Sep 18, 2010

யெஸ் பாய்.. யெஸ் பாய்..


 

இது ஒரு வெங்காயப் பதிவு. தமிழ் எழுத்தாளர்கள் குறித்த பிரக்ஞை இல்லாதவர்கள் இதைத் தாண்டியோ, சுற்றியோ போய்விடுங்கள். தயவு செய்து மிதித்து மட்டும் வைத்துவிடாதீர்கள்.

  சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருவர் எனக்கு போன் செய்து “என் மகள் உங்களுக்கு 5 கமெண்ட் போட சொன்னாள்; உங்கள் வலைப்பூ முகவரி என்ன?” என்றும் கேட்டார்.  அப்போதெல்லாம் நான் 10 கமெண்டுக்கும், 100 ஹிட்ஸூக்குமே சிங்கியடித்துக் கொண்டிருந்த காலம்.  இருந்தாலும் மாணவிகளிடமிருந்து கமெண்ட்  பெறுவதில்லை என்று மறுத்தேன்.  ஆனாலும் பிடிவாதமாக கமெண்ட் போட்டார்.  அந்த மாணவி அப்போது என்னுடைய தீவிர வாசகி.  பிறகு அவருக்குத் திருமணமான பிறகும் அதே வேலையை ஆரம்பித்தார்.  புட்டிக்கதைகள் பதிவுகள் அனைத்தும் படித்தார். அவர் ஐடி துறையில் இருப்பதால் இதை மின்னஞ்சலில் ஃபார்வர்ட் செய்யப்போவதாக சொன்னார்.   ”இதெல்லாம் ஆபத்தான காரியம்; உங்கள் கணவர் ஆட்சேபிக்கலாம்; வேண்டாம்” என்றேன்.  கேட்கவில்லை.  கணவர் அந்தப் பெண்ணை விவாகரத்து செய்து விட்டதாக பின்னர் அறிந்தேன்.  அந்தப் பெண்ணும் என்னைத் தொடர்பு கொள்வதில்லை.

பெண்ணுக்கு மட்டும் இல்லை; என் நெருங்கிய சகா ஒருவன் திருமணமான புதிதில் தோழி அப்டேட்ஸைக் கொண்டு போய் தன் மனைவியிடம் கொடுத்து படிக்கும்படி சொல்லியிருக்கிறான்.  நல்ல ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண் அடுத்த மாதமே அவனை விவாகரத்து செய்து விட்டார்.  அந்தப் பெண் விவாகரத்து வேண்டி என் நண்பனுக்கு அனுப்பியிருந்த நோட்டீஸைப் படித்து நானே மிரண்டு போனேன்.  குளோபல் வார்மிங், 10 மாத வைரக்கல் என்று என்னென்னவோ எழுதியிருந்தது.  கெளதம் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா  என்ற படத்தைப் பார்ப்பது போல் இருந்த்து அந்த நோட்டீஸ்.  இப்படி மொக்கைக்கு சம்பந்தமில்லாத சராசரிகளிடம் கொண்டு போய் என் மொக்கையை அறிமுகப்படுத்தும் போது இம்மாதிரி மரண விபத்துகளே ஏற்படும்.

அப்படி ஒரு விபத்து என் சிநேகிதி ஒருவருக்கு ஏற்பட்டிருப்பதாக யூகிக்கிறேன்.  அவர் எனக்கு ஓரிரு சந்தர்ப்பங்களில் கமெண்ட் போட்டிருக்கிறார்.  திடீரென்று அவருக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை.  இனிமேல் பதிவு போட்டு எனக்கு லிங்க் தர வேண்டாம் என்று ஒரு மெயில் வந்தது.  இது போல் அடிக்கடி நிகழ்வதால் சரி என்று விட்டு விட்டேன்.  அதோடு முடிந்திருந்தால் இந்தக் கட்டுரையை எழுதியிருக்க மாட்டேன்.  இரண்டு நாட்கள் கழித்து “I would not be able to do comment you henceforth and would not be liked to be communicated. Hope you understand and thanks for your co-operation” என்று ஒரு கடிதம் வந்தது.

என் வாழ்வில் நான் சந்திக்க நேர்ந்த மிக அவமானகரமான தருணங்களில் இதுவும் ஒன்று என எண்ணினேன்.  என்னோடு தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்று எழுதும் நபரிடம் போய் கமெண்ட் வாங்கும் அளவுக்கு நான் கீழ்த்தரமாகப் போய் விடவில்லை என்று ஒரு வரி எழுதிப் போட்டாலும் அந்தக் கடிதத்தின் அவமானகரமான அடி என்னை மிகவும் அதிர வைத்தது.

