Sep 21, 2010

தோல்விகள் துரத்தும் தருணம்


 

   எப்போதும் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கைத் தரும் அனுபவங்கள் நாள்தோறும் ஏதேனும் ஒன்றை நமக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டுதானிருக்கின்றன. அதைக் கற்றுக் கொண்டு நாமும் மாறிக் கொண்டுதானிருக்கிறோம். ரசனையாக வாழும் நற்பணியை அன்றாடம் அனைவருக்கும் வழங்குவதில்லை. சிறுவயதில் ஒரு குச்சி மிட்டாய் தந்த சந்தோஷத்தை வேறெதுவும் எனக்கு இன்று தருவதில்லை. கொடுமையான விஷயம் யாதென்றால் அந்தக் குச்சி மிட்டாயும் இப்போது அந்த சந்தோஷத்தை தருவதில்லை.

பள்ளிக்காலத்தில் அரையாண்டு தேர்வுகள் அண்ட சராசரத்திலே கடினமான ஒன்றாகத்தான் தெரிந்தன. அதனால் தானோ என்னவோ தேர்வுகள் முடியும் நொடி அளவில்லாத ஆனந்தத்தை கொடுப்பதாய் தெரியும். சிரங்கு வரும்வரை மண்ணில் விளையாடுவது உலகின் தலையாயப் பணி என்ற எண்ணம் தூளான கணம் எதுவென்று நினைவிலில்லை. அரைக்கால் சட்டையில் அன்னபூரணி கைப்பிடித்து விளையாடிய விளையாட்டு, பேண்ட் அணிந்த போது வேறெதுவாகவோ மாறிப்போனது எப்படி? வாழ்வின் எல்லாக் கடமைகளையும் முடித்தாலொழிய காதலைப் பற்றி யோசிக்கக் கூடாது என முடிவெடுத்த ஆண்டு நினைவிலிருக்கிறது. காரணம்தான் எலிப்பொறியில் சிக்கிய எலியைப் போல எங்கேயே சிக்கிக் கொண்டு தவிக்கிறது.

ஒரு விஷயம். நகரவே நகராது. ஆனால் இங்கிருந்து பெங்களூரு செல்லும். எதுவென்று தெரியுமா? அதிகம் யோசித்தால் முடி கொட்டிவிடுமாம். நானே சொல்கிறேன். சாலை அல்லது ரோடு. இப்படியாகத்தான் என் காலம் இருக்கிறது. இருந்த இடத்தில், இருப்பது போலவே இருப்பதாகத்தான் நினைக்கிறேன். ஆனால் சில பல வயதுகள் ஏறிவிட்டது என்பது ஏதேனும் ஒரு அரசாங்க அலுவலக ஃபாரத்தை பூர்த்தி செய்யும்போது தெரிந்து விடுகிறது. சம்பளத்தை மாற்றி போட்டு வரி ஏய்க்க வகை செய்து தந்த அரசாங்கம் வயதை மாற்றினால் கண்டுபிடித்து காறித்துப்புவது அயோக்கியத்தனம். அதற்காக பாஜகவிற்கெல்லாம் வாக்களிக்க முடியாது. என் பேரன் வாய்ப்புகளே இல்லாமல் “இந்து”வென மேலே சொன்னது போன்ற ஒரு ஃபாரத்தில் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவன் மதத்திற்கு நேராக காதல் என்றோ அன்பு என்றோ எழுதுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது.

“நிக்கறதுக்கே வழியில்லையாம்…” என்ற சந்திரமுகி புகழ் பழமொழி உங்களுக்கு நினைவில் வந்திருக்கலாம். அதுக்குள்ள பேரனா என்ற கேள்வியின் இணைத்தோழியாக அந்தப் பழமொழி நினைவில் வந்திருக்கலாம். என்ன செய்ய? எங்க தாத்தா யார் தெரியுமா? எங்க அப்பா யார் தெரியுமா என்று இறுமாந்த காலங்கள் மியுசியத்தில் தெரியும் கேடயமாகத்தான் இருக்கிறது. எதுவோ குறைகிறது இன்று என்னிடம்.

