Sep 6, 2010

செம போரான பதிவொன்று


 

   சென்ற வாரம் நீயா நானாவில் நடந்த நிகழ்வு பற்றியும், அதை தொடர்ந்து நடந்த சர்ச்சை பற்றியும் எழுதி இருந்தேன். இந்த வாரம் அதற்கு “வருத்தம்”  தெரிவித்திருக்கிறார்கள். அது என்ன வருத்தம் என்று தெரியவில்லை. அதற்குள் விஜய்க்காக எல்லாம் ஆதரித்து பேச ஆள் இருக்காங்களா என ட்விட்டுகிறார்கள். இவர்கள் என்ன அண்டார்டிக்காவிலா வாழ்கிறார்கள்? கணிணியை திறந்துவிட்டால் புது உலகம் என்பது சரிதான். ஆனால் அதை 24 மணி நேரமும் மூடாமல் வாழும் அன்பர்கள் அனைவருக்கும் இந்த வீடியோவை சமர்ப்பிக்கிறேன் :)

________________________________________________________________________________

ஒரு சில விஷயங்கள் எனக்கு புரிந்து தொலைப்பதேயில்லை. சில நாட்களுக்கு முன் பூவரசி என்ற பெண் ஒரு குழந்தையை கொன்ற போது அவரை அப்படி செய்ய தூண்டியது யார் என பல பதிவர்கள் ஆழ்ழ்ழ்ழ்ந்த கருத்துகளை முன் வைத்தார்கள். அதன் பின் பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்தது. அதில் ஒரு மென்பொருள் பொறியாளர் தன் மனைவியை கொன்றார். அதற்கு அவர் கூறிய காரணம் காலிழந்த தன் தங்கையையும், அம்மாவையும் அவர் மனைவி தங்களோட தங்க அனுமதிக்கவில்லை என்பது. இதில் அந்த நபரை கொலை செய்யத் தூண்டியது யார் அல்லது எது என்று எவருமே பேசவேயில்லை பதிவுலகில்.

இன்னொரு சம்பவம். புனேவில் இருக்கும் ஒரு மேலாண்மை கல்லூரியில் நண்பர்கள் தின கொண்டாட்டம் நடந்தது. வேறென்ன? சரக்கும் சைட் டிஷும்தான். மாணவர்களும், மாணவிகளும் கலந்து கொண்ட பார்ட்டி அருகில் இருந்தவர்களை தொல்லைப்படுத்த போலிசாருக்கு தகவல் போயிருக்கிறது. வந்து அள்ளிச்சென்ற கடமை தவறாத காவலர்கள் மாணவிகளை மட்டும் எச்சரித்து அனுப்பிவிட்டதாம். மாணவர்களை அப்போது விடவில்லை. இப்படி ஒரு சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருப்பதே எனக்கு தெரியாது. இது பற்றியும் யாராவது ஆழ்ழ்ழ்ழ்ழ்ந்து யோசித்து கட்டுரை எழுதினால் புரிந்துக் கொள்ள ஏதுவாயிருக்கும். செய்வீர்களா பதிவர்களே??

________________________________________________________________________________

அடுத்து இன்னொரு விஷயம். நான் மகான் அல்ல படத்தில் சேரிவாழ் இளைஞர்களை தவறாக காட்டிவிட்டார்களாம். உண்மையில் கடற்கரையோரம் நடக்கும் பல குற்றங்களில் இருந்து பொது மக்களை காப்பாற்றும் அம்மக்களை கேவலப்படுத்திவிட்டார்களாம். அந்த மாணவர் குழுவில் ஒருவர் இசுலாமியர். மற்றவர்கள் என்ன சாதி, மதம் இத்யாதிகள் என்று சொல்லவில்லை. எனக்கு ஒரு சந்தேகம். ஒரே ஒரு சந்தேகம். அய்யர், அய்யங்கார், தேவர், முதலியார், கிறிஸ்துவர், இசுலாமியர், சீக்கியர், கேரளாவாசி, ஆந்திராவாசி, சென்னைவாசி, நெல்லைவாசி,ஆண், பெண், திருநங்கை, மருத்துவர், வழக்கறிஞர், வேலைக்கு செல்பவர், வேலையில்லாதவர், உயரமானவர், குள்ளமானவர், காதலர்கள், ஒரு தலை காதலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கருப்பானவர்கள், சிவப்பானவர்கள், மாநிறத்தவர்கள், ஐந்தடிக்கு மேல் உயரமானவர்கள், 40 வயதை தாண்டியவர்கள், 40 வயதுக்கு கீழே இருப்பவர்கள், மாற்றுத்திறன் கொண்டவர்கள், கபடி ஆடுபவர்கள், கிரிக்கெட் ஆடுவர்கள்.. இவர்களில் சினிமாவில் வில்லனாக சித்தரிக்கப்படாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.

