Sep 14, 2010

கசக்கி எறியப்பட்ட காகிதங்கள் (குறும்படம்)


 

சில பல நாட்களாக ரொம்ப பிசி நான். ஆம். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் என்றும் சொல்லலாம். உங்கள் ஆர்வம் புரிகிறது. இருந்தாலும் படத்தைப் பார்க்கும் முன் இதைப் படித்துவிட்டு செல்வது உசிதம். தொடர்ச்சியாக எப்படி இவ்வளவு மொக்கையாக படம் எடுக்க முடிகிறது? அதை தைரியமாக வலையேற்றவும் முடிகிறது என்ற கேள்வி உங்களில் பலருக்கோ, எல்லோருக்குமோ இருக்கலாம். அதற்கான பதிலை சொல்ல முயற்சிக்கிறேன்.

ஒரு நல்ல கவிதையை எழுதும் முன் ஒரு கவிஞன் எத்தனை காகிதங்களை கசக்கி எறிவான்? அந்த காகிதங்கள் தாங்கிய வரிகளை வாசிக்கும் பாக்கியம் அந்த கவிஞனுக்கு மட்டும்தானே கிட்டும்? ஆனால் நாங்கள் இணையத்தின் வசதிகளை பயன்படுத்தி உங்களுக்கு தருகிறோம். ஆம். இந்தப் படங்கள் எல்லாம் ஒரு நல்ல கவிதை எழுதுமுன் நாங்கள் கசக்கி எறியும் காகித குப்பைகள். உஸ்ஸ்ஸ்.. கண்ணை கட்டுதா? இருங்க.

படம் எடுக்கும் ஆர்வம் எல்லோரையும் போல எனக்கும், ஆதிக்கும் உண்டு. அதை செயல்படுத்தி பார்த்த முதல் அனுபவம்தான் ”நீ எங்கே”. எந்தவித முன்னேற்பாடும் இன்றி, மொக்கை கேமிராவில், ஒரு நள்ளிரவில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டது அது. அதைத் தொடர்ந்து ஓரளவிற்கு கதையுடன் ஒரே இரவில் படமாக்கப்பட்டது “இரவின் நிறம்”. அதில் சில கேமரா கோணங்கள் நன்றாக இருப்பதாக வந்த பின்னூட்டங்கள் இன்னும் ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் ஆடியோ சொதப்பியதால் படம் ஹிட் ஆகவில்லை. கற்றோம். அடுத்த கட்டமாக ஒரு புது கேமரா வாங்கினார் என் இயக்குனர். நல்லதாக ஒரு எடிட்டிங் மென்பொருள் வாங்கினார். ஆன் த ஸ்பாட் டப்பிங்கை மாற்றி, பிண்னனி குரல் சேர்க்க முடிவு செய்தோம். அதற்கு தேவையான மைக்கும் வாங்கியிருக்கிறோம். அதை எல்லாம் இந்தப் படத்தில் பயன்படுத்தி இருக்கிறோம்.

நிச்சயம் ஒரு நல்ல குறும்படம் எடுப்பதற்கான முழு உழைப்பையும் நாங்கள் இதுவரை கொடுக்கவில்லை. ஒரு படமெடுக்கும் போது வரும் பிரச்சினைகள் பற்றி தெரிந்துக் கொள்ள இதையெல்லாம் செய்கிறோம். கேமரா வெட்கம், தொழிநுட்ப பிரச்சினைகள் போன்ற பல விஷயங்களில் நாங்கள் அடுத்தக்கட்டம் செல்ல இந்த 3 படங்கள்தான் உதவி செய்தன. என்றாவது ஒரு நாள் நிச்சயம் நாங்கள் ஒரு முழுமையான குறும்படம் எடுப்போம். படம் நன்றாக வருகிறதோ இல்லையோ, எங்களின் 100% உழைப்பை தந்து அதை உருவாக்குவோம். அப்போது நாங்கள் இப்போது செய்வது போன்ற நகைச்சுவை கலாட்டாக்கள் ஏதுமின்றி வெளியிடுவோம்.

அதுவரை செய்யும் கலாட்டாக்களை ரசிக்க முடிந்தால் ரசிக்கமாறும், இல்லையேல் ஒதுக்கிவிட்டு செல்லுமாறும் கேட்டுக் கொள்கிறோம். இதுவும் ஒரு மொக்கை படம் தான். ஆனால்காதல் களம். பார்த்துவிட்டு தவறாமல் கருத்துகளை சொல்லுங்கள்.. ரெடி..ஜூட்

55 கருத்துக்குத்து:

கார்க்கி on September 14, 2010 at 10:36 PM said...

