Sep 16, 2010

ஏழுவின் தோழி


 

  ஏழுவுக்கு காதல் வராதா என்ன? ஒரு நல்ல பெண்ணாக பார்த்து காதலைச் சொல்லி, அவளும் ஓக்கே சொல்லி , எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்தது. ஏழுவின் காதலி பிறந்தநாள்  ஃபிப்ரவரி 29. காத்திருந்து காத்திருந்து 28ஆம் தேதி இரவே அசத்தலான பார்ட்டி வைத்தான் ஏழு. மறுநாள் மாலை ஊரெங்கும் மெல்லியதாய் தூறல் தூறிக் கொண்டிருந்தது. கையில் அழகிய பொக்கேவும், ஒரு நல்ல கிஃப்ட்டும், கூடவே தோழி அப்டேட்ஸில் உருவிய சில வரிகளும்,பாலாஜியின் பைக்கும், அதோடு முந்தைய நாளின் கிங்ஃபிஷர் தந்த போதையில் மிச்சத்தையும் எடுத்துக் கொண்டு காதலியை பார்க்க கிளம்பினார் ரோமியோ.

எதற்கும் இருக்கட்டும் என நானும் ஆறுவும் இன்னொரு வண்டியில் அவனை ஃபாலோ செய்யத் தொடங்கினோம். அமைதியான திருவான்மியூர் எலியட்ஸ் பீச்சிற்கு ஏழு சென்றபோது அங்கு வெகு சிலரே இருந்தார்கள். . வண்டியை நிறுத்துவிட்டு ஸ்டைலாக இறங்கி நடந்தான் ஏழு. மிஸஸ். ஏழு வருவதற்குள் இருந்த சில பேரும் எஸ் ஆனார்கள். இனி அவர்களுக்குள் நடந்த உரையாடல்.

ரொம்ப நேரமா வெயிட் பண்றியா?

உனக்காக 25 வருஷம் காத்திருந்த எனக்கு 25 நிமிஷம் ஒண்ணுமேயில்ல.

(சிரிக்கிறார்) என்ன கிஃப்ட்?

என்னையே கிஃப்ட் wrap பண்ண சொன்னேன். முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

யூ நாட்டி. என்ன இருக்குன்னு சொல்லு.

நீயே பாரு.ஹேப்பி பர்த்டே, அகைன்.

(பிரித்து பார்க்கிறார். உள்ளே ஒரு குளோப் பொம்மை)

ஆமா செல்லம். உனக்கு தர ஒரு நல்ல கிஃப்ட் உலகம் ஃபுல்லா தேடினேன். கிடைக்கல. அதான் உலகத்தையே உனக்கு கிஃப்ட்டா தந்துட்டேன்.

(உணர்ச்சிவசப்படுகிறார் ஏழுவின் தோழி. விடாமல் தொடர்ந்தான் ஏழு)

எல்லா சாலைகளும் ரோமை நோக்கின்னு சொல்வாங்க. அது போல எல்லா பூக்களும் உன்கிட்ட வரும்னு நம்பித்தான் பூக்குது. ஆனா கொஞ்ச பூக்களுக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்குது, இந்த பூக்கள் போல (இப்போது பொக்கேவை தருகிறார் காதல் நாயகன்)

(ஒரு கையில் கிஃப்ட், ஒரு கையில் பொக்கேயென இப்போது இன்னும் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு ஏழுவைப் பார்க்கிறார் பர்த்டே பேபி)

உன் கையில் பூக்கள பார்க்கிறப்ப “செடியில்தானே பூக்கும் பூக்கள்?இன்றெப்படி பூவிலே  பூக்கிறது?”ன்னு கவிதை எழுதலாம் போலிருக்குடா

”ஏழு” (என்று நா தழுதழுக்க ஏதோ சொல்ல வந்தவளை கைக்காட்டி நிறுத்த சொன்னான்)

இரு. நான் முடிச்சுடறேன். உனக்காக நிறைய எழுதி வச்சிருக்கேன். ”முத்தத்தைத்தான் பிறந்த நாள் பரிசாக கொடுக்கலாம் என்றிருந்தேன். எனக்காக இன்று பிறந்தவளை வருடம் முழுவதும் முத்தமிடலாம். இன்றாவது வேறொன்றை தரலாம் என மாற்றினேன்”

நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளேன்

ட்ரீட் தானே? உன்னை இது போன்ற ரம்மியமான வேளையில் பார்ப்பதே விஷுவல் ட்ரீட் தானே? இதை விடவா நல்ல ட்ரீட் இருந்துவிடப் போகிறது?