இதே போன்றொரு திராணியற்ற பொழுதில்தான் வலையுலகம் அறிமுகமனாது. குச்சி மிட்டாய் அளவிற்கு இல்லையென்றாலும் சந்தோஷத்தை தந்தது என்பதில் ஐயமில்லை. நல்லெழுத்துக்காரனாய் வருவேன் என்றெண்ணியெல்லாம் தொடங்கவில்லை. குப்பைகளை சேர்த்து வைப்பதை விட கொட்டிவிடுவதே மேல் என்றெண்ணம் காரணமாய் இருந்திருக்கலாம். எப்படியாவது சில நூறு பேர்களின் மனப்பதிவேட்டில் இடம் பிடித்து விடவேண்டும் என்ற முனைப்பு இருந்தது என்பதை மறுக்கவியலாது. சில நூறை ஒரு சிலரே ஈடு செய்யமுடியும் என்று தெரிந்துக் கொண்டபின் முனைப்பின் முனை மழுங்கிப்போகத்தானே செய்யும்?

ஏதேதோ வழியினில் உளறினாலும் சொல்ல வரும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். சரியாக யூகிக்க முடிந்தவர்களுக்கு இமயமலை அடிவாரத்தில் மாசில்லாக் காற்றும், மருந்தில்லா நீரும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள சி்ல நாட்கள் தங்கவும் வாய்ப்பு கிடைக்க வேண்டுகிறேன். யூகிக்க முடியாதவர்கள் சில படிகள் இறங்கி வருதல் உசிதம்

 

**

 

**

 

**

 

**

 

**

முன்ன மாதிரி மொக்கைப் போட முடியலங்க. :(((

35 கருத்துக்குத்து:

Ŝ₤Ω..™ on September 21, 2010 at 11:51 PM said...

சகா.. முடியல..

ILA(@)இளா on September 21, 2010 at 11:53 PM said...

இதெல்லாம் ஒரு பொழப்பா தூ’ன்னு வந்து எல்லாரும் துப்புங்கப்பா. மொக்க்கை தாங்கல, இதுக்கு நீங்க கடிதம் மாதிரி ஒரு படமே எடுத்துருங்க ப்ளீஸ்

king on September 22, 2010 at 12:05 AM said...

Y? Y? intha kola veri

பிரதீபா on September 22, 2010 at 12:20 AM said...

//முன்ன மாதிரி மொக்கைப் போட முடியலங்க// என்ன கொடுமை இது
ஆறு கடல் எல்லாமே வத்தி போயிடிச்சுன்னு சொல்லுங்க, நம்பறேன், இந்த மாதிரி சொன்னா யாராச்சும் நம்புவாங்களா?
//சிரங்கு வரும்வரை மண்ணில் விளையாடுவது// நல்லா கவனிச்சிருக்க மாட்டீங்க , அது குளிக்காததால வந்தது.
//எல்லாக் கடமைகளையும் முடித்தாலொழிய காதலைப் பற்றி யோசிக்கக் கூடாது என முடிவெடுத்த ஆண்டு நினைவிலிருக்கிறது//-ஆமா, ஆமா உங்க பசங்க புள்ளைங்களுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி வெச்சுட்டுத்தானே?
//சில பல வயதுகள் ஏறிவிட்டது என்பது //-விடுங்க பாஸ், அறுவது வயசெல்லாம் ஒரு வயசா?
//குப்பைகளை சேர்த்து வைப்பதை விட கொட்டிவிடுவதே மேல்//-இது நல்லா இருக்கே !!
//குச்சி மிட்டாய், சிக்கிய எலி,நல்லெழுத்துக்காரனாய் //-செல்லாது செல்லாது ..

மதுரை சரவணன் on September 22, 2010 at 12:35 AM said...

//நல்லெழுத்துக்காரனாய் வருவேன் என்றெண்ணியெல்லாம் தொடங்கவில்லை. குப்பைகளை சேர்த்து வைப்பதை விட கொட்டிவிடுவதே மேல் என்றெண்ணம் காரணமாய் இருந்திருக்கலாம். எப்படியாவது சில நூறு பேர்களின் மனப்பதிவேட்டில் இடம் பிடித்து விடவேண்டும் என்ற முனைப்பு இருந்தது என்பதை மறுக்கவியலாது. //

இடம் பிடித்து விட்டீர்கள்....பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள். மொக்கையை விட இது நல்லத் தானே இருக்கு... வாழ்த்துக்கள்

சுசி on September 22, 2010 at 12:58 AM said...