________________________________________________________________________________

பாஸ் என்கிற பாஸ்கரன் படப்பாடல் கவர்கிறது. யுவனுக்கு இந்த வருடம் நிச்சயம் நல்ல வருடம் தான். 7ஜி ரெயின்போ காலனி போல ஒரே ஒரு படம் அமைந்துவிட்டால் இது அவரது கேரியரில் சிறந்த வருடமாக அமையக்கூடும். எனக்கு பிடித்த யுவனின் டாப் 5

2010

All time Fav’s

பாடல்கள்

பையா

7g ரெயின்போ காலனி

நினைத்து நினைத்து

காதல் சொல்ல வந்தேன்

துள்ளுவதோ இளமை

போகாதே போகாதே

நான் மகான் அல்ல

பையா

இதுவரை இல்லாத

பாஸ் என்கிற பாஸ்கரன்

காதல் கொண்டேன்

கண்பேசும் வார்த்தைகள்

தில்லாலங்கடி, கோவா

தீனா

ஒரு நாளில் வாழ்க்கை

இதற்கு முந்தைய சிறந்த ஆண்டென்றால் 2007ஐ சொல்லலாம். தீபாவளி, சென்னை 28, சத்தம் போடாதே, பில்லா, கற்றது தமிழ், யாரடி நீ மோகினி என பல ஹிட்கள் கொடுத்தார். இதில் யாரடி நீ மோகினி தமிழில் 2008ல் வந்தாலும் தெலுங்கில் 2007லே வந்தது. சென்ற வாரம் 31 ஆகஸ்டில் பிறந்த நாள் கண்ட யுவனுக்கு தாமதமான வாழ்த்துகளை சொல்லிவிடுவோம்.

32 கருத்துக்குத்து:

இரா கோபி on September 6, 2010 at 12:05 AM said...

செம போர். உண்மையிலேயே

அன்பரசன் on September 6, 2010 at 12:10 AM said...

//இவர்களில் சினிமாவில் வில்லனாக சித்தரிக்கப்படாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.//

கண்டிப்பாக

கார்க்கி on September 6, 2010 at 12:10 AM said...

படிச்சு பார்த்துட்டுதான் அப்படி தலைப்பு வச்சேன் சகா

எழுதியது நல்லா இல்லைன்னா பதிவேற்ராம இருக்கிற மனநிலை எப்ப வரும்னு தெரியல..

ஆனா சீக்கிரமே வந்துடும் :)

தமிழ்ப்பறவை on September 6, 2010 at 12:17 AM said...

ஆஹா... யுவனைப் பத்தித் தனி போஸ்ட் போடுங்க சகா...
கலக்கிக்கிட்டு இருக்கார்...கன்சிஸ்டென்சியோட..
'பையா' வின் வெற்றிக்கு முக்கிய காரணமே யுவன் தான்.
'காதல் சொல்ல வநதேன்' ஓபனிங்க்குக்கும் அவர்தான் காரணம்..
'நான் மகான் அல்ல' பின்னணி இசை பின்னியிருப்பார்...
'பாஸ்கரன்' படத்துல இன்னும் பாடல்கள் புல்லா கேட்கலை..ஆனாலும் அந்த மெலடி நல்லா இருக்கு. படம் 'சிவா மனசுல சக்தி' அளவுக்கு இருக்காதுன்னு தான் நினைக்கிறேன். ட்ரேலர்ல எஃபெக்ட் இல்ல... பார்க்கலாம்...
'இதுவரை இல்லாத' பாடல் செம...
ஆயிரம் சொல்லுங்க்க ,இன்னும் என்னோட ஃபேவரைட் 'துள்ளுவதோ இளமை'தான்.. கட்டற்ற காட்டாறாய் இருக்கும்...அதன்பிந்தான் எல்லாம்...

தமிழ்ப்பறவை on September 6, 2010 at 12:19 AM said...