தயாரிப்பாளர்கள், ரசிகர் மன்றம் ஆரம்பிக்க நினைப்பவர்கள் எல்லோரும் என்னை தொடர்பு கொள்ளலாம். ஆட்டோ அனுப்ப நினைப்பவர்கள், கொலைவெறியோடு சுத்துபவர்கள் எல்லாம் இயக்குனரை தொடர்பு கொள்ளவும்.

Ŝ₤Ω..™ on September 14, 2010 at 10:50 PM said...

வாத்தியாரே.. கலக்கல்..

S.Gopinath on September 14, 2010 at 11:06 PM said...

நல்லா இருக்கு பாஸ்...

ஆலோசனை:
பரிசல்காரன்
கேபிள்சங்கர்
அப்துல்லா

இவங்க என்ன ஆலோசனை கொடுத்தாங்க?

கொஞ்சம் டப்பிங் வாய்ஸ் வாய் அசைவுகளுக்கு செட் ஆகலன்னு நினைக்கிறேன்.

என்ன பில்ட்அப்பு கொடுக்குறாங்கப்பா...

தர்ஷன் on September 14, 2010 at 11:09 PM said...

நல்ல முயற்சி சகா,
நேர்த்தி அதிகரித்திருப்பது நிஜம். கடைசி வரியில் ட்விஸ்ட் வைத்திருக்கும் ஒரு பக்க கதைகளின் வடிவமே குறும்படத்திற்கு ஏற்றது என நினைக்கிறேன். அதையே முயன்றிருக்கிறீர்கள். இனி வரும் படங்கள் நிச்சயம் இன்னும் தரமானதாகவே இருக்கும் என நம்புகிறேன்.
வாழ்த்துக்கள்.

Sukumar Swaminathan on September 14, 2010 at 11:16 PM said...

ஒளிப்பதிவு சூப்பர்.. கார்க்கியின் முகபாவனைகள் இம்முறை மெருகேறியுள்ளது. கிளைமாக்ஸ் எதிர்பாராதது... முயற்சி ஒருநாள் திருவினையாக்கும்... வாழ்த்துக்கள்...

தமிழ்ப்பறவை on September 14, 2010 at 11:30 PM said...

சகா... நல்ல அட்டெம்ப்ட்...
முயற்சி கை கூடி இருக்கு. அடுத்த தடவை நல்ல கதையா ட்ரை பண்ணுங்க...வெண்பூவுக்கு நிறைய பிரியாணி வாங்கிக் கொடுத்தா கற்பனை ஊத்துவாரு.அதுல கொஞ்சம் பிடிச்சுக்குங்க...
ஆதிக்கு வாழ்த்த்துக்கள்..ஆலோசனை நிறையக் கேளுங்க...கொஞ்சமாப் பண்ணுங்க...

சுசி on September 14, 2010 at 11:38 PM said...

//இந்தப் படங்கள் எல்லாம் ஒரு நல்ல கவிதை எழுதுமுன் நாங்கள் கசக்கி எறியும் காகித குப்பைகள். //

அடடடடடா.. கவிதை..

//கேமரா வெட்கம், //

யாருக்கு?? உங்களுக்கா??

//எங்களின் 100% உழைப்பை தந்து அதை உருவாக்குவோம். //

எதிர்பார்ப்பு ஜாஸ்தி ஆகுது.

நடிப்பு கலக்கல். முன்னாடி கடிதம் எழுத குடுத்த பில்டப் சூப்பர்..

கடிதம் பாக்கெட்ல வச்சுட்டு சின்னதா ஒரு துள்ளல் டைரக்டர் சொல்லி செஞ்சதா??

இணைய தளபதிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

இயக்குனருக்கும் குழுவினருக்கும் பாராட்டுக்கள்.

இரா கோபி on September 14, 2010 at 11:38 PM said...

கார்க்கியின் நடிப்பு நன்றாக உள்ளது.

ஆதியின் இயக்கம் நன்றாக உள்ளது.

கேமரா சூப்பர்.

