Sep 10, 2010

ட்விட்டர் நிச்சயம் பெண்பால்தான்

  என் ஜொள்ளு கர்நாடகா காவிரி போல என்றாள் தோழி. அவள் கண்ணை தமிழ்நாட்டு காவிரி போல் தண்ணியில்லாம பார்த்துக்கிறேன் என்றேன்.

|||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||---

  இன்று மட்டும்தான் நீ உதட்டுச்சாயம் பூசுவாயா என்றேன் தோழியிடம். ஆம் என்கிறாள். இப்படித்தான் செவ்வாய்க்கிழமை என்ற பெயர் வந்திருக்குமோ?

|||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||---

   என்னை தொழிலதிபரே என்று கிண்டல் செய்வது தோழியின் வழக்கம். சிறுவயதில் அவள் கடித்து வீசிய கற்களைத்தானே உலகம் தேன்மிட்டாய் என வியாபாரம் செய்தது?

|||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||---

வீட்டுக்கு வந்த தோழியிடம் ”இவன் மனசுல எதுவுமே வச்சிக்க மாட்டான்” என்றார் அம்மா. “இல்லை. ஆண்ட்டி.அவன் மாறிட்டான்” என்ற தோழி காதில் சொன்னாள் ”அதான் என்னை வச்சிருக்கியே அம்மு”

|||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||---

தோழியின் அப்பா உஷாரானவர். வீட்டு ஹாலில் “இங்கே தொலையும் இதயங்களுக்கு வீட்டு நிர்வாகம் பொறுப்பேற்காது” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறார்

|||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||---

  ட்விட்டர் நிச்சயம் பெண்பால் தான். இல்லையென்றால் இப்படி மாங்கு மாங்குவென ஃபாலோ செய்வியா நீ என்கிறாள் தோழி. உண்மைதானோ???

|||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||---

  ஒரு நல்ல பழமொழி சொல்லுடா என்றாள் தோழி. “உன் கன்னம் ஆப்பிள். இதழ்கள் ஆரஞ்சு சுளைகள்” என்றேன்.

|||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||---

ஒன்றே குலம். ஒருத்தியே தோழி

யாதும் ஊரே.. யாவரும் தோழி..
காதலும் கவிதையும் பிறர் தர வாரா

|||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||--- |||---|||---

இம்மாத வெளியீடு

20 கருத்துக்குத்து:

Ŝ₤Ω..™ on September 10, 2010 at 12:18 AM said...

first.. firstooii

Ŝ₤Ω..™ on September 10, 2010 at 12:21 AM said...

//அவள் கண்ணை தமிழ்நாட்டு காவிரி போல் தண்ணியில்லாம பார்த்துக்கிறேன் என்றேன்//
சூப்பர் சகா..

// ட்விட்டர் நிச்சயம் பெண்பால் தான். இல்லையென்றால் இப்படி மாங்கு மாங்குவென ஃபாலோ செய்வியா நீ என்கிறாள் தோழி. உண்மைதானோ???//
இன்னுமா உனக்கு தோழியாவே இருக்காங்க???

//ஒன்றே குலம். ஒருத்தியே தோழி

யாதூம் ஊரே.. யாவரும் தோழி.. //
என்ன இது?? ஏதாவது ஒன்றை டிக் செய்யவும்...

சுசி on September 10, 2010 at 1:01 AM said...

வருது விலகு.. இம் மாத வெளியீடு.. ரெண்டுமே எங்கேயுமே எம்ப்டியா தான் இருக்கு.. ஒண்ணுமே தெரியல.. :((

Ŝ₤Ω..™ on September 10, 2010 at 1:26 AM said...

சுசி.. அதான் எம்ப்டியா இருக்குல்ல.. விடுங்களேன்.. வலிய போய் மாட்டிக்காதீங்க.. அம்புட்டு தான் சொல்வேன்..

பரிசல்காரன் on September 10, 2010 at 1:27 AM said...

சரி..!

ILA(@)இளா on September 10, 2010 at 2:17 AM said...

எதிர்வினை, செய்வினை, செய்யப்பாட்டு வினை எல்லாம் இங்கே

இரா கோபி on September 10, 2010 at 7:08 AM said...