ஆதி பகவன், அவன் இவன்...எல்லாம் இந்த வ்ருட ஹிட்லிஸ்ட்ல சேர்ந்துடும்னு நினைக்கிறேன்...
டிசம்பர்ல ஒரு லைவ் ஷோ பண்ணப் போறார்...முடிஞ்ச்சா உங்க்க கூட சேர்ந்து பார்க்கலாம் :-)

vinu on September 6, 2010 at 12:33 AM said...

innapa innum thoongalaiyaaaaaaaaaaaa

தர்ஷன் on September 6, 2010 at 12:35 AM said...

எனக்கு இன்னமும் துள்ளுவதோ இளமைதான் சகா பெஸ்ட். புதுப்பேட்டையை விட்டுட்டீங்களே
புதிய கீதை மெர்குரி பூவே மட்டும் பிடிக்கும். மீண்டும் செல்வாவுடன் சேர்ந்தால் கலக்கலாம்

மதுரை சரவணன் on September 6, 2010 at 12:41 AM said...

அத்தனைவிசயமும் உங்களுக்கே உர்ரிய பாணியில் தந்துள்ளது அருமை. பட்டியல் மிகவும் கவர்ந்துள்ளது. வாழ்த்துக்கள்

சுசி on September 6, 2010 at 12:42 AM said...

// செய்வீர்களா பதிவர்களே??//

நீங்க கேட்டா கண்டிப்பா செய்வாங்க.

//ஒரு சில விஷயங்கள் எனக்கு புரிந்து தொலைப்பதேயில்லை.//
எனக்கும்தான் :(

யுவனுக்கு வாழ்த்துக்கள்.

உங்களுக்கும். ரொம்ப நல்ல பாடல்களை நினைவுக்கு கொண்டு வந்ததுக்கு.

ப்ரியமுடன் வசந்த் on September 6, 2010 at 12:57 AM said...

கோபிய நல்லாவே வறுத்துருப்பாங்க போல ரசிகர்கள் அதான் வருத்தம் அது சொல்றப்போ கூட அவர் வேண்டா வெறுப்பா சொல்ற மாதிரிதான் இருக்கு!


பார்ட்டி மேட்டர்ல இன்னா சொல்லவர்றீங்க சகா ?

பரிசல்காரன் on September 6, 2010 at 1:08 AM said...

மத்தவங்க சொல்றத நீயே சொல்லிக்கற பாரு.. நீ என் நண்பேண்டா!

Balaji saravana on September 6, 2010 at 6:26 AM said...

//ஆஹா... யுவனைப் பத்தித் தனி போஸ்ட் போடுங்க சகா //

ரிப்பீட்டு!

Renga on September 6, 2010 at 7:49 AM said...

//ஒரு சில விஷயங்கள் எனக்கு புரிந்து தொலைப்பதேயில்லை. சில நாட்களுக்கு முன் பூவரசி என்ற பெண் ஒரு குழந்தையை கொன்ற போது அவரை அப்படி செய்ய தூண்டியது யார் என பல பதிவர்கள் ஆழ்ழ்ழ்ழ்ந்த கருத்துகளை முன் வைத்தார்கள். அதன் பின் பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்தது. அதில் ஒரு மென்பொருள் பொறியாளர் தன் மனைவியை கொன்றார். அதற்கு அவர் கூறிய காரணம் காலிழந்த தன் தங்கையையும், அம்மாவையும் அவர் மனைவி தங்களோட தங்க அனுமதிக்கவில்லை என்பது. இதில் அந்த நபரை கொலை செய்யத் தூண்டியது யார் அல்லது எது என்று எவருமே பேசவேயில்லை பதிவுலகில்.//

நீங்கள் சொல்வது போல் யோசித்து எழுதினால் ஆணாதிக்கவாதி என்று முத்திரை விழுந்துவிடும், பிறகு 'மணிமகுடம்' (தமிழ்மணம் etc.) போய்விடும் என்ற பயம்தான் காரணம்...

In my personal opinion.. most of the TAMIL BLOGGERS are HYPOCRITES

Anonymous said...

நினைத்து நினைத்து பார்த்தால் ஆல் டைம் பேவரட் சாங் தான்...அந்த பாடல் கேட்கும் போதே இன்று வரை ஏனோ கண்கள் தானாக கலங்கும்,,,,

நாய்க்குட்டி மனசு on September 6, 2010 at 8:04 AM said...

பின்னூட்டம் போட போரா இருக்குது. ஸோ நோ
பின்னூட்டம்

"ராஜா" on September 6, 2010 at 9:16 AM said...