ரொம்ப சீரியசா படிச்சிட்டு வந்தா.. எதாவது இருக்கும்னு தெரியும்.. ஆனா
இத எதிர்பார்க்கவே இல்ல்ல்ல்லை கார்க்கி..

//முன்ன மாதிரி மொக்கைப் போட முடியலங்க. :(((//

ஆவ்வ்வ்வ்..

இதுவும் சேர்த்து தலைப்போட கலக்கிட்டிங்க போங்க..

ப்ரியமுடன் வசந்த் on September 22, 2010 at 1:00 AM said...

மொக்கை சக்ரவர்த்தி நீங்களே இப்டி சொல்லலாமா சகா?

//எப்படியாவது சில நூறு பேர்களின் மனப்பதிவேட்டில் இடம் பிடித்து விடவேண்டும் என்ற முனைப்பு இருந்தது//

நான் 100ல இருக்கேனான்னு தெரியலை பட் உங்க ஸ்டைல் எழுத்து என் மனசுல இருக்கு...

வினோ on September 22, 2010 at 2:05 AM said...

முடியல கார்கி...

தெய்வசுகந்தி on September 22, 2010 at 4:00 AM said...

என்ன கொடுமை கார்க்கி இது?!!!

Balaji saravana on September 22, 2010 at 6:22 AM said...

என்ன சகா.. வீட்ல பொண்ணு ஏதும் பிக்ஸ் பண்ணிட்டாங்களா உங்க கல்யாணத்துக்கு..?
இல்ல கல்யாணம் பிக்ஸ் ஆயிட்டாலே இப்படி பொலம்ப ஆரம்பிச்சுருவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன் அதான் :(

Gopi Ramamoorthy on September 22, 2010 at 7:09 AM said...

உள்ளேன் ஐயா.

இந்த மாதிரி மொக்க போடுவதிற்குப் பதில் சில நல்ல பதிவுகளைப் படிக்கலாம் (எங்கயும் தேட வேணாம், நம்ம வலைப்பூ பக்கம் வாங்க). அதற்குப் பின்னூட்டம் இடலாம். பரிசலுக்கு சவால் விடலாம். ச்சே பரிசலின் சவால் சிறுகதைப் போட்டிக்குக் கதை ரெடி பண்ணலாம்.

நீங்க எவ்ளோ மொக்கயாப் பதிவு போட்டாலும் நாங்க சீரியஸா பின்னூட்டம் போடுவோம்ல !

மகேஷ் : ரசிகன் on September 22, 2010 at 8:04 AM said...

கவுத்துட்டியே தலைவா...

சிவராம்குமார் on September 22, 2010 at 8:07 AM said...

எப்பா! எப்பா! எப்பா! முடியலை... வேணாம்... அழுதுடுவேன்!

தராசு on September 22, 2010 at 8:57 AM said...

அய்யோ, அய்யோ, கொல்றாய்ங்களே,
யாராவது காப்பத்துங்க...

நாய்க்குட்டி மனசு on September 22, 2010 at 9:02 AM said...

வயதை மாற்றினால் கண்டுபிடித்து காறித்துப்புவது அயோக்கியத்தனம்.//

இது நல்லா இருக்கே ?
இது எல்லோருக்கு சில நேரங்களில் வருவது தான் கார்க்கி. எவ்வளவு சீக்கிரம் வெளியே வரோம்க்றது தான் முக்கியம்.

பாலா on September 22, 2010 at 9:04 AM said...

என்ன தலைவரே? என்ன ஆச்சு உங்களுக்கு?
தோழிக்கும் உங்களுக்கும் ஏதாவது சண்டையா?

*இயற்கை ராஜி* on September 22, 2010 at 10:07 AM said...

அய்யோ. .. முடியலிங்க‌

ஆதிமூலகிருஷ்ணன் on September 22, 2010 at 10:08 AM said...

குருவிரொட்டியை மறந்துட்டே பாரு. ஹிஹி..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on September 22, 2010 at 10:14 AM said...