(இப்போது அவரின் கண்களில் லேசாக நீர் அரும்பியிருந்தது. ஏழுவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்திருப்பதாக ஆறு சொன்னான். ஆம். அவள் கண்கள் கலங்கியிருந்தது. இப்போது அவள் கிஃப்ட்டையும், பொக்கேவையும் தூர வைத்துவிட்டு ஏழுவை நெருங்கினாள். கைகளைப் பற்றினாள். ஏழுவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அடுத்த ஆயுதத்தை ஏவினான்)

வைரம் உருவாக பல வருஷம் ஆகுமாமே? நீ எப்படி செல்லம் 10 மாசத்துல?

ஏழு ப்ளீஸ்.

(அடுத்த காட்சி கிஸ்தான் என பெட் கட்டினான் ஆறு)

என்ன அம்மு? என்ன வேணும் சொல்லு. நான் உன்னை எவ்ளோ காதலிக்கிறேன் தெரியுமா? உயரம், அகலம், நீளம், எடையை எல்லாம் அளக்கலாம். காதலை அளக்க முடியுமா?அது இந்த கடலை விழ பெரியது. ஆழமானது

(கண்ணில் நீர்வர, கைளை பிடித்துக் கொண்டு தோழி சொன்னாள்)

ப்ளீஸ்டா. மொக்கை போடாத. என்னால் தாங்க முடியல.

29 கருத்துக்குத்து:

செல்வா on September 16, 2010 at 5:05 PM said...

இன்னிக்கு நான் தான் முதல் ..!! வென்றுவிட்டேன் ..!!

செல்வா on September 16, 2010 at 5:07 PM said...

//எல்லா பூக்களும் உன்கிட்ட வரும்னு நம்பித்தான் பூக்குது. ஆனா கொஞ்ச பூக்களுக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்குது, இந்த பூக்கள் போல //

கலக்கல் அண்ணா .!! செம செம ..

செல்வா on September 16, 2010 at 5:08 PM said...

//ப்ளீஸ்டா. மொக்கை போடாத. என்னால் தாங்க முடியல.//
ஹி ஹி .!!

சுசி on September 16, 2010 at 5:11 PM said...

ஹீரோ.. அப்பப்போ ப்ளாக் பக்கமும் வாங்க சார்.. பதிவுலகத் தளபதி எழுதாம இருக்கலாமா??

ரொம்ப நல்லா இருக்கு.. காட்சிப்படுத்தி படிச்சுப் பார்த்தேன்.. செம சிரிப்பு.. ஏழு ஃபோட்டோ ஒண்ணு போடுங்களேன் ப்ளீஸ்..

Unknown on September 16, 2010 at 6:10 PM said...

ப்ளீஸ்டா. மொக்கை போடாத. என்னால் தாங்க முடியல. ..

தராசு on September 16, 2010 at 6:17 PM said...

இங்க பார்றா, சுய அனுபவத்தையெல்லாம் ஒருத்தரு ஏழு பேர்ல எழுதினிக்கறாரு...

Anbu on September 16, 2010 at 6:21 PM said...

:-))

ILA (a) இளா on September 16, 2010 at 6:40 PM said...

பாவா, இன்னாத்துக்கு நீ ஒன் கத எல்லாம் ஏழு பேர்ல எயுதினிக்கீற. சொம்மா ஒன்பேர போட்டே எயுது

தெய்வசுகந்தி on September 16, 2010 at 8:50 PM said...

//இங்க பார்றா, சுய அனுபவத்தையெல்லாம் ஒருத்தரு ஏழு பேர்ல எழுதினிக்கறாரு...//
ரிப்பீட்டேய்!!!!!!!!