யுவனின் பாடல்களில் என்னை ரொம்ப கவர்ந்தது கற்றது தமிழ் பாடல்கள்தான் சகா ... ஏகனில் வரும் மல்லிகா பாடல் என்னுடைய ஆல் டைம் பேவரைட்...

சிவராம்குமார் on September 6, 2010 at 9:20 AM said...

என்னை கேட்டா புதுப்பேட்டைதான் யுவனோட பெஸ்ட் ஆல்பம்னு சொல்வேன்! பாட்டு மட்டும் இல்லாம அந்த தீம் மியூசிக், பேக்கிரவுண்ட் ஸ்கோர் எல்லாம் செம செம!!!

நல்லவன் கருப்பு... on September 6, 2010 at 9:23 AM said...

பாஸ்,யுவன் சங்கர் ராஜா பாட்டு ஓகே தான்.. அதுக்காக ரொம்ப புகழாதீங்க..
you tubela போய் yuvan sankar raja copy cat nnu டைப் பண்ணுங்க......

Mohan on September 6, 2010 at 9:33 AM said...

யுவனின் இந்த வருடத்து ஹிட்டில் தில்லாலங்கடியா???

முகிலன் on September 6, 2010 at 9:57 AM said...

நீயா நானா - நன்று..

பூவரசி - பெங்களூர் மென்பொறியாளர் - பெண்-ஆண் இதுதான் வித்தியாசம்.. நம் பதிவுல நண்பர்கள் பலர் ஒவ்வொரு “விடய”த்திற்கும் ஒரு கண்ணாடியை மாட்டிக்கொண்டு பார்க்கிறார்கள். அதுதான் காரணம்.

தராசு on September 6, 2010 at 10:11 AM said...

//அது என்ன வருத்தம் என்று தெரியவில்லை.//

ஏன், நீங்களும் வருத்தம் தெரிவிக்கணும்னா இந்த வார்த்தைகளை சொல்லவேண்டும் அது இந்த தொனியில் இருக்க வேண்டும், இத்தனை நிமிடங்களுக்கு பேச வேண்டும், கையை இப்படித்தான் அசைக்க வேண்டும், அட்டென்ஷனில் நிற்க வேண்டுமென லிஸ்ட் போடப் போகிறீர்களா “தோழர்”????

கார்க்கி on September 6, 2010 at 10:13 AM said...

அன்பரசன், யாராவ்து இருக்காங்களா? யாருன்னு சொல்லுஙக்ளேன்

பரணி, உண்மைதான். அவன் இவனில் ஏதாவ்து புதிய வகை இசையை எதிர்பார்க்கலாம்.பெரிய பின்னூட்டம். நீஙக்ளும் அவர பத்தி எழுதுங்க சகா

வினு, தூங்கிட்டேனே :))

தர்ஷன், அந்த பாட்டும் என் டாப்10ல இருக்கு. டாப் 5ல வரல

நன்றி சரவணன்

சுசி, நன்றி

வசந்த், ஹிஹிஹி

பரிசல், உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

நன்றி சரவணா.. அவன் இவன் வரட்டும். எழுதிடலாம்

ரெங்கா, முதல் கருத்திற்கு நன்றி

தமிழரசி, உண்மை.பலருக்கும் அப்படித்தான்

நாய்க்குட்டி, நன்றி சொல்ல போர...:)

ராஜா, எனக்கு ஏகனில் சாலாவும், தத்தி தத்தியும் ஃபேவரிட்

சிவராம், புதுப்பேட்டை நல்ல ஆல்பம். அதில் காதல் பாடல் இல்லாதது மட்டுமே எனக்கு குறையாக தெரிகிறது :)

நல்லவன், ஏத்துக்கிறேன். அவர் காப்பியும் அடிப்பதால்தான் ஜீனியஸ் லிஸ்ட்டில் வர முடியவில்லை என்று ஓரிரு பதிவுக்கு முன்னால் சொல்லியிருந்தேன். ஆனால் பாடல்கள் நல்லா இருக்கு என்பதை ஏத்துக்கத்தானே ஆகணும்?

மோஹன், 5வது இடத்துல இருக்கே... பாருங்க

முகிலன், :))

தராசண்ணே, அப்படி சொல்லல.. வருத்தத்திற்கும் மன்னிப்புக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டேன்.. தோழரா?????????ஆவ்வ்வ்

பித்தன் on September 6, 2010 at 11:01 AM said...

sagaa en all time favo ninaiththu ninaiththu paarthen eppo kettaalum pzhaya ninaivugalai thatti ezhuppum.

