Sep 11, 2010

பாஸாகிவிட்டான் பாஸ்கரன்


 

சிவா மனசுல சக்தி ஆரம்பத்தில் பல பதிவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தாலும் எனக்கு பிடித்திருந்தது. அந்த நம்பிக்கையில் பாஸ் என்கிற பாஸ்கரணுக்கு முதல் நாளே டிக்கெட் புக் செய்திருந்தேன்.  படம் தப்பித்துவிடும் என்று சொல்லிவிட்டே தொடர்கிறேன்.

Boss-Engira-Bhaskaran

முதல் பாதி முழுவதும் பிச்சைக்காரனின் சில்லறைகள் சிதறிய சத்தம் தான் தியேட்டரில். எதையும் யோசிக்க விடாமல் சிரிக்க மட்டும் வைக்கிறார் இயக்குனர். ராஜேஷின் பிரம்மாஸ்த்திரம் சந்தானம்தான் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஒத்தை வெடியாய் அவர் வெடிக்கும் ஒன் லைனர் பட்டாசுகளைக் கொண்டு 1000 வாலா பின்னியிருக்கிறார் இயக்குனர். முதல் பாதி முழுக்க ஒரே டமடமதான். கதாபாத்திரங்களை மட்டும் நமக்கு அறிமுகம் செய்துவிட்டு கதை என்னவென்பதை சொல்லாமலே இடைவேளை விடுகிறார்கள். முதல் பாதியில் ஒட்டாத ஒரே விஷயம் தலதளபதி சீன் தான்.மாயாஜாலில் அதற்கு யாரும் சிரிக்கவும் இல்லை. ஸ்டார்களின் படத்தைக் காட்டிய போது கைத்தட்டவும் இல்லை.

சரி கதையென்ன? நம்ம பாஸ் வேலை இல்லாமல் சுற்றி வருகிறார். அவர் அண்ணன் கால்நடை மருத்துவர். அம்மாவும், தங்கையும் உண்டு. அண்ணன் அடக்கமான பெண்ணாக பார்த்து திருமணம் செய்துகொள்கிறார். அண்ணியின் தங்கை நயன்தாரா. அப்புறம் என்ன? பாஸுக்கு காதல் வருகிறது. பாவம் வாழ்க்கையில் பொறுப்புதான் வர மாட்டேன் என்கிறது. அண்ணியிடம் பெண் கேட்க, அவர் இவருக்கு என்ன தகுதி இருக்கென்று கேட்டுவிட கோவத்தில் பொட்டியோடு சந்தானம் கடைக்கு வருகிறார். இரண்டாம் பாதியில் “நெருப்பு” போல வேலை செய்து, ஜெயித்து பாஸ்கரன் நாயகியை கைப்பிடிக்க போகிறார் என்றுதான் நினைத்துக் கொண்டேன். ஆனால் இரண்டாம் பாதியின் இரண்டாம் பாதிவரை நக்கலாகவே வாழ்கிறார் நம்ம பாஸு. ஆச்சரியம் என்னவென்றால் உடனிருக்கும் காமெடியன் சந்தானமே ஒரு கட்டத்தில் “டேய் உருப்படற வழிய பாருடா” என்கிறார். நம்ம ஆளு.ம்ஹூம். ஏக் காவ் மேன் ஏக் கிஸான் ரகுதாத்தாவாகவே இருக்கிறார். கடைசியில் ஒரு சப்பை கான்செப்டில் அவர் தொழில் வெற்றி பெற எல்லாம் சுபம் ஆகும் நேரம் வருகிறது. சிவா.ம.ச யில் வைத்த அதே குழப்பத்தை வைக்கிறார் இயக்குனர். படம் முடிந்தது என்று நினைக்கும் போது ஒரு பாடல். 13வது ரீலில் குத்துப்பாட்டு என்பது என்னைப் போன்ற தீவிர விஜய் ரசிகனுக்கே போரடித்துவிட்டது பாஸ். ப்ளீஸ் விட்டுடுங்க என்று கெஞ்ச வைக்கும் பாடல். போகட்டும். பாசுக்கு பிரச்சினை சந்தானம் மூலம் வருகிறது. நயனுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். சிவா.ம.சக்தியில் ஆர்யா மாப்பிள்ளையாக வருவார். இதில் ஜீவா. கோட்டும், சூட்டுமாக அதிரடி எண்ட்ரி கொடுக்கும் காட்சி அருமை. அதை விட சூப்பர் ஆர்யா அவரை டீல் செய்துவிட்டு மச்சான், மாமா ஆனவுடன் அவர் சொல்லும் டயலாக் “மச்சி.ஒரு குவார்ட்டர் சொல்லேன்”. தியேட்டரே ஆர்ப்பரித்த காட்சி அது. கடைசியில் சுபம்.