எனக்கு கமெண்ட் போடும் அளவுக்கு நீங்கள் பெரிய பதிவராக இருக்கிறீர்களா என்ன?  ஒரு துறவியின் திருவோட்டில் நீங்கள் இடும் அன்னம் அந்தத் துறவிக்கு நீங்கள் செய்யும் உதவி என்றா நினைப்பீர்கள்?  உங்கள் குழந்தைக்கு ஒரு வாய் சோறு ஊட்டுவதை அந்தக் குழந்தைக்கு நீங்கள் செய்யும் உதவி என்றா நினைப்பீர்கள்? தமிழ்ப் பதிவு  சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு அநாதைகளாக அலைந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற மொக்கைவாதிகளை ஆதரிப்பது நீங்கள் அவர்களுக்குச் செய்யும் உதவியா?

நான் மற்ற சராசரி மனிதர்களைப் பற்றிச் சொல்லவில்லை.  என் மொக்கையின் முக்கியத்துவம் தெரிந்த ஒன்றிரண்டு வாசக நண்பர்களிடம் மட்டுமே இதைக் கேட்கிறேன்.  எல்லோரிடமும் என்று நினைத்து விடாதீர்கள்.

தமிழின் மிக முக்கியமான மொக்கைப்பதிவரான குசும்பனுக்கு ஒரு பதிவுக்கு 30 கமெண்ட் மட்டுமே தேவைப்பட்டது. அதுவும் தமிழ்மண பக்கவாட்டு இடத்தில் தெரிவதற்காக . அவர் எப்போதும் கலாய்த்துக் கொண்டே இருப்பார்.  அதனால்தான் அவர் பிரபல பதிவர் என்று எழுதியிருக்கிறார் ஒருவர்.  அப்படி அல்ல அது.  ஒழுங்காக எழுத தெரியாததால்தான் அவர் பிரபல பதிவர் ஆனார்.  நானே அடுத்த நாள் மொக்கைப்பதிவுக்கு சிங்கியடித்துக் கொண்டிருந்த காலம்.  அவருடைய மொக்கைகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பதிவரின் பதிவாக ஏறி இறங்கினேன்.  சிலர் மட்டுமே அவர் கலாய்த்தலை ஏற்றுக் கொண்டார்கள். டமார் கொமார் போல பலர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். நாம் 4 கமெண்ட் போட்டால், அவர்கள் ஒன்றுதான் போடுவார்கள் .  அதுவும் ஒரு மாதம் கழித்துத்தான் கமெண்ட் வரும்.  (இப்போதும் அதே நிலைதான்). 

இப்படி அனாதையாக தெரு நாய்களைப் போல் செத்துக் கொண்டிருக்கிறார்கள் மொக்கைவாதிகள்.  இந்த நிலை எனக்கு வேண்டாம் என்று நான் தீர்மானம் செய்தேன். அதற்கு நான் முதலில் செய்ய வேண்டியது, என் சுயகௌரவத்தை விட்டுக் கொடுப்பது. சுயகௌரவத்தைக் குப்பையில் எறிந்து விட்டு கும்மியடிப்பது என்ற முடிவுக்கு வந்தேன்.

எனக்கு என் சுயகௌரவத்தை விட நான் வாழும் சமூகமும் மொக்கையும் முக்கியமாகத் தோன்றியதால்தான் கும்மியடிக்க முடிவு எடுத்தேன்.  ஏனென்றால்,  மொக்கைவாதிகளால்தான்  நகைச்சுவையே வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு மொக்கையையும் அம்மொக்கை சார்ந்த கலாச்சாரத்தையும் முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்பவர்கள் மொக்கைவாதிகள் மட்டுமே. 

தமிழ்நாட்டில் ஒரு மொக்கைவாதியாக வாழ்வதென்பது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஒரு பவுலராக இருப்பதற்கு ஒப்பாகும்.

ஆதியின் நடவடிக்கைகளையும், அவருடைய மொக்கையும் எனக்குப் பிடிக்காது.  ஆனால் தமிழில் எங்கள் எல்லோரையும் விட அதிகம் மொக்கைப் போட்டவர் அவர்தான். அப்படிப்பட்ட ஒரு மொக்கைவாதியே தான் குறும்படம் எடுத்தால்தான் தன் புகழ் ஓங்கியது  என்றும்,புலம்பல்களைக் கேட்க ஒரு கூட்டம் வந்ததும் என்றும் எழுதுகிறார்.    என்ன ஒரு சமூக அவலம் பாருங்கள்! உலகில் வேறு எந்த இடத்திலும் நீங்கள் இப்படிப்பட்ட ஒரு கலாச்சார அவலத்தைப் பார்க்க முடியாது.