கதை - இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் (வெண்பூ, கோபித்துக் கொள்ளாதீர்கள்)

இன்னும் நல்ல படமாக எடுங்கள் அடுத்த முறை. வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் on September 14, 2010 at 11:39 PM said...

கார்க்கி போனபடத்துக்கும் இந்த படத்துக்கும் நிறைய different நடிப்பு(கடிதம் வாசிக்கும் இடம் தவிர்த்து)மெருகு கூடிடுச்சு...

எடிட்டிங் இசை கதை ஒளிப்பதிவு ரொம்ப நல்லா வந்திருக்கு..

நிறைய கதை எழுதுற ஆதியோட கதையில அடுத்தவாட்டி ட்ரை பண்ணுங்க வெண்பூவோட கதையும் நல்லா இருக்கு

கடைசியில உங்களோட கடிதம் போஸ்ட்டும் இதுவும் ஒண்ணுதான்னு தெரிஞ்சப்போ ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல!

அடுத்தகட்ட முயற்சிகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!

அப்றம் லாஸ்ட்டா ஒண்ணு இந்த போஸ்ட்டுக்கு வச்சிருக்கிற தலைப்பு அருமை அதோட விளக்கமும்!

வெறுமை on September 14, 2010 at 11:59 PM said...

Well done !! jst one thing..voice is not matching...

vinu on September 15, 2010 at 12:29 AM said...

வாழ்த்துக்கள் சகா உங்கள் உழைப்பிற்க்கு வியாழன் இரவு நான் சென்னைலிருந்து விடை பெறுகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் on September 15, 2010 at 12:37 AM said...

வாழ்த்துகள்

நியோ on September 15, 2010 at 12:42 AM said...

இனிய அனுபவம் தந்தது உங்கள் குழுவினரின் படைப்பு!
காதல் கடிதமெழுத யோசிக்கும் பொழுது புகை பிடிக்காமைக்கும்,வண்டியில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணிந்தமைக்கும் இயக்குனருக்கு நன்றிகள்!
படமாக்கிய காமிரா,டப்பிங் மைக் விலை குறித்து பகிர்ந்து கொள்ளுங்களேன்.நண்பரொருவர் கேட்கச் சொன்னார்.
கடிதமெழுதும் பொழுது ஒலித்த இசை இனிமை.ஆனால் கொஞ்சம் நேரம் அதிகம் கேட்டால் தூங்கி விடுவேன் போலிருந்தது ...
சரி ...பறவை ஒன்று உங்களை கடத்து செல்ல பாலத்தில் எத்தனை மணி நேரம் தவம் செய்தீர்கள் தோழர் ?!
அனைவருக்கும் வாழ்த்துக்கள்;குறிப்பாக இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும்!
நன்றி!

மகேஷ் : ரசிகன் on September 15, 2010 at 12:56 AM said...

நைஸ்.... :))))


தோழி அப்டேட்ஸ் தான் எழுதறீங்களாக்கும்னு நெனச்சுட்டேன்....

பா.ராஜாராம் on September 15, 2010 at 4:47 AM said...

ஆதி தளத்தில் பார்த்தேன்.

urs expressions, r simpy nice & oppt! great, go a head..

♥ RomeO ♥ on September 15, 2010 at 7:23 AM said...

:) Nice

நாய்க்குட்டி மனசு on September 15, 2010 at 8:18 AM said...

technical aspects நல்ல முன்னேற்றம்.
பேச்சு தெளிவாக இருக்கிறது. பாராட்டு.
நல்ல தொடக்கம், தொடருங்கள்.
விரைவில் சின்னத் திரையில் எதிர்பார்க்கிறோம்.

முதல் பின்னூட்டத்தில் என்ன ஒரு வில்லத்தனம்

Balaji saravana on September 15, 2010 at 8:26 AM said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகா!
படம் ஓகே கார்க்கி :)

அவிய்ங்க ராசா on September 15, 2010 at 9:02 AM said...

நல்ல முயற்சி கார்க்கி, ஒரு சின்ன விமர்சனம்..

படத்தில் கேமிரா, இசை நன்றாக உள்ளது. கண்டிப்பாக கவருகிறது.

உங்களின் நடிப்பு, ஆரம்பத்தில் கலக்க்கல்.. ஆனால் உங்கள் நண்பரோடு பேசும்போது, ஏனோ, இயல்பாக தெரியவில்லை. உங்கள் நண்பர் நடிப்பு படு இயல்பு..சூப்பராக நடித்துள்ளார்.