Arya-and-Nayanthara-in-Boss-Engira-Baskaran   முதல் பாதியில் செஞ்சுரி அடித்தவர்கள் இரண்டாம் பாதியில் ஹாஃப் செஞ்சுரிக்கே திணறுவது வேதனை.  இந்தப் படம் அப்படியே ஒருநாள் கிரிக்கெட் போல எனலாம். முதல் 20 ஓவர் பவர்ப்ளேயில் புரட்டி எடுக்கிரார்கள் சச்சின் சந்தானமும், வீரேந்திர ஆர்யாவும்.. பின் 45வது ஓவர் வரை லொட்டு லொட்டு என திராவிட், லஷ்மண் ரேஞ்சுக்கு மொக்கை. மீண்டும் கடைசி 5 ஓவரில் பேட்டிங் பவர்ப்ளே எடுத்து ஜீவா சிங்கைவை வைத்து ரன் ஸ்கோர் செய்கிறார்கள். ஆக மொத்தம் 300ஐ தொட்டுவிடுகிறது SMS டீம்.

boss-engira-baskaran11

கும்பகோணத்துல ஏதுடா ஏர்போர்ட் என ரப்சர் பார்ட்டியாக சந்தானம். இவரின் சலூன் கடைக்கு பின்னால் கிரி வடிவேலுவின் பேக்கரி போல ஒரு கதை சொல்கிறார்கள். படத்தை தாங்குவதே இவர்தான். தானத்தில் சிறந்தது கண்தானம், பெரியது மைதானம் என்றெல்லாம் இனி சொல்ல மாட்டார்கள். சந்தேகமேயில்லாமல் சந்தானம் தான். நயன் தாராவுக்கு பாதியில் நிறுத்திய கோவிலை மீண்டும் கட்ட சொல்லலாம். எனக்கு இதில் அழகாகவே தெரிந்தார். யுவன் முதன் 2 பாடல்கள் நச்சென போட்டு பிசியாகிவிட்டார் போலும். கேட்பதில் இருந்த திருப்தி பார்த்தபோது இல்லை. பாஸு பாஸூ பாடல் அட்டகாசமான ஓபனிங். அடடா மழைடா, வா வா நிலவ பிடிச்சி தரவா என தொடர்ந்த யுவன் -நா.மு-ராகுல் நம்பியார் கூட்டணி ”யார் இந்த பெண்” என ஹேட்ரிக் அடித்திருக்கிறது. அழகான மெலடி. கடைசியாக சொன்னாலும் கச்சிதம் எனலாம் ஆர்யாவை. ஜீவா அளவுக்கு பாடி லேங்குவேஜ் கலக்கவில்லை என்றாலும் பாஸு நம் மனதில் பச்சக்கென ஒட்டிக் கொள்கிறார். ஐ.எஸ்.டியாக வரும்போது ஜீவா சொதப்புவது போல் தெரிந்தாலும் லோக்கலாக மாறும் இடத்தில் ஆர்யா, ஜீவா முன்பு டெபாசிட் இழக்கிறார். ஆனால் ஒட்டு மொத்த ஓட்டையும் படம் முழுக்க அள்ளுகிறார். கங்கிராட்ஸ் ஆர்யா.

இயக்குனரின் சாமார்த்தியம் முதல் பாதியில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. இரண்டாம் பாதியில் ஷகீலா காட்சி, இன்னும் சில காட்சிகளை தயவு தாட்சணயமின்றி கத்திரி போட்டிருக்கலாம் பாஸ். கரம் மசாலா என நாட்டுக்கோழியை கருக்கும் வரை வறுத்துக் கொடுக்காமல், சுத்தமான சரவணபவன் மினி டிஃபன் ரேஞ்சுக்கு தந்து அசத்துகிறார். இதே லைனில் போலாம் பாஸ். கொஞ்சம் கணமான கதை மட்டும் எடுத்துக்கோங்க.

ஜாலியா போங்க. ஜாலியா பாருங்க. ஜாலியா வாங்க. பாஸ் நமக்கு நல்ல டைம் பாஸ்..