எனவேதான் என் சுயமரியாதையைக் கைவிட்டு கும்மியடிக்க துணிந்தேன்.  அதனால்தான் ஒரு பதிவர்  ஒரு பிரச்சினையில் என்னைப் பற்றி ‘பொறுக்கி” என்று எழுதவும், அதைப் பின்பற்றி பதிவுலக அன்பர்கள் என்னை பொறுக்கி என்று தூற்றவும் ஆரம்பித்தார்கள்.

இந்தப் கும்மியிலிருந்து ஒரே நாளில் நான் வெளியே வந்து விட முடியும்.  ஒன்றுமில்லை.  ஒரு நல்ல சிறுகதை எழுதி விட வேண்டும். யுவன் சந்திரசேகரின் சிட்டுக்குருவி போல 4 நல்ல கவிதை எழுதி விட வேண்டும். சமூக அவலங்களைக் கண்டித்து கட்டுரை எழுத வேண்டும் . ஒரே நாளில் கமெண்டுகள் என் பதிவில் குவிந்து விடும்.  ஆதிக்கு அல்ல; அவருடைய குருநாதரான பாலாவுக்கே நான் நடித்துக் கொடுப்பேன். ஆனால் என்னால் முடியுமா?  நான் கடவுள் படத்தை கிழித்துத் தோரணம் கட்டிக் கட்டியிருக்கிறேன்.   அவர் எப்படி என்னை நடிக்கக் கூப்பிடுவார்?

கடைசியாகச் சொல்கிறேன்.  இது எனக்கு கமெண்ட் போடும் அன்பர்களுக்கான வார்த்தை.  மற்றவர்கள் வழக்கம்போல் என்னை மொக்கை, பொறுக்கி என்று தங்கள் இஷ்டம் போல் திட்டிக் கொண்டு திரியலாம்.

நீங்கள் எனக்குச் செய்யும் உதவி உதவி அல்ல. அது உங்களுடைய பொறுப்பு; கடமை.  நான் உங்களுடைய மனசாட்சியாக இருக்கிறேன்.  அதனாலேயே இந்த சமூகத்தால் கைவிடப்பட்ட அநாதைக் குழந்தையாக இருக்கிறேன்.  எனவே ஒரு தாய் தன் குழந்தைக்கு சோறு ஊட்டுவதைப் போன்றதுதான் நீங்கள் எனக்கு செய்யும் உதவி.  என்னுடைய தினசரி பதிவுக்கு ஆளுக்கொரு கமெண்ட் எனக்குத் தர வேண்டும்.  என் மொக்கையின் முக்கியவத்தும் உங்களுக்குத் தெரிந்தால் நான் சொல்லும் இந்த வார்த்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள். 

அப்படியே உங்களால் எனக்கு கமெண்ட் செய்ய முடியாமல் போனாலும் மேற்கண்டவாறு அந்தப் பெண் செய்தபடி ஃபார்வர்ட் செய்யாதீர்கள். அதனால் எனக்கு ஹிட்ஸ் குறைகிறது. . பெருமாளுக்குக் கோவில் கட்டுவதற்காக திருமங்கை ஆழ்வார் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார்.  நான் அப்படியெல்லாம் செய்யவில்லை; திருவோடுதான் ஏந்துகிறேன்.  அதையும் தயவுசெய்து அவமானப்படுத்தாதீர்கள். ஏனென்றால், என்னுடைய மொக்கைக்கு உங்களால் உதவி செய்ய முடியாத நிலையில் நீங்கள் இருந்தாலும், என் மொக்கையின் முக்கியத்துவம் உங்களுக்குப் புரிந்தால் உங்களை என்னுடைய சகபயணியாகவே கருதுவேன்.  அதில் சந்தேகமில்லை.

ஒரு துறவியைப் போலவே நான் உங்களிடம் வருகிறேன்; அன்னமிடுங்கள். அந்த அன்னம் எனக்கு நீங்கள் தரும் உணவு; உதவி அல்ல.

18.9.2010.

1.30 PM

(அலுவலகத்திலிருந்து)

(என் வலைப்பூ முகவரி)

www.karkibava.com

Twitter ID

http://twitter.com/iamkarki

51 கருத்துக்குத்து:

Saravana kumar on September 18, 2010 at 1:40 PM said...

