Sep 30, 2010

சிறப்பு அடையாள அட்டை


 

    நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் பகிர்ந்துக் கொண்ட விஷயம். பலரை சென்றடைய வேண்டுமென அவர் விரும்பியதால் என் பங்கிற்கு இந்தப் பதிவு.

__________________________________________________________________________________
   சென்ற ஆண்டிலிருந்து, பாரத அரசு, சிறப்பு அடையாள அட்டை வழங்குவதற்கு முயற்சிகள் எடுத்து ஆணையம் அமைத்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதன் தகவல்களை இங்கேகாணலாம்.

   பாரத நாடு, மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாமிடத்திலுள்ளது, அதனால், இந்த சிறப்பு அடையாள அட்டை வழங்குதல் என்பது மிகவும் கடினமான பணி.
இந்தப் பதிவின் நோக்கமே, நம்மால் எப்படி இத்திட்டத்திற்கு உதவ முடியும் என்பதற்கான மெய்நிகர் கலந்துரையாடலே.

   நம் நாட்டில், மதம், மொழி, இனம், சாதி, சாதிய உட்பிரிவு, நண்பர்கள் குழு, கலைக் குழு போன்ற லட்சக்கணக்கான (ஏன் கோடிக்கணக்கான) சங்கங்கள் உள்ளது. இதில் பதிவு பெற்ற / பதிவு பெறாத சங்கங்கள் என்று வகைப்படுத்தலாம். ஏனெனில், அரசின் பதிவு பெறாத சங்கங்கள் மூலம் தனி நபர் சேவையாற்ற முடியுமே ஒழிய, சிறப்பு அடையாள அட்டை ஏற்படுத்தும் பணியில் பங்கு கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. எனினும், சிறப்பு அடையாள அட்டை ஆணையம் இவ்விஷயத்தில் தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்களையும் பங்கு பெறுவதற்கு வழி வகைகளை செய்துள்ளது.

அதன் விவரங்கள் இங்கே.
இத்திட்டத்தில் பங்கு பேர விருப்பமுள்ள, தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்கள் செய்ய வேண்டியது.

தனிநபர்:
முதலில் உங்களின் அனைத்து அரசு ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொண்டு, பின் வரும் மின்னஞ்சலுக்கு (webadmin-uidai@nic.in) தகவல் அனுப்பவும். பிறகு அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படவும்.(நண்பர்களே: அந்த மின்னஞ்சலுக்குரிய நடவடிக்கை போன்றவை இந்தப் பதிவைத் தாண்டிய விஷயங்கள், அதனால் சொல்ல முடியவில்லை).

நிறுவனங்கள் (பதிவு பெற்ற நிறுவனங்கள்):
பதிவு பெற்ற சபைகள், நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், நண்பர் குழு அமைப்புகள், நற்பணி மன்றங்கள் இந்த சிறப்பு அடையாள அட்டை திட்டத்தில் விருப்பமுள்ள உறுப்பினரையோ அல்லது உறுப்பினர் குழுவையோ
அமைக்கலாம்.
அவ்வாறு அமைக்கப்பட்ட உறுப்பினரோ/குழுவோ முதலில் அந்த அமைப்பினைச் சேர்ந்த உறுப்பினர்களின் பின் வரும் அரசு ஆணையங்களை சரி பார்க்கலாம்.
௧. பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate).
௨. பிறப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate).
௩. சமுதாயச் சான்றிதழ் (Community Certificate).
இம்மூன்றுமிருந்தால், ஒருவரின் அடிப்படை விவரங்கள் அரசில் பதிவு செய்யப்படுள்ளதாகக் கொள்ளலாம்.
இது தவிர,
௪. வாக்காளர் அடையாள அட்டை (Voter's Identity Card).
௫. குடும்ப அட்டை (Family/Ration Card).
௬. (தனிநபர்) நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number).
௭. கடவுச்சீட்டு (Passport).
மேற்கூறிய ஏழு ஆவணங்களிருந்தால், நம் நாட்டில் பிறந்த ஒருவரின் அனைத்து விவரங்கள் அரசில் பதிவு பெறப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
(இந்த ஆவணங்கள் மட்டும் தானா, அல்லது வேறு ஏதாவது உள்ளதா என்பது தெரியவில்லை ?)
முதல் முயற்சியே, அவர்கள் உறுப்பினர்கள் மேற்கூறிய ஆவணங்கள் வைத்திருக்கிறார்களா என்பதை சரி பார்ப்பதே.
இரண்டாவதாக, இதில் எதாவது ஒரு ஆவணம் இல்லையென்றால், அதைப் பெற உதவுவது, அது சாத்தியமா ? (நம் நாட்டில் நிலவும் நடை முறைச் சிக்கல்கள் தெரிந்துள்ளதால்) தெரியவில்லை.

