Aug 16, 2010

சாமி வருகுது..காதல் சாமி வருகுது


 

   கோக் ஜில்லுன்னே இல்லையே என்றேன் தோழியிடம்.நீ அது கிட்ட கொஞ்ச நேரம் பேசு. கூலாயிடும் என்றாள். நான் ஆர்டர் செய்த காஃபி ஆறிப்போய் வரவேண்டும் என வேண்டிக் கொண்டேன்.

______________________________________________________________________________

   எதுக்குடா ஏ.டி.எம் கார்டு எல்லாத்தையும் என்கிட்ட கொடுக்கிற? இப்பவே சாவிக் கொத்து வேணுமான்னு திட்டப் போறாங்க என் அத்தை என்றாள் தோழி. இருக்கும் கொஞ்ச பணத்தையும் தங்கத்தில் முதலீடு செய்ய சொன்னதே அம்மா தான் என்று சொன்ன பின் நாணுகிறாள்.

______________________________________________________________________________

100 ரோஜா எடுத்துக்கோ. ஒரு ஊசியும் நூலும். மாலையா கோர்த்துக்கோ. கண்ணாடி முன்னால போ. இதுதான்  குரங்கு கையில் பூமாலை என்று சிரித்தாள் தோழி. அழைப்பை துண்டித்துவிட்டு அவள் வீட்டிற்கே சென்று அவளை தூக்கிக் கொண்டு சொன்னேன். "இத விட்டு பூவாம்.நூலாம். வேற வேலையில்ல". அதிசயமாய் புரிந்துக்கொண்ட‌ தோழி குரங்காய் மாறிக் கொண்டிருந்தாள்.

______________________________________________________________________________

  கம்மல் அழகா இருக்கே. புதுசா என்றேன். இந்தா வச்சிக்கோ என்று கழட்டி தந்தாள் தோழி. என் கையில் பார்க்கும் போது சுமாராக இருந்ததை சொல்லாமல் உன் குர்தி கூட சூப்பர் என்றேன்.

______________________________________________________________________________

எங்கடா போறீங்க எல்லோரும் என்று தோழியின் தம்பி முறை சிறுவனிடம் கேட்டேன். அவர்கள் குலதெய்வத்திற்கு பூஜை செய்ய மொத்த குடும்பமும் செல்வதாக சொன்னான். உங்க அக்காவுமா என்றதற்கு “இல்ல. அவங்க வரலையாம்” என்றான். குலதெய்வத்தை இங்கே விட்டு யாரைத் தேடி ஊருக்கு செல்கிறார்கள் என்று புரியவில்லை எனக்கு.

______________________________________________________________________________

   என் நீண்ட தொந்தரவிற்கு பின் அந்த மழைக்கால இரவில் எங்கள் சந்திப்பின் முடிவில் முத்தம் ஒன்றை உதட்டில் தர சம்மதித்தாள் தோழி. மறுநாள் அவள் அழைத்தபோது இன்னும் பல் துலக்கவேயில்லை. உன் லிப்ஸ்டிக் வாசனையை ரசித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். உனக்காவது பரவாயில்லை. எனக்கு ரத்த வாசனை என்று சிரிக்கிறாள் அன்பு காட்டேரி.

28 கருத்துக்குத்து:

இராமசாமி கண்ணண் on August 16, 2010 at 11:19 PM said...

சூப்பரப்பு .. பொறமையா இருக்கு..இப்படில்லாம் நம்ம காதிலிக்கலியேன்னு :)

அகில் பூங்குன்றன் on August 16, 2010 at 11:40 PM said...

குர்தி appdinna enna

பிரதீபா on August 16, 2010 at 11:50 PM said...

Brand Name முக்கியம் அமைச்சரே !! செல்லாது செல்லாது ..

ப்ரியமுடன் வசந்த் on August 17, 2010 at 12:06 AM said...

தோழி கொடுத்துவச்சவங்கதான்

அது சரி இம்புட்டு நடந்த பொறவு இன்னுமா தோழி அப்டேட்ஸ்? காதலி அப்டேட்ஸ்ன்னு மாத்திடலாமே!

ப்ரியமுடன் வசந்த் on August 17, 2010 at 12:11 AM said...

தபு சங்கர் லேட்டஸ்ட் வெர்சன் கொஞ்சவர்ணக்கிளி படிச்சீங்களா சகா?

யோ வொய்ஸ் (யோகா) on August 17, 2010 at 12:23 AM said...

nice updates saga

சுசி on August 17, 2010 at 2:20 AM said...

காதல் சாமி கார்க்கி வாழ்க.

காதல் டிப்ஸ் வழங்கும் காதல் சாமி கார்க்கி வாழ்க வாழ்க.

king on August 17, 2010 at 4:44 AM said...

ratha vasana ethukku sir, i didnt understand explain pls

Balaji saravana on August 17, 2010 at 6:07 AM said...

கலக்கல் சகா!
ரத்த வாசனை அருமை கார்க்கி!
காதல் பித்தன் எங்கள் கார்க்கி வாழ்க வாழ்க!