இந்த மாதிரி எல்லாம் எழுதுறது ரொம்ப கஷ்டம். great

கார்க்கி on September 18, 2010 at 1:47 PM said...

அதுக்குள்ள நெகட்டிவ் ஓட்டா? இது ச்சும்மா ஜாலிக்குங்க..

இப்ப பாசிட்டிவ் ஓட்டுக் கேட்டு இன்னொரு பதிவு எழுடஹ்ணும் :((

gulf-tamilan on September 18, 2010 at 1:47 PM said...

:)))'பாரு'வா? இன்னும் யாரும் வரல கும்மியடிக்க???

gulf-tamilan on September 18, 2010 at 1:49 PM said...

:))) ஓட்டு போடணுமா?

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on September 18, 2010 at 1:50 PM said...

காயமே இது பொய்யடா..

வெறும்

காற்றடைத்த பையடா!!!!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on September 18, 2010 at 1:51 PM said...

காயமே இது பொய்யடா..

வெறும்

காற்றடைத்த பையடா!!!!

Anonymous said...

oru comment

ப.செல்வக்குமார் on September 18, 2010 at 2:31 PM said...

//இப்படி மொக்கைக்கு சம்பந்தமில்லாத சராசரிகளிடம் கொண்டு போய் என் மொக்கையை அறிமுகப்படுத்தும் போது இம்மாதிரி மரண விபத்துகளே ஏற்படும்//

அப்ப நான் தொடர்ந்து மேல படிக்ககலாம் .. ஏன்ன நான் மொக்கைல ISO சார்டிபிகேட் வாங்கிருக்கேனே..

தராசு on September 18, 2010 at 2:38 PM said...

அய்யய்யோ,

தல கிர்ருனு சுத்துது. என்னாச்சு தல??

வொய் கெட்டிங் ஏங்கிரி????

ப.செல்வக்குமார் on September 18, 2010 at 2:38 PM said...

//நீங்கள் எனக்குச் செய்யும் உதவி உதவி அல்ல. அது உங்களுடைய பொறுப்பு; கடமை. நான் உங்களுடைய மனசாட்சியாக இருக்கிறேன். அதனாலேயே இந்த சமூகத்தால் கைவிடப்பட்ட அநாதைக் குழந்தையாக இருக்கிறேன். எனவே ஒரு தாய் தன் குழந்தைக்கு சோறு ஊட்டுவதைப் போன்றதுதான் நீங்கள் எனக்கு செய்யும் உதவி. என்னுடைய தினசரி பதிவுக்கு ஆளுக்கொரு கமெண்ட் எனக்குத் தர வேண்டும். என் மொக்கையின் முக்கியவத்தும் உங்களுக்குத் தெரிந்தால் நான் சொல்லும் இந்த வார்த்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.///

அண்ணா நானும் உங்கள் இனம் தான் .. அப்படியே உங்களோட ஆதரவையும் எனக்கு கொடுங்க ..!! ஹி ஹி ஹி ..!!

M.G.ரவிக்குமார்™..., on September 18, 2010 at 3:22 PM said...

ஒவ்வொரு பதிவுக்கும் சிறந்த கமெண்ட்டுகள் வழங்கப் படும்! கமெண்ட்டுகள் பெற உடன் ரூ.100/- மணிஆர்டர் செய்யவும்.........

Giri on September 18, 2010 at 3:40 PM said...

பாவம் அந்த மனுஷனுக்கு என்ன பிரச்சனையோ!
அதை ஏன் நீங்க இப்படி கிண்டல் பண்ணி இருக்கீங்க. எப்படியோ உங்களுக்கு கமெண்ட் வருது.

ILA(@)இளா on September 18, 2010 at 5:01 PM said...

இப்ப நாங்க என்ன பண்ணிட்டோம்.. இப்ப நாங்க என்ன பண்றது?

babu on September 18, 2010 at 5:34 PM said...

த‌ய‌வுசெய்து அந்தாளுக்கு பிச்சை போட்டுவிடுங்க‌ள்.sorry. அன்னமிடுங்கள். இல்லாவிட்டால் திரைப்ப‌ட‌த்திற்கு வ‌ச‌ன‌ம் எழுதிட‌ போறாரு.அதுவும் ச‌ங்க‌ர் ப‌ட‌த்திற்கே எழுத‌முடியும்னு வேற‌ சொல்ல‌றாரு.