நிவாஸ் on September 6, 2010 at 11:56 AM said...

பதிவு நல்லாத்தான் இருக்கு சகா

நர்சிம் on September 6, 2010 at 12:32 PM said...

தூ..ண்டியது? ரைட்டு.

போராக இல்லையே சகா.

Mohan on September 6, 2010 at 3:28 PM said...

கார்க்கி, என்னோட கேள்வி தில்லாலங்கடி படப் பாடல்களை எப்படி இந்த வருடத்து யுவனின் ஹிட் பாடல் வரிசைகளில் சேர்த்தீர்கள் என்று.யுவன் மோசமாக இசையமைத்த படங்களில் தில்லாலங்கடியும் ஒன்று என்பது என்னுடைய அபிப்ராயம்.

சிவராம்குமார் on September 6, 2010 at 10:09 PM said...

கரெக்ட் மோகன்! சமீபத்திய யுவனின் ஆல்பங்களில் தில்லாலங்கடி பல படிகள் கீழே!!!

கார்க்கி - காதல் பாடல்கள் புதுப்பேட்டைக்கும் அதன் போக்குக்கும் எந்த இடத்திலும் பொருந்தாது... எனக்கும் காதல் பாடல்கள் பிடிக்கும் அந்த வரிசையில் "நினைத்து நினைத்து பார்த்தேன்" என்னுடைய ஆல் டைம் பேவரிட்...

பிரதீபா on September 7, 2010 at 12:13 AM said...

ஹிட்டுன்னா அது உங்களைப் பொறுத்த வரை மட்டும் தான? தில்லாலங்கடி பாட்டெல்லாம் உங்களுக்கு எப்படி பிடிச்சுதோ போங்க !! சன் டிவி ல ஆயிரம் தடவை ட்ரைலர் போட்டு போட்டே பாட்ட ஹிட் ஆக்கிருவாங்க; ஆனா நிறைய பேருக்கு அப்படியும் தில்லாலங்கடி பிடிக்கலையே !!

கோவா கூட அவ்வளோ ஹிட் இல்லைன்னு நெனைக்கிறேன்..

Karthik on September 7, 2010 at 5:18 PM said...

தலைவன் விஜயை அவமதித்தால் தமிழ்நாடே பற்றி எரியும் என்பதை அறியாதவர்கள்.. நீங்க நடத்துங்க. :))

Anbu.Bala on September 8, 2010 at 5:52 PM said...

Karki,
Just I wanted to share this info…
Near my apt, there is an Indian groceries store. Last week, when I was chatting with the owner (tamil) & he was sharing some infos…I couldn’t digest & after that I am not able to eat atleast for 1 hrs(!!!)…that info is someone steals the “SURRA” movies DVD (2) from his shop. That DVD has 2 movies (Surra & villu).
They have taken only the DVD.. They left the cover. He was surprised why they have taken the SURRA DVD. It is not a super duper hit movie.
still why ? he said that he lost of hindi movies DVDs. Lot of hindi ppl/ Bangladesh/nepal ppl used to come his shop. obviously,they might have taken the Hindi DVDs.
Still why surra ?
What could be the reason karki ?
My guess are
1. They wanted to keep watching the movies for tamana or nayanthara.
2. They wanted to keep watching the movie to find the what’s story or vijay’s new expressions???
3. or preparing new story by watching his old movies!!!!

4. Preventing others watching this movie by stealing that DVD ?
Please let me your know thought on this.

Note1: me & my wife were great fans of Vijay(long long ago very long ago no one can predict that long ago)
Note2: still, my son is a Vijay’s fan. So watched all vijay’s movies.
Note3: the owner that he DVDs(both Surra/AAmbani) got profit from AAmbani dvd’s reny
Note4: I am going to request unnmaitamilan annan to invest this issue or will publish in idlyvadai blogspot.
Note5; he hasn’t lost any Ajith/simbu’s DVDs.

With SAD
Anbu.bala

Anonymous said...

3 ஆதார குணங்களும் S. ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சுந்தரராமசாமி, சாரு ஆகியோரும்

http://ramasamydemo.blogspot.com/2010/09/3.html

ஆதிமூலகிருஷ்ணன் on September 11, 2010 at 5:41 PM said...

போரெல்லாம் இல்லை, ஓகேதான்.

 

all rights reserved to www.karkibava.com