R Gopi on August 17, 2010 at 8:21 AM said...

//கம்மல் அழகா இருக்கே. புதுசா என்றேன். இந்தா வச்சிக்கோ என்று கழட்டி தந்தாள் தோழி. என் கையில் பார்க்கும் போது சுமாராக இருந்ததை சொல்லாமல் உன் குர்தி கூட சூப்பர் என்றேன்.//

இது சூப்பர்.

\\குலதெய்வத்தை இங்கே விட்டு யாரைத் தேடி ஊருக்கு செல்கிறார்கள் என்று புரியவில்லை எனக்கு. \\

நீங்க யாரோட தொந்தரவும் இல்லாம ஒங்க தோழியைத் தரிசனம் பண்ணிக்கிட்டே இருக்கணும் என்கிற நல்ல எண்ணத்துனால இருக்கலாம்.

taaru on August 17, 2010 at 9:36 AM said...

// தங்கத்தில் முதலீடு செய்ய சொன்னதே அம்மா தான் என்று சொன்ன பின் நாணுகிறாள்///
பின்னிட்டே சகா...
//அதிசயமாய் புரிந்துக்கொண்ட‌ தோழி குரங்காய் மாறிக் கொண்டிருந்தாள்//
உனக்கு தான் சகா தலை பதவி...[or] இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்தா எப்படி நம்பி தலைமை பொறுப்ப கொடுக்குறது???? - சுனைனா பாப்பா சூசைட் போர்ஸ்....

//குலதெய்வத்தை இங்கே விட்டு யாரைத் தேடி ஊருக்கு செல்கிறார்கள் என்று புரியவில்லை எனக்கு.///
சமீபத்திய பாடல் ஒன்றில் கேட்டது போலே இருக்கே? நா.மு வோடது தானே?

கார்க்கி on August 17, 2010 at 10:05 AM said...

ஹிஹி..ராமசாமி அண்ணே...நன்றி

அகில், குர்தான்னா சொல்லுவோமில்ல. அத பொண்ணுங்க குர்தின்னு சொல்றாங்க. என் தோழி அப்படித்தாம்ப்பா சொன்னா

யக்கோவ்.. எல்லோரும் நல்லா இருக்குன்னு தானே சொல்றாங்க.. :))

வசந்த், ஹிஹிஹி.. மேல பிரதீபா கமெண்ட் பாருங்க. கொஞ்சவர்ணக்கிளி.. கொஞ்ச மாதமா அவர படிக்கிரதில்ல. அவர் சாயல் நிறைய வருதுன்னு கம்ப்ளையண்ட் அதான்.

நன்றி யோகா

சுசி, உங்களுக்கு என் அருளாசிகள்

கிங், முத்தமிடும்போது என் உதட்டை கடித்து அதனால் வந்த ரத்தம், இப்போது அவளிடம் வாசனையாய் ஹிஹிஹி

நன்றி பாலாஜி

கோபி, அட ஆமா இல்ல.

டாரு, தோழி பதிவுல வந்து சுனைனாவ ஞாபகபடுத்துரீங்க. என்ன அடிவாங்க வைக்காம ஓய மாட்டீர் போலிருக்கே. நாமு பாடல்தான். அதான் அவர் பாட்டே தலைப்பா வச்சேன்

விஜய்வீரப்பன் சுவாமிநாதன் on August 17, 2010 at 11:24 AM said...

வணக்கம். இது தான் எனது முதல் பின்னூட்டம். (உங்களுக்கு). உங்கள் பதிவுகள் நிறைய படித்து இருக்கிறேன்.
பதிவு நல்லாத்தான் இருக்கு. ஆனா... வயித்து எரிச்சலா இதுக்கு...
என்ன பண்றது...பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்.......

ர‌கு on August 17, 2010 at 11:27 AM said...

முத‌ல் நாலும் சிக்ஸ‌ர்..அடுத்த‌ ரெண்டும் சிங்கிள்

தோழி அப்டேட்ஸ் புத்த‌க‌ வெளியீடு எப்போ ச‌கா? பிப்ர‌வ‌ர் 14, 2011ல‌யா?

ப.செல்வக்குமார் on August 17, 2010 at 11:42 AM said...

///. நான் ஆர்டர் செய்த காஃபி ஆறிப்போய் வரவேண்டும் என வேண்டிக் கொண்டேன்.
///
ஏன் அவுங்க பேசினா சூடாய்டுமோ ...?

ப.செல்வக்குமார் on August 17, 2010 at 11:44 AM said...

//“இல்ல. அவங்க வரலையாம்” என்றான். குலதெய்வத்தை இங்கே விட்டு யாரைத் தேடி ஊருக்கு செல்கிறார்கள் என்று புரியவில்லை எனக்கு.
///
ஹய்யோ ..!! சூப்பர் ..!!

வால்பையன் on August 17, 2010 at 12:14 PM said...

பார்க்கலாம் சகா! யாரு மொக்கை பெருசுன்னு!, நானும் களத்தில் தான் இருக்கேன்.

SenthilMohan on August 17, 2010 at 12:19 PM said...

