Sep 27, 2010

ராதிகா விநாயகர்


 

   பிறந்தநாளன்று வாழ்த்தோ வாழ்த்துவென்று வாழ்த்தின அனைவருக்கும் நன்றி என்று சொல்வதைத் தவிர வேறென்ன செய்வது? பிளாக், ட்விட்டர், ஃபேஸ்புக் என இணைய வாழ்த்துகளோடு இந்த வருடம் குறுஞ்செய்திகளும் அதிகம் வந்தது. சில வாரங்களாக தினமும் எழுத முடியாமல் போனதால் அனைவரும் சந்தோஷத்தில் மிதப்பதையே இது காட்டுவதாக உள்மனம் சொல்கிறது. இருந்தாலும் இன்னும் சில வாரங்கள் இதே வானிலை நீடிக்கக்கூடும் என சாளர வானிலை நிலையம் தெரிவிக்கிறது. பதிவிட்டு வாழ்த்திய

இளா, வசந்த், சுசி, சென், விக்னேஷ்வரி, புன்னகை, ராதிகா, கோபி

ஆகியோருக்கு ஸ்பெஷல் நன்றிகள் சொல்லியே ஆகணும்.

______________________________________________________________________________

பரிசலும் ஆதியும் ஒரு சிறுகதை போட்டி அறிவித்திருக்கிறார்கள். கொஞ்சம் ஈசியா தந்திருந்தா நானும் களமிறங்கியிருப்பேன். திட்டமிட்ட சதியால் கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறேன். கலந்து கொண்டவர்களுக்கும், கலந்துக் கொள்ளவிருப்பவர்களுக்கும் வாழ்த்துகள்.

______________________________________________________________________________

சென்ற வாரம் விநாயகர் ஊர்வலத்தை நானும் பப்லுவும் பார்த்துக் கொண்டிருந்தோம். மாப்பிள்ளை விநாயகர், கற்பூர விநாயகர், மணக்குல விநாயகர்னு வரிசையா பார்த்த பப்லு திடிரென நம்ம ராதிகா(அட.. திருமதி.சரத்குமார்)  ஃபோட்டோவைப் பார்த்து இது எதுக்குடான்னு கேட்டுட்டான். என்ன சொல்றதுன்னு தெரியாம நானும் யோசிச்சேன். விநாயகர் ஊர்வலத்தில் அவருக்கு என்ன வேலை? எதுக்கு ஃபோட்டோ? அப்புறம்தான் தெரிஞ்சுது அது “சித்தி” விநாயகராம்.

______________________________________________________________________________

ஒரு வழியா சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஜெயித்துவிட்டார்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதில் பங்கேற்காததால் ஆரம்பத்தில் இருந்தே நான் விசில் போட்டது சென்னை சூப்பர் கிங்க்ஸுக்குத்தான். நேற்று இறுதி ஆட்டத்தில் வென்றவுடன் உடைத்த சோடாவைப் போல ட்விட்டரில் பொங்கிவிட்டேன்.  இந்தாங்க சோடா..

வெண்ணையினா வெட்டுடா.. சென்னையினா ஹிட்டுடா

வீட்டுக்கு வெளிய இருந்தா திண்ணைடா.. வெற்றிக்கோப்பை இருந்தா அது சென்னைடா

தென்னாப்பிரிக்கா கிட்ட நிறைய தங்கம் இருக்கலாம். சென்னைக்கிட்ட நிறைய சிங்கம் இருக்குடா

பேஸ்மென்ண்ட்டும் ஸ்ட்ராங்க..பில்டிங்க்கும் ஸ்ட்ராங்க.. எங்க ஓனரு சிமெண்ட் கம்பெனி வச்சிருக்காருடோய்

சிகரெட்னா வில்ஸ்கிங்க்ஸ்... கிரிக்கெட்னா சூப்பர்கிங்க்ஸ்

______________________________________________________________________________

என் பதிவை ஒரு பிரபலம் (அட.. இவர் நிஜமாகவே பிரபலங்க) படித்துவிட்டு தோழி அப்டேட்ஸ் நல்லா இருப்பதாக சொன்னதாக நண்பரொருவர் சொன்னார். நல்லவேளை அவர் கண்ணில் இது போன்ற பதிவுகள் படவில்லை. பட்டிருந்தால் என்ன சொல்லியிருப்பார்?

என்ன சொல்லியிருப்பார் என யோசிச்சதில் இரண்டு மேட்டர் தேறியது. இதே போல யோசிச்சு பின்னூட்டங்களில் சொல்லுங்க பார்க்கலாம்.

சந்தானம் : தினம் தினம் சாளரம் படிக்கிறவன் எல்லாம் நல்லா இருக்கான். இந்த ஒரே ஒரு பதிவ படிச்சிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே.. அய்ய்யய்ய்ய்ய்யோ..

விஞ்ஞானி ரஜினி : நல்லா இருக்கிற பதிவ மட்டும் எனக்கு ரெஃபெர் செய்ய சொன்னா, இத கொடுத்து இருக்கியே! இதுக்கு பேருதான் துரோகம்

ரோபோ ரஜினி : எல்லா மொக்கையும் நான் படிச்சிட்டு டேமேஜ் கம்மியா இருக்கிறத தந்தேனே! அதுக்கு பேருதான் தியாகம்.