20 கருத்துக்குத்து:

மகேஷ் : ரசிகன் on September 11, 2010 at 11:43 AM said...

Super.

ப்ரியமுடன் வசந்த் on September 11, 2010 at 12:10 PM said...

சூப்பரு!

இந்த கமல் அமலா சத்யா சீன் மட்டும் இந்த தமிழ் சினிமா விடமாட்டேன்னுதே !!

இரா கோபி on September 11, 2010 at 12:31 PM said...

பாத்தாச்சு பாத்தாச்சு

காவேரி கணேஷ் on September 11, 2010 at 12:33 PM said...

ரொம்ப நாளுக்கு பின்பு ஒரு காமெடி படம் போல.

மோகன் குமார் on September 11, 2010 at 12:43 PM said...

Nice. Particularly comparing with cricket match part. You have written the review in good mood :))

vinu on September 11, 2010 at 3:00 PM said...

ok , i planed to go to this movie on tomorrow with mom, is that much good this movie

சிவராம்குமார் on September 11, 2010 at 4:49 PM said...

இந்தா கெளம்பிட்டோம்ல!!! உதயநிதி ஸ்டாலின் சந்தோஷமா ஹீரோ வேசத்துக்கு ரெடியாவாரு!

Anbu on September 11, 2010 at 4:58 PM said...

"யுவன் -நா.மு-ராகுல் நம்பியார்" அண்ணா தப்புன்னு நினைக்கிறேன்..
"யார் இந்த பெண்" ஹரிச்சரண் பாடியிருக்கிறார்..

சுசி on September 11, 2010 at 5:28 PM said...

// எனக்கு இதில் அழகாகவே தெரிந்தார். //

அவங்க பேரழகி இல்லைப் போல..

//சிவா மனசுல சக்தி ஆரம்பத்தில் பல பதிவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தாலும் எனக்கு பிடித்திருந்தது. //

உங்களுக்கு எப்டி பிடிக்காம போகும்..

பாஸ்கரனுக்கும் இத எழுதினவருக்கும் ஒற்றுமை இருக்கும் போல..

கலக்கல் கார்க்கி.

ஆதிமூலகிருஷ்ணன் on September 11, 2010 at 5:37 PM said...

ரைட்டு, பாத்துடலாம்.

maduri sankaramoorthi on September 11, 2010 at 7:39 PM said...

ippadi patta trackie vaithu namma superstar kamal sarathnnu oru round vanta nalla irukkum

எறும்பு on September 12, 2010 at 10:23 AM said...

Present sir

Sen22 on September 13, 2010 at 2:12 PM said...

அருமையான விமர்சனம்..

ஆதிமூலகிருஷ்ணன் on September 13, 2010 at 7:53 PM said...

பாத்துட்டேன்.. ம்ஹூம், வேலைக்காவலை. :-(

siva on September 14, 2010 at 6:14 AM said...

:)

Karthik on September 14, 2010 at 7:20 PM said...

பார்த்துடறேன். ஆர்யோவோட குரல சமாளிக்கணும். (இதுக்கு நீங்க என்ன பதில் சொல்வீங்கணு தெரியும். வேண்டாம். :P)

S.Gopinath on September 14, 2010 at 11:29 PM said...

"பாஸாகிவிட்டான் பாஸ்கரன்" - அப்படி தான் நானும் நினைக்கிறேன். நண்பர்களோட சேர்ந்து சென்று பார்த்துவிட்டேன்.

தமிழ்ப்பறவை on September 14, 2010 at 11:52 PM said...

//ஆர்யோவோட குரல சமாளிக்கணும். (இதுக்கு நீங்க என்ன பதில் சொல்வீங்கணு தெரியும். வேண்டாம். :P)//

அது......

shiva on September 15, 2010 at 4:35 PM said...

குடுத்த காசுக்கு படம் நல்லாவே இருந்துச்சு அதை விட உங்க விமர்சனம் தூள் அதெப்படி நண்பா உங்கள்ளுக்கு மட்டும் அந்த கலை வருது ,

பிரதீபா on September 17, 2010 at 11:28 PM said...

நான் இதுவரைக்கும் பாத்த படத்திலேயே, 'எந்திரிச்சு போலாமா' ன்னு நெனச்ச ஒரே படம்.. இதெல்லாம் ஒரு படம்ன்னு எப்படித் தான் ஓடுதோ, ஓட்ரானுன்களோ !!

 

all rights reserved to www.karkibava.com