  இறுதியாக, மேற்கூறிய ஆவணங்களை வைத்துள்ள உறுப்பினர் விவரங்களை, மென்பொருள் வடிவாக்கி, சேமித்து, மூன்றுக்கு மேற்பட்ட மென்தகட்டில் (CD/DVD) பத்திரப்படுத்திவிட்டு, இது தவிர தனியாக பத்திரப்படுத்திய மென்தகடை (CD/DVD)'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்க வேண்டியது.
இவ்வாறு, ௧௦௦ (நூறு) உறுப்பினர் கொண்ட ௧௦ (பத்து) நிறுவனங்கள் செய்தால், குறிப்பிட்ட கால அளவிற்குள், ௧௦௦௦ (ஆயிரம்) இந்தியர்களின் தகவல்கள் 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.

கல்வி நிறுவனங்களின் பங்கு:
பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் தங்களிடம் பயில்வோர் மற்றும் பணி புரிவோர் விவரங்களை 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு வழங்கலாம்'.
இதன் மூலம் அரசின் பணிச் சுமை குறைவதோடல்லாமல், கணிசமான தனி நபர்களின் துல்லியமான விவரங்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.

பதிவராக:
தமிழ்ப் பதிவராக, நாமும் இவ்விஷயத்தில் சிறு அக்கறை எடுத்துக் கொண்டு, நம்மிடமுள்ள ஆவணங்களையும் சரி பார்த்து விட்டு, நம்மிடம் இல்லாத ஆவணத்தை பெற்று, நம்குடும்பத்தினர் ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு. தனி நபராக நம் நண்பர்கள் உறவினர்களின் தகவல்களை (குறைந்தது ஐம்பது நபர்கள்) 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்கலாம்.
ஆயிரக்கணக்கான, தமிழ்ப் பதிவர்களில் பத்து பதிவர்கள் இதனைச் செய்தால், குறைந்தது ஐநூறு நபர்களின் தகவல்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்'.

ஒரு, பாரத நாட்டினனாக, என்னாலான முயற்சியை ('சிறப்பு அடையாள அட்டை ஆணையத்தினை' மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு) இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளேன்.

என் எண்ணங்களை ஏற்று, செயல்படுத்த அனுமதியளித்தால் என்னால் இயன்றதைச் செய்ய உள்ளேன்.
அனுமதி கிடைத்த பின், அது பற்றிய விவரம், இன்னொரு பதிவாக வெளியிடுகிறேன்.

இந்த பதிவினை பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இந்தப் பதிவை தங்கள் நண்பர்கள், உறுப்பினர்கள் மற்றும் தாங்கள் உறுப்பினராக உள்ள வலைக் குழுக்களுக்கு பரிந்துரைப்பதின் மூலம், 'சிறப்பு அடையாள அட்டை திட்டம்' வெற்றியடையச் செய்யலாம்.
பதிவுலகின் மூலம் எத்தனையோ நல்ல விஷயங்கள் நடைபெறுகிறது, இது மட்டும் வெற்றியடையாமலா போய்விடும் ?

மேலும், இந்தப் பதிவை அப்படியேவோ அல்லது தங்கள் எண்ணங்களை கொடுத்து 'மீள் பதிவாகவோ' எந்தப் பதிவர் வேண்டுமானாலும் பதிப்பதற்கு பயன் படுத்திக்கொள்ளலாம்.

