இன்னும் பார்க்கலையா?

முசமில் இத்ரூஸ் on October 6, 2010 at 7:15 PM said...

Padam nalla irunthaalum
sun pics in moozhai salavaigalum,rajni rasigargal seyyum kirukku thanangalum marupuram veruppaitthaan erpaduthugirathu
endhiran makkalai oru thavaraana paadhaikku ittu sendrulladhu enbadhai yaarum marukka maatargal ena ninaikiraen

தமிழ்ப்பறவை on October 6, 2010 at 8:52 PM said...

;-)

ராவணன் on October 6, 2010 at 9:09 PM said...

சுஜாதாவா...? யார் அது..? பழைய ஹீரோயினா?

கும்க்கி on October 6, 2010 at 9:27 PM said...

ஒளி மயமான எதிர்காலம் என் கண்ணுக்கு தெரிகிறது..

:))))

மகேஷ் : ரசிகன் on October 6, 2010 at 10:01 PM said...

Unga review ku wait pannen.. :)

Maduraimalli on October 6, 2010 at 11:20 PM said...

makka attakaashamaana review.. thamatham aanathurkku reason - cute

RaGhaV on October 7, 2010 at 10:28 AM said...

Randy is a bad choice thala.. u need someone with sharper view for large frame movies.. :-( he should have chosen someone else..

Ponkarthik on October 7, 2010 at 3:57 PM said...

எதோ உங்க புண்ணியத்துல இருக்கோம் சகா :)

இசைப்பிரியன் on October 7, 2010 at 4:10 PM said...

Padam pidichirundhudhu

Eno aiswarya rajiniya yematruvadharku sollum vasanam mattum not convincing

mona on October 17, 2010 at 2:33 PM said...

Rajani is such a get Robatist, Scientist but how come his two assistants are such a cheep mentality and no seriasness about the project. Vivek claims himself as M>Sc computer science

 

all rights reserved to www.karkibava.com