முடிவாக இது ஒரு நல்ல முயற்சி. கூடிய சீக்கிரம் கலைஞர் தொலைக்காட்சியில் பார்க்க வாழ்த்துக்கள்...

Sen22 on September 15, 2010 at 9:19 AM said...

நல்லா இருந்தது கார்கி..
ஆனா ரொம்ப யோசிச்ட்டீங்க போல...

sivakasi maappillai on September 15, 2010 at 9:42 AM said...

ந‌ல்லா இருந்தது கார்க்கி... உங்க‌ நடிப்பு.....


இணைய‌ த‌ல‌வ‌லி கார்க்கி ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்
மகாராஷ்ட்ரா கிளை (எங்க‌ளுக்கு வேறுஎங்கும் கிளைக‌ள் கிடையாது)

Saravana kumar on September 15, 2010 at 9:51 AM said...

Nice

Saravana kumar on September 15, 2010 at 9:52 AM said...

nice

கார்க்கி on September 15, 2010 at 10:07 AM said...

நன்றி சென். உங்க நடிப்புதான் பேசப்படுது..ஹிஹிஹ்

நன்றி கோபி. இந்த கதைக்கு 4 க்ளைமேக்ஸ் யோசிச்சோம். நண்பனின் காதலுக்கு இவன் எழுதி கொடுப்பது போல. அதெல்லாம் எடுக்கவில்லை. ஆனா ஆலோசனைகள் தந்தாங்க. டப்பிங், நல்ல பாடம். அடுத்த முறை சரியாகிவிடும்

நன்றி தர்ஷன்.

சுகுமாறன், நன்றி. எஙக்ளின் ஆஸ்தான பிஆரோ நீங்கதான் சகா :)

தமிழ், நிறைய ஸ்க்ரிப்ட் இருக்கு. ஆனால் எடுக்க தெரியாம சொதப்பகூடாதுனுதான் இந்த மாதிரி களமா எடுக்கிறோம். நம்பிக்கை வந்துட்டுச்ச்ன்னா நல்ல கதையைத்தான் எடுப்போம்.

சுசி, நன்றி... அட எனக்குதாங்க வெட்கம். கடைசில லெட்டர் படிக்கும்போது சிரிக்கிறேன் பாருங்க.. :(

கார்க்கி on September 15, 2010 at 10:17 AM said...

கோபி, வெண்பூ நல்ல நல்ல கதைகள் சொன்னார். நாங்கதான் பிராக்டீஸ் மேட்ச்ன்னு இதை தேர்வு செய்தோம். நன்றி

வசந்த், நன்றி. அடுத்த படம் சீரியஸ் முயற்சிதான்.

வெறுமை, நன்றி. டப்பிங் சரியாக செட் ஆகல. அடுத்த முறை அதையும் சரி செய்துவிடுவோம்

வினு, நன்றி. எபப்டியாவது இன்று மாலை சர்ப்ரைஸ் விசிட் தருகிறேன் :))

நியோ, நன்றி. எனக்கு புகைக்கும் பழக்கம் இல்லை. அது போல ஹெல்மேட் எப்போதும் அணிவது வழக்கம். எனவே அது தானாக அமைந்துவிட்டது. அந்த பறவை இய்க்குனரின் சாமர்த்தியம். கவனித்து கூறியது மிக்க மகிழ்ச்சி.
சோனி கேமரா வாங்கினார். விலை 38000 என நினைக்கிறேன். எடிட்டிங், AVS editor 5.1. மைக் சாதரணமான மைக்தான்

மகேஷ், ஹிஹிஹி.. நன்றி

பா.ரா, நன்றி தல.மகிழ்ச்சியா இருக்கு

நன்றி ரோமியோ

நன்றி நாய்க்க்குட்டி.. முன்னேறுகிறோம் என்று தெரிகிரது :)

நன்றி பாலாஜி.

நன்றி ராசா. உண்மைதான். நான் சிரிப்பது திரையில் அப்பட்டமாக தெரிகிரது

நன்றி சென் :)))

சிவகாசி, ங்கொயயால. தாவுத்கிட்ட சொல்லி போட்டுடுவேன்

நன்றி சரவணகுமார்

Anbu on September 15, 2010 at 10:18 AM said...

நல்லா இருக்கு அண்ணே...