எதுனா தாயத்து வேணுமா சகா? :)

M.G.ரவிக்குமார்™..., on September 22, 2010 at 11:00 AM said...

குட் மார்னிங் சார்!......

Mohan on September 22, 2010 at 11:42 AM said...

மனசை தளர விட்டுடாதீங்க‌:-)

Sen22 on September 22, 2010 at 12:05 PM said...

//ஒரு விஷயம். நகரவே நகராது. ஆனால் இங்கிருந்து பெங்களூரு செல்லும். எதுவென்று தெரியுமா? அதிகம் யோசித்தால் முடி கொட்டிவிடுமாம். நானே சொல்கிறேன். சாலை அல்லது ரோடு.//

முடியல.. :))))
ஓஹா.. இப்படி எல்லாம் திங்க் பண்ணித்தான் என் தல முடி பாதி போய்டுச்சு.. :((

siva on September 22, 2010 at 1:10 PM said...

:)
//முன்ன மாதிரி மொக்கைப் போட முடியலங்க// என்ன கொடுமை இது--ungala parthu yaru appdi chonnathu..athani naan vanmaiyaga kandikiren..

ungalai pondra eluthalar kidikka enna.....maranthupochuna..

nallathana eluthurenga..apprum yen entha pulambal..????yyy???

Rajalakshmi Pakkirisamy on September 22, 2010 at 1:11 PM said...

அய்யோ, அய்யோ, யாராவது காப்பத்துங்க

தனுசுராசி on September 22, 2010 at 1:16 PM said...

முன்னாடி பதிவும் இப்புடி தான் இருந்தது, இந்த பதிவும் இப்புடி தான் இருக்குது... என்ன ஆச்சு சகா உங்களுக்கு... ?

மரண மொக்கை... தாங்க முடியல...

kumaresh on September 22, 2010 at 5:39 PM said...

முன்ன மாதிரி மொக்கைப் போட முடியலங்க. :(((

appo mela ulladhellam ennavam...
nalla irukku..

kumaresh on September 22, 2010 at 5:40 PM said...

முன்ன மாதிரி மொக்கைப் போட முடியலங்க. :(((

appo mela ulladhellam ennavam...
nalla irukku..

vinu on September 22, 2010 at 6:41 PM said...

kazuthai keatta kutti suvarru ippa naanum again back to chennai sagaa at solinganallur this time HCL cliet paaaa

taaru on September 23, 2010 at 9:18 AM said...

மெனி மோர் ஹாப்பி ரிடன்ஸ் ஆப் த டேய்...!!!! [I think,am speaking british english. :):)]
[யாரு என்ன சொன்னாலும், உன் மொக்க மழுங்காது சகா.... ஓடி வா... மொக்கயோடு ஓடி வா...]

radhika on September 23, 2010 at 10:05 AM said...

http://radhika-ram.blogspot.com/2010/09/happy-bday-karki.html

happy birth day karki

ஜானு... on September 23, 2010 at 11:54 AM said...

:) :) :)

Sen22 on September 23, 2010 at 11:56 AM said...

பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா...

ஜிஜி on September 23, 2010 at 1:19 PM said...

முடியல..மொக்கைய தாங்க முடியல.. ஆனாலும் இது தொடர
வாழ்த்துக்கள்!!

Karthik on September 24, 2010 at 4:50 PM said...

//வாழ்வின் எல்லாக் கடமைகளையும் முடித்தாலொழிய காதலைப் பற்றி யோசிக்கக் கூடாது என முடிவெடுத்த ஆண்டு நினைவிலிருக்கிறது.

நான் இந்த Phaseலே இருக்கேன்னு நினைக்கிறேன். :)

TERROR-PANDIYAN(VAS) on September 26, 2010 at 2:46 PM said...

சகா.. வெள்ளி கிழமை அதிகாலை 11 மணிக்கு எழுந்து குளிக்காம, பல்லு விளக்காம ஒரு இரண்டு பெக் போட்டு. தெரு கோடில நின்னு போறவர அட்டு பிகர் எல்லாம் சைட் அடிச்சா மொக்க நல்லா வரும் ஒரு சித்தர் சொன்னாரு...உங்க ப்ளாக் மேல சத்தியமா சொன்னாரு சகா...

 

all rights reserved to www.karkibava.com