தங்கத்துல முதலீடு பண்றேன்னு சொல்லி, தங்கத்து கிட்ட Card கொடுத்தா முதலுக்கே மோசம் தான். ஆதி, தராசு போன்ற அனுபவசாலிகளின் Expert advice இங்கு வரவேற்கப்படுகிறது.
//*உன் குர்தி கூட சூப்பர்**/
இது சூப்பரோ சூப்பர்
//*குலதெய்வத்தை இங்கே விட்டு யாரைத் தேடி ஊருக்கு செல்கிறார்கள்**/
sS$...!@#%^&$Ss$Ss...$Ss -> இது கேட்கக்கூடாத வார்த்தையெல்லாம் இல்ல. என்னோட பெருமூச்சு. மச்சக்காரன் சகா நீங்க. அப்புறம்
முதலீடு பண்றேன்னு சொல்லிட்டு, முத்தலீடு பண்ணிட்டு இருக்குறீங்க. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்ல ஆமா.

அமுதா கிருஷ்ணா on August 17, 2010 at 1:05 PM said...

நடத்துப்பா எல்லாம் கல்யாணம் வரைக்கும் தானே...

vinu on August 17, 2010 at 1:09 PM said...

baaaack with baaaaaaaang saga great but i thing one among theese repeat right that "kurangu kaiyil poomaalai matter",

enna naanga thaan roamba close ahaa watch pannuroamulla

Karthik on August 17, 2010 at 1:51 PM said...

நல்ல பதிவு. :)

பின்னூட்டம் போடக்கூட கிரியேட்டிவிட்டி வேணும் போல. :P

ஜில்தண்ணி - யோகேஷ் on August 17, 2010 at 2:16 PM said...

அட அட :)

கார்க்கி on August 17, 2010 at 3:17 PM said...

விஜய், மிக்க நன்றி.

ரகு, அய்.. கேட்க நல்லா இருக்கே!!!

செல்வா, ஆமாம்ப்பா ஆமாம் :)

வால், மன்னிக்க. என்னுடைய அப்டேட் மொக்கை இல்லை.ஹிஹிஹி

செந்தில், ஹிஹிஹி. நன்றி சகா

அமுதா, அப்போ ஏழு, பப்லு, தோழி மாதிரி ஒரு புது கேர்கடர் உருவாக்கவோமில்ல :)

வினு, சரியா சொன்னிங்க. தேங்க்ஸூப்பா :)

கார்த்திக், ஹிஹிஹிஹி

ஜில்தண்ணி, நன்றி

R Gopi on August 17, 2010 at 3:41 PM said...

\\ கோக் ஜில்லுன்னே இல்லையே என்றேன் தோழியிடம்.நீ அது கிட்ட கொஞ்ச நேரம் பேசு. கூலாயிடும் என்றாள்.\\
அது ரொம்பக் கஷ்டம்னு சொல்றதுக்கென்ன? எதிர்ல தோழியை வைத்துகொண்டு கோக்கிடம் எல்லாம் பேச முடியாது பாஸ்.

\\ நான் ஆர்டர் செய்த காஃபி ஆறிப்போய் வரவேண்டும் என வேண்டிக் கொண்டேன். \\
இது நான் மேல சொன்னத உறுதிபடுத்துது. காபி ஆறிப் போய் வரணும்னா லேட்டா வரணும்னு அர்த்தம். அப்போதானே தோழி கூட ரொம்ப நேரம் பேச முடியும்!

\\அவள் வீட்டிற்கே சென்று அவளை தூக்கிக் கொண்டு சொன்னேன். "இத விட்டு பூவாம்.நூலாம். வேற வேலையில்ல". \\

50 KG தாஜ் மஹால் எனக்கே எனக்கா

\\எனக்கு ரத்த வாசனை என்று சிரிக்கிறாள் அன்பு காட்டேரி.\\

அழகு காட்டேரி அழகு காட்டேரி அடிக்கப் பார்க்கின்றதே

\\ அமுதா கிருஷ்ணா said...

நடத்துப்பா எல்லாம் கல்யாணம் வரைக்கும் தானே...\\


அப்படில்லாம் கெடயாதுன்னும் சொல்லலாம். அப்படித்தான்னும் சொல்லலாம். நான் என்ன சொல்ல வர்றேங்கரத இங்கப் போய்த் தெரிஞ்சுக்கங்க

http://ramamoorthygopi.blogspot.com/2010/08/blog-post_7709.html

தமிழ்மகள் on August 17, 2010 at 3:53 PM said...

சூப்பர்... குடுத்து வச்சவங்க உங்க தோழி.... :)

தமிழ்மகள் on August 17, 2010 at 3:54 PM said...

சூப்பர்... குடுத்து வச்சவங்க உங்க தோழி.... :)

கார்க்கி on August 18, 2010 at 12:02 AM said...

அனைவருக்கும் நன்றி

Raghav on August 19, 2010 at 8:36 AM said...

குலதெய்வத்தை matter Tabu shankarodadhu... so selladhu.

Nalla ezhudhureenga :)

 

all rights reserved to www.karkibava.com