16 கருத்துக்குத்து:

Ŝ₤Ω..™ on September 30, 2010 at 11:33 PM said...

சகா.. நல்ல விஷயமா இருக்கு.. பகிர்ந்ஹ்டமைக்கு நன்றி.. சில விலக்கங்கள் தேவை.. நாளை தொலைபேசறேன்..

சுசி on October 1, 2010 at 12:57 AM said...

நல்ல பகிர்வு.

அன்பரசன் on October 1, 2010 at 6:31 AM said...

உபயோகமான பகிர்வு.

மகேஷ் : ரசிகன் on October 1, 2010 at 8:07 AM said...

நல்ல பகிர்வு சகா.

மகேஷ் : ரசிகன் on October 1, 2010 at 8:17 AM said...

வாழ்த்துக்கள் சகா..

நாய்க்குட்டி மனசு on October 1, 2010 at 8:55 AM said...

u have a done a good job karkki
well done

siva on October 1, 2010 at 9:25 AM said...

very good kaarki anna..

i likes your blog brother...

great job..

M.G.ரவிக்குமார்™..., on October 1, 2010 at 3:27 PM said...

செஞ்சாச்சி சகா!......நம்ம லிங்க்

http://idugai.blogspot.com/2010/10/blog-post.html

ப.செல்வக்குமார் on October 1, 2010 at 4:46 PM said...

நல்ல விஷயம் தான் அண்ணா .. நானும் செய்யப்போறேன் ..!!

கண்ணகி on October 1, 2010 at 5:23 PM said...

good post

THIRUBUVANAM on October 1, 2010 at 5:23 PM said...

http://newstbm.blogspot.com/2010/10/blog-post.html என்ற தளத்தில் இந்த தேசிய அடையாள அட்டை யின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று ஆராய்ந்ததில் அது மிகபெரும் ஆபத்து,தவறாக பயன்படுத்த என்று அறிஞர்கள் கூறுவதை பதிவிட்டுள்ளார்கள் அதையும் படியுங்கள்

மார்கண்டேயன் on October 1, 2010 at 11:52 PM said...

மிக்க நன்றி கார்க்கி,

'நகல் மின்னஞ்சல் மூலம்' (CC Mail) உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இந்தத் தகவல் வந்திருந்தாலும்,

இதன் முக்கியத்துவம் அறிந்து பதிவிட்டு பலருக்கு சென்றடையச் செய்தமைக்கு மீண்டும் நன்றியை தெரிவிக்கின்றேன் . . .

எனினும், இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் தெரியவில்லை,

(இணையத்தில் ஏற்பட்ட தடங்கலால், உங்களின் கவனத்திற்கு என்னால் மறுமொழியிட முடியவில்லை)

உங்களின் இந்தப் பதிவையும், நம்மைத் தொடர்ந்த திரு. ரவிக்குமார் அவர்களின் பதிவினையும் என் பதிவினையும் என் பதிவில் இணைத்துவிட்டேன்.

vinu on October 2, 2010 at 12:25 PM said...

thaamathaamaana piranthaanaaal avazthukkalukkaaga mannikka

Karthik on October 2, 2010 at 5:33 PM said...

Superb Karki. Thanks for sharing too. :)

பாரத்... பாரதி... on October 3, 2010 at 3:21 PM said...

"நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...

நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின்
இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு,
இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத்
தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை..

உங்கள் கவிதைகளை bharathphysics2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

எங்கள் நண்பரின் கவிதையாய் bharathbharathi.blogspot.com வலைப்பூவில் வெளியிடுகிறோம்;
அல்லது

உங்கள் கவிதைகளை,உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுவிட்டுஎங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வந்துப் பார்க்கிறோம் யாரோவாக....

முடியுமா என்பதுதான் கேள்வி. எங்கே வெளியிடுவது என்பதல்ல...
Start MUSIC.......

Renga on October 4, 2010 at 6:27 PM said...

Well done mate!!!!

 

all rights reserved to www.karkibava.com