பட் உங்க காஷ்டியூம் கொஞ்சம் டல்லா இருக்கு..

தராசு on September 15, 2010 at 10:55 AM said...

அய்யோ, ஆபீஸ்ல பாக்க முடியாம சதி பண்ணீட்டானுங்களே.

பிரதீபா on September 15, 2010 at 11:26 AM said...

அட சாமி.. நீங்கெல்லாம் ஜகஜ்ஜால ஜிக்கர்கள் !! இந்த மாதிரி ஒரு யோசனை யாருக்கு வரும்? என்ன கதை என்ன கதை !!
Voice Sync அங்கங்கே சரியில்லைன்னாலும் recording நல்லா இருக்குங்க.. இந்த தடவை SLR ல படம் காட்டிட்டீங்க.
உண்மையா சொல்லப் போனா ஒரு நல்ல ஒன் லைனர் ஸ்டோரி.

Karthik on September 15, 2010 at 12:07 PM said...

நெஜமாவே நல்லாதான் போய்க்கிட்டு இருந்தது. கடைசில மொக்கை போடும்வரை. எனிவே வாழ்த்துக்கள் கார்க்கி ஆதிஅண்ணா!

பீட்டர் பட்டறையில் விரிவான விமர்சனம் எதிர்பாருங்கள். :))

சந்தோஷ் = Santhosh on September 15, 2010 at 1:15 PM said...

கார்கி எல்லாம் சொல்லிட்டாங்க இருந்தாலும் நானும் சொல்லுறேன்.. நல்லா இருக்கு.. கடசியில எதிர்பாராத திருப்பம் :)..

sivakasi maappillai on September 15, 2010 at 1:17 PM said...

//சிவகாசி, ங்கொயயால. தாவுத்கிட்ட சொல்லி போட்டுடுவேன்

///

ஆம்லெட்டா? ஆஃப்பாயிலா???

உன் ரசிகர் மன்ற மாநில தலைவரையே மிரட்டி பார்க்கிறாயா??? ஆக்ஷன் ஹீரோ ஆக முயற்சிக்காதே... காதல் ஹீரோவாக இருந்த பரத் ஆக்ஷன் ஹீரோவாகி ஆன கதையை நினைத்துப்பார்...........


2016ல் உன்னை முதல்வராக்கபோவது என் போன்ற உயிர் தொண்டர்கள்தான்..... மறந்து விடாதே

குசும்பன் on September 15, 2010 at 1:35 PM said...

ஒரே நாளில் ஏ செண்டரிலிருந்து சி செண்டருக்கு தூக்கிய படத்தை இன்னைக்குதான் பார்க்கிறேன்..

யாரு ஏ யாரு சி என்பதை நீங்களே முடிவு செஞ்சிக்குங்க:)))

vinu on September 15, 2010 at 4:43 PM said...

அப்புறம் நீங்க படிச்ச கடிதத்தில் நடுநடுவே 'மானே','தேனே' போட்டு படிச்சு இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்

ஆதிமூலகிருஷ்ணன் on September 15, 2010 at 5:16 PM said...

படம் சூப்பர். இயக்குனர் உண்மையிலேயே கலக்கியிருக்கிறார். திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிடிங், பின்னணி எல்லாமே சூப்பர்.!!

நீர்ப்புலி on September 15, 2010 at 5:24 PM said...

ஒரு நல்ல மொக்கையான குறும்படம்.
படத்தின் துல்லியம் சூப்பர்.
ஒளி/ஒலி பதிவும் நல்லா இருந்தது.

கார்க்கி டிரஸ் மாத்துரது சென்ஸார் கட்டிங்கா?

ஒரு ரெண்டு எடத்துல கன்டிநியுட்டி சரி இல்ல.௦௦
1. 00:29,00:30 அப்புறம் 00:31 ல பேநாவோட கோணம்.
2. 01:54 வரைக்கும் பேடில் இருக்கும் பேப்பர் மடித்த கோடுகள் தெரியல. ஆனா, 01:57 ல் மடிப்பு தெரியுது.

மற்ற படி, நல்ல முன்னேற்றம்.
-தினா

பாலா on September 15, 2010 at 6:29 PM said...