சிவராம்குமார் on September 18, 2010 at 6:13 PM said...

இது ஏதோ செம குத்து மாதிரி இருக்கே!!! இல்லை எனக்குதான் அப்படி தோணுதா!!!!


நீங்க நல்லவரா!! கெட்டவரா!!!

நாய்க்குட்டி மனசு on September 18, 2010 at 7:29 PM said...

ஒண்ணுமே புரியல. so just escape. ஆனா என் ஓட்டும் கமெண்டும் உங்களுக்கு என்றும் உண்டு கார்க்கி !

தர்ஷன் on September 18, 2010 at 7:45 PM said...

பாவம் சகா அந்த மனுஷன் விட்டுடுங்க
அப்புறம் ஆதியின் குருநாதர் பாலாவா ? சொல்லவே இல்லை

ஆதிமூலகிருஷ்ணன் on September 18, 2010 at 8:23 PM said...

அதாரு பாலா? நான் கடவுள்னு ஒர் படம் எடுத்தானே.. அந்த தம்பியா.? :-))

தெய்வசுகந்தி on September 18, 2010 at 9:08 PM said...

:-))))!!!!!!!!

சி.பி.செந்தில்குமார் on September 18, 2010 at 9:30 PM said...

good post,but u can minimize your angry.

விஜய்வீரப்பன் சுவாமிநாதன் on September 18, 2010 at 10:11 PM said...

குசும்பனை முந்திக் கொண்டீர்...

T.V.ராதாகிருஷ்ணன் on September 18, 2010 at 11:42 PM said...

:))

பிரதீபா on September 18, 2010 at 11:43 PM said...

யப்பா சாமீ , என்னை மாதிரி டீப்ளைட்டுக்கும் புரியா மாதிரி கொஞ்சம் பொலம்புங்க, ப்ளீஸ் !!

விஜய்வீரப்பன் சுவாமிநாதன் on September 19, 2010 at 12:38 AM said...

ஆமா... இந்த உணவு அவருக்கு மட்டுமா இல்லை அவர் வளர்க்கும் சிங்கம் போன்ற நாய்களுக்கா?

சில பல ட்யூப்லைட்-க்காக

http://charuonline.com/blog/?p=1000

Ŝ₤Ω..™ on September 19, 2010 at 2:28 AM said...

ஐயோ.. ஐயோ..
சகா உன் அட்டகாசம் தாங்கல..

சுசி on September 19, 2010 at 3:15 AM said...

மொக்கை சாமி.. உங்க காலை காட்டுங்கப்பா..

சிரிச்சுட்டே இருக்கேன்.. நல்ல வேளை சனிக்கிழமை.. ஆபீஸ்ல இருந்து படிக்கலை நான் :))

//இப்ப பாசிட்டிவ் ஓட்டுக் கேட்டு இன்னொரு பதிவு எழுடஹ்ணும் :((//

ஆவலோடு காத்திருக்கிறோம்.. சீக்கிரம் எழுதுங்க..

மகேஷ் : ரசிகன் on September 19, 2010 at 9:59 AM said...

:)

நிவாஸ் on September 19, 2010 at 10:53 AM said...

vidunga boss
ivanuga eppavumay ippadiththaan
neenga vanga boss

Madumitha on September 19, 2010 at 11:55 AM said...

சாருவைக் கிண்டல் பண்ணிட்டா
பெரிய ஆளாகிடமுடியுமா?

vinu on September 19, 2010 at 12:29 PM said...

ithukkuthaan night cutting potta kaalaila elunthavudan oru tamblar more sapttuvidurathu nallathu illaaatti ippadithaan orae thalai suththuramaathiriyae irrukkum....................

சுசி on September 19, 2010 at 12:29 PM said...

704 க்கு வாழ்த்துக்கள் கார்க்கி.

Bhupesh Balan on September 19, 2010 at 1:07 PM said...

:)


Comment Given!

Ponkarthik on September 19, 2010 at 2:06 PM said...

சகா அந்த ஆள் இந்த மாதிரி சுயபுராணம் எழுதரதயே வேலையா வச்சுருக்கார் சகா, உம்ம பதிவு அருமை ஓய்!!!

இவன் சிவன் on September 19, 2010 at 5:08 PM said...