19 கருத்துக்குத்து:

தமிழ்ப்பறவை on September 27, 2010 at 12:55 AM said...

சித்தி விநாயகர் கலக்கல் மேட்டர்.. அதைத் தலைப்பில் சாதுர்யமாகத் தவிர்த்தது குட்....
யார் அந்தப் பிரபலம்?

சுசி on September 27, 2010 at 1:09 AM said...

விஜய்:- எவ்வளவோ படிச்சிட்டோம்.. இத படிக்க மாட்டோமா??

// நன்றி என்று சொல்வதைத் தவிர வேறென்ன செய்வது? //
இன்னமும் செக் வரலையே கார்க்கி.

அன்பரசன் on September 27, 2010 at 1:43 AM said...

சித்தி மேட்டர் சூப்பர்.

வினோ on September 27, 2010 at 2:47 AM said...

நானும் விக்கியோட வாழ்த்தை படிச்சேன்...

பிரபலம் யாருங்க?

T.V.ராதாகிருஷ்ணன் on September 27, 2010 at 4:14 AM said...

:))

டம்பி மேவீ on September 27, 2010 at 7:08 AM said...

:))))))))


"Comment moderation has been enabled. All comments must be approved by the blog author. "

பிரபலம் ஆகிவிட்டதால் இந்த மாதிரி செய்ஞ்சு இருக்கீங்களா

நர்சிம் on September 27, 2010 at 7:34 AM said...

ஒருவழியா தலைப்புல வச்சாச்சா? ரைட்ட்ட்டு சகா. ;)

நர்சிம் on September 27, 2010 at 7:35 AM said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

ரைட்ட்ட்டு

Gopi Ramamoorthy on September 27, 2010 at 7:51 AM said...

\\பதிவிட்டு வாழ்த்திய

இளா, வசந்த், சுசி, சென், விக்னேஷ்வரி, புன்னகை, ராதிகா

ஆகியோருக்கு ஸ்பெஷல் நன்றிகள் சொல்லியே ஆகணும்.\\

என் பேரு எங்கே போச்சு? சுனைனா பத்தி எல்லாம் எழுதி இருந்தேனே? என் நண்பன் படத்துக்கு ஹீரோயின் செலக்ட் பண்ணும் பொறுப்பை எல்லாம் கொடுத்திருந்தேனே? சாயந்திரத்துக்குள்ள படிச்சுட்டு அதைப் பத்தி எழுதவும். இல்லன்னா மைனஸ் ஒட்டு போட்டுடுவேன் ! இது எச்சரிக்கை இல்லை கட்டளை ! (சும்மா மதுர பட வசனம் நினைவுக்கு வந்தது. அதான் எழுதிட்டேன். தப்ப எடுத்துக்காதீங்க !)

http://ramamoorthygopi.blogspot.com/2010/09/15.html

புன்னகை on September 27, 2010 at 8:48 AM said...

//ராதிகா விநாயகர் (கார்க்கி)//
விநாயகர் எப்பொழுதிலிருந்து நந்தியானார்? அப்புறம் அந்த brackets - அது நீங்க அவங்களுக்கு போட்டது தானே கார்க்கி? உங்க பேருல எப்படி? :P

புன்னகை on September 27, 2010 at 8:49 AM said...

//நர்சிம் said...
ஒருவழியா தலைப்புல வச்சாச்சா? ரைட்ட்ட்டு சகா. ;)//
வாழ்க நர்சிம்! :-)

Karthik on September 27, 2010 at 12:45 PM said...

Your twitter came in Ananda Vikatan.. Thalaivaa..


NaanPiece na punjabi daaba

All time Mass na Karki bhava :D :D

ப.செல்வக்குமார் on September 27, 2010 at 2:31 PM said...

நான் அந்த பதிவு படிச்சேன் .. உண்மைலேயே ...................................
(கோடிட்ட இடத்தை நிரப்புக )

குத்தாலத்தான் on September 27, 2010 at 4:19 PM said...

"சித்தி" விநாயகர் சூப்பர் தல !!
(http://twitter.com/sprabha)

ஆதிமூலகிருஷ்ணன் on September 27, 2010 at 6:14 PM said...

வழக்கமே.. :-))

பரிசல்காரன் on September 27, 2010 at 10:16 PM said...

அறிவிப்பு நன்றி சகா...

கார்க்கி on September 27, 2010 at 11:37 PM said...

அனைவருக்கும் நன்றி

தர்ஷன் on September 28, 2010 at 12:11 AM said...

விகடனில் ட்வீட் வந்ததுக்கு வாழ்த்துக்கள்
அப்புறம்
மணமகள் தேவை என்ற பதிவுக்கு வந்த ஒரு பின்னூட்டம்
இந்தப் பதிவின் தலைப்பு
பதிவிட்டு வாழ்த்து சொன்ன லிங்க்குக்கு போய் பார்த்தால் உங்களை வாழ்த்தி ஒரு பதிவு மட்டும்
அப்ப அப்படித்தானே
வாழ்த்துக்கள் சகா

Karthik on September 28, 2010 at 7:56 PM said...

ராதிகா விநாயகர்? சத்தியமா முடியல. :))

யாரு அந்த பிரபலம்னு சொல்லவே இல்லியே?

 

all rights reserved to www.karkibava.com