வழக்கமான பீலிங்க்ஸ் மொக்கையோ என்று கடுப்பாகிவிட்டேன். நல்லவேளை அப்படி எதுவும் இல்லை. கிளைமாக்ஸில் எக்ஸ்பிரஷன் கொஞ்சம் குறைவு. சின்ஸியராக படிப்பது போல காட்டி இருக்கலாம். தள..ய விட நல்லா நடிக்கிறீங்க. ஹி ஹி.. வாழ்த்துக்கள்.

king on September 15, 2010 at 7:19 PM said...

nijamma rombo nalla irukku nanba... keep tryin..by d way thozhi pic super!!!

அமுதா கிருஷ்ணா on September 15, 2010 at 8:51 PM said...

then chennai rasigar mandram..cash eppadi anupuveenga..nerla or ac number tharataa..

தாரணி பிரியா on September 15, 2010 at 9:36 PM said...

ஒளிப்பதிவு நல்லா தெளிவா இருக்கு :). போன படத்தை விட இது நல்லா இருக்கே :)

அன்பரசன் on September 15, 2010 at 10:56 PM said...
This comment has been removed by the author.
அன்பரசன் on September 15, 2010 at 10:56 PM said...

படத்தோட கதை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.

Maduraimalli on September 15, 2010 at 10:57 PM said...

Varungala mudhalvar Annan Karki vaalga.. 2016 CM namma katchi thaan

vilakkam on September 15, 2010 at 11:36 PM said...

Respected sir,
I am suffering from fever after seeing the short film "கசக்கி எறியப்பட்ட (கார்க்கி) காகிதங்கள் (குறும்படம்)". i am unable to attend the blog. So, i request you to kindly isolate from the blog for 4 days,

yours obediently,
vilakkam

தெய்வசுகந்தி on September 16, 2010 at 2:21 AM said...

சூப்பர்!!!

கார்க்கி on September 16, 2010 at 11:32 AM said...

அனைவருக்கும் நன்றியோ நன்றி

"ராஜா" on September 16, 2010 at 11:39 AM said...

சகா உங்களை இந்த படத்துல பாத்தப்ப , நாளைய தீர்ப்புல அவர பாத்தா மாதிரியே இருந்துச்சி ...
(ஹெய் இது பாராட்ட இல்லை திட்டான்னு தெரியாம குழம்பபோராறு நம்ம சகா... )

siva on September 16, 2010 at 12:13 PM said...

47

siva on September 16, 2010 at 12:13 PM said...

48

siva on September 16, 2010 at 12:13 PM said...

49

siva on September 16, 2010 at 12:16 PM said...

50..
எங்கள் ஆபீஸ் நிர்வாகம் அனுமதி கொடுக்கவில்லை ..athanal. .

விரைவில் பார்த்துவிட்டு கமெண்ட்ஸ் போடுகிறேன் ..
தானே தலைவர் .
எங்கள் அண்ணன் கார்க்கி.
நாளைய ஏலம் புரட்சி புயல்..
கார்க்கி.
வாழ்க வாழ்க
...

siva on September 16, 2010 at 12:16 PM said...

51
எங்கள் அண்ணன் கார்க்கி.
நாளைய இளம் புரட்சி புயல்..
கார்க்கி.
வாழ்க வாழ்க

Sen22 on September 17, 2010 at 12:01 PM said...

//"ராஜா" on September 16, 2010 11:39 AM said...
சகா உங்களை இந்த படத்துல பாத்தப்ப , நாளைய தீர்ப்புல அவர பாத்தா மாதிரியே இருந்துச்சி ...
(ஹெய் இது பாராட்ட இல்லை திட்டான்னு தெரியாம குழம்பபோராறு நம்ம சகா... )//

Repeataiiiiiiiiiiii!!!

sahana on September 18, 2010 at 8:05 AM said...

இதெல்லாம் குறும்படமா!!!

பட்...

முயற்சி உடையார்...
இகழ்ச்சி Adyar!!!

DHANS on September 18, 2010 at 10:46 AM said...

aஆரம்பத்துல கொஞ்சம் மெதுவா போனாலும் கடசில சட்டுன்னு முடிஞ்சுடுச்சு...

நல்லார்க்கு கார்க்கி ரசிகர் மன்றம் வைத்து நாலு பேர்க்கு நல்லது பண்ணும் எதாவது அமௌன்ட் இருந்தா வெட்டுங்க

mvalarpirai on September 18, 2010 at 4:47 PM said...

vijay padam mathiri iruku..(mokkaiya) :)

 

all rights reserved to www.karkibava.com