நீ ரஜினி கிட்ட கமெண்ட் கேட்டியா ..கமல் கிட்ட கேட்டியா ?? என்கிட்ட மட்டும் கேக்குற??.....
பிரான்ஸ்ல லாம் பதிவு எழுதுறதுக்கு முன்னாடியே கமெண்ட் போடுறாங்களாம், இங்க 'உத்தம தமிழ்' எழுத்தாளனோட நிலை இப்படி இருக்குது... யாரையாச்சும் அசிங்கமா வஞ்சாத்தான் இலக்கியவாதின்னு ஏத்துக்குறீங்க!!!!!!!

முரளிகுமார் பத்மநாபன் on September 19, 2010 at 5:45 PM said...

:-)

chezhian on September 19, 2010 at 7:51 PM said...

ரொம்ப நன்றி இந்த மாதிரி தான் பாஸ் உலகத்துக்கு தேவை

king on September 20, 2010 at 12:43 AM said...

sooooper :)

siva on September 20, 2010 at 6:08 AM said...

:)

siva on September 20, 2010 at 6:09 AM said...

அப்ப நான் தொடர்ந்து மேல படிக்ககலாம் .. ஏன்ன நான் மொக்கைல ISO சார்டிபிகேட் வாங்கிருக்கேனே..
---TAMBI Unnai thaniya kavanikka cholli meli idathila erunthu thagaval vanthu erukku.."neenga ISO VANGAIN certificates elam verifiy pananumam"

siva on September 20, 2010 at 6:09 AM said...

அப்ப நான் தொடர்ந்து மேல படிக்ககலாம் .. ஏன்ன நான் மொக்கைல ISO சார்டிபிகேட் வாங்கிருக்கேனே..
---TAMBI Unnai thaniya kavanikka cholli meli idathila erunthu thagaval vanthu erukku.."neenga ISO VANGAIN certificates elam verifiy pananumam"

"ராஜா" on September 20, 2010 at 11:08 AM said...

சகா நீங்கள் கூடிய விரைவிலேயே சாருக்கு போட்டியாக ஒரு பெரிய இலக்கியவாதியாக என் வாழ்த்துக்கள் ...

Sen22 on September 20, 2010 at 12:59 PM said...

Sema Mokkai sami...

சங்கீதன் on September 21, 2010 at 1:01 AM said...

"Sharing is sexy" is missing at the bottom of the post page.. :)

ram on September 21, 2010 at 2:34 PM said...

"யெஸ் பாய்.. யெஸ் பாய்.."..கட்டுரையை மீண்டும் ஒருமுறை படித்து முடித்தேன். என்னை மிகவும் நெகிழ்ச்சியூட்டுவதை உணர்ந்தேன்.கண்ணில் நீர் திரையிடுவதை தவிர்க்க இயலவில்லை. முதல் முறை படித்த இரவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தேன். நம் சமூகத்தின் இந்த நிலையை மாற்ற என்னால் என்னவெல்லாம் செய்ய இயலும் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.

தங்களின் "ஏழுவின் தோழி" நான் சமீபத்தில் படித்த மிகவும் காத்திரமான கட்டுரை என்பேன். இப்போதைய தமிழ்ச்சூழலில் இதை எழுத அசாத்திய தைரியம் மட்டுமில்லை,எப்போதும் சமரசம் செய்யாத நேர்மையான பார்வையும் வேண்டும். அது இங்கே எங்களது தலைவர் 'கார்க்கி'க்கு மட்டுமே வாய்த்திருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் புரிந்து கொண்டிருக்கிறேன். உங்களின் வாசகர்களான நாங்கள் உண்மையில் பாக்கியம் செய்தவர்கள்.

பையா
மும்பை.

Gnanz on September 21, 2010 at 2:53 PM said...

sathiyama purialaa...

கார்க்கி on September 22, 2010 at 12:02 AM said...

அனைவருக்கும் நன்றி

hajasreen on September 22, 2010 at 12:42 AM said...

ada nalla iruke intha blog

hajasreen on September 22, 2010 at 12:49 AM said...

///ஒவ்வொரு பதிவுக்கும் சிறந்த கமெண்ட்டுகள் வழங்கப் படும்! கமெண்ட்டுகள் பெற உடன் ரூ.100/-மணிஆர்டர் செய்யவு////

address plz

Karthik on September 24, 2010 at 5:21 PM said...

ஹிஹிஹி. :))))

DrPKandaswamyPhD on September 27, 2010 at 4:13 AM said...

பதிவுலக சுதந்திரம் அளவற்றதாக இருப்பதைப் பார்த்து பெருமைப்படுகிறேன்.

Manion on June 8, 2011 at 5:59 PM said...

நீ கலக்கு சித்தப்பு!

 

all rights reserved to www.karkibava.com