அன்புடன் அருணா on September 16, 2010 at 9:02 PM said...

hahahahaha!super!

அன்பரசன் on September 16, 2010 at 9:22 PM said...

//வைரம் உருவாக பல வருஷம் ஆகுமாமே? நீ எப்படி செல்லம் 10 மாசத்துல?//

இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரில?

பிரதீபா on September 16, 2010 at 10:26 PM said...

//கையில் அழகிய பொக்கேவும், ஒரு நல்ல கிஃப்ட்டும், கூடவே தோழி அப்டேட்ஸில் உருவிய சில வரிகளும்,பாலாஜியின் பைக்கும், அதோடு முந்தைய நாளின் கிங்ஃபிஷர் தந்த போதையில் மிச்சத்தையும் எடுத்துக் கொண்டு// அடடா..என்ன நரேஷனு என்ன நரேஷனு ! நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா !!

சிவராம்குமார் on September 16, 2010 at 10:31 PM said...

ஆரம்பத்திலே இவ்ளோ பிட்டு இருக்கும்போதே நெனச்சேன், கிளைமாக்ஸ் காமடிதான்னு! சூப்பர்!

Kafil on September 16, 2010 at 11:05 PM said...

kalakkal

மகேஷ் : ரசிகன் on September 16, 2010 at 11:07 PM said...

டக்கரு.

பரிசல்காரன் on September 16, 2010 at 11:51 PM said...

ஏழு + தோழி அப்டேட்ஸா?

நல்லாதான் இருக்கு...

செல்ல நாய்க்குட்டி மனசு on September 17, 2010 at 8:23 AM said...

//ப்ளீஸ்டா. மொக்கை போடாத. என்னால் தாங்க முடியல.//

அது .....

Anonymous said...

//(கண்ணில் நீர்வர, கைளை பிடித்துக் கொண்டு தோழி சொன்னாள்)//
இதுக்கு பேர்தான் திணற திணற அடிக்கிறதா :)
கலக்கல் சகா!

Mohan on September 17, 2010 at 10:42 AM said...

//எல்லா சாலைகளும் //

எல்லா நதிகளும்னுதானே வரணும் :-)

ஏழு+தோழி மிகவும் நன்றாக இருந்தது!

தாரணி பிரியா on September 17, 2010 at 11:47 AM said...

இந்த டயலாக் எல்லாம் ஏழுவுக்கு நீங்கதானே சொல்லி தந்திங்க :)

தாரணி பிரியா on September 17, 2010 at 11:48 AM said...

அப்ப அப்ப ப்ரெண்டையும் பாருங்க. ஏழு அப்டேட்ஸை ஏழு நாளைக்கு ஒரு தடவையாவது போடுங்க கார்க்கி :)

Sen22 on September 17, 2010 at 11:52 AM said...

எனக்கும் கண்ணுல தண்ணீர் வந்துடுச்சு..
:))) சிரிச்சு சிரிச்சு..

"ஏழுவின் தோழி"

ஏழுக்கேத்த ஜோடி..

பொன்கார்த்திக் on September 17, 2010 at 12:32 PM said...

:)

Karthik on September 17, 2010 at 7:31 PM said...

தெய்வமே!

:)

கார்க்கிபவா on September 18, 2010 at 12:38 PM said...

அனைவருக்கும் நன்றி

சங்ககிரி ரமேஷ் on September 19, 2010 at 8:33 PM said...

சூப்பர் கார்க்கி..Laughed my heart அவுட்..

thamizhparavai on September 25, 2010 at 2:33 AM said...

ஏழு + தோழி அப்டேட்ஸ்

ரசித்honey. different flovour.

தேவா on October 16, 2010 at 6:11 PM said...

சினிமால வர ஜோக்குக்கு கூட நான் இப்படி சிரிச்சதில்லை சகா.
யாரு இந்த ஏழு?. ஏற்க்கனவே ஒருத்தர் கேட்டிருக்கார். நானும் கேக்கறேன் ஏழுவோட போட்டோ குடுங்க சகா.

முரளிகண்ணன் on October 18, 2010 at 2:42 PM said...

கலக்கல் கார்க்கி

 

all rights reserved to www.karkibava.com