இப்படி எதாவது எழுதி என்ன உசுப்பேத்த வேண்டியது. நான் ஒரு நாள் உட்கார்ந்து யோசிச்சு 'மனைவி அமைவதெல்லாம்' எழுத வேண்டி இருக்கு.

ப்ரியமுடன் வசந்த் on September 10, 2010 at 8:46 AM said...

கடிதம் குறும்படம் வெள்ளி விழா காண வாழ்த்துகள் சகா !

தராசு on September 10, 2010 at 9:20 AM said...

ரோமாபுரி பத்தி எரிஞ்சுகிட்டிருக்கும்போது நீரோ மன்னன் என்னவோ பண்ணுனாம்.....

கார்க்கி on September 10, 2010 at 10:19 AM said...

சென், இரண்டு வெவ்வேறு தருணஙக்ளில் ட்விட்டரில் போட்டது..ஹிஹி

சுசி, எனக்கும்தான் தெரியல.. தப்பிச்சோம்ன்னு விடுவீங்களா

பரிசல் சார், வணக்கம்

இளா, நடக்கட்டும் நாச வேலைகள்

கோபி, ஹிஹிஹி..

நன்றி வசந்த்

தராசண்ணே, என்ன ஆச்சு? எங்க? எப்படி?

sathish on September 10, 2010 at 11:07 AM said...

very excellent! especially third one

vinu on September 10, 2010 at 11:17 AM said...

sir sir இதெல்லாம் கொஞ்சம் ஓவரு சார், நீங்க நல்லவரா கெட்டவரா கார்கி

vinu on September 10, 2010 at 11:19 AM said...

இங்கே தொலையும் இதயங்களுக்கு வீட்டு நிர்வாகம் பொறுப்பேற்காது

இதேதான் உங்க blog வாசலிலும் மாட்டி வச்சு இருக்கீங்களா

ப.செல்வக்குமார் on September 10, 2010 at 3:29 PM said...

//சிறுவயதில் அவள் கடித்து வீசிய கற்களைத்தானே உலகம் தேன்மிட்டாய் என வியாபாரம் செய்தது?///

செம செம ..!!

அத்திரி on September 10, 2010 at 3:41 PM said...

ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு................

Sureshkumar C on September 10, 2010 at 3:50 PM said...

//இன்று மட்டும்தான் நீ உதட்டுச்சாயம் பூசுவாயா என்றேன் தோழியிடம். ஆம் என்கிறாள். இப்படித்தான் செவ்வாய்க்கிழமை என்ற பெயர் வந்திருக்குமோ?//

அடடா! அடடா! அப்பிடியே இந்த சனிக்கிழமைக்கும் ஏதாவது வெளக்கம் சொன்னீங்கன்னா தெரிஞ்சுக்குவேன்...

தெய்வசுகந்தி on September 10, 2010 at 7:11 PM said...

//சிறுவயதில் அவள் கடித்து வீசிய கற்களைத்தானே உலகம் தேன்மிட்டாய் என வியாபாரம் செய்தது?///

அட அட அட!!!!!!!!(கொஞ்சம் அதிகமா தெரியல) :-)

பிரதீபா on September 10, 2010 at 11:08 PM said...

சீரியசா சொல்றேன், இந்த விஷயங்களை எல்லாம் ஒரு சாமானியன் சொல்லி இருந்தா 'மொக்கை, வெட்டிநாயம்'ன்னு தான் சொல்லணும்; ஆனா அதையே தோழின்னு சொல்லி எழுதறீங்க பாருங்க, ரொம்ப ரசிக்கற மாதிரி இருக்குங்க.. ஆனா ரொம்ப நாளைக்கு தோழியப் பத்தி மட்டுமே பேசிட்டு இருந்தா brand name போயிரும் கார்க்கி அவர்களே !!

ஆதிமூலகிருஷ்ணன் on September 11, 2010 at 5:42 PM said...

அப்டேட்ஸ் நன்றாக இருந்தாலும் வழக்கத்துக்கு ஒரு மாற்று கம்மிதான். :-)

Sen22 on September 13, 2010 at 2:40 PM said...

//தோழியின் அப்பா உஷாரானவர். வீட்டு ஹாலில் “இங்கே தொலையும் இதயங்களுக்கு வீட்டு நிர்வாகம் பொறுப்பேற்காது” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறார்//

:))))))))))))
Superb....!!!!!!

all rights reserved to www.karkibava.com